Tamil Star |
- பெண்களுக்கான உலக கிண்ண டுவென்டி-20 போட்டிகள் இன்று தொடக்கம்
- இந்தியா- மேற்கிந்திய தீவுகள் இன்று மோதல்
- இங்கிலாந்தின் வெற்றி மழையால் பறிபோனது !
- உலகத்துல எந்த அப்பாவாது இப்படி இருப்பாரா?…..
- பெண்களுக்கு உகந்த பப்பாளி பழம்
- பொறுமையிழந்தமையினால் ஏற்பட்ட விபரீதத்தை பார்த்தீர்களா?….
- Angry Birds Go இன் புதிய பதிப்பு அறிமுகம் (வீடியோ இணைப்பு)
- என்னடா நடக்குது இங்க…. ஒரே கண்கட்டி வித்தையால்ல இருக்குது!….
- மொபைல் போன் வைத்திருப்பவர்களே கண்டிப்பாக இதை அவதானிக்கவும்!…..
- இந்த பிஞ்சு மனசில இப்படியா நஞ்சை விதைக்கிறது?….
- ஒன்லைனில் விற்பனைக்கு வரவிருக்கும் Nokia Lumia 630
- இதெல்லாம் தாத்தாவுக்கு முன்னையே சொல்லி கொடுக்குறதில்லையா?….
- கனடாவில் தொலைக்காட்சி பெட்டி கவிழ்ந்து விழுந்ததில் சிறுமி பரிதாபமாக பலி
- தூக்கமின்மை காரணமாக, மூளை செல்கள் நிரந்தரமாக பாதிக்கப்படும்
- இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விசேட குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றை அமைக்குமாறு பிரித்தானியா கோரிக்கை
- சர்வதேசத்தினை ஏமாற்ற விடுதலைப் புலிகள் என்ற கதையை மீண்டும் உருவாக்கி உள்ளார்கள் – பா.அரியநேத்திரன்
- எது நிஜம்? எது நடிப்பு? : போலி வலி பேர்வழிகளை காட்டிக் கொடுக்கும் நவீன கம்ப்யூட்டர்
- இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று நடத்தப்படுத்துவதற்கு இதுவே பொருத்தமான தருமாகும் – கஜேந்திரகுமார்
- ஜெனிவா மனித உரிமை பேரவையில் அனந்தி சசிதரன் : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவைக்கு கடிதம்
- இலங்கையின் அடுத்த ஜனாதிபதி, பொது வேட்பாளரை தெரிவு செய்வது தொடர்பான விசேட பேச்சுவார்த்தை தாய்லாந்தில்
| பெண்களுக்கான உலக கிண்ண டுவென்டி-20 போட்டிகள் இன்று தொடக்கம் Posted: 23 Mar 2014 03:55 AM PDT
பெண்கள் உலக கோப்பையில் பங்கேற்கும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, அயர்லாந்து அணிகளும், பி பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், இலங்கை, வங்காளதேச அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். சைலெட் மைதானத்தில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டங்களில் அவுஸ்திரேலியா– நியூசிலாந்து(மாலை 3 மணி), பாகிஸ்தான்– தென் ஆப்ரிக்கா(இரவு 7 மணி) மோதுகின்றன This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்தியா- மேற்கிந்திய தீவுகள் இன்று மோதல் Posted: 23 Mar 2014 03:52 AM PDT
முதல் போட்டியில் பாகிஸ்தானை வெற்றி கொண்ட இந்திய அணி இன்று மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்கிறது. பாகிஸ்தானை வீழ்த்திய நம்பிக்கையில் இருக்கும் இந்திய அணி, இரண்டாவது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. துடுப்பாட்டம், பந்துவீச்சு ஆகிய துறையில் இந்திய அணி சமபலத்துடன் காணப்படுகிறது. நடப்பு சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவுக்கு சவால் விடக்கூடியது. அந்த அணியில் தலைசிறந்த வீரர்கள் உள்ளனர். அதேவேளை, இதே பிரிவிலுள்ள பாகிஸ்தான் அணி இன்றைய போட்டியி்ல் அவுதிரேலியாவை எதிர்கொள்கிறது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இங்கிலாந்தின் வெற்றி மழையால் பறிபோனது ! Posted: 23 Mar 2014 03:50 AM PDT
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்களை குவித்தது. மொயின் அலி 36 ஓட்டங்களையும், மைக்கேல் லம்ப் 33 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 32 ஓட்டங்களையும், ரவி போபரா 24 ஓட்டங்களையும் பெற்றனர். தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து 5.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 52 ஓட்டங்களை எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. அப்போது கனே வில்லியம்சன் 24 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் பிரன்டன் மெக்கல்லம் 16 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டத்தை மேற்கொண்டு தொடர முடியவில்லை. 20 ஓவர் கிரிக்கெட்டில் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் அணி குறைந்தது 5 ஓவர்கள் விளையாடி விட்டாலே டக்வொர்த் லீவிஸ் விதிப்படி முடிவு அறியப்படும். இதன்படி 5.2 ஓவர்களில் நியூசிலாந்துக்கு 44 ஓட்டங்களே போதுமானதாக இருந்ததால், அந்த அணி 9 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| உலகத்துல எந்த அப்பாவாது இப்படி இருப்பாரா?….. Posted: 23 Mar 2014 03:47 AM PDT
This posting includes an audio/video/photo media file: Download Now |
| பெண்களுக்கு உகந்த பப்பாளி பழம் Posted: 23 Mar 2014 03:44 AM PDT
தாய்ப்பால் புகட்டும் பெண்கள் தினமும் பப்பாளி பழம் சாப்பிடுவதன் மூலம் பால் பெருகும். நரம்பு வலியால் அவதிப்படுகிறவர்கள் பப்பாளி இலையை கொதித்த நீரில் முக்கியோ, தீயில் சுட்டோ வலியுள்ள பகுதியில் வைத்தால், வலி குறைந்துவிடும். பெண்கள் பப்பாளி பழம் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். ஏனென்றால் பெண்களின் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அதில் இருக்கின்றன.
100 கிராம் பப்பாளியில் கிட்டத்தட்ட 2500 இன்டர்நேஷனல் யூனிட் வைட்டமின் ஏ சத்து இருக்கிறது. அதனால் பப்பாளி சாப்பிட்டால், பார்வை சக்தி அதிகரிக்கும். பழுத்த பப்பாளியின் தசை பகுதியை எடுத்து பிசைந்து, முகத்தில் பூசி அரை மணி நேரம் வைத்திருந்து முகத்தை கழுவுங்கள். சரும சுருக்கம், படை போன்றவை நீங்கி, முகம் ஜொலிக்கும். பப்பாளி பழத்தை ஆண்கள் தினமும் சாப்பிட்டால் அவர்களது தாம்பத்ய சக்தி அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. ஓய்வற்ற உழைப்பு, மனஅழுத்தம் நிறைந்த வேலை, உடற்பயிற்சியின்மை போன்றவைகளால் கழுத்து வலி, முதுகுவலி, முதுகு சவ்வு தேய்தல் போன்ற பாதிப்புகளால் நிறையபேர் அவதிப்படுகிறார்கள். அந்த பாதிப்புளை கட்டுப்படுத்தும் சக்தி, பேப்பைன் என் சைம்க்கு இருக்கிறது. அதனால் வலியும், நோயுமின்றி வாழ விரும்புகிறவர்கள் பப்பாளி பழத்தை தினமும் சாப்பிடவேண்டும். This posting includes an audio/video/photo media file: Download Now |
| பொறுமையிழந்தமையினால் ஏற்பட்ட விபரீதத்தை பார்த்தீர்களா?…. Posted: 23 Mar 2014 03:43 AM PDT |
| Angry Birds Go இன் புதிய பதிப்பு அறிமுகம் (வீடியோ இணைப்பு) Posted: 23 Mar 2014 03:42 AM PDT
Sub Zero எபிசொட் என அழைக்கப்படும் இப்புதிய பதிப்பில் பெரிய அளவில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தற்போது இலவசமாக தரவிற்கம் செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| என்னடா நடக்குது இங்க…. ஒரே கண்கட்டி வித்தையால்ல இருக்குது!…. Posted: 23 Mar 2014 03:40 AM PDT |
| மொபைல் போன் வைத்திருப்பவர்களே கண்டிப்பாக இதை அவதானிக்கவும்!….. Posted: 23 Mar 2014 03:35 AM PDT |
| இந்த பிஞ்சு மனசில இப்படியா நஞ்சை விதைக்கிறது?…. Posted: 23 Mar 2014 03:33 AM PDT
This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஒன்லைனில் விற்பனைக்கு வரவிருக்கும் Nokia Lumia 630 Posted: 23 Mar 2014 03:31 AM PDT
எனினும் இதனை ஒன்லைன் மூலமான விற்பனையைக் குறி வைத்தே விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Windows Phone 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இக்கைப்பேசியானது 4.5 அங்குல அளவுடைய தொடுதிரை, Quad Core Snapdragon 400 Processor மற்றும் பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளது. இவற்றுடன் 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெராவினையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இதெல்லாம் தாத்தாவுக்கு முன்னையே சொல்லி கொடுக்குறதில்லையா?…. Posted: 23 Mar 2014 03:26 AM PDT
This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனடாவில் தொலைக்காட்சி பெட்டி கவிழ்ந்து விழுந்ததில் சிறுமி பரிதாபமாக பலி Posted: 23 Mar 2014 03:18 AM PDT
கனடாவின் அல்பெர்ட்டா மாகாணத்தில் கல்கரி மாகாணத்தை சேர்ந்த 6 வயது சிறுமியே பரிதாபமாக பலியானார். கடந்த 19ம் திகதி மாலை 7 மணிக்கு முன்பாக இச்சம்பவம் நடந்துள்ளது, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பே சிறுமி இறந்து விட்டாள். பெற்றோர்கள் ஆழ்ந்த துயரத்தில் இருப்பதால் பாதிக்கப்பட்டவர்கள் சேவையின் ஆதரவில் உள்ளனர், தொலைக்காட்சி விழுந்து காயப்படுதல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. 2013ம் ஆண்டில் வெளிவந்த குழந்தை மருத்துவ பத்திரிகையொன்றின் அறிக்கை படி, அமெரிக்காவில் கடந்த 20 வருட காலப் பகுதியில் 200,000 வரையிலான பிள்ளைகள் தொலைக்காட்சி விழுந்து காயப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பின்வரும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் படி குடும்பங்களிற்கு கனடா பொது சுகாதார பகுதி பரிந்துரைக்கின்றது. - பிள்ளைகளை எப்போதும் கண்காணிக்க வேண்டும். தளபாடங்களில் ஏறுவது தள்ளுவது தவறு என கூறவேண்டும். - புத்தக அலுமாரி, அலுமாரிகள், தொலைக்காட்சி ஸ்ரான்ட்ஸ் போன்றனவற்றை நிலையான பரந்த அடித்தளத்தில் வைக்கவும், கால்கள் சில்லுகள் உள்ள மாடல்கள் கவிழக்கூடியவை. - தளபாடங்களை கோண பிரேசர்கள், பாதுகாப்பு பட்டைகள் போன்றவற்றுடன் இணைத்து வைக்கவும் முடிந்தால் பாதுகாப்பாக ஆணி அடித்து வைக்கவும். - நிலையான தளபாடத்தில் மிகவும் பின்னால் தொலைபேசியை வைக்கவும். தொலைபேசியின் அளவையம் பாரத்தையும் தாங்க கூடிய அதற்கென தயாரிக்கப்பட்ட தளபாடத்தில் தொலைக்காட்சியை வைக்கவும். - பிள்ளைகளை ஈர்க்கும் பொருட்களான விளையாட்டு பொருட்கள், மரங்கள், ரிமோட் கொன்ரோல் போன்றவற்றை தொலைக்காட்சிக்கு மேல் அல்லது தொலைக்காட்சி வைக்கப் பட்டிருக்கும் தளபாடத்தில் வைப்பதை தவிர்க்கவும். -மின்சார வயர்களை தளபாடத்திற்கு பின்னால் பிள்ளைகள் அடைய முடியாத வகையில் வைக்கவும். This posting includes an audio/video/photo media file: Download Now |
| தூக்கமின்மை காரணமாக, மூளை செல்கள் நிரந்தரமாக பாதிக்கப்படும் Posted: 23 Mar 2014 03:14 AM PDT
அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா பல்கலை கழகத்தை சேர்ந்த மருத்துவ வல்லுனர்கள், நீண்ட நாட்களாக தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களின் மூளை செல்களை ஆய்வு செய்தனர். இந்த செல்களுக்கு, கண்காணிப்பு மற்றும் அறிவு தேவைப்படுகிறது. தூக்கமின்மை காரணமாக, மூளை செல்கள், நிரந்தரமாக பாதிக்கப்படுகின்றன என்பது இந்த ஆய்வின் மூலம், முதன் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 23 Mar 2014 03:11 AM PDT
இலங்கையின் ஆங்கில இதழ் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் இலங்கைக்கு எதிரான பிரசாரம் வேறு பாதையில் திருப்பப்பட்டுள்ளதாக அந்த செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் இந்த முனைப்பை பிரித்தானியா புலம்பெயர்ந்த தமிழர்களின் அழுத்தங்களின் அடிப்படையிலும் அமெரிக்காவின் ஜெனீவா யோசனைக்கு இந்தியா ஆதரவளிப்பதாக அறிவித்தமையையும் அடுத்தே இந்த புதிய கோரிக்கையை விடுத்துள்ளார். எதிர்வரும் 27 ஆம் திகதி அமெரிக்கா ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக முன்வைத்துள்ள யோசனைக்கான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. சியாராலியொனில் ஜனாதிபதி சார்ல்ஸ் டெய்லருக்கு எதிராக அமைக்கப்பட்டமையை போன்று விசேட நீதிமன்றம் அமைக்கப்பட்டால் அதன் மூலம் இலங்கையின் காயங்களுக்கு தீர்வு கிட்டும் என்று வில்லியம் ஹேக் குறிப்பிட்டுள்ளார். நெதர்லாந்து ஹேக்கில் நடைபெற்ற சியாரோலியோன் விசேட நீதிமன்றத்தின் மூலம் மனித உரிமை மீறல் குற்றம் சுமத்தப்பட்ட சார்ல்ஸ் டெய்லருக்கு 50 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது This posting includes an audio/video/photo media file: Download Now |
| சர்வதேசத்தினை ஏமாற்ற விடுதலைப் புலிகள் என்ற கதையை மீண்டும் உருவாக்கி உள்ளார்கள் – பா.அரியநேத்திரன் Posted: 23 Mar 2014 03:04 AM PDT
மன்னார் மாவட்ட அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் சத்தியாக்கிரக போராட்டம் அண்மையில் மன்னார் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு மன்னார் மறைமாவட்ட ஆண்டகை இராயப்பு யோசப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வடகிழக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்கள், வடமாகாணசபை அமச்சர்கள் காணமல்போனோர் சங்கத்தின் உறுப்பினர்கள் மேல்மாகாண சபையின் வேட்பாளர்கள் மற்றும் புத்திஜீவிகள். கல்வி மான்கள், அருட்சகோதரர்கள். அருட்சகோதரிகள் என பலரும் கலந்து கொண்டனர். இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர், எமது போராட்டங்கள் அகிம்சை, ஆயுதப் போராட்டங்கள் என்று பல பரிமாணங்களைக் கொண்டவை அதனடிப்படையிலேதான் எமது போராட்டங்கள் தந்தை செல்வா தொடக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரபாகரனின் ஆயுதப் போராட்டம் வரை சென்ற பின்னர்தான் தற்போது த.தே.கூட்டமைப்பும், புலம்பெயர் நாடுகளில் உள்ள மக்களும் இணைந்தே சர்வதேச ரீதியான போராட்டத்தினை ஆரம்பித்திருக்கின்றோம். இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக 2009க்கு பிற்பட்ட காலப்பகுதியிலும் அதற்கு முந்திய காலத்தில் இருந்தும் எங்களை எவ்வாறு நடத்தி வந்திருக்கின்றது என்பதனை நாம் ஒவ்வொருவரும் அறிந்திருத்தல் அவசியமாகும். தந்தை செல்வா ஆரம்பித்த அகிம்சைப் போராட்டமும் இப்போது இருக்கின்ற த.தே.கூட்;டமைப்பு செய்கின்ற இந்த அகிம்சைப் போராட்டத்திலும் என்ன வித்தியாசத்தினை கண்டிருக்கின்றோம். அன்றிருந்த அடக்குமுறைக்கும் இன்றிருக்கின்ற அடக்கு முறைக்கும், அன்று இடம்பெற்ற இனப்படுகொiலைக்கும். இன்று இடம்பெற்றிருக்கின்ற இனப்படுகொலைக்கும் என்ன மாற்றங்கள் என ஆராய வேண்டும். இனப்படுகொலை என்பதனைக்கூட தவிர்க்க வேண்டும் என்ற யதார்த்தம் இங்கு இருக்கின்றது. ஆகவே இனப்படுகொலை என்ற வார்த்தையைப் பேசாமல் தமிழினப் படுகொலை என்ற வார்த்தையைப் பேசிகின்றேன். இந்த தமிழினப் படுகொலை என்பது இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இன்று வரைக்கும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. 2009ம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கையிலே இருந்து விடுதலைப் புலிகள் இல்லையென்று கூறிய இந்த அரசாங்கம் இன்று விடுதலைப் புலிகள் இருக்கின்றார்கள் என்று கூறுகின்றார்கள். வடகிழக்கிலே புலிகள் இருக்கின்றார்கள் என்று காட்டவேண்டிய தேவை தற்போது இலங்கை அரசாங்கத்திற்கு எழுந்துள்ளது. காரணம் ஜெனிவா மாநாட்டின் ஒரு அங்கமாக இது பேசப்படுவதனால், கிளிநொச்சியிலே இடம்பெறுகின்ற மனித உரிமை மீறள்களுக்கு எதிராக குரல்கொடுத்த ஒருவர் என்ற ரீதியில்தான் அவருடைய கடத்தல் நாடகம் அரங்கேறி இருக்கின்றது. இவர் பல போராட்டங்களில் பங்கெடுத்த தாயார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்காகத்தான் விடுதலைப் புலிகள் என்ற கதையை உருவாக்கி சர்வதேசத்தினை ஏமாற்ற நினைக்கின்றார்கள் என்பதுதான் உண்மை. அனைவரும் ஒருமித்து நிச்சயமாக இந்த நாட்டிற்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்று மிக முக்கியமாகத் தேவை என்று கூறிக்கொண்டு இருக்கும் போது தான் இவ்வாறான புலி நாடகத்தினை வடக்கு மாகாணத்திலே நிறைவேற்ற முற்படுகின்றார்கள். இதனைக்காட்டி தற்போது இருக்கும் படைவலுச் சமநிலையை அதிகரிக்கச் செய்வதோடு இராணுவ மயமாக்கலையும் ஊக்குவிக்க எடுக்கும் நடவடிக்கையாகவே இதனைப் பார்க்க வேண்டி இருக்கின்றது எனவும் கூறினார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| எது நிஜம்? எது நடிப்பு? : போலி வலி பேர்வழிகளை காட்டிக் கொடுக்கும் நவீன கம்ப்யூட்டர் Posted: 23 Mar 2014 02:58 AM PDT
தலை வலி, வயிற்று வலி போன்ற உபாதைகள் எதிர்பாராத வேளைகளில் ஏற்படும்போது உயிரே போய் விடுவது போல் பலர் துடித்துப் போய் விடுவதுண்டு. ஆனால், இவற்றையே சாக்காக வைத்து, வலி ஏற்பட்டதைப் போல் போலியாக ஆஸ்கார் நாயகர்கள் அளவிற்கு சிலர் நடித்து அசத்துவதுண்டு. இதில் இரண்டாவது பிரிவினரை இனம்காண முடியாமல் எது நிஜம்? எது நடிப்பு? என்பது புரியாமல் பலர் மண்டையை பிய்த்துக் கொள்வதும் உண்டு. ஆனால், இனி இந்த ஆஸ்கார் பேர்வழிகளின் நடிப்பு எடுபடாமல் போகும் அளவுக்கு இவர் நிஜ வலியால் துடிக்கிறாரா?, போலி வலியால் நடிக்கிறாரா? என்பதை வெகு துல்லியமாக கண்டுபிடித்து விடும் நவீன கம்ப்யூட்டரை அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள சாண்டியாகோ நரம்பியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆராய்ச்சிக்காக வலியால் அவதிப்படும் 25 பேரின் ஒரு ஜோடி வீடியோ காட்சிகளை ஆராய்ச்சியாளர்கள் 170 பேரிடம் போட்டுக் காண்பித்தனர். இவற்றில் எது நிஜ வலி?; எது போலி வலி? என்று அடையாளப்படுத்தும்படி, அவர்களிடம் கூறிய போது சுமார் 50 சதவீத நடிப்பை மட்டுமே இவர்களால் இனம்காண முடிந்தது. ஆனால், இதே காட்சிகளை கவனித்த இந்த நவீன கம்ப்யூட்டரோ... 85 சதவீதம் துல்லியமான முடிவை வெளியிட்டு மனிதர்களை அசத்தியுள்ளது. நிஜ வலி ஏற்படும் போது மனிதர்களின் வாய் உள்ளிட்ட முகத்தின் தசைப் பகுதிகளில் உண்டாகும் 20 வகை மாற்றங்களை அடிப்படையாக வைத்து இந்த சரியான முடிவுகளை கம்ப்யூட்டர் கண்டுபிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 23 Mar 2014 02:47 AM PDT
இவற்றைத் தடைசெய்வதற்கு இடைகால நிர்வாகம் ஒன்று ஏற்படுத்துவது அவசியமாகும் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வாக சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட தீர்வொன்று வழங்கப்டவேண்டும். அத்துடன் இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று நடத்தப்படுத்துவதற்கு இதுவே பொருத்தமான தருமாகும். இதற்கான சந்தர்ப்பத்தை நழுவவிடும் பட்சத்தில் தமிழர்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டுவிடும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜெனிவாவில் வலியுறுத்தியுள்ளார். ஜெனிவா ஊடக நிலையத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவிலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பாரியளவில் மனித உரிமை மீறல்களும் யுத்தக்குற்றங்களும் இடம்பெற்றதற்கான நேரடிச்சாட்சியங்கள் காணப்படுகின்றன. அதனடிப்படையில் வைத்துப் பார்க்கையில் இறுதியுத்தத்தின் போதும் அதற்கு முன்னரும் பின்ருமான தருணங்களில் தமிழ் மக்கள் மீது நிகழ்ச்சிநிரலிடப்பட்ட ஒரு இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது என்பது தெளிவாகின்றது. ஆகவே தான் நாம் இனப்படுகொலை என்ற வார்த்தைப் பிரயோகத்தை பயன்படுத்துகின்றோம். மேலும் இறுத்தியுத்திற்கு முகங்கொடுத்த எத்தனையோ நேரடிச் சாட்சியங்கள் அவ்விடயங்கள் தொடர்பில் மௌனமாக வேண்டியதொரு நிலைமை காணப்படுகின்றது. குறிப்பாக எம் போன்ற மக்களுடன் நெருக்கமானவர்களுக்கு கூட அவர்கள் அச்சத்துடனேயே தமது நெருக்கடியான நிலைமைகளைத் தெரிவிக்கின்றனர். யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதாக அரசாங்கம் அறிவித்து ஐந்து வருடங்களாகின்ற நிலையிலும் அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வு அல்லது குறைந்த பட்சம் தமிழர்கள் சுதந்திரமாக வாழ்வதற்குரிய நடவடிக்கைகளையோ மேற்கொள்ளவில்லை. மாறாக தமிழ் மக்களை அடக்குமுறைக்குள் ஆட்சி செய்வதற்காக திட்டமிட்ட குடியேற்றங்கள்இ நில ஆக்கிரமிப்பு பௌத்த மதத்தை பரப்பும் செயற்காடுகள் இவற்றுக்கெல்லாம் மேலாக இராணுவ ஆக்கிரமிப்பு ஆகிய செயற்பாடுகளை நன்கு திட்டமிட்டு தற்போதைய ஆட்சியாளர்கள் மேற்கொண்டுவருகின்றனர். குறிப்பாக இங்கு வருகைதந்து தமிழர்களின் நிலைதொடர்பில் கருத்து வெளியிடும் அனைத்து தரப்பினரும் நில ஆக்கிரமிப்பு தொடர்பான கருத்துக்களை முன்வைத்திருக்கின்றனர். ஆகவே இவ்வாறான கட்டமைக்கப்பட்தொரு இனவழிப்பை உடனடியாகத் தடுத்து நிறுத்துவதற்கு இடைக்கால நிர்வாகம் ஒன்று அமைக்கப்படவேண்டியது அவசியமாகும். தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டு சில திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்ருக்கின்றன. இருப்பினும் இப்பிரேரணை தமிழர்களுக்கு ஏமாற்றமளிக்கும் ஒன்றாகவே காணப்படுகின்றமை துர்ப்பாக்கியமானதொன்றாகும். இப்பிரேரணையை கூர்மையாக பார்க்கையில் குறிப்பாக எந்வொரு இடத்திலும் "சர்வதேச விசாரணை" என்ற சொற்பிரயோகம் காணப்படவில்லை. தற்போது திருத்தப்பட்டுள்ள சரத்தின் பிரகாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு இலங்கையின் விடயங்களை ஆராய்ந்து அடுத்த கூட்டத்தொடரில் வாய்மொழிமூலமான கருத்துக்களை வெளிப்படுத்த முடியும் என்பதோடு அதற்கு அடுத்து நடைபெறவுள்ள கூட்டத்தொடரிலேயே அறிக்கையிடலை முன்வைக்க முடியும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 60வருட காலமாக தமிர்கள் தமது உரிமைகள்மைகளை வென்றெடுப்பதற்காக போரடி வருகின்றனர். வெ;வாறான நிலையில் அப்போராட்டத்திற்கென பாரிய வரலாறுகள் காணப்படுகின்றன. உயிர்கள் உடமைகள் உட்பட பல்லாயிரக்கணக்கான இழப்பீடுகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆகவே இவை தொடர்பில் ஒரு விடயம் கூட உள்ளடக்கப்படவில்லை என்பது மிகவும் கவலைக்குரியதாகும். 60வருட கால தமிழர் போரட்டத்தின் பரிநாமம் மாற்றப்பட்டு பெரும்பான்மை மதத்தினரால் சிறுபான்மை மதங்களான இஸ்லாம்இ கிறிஸ்தவம், மற்றும் இந்து மதங்கள் தாக்கப்படுவதாக மட்டும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சிறுபான்மை மதங்கள் தாக்கப்படுவதென்பது ஏற்றுக்கொள்ளப்படவேண்டியது. இருப்பினும் உரிமைகளுக்கான போராட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதே மிக முக்கியமானதாக இருக்கின்றது. இலங்கையில் காணப்பட்ட இனங்களுக்கிடையிலான பிரச்சினைகளின் வரலாற்றினை அறியாதவொரு நபர் இப்பிரேரணையை தற்போது வாசிக்கும் நிலைமையேற்பட்டால் அவரால் தமிழர்களின் உரிமைப்போராட்டம் தொடர்பில் அறிந்து கொள்வதற்கான எந்தவிதமான வார்த்தைப்பிரயோகங்களும் இடம்பெற்றிருக்கதிருக்கின்றது. இந்தப் பிரேரணையில் எங்குமே "தமிழ்" என்றொரு சொற்பதமே காணப்படவில்லை என்பது வருத்தமளிக்கின்றது. எம்மைப் பொறுத்தவரையில் தற்போதைய ஆட்சியாளர்களை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் தொடர்பில் எமக்கு கடுமையான விமர்சனம் இருக்கின்றது. அதற்காக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டால் தமிழர்களின் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று கூறிவிடமுடியாது. ஆனால் இப்பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் ஆட்சி மாற்றம் ஏற்படும் பட்சத்தில் இனங்களுக்கிடையலான பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்ற தொனியை வெளிப்படுத்துகின்றதை அவதானிக்கக் கூடியதாகவிருக்கின்றது. ஆகவே நாம் இப்பிரேரணைய ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கின்றது. எமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக நாம் கடந்த 60ஆண்டுகளுக்கு மேலாக பேராடிக்கொண்டிருக்கின்றோம். எமது உரிமைகளை பெற்று தலைநிமிர்ந்து சுதந்திரமாக வாழ்வதற்கும் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்பு ரீதியான இனவழிப்பிற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் இடைக்கால நிர்வாகமொன்று அமைக்கப்படவேண்டும். இனப்பிரச்சினைக்கான நிரந்த தீர்வாக சுயநிர்ணய உரிமைளை அங்கீகரித்த தீர்தெவான்று வழங்கப்படவேண்டும். இதனை சர்வதேச சமூகத்தினரும் குறிப்பாக பிரேரணையை முன்வைத்திருக்கும் அமெரிக்க தரப்பினர் கருத்திற்கொண்டு தற்போது ஐக்கிய நாடுகளில் சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் பிரேரணையில் இவ்விடயங்களையும் உள்வாங்குவதற்கு ஆவண செய்யவேண்டும் என்பது எமது வேண்டுகோளாகவிருக்கின்றது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஜெனிவா மனித உரிமை பேரவையில் அனந்தி சசிதரன் : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவைக்கு கடிதம் Posted: 23 Mar 2014 02:39 AM PDT
வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மூலமாக வடக்கில் நிலவும் உண்மையான நிலைமைகள் தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கு விளக்கி கூற வெளிவிவகார அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸூக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் அரசியற்துறையின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான எழிலனின் மனைவி அனந்தி சசிதரன், ஜெனிவா மனித உரிமை பேரவையில் ஆற்றிய உரையின் நோக்கம் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவைக்கு கடிதம் ஒன்றை தாக்கல் செய்திருந்தார். விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு சிறுவர்களை சேர்க்கும் பணிகளில் செயற்பாட்டு ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனந்தி சசிதரன், மனித உரிமை பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும், வடக்கில் தற்போதுள்ள நிலைமைகள் தொடர்பாகவும் தவறான தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சரின் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. அமைச்சர் தேவானந்தாவின் இந்த கடிதம் அமைச்சரவையில் உள்ள ஏனைய அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இரண்டு சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை பயன்படுத்தி அனந்தி சசிதரன் ஜெனிவாவில் உரையாற்றியதாகவும் அரசாங்கத்தின் நன்மதிப்பை கெடுத்து, அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில், அவர் உரையாற்றியுள்ளதாகவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மூலம் உடனடியாக இலங்கையின் உண்மை நிலைமைகள் குறித்து தெளிவுப்படுத்துமாறு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸூக்கு அமைச்சர்கள் அறிவித்துள்ளனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கையின் அடுத்த ஜனாதிபதி, பொது வேட்பாளரை தெரிவு செய்வது தொடர்பான விசேட பேச்சுவார்த்தை தாய்லாந்தில் Posted: 23 Mar 2014 02:31 AM PDT
இலங்கையின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளரை தெரிவு செய்வது தொடர்பான விசேட பேச்சுவார்த்தை தாய்லாந்தின் பேங்கொக் நகரில் நடைபெற்றுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், இலங்கையில் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரங்களில் தெரிவுசெய்யப்பட்ட தூதரங்களின் அரசியல் செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இலங்கையின் ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி சம்பந்தமாக இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டிருந்தாலும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்பட போகும் பொது வேட்பாளர் யார் என்பதே இந்த பேச்சுவார்த்தையில் பிரதான கருப் பொருளாக இருந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மாதுளுவாவே சோபித தேரர் ஆகிய இருவரில் மிகவும் பொருத்தமானவர் யார், இலங்கையில் செயற்படும் மாற்று சக்திகள், பிரதான அரசியல் கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்தும் திறமை யாருக்கு இருக்கின்றது என்பன குறித்து இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை பொது வேட்பாளராக நிறுத்த இரண்டு அரசசார்பற்ற நிறுவனங்கள் எதிர்ப்பு வெளியிட்டிருந்தன. அவரது ஆட்சிக்காலத்திலும் ஜனநாயகம் செயற்படுத்தப்படவில்லை என இந்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அவரது ஆட்சிக்காலத்தில் சுயாதீன ஆணைக்குழுக்கள் செயலிழக்க செய்யப்பட்டமையை இந்த நிறுவனங்கள் உதாணரமாக சுட்டிக்காட்டியுள்ளன. தாய்லாந்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்ட மற்றும் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாட இந்த தரப்பினர் தீரமானித்துள்ளதாக தெரியவருகிறது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |





























