மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- அகிலேஷ் யாதவ் மனைவியின் சொத்து மதிப்பு ரூ.8 கோடி
- தேர்தல் ஆணையத்தில் சந்திரபாபு நாயுடு மீது ஆம் ஆத்மி கட்சி புகார்
- ரோஜா வெற்றிக்காக கணவர் செல்வமணி பிரசாரம்
- காங். அரசு மீதான குற்றச்சாட்டு பட்டியல்: பாஜக நாளை வெளியிடுகிறது
- பாஜகவுக்கு 10 மாநிலங்களில் 160 இடங்கள் கிடைக்கும்: கருத்து கணிப்பு
- கெஜ்ரிவால் மீது மை வீசியவர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்
- சபரிமலை அய்யப்பன் கோவிலில் சித்திரை விஷு பண்டிகை கொடியேற்றம்
- பாஜக வேட்பாளர் நடிகை ஹேமா மாலினியின் சொத்து மதிப்பு ரூ.192 கோடி
- ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய மாயாவதி கட்சி அமைச்சர்
- காங்கிரஸ் கட்சியின் தற்காலிக மேலிட பொறுப்பாளராக வயலார் ரவி நியமனம்
- வன்கொடுமை தடுப்பு அவசர சட்டம்: ஜனாதிபதி வெளியிட்டார்
- சோனியா மீது நடவடிக்கையா?: தலைமை தேர்தல் அதிகாரி பதில்
- ஆம் ஆத்மியிடம் பா.ஜ.க.-காங்கிரஸ் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்: கெஜ்ரிவால்
- சஹாரா மோசடியில் சுப்ரதா ராயை தண்டிக்க வில்லை: சுப்ரீம் கோர்ட்டு
- மாயாவதிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
- நாட்டை வழி நடத்தி செல்ல ராகுல்தான் தகுதியானவர்: உமர் அப்துல்லா
- வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்: பா.ஜ.க.
- சிறப்பு வீட்டுக்கடன் வசதித் திட்டத்தை நீட்டித்துள்ள பாரத ஸ்டேட் வங்கி
- முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அசாருதீன் வேட்பு மனு தாக்கல்
- காங்கிரஸ் இந்தியாவின் ஆன்மா-அதை அழிக்க முடியாது: ஜெய்ஸ்வால்
| அகிலேஷ் யாதவ் மனைவியின் சொத்து மதிப்பு ரூ.8 கோடி Posted: 03 Apr 2014 10:51 PM PDT மக்களவை தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம், கன்னோஜ் தொகுதியில் போட்டியிடும் அம்மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவின் மனைவியும் கன்னோஜ் தொகுதியின் தற்போதைய எம்.பியுமான டிம்பிள் யாதவ் இன்று தனது வேட்பு மனுவுடன் தனது சொத்து கணக்கு பட்டியலையும் தாக்கல் செய்தார். அதில் அவர் "தனது கையிருப்பாக ரூ.1.76 இலட்சமும் வங்கியிருப்பாக |
| தேர்தல் ஆணையத்தில் சந்திரபாபு நாயுடு மீது ஆம் ஆத்மி கட்சி புகார் Posted: 03 Apr 2014 10:32 PM PDT தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டார். அதில், தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும், பெண்களுக்கு இலவச செல்போன் வழங்கப்படும், மகளிர் குழுக்களின் கடன்கள் ரத்து செய்யப்படும் போன்ற பல அறிவிப்புகளை கூறியிருந்தார். மேலும் தனது தேர்தல் பிரசாரத்தின்போது ''விவசாயிகள் யாரும் கடனை |
| ரோஜா வெற்றிக்காக கணவர் செல்வமணி பிரசாரம் Posted: 03 Apr 2014 10:26 PM PDT ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக நடிகை ரோஜா போட்டியிடுகிறார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கிய போதே நகரி தொகுதி வேட்பாளராக நடிகை ரோஜா அறிவிக்கப்பட்டார். முதல் வேட்பாளர் என்ற பெருமையுடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக |
| காங். அரசு மீதான குற்றச்சாட்டு பட்டியல்: பாஜக நாளை வெளியிடுகிறது Posted: 03 Apr 2014 10:22 PM PDT பா.ஜனதா தேர்தல் அறிக்கை வருகிற 7–ந் தேதி வெளியிடப்படுகிறது. முன்னதாக நாளை (5–ந்தேதி) காங்கிரஸ் அரசின் தோல்வி பற்றிய குற்றச்சாட்டு பட்டியலை பா.ஜனதா வெளியிடுகிறது. காங்கிரஸ் கூட்டணிக்கு அரசு மீதான அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகள், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள், பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு மற்றும் அரசின் தோல்விகள் போன்றவை |
| பாஜகவுக்கு 10 மாநிலங்களில் 160 இடங்கள் கிடைக்கும்: கருத்து கணிப்பு Posted: 03 Apr 2014 10:10 PM PDT பாராளுமன்றத்துக்கு வரும் 7–ந்தேதி முதல் மே மாதம் 12–ந்தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களை கைப்பற்றும் என்று கருத்து கணிப்புகளில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் மராட்டியம், மத்திய பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், டெல்லி, பீகார், தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய 10 |
| கெஜ்ரிவால் மீது மை வீசியவர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் Posted: 03 Apr 2014 09:52 PM PDT மகாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வருபவர் நச்சிகேட்டா வால்நேக்கர். இவர் பா.ஜ.கவை சேர்ந்தவர். கடந்த ஆண்டு ஆம்ஆத்மி கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது வால்நேக்கர் மை வீச்சு தாக்குதல் நடத்தினார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக சில வாரங்களுக்கு முன்பு அந்த நபர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார். இது அக்கட்சியினருக்கு மிகுந்த |
| சபரிமலை அய்யப்பன் கோவிலில் சித்திரை விஷு பண்டிகை கொடியேற்றம் Posted: 03 Apr 2014 09:45 PM PDT கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இது போல ஒவ்வொரு மாதபிறப்பு நாள்களிலும் இங்கு நடை திறந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். இதில் குறிப்பாக சித்திரை விஷு பண்டிகை கொண்டாட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதற்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை |
| பாஜக வேட்பாளர் நடிகை ஹேமா மாலினியின் சொத்து மதிப்பு ரூ.192 கோடி Posted: 03 Apr 2014 08:56 PM PDT பா.ஜ.க. வேட்பாளராக உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுரா தொகுதியில் போட்டியிடும் நடிகை ஹேமா மாலினி நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனுவுடன் அவர் தாக்கல் செய்த சொத்துக் கணக்கு பட்டியலில் தனது கையிருப்பு ரொக்கமாக 12 லட்சத்து 52 ஆயிரத்து 552 ரூபாயும், வங்கி இருப்பாக 1 கோடியே 12 லட்சத்து 7 ஆயிரத்து 734 ரூபாயும், பங்குகளில் முதலீடாக 82 லட்சத்து 49 ஆயிரத்து 208 ரூபாயும், தேசிய சேமிப்பு |
| ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய மாயாவதி கட்சி அமைச்சர் Posted: 03 Apr 2014 08:43 PM PDT உத்தரபிரதேச மாநிலத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியின் போது குடும்ப நலத்துறை மந்திரியாக இருந்தவர் பாபு சிங் குஷ்வாலா. இவரின் ஆட்சிக்காலத்தில் தேசிய ஊரக சுகாதார திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.5000 கோடி நிதியில் முறைகேடு செய்ததாக இவர் மீது புகார் உள்ளது. இது குறித்து கடந்த புதன்கிழமை அமலாக்க இயக்குனரகம் இவரிடம் |
| காங்கிரஸ் கட்சியின் தற்காலிக மேலிட பொறுப்பாளராக வயலார் ரவி நியமனம் Posted: 03 Apr 2014 08:20 PM PDT அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர்கள் மற்றும் செயலாளர்கள் எந்தெந்த மாநிலங்களில் தேர்தலில் போட்டியிடுகிறார்களோ அந்த மாநிலங்களுக்கு நேற்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி. தற்காலிக மேலிட பொறுப்பாளர்களை நியமனம் செய்தது. அதன்படி கேரளா மற்றும் லட்சத் தீவுகளுக்கு சுதர்சனம் நாச்சியப்பன் மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரிக்கு வயலார் ரவி தற்காலிக பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் |
| வன்கொடுமை தடுப்பு அவசர சட்டம்: ஜனாதிபதி வெளியிட்டார் Posted: 03 Apr 2014 08:17 PM PDT இந்திய ஜனாதிபதி வெளியிட்ட வன்கொடுமை தடுப்பு அவசர சட்டம் 2014-ல் கூறப்பட்டு இருப்பதாவது:- கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந்தேதி, பாராளுமன்றத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை. தற்போது பாராளுமன்ற கூட்டம் நடைபெறவில்லை என்பதால் தற்போதுள்ள சூழ்நிலையின்படி, வன்கொடுமை தடுப்பு அவசர சட்டம் 2014 என்ற அவசர சட்டம் அறிவிக்கப்படுகிறது. இந்த அவசர சட்டம் உடனே செயல்பாட்டுக்கு வருகிறது. இதன்படி எஸ்.சி., எஸ்.டி. மக்களை ஓட்டுப்போடாமல் இருப்பதற்கோ, குறிப்பிட்ட நபருக்கு ஓட்டுப்போடுவதற்கோ, விதிகளுக்கு முரணாக வாக்குப்பதிவு செய்வதற்கோ வற்புறுத்தக்கூடாது. வேட்புமனு தாக்கல் செய்யக்கூடாது என்றோ அல்லது தாக்கல் செய்த வேட்புமனுவை திரும்பப் பெற வேண்டும் என்றோ வற்புறுத்தக்கூடாது. எஸ்.சி., எஸ்.டி. இனத்தை சேர்ந்த ஒருவரை வேட்பாளராக முன்மொழிவதையோ அல்லது வழிமொழிவ |
| சோனியா மீது நடவடிக்கையா?: தலைமை தேர்தல் அதிகாரி பதில் Posted: 03 Apr 2014 04:23 PM PDT மதவாத சக்திகளுக்கு எதிராக முஸ்லிம்களின் ஓட்டுகளை சிதறவிடக்கூடாது என்று டெல்லி இமாமிடம் சோனியா காந்தி கேட்டுக்கொண்டதாக கூறப்படுவது தொடர்பாக புகார் வந்தால், அதை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ளும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சம்பத் கூறினார் |
| ஆம் ஆத்மியிடம் பா.ஜ.க.-காங்கிரஸ் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்: கெஜ்ரிவால் Posted: 03 Apr 2014 04:08 PM PDT பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆம் ஆத்மியின் ஆட்சித்திறன் குறித்து கேள்வியெழுப்பி வந்த நிலையில், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், "49 நாள் ஆட்சியில் மக்கள் நலனுக்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த ஆம் ஆத்மியிடம் இருந்து பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார் |
| சஹாரா மோசடியில் சுப்ரதா ராயை தண்டிக்க வில்லை: சுப்ரீம் கோர்ட்டு Posted: 03 Apr 2014 02:59 PM PDT முதலீட்டாளர்களிடமிருந்து சட்டவிரோதமாக நிதி திரட்டியது தொடர்பான புகாரில், ரூ.20 ஆயிரம் கோடியை செபியிடம் வழங்குமாறு சஹாரா குழுமத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை செயல்படுத்தாததால் சஹாரா குழுமம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது |
| மாயாவதிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது Posted: 03 Apr 2014 01:24 PM PDT மத்திய பிரதேசத்தில் உள்ள சத்னா பகுதியில் நடைபெறும் தேர்தல் பிரசாரத்தில், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான சோனு பயாசி என்பவர், உத்தரபிரதேச போலீசாருக்கு போன் செய்து, 'சத்னாவுக்கு மாயாவதி |
| நாட்டை வழி நடத்தி செல்ல ராகுல்தான் தகுதியானவர்: உமர் அப்துல்லா Posted: 03 Apr 2014 01:16 PM PDT காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா, "நாட்டை வழிநடத்தி செல்ல ராகுல் காந்தி தான் தகுதியானவர். நரேந்திர மோடி பிரதமரானால் அது நாட்டிற்கே துரதிருஷ்டவசமாக போய்விடும்" என்று கூறினார். காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் மெந்தார் நகரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் உமர் அப்துல்லா |
| வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்: பா.ஜ.க. Posted: 03 Apr 2014 12:26 PM PDT வடகிழக்கு மாநிலங்களில் வரும் 7 ஆம் தேதி முதல் ஒன்பது கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கொண்டு வந்த 28 அம்ச வளர்ச்சி திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று பா.ஜ.க. வாக்குறுதி அளித்துள்ளது |
| சிறப்பு வீட்டுக்கடன் வசதித் திட்டத்தை நீட்டித்துள்ள பாரத ஸ்டேட் வங்கி Posted: 03 Apr 2014 11:55 AM PDT இந்தியாவின் மிகப் பெரும் அரசு வங்கியான பாரத ஸ்டேட் வங்கி பொதுமக்களுக்கான கடன்களை வழங்குவதிலும் முன்னணியில் இருக்கின்றது. வீட்டுக் கடன்களை அளிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கும் இந்த வங்கி மகளிருக்கும் மற்றும் புதிய கடன் பெறுவோருக்கும் சிறப்பு வீட்டுக்கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தியிருந்தது |
| முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அசாருதீன் வேட்பு மனு தாக்கல் Posted: 03 Apr 2014 11:16 AM PDT ராஜஸ்தான் மாநிலத்தின் 5 மக்களவை தொகுதிகளுக்கு வரும் 24ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், ராஜஸ்தான் மாநிலத்தின் டோங்-சவாய் மதோபூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான |
| காங்கிரஸ் இந்தியாவின் ஆன்மா-அதை அழிக்க முடியாது: ஜெய்ஸ்வால் Posted: 03 Apr 2014 10:48 AM PDT மத்திய மந்திரி ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் லக்னோ மக்களவை தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ரிடா ஜோஷியின் அலுவலகத்தை நேற்று திறந்து வைத்தார். அப்போது "காங்கிரஸ் இல்லாத இந்தியாவை நினைத்துக் கூட பார்க்க முடியாது |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |