Daily Thanthi |
- அரசியல் அதிகாரத்தை பெண்கள் கைப்பற்ற வேண்டும் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பேச்சு
- கலந்து கொண்ட மாடல் அழகிகள்
- ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் பெங்களூரில் பிரசாரம் 15, 16–ந் தேதிகளில் ஆதரவு திரட்டுகிறார்
- தொகுதி கண்ணோட்டம் : அரக்கோணம்
- மலேசிய விமான விபத்தில் 239 பேர் பலி போலி பாஸ்போர்ட்டில் 4 பேர் பயணம் செய்தது அம்பலம் தீவிரவாதிகள் நாசவேலையா? விசாரணையில் புதிய தகவல்கள்
- மாநில அரசுகள் முதலீட்டில் அக்கறை செலுத்த வேண்டும் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பேச்சு
- பாராளுமன்ற தேர்தலில் ‘‘நூற்றுக்கும் குறைவான இடங்களே காங்கிரசுக்கு கிடைக்கும்’’ அத்வானி கணிப்பு
- இன்டியன்வெல்ஸ் டென்னிஸ் 2–வது சுற்றில் நடால், ஷரபோவா வெற்றி
- சந்தோஷ்கோப்பை கால்பந்து முதல்முறையாக மிசோரம் அணி ‘சாம்பியன்’ ரெயில்வேயை வீழ்த்தியது
- இந்திய விளையாட்டு சம்மேளனங்களின் செயல்பாடுகள் வெளிப்படையாக இல்லாவிட்டால் ராஜினாமா செய்வேன் ஒலிம்பிக் சங்க தலைவர் சொல்கிறார்
| அரசியல் அதிகாரத்தை பெண்கள் கைப்பற்ற வேண்டும் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பேச்சு Posted: 09 Mar 2014 03:23 PM PDT காரைக்குடி, சமுதாய மாற்றத்தக்காண பெண்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்று மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறினார். மகளிர் மாநாடு சிவகங்கை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் மகளிர் மாநாடு காரைக்குடியில் நடை பெற்றது. மாநாட்டிற்கு சிவ கங்கை மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் ராணி ஆரோன் தலைமை தாங்கி னார். புதுக்கோட்டை மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி சித்ராகண்ணு வர வேற் றார். முன்னாள் எம்.எல்.ஏ.சுந்தரம் முன்னிலை வகித்தார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம், முன் னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.ஆர். ராமசாமி, ராம.அருணகிரி, அறந்தை சபுஹர் நிஷா ஆகியோர் வாழ்த்துரை யாற்றினர். மாநாட்டில் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பேசியதா வது:– இந்தியாவில் ஒரு இயக்கம் தொடர்ந்து 67 ஆண்டுகளா கவும், அதற்கு முன்பாகவும் இயக்கம் வளர்ந்தாலும், தேய்ந் தாலும், அதிகாரத்தில் இருந் தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் மனதில் அழிக்க முடி யாத இடத்தில் இருப்பது இந்திய தேசிய காங்கிரஸ் மட் டுமே. காங்கிரஸ் இயக்கத்தை மக்கள் நினைக்கும் போது, ஏழைப்பங்காளன் என்றே நினைக்க வேண்டும். அந்த நம் பிக்கை நிறைந்திருக்கும் வகை யில் காங்கிரசார் செயல்பட வேண்டும். சாதிமத வேறுபாடு களுக்கு அப்பாற்பட்டு அனைத்துதரப்பு மக்களையும் சார்ந்திருக்க வேண்டும். பெண்களுக்கான திட்டங்கள் 2005–2006 பட்ஜெட்டில் முதன் முதலாக பெண்களின் முன்னேற்றத்திற்காக தனி வரவு–செலவு திட்டத்தினை சமர்பித்தேன். அதன்படி நடப்பாண்டில் 100 சதவீதமும், பெண்களுக்காகவே ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை ரூ.27 ஆயிரத்து 248 கோடி யாகும். பிற திட்டங்களில் 30 சதவிகித ஒதுக்கீட்டின்படி ரூ.69ஆயி ரத்து 889கோடி செலவு செய் யப்படுகிறது. வருகிற ஆண்டில் 1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. பெண் களின் மகப்பேறு மருத்துவ வசதி, பெண்களுக்கான இந் திரா குழும வீடுகள், பெண் களுக் காக காசநோய், புற்று நோய் தடுப்பு வசதிகள், கல்வி உதவி உள்ளாட்சிகளுக்கான சிறப்பு ஒதுக்கீடு என பெண் களின் உயர்வுக்காக காங்கிரஸ் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது.உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களு க்கான பிரதிநிதித் துவத்தை பெற்றுத்தந்தது ராஜீவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசுதான். நாடா ளுமன்ற, சட்டமன்றத்திலும் 33 சதவீத பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் அரசால் மட்டுமே சட்டமாக்க முடியும். ஆணாதிக்க மனோ பாவம் கொண்ட அரசியல் கட்சிகள் இதனை எதிர்க்கின் றன. இந்தியாவில் மிகப்பெரிய ஆணாதிக்கஅமைப்பு ஆர்.எஸ்.எஸ். தான் அதன் பல முகங்களில் ஒன்றான அரசியல் முகம்தான் பாரதீய ஜனதா கட்சி. ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் ஒரு பெண் கூட இல்லை. இவர்கள் எப்படி பெண் களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பார்கள்?. பெண் கள் உணர்ந்து கொள்ள வேண்டும். சுயதொழில் பெண்கள் சுயசார்புடன் பொருளாதார மேம்பாடு அடைய இந்திராகாந்தி மக ளிர் சுயஉதவிக்குழுவினை ஆரம் பித்தார். தற்போது மகளிர் சுயஉதவிகுழுவினர் ரூ.41 லட்சத்து 16 ஆயிரம் கோடி கடன் பெற்று சுய தொழில் புரிந்து முன்னேற்ற மடைந்து வருகின்றனர். பெண்கள், பெண் குழந்தை களை கொண்டாட வேண்டும். அவர்களை துணிவோடும், தன்னம்பிக்கையோடும் வளர்க்க வேண்டும். பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பயிற்றுவிக்க வேண் டும். சேமிப்பினை வளர்த்து கொள்ள வேண்டும் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த அரசி யல் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும். ஆண்கள் மட்டுமே ஆக்கிரமித்துள்ள இடங்களில் பெண்கள் தங்களது உரிமை களை நிலைநாட்ட வேண் டும். இவ்வாறு அவர் கூறினார். மாநாட்டில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜசேகரன், சுப்புராமன், ஐ.என்.டி.யு.சி. மாநில பொதுச்செயலாளர் கே.கே.களஞ்சியம், மகளிர் காங்கிரஸ் மாவட்ட அமைப் பாளர் வித்யா கணபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். category: |
| Posted: 09 Mar 2014 01:15 PM PDT |
| ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் பெங்களூரில் பிரசாரம் 15, 16–ந் தேதிகளில் ஆதரவு திரட்டுகிறார் Posted: 09 Mar 2014 12:54 PM PDT பெங்களூர், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் வருகிற 15, 16–ந் தேதிகளில் பெங்களூரில் பிரசாரம் செய்கிறார். கெஜ்ரிவால் வருகை பாராளுமன்ற தேர்தலையொட்டி ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார். கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கெஜ்ரிவால் வருகிற 15–ந்தேதி மற்றும் 16–ந்தேதி ஆகிய 2 நாட்கள் கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். வருகிற 15–ந் தேதி பெங்களூரில் கெஜ்ரிவால் வீதி, வீதியாக ஓட்டு சேகரிக்கிறார். அதன் பின்னர் 16–ந் தேதி பெங்களூரில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார். இதுகுறித்து கர்நாடக மாநில ஆம் ஆத்மி கட்சி ஊடக ஒருங்கிணைப்பாளர் ரோகித் ரஞ்சன் கூறியதாவது:– நிதி திரட்டுகிறார் பாராளுமன்ற தேர்தலையொட்டி பிரசாரம் செய்வதற்காக கெஜ்ரிவால் பெங்களூர் வருகிறார். பெங்களூரில் வருகிற 15–ந் தேதி உணவு விருந்து நடக்கிறது. அதில் கெஜ்ரிவால் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சிக்கு நிதி திரட்டுகிறார். இந்த நிகழ்ச்சியை இன்போசிஸ் நிறுவன முன்னாள் அதிகாரி பாலகிருஷ்ணன் ஏற்பாடு செய்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் அனைத்து வகையான நிறுவனங்களின் உரிமையாளர்கள், உயர் அதிகாரிகள், திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டு நிதி அளிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஒவ்வொருவரும் எவ்வளவு நன்கொடை வழங்குவார்கள் என்று இப்போதே சொல்ல முடியாது. பெங்களூர் மத்திய தொகுதியில் பாலகிருஷ்ணனை வேட்பாளராக நிறுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு ரோகித் ரஞ்சன் கூறினார். image: category:News Group Category: |
| Posted: 09 Mar 2014 12:47 PM PDT அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் அரக்கோணம்(தனி), ராணிப்பேட்டை, சோளிங்கர், ஆற்காடு, பள்ளிப்பட்டு, செய்யாறு ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் இடம் பெற்று இருந்தன. 2008–ல் தொகுதி மறுசீரமைப்புக்குப்பின் பள்ளிப்பட்டு, செய்யாறு ஆகிய இரு தொகுதிகள் மாற்றப்பட்டு, காட்பாடி, திருத்தணி ஆகிய 2 தொகுதிகள் சேர்க்கப்பட்டு, அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியாக அறிவிக்கப்பட்டது. தொகுதி மறு சீரமைப்புக்கு பின்பு 2–வது தடவையாக அரக்கோணம் தொகுதி பாராளுமன்ற தேர்தலை சந்திக்கிறது. இது பொதுத்தொகுதியாகும். 6 தொகுதி எம்.எல்.ஏ.க்கள் 2009–ம் ஆண்டு அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் வெற்றி பெற்றார். அப்போது அவருக்கு 4 லட்சத்து 15 ஆயிரத்து 41 ஓட்டுகள் கிடைத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் ஆர்.வேலுவுக்கு 3 லட்சத்து 5 ஆயிரத்து 245 வாக்குகள் கிடைத்தன. சங்கர் (தே.மு.தி.க) 82 ஆயிரத்து 38 ஓட்டுகள் பெற்றார். அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் அடங்கிய 6 சட்டசபை தொகுதிகளும் தற்போது எந்தெந்த கட்சிகள் வசம் உள்ளன? அவற்றின் எம்.எல்.ஏ.க்கள் யார்? என்ற விவரம் வருமாறு:– அரக்கோணம்– சு.ரவி(அ.தி.மு.க.) ராணிப்பேட்டை–முகம்மது ஜான் (அ.தி.மு.க.) சோளிங்கர்– மனோகரன் (தே.மு.தி.க.) ஆற்காடு – வி.கே.ஆர்.சீனிவாசன் (அ.தி.மு.க.) திருத்தணி – அருண் சுப்பிரமணியம் (தே.மு.தி.க.) காட்பாடி– துரைமுருகன் (தி.மு.க.) 2014–ம் ஆண்டு ஜனவரி மாதம் 18–ந்தேதி வெளியிட்ட திருத்த வாக்காளர் பட்டியலின்படி அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 13 லட்சத்து 66 ஆயிரத்து 875. இவர்களில் ஆண்கள் 6 லட்சத்து 75 ஆயிரத்து 175 பேர். பெண்கள் 6 லட்சத்து 91 ஆயிரத்து 661 பேர். திருநங்கைகள் 39 பேர். தொகுதியில் கடந்த தேர்தலை விட தற்போது 2 லட்சத்து, 73 ஆயிரத்து 830 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். வன்னியர், முதலியார் மற்றும் தலித் மக்கள் அதிகமாக வசிக்கிறார்கள். முஸ்லிம்களும் கணிசமாக வசிக்கின்றனர். விவசாயம், நெசவு மற்றும் தோல் தொழில் பெருமளவில் நடந்து வருகிறது. கூட்டணி கட்சிகளின் பலம் அடிப்படையில்தான் இத்தொகுதியில் கட்சிகளின் வேட்பாளர்கள் பெரிதும் வெற்றி பெற்றுள்ளனர். சாதி, மத அடிப்படையில் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படுவதில்லை. இதுவரை நடந்த தேர்தல் முடிவுகள் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி 1977–ல் உருவாவதற்கு முன் 1957, 1962 தேர்தல்களில் திருவள்ளூர் தொகுதியாகவும், 1967, 1971 தேர்தல்களில் திருத்தணி தொகுதியாகவும் இருந்தது. இதுவரை நடந்த தேர்தல் முடிவுகள் விவரம் வருமாறு:– திருவள்ளூர் 1957 (காங். வெற்றி) மொத்த ஓட்டுகள் –4,05,032 கோவிந்தராசுலுநாயுடு (காங்) –1,20,363 ராகவரெட்டி (சுயே) –65,083 1962 (காங். வெற்றி) மொத்த ஓட்டுகள் –4,84,018 கோவிந்தசாமிநாயுடு (காங்) –1,57,343 கோபால் (தி.மு.க.) –1,43,908 திருத்தணி 1967 (தி.மு.க. வெற்றி) மொத்த ஓட்டுகள் –5,38,613 எஸ்.கே.சம்பந்தன் (தி.மு.க.) –2,25,229 கிருஷ்ணசாமி (காங்) –1,49,680 1971 (இ.காங். வெற்றி) மொத்த ஓட்டுகள்–5,65,715 ஓ.வி.அழகேசன் (இ.காங்)–2,41,418 பா.ராமச்சந்திரன் (ப.காங்)–1,57,313 1977– அரக்கோணம் (இ.காங். வெற்றி) மொத்த ஓட்டுகள்–6,67,308 ஓ.வி.அழகேசன் (இ.காங்)–2,43,818 ஆற்காடு வீராசாமி (தி.மு.க.)–1,85,954 1980 (இ.காங். வெற்றி) மொத்த ஓட்டுகள்–7,01,433 ஏ.எம்.வேலு (இ.காங்)–2,78,516 ரகுநாதன் (அ.தி.மு.க.)–1,61,155 1984 (இ.காங். வெற்றி) மொத்த ஓட்டுகள்–7,57,665 ஜீவரத்தினம் (இ.காங்)–2,92,606 புலவர்.கோவிந்தன் (தி.மு.க.)–2,31,664 1989 (இ.காங். வெற்றி) மொத்த ஓட்டுகள் –9,75,636 ஜீவரத்தினம் (இ.காங்) –2,99,587 மூர்த்தி (தி.மு.க.) –2,37,194 சுப்பிரமணியம் (பா.ம.க.) –1,47,902 1991 (இ.காங். வெற்றி) மொத்த ஓட்டுகள் –9,68,764
கன்னையன் (தி.மு.க.) –1,71,806 சுப்பிரமணியம் (பா.ம.க.) –98,809 ராகவன் (பா.ஜ) –12,954 1996 (த.மா.கா. வெற்றி) மொத்த ஓட்டுகள் –10,34,640 ஏ.எம்.வேலு (த.மா.கா) –4,25,974 ரவிராம் (இ.காங்) –1,61,129 வேணுகோபால் (வாழப்பாடி. காங்) –80,714 ஜெயகரன்ஜோசப் (ஜனதாதளம்) –31,703 மனோகரன் (பா.ஜ) –6,596 1998 (அ.தி.மு.க. வெற்றி) மொத்த ஓட்டுகள் –10,72,687 கோபால் (அ.தி.மு.க.) –3,59,431 வேலு (த.மா.கா) –3.09,943 தாமோதரன்(இ.காங்) –24,519 1999 எம்.ஜி.ஆர். கழகம் (தி.மு.க. கூட்டணி வெற்றி) மொத்த ஓட்டுகள் –11,20,043 ஜெகத்ரட்சகன் (எம்.ஜி.ஆர்.கழகம்) –3,46,520 தங்கபாலு (இ.காங்) –2,50,876 ஏ.எம்.வேலு (த.மா.கா) –1,21,386 2004 (பா.ம.க. வெற்றி) மொத்த ஓட்டுகள் –11,60,259 ஆர்.வேலு (பா.ம.க.) –3,86,911 என்.சண்முகம் (அ.தி.மு.க.) –2,84,715 2009(தி.மு.க. வெற்றி) மொத்த ஓட்டுகள் 10,93,045 ஜெகத்ரட்சகன்(தி.மு.க) 4,15,041 ஆர்.வேலு(பா.ம.க.) 3,05,245 சங்கர்(தே.மு.தி.க) 82,038 செய்தது என்ன? கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்ற எஸ்.ஜெகத்ரட்சகன் மத்திய தகவல் ஒலிபரப்பு இணைமந்திரியாக 3 ஆண்டுகள் பதவி வகித்தார். அரக்கோணம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 4 வார்டுகளில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கவும், 4 வார்டுகளில் ரேஷன்கடைகள் அமைக்கவும் தனது தொகுதி நிதியில் இருந்து நிதி வழங்கி உள்ளார். அதேபோல் அரக்கோணத்தில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கும், தொகுதி நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாய் செலவழித்து உள்ளார். தக்கோலம் பேரூராட்சி பகுதியில் மேல்நிலை குடிநீர்தேக்க தொட்டி அமைத்துள்ளார். image: category:Tagging: |
| Posted: 09 Mar 2014 12:46 PM PDT கோலாலம்பூர், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி சென்ற மலேசிய விமானம் விபத்துக்குள்ளானது. கடலில் விழுந்தது அந்த விமானம், 8-ந்தேதி அதிகாலை தெற்கு சீனக்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது, திடீரென மாயமானது. அது விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. தெற்கு சீனக்கடலுக்கு மேலே சுமார் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, வியட்நாம் அருகே 'பு குவாக்' தீவிற்கு 153 மைல் தெற்கே கடலில் விழுந்து மூழ்கியது. இதை ராணுவ ரேடார் பதிவு செய்து இருப்பதாக வியட்நாம் கடற்படை அதிகாரி அட்மிரல் நாகோ வான் பட் தெரிவித்தார். இந்தியர்கள் உள்பட 239 பேர் பலி இதன் காரணமாக அந்த விமானத்தில் பயணம் செய்த சென்னை பெண் சந்திரிகா சர்மா, இந்திய வம்சாவளியை சேர்ந்த கனடா பிரஜை முக்தேஷ் முகர்ஜி (இவர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உறவினர்), மேலும் 4 இந்தியர்கள் உள்பட 239 பேரும் பலியாகி விட்டனர் என நம்பப்படுகிறது. விமானத்தையும், அதில் பயணம் செய்தவர்களையும் தேடும் பணியில் வியட்நாம் கப்பல்கள் முழு வீச்சுடன் ஈடுபட்டுள்ளன. அத்துடன் மலேசியா மற்றும் அதன் அண்டை நாடுகளின் 22 விமானங்கள், 40 கப்பல்களும் இந்தப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சீனாவும், அமெரிக்காவும் கூட மீட்பு பணிகளுக்காக கப்பல்களை அனுப்பி உள்ளன. தேடுதல் வேட்டை பரப்பளவும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் மேற்கு கடலோரப்பகுதி மட்டுமின்றி, விட்நாம் பகுதிகளிலும் இந்த பணி நடந்து வருகிறது. ஆனாலும் இதுவரை பலன் எதுவும் கிடைக்கவில்லை. திடுக்கிடும் தகவல்கள் இருப்பினும் வியட்நாமுக்கு தெற்கே கடல் பரப்பில் இரண்டு எண்ணெய் படலங்களை வியட்நாம் விமானப்படை விமானங்கள் கண்டுபிடித்துள்ளன. அவை மாயமான விமானத்தில் இருந்து வந்திருக்கக்கூடும் என்று யூகிக்கப்படுகிறது. இதற்கிடையே ரேடார் திரையில் இருந்து மறைவதற்கு முன்பாக காணாமல் போன விமானம், பீஜிங் செல்வதற்கான திட்டமிட்ட பாதையிலிருந்து விலகி, மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திரும்பியதற்கான சுவடுகள் ரேடாரில் பதிவாகி இருப்பதாவும் இப்போது தெரியவந்துள்ளது. இதுகுறித்தும் விசாரணை நடக்கிறது. தீவிரவாதிகள் சதியா? இந்த நிலையில் மலேசிய விமானம் விபத்துக்குள்ளானதில் நாசவேலை நடந்திருக்கவும் வாய்ப்பு இருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மலேசிய விமானத்தில் பயணம் செய்த பயணிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள 4 பேர் தீவிரவாதிகளாக இருந்திருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த தகவலை மலேசிய ராணுவ மந்திரியும், போக்குவரத்துதுறை (பொறுப்பு) மந்திரியுமான சாமுதீன் உசேன் தெரிவித்தார். விமான பயணிகள் பட்டியலில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரியாவை சேர்ந்த கிறிஸ்டியன் கோசல், இத்தாலியர் லுய்கி மரால்டி ஆகிய இருவரும் விமானத்தில் பயணம் செய்யவில்லை என்பதை அந்த நாடுகளின் வெளியுறவுத்துறை அலுவலகங்கள் உறுதி செய்துள்ளன. தாய்லாந்தில் வைத்து அவர்களது பாஸ்போர்ட்டுகள் திருடப்பட்டுள்ளன. அவர்கள் இருவரும் விமானத்தில் பயணம் செய்யவில்லை என்கிற போது, அவர்களது பாஸ்போர்ட்டில் பயணம் செய்த 2 பேர் யார், யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர்கள் இருவருக்கும் டிக்கெட் ஒன்றாக வாங்கப்பட்டுள்ளது என்ற தகவல் அவர்கள் மீதான சந்தேகப்பார்வையை வலுவடைய செய்துள்ளது. தீவிரவாதிகள் என்ற சந்தேகத்துக்கு உள்ளான மற்ற இருவர் பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. அவர்களும் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ரகசிய காட்சிபதிவுகள் இருப்பினும் தொடர்புடைய நாடுகளின் தீவிரவாத தடுப்பு போலீஸ் படைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாக மலேசிய மந்திரி சாமுதீன் உசேன் கூறினார். மேலும் விமானத்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளின் பின்னணியும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மாயமாகி விபத்துக்குள்ளான விமானம் புறப்பட்டு சென்ற நேரத்தில், கோலாலம்பூர் விமான நிலையத்தில் ரகசிய கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளும் ஆராயப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்கள் பீஜிங் விமான நிலையத்தில் உறுதியான தகவல்களுக்காக பரிதவிப்புடன் காத்திருக்கின்றனர். பல்வேறு இடங்களில் பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகின்றன. News Category:Hot Topic Icon : News Group Category: |
| மாநில அரசுகள் முதலீட்டில் அக்கறை செலுத்த வேண்டும் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பேச்சு Posted: 09 Mar 2014 12:27 PM PDT கன்னியாகுமரி மாநில அரசுகள் முதலீட்டில் அக்கறை செலுத்த வேண்டும் என்று மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறினார். காமராஜர் சிலை திறப்பு கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் சுக்குப்பாறைத்தேரிவிளையில் அமைக்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜரின் முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு, காமராஜர் சிலையை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– பெருந்தலைவர் காமராஜரை நினைக்கும் போது, ஒரு சகாப்தத்தை, ஒரு யுகத்தை நினைத்து பார்க்கிறோம். காமராஜர் என்ற பெயர் ஒரு தலைமுறையை கடந்து நம்மோடு வாழ்வது தான் அதன் சிறப்பு. இன்னும் நூறு ஆண்டுகள் அவர் சிலைகள் அமைக்கப்படும், புகழ் பாடப்படும். காமராஜர் தமிழகத்தில் முதல்–அமைச்சராக இருந்தார். அதன்பிறகு பலரும் இருந்தனர், இருந்து வருகிறார்கள். யாரோடும் ஒப்பிட முடியாத அளவுக்கு உயர்ந்த தலைவர் காமராஜர் கடந்த 15–9–2008 முதல் உலக பொருளாதாரத்தில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டது. வளர்ச்சி ஜெர்மன் நாட்டை தவிர மற்ற நாடுகளில் 2½ சதவீதம் வளர்ச்சி சரிந்தது. சராசரி 7½ சதவீத வளர்ச்சி அடைந்த இந்தியாவின் சரிவை 5 சதவீதமாக தடுத்து நிறுத்தி இருக்கிறோம். நம் வளர்ச்சி சரிந்த போது தான் ரூபாய் மதிப்பு சரிந்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் டாலர் மதிப்பு ரூ.68 ஆக இருந்தது. அந்த சரிவை ரூ.61 ஆக உயர்த்தி இருக்கிறோம். வளர்கின்ற நாடுகள் வரிசையில் இந்திய பொருளாதாரம் இருக்கிறது. இந்தியா 5 சதவீத வளர்ச்சி அடைகிறது என்றால் மாநிலங்களை தவிர்த்து அல்ல. மாநிலங்களை தவிர்த்து நிலம் என்பது இந்திய அரசுக்கு கிடையாது. தமிழ்நாடு இந்தியாவின் வளர்ச்சி என்பது தமிழ்நாட்டின் வளர்ச்சி, ஆந்திரா, கேரளா, மராட்டியம், டெல்லி ஆகியவற்றின் சராசரி வளர்ச்சி தான். மாநிலங்களின் வளர்ச்சி வேறு, இந்தியாவின் வளர்ச்சி வேறு என்று பிரித்து பார்க்க முடியாது. இந்தியா என்பது அனைத்து மாநிலங்களையும் கொண்டது. அப்படி பார்க்கும் போது இந்தியாவின் வளர்ச்சி குறைந்து விட்டது என்று குரல் கொடுக்கிறார்கள். மாநிலங்களின் வளர்ச்சி எந்த அளவு இருக்கிறது? தமிழ்நாட்டின் வளர்ச்சி என்ன? தமிழ்நாட்டில் 5 சதவீதத்துக்கும் குறைவாக வளர்ச்சியை காட்டி விட்டு, இந்தியாவை பார்த்து நீங்கள் 5 சதவீத வளர்ச்சி என்று குறை சொன்னால் எப்படி? நீங்கள் 5 சதவீதத்துக்கு மேல் வளர்ச்சி அடைந்தால் தானே இந்தியா 5 சதவீதத்துக்கு மேல் வளரும். உங்கள் சராசரி 5–க்கு கீழே இருந்தால் இந்தியாவின் சராசரி எப்படி உயரும். அதற்கு என்ன காரணம் என்று பார்க்க வேண்டும். முதலீடு பல மாநிலங்களிலே வளர்ச்சி குறைந்ததற்கு காரணம் முதலீடு குறைந்தது தான். முதலீடு என்பது ஒரு பொருளாதார குறியீடு. மானியம் என்பது ஒரு பொருளாதார குறியீடு. இலவசம் என்பது ஒரு பொருளாதார குறியீடு. 3–க்கும் உள்ள வேறுபாட்டை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் நெய்வேலியில், தூத்துக்குடியில் செய்தது முதலீடு. திருச்சியில் பெல் தொழிற்சாலை அமைத்தது முதலீடு. அணைகளை கட்டி கோடிக்கணக்கான ரூபாய்களை முடக்கியது முதலீடு. நெடுஞ்சாலை போட்டால் முதலீடு. முதலீட்டின் பயன் உடனடியாக தெரியாது. ஒரு தலைமுறை காத்திருக்க வேண்டும். காமராஜரின் காலம் முதலீட்டு காலமாக அறிவிக்கலாம். அதன்பிறகு ஒரு காலம் மானியங்கள் தர வேண்டிய காலம். நான் மானியங்களுக்கு எதிர்ப்பு அல்ல, மத்திய அரசே மானியங்களை தருகிறது. மக்களுக்கு தேவை என்றால் மானியம் தரத்தான் வேண்டும். முதலீட்டை மறந்து விட்டு மானியத்தை தர முடியாது. எந்த நாடு முதலீடு செய்கிறதோ, அந்த நாட்டில் தான் வேலைவாய்ப்பு உருவாகும். அக்கறை செலுத்த வேண்டும் வேலை வாய்ப்பை உருவாக்காமல் கல்வியை வளர்ப்பதில் என்ன பயன். வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். முதலீட்டில் மாநில அரசுகள் அக்கறை செலுத்த வேண்டும். முதலீட்டில் அரசியல் கட்சிகள் அக்கறை செலுத்த வேண்டும். முதலீட்டின் பெருமையை, அதன் முக்கியத்துவத்தை அறிந்து அரசியல் கட்சிகளை வெற்றி பெற செய்ய வேண்டும். காமராஜர் ஆட்சி காலத்தில் தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ்ந்தது. அந்த நிலையில் இருந்து தாழ்ந்து இருக்கிறோம். அரசின் வருவாயில் பெரும் பகுதி முதலீடுக்கு போக வேண்டும். இவ்வாறு மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறினார். image: category:Tagging:News Group Category: |
| பாராளுமன்ற தேர்தலில் ‘‘நூற்றுக்கும் குறைவான இடங்களே காங்கிரசுக்கு கிடைக்கும்’’ அத்வானி கணிப்பு Posted: 09 Mar 2014 12:24 PM PDT ராஞ்சி, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் முன்பு கவர்னராக இருந்த, மறைந்த கைலாஷ்பதி மிஸ்ராவின் நினைவுநாள் நிகழ்ச்சி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி, இந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு நூற்றுக்கும் குறைவான இடங்களே கிடைக்கும் என்றும், கடுமையாக பாடுபட்டாலும் பாரதீய ஜனதாவுக்கு 182–க்கும் அதிகமான இடங்கள் கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறினார். பல்வேறு ஊழல்கள் மூலம் காங்கிரஸ் தனக்குத்தானே குழி தோண்டிக் கொண்டதாகவும், அந்த கட்சியை ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு பாரதீய ஜனதாவை ஆட்சியில் அமர்த்த மக்கள் தீர்மானித்து விட்டதாகவும் அப்போது அவர் தெரிவித்தார். image: category:Tagging:News Group Category: |
| இன்டியன்வெல்ஸ் டென்னிஸ் 2–வது சுற்றில் நடால், ஷரபோவா வெற்றி Posted: 09 Mar 2014 11:58 AM PDT இன்டியன்வெல்ஸ், இன்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், ரஷிய வீராங்கனை ஷரபோவா ஆகியோர் 2–வது சுற்று ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். இன்டியன்வெல்ஸ் டென்னிஸ் அமெரிக்காவில் உள்ள இன்டியன்வெல்ஸ் நகரில் பி.என்.பி.பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் முதல் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 2–6, 6–4, 7–5 என்ற செட் கணக்கில் செக்குடியரசு வீரர் ராடக் ஸ்டீபனாக்கை வீழ்த்தி 3–வது சுற்றுக்கு முன்னேறினார். முர்ரேவுக்கு 300–வது வெற்றி மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே 4–6, 6–3, 6–2 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் லூகாஸ் ரசூலை தோற்கடித்தார். கடின தரை ஆட்டத்தில் ஆன்டிமுர்ரே பெற்ற 300–வது வெற்றி இதுவாகும். ஆஸ்திரேலிய வீரர் லெய்டன் ஹெவிட் 6–7, 4–6 என்ற நேர்செட்டில் தென் ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சனிடம் தோல்வி கண்டு வெளியேறினார். மற்ற ஆட்டங்களில் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), ரேஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), டாமி ஹாஸ் (ஜெர்மனி), ரானிச் (கனடா) ஆகியோர் வெற்றி கண்டனர். லீ நா வெற்றி பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் மரியா ஷரபோவா (ரஷியா) 6–1, 6–4 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜஸ்சை எளிதில் தோற்கடித்து 3–வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் லீ நா (சீனா) 6–1, 7–5 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீராங்கனை ஜி ஷெங்கை சாய்த்தார். மற்ற ஆட்டங்களில் கிவிடோடா (செக் குடியரசு), அனா இவாவோவிச் (செர்பியா), சிபுல்கோவா (சுலோவக்கியா), சமந்தா ஸ்டோசுர் (ஆஸ்திரேலியா) ஆகியோர் வெற்றி பெற்று 3–வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். கால் இறுதியில் சானியா ஜோடி பெண்கள் இரட்டையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டத்தில் சானியா மிர்சா (இந்தியா)–காரா பிளாக் (ஜிம்பாப்வே) ஜோடி அமெரிக்காவின் ராகெல் கோப்ஸ்–அபிகைல் ஸ்பியர்ஸ் ஜோடியை எதிர்கொண்டது. 72 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சானியா மிர்சா–காரா பிளாக் ஜோடி 6–3, 6–4 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியது. image: category: |
| சந்தோஷ்கோப்பை கால்பந்து முதல்முறையாக மிசோரம் அணி ‘சாம்பியன்’ ரெயில்வேயை வீழ்த்தியது Posted: 09 Mar 2014 11:56 AM PDT சிலிகுரி, சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் மிசோரம் அணி 3–0 என்ற கோல் கணக்கில் இந்தியன் ரெயில்வேயை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இறுதிப்போட்டி சந்தோஷ் கோப்பைக்கான 68–வது தேசிய சீனியர் கால்பந்து போட்டி மேற்குவங்காள மாநிலம் சிலிகுரியில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் 1961, 1964, 1966–ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியன் ரெயில்வே அணி, முதல்முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்தியன் ரெயில்வே அணியை எதிர்கொண்டது. தாக்குதல் ஆட்டம் தனது மின்னல் வேக ஆட்டத்தின் மூலம் எல்லா ஆட்டங்களிலும் வெற்றியுடன் இறுதிசுற்றுக்குள் நுழைந்த மிசோரம் அணி, தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தது. 43–வது நிமிடத்தில் ரெயில்வே வீரர் ராஜேஷ் தலையால் முட்டிய பந்து கோல் கம்பத்தில் அருகில் வெளியே சென்று ஏமாற்றம் அளித்தது. இதைத்தொடர்ந்து அசுர வேகத்தில் பந்தை கடத்தி சென்ற மிசோரம் அணி 44–வது நிமிடத்தில் முதல் கோல் போட்டது. அந்த அணி வீரர் சிகோ சோரென்சங்கா இந்த கோலை அடித்தார். இதன் மூலம் மிசோரம் அணி முதல் பாதியில் 1–0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. மிசோரம் அணி 'சாம்பியன்' பின் பாதி ஆட்டத்திலும் மிசோரம் அணி அதிரடி தாக்குதல் ஆட்டத்தை தொடங்கியது. இதன் பலனாக சிகோ சோரென்சங்கா 61–வது நிமிடத்தில் மீண்டும் கோல் அடித்து வலுவான முன்னிலையை ஏற்படுத்தினார். கடைசி நிமிடத்தில் மிசோரம் அணி 3–வது கோல் போட்டது. இதனை லால்ரின்புலா கோல் அடித்தார். முடிவில் மிசோரம் அணி 3–0 என்ற கோல் கணக்கில் இந்தியன் ரெயில்வேயை வீழ்த்தி முதல் முறையாக சந்தோஷ் கோப்பையை உச்சி முகர்ந்தது. சாம்பியன் பட்டம் வென்ற மிசோரம் அணிக்கு ரூ.5 லட்சமும், 2–வது இடம் பெற்ற ரெயில்வே அணிக்கு ரூ.3 லட்சமும் ரொக்கபரிசாக வழங்கப்பட்டன. அகில இந்திய கால்பந்து சம்மேளன சீனியர் துணைத்தலைவர் சுப்ரதா தத்தா பரிசுகளை வழங்கினார். image: category: |
| Posted: 09 Mar 2014 11:54 AM PDT சென்னை, இந்திய விளையாட்டு சம்மேளனங்களின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற இலக்கை எட்ட முடியாவிட்டால் பதவியை விட்டு விலக தயங்கமாட்டேன் என்று இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் என்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வாழ்நாள் சாதனையாளர் விருது இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் 12–வது தலைவராக தேர்வு செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த என்.ராமச்சந்திரனுக்கு, சென்னையில் நடந்த விழாவில் ரோட்டரி சங்கம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விழாவில் ஏற்புரை நிகழ்த்துகையில் என்.ராமச்சந்திரன் கூறியதாவது:– சர்வதேச விளையாட்டு அமைப்புகளின் செயல்பாடுகள் வெளிப்படையாகவும், நவீன வளர்ச்சிக்கு தகுந்த வகையிலும் இருந்து வருகிறது. அதனை தான் இந்திய ஒலிம்பிக் சங்கமும் பின்பற்றுகிறது. இந்தியாவில் உள்ள தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டு அமைப்புகளின் செயல்பாடுகள் வெளிப்படையாகவும், நியாயமாகவும் இருக்க வேண்டும் என்பதை அனைத்து சம்மேளனங்களும் புரிந்து கொள்ள வேண்டும். வீரர்கள் தான் கதாநாயகன் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் என்ற முறையில் விளையாட்டு அமைப்புகளின் செயல்பாடுகள் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோளாகும். அதனை செயல்படுத்துவதில் ஆர்வமாக இருக்கிறேன். அப்படி செய்யமுடியாவிட்டால் எனது பதவியை ராஜினாமா செய்யவும் தயங்கமாட்டேன். வீரர்கள் தான் முதுகெலும்பு விளையாட்டின் உண்மையான கதாநாயகர்கள். வீரர்களின் கடினமான உழைப்பு மற்றும் பயிற்சிகள் தான் விளையாட்டு சம்மேளனத்துக்கு அங்கீகாரம் பெற்று தருகிறது என்பதை விளையாட்டு அமைப்புகள் உணர வேண்டும். வெளிப்படையான தேர்வு சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளுக்கான வீரர்கள் தேர்வு வெளிப்படையானதாக இருக்க வேண்டும். இதில் சமரசத்துக்கு இடம் கொடுக்கக்கூடாது. விளையாட்டு வீரர்கள் நல்ல மாதிரியாக நடத்தப்படுகிறார்களா? அவர்களுக்கு பயிற்சிக்கான எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறதா? என்பதை தனிப்பட்ட முறையில் நான் கவனம் செலுத்துவேன். இவ்வாறு அவர் கூறினார். image: category:Tagging: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



ஜீவரத்தினம் (இ.காங்) –3,48,516
உறவினர்கள் பரிதவிப்பு