Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்–பா.ஜ.க. இடையேதான் நேரடி போட்டி: மத்திய மந்திரி ஜி.கே.வாசன் பேச்சு

Posted: 10 Apr 2014 09:19 AM PDT

பெரியகுளம்,

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையேதான் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளதாக பெரியகுளத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

ஜி.கே.வாசன் பிரசாரம்

தேனி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எம்.ஆரூண் எம்.பி.யை ஆதரித்து, மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி ஜி.கே.வாசன் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–

கடந்த 10 ஆண்டுகளில் எந்தெந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களது தொகுதியில் கவனம் செலுத்தி அரசின் திட்டங்களை பொது மக்களுக்கு நிறைவேற்றி தந்துள்ளனர் என்று மத்திய அரசு ஆய்வு நடத்தியது. அதில், விவசாயிகளுக்கு பயிர்க்கடன்கள், மாணவர்களுக்கு கல்விக்கடன்கள், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு தாட்கோ கடன்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மக்களுக்கு முறையாக கொண்டு சேர்த்தவர்கள் பட்டியலில் முதல் 3 இடங்களில் வந்தவர் உங்கள் தொகுதி பாராளுமன்ற உறுப் பினர் ஜே.எம்.ஆரூண்.

காமராஜர் தந்த மதிய உணவு திட்டத்திற்காக 13 ஆயிரத்து 213 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, அதனால் 14 கோடி மாணவர்கள் பயன் பெறுகிறார்கள். சுகாதார திட்டத்திற்காக 33 ஆயிரத்து 715 கோடி நிதி ஒதுக்கியுள்ளனர். சிறுபான்மை மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் 15 அம்ச திட்டம், இந்திய மாணவர்கள் வெளிநாட்டு மாணவர்களுக்கு இணையாக போட்டி போட்டு படிக்கும் அளவிற்கு கல்வித்தரத்தை உயர்த்தியது மத்திய அரசு.

பா.ஜ.க.–காங்கிரஸ் இடையேதான் போட்டி

பாரதீய ஜனதா கட்சி மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து, அவரும் பதவி ஆசையால் இந்தியாவை வலம் வருகிறார். நடைபெற உள்ள தேர்தல் பிரதமரை தேர்வு செய்யும் தேர்தல். இதில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தான் மோதல். சில மாநில கட்சிகளை சேர்ந்தவர்கள் துணைப்பிரதமர் பதவிக்கு ஆசைப்படுகிறார்கள். மோடி பிரதமர் பதவி ஆசையுடன் வலம் வருகிறார். ஆனால் ராகுல் காந்தி 10 ஆண்டுகளாக மக்களின் நல்வாழ்விற்கான திட்டங்களை தீட்டுவதற்காக இந்தியா முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினை எதிர்த்து பா.ஜ.க. மதவாத அணி, இதுவரை காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பதவி சுகம் அனுபவித்துக்கொண்டு தற்போது எதிரணியில் நிற்கும் தி.மு.க., இவை தவிர அ.தி.மு.க. கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டவர்கள் போட்டியில் இறங்கி உள்ளனர். இனிமேல் நமக்கு வசந்த காலம் தான். எனவே காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் குக்கிராமங்கள் வரை சென்று மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு விளக்கி காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க செய்ய வேண்டும்.

இவ்வாறு ஜி.கே.வாசன் பேசினார்.

கூட்டத்தில், வேட்பாளர் ஜே.எம்.ஆரூண் எம்.பி. மற்றும் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் முருகேசன், முன்னாள் மாவட்ட தலைவர் மகாதேவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

category:

News Group Category:

2ஜி வழக்கின் முக்கிய சாட்சி ஆ.ராசாவின் உதவியாளர் பா.ஜனதாவில் சேர்ந்தார்

Posted: 10 Apr 2014 09:03 AM PDT

புதுடெல்லி,

2-ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல் வழக்கு விசாரணை டெல்லி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆ.ராசாவின் கூடுதல் தனி உதவியாளராக பணிபுரிந்த ஆசீர்வாதம் ஆச்சாரி முக்கியமான சாட்சியமாக இருந்து வருகிறார்.

எனவே ஆசீர்வாத ஆச்சாரிக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்தநிலையில் ஆசீர்வாதம் ஆச்சாரி, நேற்று பாரதீய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். கட்சியின் மூத்த தலைவர்கள் சுப்பிரமணியசாமி, ஜே.பி.நந்தா ஆகியோர் முன்னிலையில், அவர் பா.ஜனதா கட்சியின் உறுப்பினராக சேர்ந்தார்.

image: 

category:

News Group Category:

பா.ஜனதா தேசிய செயற்குழுவில் இருந்து ஜஸ்வந்த்சிங் மகன் நீக்கம்

Posted: 10 Apr 2014 09:00 AM PDT

புதுடெல்லி,

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்த முன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த்சிங், பா.ஜனதாவை விட்டு நீக்கப்பட்டார். அவருடைய மகன் மன்வேந்திரசிங், ராஜஸ்தானில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

அவர், பார்மர் தொகுதியில், ஜஸ்வந்த்சிங்குக்கு ஆதரவாகவும், பா.ஜனதா வேட்பாளருக்கு எதிராகவும் பிரசாரம் செய்து வருகிறார். இதுபற்றி கட்சி மேலிடத்தில் மாநில பா.ஜனதா தலைவர் புகார் செய்தார். அதன்பேரில், மன்வேந்திரசிங்கை, பா.ஜனதா தேசிய செயற்குழுவில் இருந்து நீக்கி, கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங் உத்தரவிட்டார். மேலும், மாநில பா.ஜனதாவும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உள்ளது.

category:

News Group Category:

பாராளுமன்ற தேர்தல்:பாராளுமன்ற சபாநாயகர் ஓட்டுப்போடவில்லை

Posted: 10 Apr 2014 08:22 AM PDT

சசராம்,

பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார், பீகார் மாநிலத்தில் உள்ள சசராம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கு  தேர்தல் நடைபெற்றது. தேர்தல் பணியில் அவர் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.

மீராகுமாருக்கு டெல்லியில் உள்ள வாக்காளர் பட்டியலில் தான் பெயர் உள்ளது. டெல்லியிலும் நேற்று தேர்தல் நடந்ததால், மீராகுமார் டெல்லி சென்று வாக்களிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவர் சசராம் தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்ததால் டெல்லி சென்று வாக்களிக்கவில்லை என்று மீராகுமார் தேர்தல் அலுவலக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

category:

News Group Category:

வாரணாசியில் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட மாட்டேன்

Posted: 10 Apr 2014 08:18 AM PDT

லக்னோ,

கடந்த 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டவர் முக்தார் அன்சாரி. இவர் பா.ஜனதா வேட்பாளர் முரளி மனோகர் ஜோஷிக்கு கடும் போட்டியை உருவாக்கியதுடன், வெறும் 17 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்றார்.

பின்னர், பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகிய அவர், குவாமி ஏக்தா தளம் என்ற கட்சியைத் தொடங்கினார். பா.ஜனதா எம்.எல்.ஏ. கொலை வழக்கில், தற்போது அவர் ஆக்ரா ஜெயிலில் உள்ளார்.

வாரணாசியில், நரேந்திர மோடி போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து முக்தார் அன்சாரி போட்டியிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், போட்டியிட மாட்டேன் என்று அவர் அறிவித்துள்ளார். மதச்சார்பற்ற ஓட்டுகள் பிரியக்கூடாது என்பதற்காக, இம்முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறினார்.

category:

News Group Category:

ஓட்டுப்போட சென்ற குலாம்நபி ஆசாத்திடம் அடையாள ஆவணம் கேட்ட அதிகாரி

Posted: 10 Apr 2014 08:13 AM PDT

ஜம்மு,

மத்திய மந்திரி குலாம்நபி ஆசாத், காஷ்மீர் மாநிலம் உத்தம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.  அங்கு ஓட்டுப்பதிவு நடந்தது. ஜம்முவில் ஒரு பள்ளிக்கூடத்தில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டுப் போடுவதற்காக குலாம்நபி ஆசாத் சென்றார்.

அப்போது, அவரிடம் ஓட்டுச்சாவடி அதிகாரி, வாக்காளர் அட்டையையோ அல்லது வேறு புகைப்பட ஆவணத்தையோ காட்டுமாறு கேட்டார். இதனால், ஆசாத் அதிர்ந்தார். அதற்கு அந்த அதிகாரி, 'உங்களை எனக்கு அடையாளம் தெரியும். இருப்பினும், நீங்கள் இந்த ஓட்டுச்சாவடியின் வாக்காளரா என்பதை உறுதிப்படுத்தவே கேட்கிறேன்' என்றார்.

ஆனால், குலாம்நபி ஆசாத், எந்த அடையாள அட்டையும் கொண்டு செல்லவில்லை. உடனே, அங்கு வந்த உள்ளூர் காங்கிரஸ் தலைவர் ஒருவர், ஆசாத்துக்கு உத்தரவாதம் அளித்தார். அங்கிருந்த பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகளின் ஏஜெண்டுகளும், ஆசாத் ஓட்டுப்போட ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. அதன்பிறகு, குலாம்நபி ஆசாத் ஓட்டுப் போட்டார்.

image: 

category:

News Group Category:

வீடுவீடாக அ.தி.மு.க.வினர் சென்று பணம் கொடுப்பதை தடுக்கவேண்டும் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் பா.ம.க. சார்பில் மனு

Posted: 10 Apr 2014 07:54 AM PDT

சென்னை,

சென்னையில் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரிடம் பா.ம.க. சார்பில் அந்தக் கட்சியின் வக்கீல் கே.பாலு கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:

பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில், அ.தி,மு.க. தொடர்ந்து விதிமீறல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்று சரிபார்ப்பதாக கூறிக்கொண்டு, வீடுவீடாகச் சென்று பணத்துக்கான டோக்கனை கொடுக்கின்றனர்.

வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பதற்காக தலைமைத் தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற்றுள்ளதாகவும் கூறுகின்றனர். இதுபற்றி தேர்தல் அதிகாரி மற்றும் போலீசிடம் புகார் கொடுத்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதை நீங்கள் தடுக்காவிட்டால் மற்ற கட்சியினர் தடுக்க முயற்சிப்பார்கள். அதனால் சட்டம்& ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். எனவே, அ.தி.மு.க.வுக்கு அனுமதி அளித்திருந்தால் அதை ரத்து செய்து, அவர்கள் வீடு வீடாகச் செல்ல தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

category:

News Group Category:

நாகை மீனவர்கள் 2–வது நாளாக உண்ணாவிரதம்

Posted: 10 Apr 2014 07:34 AM PDT

நாகப்பட்டினம்,

நாகை நம்பியார் நகர் மீனவர்கள் 2–வது நாளாக நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலையினை பயன்படுத்தி மீன்பிடிப்பதாக கூறி நாகை நம்பியார் நகர் மீனவர்கள் நாகை துறைமுகத்தில் படகுகளை நிறுத்த கூடாது எனவும், மீன் இறங்குதளத்தில் வைத்து மீன் விற்பனை செய்யக்கூடாது எனவும் அக்கரைப்பேட்டை பஞ்சாயத்தார்கள் தடை விதித்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து நேற்று முன்தினம் காலை நாகை நம்பியார் நகர் மீனவ கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து நாகை நம்பியார் நகரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அக்கரைப்பேட்டை பஞ்சாயத்தார்கள், நாகை நம்பியார் நகர் மீனவர்கள் கடுவையாற்றில் படகை நிறுத்தி மீன்பிடிக்கக் கூடாது என்று தடை விதித்துள்ளது. இதுகுறித்து நாகை மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.

உண்ணாவிரதம்

இதனை கண்டித்து நேற்றுமுன்தினம் முதல் நாகை நம்பியார் நகர் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம் செய்வது, தொடர் உண்ணாவிரதம் இருப்பது என்று முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று 2–வதுநாளாக நம்பியார் நகர் மக்கள் தங்களது ரேசன் அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகளை அரசிடம் ஒப்படைக்க போவதாக கூறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நேற்று 2–வது நாளாக நாகை நம்பியார் நகர் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. நாகை மாவட்டம், தரங்கம்பாடி, சீர்காழி தாலுகாவைச்சேர்ந்த 8 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் நாகை நம்பியார் நகர் மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தால் மீனவ கிராமங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

category:

News Group Category:

பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா

Posted: 10 Apr 2014 07:07 AM PDT

காரமடையில்  நடந்த பிரமாண்டமான தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியபோது எடுத்தபடம்.

6

தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா

Posted: 10 Apr 2014 07:02 AM PDT

காரமடையில்  நடந்த பிரமாண்டமான தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு நீலகிரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து பேசினார். முன்னதாக அவர் அங்கு திரண்டு இருந்த கூட்டத்தினரை பார்த்து கை அசைத்தபோது எடுத்தபடம்.

1


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™