Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த கேரள தேர்தல் அதிகாரி டிஸ்மிஸ்

Posted: 31 Mar 2014 11:27 PM PDT

கேரளாவில் 20 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதற்கான தேர்தல் வருகிற 10–ந் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு நாள் நெருங்கி விட்டதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளன. தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்துள்ளது.

வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டியில் மாற்றம் இல்லை- ஆர்.பி.ஐ.

Posted: 31 Mar 2014 10:47 PM PDT

வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டியில் மாற்றல் இல்லை என்று ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்துள்ளது. ரெப்போ எனப்படும் வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி 8 சதவீதமாக நீடிக்கும். ரொக்கம் கையிருப்பு 4 சதவீதமாக நீடிக்கும். பணவீக்கம் குறைந்திருந்தாலும் தொடர்ந்து பராமரிக்க வட்டியில் மாற்றமில்லை. இவ்வாறு ரிசர்வ் வங்கி

கூட்டணி இழுபறி: மோடியுடன் டெலிபோனில் சந்திரபாபு நாயுடு பேச்சு

Posted: 31 Mar 2014 10:30 PM PDT

ஆந்திராவில் பா.ஜனதாவுடன் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. தொகுதி பங்கீடு செய்வதில் இரு கட்சிகளிடையே உடன்பாடு ஏற்படவில்லை. சீமாந்திராவில் மொத்தம் உள்ள 25 எம்.பி. தொகுதிகளில் பா.ஜனதா 6 தொகுதியையும் 175 சட்டமன்ற தொகுதியில் 25 இடங்களையும் கேட்கிறது.

வாஜ்பாயை போல மோடி சிறந்த பேச்சாளர் அல்ல: உமா பார்தி

Posted: 31 Mar 2014 09:49 PM PDT

மக்களவை தேர்தலில் உத்தரபிரதேசத்திலுள்ள ஜான்சி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க மூத்த தலைவர் உமா பார்தி பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில் "முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சிறந்த பேச்சாளர் ஆவார். அவரை போல ஒரு சிறந்த பேச்சாளர் இந்திய அரசிலில் இல்லை என்பதை மக்கள் அனைவரும் அறிவர். ஆனால் வாஜ்பாயுடன் ஒப்பிடும் போது நரேந்திர மோடி சிறந்த பேச்சாளர் இல்லை. அவரது கூட்டங்களுக்கு செல்லும் மக்கள் மோடியின் பேச்சைக் கேட்க செல்வதை விட தங்கள் எதிர்பார்ப்புகளை மோடி தலைமையிலான அரசு மாற்றும் என்ற நம்பிக்கையில் அதனை தெரிவிப்பதற்காகவே செல்கின்றனர். எனவே மோடி தன் பொறுப்பை உணர்ந்து செயலாற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.

தெலுங்குதேசம் ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு இலவச செல்போன்: சந்திரபாபு நாயுடு

Posted: 31 Mar 2014 09:47 PM PDT

தெலுங்கானா, சீமாந்திரா ஆகிய இரு மாநிலங்களிலும் தெலுங்கு தேசம் கட்சி பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த இரு கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

அத்வானிக்கு எதிராக ஆம் ஆத்மி வேட்பாளர் அறிவிப்பு

Posted: 31 Mar 2014 08:55 PM PDT

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் 26 மக்களவை தொகுதிகளை உள்ளடக்கிய குஜராத் மாநிலத்தில் இதுவரை 19 தொகுதிகளில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக காந்திநகர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானியை எதிர்த்து

பாதுகாப்பு காரணங்களுக்காக ரெயிலில் ஏசி பெட்டிகளில் திரைகள் நீக்கம்

Posted: 31 Mar 2014 08:06 PM PDT

ரெயில்களில் மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகளில் பயணிக்கிற பயணிகளின் அந்தரங்கத்தை கருத்தில் கொண்டு இருக்கைகளின் ஓரத்தில் மறைவுக்காக (நடைபாதையில்) திரைகள் பொருத்தப்படுவது, கடந்த 2009-ம் ஆண்டு அமலுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 28-ந் தேதி ஆந்திர மாநிலம்,

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் மீது செருப்பு வீச்சு

Posted: 31 Mar 2014 04:32 PM PDT

பீகார் மாநிலம் நலந்தா மாவட்டத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த முதல்-மந்திரி நிதிஷ்குமார் கட்சி வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது மாநில அரசு மின்சாரம், சாலை போன்ற அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என்று கூறி போராட்டக்காரர்கள் நிதிஷ்குமார் மீது கற்களை வீசினார்கள்

முசாபர்நகர் கலவரத்தில் கற்பழிக்கப்பட்ட 7 பேருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்

Posted: 31 Mar 2014 04:13 PM PDT

உத்தரப்பிரதேசம் மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு சாதாரண ஈவ் டீசிங்கில் ஆரம்பித்த பிரச்சினை பெரும் மதக்கலவரமாக உருவெடுத்ததில் இரு தரப்பிலும் 49 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகள், கடைகள் மற்றும் சொத்துகள் சூறையாடப்பட்டன

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நாட்டுக்கு பேரழிவு: ஏ.கே.அந்தோணி

Posted: 31 Mar 2014 03:35 PM PDT

கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மற்றும் வடகரை தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்த பாதுகாப்பு துறை மந்திரி ஏ.கே.அந்தோணி, 'பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நாடு பேரழிவை சந்திக்க நேரிடும்' என்று கூறினார். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் என்று வெளியாகும் கருத்துக் கணிப்புகள்

உடலில் கட்டிய குண்டினை வெடிக்கச் செய்து டிரைவர் தற்கொலை

Posted: 31 Mar 2014 02:53 PM PDT

ராஜஸ்தான் மாநிலம், ராஜ்சமண்ட் மாவட்டத்தை சேர்ந்தவர் போப்பாராம்(35). அப்பகுதியில் உள்ள சுரங்கத்தில் லாரி டிரவராக வேலை செய்துக் கொண்டு, அந்த சுரங்கத்தையொட்டியுள்ள வீட்டில் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார்

அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது மீண்டும் தாக்குதல்

Posted: 31 Mar 2014 02:23 PM PDT

அரியானா மாநிலத்தில் உள்ள ரோடாக் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக போட்டியிடும் நவீன் ஜெய்ஹிந்திற்கு சொந்தமாக வாகனம் ஏதும் இல்லாததால், தனது நீல நிற 'வேகன்-ஆர்' காரை அரவிந்த் கெஜ்ரிவால் இரவலாக தந்துள்ளார்

வாரணாசியில் மோடி, கெஜ்ரிவாலை எதிர்த்து களமிறங்கும் திருநங்கை

Posted: 31 Mar 2014 12:59 PM PDT

பிரதமராக துடிக்கும் நரேந்திர மோடி, அவரை வீழ்த்த நினைக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை எதிர்த்து போட்டியிடப் போவதாக 60 வயது திருநங்கை அறிவித்துள்ளார். பூர்வாஞ்சல் பகுதியில் உள்ள திருநங்கைகளுக்கு எல்லாம் தலைவியாக உள்ளவர் கமலா

பொம்மை விமானம் மூலம் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த சதி

Posted: 31 Mar 2014 12:50 PM PDT

பாராளுமன்றத்துக்கு வருகிற 7-ந் தேதி தொடங்கி மே 12-ந்தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்தியாவிலேயே பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகள் உள்ளன. இங்கு ஏப்ரல் 10-ந்தேதி தொடங்கி மே 12-ந்தேதி வரை 6 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது

சோனியா, ராகுலை எதிர்த்து அஜய் அக்ர்வால், ஸ்ம்ரிதி இராணி போட்டி

Posted: 31 Mar 2014 12:14 PM PDT

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. தலைமை அறிவித்துள்ளது. அதன்படி, சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் சுப்ரீம் கோர்ட் வக்கீல் அஜய் அகர்வால்

யமுனை ஆற்றில் மோட்டார் சைக்கிள் பாய்ந்து 2 சிறுவர்கள் பலி

Posted: 31 Mar 2014 12:02 PM PDT

புதுடெல்லியை சேர்ந்த 2 சிறுவர்கள் நேற்று அதிகாலை நடைப் பயிற்சிக்காக வீட்டை விட்டு புறப்பட்டு சென்றனர். வழியில், மோட்டார் சைக்கிளில் வந்த இரு நண்பர்கள் அவர்களை சந்தித்து, வாகனத்தில் ஏறிக் கொள்ளுமாறு கூறினர். நால்வருடன் சென்றுக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்

பழங்குடியினரைப் பற்றி பா.ஜ.க.வுக்கு அக்கறையில்லை: ராகுல் காந்தி

Posted: 31 Mar 2014 11:50 AM PDT

சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்டார் தொகுதியின் மாவட்ட தலைமையகமான கொண்டகானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி பேசியதாவது:- ஏழைகள், பழங்குடியினர், தலித்துகள், ஒடுக்கப்பட்டவர்கள் என அனைவருக்காகவும் காங்கிரஸ் கட்சி

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பவல் ராஜினாமா

Posted: 31 Mar 2014 10:35 AM PDT

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பவல் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு அனுப்பி விட்டதாக தெரிவித்துள்ள அவர், வரும் மே மாதம் தனது சொந்த ஊருக்கு சென்று ஓய்வெடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்

பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் குறைந்தது

Posted: 31 Mar 2014 10:18 AM PDT

கடந்த ஐந்து மாதங்களில் முதல்முறையாக பெட்ரோலின் விலை லிட்டருக்கு 75 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. ஆனால் டீசலின் விலையில் எந்த மாற்றமும் இல்லை

மாற்றம் ஏற்பட மோடிக்கு வாக்களியுங்கள்: அத்வானி பிரசாரம்

Posted: 31 Mar 2014 09:07 AM PDT

மக்களவைத் தேர்தலில் பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானிக்கு அவர் விரும்பிய தொகுதியான போபால் தொகுதி கொடுக்காமல், அவர் ஏற்கனவே வெற்றி பெற்ற காந்தி நகர் தொகுதியையே ஒதுக்கியது. இதனால் அதிருப்தியடைந்த அவர், பின்னர் சமாதானம் அடைந்து காந்தி நகரில் போட்டியிடுவதாக அறிவித்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™