Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- விசித்திர நேர்த்திக்கடன்: உடல் முழுவதும் சகதி பூசி வலம் வரும் பக்தர்கள்
- தென்தமிழகத்தில் மழை வாய்ப்பு
- மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் கிழக்கு ராஜகோபுரம் கும்பாபிஷேகம்
- சிட்டுக்குருவிகளைக் காக்க ஒரு சேதி!
- அணியை கரை சேர்த்தார் ரொனால்டோ: சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில் ரியல் மாட்ரிட், செல்சி
- தில்லியில் சபாஷ்..! சரியான போட்டி...!
- தில்லியில் புரந்தரதாஸ தியாகராஜ இசை விழா
- வெளிநாட்டு நன்கொடை: ஆம்ஆத்மி கட்சியின் நிதிப் பரிவர்த்தனை தகவல் கோரப்பட்டுள்ளது
- திருக்குறள்: தில்லியில் தேசியக் கருத்தரங்கம்
- பயிற்சியாளரை நீக்கினார் ஆண்டி முர்ரே
- 2 வேட்பாளர்கள் திடீர் விலகல்: "ஆம்ஆத்மி' கட்சிக்கு நெருக்கடி?
- "ஐபிஏபி' அலுவலகம் அமைக்க நிதி:மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
- ரெய்னா, கோலி விளாசல்: இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா
- பாஜக சார்பில் வாக்குப்பதிவு மேலாண்மைப் பயிலரங்கம்
- சிறுமி பாலியல் வழக்கில் இளைஞருக்கு சிறை
- தில்லி பெண் போலீஸ் மர்மச் சாவு: கடற்படை முன்னாள் அதிகாரி கைது
- இரவுக் குடில் நிலை அறிக்கை:தில்லி அரசுக்கு மேலும் அவகாசம்
- கேண்டிடேட்ஸ் செஸ்: 6-வது சுற்றில் ஆனந்த் டிரா
- தில்லியில் 6 பேர் மனுதாக்கல்
- ரயில்வே வாரிய முன்னாள் அதிகாரி மீதான வழக்கை கைவிட சிபிஐ முடிவு
- பாஜகவில் சேர்ந்தார் ஜகதாம்பிகா பால்
- சட்டபூர்வமற்ற வகையில் பிறந்த குழந்தைக்கு ஜீவனாம்சம் அளிக்காமல் இருக்க முடியாது
- நெதர்லாந்தை வீழ்த்தி ஜிம்பாப்வே முன்னிலை
- 4, 5-ஆவது கட்ட வாக்குப்பதிவுக்கான அறிவிக்கைகள் வெளியீடு
- கைதிகளைத் தண்டிக்கும் அமைப்பல்ல சிறை: நஜீப் ஜங்
- ரஷியாவுக்கு எதிரான மேலைநாடுகளின் தடைக்கு ஆதரவு இல்லை
- ஐக்கிய அரபு அமீரகத்தில் 20 ஆட்டங்கள்
- மெட்ரோ ரயில் முன் குதித்து இளைஞர் தற்கொலை
- பாலியல் வழக்கில் இளைஞர் விடுதலை
- அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் ஆனந்தராஜ் பிரசாரம்
- ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
- தாழம்பூர் திரிசக்தி அம்மன் திருக்கோயிலில் தமிழக ஆளுநர் வழிபாடு
- சாலை அமைக்க எதிர்ப்பு: தாற்காலிகமாக நிறுத்தியது நகராட்சி
- வித்யாசாகர் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
- அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்
- பட்டுப்போன பட்டுப் பூங்கா: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
- புதிய வாக்காளர்களை கவர ஃபேஸ்புக்கில் வாக்குச் சேகரிப்பு
- உலக நன்மை வேண்டி காமாட்சியம்மன் கோயிலில் யாகம்
- மண்டலத் தேர்தல் அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம்
- மனித உரிமைகள் கழகம் தீர்மானம்
- காஞ்சிபுரத்தில் கோடை வெயிலின் உக்கிரம் தொடங்கியது
- 2 வீடுகள் எரிப்பு; கிராமத்தில் பதற்றம்
- மத்திய அரசின் திட்டங்கள் குறித்து கிராம மக்களிடம் அதிக விழிப்புணர்வு
- சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
- பணிந்தது இலங்கை: மனித உரிமை ஆர்வலர்கள் விடுதலை
- கூலித்தொழிலாளர் கொலை வழக்கு: 2 பேர் கைது
- பூண்டி ஒன்றியத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
- கடல் அனிமோன்: மிருகம் பாதி, தாவரம் பாதி!
- தொடக்கப் பள்ளியை மூட உத்தரவு: பெற்றோர் சாலை மறியல்
- திரையரங்கு மாடியிலிருந்து தவறி விழுந்து ஊழியர் சாவு
- வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
- நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளி கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
- கல்லூரி மாணவி தூக்கிட்டுச் சாவு: மாணவர்கள் போராட்டம்
- மத்திய காங்கிரஸ் அரசால்தான் இலங்கையில் தமிழினம் மாண்டது
- சிரியா ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல்
- சாலைகளில் நிறுத்தப்படும் பஸ்களால் போக்குவரத்து நெரிசல்
- வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியர் ஆய்வு
- அமெரிக்கா: ஹெலிகாப்டர் விபத்தில் 2 பேர் சாவு
- அதிக கட்டணம் வசூலிப்பதாக பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்
- திருச்சி முகாம் சிறையில் இலங்கை தமிழர்கள் 22 பேர் உண்ணாவிரதம்
- ராணுவ மோதலாக உருவெடுக்கும் உக்ரைன் பிரச்னை
- வேன் மீது கார் மோதல்: பள்ளி சிறுவன் சாவு
- மலேசியா செல்ல போலி பாஸ்போர்ட்டில் வந்த பங்களாதேஷ் இளைஞர் கைது
- அரசு மதுபானக்கடையில் ரூ.10 லட்சம் கையாடல்: ஊழியர் 4 பேர் கைது
- தேர்தல் விதிமீறல்களைத் தெரிவிக்க இமெயில், செல்போன் எண் அறிவிப்பு
- ஹைத்தியில் நெருக்கடி நிலை
- உறையூர் அருகே அதிக எண்ணிக்கையில் போலி ஏடிஎம் கார்டுகள் வைத்திருந்த இருவர் கைது
- பருத்தியில் காய்ப்புழுவை கட்டுப்படுத்தும் முறைகள்...
- வாக்குச் சாவடியில் காத்திருப்போருக்கு அறை ஒதுக்கீடு செய்ய உத்தரவு
- விஜயகாந்த் இன்று தேனி வருகை
- திமுக ஆலோசனைக் கூட்டம்
- நிலத் தகராறில் அண்ணன் மகனை அரிவாளால் வெட்டியவர் தற்கொலை
- தர்பூசணியில் வாடல் நோய்!
- வேலை வாய்ப்பை பெருக்க புதிய தொழிற்சாலைகள்:திமுக வேட்பாளர் உறுதி
- திமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பு
- குழந்தை கடத்தல்: தம்பதி கைது
- அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
- விருதுநகர் மக்களவைதொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அறிவிப்பு
- சிவகாசியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு
- வாக்காளர் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி
- காங். மேலிடப் பார்வையாளர் ஆலோசனை
- ஆட்சி மாற்றத்தை இளைஞர்கள் விரும்புகிறார்கள்: வைகோ பேச்சு
- மனைவிக்கு அரிவாள் வெட்டு: கணவர் கைது
- பொறியியல் கல்லூரி ஆண்டு விழா
- ராமநாதபுரம் தொகுதி இந்திய கம்யூ. வேட்பாளர் விபரம்:
- முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்கு
- அதிக வாகனங்களில் வந்தவர்கள் மீது வழக்கு
- ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்பாள் பால்குடத் திருவிழா
- ஸ்ரீபாகம்பிரியாள் கோயில் உண்டியல் திறப்பு: ரூ.20 லட்சம் வசூல்
- உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியில் இ.பேங்கிங் நிகழ்ச்சி
- சண்முகநாதப் பெருமான் கோயில் குடமுழுக்கு விழா
- அனுமதியின்றி மணல் அள்ளிய லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள்
- குடிநீர் தொட்டியில் பல்லி: 33 மாணவ - மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி
- அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்
- மழலையர் பள்ளி ஆண்டு விழா
- உடல் முழுவதும் சகதி பூசி வலம் வரும் பக்தர்கள்
- அரசு பஸ் மோதி தி.மு.க. பிரமுகர் சாவு
- ராமநாதபுரம் தொகுதி தேர்தல் பார்வையாளர் மார்ச் 23-இல் வருகை
- பேச்சுவார்த்தைக் குழுவில் மண்டபம் மீனவர்களை சேர்க்கக் கோரிக்கை
- கடலாடி அருகே வாகனச் சோதனையில் ரூ.2 லட்சம் பறிமுதல்
| விசித்திர நேர்த்திக்கடன்: உடல் முழுவதும் சகதி பூசி வலம் வரும் பக்தர்கள் Posted: 19 Mar 2014 12:24 PM PDT கமுதி ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய பங்குனித் திருவிழாவில், பக்தர்கள் உடல் முழுவதும் சகதி பூசி, சேத்தாண்டி வேடமணிந்து, புதன்கிழமை நேர்த்திக்கடன் செலுத்தினர். |
| Posted: 19 Mar 2014 12:23 PM PDT வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக தென்தமிழகத்தின் சில இடங்களில் வியாழக்கிழமை (மார்ச் 20) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
| மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் கிழக்கு ராஜகோபுரம் கும்பாபிஷேகம் Posted: 19 Mar 2014 12:23 PM PDT மதுரையில் கடந்த டிசம்பரில் பெய்த மழையின்போது இடிதாக்கி சேதமடைந்த அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் கிழக்குக் கோபுரக் கலசங்களுக்கு புதன்கிழமை காலை லகு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. |
| சிட்டுக்குருவிகளைக் காக்க ஒரு சேதி! Posted: 19 Mar 2014 12:20 PM PDT அழிந்து வரும் பறவைகள் பட்டியலில் இருக்கும் சிட்டுக்குருவிகள் இனத்தைப் பாதுகாக்கும் விழிப்புணர்வு பரவலாக அதிகரித்து வருகிறது. உடன்குடியைச் சேர்ந்த அண்ணன்-தங்கை இருவரும் இதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றனர். |
| அணியை கரை சேர்த்தார் ரொனால்டோ: சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில் ரியல் மாட்ரிட், செல்சி Posted: 19 Mar 2014 12:16 PM PDT சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், ஷால்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல்கள் அடித்து அசத்த ரியல் மாட்ரிட் அணி 3-1 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. |
| தில்லியில் சபாஷ்..! சரியான போட்டி...! Posted: 19 Mar 2014 12:14 PM PDT தில்லி பிரதேசத்தில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்ததும் போட்டி பலமடைந்துள்ளது. ஏற்கெனவே மற்றொரு தேசிய கட்சியான |
| தில்லியில் புரந்தரதாஸ தியாகராஜ இசை விழா Posted: 19 Mar 2014 12:13 PM PDT ராமகிருஷ்ணாபுரம் சௌத் இந்தியன் சொûஸட்டி, லோக் கலா மஞ்ச் ஆகியவை இணைந்து புரந்தரதாஸ தியாகராஜ இசை விழாவை தில்லியில் நடத்துகின்றன. |
| வெளிநாட்டு நன்கொடை: ஆம்ஆத்மி கட்சியின் நிதிப் பரிவர்த்தனை தகவல் கோரப்பட்டுள்ளது Posted: 19 Mar 2014 12:12 PM PDT சட்ட விதிகளை மீறும் வகையில் வெளிநாட்டு நிதி பெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில், ஆம்ஆத்மி கட்சியிடமிருந்து விரிவான தகவல்கள் கோரப்பட்டுள்ளன என்று தில்லி உயர் நீதின்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. |
| திருக்குறள்: தில்லியில் தேசியக் கருத்தரங்கம் Posted: 19 Mar 2014 12:12 PM PDT தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் "திருக்குறளில் கருத்துப் புலப்பாட்டு முறைகளும், அணி இலக்கணச் சிந்தனையும்' என்ற தலைப்பில் மூன்று நாள் தேசியக் கருத்தரங்கம் மார்ச் 27-ஆம் தேதி |
| பயிற்சியாளரை நீக்கினார் ஆண்டி முர்ரே Posted: 19 Mar 2014 12:12 PM PDT விம்பிள்டன் சாம்பியனான ஆண்டி முர்ரேவுக்கும் அவரது பயிற்சியாளர் இவான் லெண்டிலுக்கும் இடையிலான இரண்டு ஆண்டு கால உறவு முடிவுக்கு வந்தது. |
| 2 வேட்பாளர்கள் திடீர் விலகல்: "ஆம்ஆத்மி' கட்சிக்கு நெருக்கடி? Posted: 19 Mar 2014 12:12 PM PDT ஆம்ஆத்மி வேட்பாளர்கள் இருவர் திடீரென்று போட்டியிலிருந்து விலகியுள்ளனர். கட்சித் தலைவர்கள் மீது புகார் தெரிவித்து அவர்கள் விலகியுள்ளதால் அக் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் |
| "ஐபிஏபி' அலுவலகம் அமைக்க நிதி:மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு Posted: 19 Mar 2014 12:11 PM PDT தலைநகரில் அலுவலகம் அமைக்க அறிவுசார் சொத்து மேல்முறையீட்டு வாரியத்திற்கு (ஐபிஏபி) தேவையான நிதியை வழங்குமாறு மத்திய அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| ரெய்னா, கோலி விளாசல்: இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா Posted: 19 Mar 2014 12:11 PM PDT ரெய்னா மற்றும் விராட் கோலி அதிரடியாக அரைசதம் விளாச இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| பாஜக சார்பில் வாக்குப்பதிவு மேலாண்மைப் பயிலரங்கம் Posted: 19 Mar 2014 12:11 PM PDT மக்களவைத் தேர்தலின் போது வாக்குப்பதிவு மையங்களில் மேற்கொள்ள வேண்டிய மேலாண்மை குறித்த பயிலரங்கத்தை பாஜக புதன்கிழமை நடத்தியது. வாக்குப் பதிவின் போது அக் கட்சியினர் |
| சிறுமி பாலியல் வழக்கில் இளைஞருக்கு சிறை Posted: 19 Mar 2014 12:11 PM PDT தில்லியில் 14 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இளைஞருக்கு 8 மாதம் சிறைத் தண்டனை அளித்து தில்லி நீதிமன்றம் |
| தில்லி பெண் போலீஸ் மர்மச் சாவு: கடற்படை முன்னாள் அதிகாரி கைது Posted: 19 Mar 2014 12:11 PM PDT தில்லியில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த பெண் போலீஸ் பிரியங்கா குமாரி (23), மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவரை திருமணம் |
| இரவுக் குடில் நிலை அறிக்கை:தில்லி அரசுக்கு மேலும் அவகாசம் Posted: 19 Mar 2014 12:10 PM PDT தலைநகர் தில்லியில் உள்ள இரவுக் குடில்களின் நிலை குறித்த அறிக்கையை குறிப்பிட்டபடி சமர்ப்பிக்கத் தவறிய தில்லி அரசுக்கு மேலும் 4 வாரங்கள் கூடுதல் அவகாசம் அளித்து தேசிய மனித உரிமைகள் |
| கேண்டிடேட்ஸ் செஸ்: 6-வது சுற்றில் ஆனந்த் டிரா Posted: 19 Mar 2014 12:10 PM PDT ரஷியாவின் கான்ட்டி மான்சிஸ்க் நகரில் நடைபெற்று வரும் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் 6-வது சுற்றை ஆனந்த் டிரா செய்தார். |
| Posted: 19 Mar 2014 12:10 PM PDT தில்லியில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து புதன்கிழமை 6 பேர் மனுதாக்கல் செய்தனர். இவற்றையும் சேர்த்து இது வரை 15 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். |
| ரயில்வே வாரிய முன்னாள் அதிகாரி மீதான வழக்கை கைவிட சிபிஐ முடிவு Posted: 19 Mar 2014 12:10 PM PDT ரயில்வே வாரியத்தின் முன்னாள் மூத்த உறுப்பினர் குல் பூஷண் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை கைவிட சிபிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| பாஜகவில் சேர்ந்தார் ஜகதாம்பிகா பால் Posted: 19 Mar 2014 12:10 PM PDT உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஜகதாம்பிகா பால், புதன்கிழமை பாஜகவில் சேர்ந்தார். |
| சட்டபூர்வமற்ற வகையில் பிறந்த குழந்தைக்கு ஜீவனாம்சம் அளிக்காமல் இருக்க முடியாது Posted: 19 Mar 2014 12:09 PM PDT "சந்ததி பிறப்புக்கு முன்பு குழந்தையின் தாயிடம் உடன்பாடு செய்தாலும்கூட சட்டபூர்வமற்ற முறையில் பிறந்த குழந்தைக்கு பராமரிப்புத் தொகை (ஜீவனாம்சம்) அளிப்பதில் இருந்து விலகிச் செல்ல முடியாது' |
| நெதர்லாந்தை வீழ்த்தி ஜிம்பாப்வே முன்னிலை Posted: 19 Mar 2014 12:09 PM PDT இருபது ஓவர் உலகக் கோப்பைத் தகுதிச் சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஜிம்பாப்வே அணி. இதன் மூலம் அந்த அணி குரூப் பி தகுதிச் சுற்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து, பிரதான சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது. |
| 4, 5-ஆவது கட்ட வாக்குப்பதிவுக்கான அறிவிக்கைகள் வெளியீடு Posted: 19 Mar 2014 12:09 PM PDT மக்களவைத் தேர்தலில் 4ஆவது மற்றும் 5ஆவது கட்ட வாக்குப்பதிவுக்கான அறிவிக்கைகள் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளன. |
| கைதிகளைத் தண்டிக்கும் அமைப்பல்ல சிறை: நஜீப் ஜங் Posted: 19 Mar 2014 12:09 PM PDT "கைதிகளைத் தண்டிக்கும் ஓர் அமைப்பல்ல சிறை; தான் செய்த குற்றம் குறித்து உணர்த்தச் செய்யும் இடமாகும் அது' என்று தில்லி பிரதேச துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் கூறினார். |
| ரஷியாவுக்கு எதிரான மேலைநாடுகளின் தடைக்கு ஆதரவு இல்லை Posted: 19 Mar 2014 12:09 PM PDT ரஷியாவுக்கு எதிராக மேலைநாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளை ஆதரிக்க மாட்டோம் என்று இந்தியா புதன்கிழமை அறிவித்துள்ளது. |
| ஐக்கிய அரபு அமீரகத்தில் 20 ஆட்டங்கள் Posted: 19 Mar 2014 12:08 PM PDT ஏழாவது ஐபிஎல் போட்டியின் முதல் கட்ட 20 ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா, அபுதாபி மற்றும் துபையில் நடைபெறவுள்ளன. ஏப்ரல் 16-ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன. சென்னை அணி 5 ஆட்டங்களில் பங்கேற்கிறது. |
| மெட்ரோ ரயில் முன் குதித்து இளைஞர் தற்கொலை Posted: 19 Mar 2014 12:08 PM PDT மெட்ரோ ரயில் முன் குதித்து இளைஞர் புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டார். |
| பாலியல் வழக்கில் இளைஞர் விடுதலை Posted: 19 Mar 2014 12:08 PM PDT பாலியல் வழக்கில் புகார் அளித்த பெண் பிறழ்சாட்சியம் அளித்ததால், குற்றம்சாட்டப்பட்ட இளைஞரை வழக்கில் இருந்து விடுவித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் ஆனந்தராஜ் பிரசாரம் Posted: 19 Mar 2014 12:07 PM PDT காஞ்சிபுரம் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து நடிகர் ஆனந்தராஜ் செங்கல்பட்டில் பிரசாரம் செய்தார். |
| ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் Posted: 19 Mar 2014 12:07 PM PDT ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| தாழம்பூர் திரிசக்தி அம்மன் திருக்கோயிலில் தமிழக ஆளுநர் வழிபாடு Posted: 19 Mar 2014 12:07 PM PDT நாவலூரை அடுத்துள்ள தாழம்பூர் திரிசக்தி அம்மன் ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் கலந்து கொண்டார். |
| சாலை அமைக்க எதிர்ப்பு: தாற்காலிகமாக நிறுத்தியது நகராட்சி Posted: 19 Mar 2014 12:06 PM PDT காஞ்சிபுரம் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் சாலை அமைக்க சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்பணியை நகராட்சி தாற்காலிகமாக நிறுத்தியுள்ளது. |
| வித்யாசாகர் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா Posted: 19 Mar 2014 12:06 PM PDT செங்கல்பட்டு வேதநாராயணபுரத்தில் உள்ள வித்யாசாகர் மகளிர் கல்லூரியில் 6-வது ஆண்டு பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. |
| அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம் Posted: 19 Mar 2014 12:06 PM PDT அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் ரூ. 80 லட்சத்தில் புதிதாக செய்யப்பட்ட தேர் வெள்ளோட்டம் புதன்கிழமை காலை நடைபெற்றது. |
| பட்டுப்போன பட்டுப் பூங்கா: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு Posted: 19 Mar 2014 12:06 PM PDT காஞ்சிபுரத்தில் மத்திய அரசு உதவியுடன் பட்டுப் பூங்கா அமைக்க தி.மு.க. ஆட்சியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இப்போது அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு பட்டுப்போன நிலையில் |
| புதிய வாக்காளர்களை கவர ஃபேஸ்புக்கில் வாக்குச் சேகரிப்பு Posted: 19 Mar 2014 12:05 PM PDT காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் புதிய வாக்காளர்களை கவரும் வகையில் விஸ்வநாதன் எம்.பி. மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் ஆகியோர் ஃபேஸ்புக் மூலம் வாக்குச் சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். |
| உலக நன்மை வேண்டி காமாட்சியம்மன் கோயிலில் யாகம் Posted: 19 Mar 2014 12:05 PM PDT காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை முதல் தசமஹாவித்யா மஹா ஹோமம் என்ற பெயரில் சிறப்பு யாகம் நடைபெற்று வருகிறது. |
| மண்டலத் தேர்தல் அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் Posted: 19 Mar 2014 12:05 PM PDT மண்டலத் தேர்தல் அலுவலர்கள், துணை மண்டலத் தேர்தல் அலுவலர்கள், பறக்கும் படையினர் கலந்து கொண்ட தேர்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 19 Mar 2014 12:04 PM PDT : ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என வலியுறுத்தி மனித உரிமைகள் கழகத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| காஞ்சிபுரத்தில் கோடை வெயிலின் உக்கிரம் தொடங்கியது Posted: 19 Mar 2014 12:04 PM PDT காஞ்சிபுரத்தில் கோடை வெயிலின் உக்கிரம் கடந்த 2 நாள்களாக அதிகரித்துள்ள நிலையில், புதன்கிழமை வெளியே தலை காட்ட முடியாத அளவுக்கு இருந்தது. |
| 2 வீடுகள் எரிப்பு; கிராமத்தில் பதற்றம் Posted: 19 Mar 2014 12:03 PM PDT திருவள்ளூர் அருகே விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக ஊராட்சித் துணைத்தலைவர் உள்ளிட்டோரின் வீடுகளை கிராமத்தினர் தீக்கிரையாக்கினர். |
| மத்திய அரசின் திட்டங்கள் குறித்து கிராம மக்களிடம் அதிக விழிப்புணர்வு Posted: 19 Mar 2014 12:03 PM PDT திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிராம மக்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து அதிகளவில் விழிப்புணர்வு உள்ளது என மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் கூறினார். |
| சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் Posted: 19 Mar 2014 12:03 PM PDT மாங்காடு அருகே சுடுகாட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| பணிந்தது இலங்கை: மனித உரிமை ஆர்வலர்கள் விடுதலை Posted: 19 Mar 2014 12:03 PM PDT இலங்கையில் தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மனித உரிமை ஆர்வலர்கள் 2 பேரை அந்நாட்டு அரசு புதன்கிழமை விடுதலை செய்தது. |
| கூலித்தொழிலாளர் கொலை வழக்கு: 2 பேர் கைது Posted: 19 Mar 2014 12:03 PM PDT பூந்தமல்லியை அடுத்த திருவேற்காட்டில் கூலித்தொழிலாளி கொலை வழக்கு தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| பூண்டி ஒன்றியத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு Posted: 19 Mar 2014 12:02 PM PDT பூண்டி ஒன்றியத்தில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை வருவாய்த்துறை அமைச்சர் பி.வி.ரமணா செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். |
| கடல் அனிமோன்: மிருகம் பாதி, தாவரம் பாதி! Posted: 19 Mar 2014 12:02 PM PDT ஆழ்கடலில் வாழும் கடல் அனிமோன் எனப்படும் நட்சத்திர வடிவ சிறுமலரில் விலங்கின மரபுப் பண்பும், தாவர இன மரபுப் பண்பும் கலந்திருப்பதை உயிரியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். |
| தொடக்கப் பள்ளியை மூட உத்தரவு: பெற்றோர் சாலை மறியல் Posted: 19 Mar 2014 12:02 PM PDT பொன்னேரியில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் மழலையர் தொடக்கப் பள்ளியை மூடுமாறு மாவட்ட கல்வித்துறையினர் உத்தரவிட்டனர். |
| திரையரங்கு மாடியிலிருந்து தவறி விழுந்து ஊழியர் சாவு Posted: 19 Mar 2014 12:02 PM PDT பூந்தமல்லியில் திரையரங்கு மாடியிலிருந்து தவறி விழுந்த ஊழியர் உயிரிழந்தார். |
| வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை Posted: 19 Mar 2014 12:01 PM PDT அம்பத்தூர் அருகே கொளத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை, பணம் ஆகியவற்றைத் திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளி கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் Posted: 19 Mar 2014 12:01 PM PDT நெய்வேலி நிலக்கரி சுரங்கத் தொழிலாளி சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து செங்குன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி. அமைப்புகள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. |
| கல்லூரி மாணவி தூக்கிட்டுச் சாவு: மாணவர்கள் போராட்டம் Posted: 19 Mar 2014 12:01 PM PDT திருவள்ளூர் அருகே இயங்கி வரும் தனியார் கல்லூரியின் விடுதியில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவத்தால் அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| மத்திய காங்கிரஸ் அரசால்தான் இலங்கையில் தமிழினம் மாண்டது Posted: 19 Mar 2014 12:00 PM PDT மத்திய காங்கிரஸ் அரசால்தான் இலங்கையில் தமிழினம் மடிந்தது என திருவள்ளூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வேணுகோபால் குற்றம்சாட்டினார். |
| சிரியா ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் Posted: 19 Mar 2014 12:00 PM PDT சிரியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்த நாட்டின் 4 ராணுவத் தளங்களின் மீது இஸ்ரேல் புதன்கிழமை தாக்குதல் நடத்தியது. 40 ஆண்டுகளுக்குப் பின்னர் இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. |
| சாலைகளில் நிறுத்தப்படும் பஸ்களால் போக்குவரத்து நெரிசல் Posted: 19 Mar 2014 12:00 PM PDT பொன்னேரியில் சாலையில் நிறுத்தப்படும் தனியார் பஸ்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. |
| வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியர் ஆய்வு Posted: 19 Mar 2014 12:00 PM PDT மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திருத்தணியில் வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். |
| அமெரிக்கா: ஹெலிகாப்டர் விபத்தில் 2 பேர் சாவு Posted: 19 Mar 2014 11:59 AM PDT அமெரிக்காவின் சியாட்டில் நகரில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். |
| அதிக கட்டணம் வசூலிப்பதாக பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர் Posted: 19 Mar 2014 11:59 AM PDT செங்குன்றத்தை அடுத்த புழல் பகுதியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக தனியார் பள்ளியை செவ்வாய்க்கிழமை பெற்றோர் முற்றுகையிட்டனர். |
| திருச்சி முகாம் சிறையில் இலங்கை தமிழர்கள் 22 பேர் உண்ணாவிரதம் Posted: 19 Mar 2014 11:58 AM PDT திறந்த வெளி முகாமிற்கு தங்களை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி திருச்சி முகாம் சிறையிலுள்ள இலங்கை தமிழர்கள் 22 பேர் புதன்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர். |
| ராணுவ மோதலாக உருவெடுக்கும் உக்ரைன் பிரச்னை Posted: 19 Mar 2014 11:58 AM PDT ரஷியாவுடனான தனது பிரச்னை ராணுவ மோதலாக உருவெடுத்துள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது. |
| வேன் மீது கார் மோதல்: பள்ளி சிறுவன் சாவு Posted: 19 Mar 2014 11:57 AM PDT திருச்சி திருவானைக்கா அருகே கொண்டையம்பேட்டை பிரிவுச் சாலையில் புதன்கிழமை சுற்றுலா சென்ற வேன் மீது கார் மோதியதில் பள்ளி சிறுவன் உயிரிழந்தார். |
| மலேசியா செல்ல போலி பாஸ்போர்ட்டில் வந்த பங்களாதேஷ் இளைஞர் கைது Posted: 19 Mar 2014 11:57 AM PDT மலேசியா செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு போலி பாஸ்போர்ட்டில் வந்த பங்களாதேஷ் இளைஞர் கைது செய்யப்பட்டார். |
| அரசு மதுபானக்கடையில் ரூ.10 லட்சம் கையாடல்: ஊழியர் 4 பேர் கைது Posted: 19 Mar 2014 11:57 AM PDT திருச்சி அரசு மதுபானக்கடையில்(டாஸ்மாக்) கடையில் ரூ. 10 லட்சம் கையாடல் செய்த ஊழியர்கள் நான்கு பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| தேர்தல் விதிமீறல்களைத் தெரிவிக்க இமெயில், செல்போன் எண் அறிவிப்பு Posted: 19 Mar 2014 11:57 AM PDT தேர்தல் விதிமீறல்களைத் தெரிவிக்க இமெயில் முகவரி, தொலைபேசி மற்றும் செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. |
| Posted: 19 Mar 2014 11:56 AM PDT வடகிழக்கு ஹைத்தியில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக அங்கு நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. |
| உறையூர் அருகே அதிக எண்ணிக்கையில் போலி ஏடிஎம் கார்டுகள் வைத்திருந்த இருவர் கைது Posted: 19 Mar 2014 11:56 AM PDT திருச்சி உறையூர் அருகே அதிக எண்ணிக்கையில் போலி வெளிநாட்டு ஏடிஎம் கார்டுகளை வைத்திருந்த இருவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| பருத்தியில் காய்ப்புழுவை கட்டுப்படுத்தும் முறைகள்... Posted: 19 Mar 2014 11:55 AM PDT பருத்திச் செடியில் காணப்படும் காய்ப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவதன் மூலம் முழுமையான சாகுபடி பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| வாக்குச் சாவடியில் காத்திருப்போருக்கு அறை ஒதுக்கீடு செய்ய உத்தரவு Posted: 19 Mar 2014 11:55 AM PDT மக்களவை தேர்தலை முன்னிட்டு அமைக்கப்படும் வாக்குச் சாவடியில் காத்திருப்போருக்கு அறை ஒதுக்கீடு செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. |
| Posted: 19 Mar 2014 11:55 AM PDT தேனி அல்லிநகரத்தில் வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்கிறார். இது குறித்து மாவட்ட தேமுதிக செயலர் கே.கே. கிருஷ்ணன் கூறியது: தேனி |
| Posted: 19 Mar 2014 11:55 AM PDT தொப்பம்பட்டி ஒன்றிய திமுக சார்பாக கள்ளிமந்தையத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தொப்பம்பட்டி ஒன்றிய செயலர் சி. ராஜாமணி தலைமை வகித்தார். அதே போல |
| நிலத் தகராறில் அண்ணன் மகனை அரிவாளால் வெட்டியவர் தற்கொலை Posted: 19 Mar 2014 11:55 AM PDT வத்தலகுண்டு அருகே சேர்வராகரன்பட்டியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி.(75) இவரது அண்ணன் ராமன் மகன் கணேசன் (35). இவர்களுக்குள் நிலத் தகராறு இருந்து வந்தது. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். |
| Posted: 19 Mar 2014 11:54 AM PDT தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள தர்பூசணி பயிரில் வாடல் நோயின் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. முறையான நடைமுறைகளை கையாண்டு இந்நோயை கட்டுப்படுத்தினால் விவசாயிகள் கூடுதல் மகசூல் எடுக்க முடியும். |
| வேலை வாய்ப்பை பெருக்க புதிய தொழிற்சாலைகள்:திமுக வேட்பாளர் உறுதி Posted: 19 Mar 2014 11:54 AM PDT வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புதிய தொழிற்சாலைகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திமுக வேட்பாளர் காந்திராஜன் உறுதி அளித்தார். |
| திமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பு Posted: 19 Mar 2014 11:54 AM PDT பழனியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டன. |
| Posted: 19 Mar 2014 11:54 AM PDT நாமக்கல்லில் உள்ள குப்பண்ணன் தெருவைச் சேர்ந்தவர் துரைராஜ். இவர் தனது மனைவி அகிலா மற்றும் குழந்தை கவின்னேஷ் (3) ஆகியோருடன் நத்தத்தில் உள்ள மாமனார் ஆறுமுகம் வீட்டுக்கு |
| அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு Posted: 19 Mar 2014 11:53 AM PDT வேடசந்தூர் ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வேடசந்தூர் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ். பழனிச்சாமி தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இதில் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சிற |
| விருதுநகர் மக்களவைதொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அறிவிப்பு Posted: 19 Mar 2014 11:53 AM PDT விருதுநகர் மக்களவைத் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். |
| சிவகாசியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு Posted: 19 Mar 2014 11:53 AM PDT சிவகாசி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக தலைமை தேர்தல் அலுவகம் புதன்கிழமை திறக்கப்பட்டது. |
| வாக்காளர் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி Posted: 19 Mar 2014 11:52 AM PDT சிவகாசியில் புதன்கிழமை வாக்காளர் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நடைபெற்றது. சிவகாசி பஸ் நிலையத்திலிருந்து, புதுரோட்டுத் தெருவரை கல்லூரி மாணவ- மாணவிகள் மனிதச் சங்கிலி அமைத்து வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதில் கல்லூரி மாணவ- மாணவிகள் 350 பேர் |
| காங். மேலிடப் பார்வையாளர் ஆலோசனை Posted: 19 Mar 2014 11:52 AM PDT சிவகாசி சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர் புதன்கிழமை சிவகாசி வந்தார்.காங்கிரஸ் கட்சியின் சிவகாசி தொகுதி மேலிடப் பார்வையாளராக சுதந்திரமணி பாண்டியன் |
| ஆட்சி மாற்றத்தை இளைஞர்கள் விரும்புகிறார்கள்: வைகோ பேச்சு Posted: 19 Mar 2014 11:52 AM PDT மக்களவை தேர்தல் மூலம் இளைஞர்கள் ஆட்சி மாற்றம் ஏற்பட விரும்புவதாகவும், தமிழகத்தின் ஆதரவு இல்லாமலே மத்தியில் நரேந்திரமோடி தலைமையில் ஆட்சி அமையும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். |
| மனைவிக்கு அரிவாள் வெட்டு: கணவர் கைது Posted: 19 Mar 2014 11:52 AM PDT சிவகாசி அருகே பவளமலைப்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா (47). இவரது மனைவி நட்சத்திர வள்ளி (26). தம்பதிகள் இருவரும் கூலித்தொழிலாளிகள். சம்பவத்தன்று இருவரும் விறகு வெட்ட சென்ற போது நட்சத்திரவள்ளிக்கு செல்போனில் அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து அவர் பேசியுள்ளார். பின்னர் |
| Posted: 19 Mar 2014 11:52 AM PDT அருப்புக்கோட்டை ஸ்ரீசெüடாம்பிகா பொறியியல் கல்லூரியின் 14 வது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. |
| ராமநாதபுரம் தொகுதி இந்திய கம்யூ. வேட்பாளர் விபரம்: Posted: 19 Mar 2014 11:51 AM PDT ராமநாதபுரம் தொகுதி இந்திய கம்யூ. வேட்பாளர் விபரம்: |
| முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்கு Posted: 19 Mar 2014 11:51 AM PDT முதுகுளத்தூரில் செவ்வாய்க்கிழமை தேர்தல் விதிமுறையை மீறியதாக திமுக முன்னாள் எம்.எல்.ஏ. மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். |
| அதிக வாகனங்களில் வந்தவர்கள் மீது வழக்கு Posted: 19 Mar 2014 11:51 AM PDT தென்னக மக்கள் இயக்கம் சார்பில் வரும் மக்களவைத் தேர்தலில், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இதையொட்டி கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவாலயத்தில் வணங்கி, பிரசாரத்தை தொடங்க அமைப்பின் நிறுவனர் கணேசன், ராமநாதபுரம் |
| ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்பாள் பால்குடத் திருவிழா Posted: 19 Mar 2014 11:50 AM PDT பரமக்குடி அருள்மிகு ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்பாள் பால்குடத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. |
| ஸ்ரீபாகம்பிரியாள் கோயில் உண்டியல் திறப்பு: ரூ.20 லட்சம் வசூல் Posted: 19 Mar 2014 11:50 AM PDT திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் தங்கம், வெள்ளி, ரொக்கம் உள்பட ரூ.20 லட்சம் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். |
| உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியில் இ.பேங்கிங் நிகழ்ச்சி Posted: 19 Mar 2014 11:50 AM PDT காரைக்குடி டாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் இ.பேங்கிங் குறித்த சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. |
| சண்முகநாதப் பெருமான் கோயில் குடமுழுக்கு விழா Posted: 19 Mar 2014 11:49 AM PDT சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருள்மிகு சண்முகநாதப் பெருமான் திருக்கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது. |
| அனுமதியின்றி மணல் அள்ளிய லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள் Posted: 19 Mar 2014 11:49 AM PDT திண்டுக்கல் அடுத்துள்ள அக்கரைப்பட்டி குளத்தில் சில இயந்திரங்களை பயன்படுத்தி லாரிகள் மூலம் அனுமதியின்றி மணல் அள்ளி வந்துள்ளனர். |
| குடிநீர் தொட்டியில் பல்லி: 33 மாணவ - மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி Posted: 19 Mar 2014 11:49 AM PDT பள்ளி மாணவர்கள் குடிக்கும் தண்ணீர் தொட்டியில் பல்லி விழுந்து கிடந்ததால், அந்த பள்ளியைச் சேர்ந்த 33 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். |
| Posted: 19 Mar 2014 11:48 AM PDT பழனி அருகே ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவை தொகுதி தொப்பம்பட்டியில் அதிமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. |
| Posted: 19 Mar 2014 11:48 AM PDT வத்தலகுண்டு பர்ஸ்ட் ஸ்டெப் மழலையர் விண்ளாயட்டுப் பள்ளியின் முதலாம் ஆண்டு விழா பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பிரான்ஸ் நாட்டின் சமூக கல்வித்துறை தன்னார்வலர்கள் |
| உடல் முழுவதும் சகதி பூசி வலம் வரும் பக்தர்கள் Posted: 19 Mar 2014 11:48 AM PDT கமுதி ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய பங்குனித் திருவிழாவில், பக்தர்கள் உடல் முழுவதும் சகதி பூசி, சேத்தாண்டி வேடமணிந்து, புதன்கிழமை நேர்த்திக்கடன் செலுத்தினர். அதிகாலையில் நீர்நிலைகளுக்குச் சென்று அங்குள்ள சகதியை அள்ளி எடுத்து தங்கள் உடல் |
| அரசு பஸ் மோதி தி.மு.க. பிரமுகர் சாவு Posted: 19 Mar 2014 11:47 AM PDT கமுதி அருகே செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனம் மீது அரசு பஸ் மோதியதில் தி.மு.க. பிரமுகர் உயிரிழந்தார். |
| ராமநாதபுரம் தொகுதி தேர்தல் பார்வையாளர் மார்ச் 23-இல் வருகை Posted: 19 Mar 2014 11:47 AM PDT தேர்தல் ஆணையத்தால் விழிப்புணர்வு பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள சந்தோஷ்குமார் இம்மாதம் 23ஆம் தேதி ராமநாதபுரம் வருகை தர இருப்பதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான |
| பேச்சுவார்த்தைக் குழுவில் மண்டபம் மீனவர்களை சேர்க்கக் கோரிக்கை Posted: 19 Mar 2014 11:47 AM PDT இந்திய, இலங்கை மீனவர்களின் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் மண்டபம் பகுதி மீனவப் பிரதிநிதிகளையும் சேர்க்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| கடலாடி அருகே வாகனச் சோதனையில் ரூ.2 லட்சம் பறிமுதல் Posted: 19 Mar 2014 11:46 AM PDT கடலாடி அருகே ஒப்பிலான் விலக்கு ரோட்டில் புதன்கிழமை தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில் ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |