Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


தமிழக தேர்தல் செலவு ரூ.229 கோடி

Posted: 25 Mar 2014 01:11 PM PDT

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை நடத்த ரூ.229 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தகவலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

வாகனச் சோதனையின்போது முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள், அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை: பிரவீண்குமார்

Posted: 25 Mar 2014 01:06 PM PDT

வாகனச் சோதனையில் ஈடுபடுவோர் மீதான முறைகேட்டுப் புகார்கள் உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் எச்சரித்துள்ளார்.

புதுச்சேரி தொகுதி: இரண்டு நாளில் தீர்வு?

Posted: 25 Mar 2014 01:04 PM PDT

புதுச்சேரி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் அனந்தராமனை பாஜக நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்துப் பேசினர். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் பிரச்னைக்கு இரண்டு நாளில் தீர்வு ஏற்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

கருணாநிதி இன்று பிரசாரம் தொடக்கம்

Posted: 25 Mar 2014 01:03 PM PDT

மக்களவைத் தேர்லுக்கான பிரசாரத்தை திமுக தலைவர் கருணாநிதி புதன்கிழமை (மார்ச் 26) தொடங்குகிறார்.

"தேர்தலுக்குப் பிறகு பாஜகவுக்கு ஆதரவில்லை என கருணாநிதி அறிவிக்க வேண்டும்'

Posted: 25 Mar 2014 01:03 PM PDT

தேர்தலுக்குப் பிறகு பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க மாட்டோம் என்பதை திமுக தலைவர் கருணாநிதி அறிவிக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

அரசு ஸ்மால் பஸ்களில் வரையப்பட்டுள்ள இலை ஓவியத்தை மறைக்க தேர்தல் ஆணையம் உத்தரவு: உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

Posted: 25 Mar 2014 01:01 PM PDT

அரசு ஸ்மால் பஸ்களில் வரையப்பட்டுள்ள இலை ஓவியத்தை மறைக்குமாறு தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

மேலும் 4 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

Posted: 25 Mar 2014 12:59 PM PDT

தமிழகத்தில் மேலும் 4 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அழகிரியுடன் மதிமுக வேட்பாளர்கள் சந்திப்பு

Posted: 25 Mar 2014 12:59 PM PDT

திமுகவின் தென் மண்டல முன்னாள் அமைப்புச் செயலர் மு.க.அழகிரியை, மதிமுக வேட்பாளர்கள் சதன் திருமலைக்குமார் (தென்காசி), ஜோயல் (தூத்துக்குடி) ஆகியோர் சந்தித்து ஆதரவு கோரினர்.

காங்கிரஸில் இணைந்தவர் சில மணி நேரத்தில் நீக்கம்

Posted: 25 Mar 2014 12:57 PM PDT

கர்நாடக மாநிலம் மங்களூருவில் 2009ஆம் ஆண்டு கேளிக்கை விடுதியில் பெண்களைத் தாக்கிய "ஸ்ரீராமசேனை' அமைப்பைச் சேர்ந்த தினகர் ஷெட்டி என்பவர் காங்கிரஸில் இணைந்த சில மணி நேரத்திலேயே அக்கட்சியால் நீக்கப்பட்டார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வேட்பாளர்களிடையே நேரடிப் போட்டி

Posted: 25 Mar 2014 12:56 PM PDT

மேற்கு வங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நெருங்கிய உறவினர்களாக இருந்தபோதிலும், காங்கிரஸ்-திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்கள் நேரடிப் போட்டியை சந்திக்கின்றனர். அந்த வேட்பாளர்கள் அரசியல் ரீதியாக பிளவுபட்டு சொந்தத் தொகுதியிலேயே ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

ராப்ரி தேவியை எதிர்த்து சகோதரர் சாது யாதவ் போட்டி

Posted: 25 Mar 2014 12:55 PM PDT

ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவியை எதிர்த்து அவரது சகோதரர் அனிருத் பிரசாத் என்ற சாது யாதவ், பிகாரின் சரண் மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் வேட்பாளருக்கு சுரேஷ் கல்மாடி ஆதரவு

Posted: 25 Mar 2014 12:53 PM PDT

மக்களவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்த சுரேஷ் கல்மாடி, அவரது சொந்தத் தொகுதியான புணேயில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளருக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வியூகம்: இளைய தலைவர்களுடன் ராகுல் ஆலோசனை

Posted: 25 Mar 2014 12:51 PM PDT

மக்களவைத் தேர்தல் வியூகம் குறித்து கட்சியின் 150க்கும் மேற்பட்ட இளம் தலைவர்களுடன் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.

சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடிநீர் பிரச்னை தீருமா? இது பிரச்னை என்ன தீர்வு?

Posted: 25 Mar 2014 12:51 PM PDT

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  குடிநீர் இல்லாமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

உள்ளூர் தொலைக்காட்சி விளம்பரங்கள் கண்காணிக்கப்படும்: ஆட்சியர்

Posted: 25 Mar 2014 12:50 PM PDT

உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் அரசியல் விளம்பரங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் தெரிவித்தார்.

சவடுமண் அள்ளிய 5 டிராக்டர்கள், ஜேசிபி இயந்திரம் பறிமுதல்

Posted: 25 Mar 2014 12:50 PM PDT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அனுமதியின்றி சவடுமண் அள்ளிய 5 டிராக்டர்கள் ஒரு ஜேசிபி இயந்திரத்தை

பாஜக ஆட்சி அமைந்தால் 100 நாள் வேலைத் திட்டம் தொடராது: ப.சிதம்பரம்

Posted: 25 Mar 2014 12:49 PM PDT

இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலைத் திட்டம் தொடராது, ரத்து செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

மதகுபட்டியில் உலக காசநோய் தினம்

Posted: 25 Mar 2014 12:49 PM PDT

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டியில் திங்கள்கிழமை உலக காசநோய் தின நிகழ்ச்சி நடைபெற்றது.

இளையான்குடியில் திமுக தேர்தல் பணிக்குழுக் கூட்டம்

Posted: 25 Mar 2014 12:48 PM PDT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் ஒன்றிய, பேரூர் திமுக தேர்தல் பணிக்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

என்.எஸ்.எஸ் சிறப்பு முகாம்

Posted: 25 Mar 2014 12:48 PM PDT

காரைக்குடி அருகே கூத்தலூர் ஊராட்சியில் கிட்  கிம் கல்லூரிகளின் சார்பில் என்.எஸ்.எஸ் சிறப்பு முகாம் துவக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தாய்மார்களின் கண்ணீருக்கு டாஸ்மாக் தான் காரணம்: வைகோ

Posted: 25 Mar 2014 12:47 PM PDT

தமிழகத்தில் தாய்மார்களின் கண்ணீருக்கும், இளைஞர்களின்  சீரழிவுக்கும் காரணம் டாஸ்மாக் கடைகள் தான் என வைகோ குற்றஞ்சாட்டினார்.

கல்லூரியில் கருத்தரங்கம்

Posted: 25 Mar 2014 12:47 PM PDT

சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி வேதியியல்துறை சார்பில் காகிதம் மற்றும் காகித அட்டை தொழில்நுட்பம் குறித்த

நானோ துகள்கள் மூலம் பரிசோதனை முறைகள்

Posted: 25 Mar 2014 12:46 PM PDT

நானோ துகள்கள் மூலம் கொழுப்புச் சத்து, குழந்தை பிறக்கும் திறனை கண்டுபிடிக்கும் முறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய

பஞ்சாப், ஹரியாணா: மக்களவைத் தேர்தலில் களமிறங்கும் எம்எல்ஏக்கள்

Posted: 25 Mar 2014 12:46 PM PDT

பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் மக்களவைத் தேர்தலில் புதுமுக வேட்பாளர்களை நிறுத்துவதற்குப் பதிலாக தற்போதைய எம்.எல்.ஏ.க்களை அரசியல் கட்சிகள் களமிறக்குகின்றன.

வீடு புகுந்து பெண்ணைத் தாக்கி 38 பவுன் நகை கொள்ளை

Posted: 25 Mar 2014 12:46 PM PDT

சாத்தூர் அருகே நள்ளிரவில் வீடுபுகுந்து பெண்ணைத் தாக்கி 38 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

பங்குனிப் பொங்கல் விழா: மார்ச் 30-இல் தொடக்கம்

Posted: 25 Mar 2014 12:45 PM PDT

சிவகாசி இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் விழா மார்ச் 30-ஆம்

புதிய திரைப்பட சி.டி. வைத்திருந்தவர் கைது

Posted: 25 Mar 2014 12:45 PM PDT

சிவகாசியில் உரிய அனுமதியின்றி புதிய திரைப்பட சி.டி.க்கள் வைத்திருந்தவரை போலீஸார் கைது செய்தனர்.  

வாக்களிப்பதற்காக சொந்த ஊர் செல்லும் வெளிமாநிலத்தவர்கள்

Posted: 25 Mar 2014 12:45 PM PDT

மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக கேரளத்தில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊருக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர்.

பஸ்சில் பயணியிடம் நகை திருட்டு

Posted: 25 Mar 2014 12:44 PM PDT

சென்னையில் இருந்து ராஜபாளையத்திற்கு தனியார் பஸ்சில் வந்த தம்பதி பையில் வைத்திருந்த தங்கநகை திருடப்பட்டது.

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 32,229 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்

Posted: 25 Mar 2014 12:43 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் 32, 229 மாணவ, மாணவிகள் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுத இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

தென்காசி காங்கிரஸ் வேட்பாளருக்கு கட்சியினர் எதிர்ப்பு

Posted: 25 Mar 2014 12:43 PM PDT

தென்காசி மக்களவைத் தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நாமக்கல்லைச் சேர்ந்தவருக்கு உள்ளுர்

திமுக-வில் இணைந்த தேமுதிக, அதிமுக நிர்வாகிகள்

Posted: 25 Mar 2014 12:42 PM PDT

மல்லாங்கிணறில் தேமுதிக, அதிமுக-வைச் சேர்ந்த சுமார் 200 பேர் அக்கட்சிகளில் இருந்து விலகி திமுக-வில் இணைந்தனர்.

ஷிண்டே மனு தாக்கல்

Posted: 25 Mar 2014 12:42 PM PDT

மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூர் மக்களவைத் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.

சிவகாசி

Posted: 25 Mar 2014 12:42 PM PDT

சென்ட்ரல் ரோட்டரி சங்கக்கூட்டம்: தலைமை- சங்கத்தலைவர் டி.சக்திவேல்ராஜா, விஜயகுமார் ரோட்டரி

மின் கசிவினால் தீ விபத்து: ரூ.2 லட்சம் பொருள்கள் சேதம்

Posted: 25 Mar 2014 12:39 PM PDT

போடி ராமசாமி நாயக்கர் தெருவைச் சேர்ந்த சின்னச்சாமி மனைவி போதுமணி (45). திங்கள்கிழமை, வீட்டைப் பூட்டிவிட்டு அனைவரும்

முதல்வரின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வாகனம் அனுப்பாததால் பொதுமக்கள் சாலை மறியல்

Posted: 25 Mar 2014 12:39 PM PDT

ஆண்டிபட்டியில் நடைபெற்ற முதல்வர் ஜெயலலிதா பிரசார பொதுக் கூட்டத்துக்கு வாகனம் அனுப்பாததால், கடமலைக்குண்டு

குடும்ப பிரச்னையில் விஷம் குடித்தவர் சாவு

Posted: 25 Mar 2014 12:38 PM PDT

ஆண்டிபட்டி அருகே குடும்பப் பிரச்னையால் விஷம் குடித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

வாகனம் மோதி சைக்கிளில் சென்றவர் சாவு

Posted: 25 Mar 2014 12:37 PM PDT

உத்தமபாளையம் அருகே திங்கள்கிழமை வாகனம் மோதியதில், சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் உயிரிழந்தார்.

பள்ளி ஐம்பெரும் விழா: மாணவர்களுக்கு பரிசு

Posted: 25 Mar 2014 12:37 PM PDT

போடி அருகே ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி ஐம்பெரும் விழாவில், மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

அதிமுக தேர்தல் பிரசார வாகனம் முற்றுகை

Posted: 25 Mar 2014 12:36 PM PDT

கம்பத்தில் அதிமுக சார்பில் தேர்தல் பிரசார வாகனத்தில், முதல்வர் ஜெயலலிதாவின் பிரசார பேச்சு திங்கள்கிழமை இரவு 9.30க்கு

கஞ்சா வைத்திருந்த முதியவர் கைது

Posted: 25 Mar 2014 12:35 PM PDT

கஞ்சா வைத்திருந்த முதியவரை போலீஸார் கைது செய்தனர்.

காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எம்.ஆரூண் வாக்கு சேகரிப்பு

Posted: 25 Mar 2014 12:35 PM PDT

தேவதானப்பட்டி அருகே காட்ரோடு சந்திப்பில் திங்கள்கிழமை காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எம்.ஆரூணுக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின்

தலை முடியில் இரட்டை இலை: பொதுமக்களை கவர்ந்த தொண்டர்கள்

Posted: 25 Mar 2014 12:34 PM PDT

தேனி மாவட்டம், அதிமுக வேட்பாளர் பிரசாரப் பொதுக்கூட்டத்தில், தலை முடியில் இரட்டை இலை வண்ணம் தீட்டி அதிமுக

தேர்தல் புறக்கணிப்பு: கிராம மக்கள் அறிவிப்பு

Posted: 25 Mar 2014 12:34 PM PDT

முதுகுளத்தூர் அருகே காத்தாகுளம் ஊராட்சியில் காவிரி தண்ணீர் இரண்டு வருடமாக வராததால் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப்

விளம்பர பலகைகள் அகற்றம்

Posted: 25 Mar 2014 12:34 PM PDT

கமுதியில் அரசு விளம்பர பலகைகளை  தேர்தல் பிரிவு அலுவலர்கள்,  அகற்றச்செய்தனர். 

வாராணசியில் மோடியை எதிர்த்துப் போட்டி: கேஜரிவால் அறிவிப்பு

Posted: 25 Mar 2014 12:33 PM PDT

மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடியை எதிர்த்து வாராணசி தொகுதியில் போட்டியிடப்போவதாக ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.

பள்ளி ஊழியர் பணி நீக்கத்துக்குத் தடை

Posted: 25 Mar 2014 12:33 PM PDT

பள்ளி ஊழியரை பணியில் இருந்து நீக்கியதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடைவிதித்தது.

ராஜபாளையம் தொகுதியில் அதிமுக தீவிர பிரசாரம்

Posted: 25 Mar 2014 12:32 PM PDT

ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் அ.தி.மு.க. வினர் வாக்கு சேகரித்தனர்.

தேர்தல் பணிகள்: மண்டல அலுவலர்கள் கலந்தாய்வுக் கூட்டம்

Posted: 25 Mar 2014 12:32 PM PDT

தென்காசி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல்

பிஜேடியில் 35 எம்எல்ஏக்கள், 6 எம்.பி.க்களுக்கு டிக்கெட் மறுப்பு

Posted: 25 Mar 2014 12:31 PM PDT

ஒடிஸாவில் நடைபெறவிருக்கும் மக்களவை, சட்டப் பேரவைத் தேர்தல்களில் போட்டியிட பிஜு ஜனதாதளத்தைச் சேர்ந்த தற்போதைய 35 எம்எல்ஏக்களுக்கும் 6 எம்.பி.க்களுக்கும் மீண்டும் டிக்கெட் வழங்கப்படவில்லை.

காங்கிரஸ் வேட்பாளர், மாவட்டத் தலைவர் மீது வழக்கு

Posted: 25 Mar 2014 12:30 PM PDT

தேனி மாவட்டத்தில், திங்கள்கிழமை தேர்தல் நடத்தை விதிகளை மீறி 500 வாகனங்களில் ஊர்வலம் சென்றதாக, காங்கிரஸ்

விபத்து காப்பீடு தொகை வழங்கல்

Posted: 25 Mar 2014 12:30 PM PDT

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த கல்வி ஆண்டில் பயின்ற

சிறுமிக்கு ஆண் குழந்தை

Posted: 25 Mar 2014 12:29 PM PDT

பிரசவ சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட 13 வயது சிறுமிக்கு மதுரை அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை ஆண் குழந்தை பிறந்தது.

மதுரை அருகே முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு

Posted: 25 Mar 2014 12:28 PM PDT

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கிழவனேரி கண்மாய் பகுதியில் செவ்வாய்க்கிழமை 15-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பம்பா-வைப்பாறு நதிநீர் இணைப்புத் திட்டம்: மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Posted: 25 Mar 2014 12:28 PM PDT

பம்பா-வைப்பாறு நதிகளை இணைக்கக் கோரும் மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய,மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பி ஏமாற்றியதாக உஸ்பெகிஸ்தானில் இருந்து திரும்பிய இளைஞர்கள் புகார்

Posted: 25 Mar 2014 12:27 PM PDT

வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பி ஏமாற்றியதாக, உஸ்பெகிஸ்தானில் இருந்து திரும்பிய இளைஞர்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

பெண் குழந்தை சாவில் மர்மம்

Posted: 25 Mar 2014 12:27 PM PDT

உசிலம்பட்டி அருகே குப்பனம்பட்டியில் பெண் குழந்தை சாவில் மர்மம் இருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் புகார் செய்தார்.

மதுரையில் சிக்கிய 27 கிலோ வெள்ளிக்கட்டிகள்

Posted: 25 Mar 2014 12:26 PM PDT

மதுரையில் செவ்வாய்க்கிழமை மாலை நடந்த வாகனச் சோதனையில் 27 கிலோ வெள்ளிக்கட்டிகள் சிக்கின.

காங்கிரஸின் தோல்வி உறுதி: அத்வானி

Posted: 25 Mar 2014 12:26 PM PDT

காங்கிரஸின் தோல்வி இப்போது போல் எப்போதும் உறுதியாக இருந்ததில்லை என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.

அரசுப் பேருந்தை நிறுத்தியதால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் மனு

Posted: 25 Mar 2014 12:26 PM PDT

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே விடத்தக்குளம் கிராமத்திற்குச் சென்ற அரசுப் பேருந்தை நிறுத்தியதால் தேர்தலை

பிளஸ் 2 கணிதத் தேர்வை மீண்டும் நடத்தக் கோரிய மனு தள்ளுபடி

Posted: 25 Mar 2014 12:25 PM PDT

பிளஸ் 2 கணிதத்தேர்வை மீண்டும் நடத்தக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: மூன்றாவது நாளாக தொடர்ந்து விசாரணை

Posted: 25 Mar 2014 12:25 PM PDT

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சாட்சிகளிடமிருந்து பெறப்பட்ட விவரங்கள் தொடர்பாக, மூன்றாவது நாளான செவ்வாய்க்கிழமை அரசுத் தரப்பு வழக்குரைஞர் பவானி சிங் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

இலவச கண் பரிசோதனை முகாம்

Posted: 25 Mar 2014 12:25 PM PDT

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ராமசந்திரகென்னடி நினைவு அறக்கட்டளை, மதுரை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்துடன்

ஆர்எல்டி முக்கியத் தலைவர் பாஜகவில் இணைந்தார்

Posted: 25 Mar 2014 12:24 PM PDT

ராஷ்ட்ரீய லோக் தளம் (ஆர்எல்டி) கட்சியின் முக்கிய தலைவர் சத்யவீர் தியாகி தனது ஆதரவாளர்களுடன் பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை அக் கட்சியில் இணைந்தார்.

தேனி ம.தி.மு.க வேட்பாளர் வாடிப்பட்டியில் பிரசாரம்

Posted: 25 Mar 2014 12:24 PM PDT

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அண்ணா பஸ்நிலையம் முன்பு உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து தேனி

பாஜகவை விட்டு வெளியேற மாட்டேன்

Posted: 25 Mar 2014 12:24 PM PDT

தனிநபர் துதிபாடல் ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல என்றும், அது கட்சியை பாதிக்கும் என்றும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மீது அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங் குற்றம் சாட்டினார்.

ஆட்டோவில் தூக்கிட்டு ஓட்டுநர் சாவு

Posted: 25 Mar 2014 12:24 PM PDT

மதுரையில் ஆட்டோவில் தூக்கிட்டு ஓட்டுநர் உயிரிழந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

பள்ளி ஆண்டு விழா

Posted: 25 Mar 2014 12:23 PM PDT

உசிலம்பட்டி வண்ணாரப்பேட்டையில் இருக்கும் ஆச்சிஸ் பச்பன் பள்ளியின் 5 ஆவது ஆண்டு விழா விசாலி மகாலில் நடைபெற்றது.

"கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு கவிழும்'

Posted: 25 Mar 2014 12:23 PM PDT

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு கவிழும் என்று, அந்த மாநில முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்தார்.

நத்தம் பகுதிகளில் அடிக்கடி நடுவழியில் பழுதாகி நிற்கும் அரசு பேருந்துகள்

Posted: 25 Mar 2014 12:23 PM PDT

நத்தம் பகுதிகளில் அரசு பேருந்துகள் அடிக்கடி நடுவழியில் பழுதாகி நின்று விடுவதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மூலிகைச் செடிகள் பற்றிய ஆய்வுப் பணியில் தேசிய பசுமைப் படை மாணவர்கள்

Posted: 25 Mar 2014 12:22 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி நா.சு.வி.வி. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மூலிகைச் செடிகளின் மருத்துவக் குணங்கள் பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

சுகாதாரத்தை அடிப்படை உரிமையாக்க சட்டம்

Posted: 25 Mar 2014 12:22 PM PDT

காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வகையில் சுகாதாரத்தை அடிப்படை உரிமையாக்க சட்டம் இயற்றப்படும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

அரசு கல்வி உதவித்தொகை கோரி மாணவர்கள் திடீர் சாலை மறியல்

Posted: 25 Mar 2014 12:21 PM PDT

பழனியில் அரசு கல்வி உதவித்தொகை வழங்கக் கோரி, கல்லூரி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தடகளப் போட்டி: திண்டுக்கல் கல்லூரி சாம்பியன்

Posted: 25 Mar 2014 12:21 PM PDT

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 17 கல்வியியல் கல்லூரிகளுக்கான தடகளப் போட்டிகள், மாவட்ட விளையாட்டு அரங்கத்தில்

இந்தியன் முஜாஹிதீன் கமாண்டர் கைது

Posted: 25 Mar 2014 12:20 PM PDT

இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு மூளையாகச் செயல்பட்டுவந்த இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தின் கமாண்டர் தெஹ்சீன் அக்தரை செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கைது செய்ததாக தில்லி போலீஸ் தெரிவித்துள்ளது.

செயல்வீரர்கள் கூட்டம்

Posted: 25 Mar 2014 12:20 PM PDT

நத்தத்தில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி செயல்வீரர்கள் கூட்டம், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.   கூட்டத்துக்கு,

தமிழக நலனைப் பாதுகாக்க அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: முதல்வர்

Posted: 25 Mar 2014 12:19 PM PDT

தமிழகத்தின் நலனைப் பாதுகாப்பதற்கு அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என, முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.

மோடிக்கு எதிரான வேட்பாளரை மாற்றியது காங்கிரஸ்

Posted: 25 Mar 2014 12:19 PM PDT

குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் பொதுச் செயலர் மதுசூதன் மிஸ்திரி போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: திண்டுக்கல் மாவட்டத்தில் 30 ஆயிரம் பேர் பங்கேற்பு

Posted: 25 Mar 2014 12:19 PM PDT

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 30,678 பேர், புதன்கிழமை தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்கின்றனர்.

பழனி பங்குனி உத்திரத் திருவிழா: ஏப்.7இல் கொடியேற்றத்துடன் துவக்கம்

Posted: 25 Mar 2014 12:18 PM PDT

பங்குனி உத்திரத் திருவிழா, பழனி திருஆவினன்குடி கோயிலில் வரும் ஏப்ரல் 7ஆம் தேதி திருக்கொடியேற்றத்துடன் துவங்கி, பத்து நாள்கள் நடைபெறுகின்றன.

வேட்பாளரின் பிரமாணப் பத்திரத்தில் வெளிநாட்டு வங்கிக் கணக்கு விவரம்

Posted: 25 Mar 2014 12:18 PM PDT

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வெளிநாட்டு வங்கிக் கணக்கு விவரங்களைத் தெரிவிப்பதை பிரமாணப் பத்திரத்தில் உறுதிப்படுத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

ஒடிஸாவில் லஞ்சம் பெற்ற அரசு அதிகாரிக்கு சிறை

Posted: 25 Mar 2014 12:17 PM PDT

ஒடிஸாவில் சர்ச்சைக்குள்ளான நிலத்தின் எல்லையை ஒருவருக்கு சாதகமாக்கிக் கொடுப்பதற்காக லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் வழங்கியது.

குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவருக்கு சிறை

Posted: 25 Mar 2014 12:16 PM PDT

மகாராஷ்டிர மாநிலத்தில் 5 வயதுக் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்தவருக்கு மும்பை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

ஆந்திரத்தில் காவல் எல்லை பிரிப்பு

Posted: 25 Mar 2014 12:16 PM PDT

ஆந்திரப்பிரதேச மறுசீரமைப்பு மசோதா 2014ன்படி காவல் நிலையங்களைப் பிரிப்பது குறித்து மாநில முதன்மைச் செயலாளர் டி.பி.தாஸ் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.

கேரள தேர்தல் பிரசாரத்தில் சுனந்தா மரண விவகாரம்

Posted: 25 Mar 2014 12:16 PM PDT

தனது மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பாக எழும் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் சசி தரூர் பதிலளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன் வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸின் பகடைக்காய் கேஜரிவால்: பாஜக

Posted: 25 Mar 2014 12:15 PM PDT

காங்கிரஸின் கையில் பகடைக்காயாக அரவிந்த் கேஜரிவால் பயன்படுத்தபடுகிறார் என்று பாஜக கூறியுள்ளது.

சத்ரபதி சிவாஜி குறித்த ஓவியப் புத்தகம் பிரிட்டனில் வெளியீடு

Posted: 25 Mar 2014 12:15 PM PDT

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி குறித்த 100 ஓவியங்கள் அடங்கிய புத்தகம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மே 1ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

ஹிந்தி நடிகை நந்தா காலமானார்

Posted: 25 Mar 2014 12:14 PM PDT

பழம்பெரும் ஹிந்தி நடிகை நந்தா, மும்பையில் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 75.

மாயமான விமான விவகாரம்: மலேசிய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Posted: 25 Mar 2014 12:05 PM PDT

நடுவழியில் மாயமான மலேசிய விமானம் இந்தியப் பெருங்கடலில் மூழ்கியதாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சீனாவில் பயணிகளின் உறவினர்கள் மலேசியத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நார்வேயில் "வினையானது கணினி விளையாட்டு'

Posted: 25 Mar 2014 12:05 PM PDT

நார்வேயில், தொடர்ந்து 16 மணி நேரம் கணினி விளையாட்டில் ஈடுபட்டிருந்த சிறுவன், திடீரென்று மயங்கி விழுந்து உயிருக்குப் போராடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அரசியலில் வளர்ந்து வரும் இந்தியர்கள்

Posted: 25 Mar 2014 12:04 PM PDT

அமெரிக்க அரசியலில் வளர்ந்து வரும் சக்திகளாக இந்தியர்கள் மற்றும் தெற்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தோர் விளங்கி வருகின்றனர் என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான அமி பேரா தெரிவித்துள்ளார்.

பணியாளரின் புகார்: வங்கதேசத் தூதர் மீது வழக்கு

Posted: 25 Mar 2014 12:04 PM PDT

அமெரிக்காவில் அதிக பணிச்சுமை அளித்ததுடன், ஊதியம் தர மறுத்ததாக வங்கதேசத் தூதரின் இல்லப் பணியாளர் அளித்த புகாரின் அடிப்படையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஃபுகுஷிமா அணு உலை: நீர் சுத்திகரிப்பில் மீண்டும் கோளாறு

Posted: 25 Mar 2014 12:03 PM PDT

ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமா அணு உலையில் கதிரியக்கம் தோய்ந்த நீரை சுத்திகரிக்கும் அமைப்பில் ஏற்பட்ட கோளாறால், நீரை சுத்திகரிக்கும் பணியை நிறுத்தி வைத்துள்ளதாக அந்த அணு உலையை நிர்வகிக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அணுசக்தி தொழில்நுட்ப உதவி தேவை

Posted: 25 Mar 2014 12:01 PM PDT

பாகிஸ்தானுக்கு ஆக்கப்பூர்வ அணுசக்தி தொழில்நுட்பத்தை வழங்குமாறு அந்நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் சர்வதேச நாடுகளிடம் கோரியுள்ளார்.

உக்ரைன் விவகார எதிரொலி: ஜி-8 மாநாடு ரத்து: ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட 7 நாடுகள் முடிவு

Posted: 25 Mar 2014 12:00 PM PDT

உக்ரைன் மீது ரஷியா மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்நாட்டில் நடைபெறவிருந்த ஜி-8 மாநாட்டை அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் பொருளாதார வலிமை மிக்க நாடுகள் ரத்து செய்துள்ளன.

தென்னிந்தியாவில் 500 டீலர்கள்: மஹிந்திரா டூ-வீலர்ஸ் திட்டம்

Posted: 25 Mar 2014 11:57 AM PDT

மஹிந்திரா குழுமத்தைச் சேர்ந்த இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா டூவீலர்ஸ் தென்னிந்தியாவில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட டீலர்களை விரைவாக நியமிக்க இலக்கிட்டிருப்பதாக நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

சிஸ்டெமா சியாம் டெலிகாம் காலாண்டு வருவாய் ரூ. 299 கோடி

Posted: 25 Mar 2014 11:56 AM PDT

மார்ச் 25: சிஸ்டெமா சியாம் டெலிகாம் (எஸ்எஸ்டிஎல்) நிறுவனத்தின் நான்காம் காலாண்டு வருவாய் ரூ. 299.6 கோடியாக உள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவுடனான ராணுவக்கூட்டை வெளிப்படுத்தியது இலங்கை!

Posted: 25 Mar 2014 11:55 AM PDT

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக

காங்கிரஸின் தோல்வி உறுதி: அத்வானி

Posted: 25 Mar 2014 11:54 AM PDT

காங்கிரஸின் தோல்வி இப்போது போல் எப்போதும் உறுதியாக இருந்ததில்லை என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.

வங்கித் தலைவர்களுடன் ரிசர்வ் வங்கி சிறப்பு ஆலோசனைக் கூட்டம்

Posted: 25 Mar 2014 11:54 AM PDT

அடுத்த வாரம் நிதிக் கொள்கை ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கும் நிலையில் வெளிநாட்டு வங்கித் தலைவர் உள்ளிட்ட சில வங்கித் தலைவர்களுடன் ரிசர்வ் வங்கியில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™