Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கர்நாடகாவில் 5 முன்னாள் முதல்வர்கள் போட்டி

Posted:

பெங்களூரு: கர்நாடகாவில், இந்த, லோக்சபா தேர்தலில், மாநில, முன்னாள் முதல்வர்கள், ஐந்து பேர் போட்டியிடுகின்றனர். இதனால், அம்மாநில தேர்தல் களம், சூடுபிடித்துள்ளது.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர், சித்தராமைய்யா தலைமையிலான, கர்நாடக மாநிலத்தின், 28 லோக்சபா தொகுதிகளுக்கும், அடுத்த மாதம், 17ல், தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில், முன்னாள் முதல்வர்களான, தேவகவுடா, வீரப்ப மொய்லி, தரம் சிங், எடியூரப்பா, சதானந்த கவுடா ஆகிய, ஐந்து பேர் போட்டியிடுகின்றனர்; இவர்களில், எடியூரப்பா, முதல் முறையாக, லோக்சபா தேர்தலை சந்திக்கிறார்.காங்., - பா.ஜ.,: லோக்சபா ...

ரூ.5 லட்சத்திற்கு வரிவிலக்கு: அறிவிக்க பா.ஜ., தீவிரம்

Posted:

புதுடில்லி: 'லோக்சபா தேர்தலில், நடுத்தர மக்களின் ஒட்டுக்களை கவரும் வகையில், வருமான வரி விலக்கு உச்சவரம்பு, ஐந்து லட்ச ரூபாயாக உயர்த்தப்படும்' என்ற உறுதிமொழியை, பா.ஜ., முன்னிறுத்த உள்ளது.நாட்டின், 16வது லோக்சபாவை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அடுத்த மாதம், 7ல் துவங்கி, மே மாதம், 12ல் நிறைவடைகிறது. இதில் பதிவான ஓட்டுகள், மே, 16ல் எணணப்படுகின்றன. பா.ஜ., தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியை, அக்கட்சியின் மூத்த தலைவர், முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான கமிட்டி மேற்கொண்டு வருகிறது. இவர்கள், பொதுமக்களிடம் இருந்தும், இணையதளம் மூலமும் கருத்துகளை கேட்டு, தேர்தல் அறிக்கையை ...

ரேடாரில் சிக்காமல் இருக்க, 5,000 அடி உயரத்தில் பறந்த மலேசிய விமானம்

Posted:

கோலாலம்பூர் : சீனாவுக்கு புறப்பட்ட, மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், ரேடார் சிக்ன லில் சிக்காமலிருக்க, 5,000 அடி உயரத்தில் தாழ பறந்ததாக கூறப்படுவதால், கடத்தல் சந்தேகம் நீடிக்கிறது.தொடர்பு துண்டிப்பு:மலேசியாவின், கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து, இம்மாதம், 7ம் தேதி, இரவு, 239 பேருடன், சீனாவுக்கு புறப்பட்ட விமானம், வியட்நாம் எல்லையில் நுழைந்த போது, தரைகட்டுப்பாட்டு தளத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த விமானத்தில் சென்னையை சேர்ந்த, சந்திரிகா சர்மா உள்ளிட்ட, ஐந்து இந்தியர்களும், கனடா நாட்டில் வசிக்கும், தமிழர் முக்தேஷ் மற்றும் அவரது மனைவி ...

'எங்களை வெளியேற்றியதால் வலதுகரத்தை இழந்ததாக ஜெ., உணருவார்'

Posted:

கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அணியில் இடம் பெற்ற புதிய தமிழகம், இரு இடங்களில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க., உறவு கசந்து விட்டதால், இந்த தேர்தலில், தி.மு.க., அணியில், புதிய தமிழகம் இடம் பெற்று, தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறது. அணி மாற்றம் மற்றும் தேர்தல் நிலவரம் குறித்து, தென் மாவட்டங்களின் தலித் சமூகத்தவரின் கட்சியாக கருதப்படும் புதிய தமிழகத்தின் நிறுவனர், தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி: ஓட்டப்பிடாரத்தில் எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி என்ன சாதித்தார்? ஏன் எம்.பி.,யாக விரும்புகிறார்? ஆட்சியில் யார், எந்த கட்சி ...

பம்மும் வேட்பாளர்கள்; தவிக்கும் விஜயகாந்த்

Posted:

தமிழகத்தில், பா.ஜ., கூட்டணி யில், தொகுதி பங்கீடு தொடர்பாக, குழப்பம் நீடித்து வரும் நிலையில், அதன் உச்சக்கட்டமாக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தால் அறிவிக்கப்பட்ட, நாமக்கல் லோக்சபா தொகுதி, தே.மு.தி.க., வேட்பாளர், 'தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை' எனக் கூறி, ஓட்டம் பிடித்துள்ளார்.லோக்சபா தேர்தலுக்காக, பா.ஜ., கூட்டணியில் உள்ள, தே.மு.தி.க., சார்பில், சில நாட்களுக்கு முன், ஐந்து பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை, அந்த கட்சி தன்னிச்சையாக வெளியிட்டது.உடல் நல பாதிப்பு?கட்சியில் ஒதுங்கியிருந்த, நாமக்கல் முன்னாள் நிர்வாகி, மகேஸ்வரனை, நாமக்கல் லோக்சபா ...

பா.ஜ.,வை பந்தாடும் 'பராசக்தி!'

Posted:

கூடங்குளம் அணு மின்நிலைய பிரச்னைக்கு இணையாக இழுத்துக்கொண்டு இருக்கும், பா.ஜ., கூட்டணி பிரச்னை, ''99.05 சதவீதம் தீர்ந்துவிட்டது,'' என, தேர்தலுக்கான, பா.ஜ., தமிழக பொறுப்பாளர், முரளீதர் ராவ், நேற்று, துல்லியமான புள்ளி விவரத்தோடு, அதிகாரபூர்வமாக அறிவித்தார்.கடந்த, மூன்று நாட்களாக, கூட்டணியில் தீர்வு ஏற்பட்டுவிட்டது என்ற, தோற்றம் ஏற்படுத்தப்பட்டு வந்ததால்; பா.ஜ.,வின் மாநில தலைவர், பொன். ராதாகிருஷ்ணன், கூட்டணி தலைவர்களோடு கைகோர்த்து காட்சி அளித்து, ஓரிரு வெட்டுக்குத்து சம்பவங்களோடு மட்டும், சுமுகமாக முடிந்த தொகுதி பங்கீடு விவரங்களையும் வெளியிடுவார் என்ற, ...

சேலம் யாருக்கு? தே.மு.தி.க., - பா.ம.க., சண்டை நீடிப்பு

Posted:

பா.ஜ., கூட்டணியில், 99.5 சதவீத உடன்பாடு ஏற்பட்டு விட்டதாக, அக்கட்சியின் தேசிய பொதுச் செயலர், முரளீதர் ராவ், சென்னையில் நேற்று தெரிவித்துள்ளார். 0.5 சதவீத உடன்பாடு முடியாமல் போனதற்கு, என்ன காரணம் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.அதேநேரத்தில், அக்கட்சி வட்டாரம் தெரிவிக்கும் தகவல்கள்படி பார்த்தால், சேலம் தொகுதி யாருக்கு என்பதில், தே.மு.தி.க., - பா.ம.க., இடையே இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை என, தெரியவந்துள்ளது. அதேபோல், திருப்பூர் யாருக்கு என்பதில், பா.ஜ., - கொ.ம.தே.க., இடையே முடிவு எட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.சிக்கல் தீர்ந்து விடும்:இந்த பிரச்னைகளுக்கு ...

தி.மு.க., தேர்தல் அறிக்கையை முதல்வர் படித்ததில் கருணாநிதி அதிக மகிழ்ச்சி

Posted:

சென்னை : 'தி.மு.க., தேர்தல் அறிக்கையை, முதல்வர் ஜெயலலிதா படித்தது, மகிழ்ச்சி அளிக்கிறது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தி.மு.க.,தேர்தல் அறிக்கை, 100 தலைப்புகளின் கீழ் ?வளியிடப்பட்டுள்ளது. ஆன்றோரும், சான்றோரும், அனைத்து கட்சி தலைவர்களும் வெகுவாக பாராட்டிக் கொண்டிருக்கையில், ஜெயலலிதா மட்டும், அதில் நான் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டதாக பேசியிருக்கிறார்.'தமிழக அரசின் மொத்த வருவாயில், 94 சதவீதம் அரசு அலுவலர்களின் ஊதியத்திற்காக செலவழிக்கப்படுகிறது' என, அரசு அலுவலர்களின் பணித்திறனை இழிவுப்படுத்தி, அத்தனை அரசு அலுவலர் ...

பணமின்றி தவிக்கும் 'ஆம் ஆத்மி':மாணவர்கள் மூலம் பிரசாரம்

Posted:

ஆமதாபாத் : பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர், நரேந்திர மோடி தலைமையிலான, குஜராத்தில், தேர்தல் செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடும், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, 'ஆம் ஆத்மி' கட்சி, மாணவர்களை வைத்து, வீடு வீடாக, ஓட்டு சேகரித்து வருகிறது.கட்சி துவக்கி, ஓராண்டு ஆவதற்குள், கடந்த ஆண்டு டிசம்பரில், டில்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, ஆட்சியை பிடித்தார், ஆம் ஆத்மி கட்சித் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால். டில்லி மாநில முதல்வராக, 49 நாட்கள் இருந்த அவர், 'லோக்பால்' மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை' எனக் கூறி, பதவியை ராஜினாமா செய்தார்.அந்த சூட்டோடு சூடாக, லோக்சபா தேர்தலில், ...

குஜராத் கலவரத்திற்கு மோடி பொறுப்பில்லை:ஆதரவு தெரிவிக்கிறார் சரத் பவார்

Posted:

மும்பை:''குஜராத்தில், 2002ம் ஆண்டு நடந்த மத கலவரத்திற்கு, அம்மாநில, பா.ஜ., முதல்வர், நரேந்திர மோடியை குறை கூற முடியாது; இது குறித்து, கோர்ட்டே தீர்ப்பு வழங்கியுள்ளது,'' என, மத்தியில் ஆளும், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின், பிரதான கட்சிகளில் ஒன்றான, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான, சரத் பவார் கூறியுள்ளார்.மத்திய அரசில், சரத் பவார் தலைமையிலான, தேசியவாத காங்கிரஸ் கட்சி, முக்கிய அங்கம் வகிக்கிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர், பிருத்விராஜ் சவான் தலைமையிலான, மகாராஷ்டிர மாநிலத்தில், தேசியவாத காங்கிரஸ் - ...

மோசடிக்காரர்கள் பிடியில் இருந்து தி.மு.க.,வை 'காப்பாற்றுவேன்': பரபரப்பு புகார்களை அள்ளி வீசி அழகிரி ஆவேசம்

Posted:

மதுரை : ''மோசடிக்காரர்கள் பிடியில் இருந்து, தி.மு.க.,வையும், கருணாநிதியையும், காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது; அதைச் செய்வேன்,'' என, மதுரையில் நேற்று தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய, முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க.,விலிருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டவருமான, அழகிரி ஆவேசமாக தெரிவித்தார். அத்துடன், கட்சியில் நடக்கும் விஷயங்கள் தொடர்பாக, பரபரப்பு புகார்களை தெரிவித்தார்.தி.மு.க.,வில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட பின், கட்சிக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வரும், கருணாநிதியின் மகனும், தென்மண்டல முன்னாள் அமைப்புச் செயலருமான ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™