Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


வீதியில் உருண்டோடிய கார் – தூக்கி வீசப்பட்ட சாரதி பரிதாபமாக மரணம்

Posted: 01 Mar 2014 06:12 AM PST

car_driver_death_001.w245

car_driver_death_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

பனிப்பொழிவே தோல்விக்கு காரணம்! வீராட் கோஹ்லி

Posted: 01 Mar 2014 06:10 AM PST

kohli_002

kohli_002இலங்கைக்கு எதிரான ஆசிய கிண்ணப் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இதுகுறித்து அணித்தலைவர் வீராட் கோஹ்லி கூறுகையில், எங்களது பந்துவீச்சாளர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்தனர். ஆனால் இறுதி கட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.

இந்த அளவுக்கு பனிபெய்யும் என்று நினைக்கவில்லை. ஏனெனில் முந்தைய நாள் பனியின் தாக்கம் அதிகமாக இல்லை.

மொத்தத்தில் ஆட்டத்தை கடைசி வரை கொண்டு சென்ற பெருமை பந்து வீச்சாளர்களையே சாரும்.

நாங்கள் 30 முதல் 40 ஓட்டங்கள் குறைவாக எடுத்து விட்டோம். ஜடேஜாவின் பந்து வீச்சு அருமையாக இருந்தது.

பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் நேர்த்தியாக விளையாட வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற சங்கக்கரா கூறுகையில், பனிப்பொழிவு தனது வேலையை எளிதாக்கி விட்டது என்றும், கடைசிவரை களத்தில் நிற்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி விளையாடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

வாய்ப்பை நழுவ விட்ட இந்தியா! தோல்விக்கு என்ன காரணம்?

Posted: 01 Mar 2014 06:08 AM PST

ஆசிய கிண்ணப் போட்டியில் இலங்கை அணியிடம் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதற்கு இந்திய அணியின் மோசமான பீல்டிங்கே காரணம் என தெரிவிக்கப்படுகிறது, 5 முறை கேட்சை தவறவிட்டுள்ளனர். * இலங்கை தொடக்க ஆட்டக்காரர் குசல் பெரேரா 7 ஓட்டங்களில் ஆடிக் கொண்டிருந்த போது கொடுத்த நல்ல கேட்ச் வாய்ப்பை, ரஹானே, ஷிகர் தவான் இருவரும் பிடிக்க முயற்சித்து முட்டி மோதி கோட்டை விட்டனர். ஒருவர் மட்டுமே ஓடி வந்திருந்தால் கேட்ச் செய்திருக்கலாம்.   […]

This posting includes an audio/video/photo media file: Download Now

மீன் கடையில் இளம் ஜோடி செய்த அட்டகாசம்….. பொலிசார் வலைவீச்சு!….

Posted: 01 Mar 2014 06:05 AM PST

fish_market_001.w245

fish_market_001.w245சிலர் சவாலுக்காக வேடிக்கையில் ஈடுபடுவதை பொழுதுபோக்கு என நினைக்கிறார்கள். ஆனால் இது சிலநேரங்களில் விபரீதமாக போய் முடிவந்துண்டு.

அதுபோல இங்கிலாந்து நாட்டிலுள்ள அசிரிங்டன் என்ற இடத்தில் ஒரு இளம்பெண் பிரபல வணிக வளாகத்திற்கு சென்று பதப்படுத்திய மீன்களை வாங்கினார்.

அங்கு பில் போடும் இடத்தில் 52 வயதுள்ள பெண் ஊழியர் இருந்தார். மீன்கள் குறித்து விவாதத்தில் ஈடுபட்ட இளம்பெண் திடீரென்று மீன்களை கொண்டு பெண் ஊழியரை கடுமையாக தாக்கி விட்டு ஓட்டம் பிடித்தார்.

இதை அருகில் நின்று வாலிபர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்தார். இளம்பெண்ணை பின்தொடர்ந்து அவரும் கம்பி நீட்டினார்.

இந்த தாக்குதல் சம்பவம் பற்றி தகவல் கிடைத்த பொலிசார் கடையில் இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்ததில் 15 வயது பெண்ணும், 18 வயது ஆணும் சேர்ந்து இந்த விபரீத விளையாட்டில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து பொலிஸ் உயர் அதிகாரி கூறுகையில், 'இதுபோன்ற விளையாட்டு அநாகரீகமானது. இந்த இளம்ஜோடியை கண்டுபிடித்து தண்டிப்போம் என்று உறுதியாக கூறியதுடன் இவர்களை பற்றி தகவல் கிடைத்தால் உடனே தெரிவியுங்கள் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

உங்களை சிரிக்க வைப்பதற்காக இந்த காணொளி....

This posting includes an audio/video/photo media file: Download Now

7வது ஐபிஎல் தொடர் எங்கு நடைபெறும்?

Posted: 01 Mar 2014 06:02 AM PST

7வது ஐபிஎல் தொடரை இந்தியா, வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 7வது ஐபிஎல் போட்டிகள், வருகிற ஏப்ரல் 9ம் திகதி முதல் ஜூன் 3ம் திகதி வரை நடக்க உள்ளது. இதே காலகட்டத்தில் லோக்சபா தேர்தலும் நடப்பதால், பிரிமியர் தொடருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என மத்திய அரசு கைவிரித்தது. இதுகுறித்து விவாதிக்க ஒரிசாவில் உள்ள புவனேஸ்வரில் இந்திய கிரிக்கெட் போர்டின்(பி.சி.சி.ஐ.,) செயற்குழு கூட்டம் […]

ரிலாக்ஸ் ஆக வேண்டுமா?… இவங்க சொற்பொழிவைக் கேளுங்க!…..

Posted: 01 Mar 2014 05:59 AM PST

speech_child_001.w245

speech_child_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்படும் அதிவேக Broadband இணைய சேவை

Posted: 01 Mar 2014 05:56 AM PST

Virgin Media வலையமைப்பானது 152Mb வேகம் கொண்ட Broadband இணைய சேவையை பிரித்தானியாவில் அறிமுகம் செய்கின்றது. இதன் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒரு நிமிட நேரத்தில் தரவிறக்கம் செய்யக்கூடியதாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட 2007ம் ஆண்டில் காணப்பட்ட வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை விடவும் தற்போது 55 சதவீத அதிகரிப்பு காணப்படுவதாக தெரிவித்த அந்நிறுவனம் ஆரம்பத்தில் 30Mb வேக இணைய இணைப்பைக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் எதிர்வரும் 12 மாதங்களுக்குள் தமது இணைப்பு வேகத்தினை 50Mb, 60Mb, […]

This posting includes an audio/video/photo media file: Download Now

கண் தெரியாத முதியவரை காட்டுமிராண்டித் தனமாக தாக்கும் பெண்கள்…..

Posted: 01 Mar 2014 05:54 AM PST

blind_girl_attack_002.w245

blind_girl_attack_002.w245அவுஸ்திரேலியாவில் பேருந்து பயணத்தின் போது இரண்டு பெண்கள் கண் தெரியாத முதியவரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, அவுஸ்திரேலியாவில் 77 வயது கண்தெரியாத முதியவர் ஒருவர்(பழங்குடி இனத்தை சேர்ந்தவர்) ஊனமுற்றவருக்கான இருக்கையில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

பேருந்து கோல்ட் கோஸ்ட் அருகே சென்று கொண்டிருக்கும் போது, பேருந்தில் ஏறிய இரண்டு பெண்கள் முதியவரை சீட்டில் இருந்து இறங்குமாறு கேட்டனர்.

முதியவர் இறங்க மறுத்ததால், கோபமடைந்த பெண்கள் பெரியவரை தாக்கி உதைத்தனர். இச்சம்பவத்தை அருகில் உள்ள 12 வயது சிறுமி தனது செல்போனில் படம் எடுத்துள்ளார், டிரைவரும் பேருந்தை காவல்நிலையத்திற்கு அருகே நிறுத்தியுள்ளார்.

இதனையடுத்து முதியவரை தாக்கிய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டனர், பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதி சீனியர் சிட்டிசன் மற்றும் கண் தெரியாத நபரை தாக்கியதால் இவர்களுக்கு ஏழு வருடம் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சிறந்த பிட்னெஸ் மொபைல் சாதனமாக Samsung Galaxy Gear தெரிவு

Posted: 01 Mar 2014 05:51 AM PST

Samsung நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான Galaxy Gear கைப்பட்டியானது பிட்னெஸ்ஸிற்கான சிறந்த மொபைல் சாதனமாக GSMA நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இடம்பெற்ற 2014ம் ஆண்டிற்கான மொபைல் வேர்ள்ட் காங்கிரஸ் நிகழ்விலேயே இத்தெரிவு இடம்பெற்றுள்ளது. இச்சாதனத்தை அறிமுகப்படுத்திய பின்னர் சம்சுங் நிறுவனம் Galaxy Gear 2, Galaxy Gear 2 Neo மற்றும் Galaxy Gear Fit போன்ற பிட்னெஸ் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அடப்பாவி…. தூங்குற பிள்ளையை இப்படியா கொடுமைப்படுத்துவ?….

Posted: 01 Mar 2014 05:48 AM PST

sleeping_girl_001.w245

sleeping_girl_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

Windows 8.1 இயங்குதளத்தினை இலவசமாக வழங்கும் மைக்ரோசொப்ட்

Posted: 01 Mar 2014 05:45 AM PST

free_windows_001

free_windows_001மைக்ரோசொப்ட் நிறுவனம் புதிய பயனர் இடைமுகமாக மெட்ரோ பயனர் இடைமுகத்துடன் அறிமுகப்படுத்திய Windows 8 இயங்குதளத்தின் பிந்திய பதிப்பே Windows 8.1 ஆகும்.

இந்த பதிப்பினை கொள்வனவு செய்ய வேண்டுமாயின் அண்ணளவாக 250 டொலர்கள் செலவு செய்ய வேண்டும்.

எனினும் மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது பயனர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கும் பொருட்டு மற்றுமொரு Windows 8.1 இயங்குதளத்தினை வடிவமைத்து வருவதாக உத்தியேகபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்திய வாலிபரைக் காதலித்த மலேசிய பெண்ணின் கண்ணீர் கதை…..

Posted: 01 Mar 2014 05:42 AM PST

malysia_girl_001.w245

malysia_girl_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

நாடகங்களை ஒளிப்பரப்பவும் பாலியல் ரீதியான இலஞ்சம் கொடுக்கப்பட வேண்டிய நிலைமை!: நதீஷா ஹேமமாலி

Posted: 01 Mar 2014 05:36 AM PST

தொலைக்காட்சி நாடகங்களை ஒளிப்பரப்பும் அனுமதிகளை பெற பாலியல் ரீதியான இலஞ்சத்தை கொடுக்க வேண்டிய நிலைமை காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தென் மாகாண வேட்பாளர் நடிகை நதீஷா ஹேமமாலி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சிறந்த படைகளை உருவாக்கும் கலைஞர்கள் தமது படைப்புகளுக்காக அப்படியான விடயங்களை அணுவகுவதில்லை. உரிய முறையில் படைப்புகளை உருவாக்காத நபர்களே இவ்வாறான விடயங்களில் பாலியல் ரீதியான அணுகலை மேற்கொண்டு குறைந்த விலையிலேனும் தமது படைப்புகளை வெளியிட முன் வருகின்றனர். இது கலைத்துறையில் மாத்திரமல்ல, […]

This posting includes an audio/video/photo media file: Download Now

அரசியல் கைதிகள் தொடர்பாக எங்களால் எதுவும் செய்யமுடியாது – ஜோன்நீல்

Posted: 01 Mar 2014 05:32 AM PST

இலங்கையில் வைத்து அரசியல் ரீதியாக கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் தங்களால் ஏதும் செய்ய முடியாதிருப்பதாக தெரிவித்த பிரித்தானிய தூதரகத்தின் ஆலோசனை பிரிவுத் தூதுவர் ஜோன்நீல் அதேவேளை இலங்கை சிறைகளினில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரிட்டிஸ் பிரஜைகளான அரசியல் கைதிகள் எவ்வளவு பேருள்ளனர் என்பது பற்றியும் தமக்கு தெரியாதெனவும் தெரிவித்தார்.யாழ்ப்பாணத்தினில் ஊடகவியலாளர்களது கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்;கையினில் அவர் இத்தகவலை வெளியிட்டார். யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள பிரித்தானிய பிரஜைகளின் நலன்புரிசார் பிரச்சினைகளுக்கு உதவிகளை வழங்கும் முகமாக பிரித்தானிய தூதரகத்தின் ஆலோசனைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட […]

இறந்ததாக கருதப்பட்டவர் மீண்டும் உயிருடன் வந்தார் (வீடியோ இணைப்பு)

Posted: 01 Mar 2014 05:29 AM PST

man_alive_002

man_alive_002இறந்ததாக கருதப்பட்டு சவப்பெட்டியில் அடைக்கப்பட்ட நபர் மீண்டும் உயிருடன் எழும்பிய சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெரிக்காவின் மிசிசிப்பி பகுதியில் வசித்து வந்த வால்பர் வில்லியம்ஸ்(வயது 78) என்பவர் சில தினங்களுக்கு முன் திடீரென்று மூச்சுபேச்சின்றி கிடந்தார்.

உடனே அவர் இறந்துவிட்டதாக கருதிய உறவினர்கள், வால்டரின் உடலை சவப்பெட்டியில் வைத்து ஜிப்பை நன்றாக இழுத்து மூடிவைத்தனர்.

பிறகு இறுதிச்சடங்கு நடக்கும் இடத்துக்கு தூக்கிச்சென்று ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது சவப்பைக்குள் இருந்து கையால் குத்துவிடுவதை கவனித்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக பையை திறந்த போது வால்டர் வில்லியம்ஸ் உயிருடன் இருப்பது தெரியவந்தது, அதன்பின் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இச்சம்பவம் பற்றி மருத்துவர் கூறுகையில், இது ஒர் ஆச்சரிய சம்பவம் தான், இவருடைய பேஸ்மேக்கர்(இதய துடிப்பை சீராக இயங்க வைக்கும் சாதனம்) சற்று நின்று விட்டு பிறகு மீண்டும் இயங்கி இயங்கியுள்ளதே குழப்பத்திற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ராஜிவ் கொலை குற்றவாளிகள் வெளியில்தான் இருக்கிறார்கள்!- வீடு கொடுத்தவர் போடும் விடுகதை

Posted: 01 Mar 2014 05:23 AM PST

Rajiv Gandhi

Rajiv Gandhiபேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வதாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதைத் தொடர்ந்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு போட்டுள்ளது. அதனால், அவர்களின் விடுதலை தாமதமாகிறது.

இந்தச் சூழ்நிலையில் பெங்களூரில் ராஜீவ் காந்தி கொலையாளிகளான ஒற்றைக்கண் சிவராசன், சுபா போன்றோருக்கு வீடு கொடுத்த ரங்கநாத்தை பெங்களூரு பசனக்குடியில் இருக்கும் அவரது வீட்டில் சந்தித்தோம்.

ராஜீவ் கொலை சம்பவத்தால் காவல்துறை சித்திரவதைக்கு ஆளாகி, தலைக்குப் போகிற இரத்தக்குழாய்களில் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, அடிக்கடி மயங்கி விழுந்து விடுகிறார் என்று அவருடைய மனைவி மிருதுளா கலங்கி நிற்க, ரங்கநாத் மெள்ளப் பேசத் தொடங்கினார்.

ராஜீவ் காந்தி கொலைக்கும் உங்களுக்குமான தொடர்பு என்ன?

விடுதலைப் புலிகள் பெங்களூருக்கு வந்து, வாடகைக்கு வீடு எடுத்து தங்குவது சர்வசாதாரண விஷயம். அவர்களின் தோழமைக் கழகம்கூட இங்குதான் இருந்தது. ராஜீவ் கொலை மே 21-ம் தேதி நடந்தது. இரண்டு மாதங்கள் கழித்து ஆகஸ்ட் 1-ம் தேதி என்னுடைய நண்பர் ராஜன் எட்டு பேரை பெங்களூரில் புட்டனஹள்ளியில் உள்ள என் வீட்டுக்குக் கூட்டிவந்து, இவர்கள் இலங்கையில் போரில் பாதிக்கப்பட்டவர்கள். ராஜீவ் காந்தி கொலையால் தமிழ்நாட்டில் மருத்துவம் செய்ய மறுக்கிறார்களாம். அதனால் பெங்களூரில் தங்கி மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு மாதத்துக்கு வீடு வாடகைக்கு எடுத்துக்கொடு என்று சொன்னார்.

ஒரு மாதத்துக்கு யாரும் வீடு கொடுக்க மாட்டாங்க. எங்க மாடி போர்ஷன் காலியாகத்தான் இருக்கு. தங்கிக்கொள்ளுங்கள் என்றேன். ராஜன் உள்ளிட்ட எட்டு பேர் தங்கினார்கள். அடுத்த நாள் நள்ளிரவில் சிவராசன், சுபா, நேரு, சுரேஷ் மாஸ்டர், அமான், கீர்த்தி, ரங்கன் என ஏழு பேர் வந்தார்கள். அவர்களும் தங்கினார்கள். 'புதியதாக வந்திருக்கிற இவர்கள் யார்?' என்று சூரி என்பவரிடம் நான் கேட்டேன். இவங்கள் எங்க நண்பர்கள். அவர்களும் போரினால் பாதிக்கப்பட்டவர்கள். மருத்துவ சிகிச்சைக்காக வந்திருக்கிறார்கள். ஓரிரு நாட்களில் கிளம்பிடுவாங்க என்றார்.

இது எனக்கும் என் மனைவிக்கும் பிடிக்கவில்லை. நான்கு, ஐந்து நாட்கள் கழித்து, டி.வி யில் தேடப்படும் ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் என்று சிவராசன், சுபா, நேரு என இவர்கள் போட்டோக்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். எல்லோரையும் வீட்டைவிட்டு காலி பண்ணச் சொன்னேன். மாறாக அவர்கள், வெளியில் ஏதாவது மூச்சுவிட்டால் கொன்று விடுவதாக மிரட்டினார்கள். மற்றபடி எனக்கும் அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ராஜீவ் கொலைக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

அவர்களிடம் ராஜீவ் காந்தி படுகொலை பற்றி நீங்கள் கேட்கவில்லையா?

முதல் இரண்டு நாட்கள் மிரட்டினார்கள். அப்புறம் சாதாரணமாக அன்பாகப் பேசினார்கள். நானும் என் மனைவியும் காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஏன் எங்கள் தலைவர் ராஜீவ் காந்தியை கொன்றீர்கள்? என்று கோபமாகக் கேட்டோம். அதற்கு சிவராசனும் சுபாவும் கத்தை கத்தையாக போட்டோக்களையும் பேப்பர்களையும் எடுத்து எங்களிடம் காட்டினார்கள். ராஜீவ் காந்தி அனுப்பிய அமைதிப்படையால் எங்கள் இனம் ஈழத்தில் அழிந்த கொடுமைகளைப் பாருங்கள்.

உங்க ஊர் பத்திரிகைகளில் இதையெல்லாம் எழுத மாட்டார்கள் என்று இன்டர்நேஷனல் ஹெரால்ட் டெர்மினல் என்ற பத்திரிகையைக் காட்டினார்கள். பள்ளி செல்லும் சின்னக் குழந்தைகள் முதல் வயதான பாட்டிகள் வரை கற்பழித்துக் கொலை செய்யப்பட்டிருந்ததை எழுதி இருந்தனர். அமைதிப்படையால் பலர் கற்பழிக்கப்பட்டதும் 5,000 பேர் காணாமல் போனதையும் 12 ஆயிரம் பேர் இறந்து போனதையும் 50 ஆயிரம் பேர் குடிபெயர்ந்து போனதையும் ஆதாரபூர்வமாகச் சொல்லி கண்கலங்கினார்கள். அவர்கள் கோபத்துக்கு இதுதான் காரணம்.

அப்புறம் என்ன நடந்தது?

அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு சந்தேகம் வந்துவிடும் என்பதால், என் மூலமாகவே வேறு வீடு வாடகைக்கு எடுத்துத் தரச் சொன்னார்கள். கோனேகொண்டேவில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்தேன். அந்த வீட்டில் சிவராசன், சுபா, நான், என் மனைவி உட்பட ஒன்பது பேர் தங்கினோம். அடுத்து முத்தத்திக்காட்டில் உள்ள என்னுடைய நண்பர் வீடு காலியாக இருந்தது. அந்த வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொடுத்தேன். உடல் காயம் ஏற்பட்டிருந்தவர்கள் அங்கு தங்கினார்கள்.

அந்த இடம் வீரப்பன் ஏரியா என்பதால், வீரப்பன் தேடுதல் வேட்டைக்கு வந்த போலீஸைப் பார்த்து தங்களைத்தான் பிடிக்க வருகிறார்கள் என்று பயந்து, வீட்டின் கதவைப் பூட்டி குப்பியை நுகர்ந்து 12 பேர் இறந்தார்கள். காவல் துறை அந்த இடத்தைச் சுற்றிவளைத்ததில் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர். இது ஆகஸ்ட் 17-ம் தேதி நடந்தது.

அடுத்த நாள் இரவே நாங்கள் தங்கியிருந்த கோனேகொண்டே வீட்டைச் சுற்றிவளைத்தது போலீஸ். மறுநாள் காலையில் போலீஸார் துப்பாக்கியால் சுட்டார்கள். குப்பியை நுகர்ந்து வீட்டுக்குள்ளேயே ஏழு பேரும் இறந்தனர். முத்தத்திக்காட்டில் 17-ம் தேதி சம்பவம் நடந்ததும், என் மனைவியை வீட்டைவிட்டுக் கிளம்பிப்போகச் சொல்லிவிட்டனர். அவரது தம்பி வீட்டுக்கு அவர் போய்விட்டார். துப்பாக்கிச் சூடு நடந்தபோது நானும் வெளியே வந்துவிட்டேன். வீட்டுக்குப் போனதும் என்னையும், அதன் பிறகு என் மனைவியையும் கைதுசெய்தார்கள்.

முதன்முதலில் முருகன், பேரறிவாளன், சாந்தனை எப்போது சந்தித்தீர்கள்? இதுபற்றி அவர்களிடம் கேட்டதுண்டா?

என்னைக் கைதுசெய்து ஜெ. நகர் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போனார்கள். பிறகு, கங்கா நகரில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஒப்படைத்தனர். ஹெலிகாப்டர் மூலமாக சென்னை ஆவடி, மல்லிகை அரங்கம், பூந்தமல்லி சிறை, செங்கல்பட்டு சிறை என பல இடங்களுக்கு மாற்றினர். செங்கல்பட்டு சிறைச்சாலையில்தான் இவர்களைச் சந்தித்தேன்.

பேரறிவாளன், சாந்தன், முருகன் எல்லோருக்கும் 19, 20 வயதுதான். விளையாட்டுத்தனமாக இருந்தார்கள். இரண்டு வருடம் கழித்து அவர்களிடம் நன்றாகப் பேசிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான், 'ஏன் தம்பி இந்தச் செயல்களில் ஈடுபட்டீர்கள்?' என்று கேட்டேன். 'சத்தியமாக இந்தக் கொலையைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது' என அவரவர் சூழ்நிலைக் கைதிகளான கதைகளைச் சொன்னார்கள்.

ஏன், எதற்கு என்று தெரியாமலேயே பேரறிவாளன் பற்றரி வாங்கிக் கொடுத்ததாலும்; சிவராசன் வந்த படகில் சாந்தனும் வந்த குற்றத்துக்காகவும்; நளினியின் தம்பி இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதால் நளினி, முருகன் மாட்டியதும் தெரியவந்தது. இவர்களில் ஒருவர்கூட குற்றவாளிகள் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டேன். இவர்களோடு ஒன்பது வருடங்கள் நானும் சிறையில் இருந்தேன்.

பேரறிவாளன் தனக்கு இல்லை என்றாலும் மற்றவர்களுக்கு உதவும் குணம் உடையவன். சாந்தன் சிறந்த சிந்தனையாளன். அற்புதமான கற்பனை நீதிக்கதைகளை எழுதக் கூடியவன். முருகன் தீவிர பக்திமான். இவர்கள் எல்லோரும் ஒரு எறும்புக்குக்கூட துன்பம் ஏற்படுத்தாதவர்கள்.

இவர்கள் நிரபராதிகள் என்றால், ராஜீவ் படுகொலைக்குப் பின்புலமாக இருந்தவர்கள் யார்?

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 26 பேரில் 19 பேர் 1999-ல் தண்டனை ரத்து செய்யப்பட்டு விடுதலை ஆனோம். அப்போது தமிழ்நாட்டில் உள்ள ஒரு முக்கிய காங்கிரஸ் பிரமுகர், சோனியா காந்தி உங்களைப் பார்க்க நினைக்கிறார் என்று சொல்லி அழைத்துப் போனார். டெல்லியில் அர்ஜுன் சிங்கை சந்தித்து விட்டு, தனி அறையில் சோனியாவோடு 45 நிமிடங்கள் பேசினேன். அப்போது நீங்கள் கேட்கும் அதே கேள்வியைத்தான் அவர்களும் கேட்டார்கள்.

இந்திய அமைதிப்படை செய்த கொடூரத்தால்தான் ராஜீவைக் கொன்றிருக்கிறார்கள். அதற்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தது சந்திராசாமி. அவரின் உதவியால் ஓரிரு நாட்களுக்குள் நேபாளம் போய்விடுவதாகவும் என் வீட்டில் தங்கியிருந்தவர்கள் சொன்னார்கள். அது சம்பந்தமாக அடிக்கடி சந்திராசாமியிடம் அவர்கள் போனில் பேசியதை நானே கேட்டிருக்கிறேன். சந்திராசாமியை விசாரித்தால் எல்லா உண்மையும் தெரியும்.

அதுமட்டுமல்ல, ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் கொலையாவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே, அவர் படுகொலை செய்யப்பட்ட இடத்தை இரண்டு பேர் பார்த்திருக்கிறார்கள். இதுகுறித்து, டெல்லி செல்லுவதற்காக நானும் சந்திராசாமியும் சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்துக்கு வந்தோம். டெல்லிக்கு ஃபிளைட் இல்லாததால் இருவரும் காரில் பெங்களூரு விமான நிலையத்துக்குச் சென்றோம்.

அப்போது அந்த இடத்தில் யூரின் போவதற்காக காரை நிறுத்தினோம் என்று ஒருவர் சொல்லியிருப்பது ஜெயின் கமிஷனில் பதிவாகி இருக்கிறது. இதையெல்லாம் தெளிவாக விசாரித்தால் உண்மைகள் தெரியவரும் என்று சோனியாவிடம் சொன்னேன். ஆனால், அவரே அதனைக் கண்டுகொள்ளவில்லை.

வீடு கொடுத்தவனுக்கும், பொருள் வாங்கி கொடுத்தவனுக்கும் அடி, உதை, சிறைக் கொடுமை, தூக்குத் தண்டனை. ஆனால், சிவராசன் இறக்கும் வரை யார் யாருடன் தொடர்பில் இருந்தாரோ… அவர்கள் எல்லாம் நிம்மதியாக இருக்கின்றனர். அவர்கள் யார் என்பது காங்கிரஸ் அரசுக்குத் தெரியும். அவர்களைக் கைதுசெய்யாதது ஏன்? – கேள்விகளோடு முடிக்கிறார் ரங்கநாத்!

This posting includes an audio/video/photo media file: Download Now

கோபிதாஸின் பூதவுடலுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அஞ்சலி

Posted: 01 Mar 2014 05:17 AM PST

மகஸீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஜனவரி 24ம் திகதி உயிரிழந்த தமிழ் அரசியல் கைதி விஸ்வலிங்கம் கோபிதாஸின் பூதவுடலுக்கு இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அஞ்சலி செலுத்தினார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் ஆகியோர் இன்று வடமராட்சி புலோலியிலுள்ள கோபிதாஸின் இல்லத்திற்குச் சென்று இஞ்சலி செலுத்தினர். அத்துடன், பெருமளவான பொதுமக்கள் இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேவேளை, கோபிதாஸின் இறுதிக் கிரியை நிகழ்வுகள் […]

71 வயதில் ஆபாச படம்! நாடாளுமன்றத்தில் நடந்த கூத்து

Posted: 01 Mar 2014 05:14 AM PST

ஸ்பெயினில் மிகவும் காரசாரமாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்து கொண்டிருந்த போது, எம்.பி ஒருவர் ஆபாசபடத்தை ரசித்து பார்த்து கொண்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகவும், தங்கள் சார்பாக பணியாற்றுவதற்காகவும் எம்.பி.க்களை தெரிவு செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால் அவ்வாறு தேர்வாகி பதவிக்கு வரும் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்கிறார்களா என்றால் கேள்விக்குறி தான். அந்தவகையில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஏஞ்சர் ரெவிலா(வயது 71), ஆபாச படம் பார்ப்பது […]

This posting includes an audio/video/photo media file: Download Now

சீனாவும் ரஷ்யாவும் சில சமயம் இந்தியாவும் இலங்கைக்கு ஆதரவு வழங்கும் – ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

Posted: 01 Mar 2014 02:23 AM PST

makintha

makinthaஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை கொண்டுவரவுள்ள அமெரிக்காவின் செயலை ஒரு பாடசாலை மாணவனுடன் மல்யுத்த வீரர் ஒருவர் யுத்தத்திற்கு போவது போல உள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

'ஒரு தீர்மானம் தேவையற்றது. அவர்களிடம் சான்று இருப்பின் அவர்கள் அதை எம்மிடம் தந்திருக்க வேண்டும்' எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மூன்று வருடங்களுக்கு பின்னர் வெளிநாட்டு ஊடகங்களை சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கையில் சர்வதேச விசாரணை ஒன்றை கோரும் ஒரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவரலாம் என்ற நிலைமையில் ஜனாதிபதி ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீதான சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளது.

வொஷிங்டன் ஏன் ஒரு விசாரணையை வலியுறுத்தியுள்ளது என்பதையிட்டு தனக்கு எதுவும் விளங்கவில்லை என அவர் கூறினார்.

'இது கஸியஸ் கிளே என்று அறியப்பட்ட உலகப் பிரசித்த பொக்ஸின் சம்பியன் முஹம்மட் அலியுடன் பாடசாலை மாணவனொருவன் மோதுவது போல உள்ளது' என ஜனாதிபதி கூறினார்.

ஐ.நா மனித உரிமையின் ஆணையாளரின் அறிக்கை எதேச்சாதிகரமானது, தேவையில்லாத தலையீடு, அரசியல் நோக்கம் கொண்டது என கண்டித்த இலங்கை அரசாங்கம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கையை நிராகரித்தது.புலம்பெயர்ந்த தமிழர்களின் அழுத்தம் காரணமாக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஐக்கிய இராச்சியமும் கனடாவும் ஆதரிக்கின்றன. சீனாவும் ரஷ்யாவும் சில சமயம் இந்தியாவும் இலங்கைக்கு ஆதரவு வழங்குமென ஜனாதிபதி கூறினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஊடக நிறுவனங்கள் அல்லது இணையத்தளங்கள் தணிக்கை பற்றி அறியவில்லை: ஐ.நாடுகள்

Posted: 01 Mar 2014 02:09 AM PST

13496003-grunge-flag-of-united-nations-image-is-overlaying-a-detailed-grungy-texture

13496003-grunge-flag-of-united-nations-image-is-overlaying-a-detailed-grungy-textureஇலங்கையில் சில ஊடக நிறுவனங்கள் அல்லது இணையத்தளங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளமை மற்றும் தடை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் அறியவில்லை என ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இணையத்தளமொன்று அண்மையில் தடை செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கை தொடர்பில் நியூயோர்க்கில் ஐ.நா பேச்சாளரிடம் செய்தியாளர்கள் கேட்ட போது அந்த சம்பவம் பற்றி தமது அமைப்புக்கு அறிவிக்கப்படவில்லை என தெரிவித்தார். கொழும்பில் உள்ள ஐ.நா குழுவினர் ஐ.நா அமைப்பு தொடர்பான பிரச்சினைகளை தலைமையகத்திற்கு அறிவித்த போதும் அவர்கள் ஊடக தணிக்கை மற்றும் தடை பற்றி குறிப்பிட்டிருக்கவில்லை என ஐ.நா பேச்சாளர் மார்டின் நெசர்கி கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பில் உள்ள ஐ.நா குழுவுடன் எனக்கு தற்போது நேரடியான தொடர்புகள் இல்லை. இதனால் என்னால் அவர்களுக்கு பதிலளிக்க முடியாது. கருத்து சுதந்திரம் மிகவும் முக்கியமானது என்று கருதுகிறேன். குறித்த விடயம் தொடர்பில் செயலாளர் நாயகம் தனது தனிப்பட்ட கருத்துக்களை வெளியிடுவதில்லை என தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™