Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கருத்து கணிப்பு என்ற பெயரில் போலி கணக்கெடுப்பு: நடவடிக்கை எடுக்க அரசுக்கு தேர்தல் கமிஷன் பரிந்துரை

Posted:

புதுடில்லி: கருத்து கணிப்பு என்ற பெயரில், போலி கணக்கெடுப்பு நடத்தப் படுவதாக எழுந்த புகாரை அடுத்து, இது தொடர்பாக கடுமை யான நடவடிக்கை எடுக்க, மத்திய அரசுக்கு, தேர்தல் கமிஷன் பரிந்துரைத்துள்ளது.இன்னும் சில வாரங்களில், லோக்சபா தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது. பல்வேறு நிறுவனங் களும், 'தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது, எந்த கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும், யாருக்கு, பிரதமராக வாய்ப்பு உள்ளது' என்பது போன்ற கருத்து கணிப்புகளை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. இந்த கருத்து கணிப்பு முடிவுகள் அனைத்தும், காங்கிரஸ் ...

அ.தி.மு.க., மவுனம்: தவியாய் தவிக்கும் கம்யூ.,க்கள்: சால்வை செலவு வீணாகுமோ என வேட்பாளர்கள் அச்சம்

Posted:

அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, எத்தனை தொகுதிகள் என்பதையும், அதற்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை, எப்போது நடைபெறும் என்பதையும், முதல்வர் ஜெயலலிதா அறிவிக்காததால், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும், தவிப்பில் உள்ளனர். அதேநேரத்தில், கம்யூனிஸ்ட் கட்சிகள் கேட்கும் தொகுதிகளுக்கு, அறிவிக்கப்பட்டுள்ள, அ.தி.மு.க., வேட்பாளர்களும் பதற்றத்தில் உள்ளனர்.தலா மூன்று தொகுதி: அ.தி.மு.க., பொதுச் செயலரான, முதல்வர் ஜெயலலிதா, கடந்த ஆண்டு டில்லி சென்ற போது, 'லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தனித்து போட்டியிடும்' என, ...

மோடி தான் எங்கள் முதல் குறி: காங்., தானாகவே கவிழும்: 'ஆம் ஆத்மி'

Posted:

புதுடில்லி: தொடர்ந்து, 10 ஆண்டுகளாக, மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரசை விட, மோடி அலையில், நாடு முழுவதும் எழுச்சி கண்டுள்ள பா.ஜ.,வையே, தங்கள் பிரதான போட்டியாளராக கருதுவதாக, 'ஆம் ஆத்மி' கட்சியினர், கருத்து தெரிவித்து உள்ளனர்.நாடு முழுவதும் வீசும், மோடி அலையை வீழ்த்தி, லோக்சபா தேர்தலில், அதிகப்படியான இடங்களை கைப்பற்றும் முயற்சியில், டில்லி, 'மாஜி' முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான, அரவிந்த் கெஜ்ரிவால், பம்பரமாக சுற்றி வருகிறார். சமூக ஆர்வலர், அன்னா ஹசாரேயின், 'ஊழலுக்கு எதிரான இந்தியா' இயக்கத்தில் இணைந்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட, முன்னாள் அரசு ...

லோக்சபா கூட்டணி வலுவாக உள்ளது: ஸ்டாலின்

Posted:

சென்னை: ''லோக்சபா தேர்தலுக்கு, தி.மு.க., தலைமையில், வலுவான கூட்டணி அமைந்துள்ளது," என, அக்கட்சியின் பொருளாளர், ஸ்டாலின் பேசினார். ஸ்டாலினின், 62வது பிறந்த நாள், சென்னை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நேற்று காலை கொண்டாடப்பட்டது.62 கிலோ எடை: பிறந்த நாளை முன்னிட்டு, கட் - அவுட்கள், பேனர்கள் போன்றவற்றைத் தவிர்த்து, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என, கட்சியினருக்கு, ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனால், சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதியில், ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறும், விளம்பர பலகைகள் குறைவாக இருந்தன. ஆனால், ...

இட்லி மாவுக்குள் மறைந்திருக்கும் மர்மங்கள்: கலப்படம் குறித்து டாக்டர்கள் 'பகீர்'

Posted:

கோவை: அவசரத் தேவைக்கு வாங்கி பயன்படுத்தப்படும் இட்லி - தோசை மாவு சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுவதால், பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.தமிழகம் மட்டுமின்றி, தென்னிந்தியாவின் மிக பிரபலமான உணவுகள், இட்லி, தோசை. பண்டிகை காலங்களில் மட்டுமே தயாரிக்கப்படும் உணவாக இருந்த இவை, கிரைண்டர், மிக்சி வருகைக்கு பின் அன்றாட உணவாகி விட்டன. அவசர உலகில் அனைத்து பொருட்களுமே உடனடியாக கிடைக்க துவங்கி விட்டன. இதில் இட்லி, தோசை மாவின் விற்பனை பிரதான இடத்தை பிடித்துள்ளது. பணிக்குச் செல்லும் பெண்கள் சமையல் பணி எளிதாவதோடு, பணம் ...

விஜயகாந்த் செல்வாக்கை வீழ்த்த அ.தி.மு.க., அதிரடி: அடுத்தடுத்து ஆட்களை இழுக்க 'ஆபரேஷன்' துவக்கம்

Posted:

கூட்டணி விவகாரத்தில், பல கட்சிகளுக்கு, 'டேக்கா' கொடுத்து வரும், விஜயகாந்திற்கு, லோக்சபா தேர்தலுக்கு முன், சரியான, 'உதை' கொடுக்க, அ.தி.மு.க., மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், அவரின் செல்வாக்கை சீர்குலைக்கவும் தீர்மானித்துள்ளது. அதன் முதல் கட்டமே, அருண் சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., - அ.தி.மு.க., பக்கம் தாவியது. தொடர்ச்சியாக, மேலும், பல ஆள் இழுக்கும், 'ஆபரேஷன்'கள் நடக்கலாம் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.'பிரதமர் பதவியை கைப்பற்றுவதே லட்சியம்' என்ற திட்டத்துடன், அ.தி.மு.க., தலைமை தேர்தல் பணியை துவங்கியுள்ளது. வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை வெளியீடு ...

சென்னை துறைமுகம் வளர்ச்சிக்கு அரசு முட்டுக்கட்டை: அமைச்சர் வாசன் சரமாரி குற்றச்சாட்டு

Posted:

''தமிழக அரசின், தொடர் முட்டுக்கட்டைகள் காரணமாக, சென்னை துறைமுகத்தில், அமைக்கப்பட இருந்த, 5,000 கோடி ரூபாய் மதிப்புள்ள, சரக்கு பெட்டக முனையம் திட்டத்திற்கான டெண்டரில், யாரும் பங்கேற்க வர மறுக்கின்றனர். இதனால், இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது,'' என, மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர், ஜி.கே.வாசன், குற்றம் சாட்டியுள்ளார்.மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தால், கடந்த ஐந்தாண்டுகளில், மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து, அந்த துறையின் அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான, வாசன், கூறியதாவது: சென்னை துறைமுகத்தில், இடப் பற்றாக்குறை காரணமாக, சரக்குகளை, ...

ராகுலுக்கு முத்தம் கொடுத்த பெண் எரித்து கொலை? கணவருக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு

Posted:

கவுகாத்தி: காங்., துணை தலைவர் ராகுலின் கன்னத்தில், முத்தம் கொடுத்த பெண், அவரது கணவரால் எரித்து கொல்லப்பட்டதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.காங்., துணை தலைவர் ராகுல், சமீபத்தில், அசாம் மாநிலம் ஜோர்காட்டுக்கு சென்றிருந்தார். அங்குள்ள உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த, 600க்கும் மேற்பட்ட பெண் பிரதிநிதிகளுடன், அவர் கலந்துரையாடினார். அப்போது, அங்கிருந்த சில பெண்கள், ராகுலை அன்புடன் தொட்டு பார்த்ததுடன், ஆர்வம் மிகுதியால், அவரின் கன்னத்தில், முத்தமும் கொடுத்தனர். அசாமின், பெகாஜன் காவோன் பஞ்சாயத்து உறுப்பினரான, பொன்டி சுத்தியா என்ற பெண்ணும், இவர்களில் ...

'மின் தடை காரணத்தை கனிவுடன் கூறுங்கள்': உதவி பொறியாளர்களுக்கு உத்தரவு

Posted:

'இரவில், குடியிருப்புகளுக்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும். மின் தடை ஏற்பட்டால், பொது மக்கள் கேட்கும் போது, அதற்கான காரணத்தை, உதவி பொறியாளர்கள் கனிவுடன் கூற வேண்டும்' என, மின் வாரியம் அதிகாரிகள் உத்தரவிட்டுள்னர்.தமிழ்நாடு மின்சார வாரியம், நிர்வாக வசதிக்காக சென்னை வடக்கு, சென்னை தெற்கு, விழுப்புரம், திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, வேலூர், ஈரோடு என, ஒன்பது மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மண்டலத்தை, தலைமை பொறியாளரும், மாவட்டங்களை, மேற்பார்வை பொறியாளரும் நிர்வகித்து வருகின்றனர். சென்னை, அண்ணா சாலை, மின் வாரிய தலைமை அலுவலகத்தில், தலைமை ...

சீன ரயில் நிலையத்தில் கொலைவெறி தாக்குதல்: 27 பேர் பலி, 109 பேர் காயம்

Posted:

பீஜிங் : சீனாவில் உள்ள தென்மேற்கு பகுதியில் இருக்கும் யுன்னான் மாகாணத்தில் உள்ள குன்மிங் ரயில் நிலையத்தில், ஆயுதம் ஏந்திய ஒரு கும்பல் வெறித்தாக்குதல் நடத்தியதில் 27 பேர் பலியானார்கள். மேலும் 109 பேர் காயமடைந்தனர்.இத்தாக்குதல் சம்பவம் சமீப காலத்தில் நடந்த மோசமான தாக்குதலாக இச்சம்பவம் இருப்பதாக சொல்லப்படுகிறது.இத்தாக்குதல் நடத்தியவர்கள் கருப்பு நிற ஆடை அணிந்திருந்ததாக இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.இத்தாக்குதல் திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதலாக இருந்ததாக அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான ஷின்குவா செய்தி தெரிவிக்கிறது.27 ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™