மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ஸ்ரீநகர் தொகுதியில் பரூக்அப்துல்லாவை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி போட்டி
- உத்தரபிரதேசத்தில் இன்று மோடி பேசுகிறார்
- சிறப்பு அந்தஸ்து கோரி பீகார், ஜார்கண்டில் முழு அடைப்பு
- அச்சுதானந்தனை கட்சியில் இருந்து நீக்க முடியாது: பிரகாஷ் காரத்
- பங்காரு லட்சுமணன் இறுதி சடங்கில் அத்வானி பங்கேற்பு
- ஊழலை ஒழிக்கும் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் கிடைக்குமா?
- திருவனந்தபுரத்தில் திடீர் மழை
- ராகுலுடன் பேசிவிட்டு தாமதமாக வந்ததால் பெண் படுகொலை: பரபரப்பு தகவல்
- மோடியை ஆண்மையற்றவர் என்று தொடர்ந்து சொல்வேன்: குர்ஷித்
- தொகுதிகள் ஒதுக்கீட்டில் இழுபறி: காங்கிரசுக்கு லல்லு பிரசாத் 'கெடு'
- பெங்களூரில் மலிவு விலை உணவகங்கள்: கர்நாடக அரசு
- கொல்கத்தாவின் கான்சர் நோயாளிகளுக்காக 13 கோடி நிதியுதவி
- 8 வயது சிறுவனை பாலியல் கொடுமை செய்து கொன்ற பீகார் ஆசாமி கைது
- என்.டி.திவாரியின் புதிய மனு டெல்லி ஐகோர்ட்டில் தள்ளுபடி
- பார்லி. தேர்தல்: காங்.எம்.பி.க்.களுடன் சோனியா நாளை ஆலோசனை
- உ.பி.யில் இன்று மோடி பொதுக்கூட்டம்: பிரமாண்ட ஏற்பாடுகள்
- கோவா: சர்க்கஸில் இருந்து 14 சிறார்கள் மீட்பு-கற்பழிப்பு புகாரில் உரிமையாளர் கைது
- 50 வேட்பாளர்களை ஆதரித்து அன்னா ஹசாரே தீவிர பிரசாரம்
- கற்பழிப்பு வழக்கில் நாராயண் சாய் மீது 1100 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
- ஆம் ஆத்மியை உ.பி. மக்கள் பெரிதாக நினைக்க மாட்டார்கள்- அஜய் மக்கான்
| ஸ்ரீநகர் தொகுதியில் பரூக்அப்துல்லாவை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி போட்டி Posted: 01 Mar 2014 11:34 PM PST மத்திய மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக்அப்துல்லாவை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது. ஸ்ரீநகர் தொகுதியில் அவரை எதிர்த்து தகவல் அறியும் ஆர்வலரான முஷாபர் பட் நிற்கிறார். அவர் இன்று தனது |
| உத்தரபிரதேசத்தில் இன்று மோடி பேசுகிறார் Posted: 01 Mar 2014 11:27 PM PST பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாடெங்கும் சுற்றுப் பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இன்று அவர் உத்தர பிரதேச மாநிலத்துக்கு சென்றார். லக்னோவில் இன்று பா.ஜ.க.வின் பிரமாண்ட தேர்தல் பிரசார கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்தில் சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் |
| சிறப்பு அந்தஸ்து கோரி பீகார், ஜார்கண்டில் முழு அடைப்பு Posted: 01 Mar 2014 11:18 PM PST பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி அந்த கட்சி இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து இருந்தது. முதல்–மந்திரி நிதிஷ்குமார் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். சீமந்திராவுக்கு சிறப்பு பொருளாதார சலுகைகளை வழங்குவது போன்று பீகார் மாநிலத்துக்கும் வழங்க வேண்டும் என்று கோரி அவர் ஆர்ப்பாட்டம் செய்தார். முழு அடைப்பையொட்டி ஏராளமாக ஐக்கிய ஜனதாதள தொண்டர்கள் ரெயில்களை மறித்தனர். நீண்ட தூரம் செல்லக்கூடிய 6 ரெயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரெயில் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். |
| அச்சுதானந்தனை கட்சியில் இருந்து நீக்க முடியாது: பிரகாஷ் காரத் Posted: 01 Mar 2014 09:50 PM PST கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. கட்சியின் மூத்த தலைவரும், தற்போதைய கேரள சட்டசபை எதிர்கட்சி தலைவருமாக அச்சுதானந்தன். ஒரு கோஷ்டியாகவும், மாநில செயலாளர் பினராய் விஜயன் ஒரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வருகிறார்கள். 90 வயதான அச்சுதானந்தன் கேரள முதல்–மந்திரியாக இருந்தவர். இவர்களது கோஷ்டி பூசல் விவகாரம் பற்றி சமீபத்தில் கேரளா வந்திருந்த கட்சியின் தேசிய செயலாளர் பிரகாஷ் காரத் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரும் அச்சுதானந்தனையும் பினராய் விஜயனையும் அழைத்து சமரசம் செய்தார். |
| பங்காரு லட்சுமணன் இறுதி சடங்கில் அத்வானி பங்கேற்பு Posted: 01 Mar 2014 09:38 PM PST பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பங்காரு லட்சுமணன் நேற்று இரவு மரணம் அடைந்தார். 74 வயதான அவர் கடந்த 2000–2001–ம் ஆண்டுகளில் பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராக பதவி வகித்தார். பாரதீய ஜனதா கட்சியின் முதல் தலித் தலைவரும் இவர்தான். ஆந்திராவைச் சேர்ந்த இவர் கடந்த சில நாட்களாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக ஐதராபாத்தில் உள்ள தனியார் |
| ஊழலை ஒழிக்கும் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் கிடைக்குமா? Posted: 01 Mar 2014 09:36 PM PST மத்திய மந்திரிசபை கூட்டம் இன்று (ஞாயிறு) மாலை டெல்லியில் நடை பெற உள்ளது. இந்த கூட்டத்தில், ஊழலை ஒழிக்க வழிவகை செய்யும் 2 மசோதாக்களை அவசர சட்டமாக கொண்டு வர ஒப்புதல் பெறப்படும் என்று |
| Posted: 01 Mar 2014 09:32 PM PST கேரளாவில் கடந்த ஒரு மாதமாக கோடை வெப்பம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக கடந்த 10 நாட்களாக பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது |
| ராகுலுடன் பேசிவிட்டு தாமதமாக வந்ததால் பெண் படுகொலை: பரபரப்பு தகவல் Posted: 01 Mar 2014 09:28 PM PST காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேசி வருகிறார். கடந்த புதன்கிழமை அவர் அசாம் மாநிலத்துக்கு சென்றிருந்தார். அங்கு அவர் ஜோர்கட் நகரில் நடந்த 600 பெண்கள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். பெண்களுக்கு மத்தியில் அமர்ந்து அவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது 2 பெண்கள் ராகுலை நெருங்கி அவரைக் கட்டிப்பிடித்து |
| மோடியை ஆண்மையற்றவர் என்று தொடர்ந்து சொல்வேன்: குர்ஷித் Posted: 01 Mar 2014 08:53 PM PST மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் சமீபத்தில் நரேந்திர மோடியை ஆண்மையற்றவர் என்று விமர்சித்து பேசினார். இதற்கு பா.ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. சல்மான் குர்ஷித்தின் தரம் தாழ்ந்த பேச்சை காங்கிரஸ் மூத்த தலைவர்களே |
| தொகுதிகள் ஒதுக்கீட்டில் இழுபறி: காங்கிரசுக்கு லல்லு பிரசாத் 'கெடு' Posted: 01 Mar 2014 08:27 PM PST பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும் லல்லு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டீரிய ஜனதா தளமும் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன. அந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 11 தொகுதிகளை |
| பெங்களூரில் மலிவு விலை உணவகங்கள்: கர்நாடக அரசு Posted: 01 Mar 2014 07:56 PM PST தமிழ்நாட்டில் 'அம்மா' உணவகம் தொடங்கப்பட்டு குறைந்த விலையில் உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த திட்டம் தமிழக மக்களிடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் இதே |
| கொல்கத்தாவின் கான்சர் நோயாளிகளுக்காக 13 கோடி நிதியுதவி Posted: 01 Mar 2014 07:49 PM PST இந்தியப் புற்றுநோய் பதிவகத்தின் கணக்கீடுகள்படி இந்தியாவின் கிழக்குப் பகுதிகளிலேயே கான்சர் நோயாளிகள் அதிக அளவில் காணப்படுகின்றனர். இவர்களுக்கான மேம்படுத்தப்பட்ட சிகிச்சை மற்றும் பாதுகாப்பு வசதிகள் இல்லாத காரணத்தினாலேயே ஆயிரக்கணக்கான நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். |
| 8 வயது சிறுவனை பாலியல் கொடுமை செய்து கொன்ற பீகார் ஆசாமி கைது Posted: 01 Mar 2014 04:04 PM PST ஆந்திர மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம், செரிலிங்கம்பள்ளி அருகேயுள்ள நல்லகண்ட்லா கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுவனை காணவில்லை என அவனது தாயார் கடந்த மாதம் 12-ம் தேதி சந்தாநகர் போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்திவந்த நிலையில் கடந்த 22-ம் தேதி அதே கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தின் புதர்களுக்கிடையில் அந்த சிறுவன் பிணமாக |
| என்.டி.திவாரியின் புதிய மனு டெல்லி ஐகோர்ட்டில் தள்ளுபடி Posted: 01 Mar 2014 03:41 PM PST காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் என்.டி.திவாரி(89). உத்தரபிரதேச முதல்-மந்திரியாகவும், மத்திய மந்திரியாகவும் பதவி வகித்த இவர் மீது ஆந்திர கவர்னராக இருந்தபோது செக்ஸ் புகார் கூறப்பட்டது. இதையடுத்து அவர் பதவி விலகினார். இந்த நிலையில் ரோகித் சேகர் என்பவர் என்.டி.திவாரி மீது கடந்த 2008-ம் ஆண்டு டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். |
| பார்லி. தேர்தல்: காங்.எம்.பி.க்.களுடன் சோனியா நாளை ஆலோசனை Posted: 01 Mar 2014 01:01 PM PST பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்களை நாளை (திங்கட்கிழமை) சந்திக்கும் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். |
| உ.பி.யில் இன்று மோடி பொதுக்கூட்டம்: பிரமாண்ட ஏற்பாடுகள் Posted: 01 Mar 2014 12:39 PM PST 'வெற்றி சங்கநாதம்' என்ற பெயரில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்களின் ஆதரவை திரட்டி வரும் குஜராத் முதல் மந்திரியும், பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி, உத்தரபிரதேசத்தில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். |
| கோவா: சர்க்கஸில் இருந்து 14 சிறார்கள் மீட்பு-கற்பழிப்பு புகாரில் உரிமையாளர் கைது Posted: 01 Mar 2014 11:28 AM PST கோவாவில் உள்ள ஒரு சர்க்கஸ் கம்பெனியில் இருந்து தப்பியோடி வந்த 3 இளம்பெண்கள் மேற்கு வங்காளம் மாநிலத்துக்கு செல்வதற்காக ரெயிலில் பயணம் செய்தனர். அவர்களில் ஒரு இளம்பெண் ரெயிலில் செல்லும் வழியில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தானே ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் மயங்கி |
| 50 வேட்பாளர்களை ஆதரித்து அன்னா ஹசாரே தீவிர பிரசாரம் Posted: 01 Mar 2014 10:57 AM PST பாராளுமன்ற தேர்தலில் நாடு தழுவிய அளவில் 50 வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்யப் போவதாக காந்தியவாதியும், ஊழலுக்கு எதிராக போராடி வருபவருமான அன்னா ஹசாரே அறிவித்துள்ளார். இது தொடர்பாக மகராஷ்டிர மாநிலம் ஜல்னாவில் பேட்டியளித்த அன்னா ஹசாரே, எனது 17 அம்ச கோரிக்கையை ஆதரிக்கும் |
| கற்பழிப்பு வழக்கில் நாராயண் சாய் மீது 1100 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் Posted: 01 Mar 2014 10:25 AM PST ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சாமியார் ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தை சேர்ந்த 16 வயது மாணவி தன்னை ஆசாராம் பாபு (72) கற்பழித்ததாக புகார் கூறினார். இதையடுத்து ஆசாராம் பாபு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டு ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த குற்றச்சாட்டையடுத்து ஆசாராம் பாபுவும் அவரது மகன் நாராயண் சாயும் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள் கடந்த அக்டோபர் மாதம் போலீசில் புகார் செய்தனர். |
| ஆம் ஆத்மியை உ.பி. மக்கள் பெரிதாக நினைக்க மாட்டார்கள்- அஜய் மக்கான் Posted: 01 Mar 2014 06:35 AM PST ஊழலை ஒழிப்போம் என்ற வாசகத்துடன் டெல்லியில் ஆட்சியைப் பிடித்த கெஜ்ரிவால் அரசு, 49 நாட்களில் முடிவுக்கு வந்தது. அவர் தற்போது மக்களவைத் தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக நாடு தழுவிய பிரசாரத்தை தொடங்கியுள்ளார். 3 நாள் வாகன பிரச்சாரத்தை உ.பி.யில் இன்று தொடங்கினார். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் கூறியதாவது:- டெல்லியில் ஆட்சி |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |