Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


குஜராத், ம.பி. யில் பாஜக வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்

Posted: 02 Apr 2014 11:12 PM PDT

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில் வெற்றி வாய்ப்புகள் குறித்து சி.என்.என்–ஐ.பி.என். தொலைக் காட்சிக்காக சி.எஸ்.டி.எஸ் என்ற அமைப்பு கருத்து கணிப்பு நடத்தியது. அதில் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மற்றும் பாரதீய ஜனதா ஆட்சி நடக்கும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாரதீய ஜனதா அமோக வெற்றி பெறும் தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவில் ஓட்டுப்பதிவு நாளன்று யானைகள் ஊர்வலம் நடத்த தடை

Posted: 02 Apr 2014 11:05 PM PDT

கேரளாவில் உள்ள பெரும்பாலான கோவில்களில் யானைகள் வளர்க்கப்படுகிறது. சுவாமி ஊர்வலத்தின் போது இந்த யானைகள் அலங்கரிக்கப்பட்டு பவனியாக செல்வது பார்ப்பவர்களை கவர்வதாக இருக்கும். சிறிய கோவில்களில் கூட ஒன்றுக்கும் மேற்பட்ட யானைகள் இருக்கும்.

கேரளாவில் சோனியா - ராகுல் தேர்தல் பிரசாரம்

Posted: 02 Apr 2014 10:08 PM PDT

கேரளாவில் வருகிற 10–ந்தேதி தேர்தல் நடக்கிறது. இங்குள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜனதா கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு கட்சிகளுக்கு ஆதரவாக அவர்களின் தேசிய தலைவர்கள் கேரளாவில் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

பெண் வேட்பாளர்களுக்கு பெண் பாதுகாப்பு அதிகாரி நியமனம்: தேர்தல் கமிஷன்

Posted: 02 Apr 2014 09:06 PM PDT

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில், முக்கிய கட்சிகளின் சார்பில் பெண் வேட்பாளர்கள் பலர் போட்டியிடுகிறார்கள். அவர்களில் நடிகைகளும் அடங்குவர். அவர்கள் பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் பல்வேறு அசவுகரியங்களை சந்திக்க வேண்டி உள்ளது. இந்நிலையில், இதுபற்றி தேர்தல் கமிஷன் பரிசீலித்தது. பெண் வேட்பாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டுள்ளது. இதுபற்றி தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:- தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பாதுகாப்புக்கு ஒரு மெய்க்காப்பு அதிகாரியை நியமிக்க விதிமுறைப்படி இடம் உண்டு. வே

உ.பியில் இரண்டு ரெயில்கள் மோதல்: இருவர் பலி

Posted: 02 Apr 2014 08:39 PM PDT

உத்தரபிரதேசம் மாநிலம் சோன்பத்ரா பகுதியில் இன்று காலை பயணிகள் ரெயிலும், வாரணாசி சக்தி நகர் சிட்டி விரைவு ரெயிலும் எதிர்பாராத விதமாக மோதின. இந்த விபத்தில் பயணிகள் ரெயிலின் கடைசி பெட்டி முழுவதுமாக சேதமடைந்தது. விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். மேலும்

குஜராத் கலவரத்துக்காக மோடி மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை: ராஜ்நாத் சிங்

Posted: 02 Apr 2014 02:30 PM PDT

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்றிரவு பேடியளித்த பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்கிடம், 2002-ம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த கலவரம் தொடர்பாக மோடி மன்னிப்பு கேட்பாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராஜ்நாத் சிங், 'எந்த முதல் மந்திரியும் தனது மாநிலத்தில் ஒரு கலவரம்

தேர்தல் வெற்றிக்காக யாகம் நடத்திய சோனியாகாந்தி

Posted: 02 Apr 2014 02:17 PM PDT

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்து முடித்ததும் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தகியாவுக்கு சென்ற அவர், அங்குள்ள அலி மியான் தர்காவில் பிரார்த்தனை செய்தார்

மோடியை தோற்கடிப்பதே என் லட்சியம்: கெஜ்ரிவால் ஆவேசம்

Posted: 02 Apr 2014 01:23 PM PDT

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். கெஜ்ரிவால் டெல்லியில் நேற்று 3-வது நாளாக தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்

காங்கிரஸ் கட்சி சார்பில் மோடி மீது கேரளா கோர்ட்டில் வழக்கு

Posted: 02 Apr 2014 12:30 PM PDT

ஜம்முவில் கடந்த மாதம் 26-ம் தேதி நடைபெற்ற பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடி, மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ஏ.கே.அந்தோணி மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமையாகத் தாக்கி கருத்து தெரிவித்தார்

ஆந்திராவில் தெலுங்கு தேசத்துடன் கூட்டணி அமைக்க பா.ஜ.க. தீவிர முயற்சி

Posted: 02 Apr 2014 12:21 PM PDT

ஆந்திர மாநிலத்தில் ஏப்ரல்-30 மறும் மே 7-ம் தேதி இரண்டு கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இது மட்டுமின்றி, தனித்தெலுங்கான மாநிலத்தை உருவாக்கிய மத்திய அரசின் முடிவை எதிர்த்து, கிரண்குமார் ரெட்டி தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்ததையடுத்து

புதிய வங்கிகள் தொடங்க இரண்டு நிறுவனங்களுக்கு அனுமதி

Posted: 02 Apr 2014 11:17 AM PDT

புதிய வங்கிகளுக்கான உரிமம் வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் நேற்று ரிசர்வ் வங்கிக்கு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, புதிய வங்கிகளை தொடங்க மொத்தம் 25 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு முதற்கட்டமாக ஐ.டி.எப்.சி. லிமிடெட்

தாய் இறந்த சோகத்தை தாங்க முடியாமல் வாலிபர் தற்கொலை

Posted: 02 Apr 2014 11:02 AM PDT

தாய் இறந்த சோகத்தை தாங்க முடியாத வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கொப்பார்தோட்டா பகுதியை சேர்ந்தவர் மகேஷ்(22). விசாகப்பட்டினம் நகரில் உள்ள ஒரு போட்டோ ஸ்டுடியோவில்

டெல்லியில் போட்டியிடும் 3-ல் ஒரு பங்கு வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்

Posted: 02 Apr 2014 10:41 AM PDT

ஜனநாயக சீர்த்திருத்தங்களின் கூட்டமைப்பு மற்றும் டெல்லி தேர்தல் கண்காணிப்பு அமைப்பு, பிரமாண பத்திரத்தில் வேட்பாளர்கள் குறிப்பிட்டுள்ள சொத்து விபரங்களின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டது. அதில், டெல்லியின் ஏழு மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் 150 வேட்பாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கோடீஸ்வரர்கள்

முறைகேடு எதிரொலி: ஆந்திராவில் நடந்த மருத்துவ நுழைவு தேர்வு ரத்து

Posted: 02 Apr 2014 10:28 AM PDT

ஆந்திராவில் முதுகலை பட்டதாரிகள் பங்கேற்ற மருத்துவ கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் கடந்த மாதம் 2-ம் தேதி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் இதில் பங்கேற்று தேர்வு எழுதினர். இந்த தேர்வுக்காக தயாரிக்கப்பட்ட கேள்வித் தாள்களை சில தனியார் நிறுவனங்கள் தேர்வுக்கு

ஆம் ஆத்மி சார்பில் சோனியாவை எதிர்த்து முன்னாள் நீதிபதி போட்டி

Posted: 02 Apr 2014 09:51 AM PDT

ஆம் ஆத்மி கட்சி தனது 14வது வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டது. அதன்படி, உத்தர பிரதேசத்தில் 10 வேட்பாளர்களும், குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு தலா இரண்டு வேட்பாளர்களும், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்திற்கு தலா ஒரு வேட்பாளர்களும், சத்தீஸ்கரில் மூன்று வேட்பாளர்களும்

பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும்: சரத் பவார் கணிப்பு

Posted: 02 Apr 2014 08:48 AM PDT

மக்களவைத் தேர்தலில் மோடி அலை இல்லை என்று கூறி வந்த சரத் பவார் இப்போது, தேர்தலுக்குப் பிறகு பா.ஜனதா தனிபெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின்

வழிபாட்டு மையங்களை தேர்தலுக்கு பயன்படுத்துவதை தடுக்க சீக்கிய அமைப்பு கோரிக்கை

Posted: 02 Apr 2014 08:23 AM PDT

ஜம்மு மற்றும் காஷ்மிரில் அரசியல் கட்சிகள் தேர்தல் ஆதாயத்திற்காக மத வழிபாட்டு மையங்களை தவறாக பயன்படுத்துவதை மாநில தேர்தல் ஆணையம் அனுமதிக்க கூடாது என சீக்கிய அமைப்பு இந்திய தேர்தல் ஆணையத்திடம் முறையீடு செய்துள்ளது.

முஸ்லிம்களிடம் சோனியா வேண்டுகோள் விடுத்தது விதிமீறல்: பா.ஜ.க. கண்டனம்

Posted: 02 Apr 2014 08:04 AM PDT

புகாரி தலைமையிலான முஸ்லிம் தலைவர்கள் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினர். அப்போது வரும் மக்களவை தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகள் பிரிந்து விடாமல் பார்த்துக்கொள்ளுமாறு சோனியா கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

சமாஜ்வாடி தொண்டர்கள் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல்

Posted: 02 Apr 2014 07:56 AM PDT

ஜார்க்கண்ட் மாநிலம் லதேகர் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சமாஜ்வாடி தொண்டர்களை மாவோயிஸ்டுகள் கடுமையாகத் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. சத்ரா மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாடி வேட்பாளர்

ராகுல் போஸ்டர்களை களங்கப்படுத்துவோர் பற்றி தகவல் கொடுத்தால் பரிசு

Posted: 02 Apr 2014 07:49 AM PDT

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை களங்கப்படுத்தும் வகையில் அவரது போஸ்டர்களில் மர்ம நபர்கள் கரியைப் பூசி வருகின்றனர். இந்தூரின் விஜய் நகர் சதுக்கத்தில் ராகுல் காந்தியின் படம் அச்சிடப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இந்நிலையில், யாரோ அடையாளம்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™