Daily Thanthi |
- பிரசாரத்தின் போது சில்மிஷம் செய்ததால் ஆத்திரம் தொண்டரின் கன்னத்தில் ‘பளார்’ அறை விட்ட நடிகை நக்மா
- எட்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 59.89–ஆக உயர்ந்தது
- கட்டுமானப் பணிகளில் விறுவிறுப்பு கிராமங்களை இலக்காக கொண்டு செயல்படும் உருக்கு நிறுவனங்கள்
- தொடர்ந்து ஐந்தாவது தினமாக எழுச்சி சென்செக்ஸ் 126 புள்ளிகள் அதிகரிப்பு வங்கிகளின் பங்கு விலை அதிக ஏற்றம்
- பொதுத்தேர்தலுக்குப் பின், அன்னிய நேரடி முதலீடு அதிகரிக்க வாய்ப்பு
- முக்கிய கடன் வட்டி விகிதங்களை பாரத ரிசர்வ் வங்கி குறைக்குமா?
- நான்காவது காலாண்டில் அமெரிக்க பொருளாதாரம் 2.6% வளர்ச்சி
- அமெரிக்காவில் 81,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிய இந்திய நிறுவனங்கள்
- டிசம்பர் நிலவரப்படி இந்தியாவின் வெளிநாட்டு கடன் 42,600 கோடி டாலர்
- எதிர்வரும் 2014–15–ஆம் நிதி ஆண்டில் 1.50 கோடி டன் நிலக்கரி இறக்குமதி செய்ய என்.டி.பி.சி. நிறுவனம் திட்டம்
| பிரசாரத்தின் போது சில்மிஷம் செய்ததால் ஆத்திரம் தொண்டரின் கன்னத்தில் ‘பளார்’ அறை விட்ட நடிகை நக்மா Posted: 28 Mar 2014 02:05 PM PDT மீரட் பிரசாரத்தின் போது சில்மிஷம் செய்த தொண்டரின் கன்னத்தில், நடிகை நக்மா 'பளார்' என்று அறைந்தார். நக்மா பிரசாரம் நடிகை நக்மா உத்தரபிரதேச மாநிலம் மீரட் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து அவர் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அவருடன் ஏராளமான தொண்டர்கள் செல்கிறார்கள். அவர் செல்லும் இடங்களிலெல்லாம் கூட்டம் கூடுகிறது. சில நாட்களுக்கு முன் பிரசாரத்தின் போது காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் நக்மாவின் கன்னத்தில் முத்தமிட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், நக்மா அதை பெரிதுபடுத்தவில்லை. சில்மிஷம் இந்த நிலையில், அதேபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. மீரட் நகரில் நடிகை நக்மா வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அவருடன் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும் சென்றனர். நக்மாவை அருகில் சென்று பார்ப்பதற்காக பல இடங்களில் கூட்டத்தினர் முண்டியடித்தனர். அப்போது கூட்டத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தொண்டர் ஒருவர் நக்மாவிடம் சில்மிஷம் செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நக்மா, தொண்டரின் கன்னத்தில் பளார் என்று ஓங்கி அறைவிட்டார். இதனால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால், பிரசாரத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு நக்மா அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார். அதிர்ச்சி இந்த சம்பவத் தினால் நக்மா அதிர்ச்சியுடன் காணப்பட்டார். இதுபற்றி அவர் கூறுகையில், ''இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடந்தால் நான் மீரட் பக்கமே வரமாட்டேன்'' என்றார். இந்த சம்பவம் பற்றி மீரட் காங்கிரஸ் தலைவர் சலிம் பாரதி கூறுகையில், மீரட்டில் நக்மா போட்டியிடுவதால் தொண்டர்களிடையே எழுச்சி ஏற்பட்டு இருப்பதாகவும், அதிக அளவில் கூட்டம் கூடுவதால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது சகஜம்தான் என்றும் தெரிவித்தார். image: Tagging: |
| எட்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 59.89–ஆக உயர்ந்தது Posted: 28 Mar 2014 01:59 PM PDT மும்பை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வெள்ளிக்கிழமை அன்று 43 காசுகள் அதிகரித்து எட்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு 59.89–ஆக உயர்ந்தது. டாலர் வரத்து அதிகரித்துள்ளதே இதற்கு காரணமாகும். முயற்சிகளுக்கு வெற்றி நிதி பற்றாக்குறையையும், நடப்பு கணக்கு பற்றாக்குறையையும் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசும், பாரத ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்க தொடங்கியுள்ளது. இந்தியாவின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. கடந்த ஒரு மாத காலத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 6 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேசமயம், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் முறையே 1 சதவீதம் மற்றும் 12 சதவீதம் குறைந்துள்ளது. எனவே, வளர்ந்து வரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் மேற்கொள்ளும் முதலீட்டிற்கு அதிக ஆதாயம் கிடைக்கிறது. அன்னிய நிதி நிறுவனங்கள் மார்ச் மாதத்தில் இதுவரை இந்திய பங்குச் சந்தைகளில் 290 கோடி டாலர் முதலீடு செய்துள்ளன. நடப்பு ஆண்டில் இதுவரை மேற்கொண்ட நிகர முதலீடு 330 கோடி டாலராக அதிகரித்துள்ளது. நடப்பு கணக்கு பற்றாக்குறை கடன்பத்திரங்களிலும் இந்த நிறுவனங்களின் முதலீடு உயர்ந்துள்ளது. இதனால், டாலர் வரத்து அதிகரித்துள்ளது. சென்ற 2012–13–ஆம் நிதி ஆண்டில் அன்னியச் செலாவணி வெளியேற்றத்திற்கும், வரவுக்கும் இடையில் உள்ள வித்தியாசமான நடப்பு கணக்கு பற்றாக்குறை வரலாறு காணாத அளவிற்கு 8,820 கோடி டாலராக உயர்ந்தது. இதனையடுத்து, கடந்த 2013 ஆகஸ்டு மாதத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 68.85–ஆக வீழ்ச்சி அடைந்தது. இதனுடன் ஒப்பிடும்போது ரூபாய் மதிப்பு தற்போது 13 சதவீதம் அதிகரித்துள்ளது. டாலர் வரத்தை அதிகரிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி மேற்கொண்ட நடவடிக்கைகளும் இதற்கு முக்கிய காரணமாகும். நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 420 கோடி டாலராக குறைந்துள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.9 சதவீதம் ஆகும். சென்ற ஆண்டின் இதே காலாண்டில் இது 6.5 சதவீதமாக இருந்தது. இறக்குமதி செலவினம் மேற்கண்ட அம்சங்களால் ரூபாய் மதிப்பு உயர்ந்து வந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய், உரம், சமையல் எண்ணெய், பருப்பு போன்ற முக்கிய பொருள்களின் இறக்குமதி செலவினம் குறைந்து பணவீக்கம் மேலும் குறைய வாய்ப்புள்ளது. அதேசமயம், ஏற்றுமதியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் வருவாய் குறையும். ஏழு மாதங்கள் தொடர் வளர்ச்சிக்கு பின் பிப்ரவரியில் ஏற்றுமதி 3.67 சதவீதம் சரிவடைந்துள்ளது. image: category:Tagging: |
| கட்டுமானப் பணிகளில் விறுவிறுப்பு கிராமங்களை இலக்காக கொண்டு செயல்படும் உருக்கு நிறுவனங்கள் Posted: 28 Mar 2014 01:57 PM PDT மேகா மந்தவியா – ராக்கி மசூம்தார் மும்பை / கொல்கத்தா ஊரகப் பகுதிகளில் கட்டுமானப் பணிகளில் விறுவிறுப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து, உருக்கு நிறுவனங்கள் கிராமங்களை இலக்காகக் கொண்டு செயல்படத் தொடங்கியுள்ளன. நிலங்கள் விற்பனை டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் டீலர் ஒருவர் இது குறித்து கூறுகையில், ''கிராம மக்கள் தங்களது நிலத்தை தொழிற்சாலைகள் அமைக்க நிறுவனங்களுக்கு விற்பனை செய்துள்ளனர். வீடுகளை நன்றாக கட்டுவதற்கு அவர்களிடம் போதிய அளவு நிதி உள்ளது. கிராமங்கள் அதிவேக வளர்ச்சி அடைந்து வருகின்றன. வீட்டு கட்டுமானப் பணிகளில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார். மத்திய அரசின் ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் போன்ற திட்டங்களால் கிராமங்களில் தனிநபர் செலவிடும் வருவாய் உயர்ந்துள்ளது. புதிய ஷோரூம்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திடும் வகையில், மேற்கு வங்காளத்திலிருந்து மகாராஷ்டிரா வரை பல்வேறு மாநிலங்களில் உள்ள கிராமங்களில் உருக்கு தயாரிப்பு நிறுவனங்கள் ஷோரூம்களை தொடங்கி வருவதுடன் டீலர்களை அதிக அளவில் நியமித்து வருகின்றன. எடுத்துக்காட்டாக உருக்கு பொருள்கள் தயாரிப்பில் முன்னிலை வகித்து வரும் தனியார் நிறுவனமான டாட்டா ஸ்டீல் கிராமங்களில் அதிக டீலர்களை நியமித்துள்ளது. ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்யும் வகையில் கிராமங்களில் விற்பனை நிலையங்களை தொடங்க திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் 2014–15–ஆம் நிதி ஆண்டில் கிராமங்களில் விற்பனையை அதிகரிக்க எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஜே.எஸ்.பி.எல். நிறுவனம் கிராமங்களில் டீலர்கள் எண்ணிக்கையை மூன்று மடங்கு உயர்த்த திட்டமிட்டுள்ளது. தனிநபர் வருமானம் பொருளாதார மந்தநிலையால் கிராமங்களில் அதிக பாதிப்பு ஏற்படவில்லை. எனவே, தனிநபர் வருமானம் அதிகமாக உள்ள மாநிலங்களின் ஊரகப் பகுதிகளை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம் என்று ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் நிறுவனத்தின் இயக்குனர் (சந்தைப்படுத்துதல்) ஜெயந்த் ஆச்சார்யா தெரிவித்துள்ளார். பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி பல முறை முக்கிய கடன்களுக்கான வட்டியை உயர்த்தியதால் வீடு, வாகன கடனிற்கான வட்டி விகிதம் அதிகமாக உள்ளது. இதனால் கார், வீடு, நுகர்வோர் சாதனங்கள் விற்பனை குறைந்துள்ளது. எனவே, நிறுவனங்கள் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள தயக்கம் காட்டுகின்றன. நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டின் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதமாக குறைந்துள்ளது. தொடர்ந்து எட்டு காலாண்டுகளாக பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. உருக்கு கம்பிகள் எனவே, தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் உருக்கு பொருள்களுக்கான தேவைப்பாடு குறைந்துள்ளது. அதேசமயம், ஊரகப் பகுதிகளில் உருக்கு கம்பிகளுக்கு தேவைப்பாடு அதிகரித்து வருகிறது என வர்த்தக நிபுணர் ஒருவர் தெரிவித்தார். பொதுத் துறையைச் சேர்ந்த செயில் நிறுவனம் வீடு கட்டத் தேவையான கம்பிகள் விற்பனையை வரும் 2014–15–ஆம் நிதி ஆண்டில் இரண்டு மடங்கு அதிகரித்து நான்கு லட்சம் டன்னாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. உருக்கு பொருள்கள் சில்லரை விற்பனையை அதிகரிப்பதில் இந்நிறுவனம் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. அடுத்த நிதி ஆண்டில் உருக்கு பொருள்கள் தேவைப்பாடு 6 சதவீதம் அதிகரிக்கும் அடுத்த நிதி ஆண்டில் (2014–15) உருக்கு பொருள்களுக்கான தேவைப்பாடு குறைந்தபட்சம் 6 சதவீதம் அதிகரிக்கும் என டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டி.வி.நரேந்திரன் தெரிவித்துள்ளார். வரும் நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 முதல் 7 சதவீதம் வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சியைக் காட்டிலும் உருக்கு பொருள்கள் தேவைப்பாடு சுமார் 1 சதவீதம் அதிகமாக இருக்கும். இதனடிப்படையில் பொருளாதாரத்தில் (மொத்த உள்நாட்டு உற்பத்தி) 5 சதவீதம் வளர்ச்சி ஏற்படும் என்று வைத்துக் கொண்டால், உருக்கு பொருள்கள் தேவைப்பாடு 6 சதவீதம் அதிகரிக்கும் என நரேந்திரன் மேலும் தெரிவித்தார். பொருளாதார மந்தநிலையால் நடப்பு நிதி ஆண்டின் முதல் பத்து மாதங்களில் (ஏப்ரல் – ஜனவரி) உருக்கு பொருள்கள் பயன்பாடு 0.5 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. image: category:Tagging: |
| Posted: 28 Mar 2014 01:55 PM PDT மும்பை பங்கு வியாபாரத்தில் தொடர்ந்து ஐந்தாவது தினமாக எழுச்சி ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை அன்று மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 126 புள்ளிகள் அதிகரித்தது. இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு அதிகரித்து வருவதே இதற்கு முக்கிய காரணமாகும். பேசல்III\B விதிமுறைகள் பேசல் III விதிமுறைகளை வங்கிகள் நிறைவு செய்வதற்கான கடைசி தேதியை 2018 மார்ச் 31–ந் தேதியிலிருந்து 2019 மார்ச் 31–ந் தேதிக்கு (ஓராண்டு) ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது. இதனால் வங்கிகளுக்கு மூலதனத்தை உயர்த்துவதற்கு ஓர் ஆண்டு அவகாசம் கிடைத்தது. இது, வங்கிகளுக்கு குறிப்பாக பொதுத்துறை வங்கிகளுக்கு சாதகமான அம்சமாகும். இதன் காரணமாக நேற்று பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா உள்பட பல பொதுத்துறை வங்கிகளின் பங்கு விலை 3 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது. நேற்று டாலருக்கு நிகரான ரூபாய் வெளிமதிப்பு எட்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு 59.89–ஆக உயர்ந்தது. பணவீக்கம் குறைந்துள்ளதால் ரிசர்வ் வங்கி முக்கிய கடன்களுக்கான வட்டியை உயர்த்தாது என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று நடைபெற்ற வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட், உலோகம், மின்சாரம் போன்ற பல துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ள நிலையிலும் ஐ.டி. துறையைச் சேர்ந்த சில நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்தது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ், டாட்டா பவர் உள்ளிட்ட 19 நிறுவனங்களின் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. வர்த்தகம் முடியும்போது மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 125.60 புள்ளிகள் அதிகரித்து 22,339.97 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 22,363.97 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 22,185.11 புள்ளிகள் வரையிலும் சென்றது. நிப்டி தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிஃப்டி' 54.15 புள்ளிகள் உயர்ந்து 6,695.90 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 6,702.60 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 6,643.80 புள்ளிகளுக்கும் சென்றது. image: category:Tagging: |
| பொதுத்தேர்தலுக்குப் பின், அன்னிய நேரடி முதலீடு அதிகரிக்க வாய்ப்பு Posted: 28 Mar 2014 01:53 PM PDT ஷிட்ஜி ஆனந்த் புதுடெல்லி பொதுத் தேர்தலுக்குப் பின் அன்னிய நேரடி முதலீடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது பங்குச் சந்தைகளில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு அதிகரித்துள்ளது. 2014–ஆம் ஆண்டில் இதுவரை இந்த நிறுவனங்களின் பங்கு முதலீடு ரூ.11,000 கோடியை தாண்டியுள்ளது. ஜனவரி மாதத்தில்... ஜனவரி மாதத்தில் அன்னிய நேரடி முதலீடு 1.5 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டு 218 கோடி டாலர் அளவிற்கு இருந்தது. ஏப்ரல் – ஜனவரி மாத காலத்தில் இந்த முதலீடு 2 சதவீதம் குறைந்து 1,874 கோடி டாலராக உள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் முதலீடு 1,910 கோடி டாலராக இருந்தது. வெளிநாட்டு நிறுவனங்கள் தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கின்றன என்று நிபுணர்கள் தெரிவித்தனர். ரூபாய் மதிப்பு அதிகரித்து வருகிறது. சில்லறை விலை பணவீக்கம் குறைந்திருப்பதுடன், நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை அதிகரிக்காது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இவையனைத்துமாக பொருளாதார முன்னேற்றத்திற்கு வகை செய்யும் என அவர்கள் கூறினர். வளர்ச்சியை துரிதப்படுத்த அதிக அளவு வெளிநாட்டு முதலீடு தேவைப்படுகிறது. மேலும் அன்னிய செலாவணி கையிருப்பை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. கடந்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி, 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 4.5 சதவீதமாக குறைந்தது. இதனால் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் பின்னடைவு ஏற்பட்டது. ஏப்ரல் – ஜனவரி மாத காலத்தில் அன்னிய நேரடி முதலீடு குறைந்ததற்கு இது ஒரு முக்கிய காரணமாகும். உள்கட்டமைப்பு திட்டங்கள் பனிரெண்டாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012 ஏப்ரல் – 2017 மார்ச்) உள்கட்டமைப்புத் திட்டங்களில் 1 லட்சம் கோடி டாலர் முதலீட்டை ஈர்க்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த மாபெரும் இலக்கை எட்ட வேண்டுமானால் அன்னிய நேரடி முதலீட்டை அதிகம் ஈர்க்க வேண்டியது அவசியம். அன்னிய நேரடி முதலீடு நீண்ட கால முதலீடு என்றும், ஆக்கப்பூர்வமான முதலீடு என்றும் கருதப்படுகிறது. அதேசமயம், அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு குறுகிய கால அடிப்படையிலானது. image: category:Tagging: |
| முக்கிய கடன் வட்டி விகிதங்களை பாரத ரிசர்வ் வங்கி குறைக்குமா? Posted: 28 Mar 2014 01:50 PM PDT மும்பை பாரத ரிசர்வ் வங்கி வரும் ஏப்ரல் 1–ந் தேதி அன்று பணக் கொள்கை ஆய்வு அறிக்கையை வெளியிடுகிறது. பணவீக்கம் குறைந்துள்ளதால் முக்கிய கடனிற்கான வட்டி குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பங்கு வர்த்தக தரகு நிறுவனங்களும், வங்கிகளும் கருத்து தெரிவித்துள்ளன. மாற்றம் இருக்காது முக்கிய வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றமும் இருக்காது என்று நம்புவதாக எச்.எஸ்.பீ.சி. மற்றும் ஆர்.பீ.எஸ். ஆகிய பங்கு வர்த்தக தரகு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பிப்ரவரி மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் ஒன்பது மாதங்களில் இல்லாத அளவிற்கு 4.68 சதவீதமாகவும், சில்லறை விலை பணவீக்கம் 25 மாதங்களில் இல்லாத அளவிற்கு 8.10 சதவீதமாகவும் குறைந்தது. 2015 ஜனவரி மாதத்திற்குள் இதனை 8 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் இலக்கு. இந்த இலக்கை ஒட்டி பணவீக்கம் குறைந்துள்ளதால் ரிசர்வ் வங்கி முக்கிய கடனிற்கான வட்டியை உயர்த்தாது என்பதே பெரும்பாலான நிபுணர்களின் கருத்தாக உள்ளது. அதேசமயம், பருவமழை குறைந்துள்ளதாலும், கோர் இன்ஃப்ளேஷன் எனப்படும் அடிப்படை பணவீக்கம் உயர்ந்துள்ளதாலும் முக்கிய கடன் வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்த வாய்ப்புள்ளது என சில நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அப்படியே உயர்த்தினாலும் சிறிய அளவில்தான் (0.25 சதவீதத்திற்கும் குறைவாக) உயர்த்தும் என பாரத ஸ்டேட் வங்கி அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரகுராம் ராஜன் கடந்த 2013 செப்டம்பரில் ரிசர்வ் வங்கி கவர்னராக ரகுராம் ராஜன் பொறுப்பு ஏற்றார். அதன் பிறகு வெளியிடப்பட்ட நான்கு பணக் கொள்கைகளில் மூன்று முறை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. image: category:Tagging: |
| நான்காவது காலாண்டில் அமெரிக்க பொருளாதாரம் 2.6% வளர்ச்சி Posted: 28 Mar 2014 01:49 PM PDT 2013 காலண்டர் ஆண்டின் நான்காவது காலாண்டில் (அக்டோபர் – டிசம்பர்) அமெரிக்க பொருளாதாரத்தில் 2.6 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. நுகர்வோர் செலவினம் அதிகரித்ததால் மதிப்பீட்டை காட்டிலும் வளர்ச்சி அதிகரித்துள்ளது. அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் பொருளாதாரத்தில் 2.4 சதவீதம் அளவிற்கே வளர்ச்சி ஏற்படும் என அமெரிக்க வர்த்தக துறை முதலில் மதிப்பீடு செய்திருந்தது. ஆனால், நுகர்வோர் செலவினம் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 3.3 சதவீதம் உயர்ந்துள்ளது. எனவே வளர்ச்சி அதிகரித்துள்ளது. மதிப்பீட்டைக் காட்டிலும் அதிகரித்துள்ள போதிலும், முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது (4.1 சதவீதம்) பொருளாதார வளர்ச்சி குறைவாகவே உள்ளது. ஜனவரி–மார்ச் காலாண்டிலும் பொருளாதார வளர்ச்சி 2 சதவீத அளவிற்கே இருக்கும். கடுமையான குளிர் காரணமாக தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் வணிக வளாகங்களுக்கு செல்வதில் ஆர்வம் காட்டாதது போன்ற காரணங்களால் பொருளாதார வளர்ச்சி குறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். image: category:Tagging: |
| அமெரிக்காவில் 81,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிய இந்திய நிறுவனங்கள் Posted: 28 Mar 2014 01:48 PM PDT அமெரிக்காவில், கடந்த 2013–ஆம் ஆண்டு இறுதி நிலவரப்படி 81,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி இந்திய நிறுவனங்கள் சாதனை படைத்துள்ளதாக இந்திய தொழிலக கூட்டமைப்பின் அண்மைக்கால ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 40 மாகாணங்களில் 68 இந்திய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக நியூ ஜெர்ஸி, கலிபோர்னியா, நியூயார்க், டெக்சாஸ், இல்லினாய்ஸ் ஆகிய மாகாணங்களில் இந்திய நிறுவனங்கள் அதிகம் உள்ளன. இந்த நிறுவனங்கள் அனைத்துமாக அங்கு மேற்கொண்டுள்ள மொத்த முதலீடு 1,700 கோடி டாலராகும். இந்திய நிறுவனங்கள் அதிகமான அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ளும் ஐந்து நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று என்று பாரத ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் டாட்டா குழும நிறுவனங்கள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. டாட்டா குழுமத்தால் மட்டும் அங்கு 30–க்கும் மேற்பட்ட மாகாணங்களில் மொத்தம் 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. மகிந்திரா குழுமம் கலிபோர்னியா, ஜார்ஜியா, கான்சாஸ், பென்சில்வேனியா, டென்னஸி மற்றும் டெக்சாஸ் ஆகிய மாகாணங்களில் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளது. image: category:Tagging: |
| டிசம்பர் நிலவரப்படி இந்தியாவின் வெளிநாட்டு கடன் 42,600 கோடி டாலர் Posted: 28 Mar 2014 01:47 PM PDT புதுடெல்லி இந்தியாவின் வெளிநாட்டு கடன், 2013 டிசம்பர் நிலவரப்படி 42,600 கோடி டாலரை எட்டியுள்ளது. அந்த ஆண்டின் மார்ச் 31 நிலவரத்துடன் ஒப்பிடும்போது கடன் 2,110 கோடி டாலர் உயர்ந்துள்ளது. இதில் மத்திய அரசின் கடன் மட்டும் 7,640 கோடி டாலராகும். இது, மொத்த வெளிநாட்டு கடனில் 17.9 சதவீதமாகும். மார்ச் மாத நிலவரப்படி இது 20.2 சதவீதமாக இருந்தது. மொத்த வெளிநாட்டுக் கடனில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் செலுத்தும் டெபாசிட் தொகையும் அடங்கும். இது நீண்ட கால கடன்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் டாலர் வரத்தை அதிகரிக்கும் விதமாக ரிசர்வ் வங்கி 'ஸ்வாப்' திட்டத்தை அறிமுகம் செய்தது. இதனால் அக்டோபர்–டிசம்பர் காலாண்டில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் நீண்ட கால டெபாசிட் அதிகரித்தது. வெளிநாட்டுக் கடன் அதிகரித்ததற்கு இது ஒரு முக்கிய காரணம். டிசம்பர் இறுதியில் நீண்ட கால கடன் 33,330 கோடி டாலரை எட்டியுள்ளது. மார்ச் நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 8.1 சதவீதம் அதிகமாகும். அதே சமயம் குறுகிய கால கடன் 4.1 சதவீதம் குறைந்து 9,270 கோடி டாலராக உள்ளது. இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு நாட்டின் மொத்த வெளிநாட்டு கடனில் 69 சதவீதத்தை திரும்பச் செலுத்தும் அளவி உள்ளது. 2013 மார்ச் இறுதியில் இது 72.1 சதவீதமாக இருந்தது. image: category:Tagging: |
| Posted: 28 Mar 2014 01:46 PM PDT முன்னணி மின் உற்பத்தி நிறுவனமான என்.டி.பி.சி., எதிர்வரும் 2014–15–ஆம் நிதி ஆண்டில் 1.50 கோடி டன் நிலக்கரி இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது. ''அனல் மின் உற்பத்திக்கு நிலக்கரி முக்கிய எரிபொருளாக உள்ளது. நிலக்கரி தேவைப்பாட்டிற்கு கோல் இந்தியா நிறுவனத்தை சார்ந்து உள்ளோம். கோல் இந்தியா நிறுவனம் சப்ளையை அதிகரித்தால் இறக்குமதி இலக்கை குறைப்போம்'' என என்.டி.பி.சி. நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அருப் ராய் சவுத்ரி தெரிவித்தார். என்.டி.பி.சி. நிறுவனத்தின் தற்போதைய நிறுவு திறன் 42,964 மெகா வாட்டாக உள்ளது. இதில், நிலக்கரியை எரிபொருளாக கொண்ட மின் நிறுவு திறன் 37,000 மெகா வாட்டுக்கும் அதிகமாகும். நடப்பு ஐந்தாண்டு திட்ட காலத்திற்குள் (2012–17) கூடுதலாக 14,000 மெகா வாட் அளவிற்கு நிறுவு திறனை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. image: category:Tagging: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |