Tamil News | Online Tamil News |
- பா.ம.க.,வை வழிக்கு கொண்டு வர பா.ஜ., பகீரதம்: பதில் வராவிட்டால் இன்று இறுதி முடிவு?
- தமிழக காங்., வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் குளறுபடி: குலாம் நபி ஆசாத்தின் முடிவுகளால் பெரும் சர்ச்சை
- 'சீனா போர் இந்தியா தோல்வி: நேருவே காரணம்'
- அரசியல்வாதிகள் பறக்கும் ஹெலிகாப்டருக்கு கட்டணம் எவ்வளவு?
- 'வைட்டமின் ப' பற்றாக்குறையால் வேட்பாளர்கள் பாதிப்பு
- '2ஜி' பற்றி பேசுவதை நிறுத்துங்க:ஜெ.,க்கு கருணாநிதி எச்சரிக்கை
- தமிழர்களுக்கு துரோகம் செய்தது மத்திய அரசு: தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதா ஆவேசம்
- 'ஆட்சியிலிருந்தால் கோட்டை; இல்லாவிட்டால் கோடநாடு': ராகு காலம் முடிந்த பின் கொந்தளித்த ஸ்டாலின்
- 'தமிழகத்தில் 2016ல் ஆட்சியை பிடிப்பேன்': ஊட்டியில் விஜயகாந்த் சூளுரை
- காங்.,கில் அண்ணன்; பா.ஜ.,வில் தம்பி: கலகலக்கிறது சிரஞ்சீவி குடும்பம்
- 18 வயது இளைஞர்களுக்கு ஓட்டுரிமை மத்திய அரசால் கிடைக்காமல் போனது
- காங்., பட்டியல் "ரிலீஸ்': கல்மாடிக்கு "கல்தா'
| பா.ம.க.,வை வழிக்கு கொண்டு வர பா.ஜ., பகீரதம்: பதில் வராவிட்டால் இன்று இறுதி முடிவு? Posted: தே.ஜ., கூட்டணியில் இருந்து, எந்தவொரு கட்சியும் வெளியேறி விட்டதாக, செய்தி வரக் கூடாது' என, பா.ஜ., தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், தமிழக பா.ஜ., தலைவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். அதை மீறிடக் கூடாது என்பதற்காக, கூட்டணியில் அடம் பிடிக்கும், பா.ம.க.,வை வழிக்கு கொண்டு வர, பா.ஜ., தலைவர்கள், பகீரத பிரயத்தனம் மேற்கொண்டுள்ளனர். அன்புமணி மூலமாக காய் நகர்த்தி, அக்கட்சியை கூட்டணியில் தக்கவைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.இதன்மூலமாக, கூட்டணியை விட்டு வெளியேறும் முடிவை அறிவிக்க விடாமல், பா.ம.க.,வை தடுத்து நிறுத்தி விட்டதாகவும், ஏற்கனவே பேசி முடிக்கப்பட்ட படி, தொகுதி ... |
| Posted: தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்விலும், மத்திய அமைச்சர், குலாம் நபி ஆசாத், குளறுபடி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தான், வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.தமிழக காங்கிரசுக்கு, மேலிட பொறுப்பாளராக உள்ளவர், முகுல் வாஸ்னிக். ஆனால் இவர், தமிழக காங்கிரஸ் தொடர்பான விஷயங்களில், தலையிடுவது இல்லை. இதற்கு முன், தமிழகத்துக்கான மேலிடப் பொறுப்பாளராக இருந்தவரும், மத்திய சுகாதார அமைச்சருமான, குலாம்நபி ஆசாத் தான், தமிழக காங்கிரஸ் குறித்த விஷயங்களில், அனைத்து முடிவுகளையும் எடுத்து வருகிறார்.வேட்பாளர் ... |
| 'சீனா போர் இந்தியா தோல்வி: நேருவே காரணம்' Posted: புதுடில்லி:'சீனாவுடனான போரில், இந்தியா தோல்வியடைந்ததற்கு, அப்போதைய பிரதமர், ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசின், தவறான முடிவு தான் காரணம்' என, வெளியாகியுள்ள தகவலால், பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.வலிமை குன்றிகடந்த, 1962ல், எல்லை பிரச்னை காரணமாக, அண்டை நாடுகளான, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் போர் மூண்டது. அப்போது, ஏழை நாடாகவும், ராணுவ வலிமை குன்றியும் இருந்த இந்தியாவை, சீனா, எளிதில் தோற்கடித்தது.இந்த போரில், 1,400 இந்திய வீரர்கள் இறந்தனர்; 1,000 பேர் காயமடைந்தனர்; 1,700 பேர், காணாமல் போயினர்.இந்த போர் நடந்தபோது, பிரபல ஆங்கில நாளிதழில், செய்தியாளராக இருந்த, ... |
| அரசியல்வாதிகள் பறக்கும் ஹெலிகாப்டருக்கு கட்டணம் எவ்வளவு? Posted: 'நாங்கள் ஏழைகளின் சிரிப்பிலே இறைவனை காண்கிறோம்; ஏழைகளுக்காகவே வாழ்கிறோம்' என்றெல்லாம், 'சீன்' போடும் அரசியல்வாதிகள், ஹெலிகாப்டரில் பறந்து பறந்து, பிரசாரம் செய்வதற்கு, ஒரு மணிநேரத்திற்கு எவ்வளவு செலவழிக்கின்றனர் தெரியுமா? 80ஆயிரம் ரூபாய் முதல், 2.50 லட்சம் ரூபாய் வரை.லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பல அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், 'பசை' உள்ள கட்சிகள், தங்கள் பிரதான தலைவர்களின் பிரசாரத்திற்காக, தனி ஹெலிகாப்டர்களை அமர்த்திக் கொள்கின்றன. இதற்காக, கட்சிகள் கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கின்றன.டில்லியில் மட்டும், பா.ஜ., மூன்று ... |
| 'வைட்டமின் ப' பற்றாக்குறையால் வேட்பாளர்கள் பாதிப்பு Posted: தேர்தலில் ஜெயித்த பின் ஓட்டம் பிடிப்பது தான் தே.மு.தி.க.,வினரின் வழக்கமாக இருந்தது. ஆனால், நேற்று முன்தினம், தே.மு.தி.க.,வின் நாமக்கல் வேட்பாளரே ஓட்டம் பிடித்தது, புதுமையை ஏற்படுத்தியது. இதே போல், மேலும் சிலர் ஓட்டம்பிடிக்க வாய்பபு உள்ளதாகவும், அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.நேற்று முன்தினம், தேர்தல் பிரசாரத்திற்காக, விஜயகாந்த் நாமக்கல் சென்ற போது, அந்த தொகுதிக்கான தே.மு.தி.க., வேட்பாளர் மகேஸ்வரன் பிரசாரத்திற்கு வராததால், விஜயகாந்த் அதிர்ச்சி அடைந்தார். மகேஸ்வரனோ, மூளையில் வைரஸ் காய்ச்சல் என, சொல்லி மருத்துவமனையில் படுத்துக்கொண்டு, தான் ... |
| '2ஜி' பற்றி பேசுவதை நிறுத்துங்க:ஜெ.,க்கு கருணாநிதி எச்சரிக்கை Posted: சென்னை:'தி.மு.க., மீது, '2ஜி' ஊழல் பற்றி பேசுவதை, முதல்வர் ஜெயலலிதா நிறுத்திக் கொள்ளாவிட்டால், அவர் தண்டனை பெற்ற வழக்குகளை குறித்து தொடர்ச்சியாக வெளியிடுவேன்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:முதல்வர் ஜெயலலிதா மீது உயர் நீதிமன்றம், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், பல வழக்குகளில், தங்கள் கருத்துக்களை, தீர்ப்புகளை அவ்வப்போது, வழங்கியுள்ளனர். அதன் பின், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், அவர் மீது தண்டனை வழங்கப்பட்ட, ஒரு சில வழக்குளை மேல் முறையீடு செய்து, அந்தத் தண்டனையிலிருந்து, அவர் விடுதலை பெற்ற சில நிகழ்வுகளும் உண்டு.பல்வேறு கோர்ட்களில், ... |
| தமிழர்களுக்கு துரோகம் செய்தது மத்திய அரசு: தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதா ஆவேசம் Posted: திருவண்ணாமலை:தமிழக மக்களுக்கு, மத்திய அரசு செய்த துரோகங்களை, 18 குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு, திருவண்ணாமலை பொதுக் கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாக பேசினார்.திருவண்ணாமலை லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர், வனரோஜாவை ஆதரித்து, திருவண்ணாமலை அருகே, அம்மாபாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:கடந்த, பத்து ஆண்டுகளில், மத்தியில் உள்ள கூட்டணி ஆட்சியில், ஒன்பது ஆண்டு, தி.மு.க., அங்கம் வகித்த நிலையில், தமிழகத்துக்கு, எவ்வித பயனும் இல்லாமல், பல்வேறு துரோகங்களை மத்திய அரசு செய்தது. அதேபோல், ... |
| 'ஆட்சியிலிருந்தால் கோட்டை; இல்லாவிட்டால் கோடநாடு': ராகு காலம் முடிந்த பின் கொந்தளித்த ஸ்டாலின் Posted: திருப்போரூர்:காஞ்சிபுரம் தொகுதியில், ராகு காலம் முடிந்த பிறகு, தி.மு.க., பொருளாளர், ஸ்டாலின், தேர்தல் பிரசாரத்தை துவக்கினார்.காஞ்சிபுரம் (தனி) லோக்சபா தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து, அக்கட்சியின் பொருளாளர், ஸ்டாலின், காஞ்சிபுரம் மாவட்டம், கேளம்பாக்கத்தில், நேற்று பகல், 3:00 மணிக்கு பிரசாரத்தை துவக்குவார் என, அறிவிக்கப்பட்டிருந்தது.நேற்று, செவ்வாய் கிழமை, பகல், 3:00 மணி முதல், 4:30 வரை ராகு காலம். இதனால், 4:40 மணிக்கு, கேளம்பாக்கத்தில், ஸ்டாலின் பிரசாரத்தை துவக்கினார்.பின், அவர் பேசியதாவது:ஜெயலலிதா, 2011ல், பொறுப்பேற்றார். தி.மு.க., ஆட்சியில் ... |
| 'தமிழகத்தில் 2016ல் ஆட்சியை பிடிப்பேன்': ஊட்டியில் விஜயகாந்த் சூளுரை Posted: ஊட்டி: "தமிழகத்தில், 2016ல் கட்டாயம் ஆட்சியை பிடிப்பேன் என, சவால் விடுகிறேன்; அதற்காக கடுமையாக போராடுவேன்," என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:முதல்வர் ஜெயலலிதா 'மலைகளின் அரசி', தி.மு.க., வேட்பாளர் ராசா 'மலைகளின் ராஜா' என்ற நிலை தான் ஊட்டியில் உள்ளது. இருவரும், நீலகிரி மலையில், 3,000, 4,000 ஏக்கர் நிலங்களை வளைத்து போட்டு வருகின்றனர்.தி.மு.க., வேட்பாளர் ராஜா,'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியுள்ளார். குளிர் மாவட்டமான ஊட்டிக்கு வந்து செல்லும் ஜெயலலிதா, ... |
| காங்.,கில் அண்ணன்; பா.ஜ.,வில் தம்பி: கலகலக்கிறது சிரஞ்சீவி குடும்பம் Posted: ஐதராபாத்:ஆந்திராவில், நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவர் சகோதரரும், நடிகருமான, பவன் கல்யாண் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. காங்கிரசில் உள்ள, அண்ணன் சிரஞ்சீவிக்கு எதிராக, தம்பி, பவன் கல்யாண், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட தயாராகி விட்டார்.தெலுங்கு மொழி, திரையுலகின், 'சூப்பர் ஸ்டார்' என, அழைக்கப்படும், சிரஞ்சீவி, 2008ல் 'பிரஜா ராஜ்ஜியம்' என்ற கட்சியை துவக்கினர்; பின், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தார். பிரஜா ராஜ்ஜியம் கட்சியின், இளைஞர் அணி தலைவராக இருந்தார், சிரஞ்சீவியின் தம்பி, நடிகர் பவன் கல்யாண். அவருக்கு, சிரஞ்சீவி, தன் கட்சியை, காங்கிரசில் இணைத்தது ... |
| 18 வயது இளைஞர்களுக்கு ஓட்டுரிமை மத்திய அரசால் கிடைக்காமல் போனது Posted: புதுடில்லி:ஜனவரி, 1ம் தேதி அன்று, 18 வயது பூர்த்தி அடைந்த எந்த ஒரு நபரும், தேர்தலில் ஓட்டளிக்க தகுதியுடைய நபராக கருதப்படுகிறார். அதன்படி, புதிய வாக்காளராக சேர்க்கப்படும் பலரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவது, சட்ட சிக்கலால் கேள்விக்குறியாகியுள்ளது.தேர்தல் ஆணையத்தின், தற்போதைய நடைமுறைப்படி, ஜனவரி, 1ம் தேதி அன்று, 18 வயதை அடையும் இளைஞர்கள், வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம். அதற்கு அடுத்த நாளான, ஜனவரி, 2 அன்று, 18 வயது பூர்த்தி அடையும் நபர், தன்னை தகுதியுடைய வாக்காளராக பதிவு செய்ய இயலாது. அவர், அடுத்த, ஓராண்டு வரை காத்திருக்க வேண்டும்.நாடு முழுவதும், ... |
| காங்., பட்டியல் "ரிலீஸ்': கல்மாடிக்கு "கல்தா' Posted: புதுடில்லி:காமன்வெல்த்' விளையாட்டு போட்டி ஊழலில் சிக்கிய, சுரேஷ் கல்மாடிக்கு, காங்கிரஸ் சார்பில் போட்டியிட, "சீட்' மறுக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின், மூன்றாவது பட்டியலை, கட்சித் தலைமை நேற்று வெளியிட்டது.இதில், மத்திய அமைச்சர்கள், கபில் சிபல், டில்லி, சாந்தினி சவுக், சச்சின் பைலட், ராஜஸ்தானின், அஜ்மீர் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். செய்தித் தொடர்பாளர், அஜய் மேக்கன், புதுடில்லி தொகுதியிலிருந்தும், ம.பி., முன்னாள் முதல்வர், அஜித் ஜோகி, சத்தீஸ்கர் மாநிலம், மகாசமுந்த் தொகுதியிலிருந்தும் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மார்ச் 19,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |