Tamil Star |
- Google Nexus 4 ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான புதிய இயங்குதளம்
- உலகம் முழுவதும் இணைய சேவையை வழங்க தயாராகும் பேஸ்புக் (வீடியோ இணைப்பு)
- சிலைக்கு பிரியாவிடை அளித்த மர்லின் மன்றோ ரசிகர்கள்
- முதன் முறையாக விண்வெளியில் குட்டி கிரகம் கண்டுபிடிப்பு
- T20 உலக கிண்ணம்: அரையிறுதி சுற்றுக்கு இந்தியா தகுதி
- 20 கோடி ரூபா வரி செலுத்தி டோனி சாதனை!
- ஜெனீவா தீர்மானம் இலங்கைக்கு எதிரானதல்ல
- நாட்டின் தற்போதைய நிலைமைக்கு ராஜபக்ஷ அரசாங்கமே காரணம்
- விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சென்றடைந்த ரஷ்ய விண்வெளி ஓடம்
- ஒபாமாவுக்கு ஏற்பட்டிருக்கும் தலைகுனிவு!
- ஜெனிவாவில் இந்தியாவின் நிலைப்பாடு! பேச்சு நடத்தப்படும்: சம்பந்தன்
- ஜனநாயகத்தின் மதிப்பைச் சீரழித்து விட்டது சிறிலங்கா அரசாங்கம்
- ஜெனீவா பிரேரணையை நிராகரிக்கிறோம்! இந்தியா நடுநிலை வகித்தமை மகிழ்ச்சி! ஜனாதிபதி
- தேன்நிலவு முடித்த கையோடு கணவனை எமலோகம் அனுப்பிய மனைவி
- கெட்டநேரம் கெட்டநேரம்னு சொல்வாங்களே அதை பார்த்ததுண்டா?…
- மேஜிக் அரங்கேற்றத்தில் அம்பலமாகிய உண்மை…..
- படிப்பில இவரின் வேகத்தைக் கண்டு மிரண்டுறாதீங்க…… கடைசியா தெரியும் உண்மை!..
- நடுவீதியில் ரத்த வெள்ளத்தில் குழந்தை…. வாழ்வதற்கான தகுதியை இழந்து வரும் பிரபஞ்சம்!…
- பேயின் ஆக்ரோஷமான தாக்குதல்…… இக்காட்சி பேய் இருப்பதற்காக சிறந்த உதாரணமும் கூட….. -
- தேசிய ஒற்றுமைக்காக முஸ்லிம்கள் எப்போதுமே செயற்பட்டுள்ளனர்: பசில் ராஜபக்ச
| Google Nexus 4 ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான புதிய இயங்குதளம் Posted: 28 Mar 2014 11:12 PM PDT Jolla நிறுவனமானது Google Nexus 4 ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான புத்தம் புதிய இயங்குதளம் ஒன்றினை வடிவமைத்துள்ளது. இது தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவித்தலை அந்நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விடுத்திருந்தது. Sailfish OS எனப்படும் இப்புதிய இயங்குதளமானது கவர்ச்சிகரமான ஐகான்களை கொண்டுள்ளதுடன், மேலும் பல புதிய அம்சங்களை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ் இயங்குதளம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்வரும் வாரங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| உலகம் முழுவதும் இணைய சேவையை வழங்க தயாராகும் பேஸ்புக் (வீடியோ இணைப்பு) Posted: 28 Mar 2014 11:05 PM PDT அமேஷான் நிறுவனம் கடந்த வருடம் தனது வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை கொண்டு சென்று வழங்குவதற்காக Drone எனும் சிறிய விமான சேவையை அறிமுகம் செய்திருந்தது. இதனை தொடர்ந்து பல்வேறு முன்னணி நிறுவனங்களும் இதனை பின்பற்ற முனைப்பு காட்டி வருகின்றன. இவற்றின் வரிசையில் தற்போது பேஸ்புக் நிறுவனமும் உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் இணைய சேவையை வழங்க தீர்மானித்துள்ளது. அதற்காக Drone விமானங்களை உள்ளடக்கியதாக Drone-and-Laser எனும் திட்டத்தினை பயன்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. This posting includes an audio/video/photo media file: Download Now |
| சிலைக்கு பிரியாவிடை அளித்த மர்லின் மன்றோ ரசிகர்கள் Posted: 28 Mar 2014 11:00 PM PDT உலகப்புகழ் பெற்ற ஆலிவுட் நடிகை "மர்லின் மன்றோ” ஏராளமான ஆங்கிலப் படங்களில் நடித்தவர். அவரது நடையழகும், உடையழகும் மிகவும் பிரசித்தி பெற்றது. ஹாலிவுட் சினிமா உலகின் ராணியாக விளங்கியவர், நடிகை மர்லின் மன்றோ. அவருக்கு இணையாக அகில உலகப் புகழ் பெற்ற நடிகை வேறு எவரும் இல்லை. செல்வத்தில் புரண்டு செருக்கோடு வாழ்ந்தவர், மர்லின் மன்றோவின் கடைக்கண் பார்வைக்காக எத்தனையோ கோடீசுவரர்கள் தவம் கிடந்தார்கள். அவரது வாழ்க்கையின் பிற்பகுதியே இப்படி அமைந்திருந்தது. ஆனால், இளம் பருவ வாழ்க்கையோ […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| முதன் முறையாக விண்வெளியில் குட்டி கிரகம் கண்டுபிடிப்பு Posted: 28 Mar 2014 10:41 PM PDT சூரிய மண்டலத்திற்கு இரண்டு பில்லியன் கிலோ மீட்டர் தொலைவிற்கு வெளியே சனி மற்றும் யுரேனஸ் கிரகங்களுக்கு இடையே ஒரு குட்டி கிரகத்தை வானியல் ஆராயச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சனி கிரகத்தை போல் இந்த குட்டி கிரகத்தை சுற்றி பனிக்கட்டி மற்றும் எறி கற்கள் நிறைந்த இரண்டு வளையம் காணப்படுகிறது. இந்த இரண்டு வளையங்களுக்கிடையே 14 கி்.மீ இடைவெளி உள்ளது. 7 கி.மீ அகலமும், சில நூறு மீட்டர்கள் அடர்த்தியும் கொண்டுள்ளது. நீல்ஸ் போர் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் இதனை சாரிக்லோ […] |
| T20 உலக கிண்ணம்: அரையிறுதி சுற்றுக்கு இந்தியா தகுதி Posted: 28 Mar 2014 10:31 PM PDT உலக கிண்ண இருபதுக்கு- 20 கிரிக்கெட் தொடரின் சுப்பர்-10 சுற்றில் நேற்று பெற்றுக்கொண்ட வெற்றியின் மூலம் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை இந்தியா உறுதி செய்தது. இந்த தொடரில் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்ததுடன் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்த முதல் அணியாக இந்தியா திகழ்கின்றது. மிர்பூரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய மற்றும் வங்கதேச அணிகள் மோதின. 139 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்படுத்தாடிய இந்திய அணி 18 தசம் 3 ஓவர்களில் 2 […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| 20 கோடி ரூபா வரி செலுத்தி டோனி சாதனை! Posted: 28 Mar 2014 10:23 PM PDT
பீகார் மற்றும் ஜார்கண்ட மண்டலத்தில் அதிக வருமான வரி கட்டிய தனிநபர்களில் ஜார்கண்டை சேர்ந்த டோனி தொடர்ந்து ஆறாவது ஆண்டாக முதலிடத்தில் நீடிக்கிறார். கடந்த ஆண்டில் வருமான வரியாக 22 கோடி ரூபாவை டோனி செலுத்தி இருந்தார். அதனை விட அவர் இந்த ஆண்டு குறைவான தொகை வருமான வரி கட்டி இருப்பதன் மூலம் அவரது வருமான விகிதம் குறைந்து இருப்பது தெரியவந்துள்ளது. இந்த தகவலை வருமானவரி முதன்மை தலைமை கமிஷனர் ஆர்.கே.ராய் ஊடகங்களுக்கு நேற்று அறிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஜெனீவா தீர்மானம் இலங்கைக்கு எதிரானதல்ல Posted: 28 Mar 2014 10:18 PM PDT
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கைக்கு எதிரானதல்ல என அமெரிக்கத் தூதுவர் மிச்சல் ஜே. சிசன் தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலையான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மக்களின் நலன்களை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கியமானதும், சமாதானமானதுமான நாட்டில் கௌரவமாக அனைத்து இலங்கையர்களும் வாழக்கூடிய பின்னணி உருவாக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த முனைப்புக்களுக்கு இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் ஒத்துழைப்பு வழங்க அமெரிக்கா ஆர்வம் காட்டுவதாகத் மிச்சல் ஜே. சிசன் மேலும் தெரிவித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| நாட்டின் தற்போதைய நிலைமைக்கு ராஜபக்ஷ அரசாங்கமே காரணம் Posted: 28 Mar 2014 10:12 PM PDT நாட்டின் தற்போதைய நிலைமைக்கு அரசாங்கமே காரணம் என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கம் ஆபத்தான விளையாட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அரசியல் காரணத்திற்காக அரசாங்கம் ஒட்டு மொத்த நாட்டின் நன்மதிப்பையும் சீர்குலைப்பதற்கு முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. மனித உரிமை சவால்களை கண்டு அஞ்சப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் குறிப்பிட்டிருந்தார் எனவும், மாகாணசபை தேர்தலையே இலக்கு வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அழுத்தங்கள் […] |
| விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சென்றடைந்த ரஷ்ய விண்வெளி ஓடம் Posted: 28 Mar 2014 09:59 PM PDT விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு மூன்று பேருடன் பயணம் செய்த ரஷ்ய விண்வெளி ஓடம், அந்த மையத்தின் அருகே நேற்று நிலை நிறுத்தப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதனை அடைய இரண்டுடு நாள் தாமதம் ஏற்பட்டது. இது குறித்து ரஷ்ய விண்வெளி கட்டுப்பாட்டு மையம் தகவல் தருகையில், கஜகஸ்தான் சர்வதேச ஏவுதளத்தில் இருந்து ரஷ்யாவின் அலெக்ஸாண்டர் ஸ்கோர்ட்சோவ், ஓலெக் ஆர்டெம்யேவ் மற்றும் “நாசா’வின் ஸ்டீவ் ஸ்வான்சன் ஆகியோருடன் “சோயுஸ் டி.எம்.ஏ.-12எம்’ என்ற ராக்கெட் புதன்கிழமை புறப்பட்டது. ஆனால், புறப்பட்ட […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஒபாமாவுக்கு ஏற்பட்டிருக்கும் தலைகுனிவு! Posted: 28 Mar 2014 09:41 PM PDT
இந்நிலையில், வளர்ந்த மகள்கள் 4 பேரை வீட்டில் அடைத்து பூட்டி வைத்திருக்கும் சவூதி மன்னர் அப்துல்லாவை, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சந்தித்து பேசுவது அவருக்கு வெட்கக் கேட்டினை ஏற்படுத்தும் என்று அப்துல்லாவின் மகள்கள் கூறியுள்ளனர். சவூதி மன்னர் அப்துல்லாவிடம் இருந்து விவாகரத்து பெற்ற மனைவி அலனவ்ட் அல் ஃபயெஸ். கடந்த 13 ஆண்டுகளாக தன்னையும் தந்து மகள்களையும் ஜெட்டாவில் உள்ள வீட்டில் அடைத்து, மன்னர் சிறைபடுத்தி வைத்துள்ளதாக கடந்த வாரம் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். சமீபத்தில் ஒளிபரப்பாகிய இந்த பேட்டி, உலகில் உள்ள பெண்ணியக்க வாதிகளிடமிருந்து கண்டனக் குரல்களை எழச் செய்தது. தற்போது ஒபாமா சவூதி சென்றிருக்கும் நிலையில், மன்னர் அப்துல்லாவின் மகள்களான இளவரசிகள் சஹர் மற்றும் ஜவஹர் கூட்டாக தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தனர். 'பெற்ற மகள்களான எங்களையே வீட்டுச் சிறையில் அடைத்து வைத்து மன்னர் சித்திரவதை படுத்துவதை வைத்து மற்ற பெண்களின் கதி என்ன? என்பதை சிந்தித்து பாருங்கள். எங்களுக்கு நேர்ந்த அவலம் சர்வதேச சமுதாயத்தின் பார்வைக்கு சென்று சேர வேண்டும் என்பதற்காக பின்னால் ஏற்படப் போகும் ஆபத்தை கூட பொருட்படுத்தாமல் இந்த பேட்டியை தருகிறோம். வளர்ந்த பெண்களான எங்களை பிணைய கைதிகளைப் போல் பிடித்து வைத்திருக்கும் மன்னரை சந்தித்துப் பேசுவது ஒபாமாவுக்கு வெட்கக் கேடாக அமைந்து விடும்' என்று அந்த பேட்டியில் அவர்கள் தெரிவித்துள்ளனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஜெனிவாவில் இந்தியாவின் நிலைப்பாடு! பேச்சு நடத்தப்படும்: சம்பந்தன் Posted: 28 Mar 2014 09:32 PM PDT இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மான வாக்கெடுப்பின் போது இந்தியா வாக்களிப்பில் பங்கேற்காமை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகியுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெ ஹிந்துவுக்கு கருத்துக்கு வெளியிடுகையில், இந்தியாவின் முடிவுக்கு காரணங்கள் தெரியாத போதும் அது தொடர்பில் இந்தியாவுடன் பேசப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். எனினும் ஜெனிவா யோசனை நிறைவேற்றப்பட்டமை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது திருப்தியை வெளியிட்டுள்ளது. இதேவேளை ஜெனிவா யோசனை நிறைவேற்றம் கொழும்பில் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தாது. எனினும் இந்தியாவின் தீர்மானம் […] |
| ஜனநாயகத்தின் மதிப்பைச் சீரழித்து விட்டது சிறிலங்கா அரசாங்கம் Posted: 28 Mar 2014 06:29 PM PDT
சிறிலங்காவுக்கு எதிராக ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாக, அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவுகளிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். "சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் தீர்மானம், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று. 5 ஆண்டுகளுக்குப் பின்னரும், சிறிலங்கா அரசாங்கம் ஜனநாயகத்தின் மதிப்பைச் சீரழித்துள்ளதுடன், போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்கவும் மறுத்து வருகிறது. பொறுப்புக்கூறலையும் தாமதப்படுத்தி வருகிறது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஜெனீவா பிரேரணையை நிராகரிக்கிறோம்! இந்தியா நடுநிலை வகித்தமை மகிழ்ச்சி! ஜனாதிபதி Posted: 28 Mar 2014 06:18 PM PDT
அதேவேளையில் தான் எங்கள் நாட்டுக்கே உரித்தான நல்லிணக்கப்பாட்டுத் திட்டத்தை நிறைவேற்றப் போவதாகவும் அறிவித்தார். நாம் இந்தப் பிரேரணையை நிராகரிக்கிறோம். இது எங்கள் நாட்டின் நல்லிணக்கப்பாட்டு முயற்சிகளுக்கு தீங்கிழைக்கின்றது. இப்பிரேரணை எவ்வகையிலும் எமக்கு உதவப் போவதில்லை என்று ஜனாதிபதி பிரான்ஸ் தேசத்து செய்தி சேவைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்மானம் குறித்து நான் மனத்தைரியத்தை இழக்கவில்லை. நான் ஆரம்பித்த நல்லிணக்கப்பாட்டு செயற்பாடு தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என்று இந்த செய்தி சேவைக்கு ஜனாதிபதி தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில் குறிப்பிட்டு ள்ளார். மேற்கத்திய நாடுகளின் அனுசரணையுடன் கொண்டுவரப்பட்ட இந்தப் பிரேரணைக்கு 23 வாக்குகள் ஆதரவாகவும் 12 வாக்குகள் எதிராகவும் கிடைத்து நிறைவேறியது. இந்த சந்தர்ப்பத்தில் நாம் இலங்கையில் இரு தரப்பினரும் மேற்கொண்டதாகக் கூறப்படும் பாரதூரமான வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் போன்ற குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை ஒன்றை நடத்துவதற்கான காலம் இப்போது தோன்றியுள்ளது என்றும் ஜனாதிபதி கூறினார். இந்த வாக்களிப்பின் போது இந்தியா நடுநிலை அளித்தது அந்நாடு அமெரிக்க பிரேரணையை ஆதரிக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக இடம்பெற்றிருப்பது குறித்து தாம் மனநிறைவடைவதாகவும், இந்தியா எங்களுக்கு எதிராக வாக்களிக்க மறுத்தமை எங்கள் நாட்டுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்தார். நாம் உள்ளூரில் திட்டமிட்டு ஏற்படுத்திய நல்லிணக்க ஆணைக்குழு பல முக்கிய பரிந்துரைகளை இனங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக முன்மொழிந்துள்ளது என்றும் இதனை தமது அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என்றும் கூறினார். கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு எங்களுக்கு சிறிது கால அவகாசம் அவசியம் என்று தெரிவித்த ஜனாதிபதி, நான் இதனை நடைமுறைப்படுத்துவற்கு தீர்மானித்திருப்பதை வலியுறுத்த விரும்புகிறேன் என்றும் கூறினார். அமெரிக்கா தனது இந்த பிரேரணையை ஆதரிக்க உதவிகோரி பாரிய பிரசாரங்களை செய்ததனால் ஆரம்பம் முதல் இலங்கை ஆதரவற்ற நிலையிலேயே இருந்தது என்றும் ஜனாதிபதி கூறினார். இந்த இலங்கைக்கு எதிரான பிரேரணை கொண்டுவருவதற்கு முன்னரே அமெரிக்காவுக்கு 12 மேற்பட்ட நாடுகள் ஆதரித்த போதிலும் அன்று இலங்கை சார்பில் ஒரு நாடு கூட இருக்கவில்லை என்றும் ஜனாதிபதி கூறினார். இலங்கைக்கு அதிர்ச்சியளித்த மூன்று நாடுகள்! இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உட்பட சில நாடுகள் கொண்டு வந்த பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பில், இலங்கை தோல்வியடைந்தமை குறித்து மிகவும் கவலையடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் இருந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தானும், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்திரவதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க உள்ளிட்ட பிரதிநிதிகள் சகல நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் நாட்டின் நிலைமைகள் பற்றி விளக்கமளித்திருந்தோம். 26 ஆம் திகதி இரவு வரை மூன்று முக்கிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிப்பதாக உறுதியளித்திருந்தன. இறுதி நேரத்தில் அந்நாடுகள் தமது முடிவை மாற்றிக்கொண்டமை எமக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்தியா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்காது நடுநிலை வகித்தமை ஜனாதிபதியும் நாடு அடைந்த வெற்றி என்றும் சஜின் வாஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| தேன்நிலவு முடித்த கையோடு கணவனை எமலோகம் அனுப்பிய மனைவி Posted: 28 Mar 2014 08:38 AM PDT
அமெரிக்காவில் உள்ள மிச்சூரியா பகுதியில் வசித்த கோலி ஜான்சன் (25), என்பவருக்கும் கிரகாம் (22) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிகள் தங்களது தேன்நிலவை கொண்டாட மலைப்பிரதேசத்திற்கு சென்றிருந்தனர். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றியதால் ஜான்சனை அவரது மனைவி கிரகாம் மலையுச்சியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார். திருமணமாகிய 8 நாளில் இந்த படுகொலை சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் இளம்பெண் கிரகாமுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் தண்டனை காலத்திற்கு பிறகும் 5 ஆண்டுகள் அவரை கண்காணிக்க வேண்டும் என பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கெட்டநேரம் கெட்டநேரம்னு சொல்வாங்களே அதை பார்த்ததுண்டா?… Posted: 28 Mar 2014 05:15 AM PDT |
| மேஜிக் அரங்கேற்றத்தில் அம்பலமாகிய உண்மை….. Posted: 28 Mar 2014 05:10 AM PDT |
| படிப்பில இவரின் வேகத்தைக் கண்டு மிரண்டுறாதீங்க…… கடைசியா தெரியும் உண்மை!.. Posted: 28 Mar 2014 05:07 AM PDT |
| நடுவீதியில் ரத்த வெள்ளத்தில் குழந்தை…. வாழ்வதற்கான தகுதியை இழந்து வரும் பிரபஞ்சம்!… Posted: 28 Mar 2014 05:03 AM PDT |
| பேயின் ஆக்ரோஷமான தாக்குதல்…… இக்காட்சி பேய் இருப்பதற்காக சிறந்த உதாரணமும் கூட….. - Posted: 28 Mar 2014 05:01 AM PDT |
| தேசிய ஒற்றுமைக்காக முஸ்லிம்கள் எப்போதுமே செயற்பட்டுள்ளனர்: பசில் ராஜபக்ச Posted: 28 Mar 2014 04:58 AM PDT தேசிய ஒற்றுமைக்காக முஸ்லிம்கள் எப்போதுமே செயற்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய ஒற்றுமைக்காக சகல சந்தர்ப்பங்களிலும் முஸ்லிம்கள் குரல் கொடுத்துள்ளனர். பலஸ்தீன மக்களை காலணித்துவ ஆட்சியாளர்கள் ஒடுக்க முயற்சித்த போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தைரியமாக அதற்கு எதிர்ப்பை வெளியிட்டார். இலங்கையின் சகல முஸ்லிம்களினதும் பாதுகாவலராக ஜனாதிபதி செயற்படுகின்றார். போர் நிறைவின் பின்னர் நாட்டில் சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து இன மக்களையும் ஜனாதிபதி ஒரே விதமாகவே நடாத்தி […] |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |















