Tamil News | Online Tamil News |
- இலங்கை மனித உரிமை மீறல்: சுதந்திரமான விசாரணைக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
- சென்னையில் மின்தடை இல்லை : பிற மாவட்ட மக்கள் அதிருப்தி
- இலை ஓவியத்தை மறைக்க சொல்லும் தேர்தல் கமிஷன் உத்தரவு செல்லும்
- 'சொத்து குவிப்பு வழக்கில் இனி ஜெ., தப்ப முடியாது': ஸ்டாலின்
- காங்., - தி.மு.க.,விடமிருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும்:முதல்வர் ஜெ., ஆவேசம்
- ஊறு விளைவிக்கும் செயலே அழகிரி நீக்கத்திற்கு காரணம்: கருணாநிதி
- கெஜ்ரிவால் மீது முட்டை, கறுப்பு மை வீச்சு: எதிர்ப்பு!வாரணாசியில் பா.ஜ., தொண்டர்கள் கோபம்
- மே.வங்க சாலைகள் மோசம்என்கிறார் ராகுல்
- 'குஜராத் கலவரத்தை ஒடுக்க காங்., முதல்வர்கள் உதவவில்லை': மோடி குற்றச்சாட்டு
- நான் தான் தி.மு.க.,: அடித்து சொல்கிறார் அழகிரி
- மோடிக்கு எதிராக நிறுத்தப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஓட்டம்
| இலங்கை மனித உரிமை மீறல்: சுதந்திரமான விசாரணைக்கு அமெரிக்கா வலியுறுத்தல் Posted: ஜெனிவா: 'இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் போது, ராணுவத்தினரால் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து, விரிவான, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்' என, சர்வதேச மனித உரிமை கவுன்சிலில், அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.கண்டனம்: இலங்கையில், விடுதலை புலி களுக்கும், ராணுவத்துக்கும் இடையே, 2009ல் நடந்த சண்டையின் போது, தமிழர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் எதிரான போர் குற்றங்கள் ஏராளமாக நடந்தன. இது தொடர்பாக, உரிய விசாரணை நடத்த தவறிய, அதிபர், ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசை, பிரிட்டன், கனடா ... |
| சென்னையில் மின்தடை இல்லை : பிற மாவட்ட மக்கள் அதிருப்தி Posted: மின் பற்றாக்குறையை சமாளிக்க, சென்னை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில், பல மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. இது, பிற மாவட்ட மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில், 2008 முதல், மின் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், காலை, 8:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, குடியிருப்புகளுக்கு, சுழற்சி முறையில், சென்னையில், இரண்டு மணி நேரம், மற்ற மாவட்டங்களில், நான்கு மணி நேரம் வரை மின் தடை செய்யப்படுகிறது.மீண்டும்...:சென்னையில், தரையில், 'கேபிள்' மூலமும், மற்ற மாவட்டங்களில், மின் கம்பம் வாயிலாகவும், குடியிருப்புகளுக்கு, மின் வினியோகம் ... |
| இலை ஓவியத்தை மறைக்க சொல்லும் தேர்தல் கமிஷன் உத்தரவு செல்லும் Posted: சென்னை: 'மினி பஸ்களில், வரையப்பட்டுள்ள, இலை ஓவியத்தை மறைப்பதற்கான, தேர்தல் கமிஷன் உத்தரவு செல்லும்' என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.'குடிநீர் பாட்டில், மினி பஸ் மற்றும் அரசு சொத்துகளில் இடம் பெற்றுள்ள, தமிழக முதல்வரும், அ.தி.மு.க., பொதுச் செயலருமான ஜெயலலிதாவின் புகைப்படம், அ.தி.மு.க., தேர்தல் சின்னம் இரட்டை இலை போன்ற ஓவியத்தை, மறைக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷனில், கருணாநிதி தலைமையிலான, தி.மு.க., தரப்பில், மனு அளிக்கப்பட்டது.இதுகுறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், தி.மு.க., பொருளாளர், ஸ்டாலின், மனுத் தாக்கல் செய்தார். இம்மனு, தனி நீதிபதி முன், ... |
| 'சொத்து குவிப்பு வழக்கில் இனி ஜெ., தப்ப முடியாது': ஸ்டாலின் Posted: மாதவரம்:''பதினெட்டு ஆண்டு களாக நடந்து வரும் சொத்து குவிப்பு வழக்கில் தப்பிக்க வாய்தா வாங்கி வந்த ஜெயலலிதா, இனி ஒருபோதும் தப்பிக்க முடியாது,'' என, திருவள்ளூர் (தனி) தொகுதியில், போட்டியிடும் தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து ஆவடி, மாதவரம், செங்குன்றத்தில் நடந்த பிரசாரத்தில், ஸ்டாலின் பேசினார்.3,300 ஏக்கர் நிலம்:சென்னை மாதவரம், செங்குன்றம், ஆவடியில் நடந்த பிரசாரத்தில், ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் துரை.ரவிக்குமாரை ஆதரித்து, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் ஓட்டு சேகரித்தார்.அப்போது அவர் பேசியதாவது:பாதுகாக்கப்பட்ட குடிநீரை, மக்களுக்கு இலவசமாக ... |
| காங்., - தி.மு.க.,விடமிருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும்:முதல்வர் ஜெ., ஆவேசம் Posted: திண்டுக்கல் : "சாமானிய மக்களுக்கு எதிரான காங்., ஆட்சிக்கு துணையாக தி.மு.க.,வும் இருந்தது. இவர்களால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து விட்டது. இவர்களிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும்," என திண்டுக்கல்லில் முதல்வர் ஜெ., பேசினார்.திண்டுக்கல் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் உதயகுமாரை ஆதரித்து அவர் பேசியதாவது: குடும்ப, ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, மக்களாட்சி மலர வேண்டும். விலைவாசி, டீசல், பெட்ரோல் விலை உயர்வு, வேலையின்மை போன்ற பிரச்னைகள் பெருகியுள்ளன. ஊழல் தலைவிரித்தாடுகிறது. பாதுகாப்பு துறையில் கூட ஊழல் மலிந்துள்ளது.சாமானிய மக்களுக்கு ... |
| ஊறு விளைவிக்கும் செயலே அழகிரி நீக்கத்திற்கு காரணம்: கருணாநிதி Posted: சென்னை : 'அழகிரியை தற்காலிகமாக, நீக்கியதற்கு பின்னும், அதற்கு அவர் உரிய விளக்கங்களை அளிக்கவில்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அறிவாலயத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:இரட்டை இலை சின்னங்களை, சிறிய பஸ்கள் போன்றவற்றில், மறைக்கப்பட வேண்டும் என, பொருளாளர் ஸ்டாலின் தொடுத்த வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு அளித்திருப்பது பற்றி?தேர்தல் கமிஷனின் செயல் பாடுகளை, நாங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறோம். நீதிமன்றத் தீர்ப்புக்கு தலைவணங்கி, அனை வரும் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, தேர்தல் ஆணையம் ஜனநாயகம் ரீதியில் நடைபெறுகிறது என்பதற்கு அடையாளமாக, ... |
| கெஜ்ரிவால் மீது முட்டை, கறுப்பு மை வீச்சு: எதிர்ப்பு!வாரணாசியில் பா.ஜ., தொண்டர்கள் கோபம் Posted: வாரணாசி:பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடிக்கு எதிராக பிரசாரத்தை துவக்க, வாரணாசி வந்த, 'ஆம் ஆத்மி' கட்சித் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக, பா.ஜ., தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். அவர் மீது, முட்டைகளையும், கறுப்பு மையையும் வீசி, எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால், கெஜ்ரிவால், கடும் அதிர்ச்சி அடைந்தார்.பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, லோக்சபா தேர்தலில், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த, முதல்வர், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, உ.பி.,யின், வாரணாசி தொகுதியிலும், குஜராத் மாநிலம், வதோதரா தொகுதியிலும் போட்டியிடுவதாக ... |
| மே.வங்க சாலைகள் மோசம்என்கிறார் ராகுல் Posted: நகரகடா:''மேற்கு வங்கத்தின் வளர்ச்சி பணிகளுக்காக, மத்திய அரசு கோடிக்கணக்கான பணத்தை ஒதுக்கியும், அது, மக்களுக்கு சரியான முறையில் சென்றடையவில்லை,''என, காங்கிரஸ் துணை தலைவர், ராகுல் கூறினார்.திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர், மம்தா பானர்ஜி தலைமையிலான, மேற்கு வங்க மாநிலம், ஜல்பைக்குரியில், காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில், ராகுல் பேசியதாவது:மேற்கு வங்க அரசுக்கு கோடிக்கணக்கான பணத்தை, மத்திய அரசு அனுப்பி வைக்கிறது. இந்த பணம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு சொந்தமானது அல்ல; பொதுமக்களான உங்கள் பணம்; ஆனால், உங்களுக்கு, இந்த பணம் போய் ... |
| 'குஜராத் கலவரத்தை ஒடுக்க காங்., முதல்வர்கள் உதவவில்லை': மோடி குற்றச்சாட்டு Posted: புதுடில்லி:'குஜராத் கலவரத்தை ஒடுக்க, அண்டை மாநிலங்களிடம் உதவி கேட்டேன். காங்., முதல்வர்கள் பொறுப்பில் இருந்ததால், உதவி வழங்க மறுத்துவிட்டனர்' என, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.பிரிட்டன் எழுத்தாளர், ஆண்டி மரினோ எழுதிய குஜராத் முதல்வர், நரேந்தி மோடியின் அரசியல் வரலாற்றை விளக்கும் புத்தகம் வெளியாகிஉள்ளது. இதில், மோடியின் அரசியல் வாழ்க்கையில் நடந்த, முக்கிய சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.புத்தகத்தில், மோடி கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளதாவது:குஜராத்தில், 2002ல் நடந்த கலவரத்திற்காக நான் வருந்தினேன். சம்பவத்திற்குப் பின், கோவாவில் ... |
| நான் தான் தி.மு.க.,: அடித்து சொல்கிறார் அழகிரி Posted: 'தி.மு.க.,வே என் கட்சி தான்; என் கட்சியில் இருந்து என் னை யாரும் நீக்க முடியாது; அதற்கு அதிகாரமும் கிடையாது. என் மீது எடுத்த நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடருவேன்; நீதிமன்றத்தில் அவர்களை சந்திப்பேன்,'' என்று, மு.க.அழகிரி தெரிவித்தார்.தி.மு.க.,வில் இருந்து, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டுள்ள, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பரபரப்பு பேட்டி:தி.மு.க.,வில் இருந்து நீக்கியுள்ளார்களே... உங்களது அடுத்த கட்டம் என்ன?இப்ப தானங்க கட்டம் கட்டியிருக்காங்க... அதுக்குள்ள அடுத்த கட்டம் பத்தி எப்படி பேச முடியும்.கட்சி எடுத்த நடவடிக்கையை ... |
| மோடிக்கு எதிராக நிறுத்தப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஓட்டம் Posted: வதோதரா : பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடிக்கு எதிராக, காங்கிரஸ் சார்பில், வதோதரா லோக்சபா தொகுதியில் களம் இறக்கப்பட்ட, நரேந்திர ராவத், 'தேர்தலில் போட்டியிட போவதில்லை' என, திடீரென அறிவித்துள்ளார். அவருக்கு பதிலாக, புதிய வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.குஜராத் முதல்வரும், பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான, நரேந்திர மோடி, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி மற்றும் குஜராத் மாநிலம், வதோதரா ஆகிய, இரு லோக்சபா தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்.வதோதரா தொகுதியில், மோடிக்கு எதிராக, காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த, நரேந்திர ராவத், தேர்தலில் போட்டியிட ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மார்ச் 26,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |