Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


மோடியை மிரட்டிய காங். வேட்பாளர் கைது

Posted: 28 Mar 2014 10:58 PM PDT

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சகரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக இம்ரான் மசூத் என்பவர் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் அவர் சகரன்பூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை அவர் மிகவும் கடுமையாக தாக்கிப் பேசினார். ஒரு கட்டத்தில் ஆவேசம் அடைந்த அவர்,

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி தேர்தலில் போட்டி

Posted: 28 Mar 2014 10:42 PM PDT

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம் மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் ஜார்க் கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.) தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஜே.எம்.எம். தலைவரும், முன்னாள் முதல்–மந்திரியுமான சிபுசோரனின் மகன் ஹேமந்த் சோரன் முதல்–மந்திரியாக இருக்கிறார். 81 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் ஹேமந்த் சோரனுக்கு 43 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு

பெங்களூர் மாணவனுக்கு ஸ்காலர்ஷிப்புடன் அனுமதி அளித்த உலக பல்கலைக்கழகங்கள்

Posted: 28 Mar 2014 10:31 PM PDT

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுதான்ஷு நாத் மிஷ்ரா என்ற மாணவன் ஒரு ஐஐடி பொறியாளர் மற்றும் மருத்துவத் தம்பதியின் மகன் ஆவான். இவனது தந்தை அமெரிக்காவில் வேலைப்பார்க்க, சுதான்ஷு தனது தாயுடன் பெங்களூருவில் வசித்து வருகிறான். பனிரெண்டாம் வகுப்பில் 93.2 சதவிகித மதிப்பெண்கள் எடுத்த நிலையில் சக மாணவர்கள் போல் மேற்படிப்பில் சேரத் துடிக்காமல் இந்த சிறுவன் ஒரு வருடம்

திருப்பதி மலையில் மீண்டும் தீ விபத்து

Posted: 28 Mar 2014 09:36 PM PDT

திருப்பதி கோவில் மலையில் உள்ள வனப்பகுதியில் கடந்த ஒருவாரமாக அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. அதை தீயணைப்பு படையினர் மற்றும் வனத்துறையினர் கடுமையாக போராடி தீயை அணைத்து வந்தனர். இந்த நிலையில் திருப்பதி மலை வனப்பகுதியில் நேற்று மீண்டும் 2 இடங்களில் தீ விபத்து நடந்தது. ஜப்பாலி தீர்த்தம் ஆஞ்சநேயர் கோவில்

பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இலவச சிகிச்சை: சுப்ரீம் கோர்ட்டு

Posted: 28 Mar 2014 08:54 PM PDT

மேற்கு வங்காளத்தின் பீர்பம் மாவட்டத்தின் சுபல்பூர் என்ற கிராமத்தில் 20 வயது பெண் வேறு சாதியை சேர்ந்த இளைஞருடன் காதல் கொண்டார். இதனால் கிராம பஞ்சாயத்தின் உத்தரவின்படி அந்த கிராமத்தில் உள்ள ஆண்கள் பலர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். ஒரு ஆங்கில நாளேட்டில் வெளியான இந்த செய்தியின் அடிப்படையில் சுப்ரீம்

கூடங்குளம் போராட்டக்காரர்களை கைது செய்யக் கூடாது: சுப்ரீம் கோர்ட்டு

Posted: 28 Mar 2014 08:11 PM PDT

கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக இயங்குவது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டு, கடந்த ஆண்டு மே மாதம் 15 விதிமுறைகளை வழங்கியது. ஆனால் இந்த விதிமுறைகள் எவற்றையும் பின்பற்றாமல் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்படுகிறது என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் சுந்தரராஜன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் விக்ரம்ஜித் சென் ஆகியோர் அடங்கிய

மூத்த குடிமக்கள் பென்ஷன் பெற எஸ்பிஐயின் புதிய திட்டம்

Posted: 28 Mar 2014 08:01 PM PDT

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியாகக் கருதப்படும் பாரத ஸ்டேட் வங்கி 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் பென்ஷன் தொகையை அவர்களுக்கு சிரமமில்லாமல் நேரடியாக அவர்களின் வீட்டிலேயே அளிக்கும் புதிய திட்டத்தை வரும் ஏப்ரல் மாதம் முதல் அறிமுகப்படுத்த உள்ளது. சோதனை முயற்சியாக கொல்கத்தாவில் அடுத்த மாதம் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகின்றது. அங்கு வெற்றிகரமாக செயல்படுத்தப்பதுவதைப் பொறுத்து பிற நகரங்களுக்கும் இந்த முறை விரிவுபடுத்தப்படும். அதுமட்டுமின்றி நாட்டின் பிற பொதுத்துறை வங்கிகளும் இதேபோன்று வயது முதிர்ந்தோர்களுக்கு பென்ஷன் தொகையை வீட்டிலேயே சென்றும் அளிக்கும் நடைமுறையைக் கொண்டுவரக்கூடும். ' எஸ்பிஐ 75+' என்று அழைக்கப்படும் இந்தத் திட்டம் இந்த வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யாவின் எண்ணத்தில் உதித்த ஒன்றாகும். இதன்மூலம் இந்தியாவில் முதன்முறையாக மூத்த குடிமக்களுக்கு அவர்களின் இருப்பிடங்களிலேயே நேரடியாக பென்ஷன் தொகை அளிக்கப்படும் என்று வங்கியின் தலைமை பொது மேலாளர் சுனில் ஸ்ரீவத்சவா சுட்டிக்காட்டினார். பெரும்பான்மையான முதியோர்கள் தங்கள் பிள்ளைகள் படித்துக்கொண்டோ, வெளிநாடுகளில

வேட்பாளர்களின் வெளிநாட்டு சொத்து விபரத்தையும் கேட்கும் தேர்தல் கமிஷன்

Posted: 28 Mar 2014 04:52 PM PDT

அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களின் வெளிநாட்டு சொத்து விபரங்களை பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்க வேண்டும் என அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பொதுச் செயலாளர்களிடம் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

தன்னம்பிக்கையின் மூலம் எவரெஸ்ட் சிகரம் தொட்ட மாற்றுத் திறனாளி அருணிமா

Posted: 28 Mar 2014 03:31 PM PDT

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறுவது என்பது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. அதுவும் ஒரு காலை இழந்த நிலையில் நடைபயணம் மேற்கொண்டு சிகரத்தை எட்டுவது சாமானிய மனிதர்களால் முடியாது. ஆனால் அந்த சாதனையை நிகழ்த்தி காட்டியிருக்கிறார் அருணிமா சின்கா.

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தாலும் கட்சித் தலைவராகவே தொடர்வேன்: ராஜ்நாத் சிங்

Posted: 28 Mar 2014 01:38 PM PDT

லக்னோவில் பத்திரிகையாளர் சந்திப்பில், பா.ஜ.க. வரும் மக்களவை தேர்தலில் பெரும்பான்மை பெறவில்லையென்றால் உயர்பதவியில் நீடிப்பீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த பா.ஜ.க. தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், "பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தாலும் தான் அக்கட்சியின் தேசிய தலைவராகவே தொடர்வேன்" என்று தெரிவித்துள்ளார்.

மத்திய மந்திரி ஆஸ்பத்திரியில் திடீர் அனுமதி

Posted: 28 Mar 2014 01:02 PM PDT

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி மணிஷ் திவாரி (48) நேற்று டெல்லியிலுள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் திடீரென்று அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மணிஷ் திவாரி அதற்காக வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார்.

யோகா என்ற பெயரில் பா.ஜ.க.வுக்கு பிரசாரம் செய்யும் பாபா ராம்தேவ்

Posted: 28 Mar 2014 12:45 PM PDT

தொலைக்காட்சிகளில் யோகாகுரு பாபா ராம்தேவ்-ன் யோகா நிகழ்ச்சிகள் விளம்பரதாரர் நிகழ்ச்சிகளாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் சட்டமன்ற மேல்சபை உறுப்பினர் மோகன் ஜோஷி, பாபா ராம்தேவ் யோகா நிகழ்ச்சி என்ற பெயரில்

மாற்றுத் திறனாளிகளை விமானத்தில் ஏற்ற மறுக்கக் கூடாது: அரசு உத்தரவு

Posted: 28 Mar 2014 12:12 PM PDT

விமானத்தில் பயணிக்கும் மாற்றுத் திறனாளிகளிடம் சோதனை என்ற பெயரில் விமான நிலைய அதிகாரிகள் மனசாட்சியே இல்லாமல் நடந்து கொள்வதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, செயற்கை கால்கள் பொருத்தப்பட்ட பெண்களின் கால்களை

நாசா நடத்திய சர்வதேச போட்டியில் இந்திய மாணவர்கள் வெற்றி

Posted: 28 Mar 2014 11:52 AM PDT

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான "நாசா" ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் விண்வெளி வடிவமைப்பு போட்டியை நடத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து 6வது ஆண்டு போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 70 நாடுகளை சேர்ந்த 1536 பள்ளி

சுஷில் குமார் ஷிண்டேவுக்கு வழங்கப்பட்ட சாதிச்சான்றிதழ் ரத்து

Posted: 28 Mar 2014 11:39 AM PDT

மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டேவுக்கு கடந்த 2009ம் ஆண்டு பரிசீலனை குழு மூலம் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. இது விதிமுறைகளுக்கு புறம்பாக வழங்கப்பட்டதாக மும்பை உயர்நீதி மன்றத்தில் பிரமோத் கெய்க்வாட் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

காங்கிரசை தண்டிக்கும் விதமாக மக்கள் வாக்களிப்பார்கள்: மோடி நம்பிக்கை

Posted: 28 Mar 2014 11:13 AM PDT

சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல் மந்திரியுமான நரேந்திர மோடி பேசுகையில், 'வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் நீர், நிலம், ஆகாயம் என்று ஊழலுக்கு மேல் ஊழலாக

இளம் குற்றவாளிகளின் வயதை குறைக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Posted: 28 Mar 2014 10:58 AM PDT

கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி ஓடும் பேருந்தில் இளம்பெண் ஒருவர் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இக்குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளில் ஒருவனுக்கு 18 வயது பூர்த்தியாகாத காரணத்தினால் அவன் வழக்கை

மோடி மண்ணில் அகிலேஷ் யாதவ் பிரச்சாரம்

Posted: 28 Mar 2014 10:36 AM PDT

குஜராத்தில் ஆறு மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ளது. இதனை பதான் மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவரும், உ.பி. முதல்வருமான அகிலேஷ் யாதவ் இன்று அறிவித்தார்.

சுற்றுலா வந்த போலந்து நாட்டு பெண்ணிடம் குஜராத்தில் கொள்ளை

Posted: 28 Mar 2014 09:05 AM PDT

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் ரெயில் நிலையத்தில், போலந்து நாட்டு சுற்றுலாப் பெண் பயணிடம் 100 பவுண்டுகள், மூன்று கேமராக்கள் என மொத்தம் ரூ.1.71 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ள போலந்து நாட்டைச் சேர்ந்த பாடிசியா பார்பா கொரேன் (25) என்ற பெண் நேற்று அதிகாலை தனது நண்பருடன் அகமாதாபாத் ரெயில் நிலையத்திற்கு வந்தார்.

கெஜ்ரிவால் மீது தாக்குதல்: ஹசாரே ஆதரவாளர் கைது

Posted: 28 Mar 2014 08:02 AM PDT

ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அரியானா மாநிலத்தில் 3 நாள் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கினார். பிவானி தொகுதிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு இடங்களில் அவர் காரை நிறுத்தி பேசினார். தத்ரிபுறநகர் பகுதியில் லோகரு சவுக் எனுமிடத்தில் ஆம் ஆத்மி தொண்டர்கள் திரண்டு நிற்பதை கண்டதும் கெஜ்ரிவால் காரை நிறுத்தி இறங்கினார். அவர் பேச தொடங்கியபோது


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™