Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


"மரபணு மாற்ற விதைகளை அனுமதிக்க மாட்டோம்'

Posted: 13 Mar 2014 01:11 PM PDT

மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் ஆட்சி அமைந்தால் விவசாயிகளை பாதிக்கும் மரபணு மாற்ற விதைகளை தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம் என்று முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தெரிவித்தார்.

மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்தால்தான் மீண்டும் பேச்சுவார்த்தை: முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டம்

Posted: 13 Mar 2014 01:09 PM PDT

அனைத்து மீனவர்களையும் விடுதலை செய்த பின்னர் தான் இலங்கை-தமிழக மீனவர்கள் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

"கருணாநிதிதான் கூட்டணி வியூகத்தை வகுத்தார்'

Posted: 13 Mar 2014 01:03 PM PDT

மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி வியூகத்தை கருணாநிதிதான் வகுத்தார் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் போட்டி: பாமகவினர் அதிருப்தி

Posted: 13 Mar 2014 01:01 PM PDT

புதுச்சேரி எம்.பி. தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்தப்படுவதால் பாமக-வினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தனியாகப் போட்டியிடுவதா என்பது குறித்து விவாதிக்க வரும் ஞாயிற்றுக்கிழமை பொதுக்குழுக் கூட்டத்தை கூட்டி உள்ளனர்.

தேர்தல் பிரசார பயணச் செலவு: பதிவு செய்தால் சலுகை

Posted: 13 Mar 2014 01:00 PM PDT

தேர்தல் பிரசார பயணச் செலவு சலுகையைப் பெற தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

வாக்குக்கு பணம்: சாட்சி ஆவணங்களை அனுப்ப தனி இ-மெயில் முகவரி

Posted: 13 Mar 2014 12:58 PM PDT

வாக்குக்கு பணம் கொடுப்பது தொடர்பான விடியோ அல்லது புகைப்படங்கள் அடங்கிய சாட்சி ஆவணங்களை அனுப்ப மாவட்டம்தோறும் தனி மின்னஞ்சல் (இ-மெயில்) முகவரிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை: தங்கபாலு

Posted: 13 Mar 2014 12:54 PM PDT

தமிழக மீனவர்கள் 140 பேர் 2 நாள்களில் விடுதலை

Posted: 13 Mar 2014 12:53 PM PDT

இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டியதாகக் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மொத்தம் 140 பேர் புதன் மற்றும் வியாழக்கிழமை (மார்ச் 12, 13) ஆகிய இரு தினங்களில் இலங்கை நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அஸ்ஸாமில் மும்முனைப் போட்டி

Posted: 13 Mar 2014 12:47 PM PDT

அஸ்ஸாமில் ஆளும் காங்கிரஸ் கட்சி, பாஜக மற்றும் அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐடியுஎஃப்) ஆகிய கட்சிகள் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

ஆந்திர காங்கிரஸ் வேட்பாளர்கள் 28ஆம் தேதிக்குள் முடிவு

Posted: 13 Mar 2014 12:45 PM PDT

ஆந்திர மாநில தேர்தலுக்கான வேட்பாளர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் முடிவு செய்யப்படுவார்கள் என்று அந்த மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் திக் விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் வரம்பு மீறி தேர்தல் செலவு

Posted: 13 Mar 2014 12:43 PM PDT

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் வேட்பாளர்கள் வரம்பு மீறி செலவு செய்வதாக துணைத் தேர்தல் ஆணையர் சுதிர் திரிபாதி வியாழக்கிழமை தெரிவித்தார்.

தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம் குறித்து சல்மான் குர்ஷித் கடும் விமர்சனம்

Posted: 13 Mar 2014 12:42 PM PDT

தண்டனை பெற்ற எம்.பி., எம்எல்ஏக்களின் பதவியைப் பறிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் வெளியிட்ட தீர்ப்பையும், தேர்தல் ஆணையம் விதித்துள்ள கட்டுப்பாடுகளையும் சுட்டிக்காட்டி வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கடுமையாக விமர்சித்துள்ளார்.

என் உயிருக்கு ஆபத்து

Posted: 13 Mar 2014 12:41 PM PDT

மக்களவைத் தேர்தலின்போது தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சியின் தலைவருமான பாபுலால் மராண்டி (படம்) அச்சம் தெரிவித்துள்ளார்.

டார்ஜிலிங்: பாஜகவுக்கு கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா ஆதரவு

Posted: 13 Mar 2014 12:39 PM PDT

மேற்கு வங்கத்தில் டார்ஜிலிங் மக்களவைத் தொகுதிக்கான வேட்பாளரை பாஜக அறிவிக்காத நிலையில் அக்கட்சியைச் சேர்ந்த எஸ்.எஸ்.அலுவாலியாவுக்கு கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா ஆதரவு தெரிவித்துள்ளது.

அருணாசல மக்கள் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Posted: 13 Mar 2014 12:36 PM PDT

அருணாசலப்பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை அருணாசலப்பிரதேச மக்கள் கட்சி வியாழக்கிழமை வெளியிட்டது.

பிஎஸ்ஆர் காங்கிரஸை இணைக்க பாஜக மறுப்பு

Posted: 13 Mar 2014 12:35 PM PDT

சுஷ்மா ஸ்வராஜின் கடும் எதிர்ப்பை அடுத்து, பிஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை பாஜகவுடன் இணைக்க அக்கட்சித் தலைமை மறுத்துவிட்டது.

குஜராத்தில் மோடி போட்டி?

Posted: 13 Mar 2014 12:24 PM PDT

மக்களவைத் தேர்தலில் குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு தொகுதியில் நரேந்திர மோடி போட்டியிடுவார் என்று அந்த மாநில பாஜக பொதுச் செயலாளர் விஜய் ரூபாணி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

தேர்தல் விதி மீறல்: பாஜகவுக்கு நோட்டீஸ்

Posted: 13 Mar 2014 12:22 PM PDT

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி "நமோ' தேநீர்க்கடை அமைத்தது தொடர்பாக பாஜகவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் இந்தியா

Posted: 13 Mar 2014 12:18 PM PDT

சீனா நோக்கிச் செல்லும் வழியில் 239 பேருடன் காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பணியில் இந்தியா இறங்கியுள்ளது. இப்பணியில் 4 போர்க் கப்பல்களையும் 6 விமானங்களையும் ஈடுபடுத்தியுள்ளது.

அரசு பங்களாவில் மே மாதம் வரை தங்க அவகாசம் கோருகிறார் கேஜரிவால்

Posted: 13 Mar 2014 12:17 PM PDT

ஆம்ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த கேஜரிவால் தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவில் மே மாதம் வரை தங்குவதற்கு அனுமதிக்குமாறு அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கைப் போர் தமிழர்களுக்கு எதிரானது அல்ல

Posted: 13 Mar 2014 12:16 PM PDT

இலங்கையில் நடைபெற்ற போர் விடுதலைப்புலிகளுக்கு எதிரானது. தமிழர்களுக்கு எதிரானது அல்ல என்று அந்த நாட்டு அதிபர் ராஜபட்ச தெரிவித்துள்ளார்.

நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்தது தில்லி உயர் நீதிமன்றம்

Posted: 13 Mar 2014 12:15 PM PDT

தில்லியில் 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி, ஓடும் பஸ்ஸில் 23 வயது துணை மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதித்து விரைவு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தில்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

மணிசங்கர ஐயரின் கருத்து தோல்வி மனப்பான்மையை வெளிபடுத்துகிறது

Posted: 13 Mar 2014 12:12 PM PDT

காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டும் என்ற முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர ஐயரின் கருத்து தோல்வி மனப்பான்மையை வெளிப்படுத்துவதாக இமாசல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் சாடியுள்ளார்.

கலச​லிங்ம் பல்லை.யில் தேசிய கருத்​த​ரங்கு

Posted: 13 Mar 2014 12:07 PM PDT

கிருஷ்​ணன்​கோ​வில்,​​ கலச​லிங்ம் பல்​லைக் கழத்​தில் தக​வல் தொழில் நுட்​பத் துறை சார்​பில் இன்​போஸ்​பார்க்ஸ்-​14

டிராக்​டர் பறி​மு​தல்:​ டிரை​வர் கைது

Posted: 13 Mar 2014 12:07 PM PDT

ராஜ​பா​ளை​யம் அருகே உரிய ஆவ​ணங்ள் இல்​லாத டிராக்​டரை பறி​மு​தல் செய்த போலீ​ஸகார் அதை ஓட்டி வந்​த​வரை கைது செய்​த​னர்.​

சிவாசி​

Posted: 13 Mar 2014 12:06 PM PDT

கல்​லூரி ஆண்டு விழா:​​ தலைமை-​ முதல்​வர் த.​ சசி​ரேகா,​​ சிறப்​புரை-​ மதர்​தெ​ரசா மக​ளிர் பல்​லைக் கழக துணை​வேந்​தர்

சுப்ரதா ராய்க்கு ஜாமீன் மறுப்பு

Posted: 13 Mar 2014 12:06 PM PDT

முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி தராதது தொடர்பான வழக்கில், சஹாரா நிறுவன அதிபர் சுப்ரதா ராய்க்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்து விட்டது.

கால்நடைத் தீவன ஊழல் நிலுவை வழக்குகள்: லாலு மீதான குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்ய சிபிஐ இயக்குநர் பரிந்துரை

Posted: 13 Mar 2014 12:03 PM PDT

பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மீது நிலுவையில் உள்ள கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளின் குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்ய சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா பரிந்துரை செய்துள்ளார்.

நாராயணசாமி, பன்சால் மீண்டும் போட்டி

Posted: 13 Mar 2014 12:01 PM PDT

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 71 பேர் கொண்ட வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சி வியாழக்கிழமை வெளியிட்டது.

காஷ்மீரில் கடும் பனிப் பொழிவு: 17 பேர் பலி

Posted: 13 Mar 2014 11:57 AM PDT

காஷ்மீரில் சமீபத்தில் நிலவி வரும் கடும் பனிப் பொழிவுக்கு 17 பேர் பலியாகி விட்டதாகவும், சுமார் 2,000 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

நியூயார்க் கட்டட விபத்து: பலி 7ஆக உயர்வு

Posted: 13 Mar 2014 11:51 AM PDT

அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றான நியூயார்க்கில் எரிவாயுக் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு அடுக்கு மாடிக் கட்டடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.

சீனாவின் தடையை மீறியது பிலிப்பின்ஸ்

Posted: 13 Mar 2014 11:50 AM PDT

சீனாவின் தடையை மீறி பிலிப்பின்ஸ் ராணுவ விமானம் தெற்கு சீனக் கடற்பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய மணல் திட்டில் உள்ள பிலிப்பின்ஸ் ராணுவ வீரர்களுக்கு விமானம் மூலம் உணவுப் பொருள்களை வழங்கியுள்ளது.

தேசத் துரோக வழக்கு: முஷாரஃப் மீது இன்று குற்றச்சாட்டுப் பதிவு

Posted: 13 Mar 2014 11:49 AM PDT

தேசத் துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படவுள்ளதை சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்தது.

பணிகள் முடிந்தும் பயன்பாட்டுக்கு வராத வண்டலூர்-நெமிலிச்சேரி சாலை

Posted: 13 Mar 2014 11:49 AM PDT

பணிகள் நிறைவு பெற்றுள்ள வண்டலூர் - நெமிலிச்சேரி வரையிலான சாலையை போக்குவரத்துக்கு திறந்து விட

தெற்கு சூடான் பிரச்னை: ஆப்பிரிக்க தலைவர்கள் ஆலோசனை

Posted: 13 Mar 2014 11:48 AM PDT

தெற்கு சூடானில் நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் எத்தியோப்பியத் தலைநகர் அட்டிஸ் அபாபாவில் வியாழக்கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டு அகதிகள் முகாம்:  6ஆவது நாளாக ஈழத்தமிழர் உண்ணாவிரதம்

Posted: 13 Mar 2014 11:48 AM PDT

செங்கல்பட்டு அகதிகள் முகாமில் ஈழத்தமிழர் ஒருவர் 6ஆவது நாளாக வியாழக்கிழமை தனது உண்ணாவிரதப்

டேங்கர் லாரிகள் மோதி விபத்து: 31 பேர் சாவு

Posted: 13 Mar 2014 11:47 AM PDT

சீனாவில் எரிசாராயம் ஏற்றிய இரண்டு டேங்கர் லாரிகள் மோதி வெடித்த விபத்தில் 31 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.

அதிமுக வேட்பாளர் வேணுகோபாலுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பிரசாரம்

Posted: 13 Mar 2014 11:47 AM PDT

திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.வேணுகோபாலுக்கு ஆதரவாக சமூக

காஸா பகுதியை கைப்பற்றுவோம்: இஸ்ரேல்

Posted: 13 Mar 2014 11:47 AM PDT

பாலஸ்தீன தீவிரவாதிகள் தொடர்ந்து ராக்கெட் வீசி தாக்குதல் நடத்துவதற்கு பதில் அளிக்கும் வகையில், காஸா பகுதியை திரும்ப கைப்பற்றுவோம் என்று இஸ்ரேல் சவால் விடுத்துள்ளது.

வெடிவிபத்து: சாட்சியம் அளிப்போர் முன்பதிவு செய்யலாம்

Posted: 13 Mar 2014 11:46 AM PDT

காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்பாக சாட்சியம் அளிப்போர் தங்களது

அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்

Posted: 13 Mar 2014 11:46 AM PDT

திருத்தணி தொகுதியின் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

ஆளில்லா விமானம் வாங்க ஆஸ்திரேலியா திட்டம்

Posted: 13 Mar 2014 11:45 AM PDT

கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள அமெரிக்காவிடம் இருந்து ரூ. 270 கோடிக்கு 7 ஆளில்லா விமானங்களை வாங்க ஆஸ்திரேலிய அரசு திட்டமிட்டுள்ளது.

செங்கல்பட்டு: தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்த ரூ.1 லட்சம் உரியவரிடம் ஒப்படைப்பு

Posted: 13 Mar 2014 11:45 AM PDT

செங்கல்பட்டு பரனூர் டோல்கேட் அருகே தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளின் சோதனையில் பறிமுதல்

மாட்டுவண்டி ஏறி தொழிலாளி சாவு

Posted: 13 Mar 2014 11:44 AM PDT

கல்பாக்கம் அருகே மாட்டுவண்டி ஏறி இறங்கிய விபத்தில் கூலித் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

கேரளத்துக்கு கொண்டு செல்லப்பட்ட மாடுகள் பறிமுதல்

Posted: 13 Mar 2014 11:43 AM PDT

ஆந்திர மாநிலத்திலிருந்து திருவள்ளூர் வழியாக கேரள மாநிலத்துக்கு பாதுகாப்பற்ற முறையில் கொண்டு

அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு

Posted: 13 Mar 2014 11:43 AM PDT

மக்களவைத் தேர்தலையொட்டி திருவள்ளூர் ஆயில்மில் பகுதியில் அதிமுக தேர்தல் அலுவலகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

ரயில் மறியல் சம்பவம் எதிரொலி: வேப்பம்பட்டில் போலீஸார் குவிப்பு

Posted: 13 Mar 2014 11:42 AM PDT

வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் புதன்கிழமை ஏற்பட்ட விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் உயிரிழந்ததை அடுத்து

போக்குவரத்துக்கு இடையூறு: போதையில் இருந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவருக்கு அடி, உதை

Posted: 13 Mar 2014 11:42 AM PDT

திருவள்ளூர் அருகே மது போதையில் 108 ஆம்புலன்ûஸ போக்குவரத்துக்கு இடையூறாக சாலை நடுவே நிறுத்திய

ரஷியாவுடன் கிரீமியாவை இணைக்க பொதுவாக்கெடுப்பு கூடாது

Posted: 13 Mar 2014 11:42 AM PDT

உக்ரைனின் கிரீமியா தன்னாட்சிப் பிராந்தியத்தை ரஷியாவுடன் இணைப்பதற்கான இம்மாதம் 16ஆம் தேதி பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்காக ரஷியா மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கேரளத்துக்கு கொண்டு செல்லப்பட்ட மாடுகள் பறிமுதல்

Posted: 13 Mar 2014 11:41 AM PDT

ஆந்திர மாநிலத்திலிருந்து திருவள்ளூர் வழியாக கேரள மாநிலத்துக்கு பாதுகாப்பற்ற முறையில் கொண்டு

ஒத்தாண்டேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா

Posted: 13 Mar 2014 11:41 AM PDT

திருவள்ளூர் அருகே அமைந்துள்ள ஒத்தாண்டேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியர் அலுவலகத்தில் தொலைக்காட்சி மூலம் வாக்காளர் விழிப்புணர்வு

Posted: 13 Mar 2014 11:40 AM PDT

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர்

சூரியனை விட 1,300 மடங்கு பெரிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு

Posted: 13 Mar 2014 11:40 AM PDT

சூரியனை விட 1,300 மடங்கு பெரிய நட்சத்திரத்தை விண்வெளி ஆய்வுக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

சுவர் விளம்பரம்: அனுமதி கேட்கும் அரசியல் கட்சியினர்

Posted: 13 Mar 2014 11:39 AM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமப் பகுதிகளில் தேர்தல் தொடர்பான சுவர் விளம்பங்கள் எழுதுவதற்கு

காஞ்சிபுரம் - சென்னை விரைவு மின்சார ரயில் 12 பெட்டிகளாக அதிகரிப்பு

Posted: 13 Mar 2014 11:39 AM PDT

காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் விரைவு மின்சார ரயிலின் பெட்டிகள் 12ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

படப்பை குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரியும் பன்றிகளால் அவதி

Posted: 13 Mar 2014 11:38 AM PDT

படப்பை ஊராட்சிக்குட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரியும் ஏராளமான பன்றிகள் அவ்வபோது

வரி செலுத்துவோருக்கு உதவ புதிய இணையதளம் தொடக்கம்

Posted: 13 Mar 2014 11:38 AM PDT

வருமானவரி மற்றும் சொத்து வரி செலுத்துவோருக்கு ஆலோசனை வழங்குவதற்காக "டி.வி.எஸ். அட்வைசர்ஸ் நிறுவனம்' புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளது.

காஞ்சிபுரம் நகராட்சியுடன் இணைத்தும் பயனில்லை

Posted: 13 Mar 2014 11:38 AM PDT

காஞ்சிபுரம் நகராட்சியுடன் இணைத்தும் எந்த பயனும் இல்லை என்று அஞ்சூர் கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.

வெம்பாக்கம் ஒன்றியத்தில் அமைச்சர் வாக்கு சேகரிப்பு

Posted: 13 Mar 2014 11:37 AM PDT

வெம்பாக்கம் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர்

குர்கானில் பிரேமிக வித்யா கேந்திராவின் ஆண்டு விழா

Posted: 13 Mar 2014 11:36 AM PDT

தேசியத் தலைநகர் வலயம், குர்கானில் அமைந்துள்ள பிரேமிக வித்யா கேந்திராவின் 4-ஆவது ஆண்டு விழா

இந்தியா இன்ஃபோலைன் ஹவுஸிங் கடன் பத்திரங்கள் வெளியீடு

Posted: 13 Mar 2014 11:35 AM PDT

இந்தியா இன்ஃபோலைன் ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனம் (ஐ.ஐ.எச்.எஃப்.எல்.) ரூ. 200 கோடி திரட்டும் விதமாக கடன் பத்திரங்களை வெளியிட்டுள்ளது.

ஆம்ஆத்மி நன்கொடை விவகாரம்: பொதுநல மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

Posted: 13 Mar 2014 11:35 AM PDT

பல்வேறு சட்ட விதிகளை மீறி வெளிநாட்டில் இருந்து நன்கொடை பெற்றுவரும் ஆம்ஆத்மி கட்சி மீது குற்ற வழக்குப்

குற்ற சம்பவங்கள்: நிலவர அறிக்கை தாக்கல் செய்ய போலீஸூக்கு உத்தரவு

Posted: 13 Mar 2014 11:34 AM PDT

தில்லியில் நடைபெறும் குற்றங்கள், குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக நிலவர

என்டிஎம்சியில் டெங்கு விழிப்புணர்வு இயக்கம்

Posted: 13 Mar 2014 11:34 AM PDT

  புது தில்லி முனிசிபல் கவுன்சிலில் (என்டிஎம்சி) டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

சாலைகளில் பழுதாகி நிற்கும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் தில்லி!

Posted: 13 Mar 2014 11:33 AM PDT

தலைநகர் சாலைகளில் கனரக வாகனங்கள் பழுதாகி நின்றுவிடுவதை தொடர்ந்து போக்குவரத்து

அரசு பங்களாவில் மே மாதம் வரை தங்க அவகாசம் கோருகிறார் கேஜரிவால்

Posted: 13 Mar 2014 11:33 AM PDT

ஆம்ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த கேஜரிவால் தனக்கு

ஹீரோ ஸ்பிளெண்டர் ஐ-ஸ்மார்ட் விற்பனை தொடங்கியது

Posted: 13 Mar 2014 11:33 AM PDT

இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஸ்பிளெண்டர் ரக பைக்கில் ஐ-ஸ்மார்ட் எனும் புதிய மாடலின் விற்பனையை புது தில்லியில் வியாழக்கிழமை முதல் தொடங்கியுள்ளது.

மளிகைக் கடைக்காரர் தூக்கிட்டுத் தற்கொலை

Posted: 13 Mar 2014 11:32 AM PDT

காஜியாபாதில் மளிகைக் கடைக்காரர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

மனைவியுடன் தகராறு ரயில் முன் விழுந்து காவலர் தற்கொலை

Posted: 13 Mar 2014 11:32 AM PDT

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஓடும் ரயில் முன்  விழுந்து தில்லி காவல் துறையைச் சேர்ந்த காவல

ரூ. 30,000 கோடி முதலீட்டில் புதிய சுத்திகரிப்பு ஆலை: ஐ.ஓ.சி. திட்டம்

Posted: 13 Mar 2014 11:31 AM PDT

குஜராத் மாநிலம் முந்த்ராவில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐ.ஓ.சி.) அமைக்க திட்டமிட்டுவருகிறது.

ஃபரீதாபாத் அருகே துப்பாக்கி முனையில் கார், பணம் கொள்ளை

Posted: 13 Mar 2014 11:31 AM PDT

தலைநகர் வலயம், ஃபரீதாபாதில் காரில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தவரை வழி மறித்து கார், பணம்

மெட்ரோ ரயில் முன் குதித்து மருந்து வியாபாரி தற்கொலை

Posted: 13 Mar 2014 11:30 AM PDT

ஓடும் மெட்ரோ ரயில் முன்பாக குதித்து மருந்து வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.

சட்டவிரோதமாக மதுபானம் வைத்திருந்ததாக பெண் கைது

Posted: 13 Mar 2014 11:30 AM PDT

மேற்கு தில்லி, ரன்ஹோலா பகுதியில் சட்ட விரோதமாக மதுபானம் வைத்திருந்ததாக 32 வயது பெண்ணை போலீஸார்

கடை ஊழியரிடம் ரூ. 80,000 வழிப்பறி

Posted: 13 Mar 2014 11:29 AM PDT

கிழக்கு தில்லி, சக்கர்பூர் பகுதியில் கடை ஊழியரிடம் ரொக்கம் ரூ. 80 ஆயிரத்தை மோட்டார் சைக்கிளில் வந்த இரு பறித்துச் சென்றனர்.

மணிப்பூர் பெண்கள் இருவரை பின்தொடர்ந்து பாலியல் தொந்தரவு

Posted: 13 Mar 2014 11:29 AM PDT

தில்லியில் வசிக்கும் மணிப்பூர் மாநில பெண்கள் இருவரைப்  பின்தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்ததாக

புது தில்லி

Posted: 13 Mar 2014 11:28 AM PDT

சென்னை ஐடிஎஃப் அரையிறுதியில் நெடுஞ்செழியன், சனம் சிங்

Posted: 13 Mar 2014 10:54 AM PDT

சென்னை ஐடிஎஃப் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு ஜீவன் நெடுஞ்செழியன், சனம் சிங், ஸ்ரீராம் பாலாஜி ஆகியோர் முன்னேறினர்.

தேசிய ஹாக்கி: தமிழகத்துக்கு முதல் வெற்றி

Posted: 13 Mar 2014 10:53 AM PDT

தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி லீக் சுற்றின் 3-வது ஆட்டத்தில் தமிழகம், இந்திய உணவுக் கழகம் அணியை வீழ்த்தியது.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: காலிறுதியில் பார்சிலோனா, பாரிஸ்

Posted: 13 Mar 2014 10:52 AM PDT

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு பார்சிலோனா மற்றும் பாரிஸ் செயின்ட் ஜெர்மெயின் அணிகள் முன்னேறின.

இண்டியன் வெல்ஸ்: வாவ்ரிங்காவுக்கு முதல் "அடி'

Posted: 13 Mar 2014 10:50 AM PDT

ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற வாவ்ரிங்கா, இண்டியன்ல் வெல்ஸ் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

ஸ்விஸ் கிராண்ட் ப்ரீ பாட்மிண்டன் சாய்னா, காஷ்யப் வெற்றி

Posted: 13 Mar 2014 10:48 AM PDT

ஸ்விஸ் கிராண்ட் ப்ரீ பாட்மிண்டன் போட்டியின் 3-வது சுற்றில் இந்தியாவின் காஷ்யப் வெற்றி பெற்றார். மகளிர் பிரிவில் சாய்னா வெற்றியுடன் தொடரைத் தொடங்கினார். ஆனால், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆனந்த் பவார் தோல்வியடைந்தார்.

கேண்டிடேட்ஸ் செஸ்: வெற்றியுடன் தொடங்கினார் ஆனந்த்

Posted: 13 Mar 2014 10:47 AM PDT

ரஷியாவின் கான்ட்டி மாஸிஸ்க் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், ஆர்மேனியாவின் லேவன் ஆரோனியனை வீழ்த்தினார்.

தோனி, முதல் அரைசதம் அடிப்பது எப்போது?

Posted: 13 Mar 2014 10:46 AM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி கடைசி கட்டத்தில் அதிரடியாக ரன் குவித்து அணியை வெற்றி பெறச் செய்வதில் வல்லவர். சிறந்த மேட்ச் வின்னரான இவர் சர்வதேச ஒருநாள் மற்றும் இருபது ஓவர் ஆட்டங்களில் தனி ஆளாகப் போராடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்

Posted: 13 Mar 2014 10:35 AM PDT

திருவண்ணாமலையில் பௌர்ணமியையொட்டி கிரிவலம் வர உகந்த நேரம் எது என்பதை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

காரைக்காலில் விரைவில் நவீன ரேடார் கருவி: எஸ். ஆர். ரமணன் பேச்சு

Posted: 13 Mar 2014 10:31 AM PDT

காரைக்காலில் வானிலை ஆய்வுக்காக விரைவில் நவீன ரேடார் கருவி அமைக்கப்படவுள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புயல் எச்சரிக்கை மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் தெரிவித்தார்.

ஆம் ஆத்மியில் சேருகிறார் எழுத்தாளர் ஞானி சங்கரன்

Posted: 13 Mar 2014 09:18 AM PDT

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஞானி சங்கரன், நாளை ஆம் ஆத்மி கட்சியில் சேரவுள்ளதாகக் கூறியுள்ளார்.

ஆதார் தலைமைப் பொறுப்பில் இருந்து நந்தன் நிலேகனி ராஜினாமா

Posted: 13 Mar 2014 09:14 AM PDT

ஆதார் - தனிநபர் அடையாள அட்டைக்கான ஆணையத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து நந்தன் நிலேகனி இன்று முறைப்படி ராஜினாமா செய்தார். வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதால், அவர் முக்கிய அரசுப் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.

மவனே.. யாராவது இங்க வந்தீங்க..? இதான்!

Posted: 13 Mar 2014 08:48 AM PDT

மவனே.. யாராவது இங்க வந்தீங்க..? இதான்!

பாஜக.,வின் 3வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Posted: 13 Mar 2014 08:42 AM PDT

பாஜக., மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 3வது வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டது.

இந்த நாளில் அன்று: (14.3.1944) டில்லியில் நடப்பது இந்திய சர்க்கார்தான்! உலகமெங்கும் பிரிட்டன் செய்யும் பித்தலாட்டப் பிரசாரம்

Posted: 13 Mar 2014 08:35 AM PDT

இந்த நாளில் அன்று: (14.3.1944) டில்லியில் நடப்பது இந்திய சர்க்கார்தான்! உலகமெங்கும் பிரிட்டன் செய்யும் பித்தலாட்டப் பிரசாரம்

மீரட்டில் போட்டியிடுகிறார் நடிகை நக்மா

Posted: 13 Mar 2014 08:29 AM PDT

வியாழக்கிழமை இன்று காங்கிரஸ் கட்சியின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 71 பேர் அடங்கிய இந்தப் பட்டியலில் நடிகை நக்மாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவர், உத்திரப் பிரதேசத்தின் மீரட் தொகுதியில் போட்டியிடுகிறார்.

நாராயணசாமி வீட்டிற்கு அருகே பைப்வெடிகுண்டு: கோட்டூர்புரத்தைச் சேர்ந்த 2 பேர் கைது

Posted: 13 Mar 2014 08:27 AM PDT

நாராயணசாமி வீட்டின் அருகே பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  புதுச்சேரியில் கடந்த ஜனவரி 29 ஆம் தேதி நாராயணசாமி வீடு அருகே

பழனியில் வாகன தணிக்கையின் போது ரூ.32 இலட்சம் மதிப்புள்ள நகைகள், ரூ.1.60 இலட்சம் ரொக்கம் பிடிபட்டது

Posted: 13 Mar 2014 08:12 AM PDT

பழனியில் தேர்தல் நன்னடத்தை விதிகளின் படி வாகன தணிக்கையின் போது இருவேறு சோதனைகளின் போது ரூ.32 இலட்சம் மதிப்புள்ள நகைகளும், ரூ.1.60 இலட்சம் ரொக்கமும்

16 வயது பெண்ணை ஆசை வார்தை கூறி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞர்-உடந்தையாக இருந்த தாய் கைது

Posted: 13 Mar 2014 07:42 AM PDT

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள நீலாகவுண்டன்பட்டியைச் சேர்ந்த முருகன் மகன் முத்துவீரன் (22).இவர் பழனியில் உள்ள கல்லூரியில் எம்.காம் படித்து வருகிறார்.இந்த

புதுச்சேரி எம்.பி. தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டி: மாநிலக் குழுக் கூட்டத்தில் முடிவு

Posted: 13 Mar 2014 07:28 AM PDT

புதுச்சேரி எம்.பி. தொகுதியில் வேட்பாளரை நிறுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பணம், ஜாதி, மதத்திற்காக விலை போகாமல் வாக்களிக்க, ஊழல் எதிர்ப்பு இயக்கம் வேண்டுகோள்

Posted: 13 Mar 2014 07:08 AM PDT

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பணத்திற்காகவும், ஜாதிக்காகவும், மதத்திற்காகவும் விலை போகாமல் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என வாக்காளர்களுக்கு புவனகிரி ஊழல்

காங்கிரஸ் 2வது வேட்பாளர் வெளியீடு: 71 பேரில் 35% இளைஞர்கள்

Posted: 13 Mar 2014 07:02 AM PDT

காங்கிரஸ் கட்சி தனது இரண்டாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.  71 பேர் அடங்கிய  இந்த வேட்பாளர் பட்டியலில் 35 % பேர் இளைஞர்கள். மேலும், பெண்கள் 11 பேருக்கு வாய்ப்பளித்துள்ளது.

தண்டவாளம் மராமத்துப்பணி: சனி, ஞாயிறு ரயில்சேவைகள் 3 மாதம் தற்காலிக ரத்து

Posted: 13 Mar 2014 06:55 AM PDT

மதுரை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட தண்டவாளம் மற்றும் பாலங்கள் மராமத்துப்பணி நடைபெற்று வருகின்றது.

நாளை பாஜக கூட்டணி தொகுதிப் பங்கீடு பட்டியல் வெளியீடு: இல.கணேசன்

Posted: 13 Mar 2014 06:51 AM PDT

சென்னையில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்,  பாஜக கூட்டணி தொகுதிப் பங்கீடு நாளை காலை வெளியாகும் என்றார். தற்போது இறுதி செய்யப்பட்டுள்ள பட்டியலை எடுத்துக் கொண்டு தில்லிக்கு விரைந்துள்ளார். 

வணிகர்களிடம் பணம் பறிமுதல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு: சேலம், நாமக்கல்லில் நாளை கடையடைப்பு போராட்டம்

Posted: 13 Mar 2014 06:46 AM PDT

வணிகர்கள், வியாபாரிகளிடம் பணத்தை பறிமுதல் செய்யும் தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கையைக் கண்டித்து, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நாளை (சனிக்கிழமை) கடையடைப்பு போராட்டம்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™