Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


குழந்தைகளிடம் கொடூரமாக நடக்கும் பெற்றோருக்கு ஜெயில்

Posted: 31 Mar 2014 11:06 PM PDT

இங்கிலாந்தில் குழந்தைகள் மீது பெற்றோர்களின் அன்பு, பாசம், அரவணைப்பு போன்றவை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் குழந்தைகள் மனநலம் பாதித்த நிலையில் வளர்கிறார்கள். இதனால் பெற்றோர் வழிகாட்டுதல் இன்றி எதிர்கால வாழ்க்கையை தாங்களே தீர்மானிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அதை தடுக்க வேண்டும் என ராணி எலிசபெத் வலியுறுத்தினார். அதையடுத்து 'சிண்ட்ரெல்லா சட்டம்' என்ற புதிய சட்டம் வருகிற ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன்படி குழந்தைகள் மீது அன்பு இன்றி கொடூரமாக நடந்து கொள்ளும் பெற்றோருக்கு […]

இலங்கை அரை இறுதிக்கு தகுதி

Posted: 31 Mar 2014 11:04 PM PDT

வங்காளதேசத்தில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிட்டகாங்கில் நேற்று இரவு நடந்த ‘சூப்பர்-10′ சுற்று லீக்கின் முக்கிய ஆட்டத்தில் நியூசிலாந்து-இலங்கை அணிகள் (குரூப்-1) அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்ட இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமால் நேற்றைய ஆட்டத்தில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா கேப்டன் பொறுப்பை கவனித்தார். ‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து அணி கேப்டன் பிரன்டன் மெக்கல்லம், இலங்கை அணியை முதலில் பேட்டிங் […]

வெஸ்ட்இண்டீஸ்-பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

Posted: 31 Mar 2014 11:00 PM PDT

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடை பெற்று வருகிறது. கடந்த 16–ந்தேதி தொடங்கிய இந்தப்போட்டியில் தகுதி சுற்று முடிவில் வங்காளதேசம், நெதர்லாந்து ஆகிய அணிகள் முதன்மை சுற்றான 'சூப்பர் 10' சுற்றுக்கு நுழைந்தன. கடந்த 21–ந்தேதி தொடங்கிய 'சூப்பர் 10' சுற்றில் 10 அணிகள் விளையாடின. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டது. 'குரூப் 1' பிரிவில் இலங்கை, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகளும், 'குரூப் 2' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நடப்பு […]

குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட “டைனோசர் குட்டி”

Posted: 31 Mar 2014 10:54 PM PDT

இங்கிலாந்தின் லிவர்பூல் ஜோன் மோர் பல்கலைக்கழகத்தினர் வெற்றிகரமான முறையில் டைனோசர் குட்டி ஒன்றை குளோனிங் மூலம் உருவாக்கியுள்ளதாக அந்த பல்கலைக்கழகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த டைனோசர் குட்டிக்கு "ஸ்பெட்" செல்லப் பெயர் சூட்டியுள்ளனர். குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த டைனோசர் குட்டி பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. டைனோசரின் மரபணு தீக்கோழி ஒன்றின் கருவில் செலுத்தி விஞ்ஞானிகள் இதனை உருவாக்கியுள்ளனர். பல டைனோசர் மரபணுக்களை செலுத்தி இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதாக உயிரியல் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

பர்வேஸ் முஷாரபுக்கு மரண தண்டனை?

Posted: 31 Mar 2014 10:50 PM PDT

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் மீதான தேச துரோகக் குற்றச்சாட்டை சிறப்பு நீதிமன்றம் நேற்று ஏற்றுக் கொண்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ வழங்கப்படலாம். 1999 முதல் 2008 வரை தன்னுடைய ஆட்சிக் காலத்தில் தன் நாட்டிலிருந்தே பலத்த எதிர்ப்புகளைச் சந்தித்தவர் பர்வேஸ் முஷாரப். 2007-ம் ஆண்டு பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகளைச் சிறையில் அடைத்தும், அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியும் நாட்டை ஆண்டு வந்தார். அதிபர் பதவியில் இருந்து இறங்கியதும், […]

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜேர்மனியில் அமேசான் வர்த்தக நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தம்

Posted: 31 Mar 2014 10:47 PM PDT

அமெரிக்காவின் சியாட்டிலைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனம், எலக்ட்ரானிக் பொருட்களின் விற்பனைக்குப் பெயர் பெற்றது ஆகும். ஜெர்மனியில் உள்ள இதன் ஒன்பது முக்கிய தளங்களில் ஒன்று லெய்ப்சிக் நகரில் செயல்பட்டுவரும் லாஜிஸ்டிக்ஸ் மையமாகும். இங்கு பணிபுரியும் 2000க்கும் மேற்பட்ட ஊழியர்களில் 700 பேர் வெர்டி எனப்படும் தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள் ஆவர். இங்கு சமீபகாலமாக தொழிலாளர்கள் தங்களின் ஊதிய உயர்வு குறித்த போராட்டங்களில் அடிக்கடி ஈடுபட்டு வருகின்றனர். ஜெர்மனியின் அனைத்து மையங்களிலும் பணிபுரியும் மொத்தம் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜனாதிபதி மீது நம்பிக்கையிழந்த மக்கள்

Posted: 31 Mar 2014 10:45 PM PDT

பிரான்சில் சமீபத்தில் நடைபெற்ற நகராட்சித் தேர்தல்களின் முடிவுகள் ஆளும் சோஷியலிஸ்ட் கட்சிக்குப் பெரிய பின்னடைவைத் தந்துள்ளன. கருத்துக் கணிப்புகள் முன்னரே இந்த முடிவினைத் தெரிவித்திருந்த போதிலும் ஜனாதிபதி பிரான்சுவா ஓலாந்தே தன்னுடைய பொருளாதாரக் கொள்கைகளின் மீது மக்கள் நம்பிக்கை கொண்டு தேர்தலிலும் ஆதரவினை அளிப்பார்கள் என்று எண்ணியிருந்தார். ஆனால் தேர்தலின் முடிவுகளோ ஆளும் கட்சி 155க்கும் மேற்பட்ட நகரங்களில் தங்களுடைய செல்வாக்கை இழந்துள்ளதைத் தெரிவிக்கின்றது. இதற்கு பதிலாக மரைன் லெ பென்னின் தேசிய முன்னணிக் கட்சி 15 […]

This posting includes an audio/video/photo media file: Download Now

சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்கும் என பிரித்தானியா நம்பிக்கை

Posted: 31 Mar 2014 10:43 PM PDT

சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்கும் என பிரித்தானியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு சர்வதேச சமூகத்திற்கு இலங்கை ஆதரவளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது. தீர்மானம் உரிய முறையில் நிறைவேற்றப்படுவதனை உறுதி செய்யும் நோக்கில் சர்வதேச நாடுகளுடன் இணைந்து தொடர்ந்தும் பிரித்தானியா நடவடிக்கை எடுக்கும் என அந்நாட்டு வெளிவிவகாரச் செயலாளர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார். தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள் சுயாதீன கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளமை உறுதியாகியுள்ளது என அவர் […]

Jailbrok செய்யப்பட்ட அப்பிள் சாதனங்களில் சாத்தியமாகும் Dual Boot வசதி

Posted: 31 Mar 2014 07:59 PM PDT

அப்பிளின் iOS சாதனங்களை Jailbrok செய்ததன் பின்னர் அவற்றினை இரண்டு வகையான இயங்குதளங்களில் (Dual Boot) செயற்பட வைக்க முடியும் என @winocm (https://twitter.com/winocm) எனும் ஹேக்கர் ஒருவர் நிரூபித்திருக்கின்றார். இவர் iPad 2 சாதனத்தினை Jailbrok செய்து அதில் iOS 5,iOS 6, மற்றும் iOS 7 ஆகிய மூன்று இயங்குதளங்களைக் கொண்டு செயற்படுத்தியுள்ளார். இதனை வீடியோவாக வெளியிட்டுள்ள அவர் அனேகமான அப்பிள் சாதனங்களை iOS 6, iOS 7 ஆகிய இயங்குதளங்களைக் கொண்டு Dual […]

This posting includes an audio/video/photo media file: Download Now

iPhone 6 தொடர்பில் மேலும் சில புகைப்படங்கள் வெளியாகின

Posted: 31 Mar 2014 07:57 PM PDT

நாளுக்கு நாள் எதிர்பார்ப்பினை ஏற்படுத்திவரும் iPhone 6 தொடர்பில் மேலும் சில புதிய படங்கள் வெளியாகியுள்ளன. அறிமுகமாவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இப்புதிய கட்டமைப்பினை Martin Hajek மற்றும் Nowhereelse என்பவர்கள் வடிவமைத்து வெளியிட்டுள்ளனர். எது எவ்வாறாயினும் அப்பிள் நிறுவனம் A8 Processor இனைக் கொண்டதும் 4.7 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டதும், 5.5 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டதுமான இரு ஸ்மார்ட் கைப்பேசிகளை வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

மனிதர்களை கண்கலங்க வைக்கும் இந்த ஐந்தறிவு ஜீவனின் தன்னம்பிக்கை….

Posted: 31 Mar 2014 07:42 PM PDT

dog_twoleg_001.w245

dog_twoleg_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

வித்திட்டவர்கள் யார் என்று அறியாமல் பிரச்சினையைத் தீர்க்க வழிமுறைகளைத் தேடமுடியாது

Posted: 31 Mar 2014 06:50 PM PDT

கொழும்பு – 06, 57வது ஒழுங்கை, கொழும்பு தமிழ்சங்க மண்டபத்தில் 31.03.2014 அன்று மாலை 4.30 மணிக்கு பேர்னாட் சொய்சா அவர்களின் நூற்றாண்டு நினைவுக் கூட்டம் தேசியப் பிரச்சினை தலைவரவர்களே, எனதருமை சகோதர சகோதரிகளே! என் பேச்சு இன்று தமிழில் தரப்போவதாக அழைப்பிதழ் கூறுகின்றது. எமக்குள் ஏற்பட்ட புரியாமையின் நிமித்தம் நான் ஆங்கிலத்தில் என் பேருரையை தயாரித்து வைத்துள்ளேன். கௌரவ அமைச்சருக்கு நான் கூறினேன் கொழும்பு தமிழ் சங்கத்துக்கு வரும் அன்பர்கள் யாவரும் நல்ல ஆங்கில ஞானம் […]

கொழும்பில் அமெரிக்கா உள்ளிட்ட 16 நாடுகளின் பாதுகாப்பு கருத்தரக்கு

Posted: 31 Mar 2014 06:42 PM PDT

ஒருபுறம் இலங்கைக்கு எதிராக ஐநாதீர்மானம் – மறுபுறம் கொழும்பில் அமெரிக்கா உள்ளிட்ட 16 நாடுகளின் பாதுகாப்பு கருத்தரக்கு அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கட்டளைத் தலைமையகம், இலங்கை பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாதுகாப்பு பிரதானி அலுவலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள 'டெம்பஸ்ட் எக்ஸ்பிரஸ் – 24′ எனும் சர்வதேச கருத்தரங்கு கொழும்பில் நடத்தப்படவுள்ளது. நாளை 01.04.14 முதல் 9.04.14 வரை கொழும்பு, கலதாரி நட்சத்திர விடுதியில் நடைபெறவுள்ள இந்த சர்வதேச கருத்தரங்கில் அமெரிக்கா உட்பட 16 நாடுகளைச் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

பாலேந்திரன் விபூசிகாவை கிளிநொச்சி மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தில் தங்க வைக்க நீதவான் உத்தரவு

Posted: 31 Mar 2014 06:37 PM PDT

நீதிமன்ற உத்தரவின் பேரில் கிளிநொச்சி மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 13 வயதுடைய சிறுமி பாலேந்திரன் விபூசிகாவை தொடர்ந்து அங்கு தங்க வைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் கிளிநொச்சி மாவட்ட சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரி வி.முத்துக்குமாருக்கு இன்று திங்கட்கிழமை (31.03.14) உத்தரவிட்டார். அத்துடன், சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று அவருடைய உடமைகளை எடுத்துக் கொள்வதற்கு மாவட்ட நன்னடத்தை அதிகாரிக்கும் பொலிஸாருக்கும் நீதவான் அனுமதியளித்தார். கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கைக்கு ஆதரவாக 26 நாடுகளும், 3 அரச சார்பற்ற நிறுவனங்களும் செயற்பட்டன!

Posted: 31 Mar 2014 06:28 PM PDT

26 நாடுகளும், மூன்று அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டன என ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கைக் காரியாலயம் அறிவித்துள்ளது. மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது குறித்த நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டன என குறிப்பிட்டுள்ளது. சீனா, ரஸ்யா, பாகிஸ்தான் மற்றும் கியூபா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டன. நாடுகளுக்கு மேலதிகமாக மூன்று அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டுள்ளன.

த.தே.கூட்டமைப்பில் உள்ளவர்களே தமிழ் மக்களை அழித்தவர்கள்!- பிரதியமைச்சர் முரளிதரன்

Posted: 31 Mar 2014 06:17 PM PDT

இலங்கையிலே சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்று கூறினால் அதில் முதன்முதலில் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் த.தே.கூட்டமைப்பில் உள்ளவர்களையே விசாரிக்க வேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உபதலைவருமாகன வினாயகமூர்த்தி முரளிதரன் கூறினார். நேற்று கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் முரளீஸ்வரன் தலமையில் இடம்பெற்ற திட்டமிடல் பிரிவின் புதிய அலுவலக திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதியமைச்சர். இலங்கையிலே நடைபெற்ற அழிவுகளுக்கு மிகவும் பெரும் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜெனிவா தீர்மானத்துக்குப் பதிலடி – 15 புலம்பெயர் அமைப்புகளுக்கு சிறிலங்கா தடை

Posted: 31 Mar 2014 06:09 PM PDT

ஜெனிவா தீர்மானத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அனைத்துலக அளவில், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு திரட்டிய, 15 விடுதலைப் புலிகள் சார்பு அமைப்புகளை தடை செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, நோர்வே, இத்தாலி, சுவிற்சர்லாந்து. பிரான்ஸ், அவுஸ்ரேலியா, ஆகிய நாடுகளில் செயற்படும், 15 புலிகள் ஆதரவு அமைப்புகளை வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளாக சிறிலங்கா அரசாங்கம் அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நா பாதுகாப்புச் சபையின் 1373 தீர்மானத்துக்கு அமைய இந்த தடை […]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வைக்கோல் பட்டடை நாய்கள் – டக்ளஸ்

Posted: 31 Mar 2014 10:45 AM PDT

எமது பகுதியின் அபிவிருத்தியையும் மக்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டையும் முன்னெடுக்க முடியாதவாறு வைக்கோல் பட்டடை நாயாக இருந்து கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே குழப்பி வருகின்றனர் என டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். யாழ் நீராவியடியில் அமைந்துள்ள இலங்கைவேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச்சபை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாணசபை முறைமைக்கு ஊடாகவே அரசியல் உள்ளிட்ட எமது மக்களின் நாளாந்த […]

தக்காளியில் என்னென்ன இருக்கிறது தெரியுமா?

Posted: 31 Mar 2014 10:42 AM PDT

நாம் பழங்களை சாப்பிடுவதைபோலவே தக்காளி பழத்தையும் அப்படியே சாப்பிட்டால் உடலிற்கு வளத்தையும் நல்ல பலத்தையும் கொடுக்கும். தக்காளி பழத்தை அப்படியே சாப்பிடுவது டானிக் குடிப்பதற்கு சமமானது. அதுமட்டுமில்லாமல் தக்காளி பழத்தை எந்த வகையில் பக்குவபடுத்தி சாப்பிட்டாலும் அதன் சக்தி அப்படியே நமக்கு கிடைக்கும் இரத்தத்தைச் சுத்தப்படுத்தவும், இரத்த சோகை குணமாகவும் தக்காளி பயன்படுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கழிவுப்பொருள்கள் அனைத்தும் வெளியேறவும் இது பயன்படுகிறது. விஷப் பொருள்கள் இருந்தாலும் அவற்றையும் வெளியேற்றிச் சிறுநீரகங்களை புதுப்பித்துத் தருகிறது தக்காளிச் சாறு. […]

ஆகாயத்தாமரையின் மருத்துவ பயன்கள்

Posted: 31 Mar 2014 10:40 AM PDT

நீரில் மிதக்கக் கூடிய கூட்டம் கூட்டமாக வளரும் சிறுசெடிகள், காம்பற்ற இலைகளையும் குஞ்சம் போன்ற வேர்களையும் உடையது. அந்தரத் தாமரை என்றும் குறிப்பிடுவதுண்டு. தமிழகமெங்கும் குளம் குட்டைகளில் வளர்கிறது. இவற்றை வெப்பதை தணித்து, தாகம் குறைக்கும் மருந்தாகவும் தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றைத் துவளச் செய்யும் மருந்தாகவும் பயன் படுத்தலாம். இலையை அரைத்துக் கரப்பான், தொழுநோய்ப்புண் ஆகியவற்றின் மீது வைத்துக் கட்டிவர விரைவில் ஆறும். ஆசனவாயில் வைத்துக் கட்டிவர வெளிமூலம், ஆசனகுத்தல் ஆகியவை தீரும். 25 மி.லி. […]

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™