Tamil News | Online Tamil News |
- வேட்பாளர் தேர்வு:ராகுலின் திட்டத்திற்கு மத்திய அமைச்சர் பெனிபிரசாத் வர்மா எச்சரிக்கை
- லோக்சபா தேர்தல் ஜுரம் துவக்கம்: காஞ்சி தொகுதியில் முதல்வர் இன்று பிரசாரம்: தேர்தல் தேதி இரு நாட்களில் அறிவிப்பு
- பா.ஜ., சமாஜ்வாதி, 'ஆம் ஆத்மி' தலைவர்கள் பிரசாரத்தால் உ.பி., குலுங்கியது: மோடிக்கு எதிராக கெஜ்ரிவாலை நிறுத்த 'ஆம் ஆத்மி' கட்சி திட்டம்
- லாலுவை மிரட்ட நிதிஷ் கட்சியுடன் காங்., ரகசிய பேச்சு
- ராகுலின் தமிழக பாதயாத்திரை திட்டம் அம்பேல்: கலவர பீதியில் காங்கிரஸ் தலைவர்கள்
- ராகுல் விரும்பிய அவசர சட்டம்: மத்திய அமைச்சரவை நிராகரிப்பு
- 157 ஆண்டுக்கு முந்தைய ஆங்கிலேயர் கொடுமை அம்பலம்
- மூன்றாவது அணி அமைப்பது வீண் முயற்சி: மோடி ஆவேசம்
- தேர்தல் நிதியுடன் ஓட்டம் பிடிக்க நிர்வாகிகள் திட்டம்: தே.மு.தி.க.,வில் திடீர் பரபரப்பு
- விமான இன்ஜின் கொள்முதலில் ரூ.10 ஆயிரம் கோடி ஊழல்? : விசாரணைக்கு அமைச்சர் அந்தோணி உத்தரவு
| வேட்பாளர் தேர்வு:ராகுலின் திட்டத்திற்கு மத்திய அமைச்சர் பெனிபிரசாத் வர்மா எச்சரிக்கை Posted: புதுடில்லி : வேட்பாளர் தேர்வில் ராகுலின் முதன்மை அமைப்பு சோதனை உ.பி.,யில் எடுபடாது. என மத்திய அமைச்சர் பெனிபிரசாத் வர்மா எச்சரிக்கை விடுத்துள்ளார்.வரும் லோக்சபா தேர்தல் பிரசாரம் உ.பி.,யில் சரியான பாதையில் செல்லவில்லை என்கிறார் பெனி பிரசாத் வர்மா.மேலும் காங்கிரஸ் கட்சிக்கு 50 தொகுதிகளில் வெற்றி பெறலாம். அதுவும் சரியான முறையில் சீட் கொடுக்கப்பட்டால்தான். சரியான முறையில் திட்டமிட்டால்தான் அந்த 50 தொகுதிகளில் வெற்றிபெறும்.தற்போதைய திட்டத்தில் வேட்பாளர் தேர்வு முறை சரியில்லை. எனவே ஏற்கனவே கடந்தகால தேர்தல்களில் எந்தவகையை பின்பற்றினார்களோ அதே ... |
| Posted: சென்னை: தமிழகத்தில், லோக்சபா தேர்தல் ஜுரம் துவங்கி விட்டது. மற்ற கட்சிகளுக்கு முன்னதாக, அ.தி.மு.க., இன்று தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறது. அக்கட்சியின் பொதுச் செயலரும், முதல்வருமான, ஜெயலலிதா, காஞ்சிபுரத்தில்,இன்று மாலை, தன் முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார். அதேநேரத்தில், லோக்சபா தேர்தல் தேதி, இன்னும் இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.லோக்சபா தேர்தலில், தமிழகம், புதுச்சேரி உட்பட, 40 தொகுதிகளையும் கைப்பற்றும் முடிவுடன், அ.தி.மு.க., உள்ளது. அதனால், மற்ற கட்சிகளுக்கு முன்னதாக, முதல் ஆளாக, தேர்தல் பணிகளை துவக்கியது. ... |
| Posted: லக்னோ: லோக்சபா தேர்தல் நெருங்குவதால், நரேந்திர மோடி, முலாயம் சிங் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால், ஆகியோர், உ.பி., மாநிலத்தை முற்றுகையிட்டு, நேற்று பிரசாரம் செய்தனர். மூன்று தலைவர்கள், ஒரே நேரத்தில் பிரசாரம் செய்ததால், உ.பி., மாநிலம், நேற்று குலுங்கியது. பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடிக்கு எதிராக, 'ஆம் ஆத்மி' கட்சியின் கெஜ்ரிவாலை, போட்டியிட வைத்து, மோடிக்கு இணையாக அவரை கொண்டு வரவும், சரிந்துள்ள, 'இமேஜை' சரிகட்டவும், ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது.லோக்சபா தேர்தல் குறித்த அறிவிப்பு, இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. இதையடுத்து, முக்கிய அரசியல் கட்சிகள், தேர்தல் ... |
| லாலுவை மிரட்ட நிதிஷ் கட்சியுடன் காங்., ரகசிய பேச்சு Posted: புதுடில்லி: பீகாரில், லாலுவை மிரட்ட, நிதிஷ் கட்சியுடன், காங்கிரஸ் மறைமுக பேச்சுவார்த்தையைத் துவக்கியுள்ளது.பீகாரில், இந்த முறை, காங்கிரசும், லாலு பிரசாத்தின், ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியும் இணைந்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது.கூட்டணிக்கு அச்சாரம்: கால்நடை தீவன ஊழல் வழக்கில், ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, ஜாமினில் வெளியே வந்துள்ள லாலு, வந்த வேகத்திலேயே, காங்கிரஸ் தலைவர், சோனியா மற்றும் துணைத் தலைவர், ராகுலை சந்தித்து, கூட்டணிக்கு அச்சாரம் போட்டுவிட்டார். அவர் சற்று தாமதித்திருந்தாலும், பீகார் முதல்வர், நிதிஷ் ... |
| ராகுலின் தமிழக பாதயாத்திரை திட்டம் அம்பேல்: கலவர பீதியில் காங்கிரஸ் தலைவர்கள் Posted: இலங்கை தமிழர் விவகாரம் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்னையில், மத்திய அரசு சரியான நடவடிக்கைகள் எடுக்காததால், அதிருப்தி அடைந்த, தி.மு.க., 10 ஆண்டுகளாக, காங்கிரசுடன் வைத்திருந்த கூட்டணியை முறித்துக் கொண்டது. அதேநேரத்தில், '2ஜி' ஊழல் விவகாரம் உட்பட, பல ஊழல் பிரச்னைகளை காரணம் காட்டி, காங்கிரசுடன் கூட்டணி அமைக்க, மற்ற கட்சிகளும் தயக்கம் காட்டி வருகின்றன. எனவே, லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதனால், காங்கிரஸ் கட்சியின் ஓட்டு வங்கியை, பலப்படுத்த, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலை, தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்ய ... |
| ராகுல் விரும்பிய அவசர சட்டம்: மத்திய அமைச்சரவை நிராகரிப்பு Posted: புதுடில்லி: 'ஊழல் தடுப்பு மசோதாக்களை, அவசர சட்டம் மூலம் நிறைவேற்ற வேண்டும்' என்ற, காங்., துணை தலைவர் ராகுல் யோசனையை, மத்திய அமைச்சரவை நிராகரித்துள்ளது.'ஊழலுக்கு எதிரான, சில மசோதாக்களை பார்லிமென்டில் நிறைவேற்ற வேண்டும்' என, காங்., துணை தலைவர் ராகுல், தீவிரமாக முயற்சித்தார். சமீபத்தில் முடிவடைந்த, பார்லிமென்டின் கடைசி கூட்டத் தொடரில், தெலுங்கானா விவகாரத்தால் ஏற்பட்ட அமளி காரணமாக, இந்த மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை. இதனால், 'அவசர சட்டம் பிறப்பித்து, இந்த மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும்' என, மத்திய அரசுக்கு, ராகுல், யோசனை தெரிவித்தார். தேர்தல் அறிவிப்பு ... |
| 157 ஆண்டுக்கு முந்தைய ஆங்கிலேயர் கொடுமை அம்பலம் Posted: அமிர்தசரஸ்: பஞ்சாபில், பிரிட்டீஷ் ஆட்சியின் போது, கிணற்றில் தள்ளி படுகொலை செய்யப்பட்ட இந்திய வீரர்கள், 100 பேர் எலும்புகள் மீட்கப்பட்டுள்ளன.ராணுவ கிளர்ச்சி: ஆங்கிலேயேர்களுக்கு எதிராக, 1857ல், நாடு முழுவதும், கிழக்கிந்திய கம்பெனி ராணுவத்தில் இருந்த நம் வீரர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அவர்களில், 'பெங்கால் நேட்டிவ் இன்பேன்ட்ரி' என்ற, ராணுவ படைப்பிரிவில் இருந்த, நம் வீரர்கள் பலர், ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டனர். அந்த ஆண்டில், அமிர்தசரஸ் பகுதியை நிர்வாகம் செய்த ஆங்கிலேய அதிகாரிகளான துணை கமிஷனர், பிரடெரிக் ஹென்சி கூப்பர் மற்றும் ... |
| மூன்றாவது அணி அமைப்பது வீண் முயற்சி: மோடி ஆவேசம் Posted: புதுடில்லி: 'நாடு, தற்போதுள்ள சூழ்நிலையில், மூன்றாவது அணி அமைப்பது, வீண் முயற்சி. சரியான நேரத்தில், உறுதியான முடிவுகளை எடுக்க கூடிய தலைவர்களை தான், மக்கள், எதிர்பார்க்கின்றனர்' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி கூறியுள்ளார்.பத்திரிகை பேட்டி: பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, இந்தி மொழி பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: மூன்றாவது அணி அமைக்கப் போவதாக, ஒரு சில அரசியல் கட்சி தலைவர்கள் கூறுகின்றனர். காங்கிரஸ் எதிர்ப்பு என்ற கோஷத்தை அடிப்படையாக வைத்து, மூன்றாவது அணி அமைப்பதாக ... |
| தேர்தல் நிதியுடன் ஓட்டம் பிடிக்க நிர்வாகிகள் திட்டம்: தே.மு.தி.க.,வில் திடீர் பரபரப்பு Posted: கட்சி தலைமை உத்தரவுப்படி வசூலித்த, தேர்தல் நிதியுடன் அ.தி.மு.க.,விற்கு ஓட்டம் பிடிக்க, திருவள்ளூர் மேற்கு மாவட்டம் உட்பட, பல மாவட்ட நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளதால், விஜயகாந்தின், தே.மு.தி.க., கட்சியில் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.இலக்கு நிர்ணயம்: தே.மு.தி.க.,விற்கு, மாநிலம் முழுவதும், 59 மாவட்ட செயலர்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன், கட்சி செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஒவ்வொரு மாவட்ட செயலரும், லோக்சபா தேர்தல் நிதியாக 1.50 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக, கட்சி தலைமை ஏற்பாட்டில் ... |
| விமான இன்ஜின் கொள்முதலில் ரூ.10 ஆயிரம் கோடி ஊழல்? : விசாரணைக்கு அமைச்சர் அந்தோணி உத்தரவு Posted: புதுடில்லி: பெங்களூருவில் உள்ள, எச்.ஏ.எல்., நிறுவனத்திற்கு, விமான இன்ஜின்களை வழங்கிய பன்னாட்டு நிறுவனம், பல ஆயிரம் கோடி ரூபாயை, லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு வழங்கியதாக, புதிய தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த, ராணுவ அமைச்சர், அந்தோணி உத்தரவிட்டுள்ளார்.விமான தயாரிப்பு நிறுவனம்: "இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (எச்.ஏ.எல்.,)' என்ற, மத்திய அரசு நிறுவனம், விமானப்படைக்கு தேவையான விமானங்களையும், உதிரி பாகங்களையும் தயாரித்து வருகிறது. பெங்களூருவில் உள்ள இந்த நிறுவனத்திற்கு, பெயர் குறிப்பிடப்படாத, பன்னாட்டு ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மார்ச் 03,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |