Daily Thanthi |
- குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் 20 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம்
- ஏப்ரல் மாதம் 7–ந் தேதி முதல் மே மாதம் 12–ந் தேதி வரை பாராளுமன்ற தேர்தல் 9 கட்டமாக நடைபெறும் தமிழகத்தில் ஏப்.24–ந் தேதி ஓட்டுப்பதிவு மனுதாக்கல் 29–ந் தேதி தொடங்குகிறது
- முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பரிதாப சாவு
- ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி ஆறுதல் வெற்றி
- 7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் பெரும்பாலான ஆட்டங்கள் இந்தியாவில் தான் நடைபெறும் இந்திய கிரிக்கெட் வாரியம் தகவல்
- புஜாராவை புறக்கணிப்பது ஏன்? –கவாஸ்கர் கேள்வி
- கேப்டவுன் கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா போராடி தோல்வி தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா
- தேசிய சீனியர் கூடைப்பந்து: 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக ஆண்கள் அணி ‘சாம்பியன்’
- 12 லட்சம் பேர் எழுதிய குரூப்–4 தேர்வு முடிவு வெளியீடு மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் தெரிந்து கொள்ளலாம்
- தி.மு.க. கூட்டணியில் இனி புதிய கட்சிகளுக்கு வாய்ப்பு இல்லை மு.க.ஸ்டாலின் பேட்டி
| குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் 20 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் Posted: 05 Mar 2014 12:37 PM PST நிலக¢கோட்டை, நிலக்கோட்டை பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த பகுதிகளில் தற்போது 20 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் தட்டுப்பாடு தமிழகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை அளவு மிகவும் குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக தேனி, திண்டுக¢கல் மாவட்டங்களிலும் பருவமழை போதிய அளவு பெய்யாததால், கடந்த 2 ஆண்டுகளில் தொடர்ந்து வறட்சியான நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் தற்போதே குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வைகை அணையில் தேக்கி வைக¢கப்படும் தண்ணீரை வைத்து பொது மக¢களுக¢கு தேவையான குடிநீருக¢காக திறக்கப்படுவது வழக்கம் ஆகும். ஆனால் இந்த ஆண்டு அதிகளவு தண்ணீரை மதுரை மாவட்ட விவசாயிகள் கோரிக¢கையை ஏற்று, பாசனத்திற்காக திறந்து விடப்பட்டது. இதன்காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 32.97 அடியாக குறைந்து இருக¢கிறது. 20 நாட்களுக்கு ஒரு முறை.. இந்த நிலையில், மழை இதுவரையில் பொய்த்து போனதால் வைகை ஆற்றுப்படுகைகள் வறண்டு காணப்படுகிறது. இதன் காரணமாக நிலக¢கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் இருந்த நீரும் அடியோடு குறைந்து கொண்டே வருகிறது. இந்த பகுதிகளில் மக¢கள் குடிநீருக¢காக தற்போதே அக¢கம்பக¢கத்தில் உள்ள வயல்களில் கிடைக¢கும் நீரை தேடி அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய, பேருராட்சி உள்ளிட்ட நிர்வாகங்கள் மூலம் அமைக¢கப்பட்ட ஆழ்குழாய்களும் நீர்இன்றி வற்றிபோனது. வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாடானது, நிலக¢கோட்டை பகுதியில் தற்போதே தொடங்கி உள்ளது. இதனால் முன் எச்சரிக¢கை நடவடிக¢கையாக மாவட்ட நிர்வாகம் செயற்கைக¢கோள் வரைபடத்தின் உதவியுடன் முக¢கியத்துவம் கொடுத்து ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய, பேரூராட்சி பகுதிகளில் புதிய ஆழ்குழாய் அமைக¢கப்பட்டு வருகிறது. இருப்பினும் தற்போது நிலக்கோட்டை பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு எதிரொலியாக 20 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதே நிலையில் மழை இல்லை என்றால் அடுத்த 2 மாதங்களும் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்படும். image: category: |
| Posted: 05 Mar 2014 12:15 PM PST புதுடெல்லி, 16-வது பாராளுமன்ற தேர்தல் தேதி நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 9 கட்ட தேர்தல் தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத், நேற்று டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் அட்டவணையை வெளியிட்டார். மற்ற இரு தேர்தல் கமிஷனர்களான எச்.எஸ்.பிரம்மா, எஸ்.என்.ஏ.ஜைதி ஆகியோர் அப்போது உடன் இருந்தனர். அதன்படி, இந்தியா முழுவதிலும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 7-ந்தேதி தொடங்கி, மே மாதம் 12-ந்தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் இந்த தேர்தல்தான் மிக அதிகமாக 9 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 24-ந்தேதி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 24-ந்தேதி (வியாழக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஆலந்தூர் சட்டசபை இடைத்தேர்தலும் அன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள 81.4 கோடி வாக்காளர்கள் பங்கேற்கும் 9 கட்ட தேர்தல் முடிந்ததும், மே மாதம் 16-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும். ஆந்திரா (தெலுங்கானா பிராந்தியம் உள்ளிட்ட), ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநில சட்டசபைகளுக்கும் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடத்தப்படும் என்று, தலைமை தேர்தல் கமிஷனர் சம்பத் அறிவித்தார். முதல் நாள் தேர்தல் முதல் கட்ட தேர்தல் நாளான ஏப்ரல் 7-ந்தேதி அன்று 2 மாநிலங்களை சேர்ந்த 6 பாராளுமன்ற தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறும். ஏப்ரல் 9-ந்தேதி நடைபெறும் 2-ம் கட்ட தேர்தலில் 5 மாநிலங்களை சேர்ந்த 7 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெறும். 3-வது நாளான ஏப்ரல் 10-ந்தேதி 14 மாநிலங்களில் உள்ள 92 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் 12-ந்தேதி நடைபெறும் 4-வது நாள் தேர்தலில் 3 மாநிலங்களில் உள்ள 5 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெறும். ஒரே நாளில் 122 தொகுதிகள் 5-ம் கட்ட தேர்தல் நாளான ஏப்ரல் 17-ந்தேதி அன்றுதான் மிக அதிகபட்சமாக 13 மாநிலங்களை சேர்ந்த 122 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. 6-வது நாளில், 12 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளுக்கு ஏப்ரல் 24-ந்தேதி தேர்தல் நடைபெறும். ஏப்ரல் 30-ந்தேதி நடைபெறும் 7-ம் நாள் தேர்தலில் 9 மாநிலங்களில் இடம்பெற்றுள்ள 89 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. 8-வது நாளான மே 7-ந்தேதி அன்று 7 மாநிலங்களை சேர்ந்த 64 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இறுதியாக மே 12-ந்தேதி நடைபெறும் 9-வது நாள் தேர்தலில் 3 மாநிலங்களில் இடம்பெற்றுள்ள 41 தொகுதிகளுக்கு ஒட்டுப்பதிவு நடைபெற இருக்கிறது. உ.பி.யில் 6 கட்ட தேர்தல் நாட்டிலேயே அதிக அளவில் 80 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் 6 கட்டங்களாக ஏப்ரல் 10, 17, 24, 30, மே 7 மற்றும் மே 12 ஆகிய தேதிகளில் தேர்தல் நடக்கிறது. இதே போல் பீகார் மாநிலத்திலும் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 42 தொகுதிகளை கொண்ட ஆந்திரா மாநிலத்தில் ஏப்ரல் 30 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. ஆந்திரா சட்டசபை தேர்தல் ஆந்திராவில், அந்தந்த பாராளுமன்ற தொகுதிகளில் அடங்கி உள்ள சட்டமன்ற தொகுதிகளிலும் அதே நாளில் ஒட்டுப்பதிவு நடைபெறும். ஏப்ரல் 30-ந்தேதி அன்று தெலுங்கானா பிராந்தியத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 119 சட்டசபை தொகுதிகளுக்கும், மே 7-ந்தேதி அன்று சீமாந்திரா பிராந்தியத்தில் உள்ள 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும். ஆந்திரா பிரிக்கப்பட்டு, புதிய மாநிலமாக தெலுங்கானா உருவாகி இருந்தாலும் ஏற்கனவே இருந்துவரும் நிலையிலேயே பாராளுமன்ற-சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று, தலைமை தேர்தல் கமிஷனர் சம்பத் அறிவித்தார். பேட்டியின்போது அவர் மேலும் கூறியதாவது:- தேர்தல் நடத்தை விதிமுறைகள் "9 கட்டமாக தேர்தல் நடைபெற்றாலும், தேர்தல் நடைமுறைப்பணிகள் அனைத்தும் 72 நாட்களில் நடைபெற்று முடிந்துவிடும். இது கடந்த பாராளுமன்ற தேர்தல் நாட்களை விட 3 நாட்கள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், அரசு மற்றும் அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. இந்திய ஜனநாயக வரலாற்றில் மற்றொரு முக்கிய மைல் கல்லாக அமையும் இந்த தேர்தலில், உயர்ந்த ஜனநாயக மாண்புகளை கடைபிடிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்". இவ்வாறு சம்பத் கூறினார். தமிழ்நாட்டில் மார்ச் 29-ல் வேட்பு மனு தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 24-ந்தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இந்த மாதம் (மார்ச்) 29-ந்தேதி தொடங்குகிறது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள், ஏப்ரல் 5-ந்தேதி. வேட்பு மனுக்கள் பரிசீலனை ஏப்ரல் 7-ந்தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள், ஏப்ரல் 9-ந்தேதி ஆகும். ஏப்ரல் 24-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். மே 16-ந்தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். News Category:Hot Topic Icon : News Group Category: |
| முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பரிதாப சாவு Posted: 05 Mar 2014 11:51 AM PST ஜீயபுரம், திருச்சி அருகே முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார். தண்ணீரில் மூழ்கி பலி திருச்சியை அடுத்த முக்கொம்பு காவிரி ஆற்றில் நேற்று காலை பொதுப்பணித்துறை பாசன அதிகாரிகள் ஆய்வுக்காக சென்றனர். அப்போது ஒரு வாலிபர் தண்ணீரில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி ஜீயபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் மற்றும் போலீசார் முக்கொம்புக்கு விரைந்து வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர் திருச்சி பாலக்கரை மல்லிகைபுரத்தை சேர்ந்த ஜெபாஸ்டின் மகன் யூஜின் (வயது 28) என்பதும் தொழிற்பயிற்சி முடித்துள்ள அவர் வேலை தேடி வந்ததும் தெரியவந்தது. போலீசார் விசாரணை நேற்று முன்தினம் முக் கொம்பு வந்த யூஜின் காவிரி ஆற்றில் குளிப்பதற்கு ஆசைப்பட்டு காவிரி மதகு 34-வது அணைக்கட்டு பகுதியில் இறங்கி குளித்த போது தண்ணீர் சுழலில் சிக்கி இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இது பற்றி யூஜினின் குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். image: category: |
| ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி ஆறுதல் வெற்றி Posted: 05 Mar 2014 11:49 AM PST மிர்புர், ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் குட்டி அணியான ஆப்கானிஸ்தானை நொறுக்கி இந்திய அணி ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது. ஆசிய கிரிக்கெட் இந்தியா, இலங்கை, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகள் இடையிலான 12–வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேச மண்ணில் நடந்து வருகிறது. இதில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் தலா 3 வெற்றியுடன் இறுதிசுற்றை உறுதி செய்து விட்டன. 5 முறை சாம்பியனான இந்திய அணி தொடர்ந்து 2–வது தடவையாக லீக் சுற்றுடன் வெளியேறி இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணி சம்பிரதாய மோதலாக தனது கடைசி லீக்கில் ஆப்கானிஸ்தானை மிர்புரில் நேற்று எதிர்கொண்டது. ஆனால் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. புஜாரா மறுபடியும் புறக்கணிக்கப்பட்டார். சுழலில் சிக்கிய ஆப்கானிஸ்தான் டாஸ் வென்ற இந்திய தற்காலிக கேப்டன் விராட் கோலி ஆப்கானிஸ்தானை பேட் செய்ய அழைத்தார். இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள், இந்திய வேகப்பந்து வீச்சை திறம்பட சமாளித்தனர். முதல் 11 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேகரித்தனர். இதையடுத்து 12–வது ஓவரில் சுழற்பந்து வீச்சை விராட் கோலி அறிமுகம் செய்தார். இதில் இருந்து ஆப்கானிஸ்தான் வீரர்கள் சுழலில் சிக்கி மீள முடியாமல் தத்தளித்தனர். ரவீந்திர ஜடேஜா தனது முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை காலி செய்தார். இது, சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான வேகம் குறைந்த(ஸ்லோ) ஆடுகளம் என்பதால், அனுபவம் இல்லாத ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் திண்டாடி போயினர். 12–வது ஓவரில் இருந்து 36–வது ஓவர் வரை அமித் மிஸ்ரா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் விடாமல் தாக்குதல் நடத்தினர். இந்த இடைப்பட்ட ஓவர்களில் 7 விக்கெட்டுகளை சாய்த்து, எதிரணியை முடக்கினர். 159 ரன்னில் ஆல்–அவுட் இந்த ஊசலாட்டத்துக்கு மத்தியில் சமியுல்லா ஷென்வாரி மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினார். இந்த தொடரில் 2–வது அரைசதம் அடித்த ஷென்வாரி 50 ரன்களில் (73 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) கடைசி விக்கெட்டாக, முகமது ஷமியின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். முடிவில் ஆப்கானிஸ்தான் 45.2 ஓவர்களில் 159 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் மூன்று வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்கை தொட்டனர். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும், அமித் மிஸ்ரா ஒரு விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் ஷமி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இந்த ஆட்டத்தில் எடுத்த 2 விக்கெட்டுகளையும் சேர்த்து முகமது ஷமியின் ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 50 ஆக (29–வது ஒரு நாள் போட்டி) உயர்ந்தது. இந்தியா வெற்றி அடுத்து ஆடிய இந்திய அணியில் ஷிகர் தவானுடன், ரோகித் ஷர்மாவுக்கு பதிலாக ரஹானே தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினார். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் திரட்டி வெற்றி வாய்ப்பை சுலபமாக்கினார்கள். ரஹானே 56 ரன்னிலும் (66 பந்து, 5 பவுண்டரி), தவான் 60 ரன்னிலும் (78 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்தனர். இதைத் தொடர்ந்து ரோகித் ஷர்மா–தினேஷ் கார்த்திக் ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. இந்திய அணி 32.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 160 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போனஸ் புள்ளியை வசப்படுத்திய போதிலும் இந்தியாவுக்கு இது ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 4 லீக் ஆட்டத்தில் விளையாடிய இந்திய அணி 2 வெற்றி (வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் எதிராக), 2 தோல்வியுடன் (இலங்கை, பாகிஸ்தானுக்கு எதிராக) ஆசிய கோப்பையையை ஏமாற்றத்துடன் முடித்துள்ளது. இந்திய அணி அடுத்து 20 ஓவர் உலக கோப்பையில் பங்கேற்க இருக்கிறது. ஸ்கோர் போர்டு ஆப்கானிஸ்தான் நூர் அலி ஜட்ரன் (சி) கோலி (பி) ஜடேஜா 31 நவ்ரோஸ் மங்கல் (பி) ஷமி 5 ரமத் ஷா எல்.பி.டபிள்யூ (பி) ஜடேஜா 9 ஆஷர் ஸ்டானிக்ஜாய் (சி) மிஸ்ரா (பி) ஜடேஜா 5 நஜ்புல்லா ஜட்ரன் (சி) சப் (பின்னி) (பி) அஸ்வின் 5 முகமது நபி (சி) கார்த்திக் (பி) ஜடேஜா 6 முகமது ஷேசாத் எல்.பி.டபிள்யூ (பி) அஸ்வின் 22 ஷென்வாரி எல்.பி.டபிள்யூ (பி) ஷமி 50 மிர்வாய்ஸ் அஷ்ரப்(சி) கோலி (பி) மிஸ்ரா 9 ஷாபூர் ஜட்ரன் எல்.பி.டபிள்யூ (பி) அஸ்வின் 1 தவ்லத் ஜட்ரன் (நாட்–அவுட்) 2 எக்ஸ்டிரா 14 மொத்தம் (45.2 ஓவர்களில் ஆல்–அவுட்) 159 விக்கெட் வீழ்ச்சி: 1–30, 2–54, 3–55, 4–60, 5–64, 6–83, 7–95, 8–111, 9–137 பந்து வீச்சு விவரம் புவனேஸ்வர்குமார் 8–1–25–0 முகமது ஷமி 7.2–0–50–2 அமித் மிஸ்ரா 10–1–21–1 ரவீந்திர ஜடேஜா 10–1–30–4 அஸ்வின் 10–3–31–3 இந்தியா ரஹானே எல்.பி.டபிள்யூ (பி) அஷ்ரப் 56 தவான் (பி) முகமது நபி 60 ரோகித் ஷர்மா (நாட்–அவுட்) 18 தினேஷ்கார்த்திக்(நாட்–அவுட்) 21 எக்ஸ்டிரா 5 மொத்தம் (32.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு) 160 விக்கெட் வீழ்ச்சி: 1–121, 2–123 பந்து வீச்சு விவரம் முகமது நபி 10–0–30–1 ஷாபூர் ஜட்ரன் 6–0–25–0 தவ்லத் ஜட்ரன் 5–0–25–0 ஷென்வாரி 4.2–0–32–0 மிர்வாய்ஸ் அஷ்ரப் 5–0–26–1 ரமத் ஷா 2–0–21–0 இன்றைய ஆட்டத்தில் இலங்கை–வங்காளதேசம் மோதல் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் மிர்புரில் இன்று நடக்கும் கடைசி லீக்கில் தோல்வியே சந்திக்காத இலங்கையும், வெற்றியே பெறாத வங்காளதேசமும் மோதுகின்றன. இந்த ஆட்டத்தின் முடிவால் எந்த பிரயோஜனமும் இல்லை. பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த மோதலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. image: category: |
| Posted: 05 Mar 2014 11:46 AM PST புதுடெல்லி, 7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பெரும்பாலான ஆட்டங்கள் இந்தியாவில் தான் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 7–வது ஐ.பி.எல். கிரிக்கெட் பாராளுமன்ற தேர்தலும், 7–வது ஐ.பி.எல். போட்டி அட்டவணையும் ஒரே நேரத்தில் வருவதால் ஐ.பி.எல். போட்டிக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து விட்டது. பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படாததால், ஐ.பி.எல். போட்டியை முழுமையாக வெளிநாட்டில் நடத்துவதா? அல்லது முதல் கட்ட ஆட்டத்தை மட்டும் வெளிநாட்டில் நடத்தி விட்டு இறுதி கட்ட போட்டிகளை இந்தியாவில் நடத்தலாமா? என்று முடிவு எடுக்க முடியாமல் இந்திய கிரிக்கெட் வாரியம் காலம் தாழ்த்தி வந்தது. இந்தியாவில் அதிக ஆட்டங்கள் இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் தேதி (ஏப்ரல் 7 முதல் மே 16) நேற்று வெளியான நிலையில், போட்டியை எங்கு நடத்துவது என்பது குறித்து முடிவு செய்ய ஐ.பி.எல். நிர்வாக கவுன்சில் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன், சீனியர் துணைத்தலைவர் ராஜீவ்சுக்லா, செயலாளர் சஞ்சய் பட்டேல், ஐ.பி.எல்.சேர்மன் ரஞ்சிப் பிஸ்வால், தலைமை செயல் அதிகாரி சுந்தர்ராமன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பின்னர் ஐ.பி.எல். சேர்மன் ரஞ்சிப் பிஸ்வால் நிருபர்களிடம் பேசுகையில், 'பாராளுமன்ற தேர்தல் தேதி தெளிவாகி விட்டதால், ஐ.பி.எல்.போட்டியில் நிறைய ஆட்டங்களை இந்தியாவில் நடத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்தியாவில் அதிகமான ஆட்டங்களை நடத்த வேண்டியது அவசியமானதாகும். எஞ்சிய போட்டியை எந்த வெளிநாட்டில் நடத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. போட்டி நடைபெறும் இடத்தை முடிவு செய்ய இன்னும் ஒருசில நாட்கள் ஆகும்' என்று தெரிவித்தார். தென் ஆப்பிரிக்காவுக்கு கல்தா? ஓட்டு எண்ணிக்கை (மே 16) முடிந்த பிறகு ஐ.பி.எல். போட்டி ஆட்டங்கள் இந்தியாவில் நடைபெறும் என்றும் முழுமையாக தங்கள் நாட்டில் நடத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்து இருப்பதால் தென் ஆப்பிரிக்காவில் போட்டி நடைபெற வாய்ப்பு இல்லை என்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது வங்காளதேசத்தில் முதல் கட்ட ஆட்டங்கள் நடைபெற வாய்ப்பு இருக்கிறது என்றும் இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. category: |
| புஜாராவை புறக்கணிப்பது ஏன்? –கவாஸ்கர் கேள்வி Posted: 05 Mar 2014 11:43 AM PST ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெற்றிருந்த பேட்ஸ்மேன் புஜாராவுக்கு களம் இறங்க ஒரு ஆட்டத்தில் கூட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் 58.92 சராசரியை கொண்டுள்ள புஜாரா, உள்ளூர் போட்டியிலும் ரன்கள் குவித்து வருகிறார். ஆனாலும் ஒரு நாள் போட்டி அணியில் இடம் பிடிக்க போராட வேண்டி உள்ளது. இதே போல் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் ஈஸ்வர் பாண்டே சமீபத்தில் முடிந்த நியூசிலாந்து தொடர் மற்றும் ஆசிய கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டார். அவரும் தொடர்ந்து வெளியில் உட்கார வைக்கப்பட்டுள்ளார். இந்திய அணி ஒரு பக்கம் சொதப்பி வந்தாலும் பழைய வீரர்களுக்கே திருப்பி திருப்பி வாய்ப்பு அளிக்கப்படுவது ஏன் என்பது குறித்து இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் சந்தேகம் எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:– ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி ஆட்டத்திற்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாதது ஏன் என்பது உண்மையிலேயே எனக்கு புரியவில்லை. குழப்பமாகத்தான் இருக்கிறது. சில வீரர்கள் தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள். 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக அவர்களுக்கு கொஞ்சம் ஓய்வு தேவை. ஆனால் அதை செய்யவில்லை. மாற்று வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படாது என்றால், பிறகு எப்போது தான் அவர்கள் விளையாட முடியும்? புஜாரா அதிக ரன்கள் குவித்து விட்டால், சரியாக ஆடாவிட்டாலும் அணியில் நீடிக்கும் உங்களுக்கு பிடித்தமான வீரர்கள், அவருக்கு வழிவிட வேண்டி இருக்கும் என்று நீங்கள் (அணி நிர்வாகம் மற்றும் கேப்டன்) கவலைப்படுகிறீர்களா? இதே போல் ஈஸ்வர் பாண்டே விக்கெட்டுகளை சாய்த்து விட்டால், உங்களுக்கு பிடித்தமான பவுலருக்கு மறுபடியும் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போகலாம் என்று நினைக்கிறீர்களா? என்ன தான் உங்களுக்கு பிரச்சினை? இவர்கள் சிறப்பாக விளையாடி விட்டால், தங்களுக்கு வேண்டப்பட்ட வீரர்களின் இடத்திற்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்று பயப்படுகிறார்கள் என்றே என் மனது சொல்கிறது. இது போன்ற நடவடிக்கைகள் எப்படி விளையாடினாலும் அணியில் தொடர்ந்து இருப்போம் என்ற மெத்தனபோக்கு வீரர்களிடம் வந்து விடும். இவ்வாறு கவாஸ்கர் கூறினார். image: category: |
| கேப்டவுன் கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா போராடி தோல்வி தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா Posted: 05 Mar 2014 11:40 AM PST கேப்டவுன், கேப்டவுனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி போராடி தோல்வி அடைந்தது. கேப்டவுடன் டெஸ்ட் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் செஞ்சுரியனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 281 ரன்கள் வித்தியாசத்திலும், போர்ட் எலிசபெத்தில் அரங்கேறிய 2–வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 231 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதைத் தொடர்ந்து தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3–வது மற்றும் கடைசி டெஸ்ட்போட்டி கேப்டவுனில் கடந்த 1–ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 494 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 287 ரன்களும் எடுத்தன. 207 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுக்கு 303 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் தென்ஆப்பிரிக்காவுக்கு 511 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மெகா இலக்கை நோக்கி 2–வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா 4–வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 71 ரன்களுடன் பரிதவித்தது. டிவில்லியர்ஸ் (16 ரன்) அப்போட் (1 ரன்) களத்தில் இருந்தனர். இந்த நிலையில் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. டிரா செய்யும் நோக்குடன் தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் முழுக்க முழுக்க தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எப்படியாவது நேரத்தை கடத்தி விட வேண்டும் என்பதே இவர்களின் ஒரே குறி. ஆனால் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் அவர்களுக்கு கடும் நெருக்குதல் தந்து விக்கெட்டுகளை போராடி சாய்த்தனர். அப்போட் 7 ரன்னில் அவுட் ஆனாலும், அவர் 89 பந்துகள் சமாளித்து இருந்தார். 228 பந்துகளை எதிர்கொண்ட டிவில்லியர்ஸ் 43 ரன்களில், ரையான் ஹாரிசின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ஹேடினிடம் கேட்ச் ஆனார். 27 பந்தில் முடிவு அடுத்து வந்த பாப் டு பிளிஸ்சிஸ் 47 ரன்னிலும் (109 பந்து), டுமினி 43 ரன்னிலும் (99 பந்து) வெளியேறினர். இதன் பின்னர் கடைசி கட்ட வீரர்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்ற கடுமையாக முயற்சி மேற்கொண்டனர். ஆனால் முடியவில்லை. ஸ்டெயின் ஒரு ரன்னிலும் (44 பந்து), மோர்னே மோர்கல் ரன் ஏதுமின்றியும் (2 பந்து) ஹாரிசின் ஒரே ஓவரில் கிளீன் போல்டு ஆக, தென்ஆப்பிரிக்கா 134.3 ஓவர்களில் 265 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இன்னும் வெறும் 27 பந்துகள் தாக்குப்பிடித்திருந்தால் போட்டி டிராவில் முடிந்திருக்கும். பிலாண்டர் (51 ரன், 105 பந்து) அரைசதம் அடித்தும் பலன் இல்லை. ஆஸ்திரேலியா 245 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்து, தொடரை 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆஸ்திரேலிய தரப்பில் ரையான் ஹாரிஸ் 4 விக்கெட்டுகளும், மிட்செல் ஜான்சன் 3 விக்கெட்டுகளும், பேட்டின்சன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். கடந்த 44 ஆண்டுகளாக தென்ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்ததில்லை என்ற பெருமையை ஆஸ்திரேலியா தக்க வைத்துக் கொண்டது. இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை பெற்றார். சுமித்துக்கு ஏமாற்றம் தென்ஆப்பிரிக்க அணி கடந்த 5 ஆண்டுகளில் டெஸ்ட் தொடரை பறிகொடுப்பது இதுவே முதல் முறையாகும். இந்த ஏமாற்றத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தென்ஆப்பிரிக்க கேப்டன் சுமித் விடைபெற்றார். அடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 9–ந்தேதி நடக்கிறது. image: category: |
| தேசிய சீனியர் கூடைப்பந்து: 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக ஆண்கள் அணி ‘சாம்பியன்’ Posted: 05 Mar 2014 11:34 AM PST புதுடெல்லி, 64–வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் தமிழ்நாடு–பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதல் கால் பகுதி ஆட்டத்தில் 18–22 என்ற புள்ளி கணக்கில் பின்தங்கி இருந்த தமிழக அணி அதன் பிறகு சுதாரித்து விளையாடி ஆதிக்கம் செலுத்தியது. முடிவில் தமிழக அணி 74–57 என்ற புள்ளி கணக்கில் பஞ்சாப் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. தமிழக அணியில் ரிகின் பெதானி 22 புள்ளியும், பிரதாம்சிங் 18 புள்ளியும், பிரசன்னா 15 புள்ளியும் சேர்த்தனர். 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது. கடைசியாக கட்டாக்கில் 2004–ம் ஆண்டில் நடந்த போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டத்தை வென்று இருந்தது. சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணிக்கு ரூ.1½ லட்சமும், 2–வது இடம் பெற்ற பஞ்சாப் அணிக்கு ரூ.1 லட்சமும், 3–வது இடம் பெற்ற சர்வீசஸ் அணிக்கு ரூ.50 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டன. பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் சத்தீஷ்கர் அணி 81–77 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் இந்தியன் ரெயில்வே அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது. சிறந்த வீரர் விருதை ரிகின் பெதானியும் (தமிழ்நாடு), சிறந்த வீராங்கனை விருதை கவிதாகுமாரியும் (சத்தீஷ்கர்) பெற்றனர். image: category:Tagging: |
| Posted: 05 Mar 2014 11:29 AM PST சென்னை, 12 லட்சம் பேர் எழுதிய குரூப்–4 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொருவரும் தேர்வில் எடுத்த மதிப்பெண் விவரமும், மதிப்பெண் அடிப்படையில் அவர்களின் ரேங்க் விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. முதல் முதலாக இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:– 12 லட்சம் பேர் எழுதினார்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 2013–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25–ந்தேதி குரூப்–4 தேர்வை நடத்தியது. இந்த தேர்வு இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித்தண்டலர், நில அளவர் ஆகிய பதவிகளுக்கு 5,855 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வை 12 லட்சத்து 22 ஆயிரத்து 272 பேர் எழுதினார்கள். தேர்வின் விடைத்தாள் சரியாக மதிப்பீடு செய்யப்பட்டு பல முறை சரிபார்க்கப்பட்டு முடிவு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய (www.tnpsc.gov.in) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 300 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் 90 மதிப்பெண்ணுக்கு அதிகமாக 11 லட்சத்து 50 ஆயிரத்து 47 பேர் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் அவர்கள் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் பொது ரேங்க் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சாதி அடிப்படையிலும் ரேங்க் வெளியிடப்பட்டுள்ளது. ரேங்க் தெரிந்து கொள்ளலாம் இவர்களில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு வேலை கிடைக்கும். அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும் அவர்கள் சான்றிதழ் சரியாக வைத்திருக்கிறார்களா? என்று வருகிற 24–ந்தேதி முதல் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் சரிபார்க்கப்படும். சான்றிதழ் சரிபார்க்கப்படும் தேதி விவரம் இணைய தளத்தில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக தெரிவிக்கப்பட உள்ளது. அவர்களின் பதிவு எண் மற்றும் பிறந்தநாளை குறிப்பிட்டு எங்கள் இணையதளத்தில் பார்த்தால் முடிவு, அனைத்து விவரங்களும் தெரியும். சான்றிதழ் சரிபார்த்த மறுநாள் கலந்தாய்வு நடத்தப்படும். ரேங்க் அடிப்படையில் அவர்களுக்கு வேலை கிடைப்பது தெரிந்துவிடும். பணியில் சேர இன்னும் 3 மாதங்கள் ஆகலாம். விடைத்தாள்கள் சரியாக ஒளிவு மறைவின்றி மதிப்பீடு செய்யப்பட்டு 100 சதவீதம் சரியான வழியில் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. அனைவரின் விடைத்தாள்களும் ஸ்கேன் செய்யப்பட்டு தேர்வர்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு பார்க்கும் வகையில் வழி செய்யப்படும். இந்த வசதி எல்லோரும் பணியில் சேர்ந்த பின்னர் தான் செய்து தரப்படும். குரூப்–2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் குரூப் –1 தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்படும். அதற்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. குரூப்–2 தேர்வுக்கு இதுவரை 6 லட்சத்து 5 ஆயிரத்து 96 பேர் விண்ணப்பித்துள்ளனர். மே மாதம் 18–ந்தேதி திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும். இப்போது குரூப்–4 தேர்வு முடிவு வெளியிட்டது எந்த வகையிலும் தேர்தல் நடத்தைவிதிக்கு எதிரானது அல்ல. இந்த தேர்வின் தொடக்க பணி முன்பே தொடங்கிவிட்டது. இவ்வாறு ஏ.நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார். பேட்டியின் போது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செயலாளர் விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஷோபனா ஆகியோர் உடன் இருந்தனர். image: category:News Group Category: |
| தி.மு.க. கூட்டணியில் இனி புதிய கட்சிகளுக்கு வாய்ப்பு இல்லை மு.க.ஸ்டாலின் பேட்டி Posted: 05 Mar 2014 10:52 AM PST சென்னை, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் பின்வருமாறு:– கேள்வி:தி.மு.க தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடப்படும்? பதில்:தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் வெளியிடப்படும். கேள்வி:தி.மு.க. கூட்டணியில் மேலும் புதிய கட்சிகள் வர வாய்ப்பு உள்ளதா? பதில்:தற்போது உள்ள கூட்டணி கட்சிகளுடன் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. எனவே புதிய கட்சிகளுக்கு இடமில்லை. கேள்வி:தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் அதிருப்தி அடைந்து தொல்.திருமாவளவன் கோபமாக வெளியேறி சென்று இருக்கிறாரே? பதில்: அப்படியா! அதெல்லாம் எனக்கு தெரியாது. கேள்வி: தேர்தல் பிரசாரம் எப்போது தொடங்குவீர்கள்? பதில்: தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டவுடன், வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும். அதன் பிறகு பிரசாரம் தொடரும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் தெரிவித்தார்.
image: category:Tagging:News Group Category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |