Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இந்தியா போலியோ இல்லாத நாடு! உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted: 28 Mar 2014 10:34 AM PDT

இந்தியா போலியோ இல்லாத நாடு! உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்தியாவை போலியோ இல்லாத நாடாக உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் உலக சுகாதார அமைப்பால் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் 'போலியோ இல்லாத நாடாக' அறிவிக்கப்பட்டுள்ள 11-வது நாடு இந்தியா என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. இதற்கான சான்றிதழை டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகளிடம் இருந்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் பெற்றுக் கொண்டார். ...

திரைவிமர்சனம்: நெடுஞ்சாலை

Posted: 28 Mar 2014 10:24 AM PDT

நள்ளிரவில் நெடுஞ்சாலையில் பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்லும் லாரிகள் எல்லாம் அந்த ஊரில் தார்பாய் முருகன் என்பவனின் அட்டகாசம் தாங்காமல் வேறு பாதையில் செல்கின்றன. காரணம் லாரி போய் கொண்டு இருக்கும் போதே, சத்தமின்றி அதன் பின்னால் ஏறி அதிலிருந்து சரக்குகளையெல்லாம் திருடிவிடும் ஆற்றல் கொண்டவன். ஒரு சிறிய வாகனத்தில் தன் சகாக்களுடன் சேர்ந்து லாரிகளில் கொள்ளையடித்து, அதை தனது முதலாளியிடம் கொடுத்து விடுவதைத் தவிர தார்பாய் முருகனுக்கு, காசு பணம் மீது அந்தளவிற்கு ஈடுபாடு இல்லை. இப்படியாக கரடு ...

ஜெனீவாவில் மன்னிக்கவே முடியாத இந்திய அரசின் துரோகம் - சிங்கள அரசின் இனக்கொலைக் கூட்டுக் குற்றவாளி நிரூபணம் - வைக்கோ

Posted: 28 Mar 2014 10:14 AM PDT

அர்மீனியா, ஜெர்மனி, உகாண்டா, ருவாண்டாவில் நடைபெற்ற கோரமான இனப்படுகொலைகளைப் போலவும், பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளில் அந்த நாடுகளில் எல்லாவற்றையும் தாண்டியும் படுநாசத்தைச் சிங்கள அரசு தமிழ் இனப்படுகொலையாக நடத்தியது. 2010 அக்டோபர் 25 இல் சேனல்-4 இல் வெளியான காணொளியில், 8 தமிழ் இளைஞர்கள் அம்மணமாக கண்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட கோரக் காட்சி, அதே ஆண்டின் டிசம்பர் 2 இல் வெளியான காணொளியில் தமிழ்ப் பெண் இசைப்பிரியா சிங்கள இராணுவ மிருகங்களால் கற்பழிக்கப்பட்டு, மிகக் கொடூரமாகக் ...

தியாகி சத்தயமூர்த்தி இறந்த தினம்: மார்ச் 28 - 1943

Posted: 28 Mar 2014 10:12 AM PDT

சத்தியமூர்த்தி ஒரு காங்கிரஸ் அரசியல்வாதி மற்றும் இந்திய விடுதலை வீரர். இந்திய அரசியலில் மக்களாட்சி நெறிமுறைகள் ஆழமாக வேரூன்ற பாடுபட்டவர். தமிழக காங்கிரசின் வளர்ச்சிக்கும் பிரித்தானிய இந்தியாவில் நடைபெற்ற தேர்தல்களில் அக்கட்சி வெற்றிபெறவும் உழைத்தவர். அவரது பங்காற்றலை நினைவுகூறுமுகமாக சென்னையிலுள்ள காங்கிரசு கட்சியின் தமிழகத் தலைமையகம் அவரது பெயர்கொண்டு சத்தியமூர்த்தி பவன் என அழைக்கப்படுகிறது. 1939-ம் ஆண்டு சென்னை மேயராகப் பணியாற்றினார். இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற அந்தநேரத்தில் சென்னையில் ...

டி.கே. பட்டம்மாள் பிறந்த தினம்: மார்ச் 28 1919

Posted: 28 Mar 2014 10:10 AM PDT

டி. கே. பட்டம்மாள் என்று பரவலாக அறியப்படும் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் 1919-ம் ஆண்டு மார்ச் மாதம் 28ந்தேதி பிறந்தார். இவர் ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். பாடகி நித்யஸ்ரீ மகாதேவன், இவரது பேத்தி ஆவார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் ஆண்களே கோலோச்சி வந்த கர்நாடக இசை மேடைகளில் தங்கள் இசைத்திறமையால் 'பெண் மும்மூர்த்திகள்' என நிலைநாட்டிக்கொண்ட மூவரில் ஒருவர். மற்றவர்கள் எம். எஸ். சுப்புலட்சுமியும் எம். எல். வசந்தகுமாரியும் ஆவர். அலமேலு என்ற இயற்பெயருடைய ...

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Posted: 28 Mar 2014 10:00 AM PDT

 பாராளுமன்றத்திற்கு 6 கட்டமாக தேர்தல் அட்டவணை 3-ந்தேதி வெளியாகலாம்? தற்போதைய பாராளுமன்றதின் பதவிக் காலம் வரும் மே மாதம் 31-ந்தேதியுடன் முடி கிறது. இதையடுத்து பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்து வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. தேர்தல் அட்ட வணையை வெளியிட தலைமை தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது.  பாராளுமன்ற தேர்தல் 6 கட்டங்களாக நடத்தப்படும் என தெரிகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் தேர்தல் தேதி அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக தேர்தல் ...

இந்திய விமானப் படை விமானம் விபத்து: விமானி உட்பட 5 பேர் பலி

Posted: 28 Mar 2014 09:34 AM PDT

இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி-130ஜெ சூப்பர் ஹெர்குலஸ் விமானம் குவாலியர் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், விமானி உட்பட 5 பேர் பலியாகினர். மத்தியப்பிரதேசம் குவாலியர் அருகே இந்திய விமானப் படை சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்திக்குள்ளானது. ராஜஸ்தானின் மத்திய பிரதேச எல்லையில் உள்ள கரோலி என்ற இடத்தில் சி-130ஜெ விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விமான விபத்தில் சிக்கியோரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பயிற்சியில் ஈடுபட்டிருந்த ...

அம்மம்மா பிரச்சாரம்

Posted: 28 Mar 2014 09:31 AM PDT

மற்ற கட்சியாக இருந்தால் தலைவரின் பேச்சைக் கேட்கத்தான் கூட்டம் வரும். ஆனால், அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆராக இருந்தாலும் ஜெயலலிதாவாக இருந்தாலும் ஆளைப் பார்ப்பதே ரத்தத்தின் ரத்தங்களுக்கு முழு திருப்தியைக் கொடுத்துவிடும். இந்தத் தேர்தலில் அதுவும் மாற்றம். ஜெயலலிதா வந்த ஹெலிகாப்டரைப் பார்ப்பதே பெரும்பேறு ஆகிப்போனது. தேர்தல் பிரசாரத்துக்கு ஹெலிகாப்டரில்தான் சுற்றுப்பயணம் என்று ஜெயலலிதா முடிவெடுத்துவிட்டதால், இப்போதெல்லாம் மாலை, இரவு நேரக் கூட்டங்கள் கிடையாது. மதிய வேளையில் கொளுத்தும் ...

மதி (விதி) செய்த சதியோ ? MH 270---

Posted: 28 Mar 2014 09:31 AM PDT

]u] மதி (விதி) செய்த சதியோ ? MH 370---[/u] எனக்கு வந்த ஈமெயில் செய்தி. எவ்வளவு உண்மை? யார் அறிவார்? இருப்பினும் ஒரு துப்பறியும் நவீனத்தை ஒத்தது இது. பிப்ரவரி மாதம் 2014.ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படை ,அமெரிக்காவிற்கு  திரும்பி வந்து கொண்டு இருக்கிறது.. மலைமுகட்டில்  இருந்து கீழே வருகின்ற ஒரு ஆயுத வண்டி ,அதன் உள்ளே இருக்கின்ற கருவிகள்/ஆயுதங்கள் ,கமாண்ட் சிஸ்டம்,கண்ட்ரோல் சிஸ்டம் முதலியவை  தாலிபான் தீவிர வாதிகளால் கடத்தப்படுகின்றன.அதை பாதுகாப்பாக கொண்டுவருகின்ற அதிரடி மின்னல்வேக சீல் ...

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி; எதிர்ப்பு தெரிவித்த இந்தியா வாக்களிக்கவில்லை!

Posted: 28 Mar 2014 09:04 AM PDT

ஜெனிவா: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் 23 உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் வெற்றிகரமாக நிறைவேறியது. ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை கோரும் அமெரிக்கத் தீர்மானம் மீதான விவாதம், இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணியளவில் தொடங்கி நடைபெற்று வந்தது. இலங்கை அரசைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க கோரி பல நாடுகளிடம் பேசியதை கண் கூடாக ...

கணபதி சிலை தமிழகத்தில் திருடப்பட்டதா?- ஆய்வு செய்கிறது அமெரிக்க அருங்காட்சியகம்

Posted: 28 Mar 2014 08:58 AM PDT

அமெரிக்காவின் ஓஹையோ மாகாணம் டோலடோ அருங் காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ள வெண்கல கணபதி சிலை தமிழகத்தில் திருடப்பட்டதா என அந்நாட்டு அரசு விசாரணை நடத்தி வருகிறது. இதுகுறித்து அருங்காட்சி யகத்தின் தொலைத் தொடர்புத் துறை இயக்குனர் கெல்லி கரோ கூறுகையில், "கணபதி சிலை குறித்த விசாரணை தொடக்க நிலையில் உள்ளது. இந்த சிலை தொடர்பான சில ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்" என்றார். இந்திய சிலை தரகர் சுபாஷ் கபூரிடமிருந்து கடந்த 2006-ம் ...

மலேசியா: தினக்குரல் நாளிதழ் வெளிவராது – உள்துறை அமைச்சு தற்காலிக தடை உத்தரவு!

Posted: 28 Mar 2014 08:50 AM PDT

மலேசியாவில் வெளிவரும் ஆறு தமிழ்ப் பத்திரிக்கைகளில் ஒன்றான 'தினக்குரல்' நாளை முதல் வெளிவராது என்றும், அந்தப் பத்திரிக்கையை உள்துறை அமைச்சு மூன்று மாதங்களுக்குத் தற்காலிகத் தடை செய்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவுக்கான காரணங்கள் என்ன என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. இன்று வெளிவந்த தினக்குரல் பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் இது குறித்து அந்தப் பத்திரிக்கையின் ஆசிரியர் பிஆர்.இராஜன் அறிவிப்பு ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கின்றார். அதன்படி, தினக்குரல் நாளை முதல் வெளிவராது ...

முகநூலில் ரசித்து சிரித்த ஸ்டேட்டஸ்(பானு)

Posted: 28 Mar 2014 08:35 AM PDT

கடுப்பேத்தறார் மைலார்ட் wrote:புதுசா 'பல்சர்' வச்சுருக்கவனும்........ வயித்துல 'அல்சர்' வச்சுருக்கவனும்........ அமைதியா ஒரு இடத்துல உட்கார மாட்டானுங்க........ ************************************************************* கடுப்பேத்தறார் மைலார்ட் wrote:ஆடம்பரமான கார் வச்சுருப்பவனும்.... அருமையான பொண்ண பெத்தவனும்..... பயந்துக்கிட்டே இருக்கனும்.... எவனாவது ஒரசிருனுவாங்களோ...... அல்லது தூக்கிருவானுங்களோ.... ********************************************************************************* கடுப்பேத்தறார் ...

‘பேஸ்புக்'கில் அவதூறு பிரச்சாரம்: மும்பை போலீஸில் ஆமிர் கான் புகார்

Posted: 28 Mar 2014 07:40 AM PDT

சமூக வலைதளமான பேஸ்புக் கில் தனக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் மேற்கொள்ளப்படு வதாக இந்தி நடிகர் ஆமிர் கான் மும்பை காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். மும்பை காவல் துறை ஆணையர் ராகேஷ் மரியா, இணை கமிஷனர் (சட்டம் - ஒழுங்கு) சதானந்த் தத்தே ஆகியோரை ஆமிர் கான் சனிக்கிழமை சந்தித்தார். அப்போது இப்புகார் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். சைபர் பிரிவு போலீஸார் இப்புகாரை விசாரிப்பார்கள். 2012-ல் ஸ்டார் பிளஸ் சேனலில் ஆமிர் கானின் "சத்யமேவ ஜயதே" நிகழ்ச்சி ஒளிபரப்பானது. ...

தெனாலிராமன் - டிரெய்லர்

Posted: 28 Mar 2014 06:19 AM PDT

மொழியையும் சூது கவ்வும்!

Posted: 28 Mar 2014 06:08 AM PDT

தர்மத்தின் வாழ்வை மட்டுமில்லை, மொழியையும் சூது கவ்வும். சூதுக்கு பலியான மொழிகளும் உண்டு. சூதினை வென்ற மொழிகளும் உண்டு. பேசுவதற்கு யாரும் இல்லை என்பதால் மொழி வழக்கிழந்து போகக் கூடும்; ஆனால் இல்லாமல் போய்விடாது. பேசப்படுவதற்கு நூல்கள் இருக்கிறவரை அந்த மொழி ஆய்வுகளிலும் அகராதிகளிலும் வாழும். கிரேக்க மொழி, அர்த்தமாகதி, பாலி, சமஸ்கிருதம் போன்ற மொழிகள் அறிவியல், சட்டம்,சுற்றுச் சூழல், நிலவியல், ஆன்மிகம் என்று பல காரணங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. காலத்திற்கேற்ப வளர்ந்து, பழைய ஆங்கிலம், இடைக்கால ...

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி!

Posted: 28 Mar 2014 06:03 AM PDT

சிறு பிராயத்திலேயே "ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி' என்று படித்திருக்கிறோம். ஆனால் காலையில் எழுந்தவுடன் நாம் டூத் பேஸ்ட், பிரஷ் எடுக்கிறோம். குழந்தைகளுக்கும் அதையே பல் துலக்க கொடுக்கிறோம். ஆக, கற்பது வேறு; வாழ்க்கையில் கடைப்பிடிப்பது வேறு என்பதை காலையிலேயே ஆரம்பித்து விடுகிறோம். நமது முன்னோர்கள் கூற்றில் நூற்றுக்கு நூறு உண்மை இருக்கிறது. அதாவது ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பது இன்றைக்கும் பொருந்தும். இல்லாவிடில் தெருவுக்கு இரண்டு டென்டல் கிளினிக்குகள் முளைக்க வேண்டிய அவசியம் என்ன? இன்று எம்.பி.பி.எஸ். ...

குக்கூ திரைப்படம் - நிறை(ப்)படம்

Posted: 28 Mar 2014 06:00 AM PDT

குக்கூ திரைப்படம் - நிறை(ப்)படம் நேற்று வெளியான இந்தத் திரைப்படம் மிக நன்று. மாற்றுத்திறநாளிகளான பார்வை இழந்தவர்களைப் பற்றிய மிக இயல்பான படம். ஒரு உண்மைச் சம்பவத்தை தழுவிய படம். நடிப்பு, திரைக்கதை, காதல், நகைச்சுவை, சோகம், சுகம் என அனைத்தையும் கொண்ட அருமையான படம். வர்த்தக ரீதியாக வெற்றிபெற்றால் இதுபோல் படங்கள் நிறைய வெளிவர வாய்ப்பிருக்கு. தயவுசெய்து நண்பர்கள் இந்தப்படத்தை தியேட்டரில் சென்று பார்க்கவும். விமர்சனம் வந்தவுடன் பகிருங்கள் அல்லது பார்த்தவர்கள் விமர்சியுங்கள்.

உணருவோம் உலகநியதி…

Posted: 28 Mar 2014 05:54 AM PDT

- பரமனிடம் உமை உண்டு பாட்டியிடம் கதை உண்டு பாப்பாவிடம் பாட்டு உண்டு குழந்தையிடம் குறும்பு உண்டு - தந்தையிடம் கடமை உண்டு தாயிடம் பாசம் உண்டு கணவரிடம் ஆதரவு உண்டு மனைவியிடம் அன்பு உண்டு - நண்பனிடம் நட்பு உண்டு பகைவனிடம் வஞ்சம் உண்டு பசுவிடம் கருணை உண்டு பாம்பினிடம் நஞ்சு உண்டு - காக்கையிடம் ஒற்றுமை உண்டு கிளியிடம் பேச்சு உண்டு குயிலிடம் ராகம் உண்டு குரங்கினிடம் சேட்டை உண்டு - நம்மிடம் என்ன உண்டு நம்மிடம் 'தன்னம்பிக்கை ' உண்டு - ———————————— >கவிஞர் மு.ராணி அம்மாள் பெண் ...

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு

Posted: 28 Mar 2014 05:52 AM PDT

100 கிராம் தானியத்தில் உள்ள சத்துக்கள் கேழ்வரகில் 'மித்தியானைன்' என்னும் ஒரு முக்கியமான அமினோஅமிலம் உள்ளது. வயோதிகத்தைக் கட்டுப்படுத்தவும், தோல், நகம், முடியின் அழகைப்பேணவும் இந்த 'மித்தியானைன்' புரதச்சத்து அவசியம். இது ஈரலில் படியும் கொழுப்பை விரட்ட உதவுகிறது. வயோதிகம், மூட்டுவலி, ஆண்மைக்குறைவு என பல நோய்களுக்குக் கேழ்வரகு நல்ல பலன் அளிக்கிறது. பாலைக்காட்டிலும் மூன்று மடங்கு கால்சியமும், அரிசியை விட 10 மடங்கு கால்சியமும் கேழ்வரகில் உண்டு. ஆனால் பாலும் அரிசியும் உடம்பு வளர்க்கும். கேழ்வரகோ ...

புதியவன்...

Posted: 28 Mar 2014 05:18 AM PDT

பெயர்: க​.தினேஷ் பாபு
சொந்த ஊர்: வெள்ளகோவில்,திருப்பூர்
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: மரபுக் கவிதைகள் பற்றிய​ இணைய​ தேடலில்...
பொழுதுபோக்கு: புத்தகம்
கல்லூரி மாணவன்
மேலும் என்னைப் பற்றி: தமிழின் ஆழம் அறிய​ ஆசை..

தியானம்! - சிறுவர் கதை

Posted: 28 Mar 2014 05:16 AM PDT

ஆற்றங்கரையில் கழுதையானது அமைதியுடன் தியானம் செய்து வந்தது. கழுதையின் இந்தச் செயலை குரங்கு ஒன்று கவனித்தது. அந்தக் குரங்கு ஆற்றங்கரையை ஒட்டிய ஆலமரத்தில் வசித்து வந்தது. கழுதை தினமும் ஆற்றங்கரையில் தியானம் செய்வதை கண்டு, அந்தக் குரங்கு பொறாமையடைந்தது. "நம்மால் செய்ய முடியாத ஒரு செயலை இந்தக் கழுதையானது செய்து கொண்டிருக்கிறது. எனவே, நாம் இச்செயலில் இந்தக் கழுதையை நீடிக்க விடக் கூடாது. எப்படியாவது நாம் இந்தக் கழுதையின் தவத்தினைக் கலைக்க வேண்டும்' என்று முடிவு செய்தது குரங்கு. உடனே அந்தக் ...

மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.

Posted: 28 Mar 2014 05:12 AM PDT

மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. என்னவென்று கணிக்க முடிகிறதா? இந்தக் கதையைப் படியுங்கள்! அந்தக் கிராமம் முழுக்க உருளை விவசாயம்தான். உருளைக் கிழங்குகளை அறுவடை செய்ததும் அவற்றின் அளவு, எடைக்கேற்ப வகை பிரித்து, மூட்டைகளில் கட்டி, லாரி ஏற்றி மார்க்கெட்டுக்கு அனுப்புவார்கள். அந்தத் தரம் பிரித்தலுக்கே கிட்டதட்ட ஒருநாள் செலவாகும். ஆனால், ஒரே ஒரு விவசாயி மட்டும் உருளைகளை மெனக்கெட்டு தரம் பிரித்துக்கொண்டு இருக்காமல் மொத்தமாக லாரியில் அள்ளிப்போட்டு மார்க்கெட்டுக்குக் கொண்டுசெல்வார். மற்றவர்களுக்கு ...

மதமாற்ற வியாபாரம்!

Posted: 28 Mar 2014 04:47 AM PDT

நான் அப்போது ப்ளஸ் ஒன் சேர்ந்திருந்த சமயம்.. எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ பத்தாம் வகுப்பில் நான் எடுத்திருந்த மார்க்குக்கு முதல் குரூப் தான் கொடுப்போம் என்று சொல்லி என்னை அந்த கிணற்றுக்குள் தள்ளி விட்டார்கள்.. அது வரை ஒரே புக்காக இருந்து உயிரை வாங்கிய சயின்ஸ், ப்ளஸ் ஒன்னில் இருந்து டபுள் ஆக்ட் கொடுத்து பீதியை கிளப்பியது... நானாவது பரவாயில்லை, பயாலஜி எடுத்த பயலுகளுக்கு அது ட்ரிபிள் ஆக்ட் ட்ரீட் கொடுத்தது.. அடுத்த எமகண்டம் மேத்ஸ்.. அதுவரை ஜியாமெட்ரியும், கிராப்பும் மட்டுமே படித்து மேத்ஸ்சில் பாஸ் ...

இயற்கை விவசாயத்துக்கு மானியம் கொடுங்கள்!

Posted: 28 Mar 2014 04:16 AM PDT

இயற்கை விவசாயத்துக்கு மானியம் கொடுங்கள்- நெல் இரா.ஜெயராமன் நவீன விவசாயத்துக்குச் செய்யப்படும் செலவில் பாதியைச் செலவிட்டாலே இயற்கை விவசாயம் மூலம் உணவு உற்பத்தியை அதிகரிக்கலாம். பசுமைப் புரட்சி என்ற பெயரில் நிலத்தில் கொட்டப்படும் ரசாயன உரங்களால் மண் நஞ்சாகி, மலடாகிவிட்டது. இதனால் எந்தச் சாகுபடியும் முழு அளவில் மகசூல் தருவதில்லை. விளைபொருட்களும் விஷமாகிவிட்டன. தற்போது தமிழகம் முழுவதும் விவசாயிகள் பரவலாக இயற்கை விவசாயத்தை ஆர்வத்துடன் செய்கிறார்கள். ஆனால், இயற்கை விவசாயத்துக்குத் தேவையான நுண்ணுயிரிகளான ...

முடியைக் காப்பாற்ற முக்கிய யோசனைகள்!

Posted: 28 Mar 2014 04:02 AM PDT

ஆரோக்கியமற்ற தலைமுடி, நம் உடல்நலம் கெடுவதை உணர்த்தும் அறிகுறி. குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் தலைமுடிதான் இன்று 'தலை'யாயப் பிரச்னை. காலம்காலமாக நாம் பின்பற்றி வந்த இயற்கை முறைகளை விடுத்து, தற்போது தலைமுடிப் பராமரிப்புக்காகப் பயன்படுத்தும் பெரும்பாலான அழகுப் பொருட்கள் ரசாயனம் கலந்தவை. இவற்றைப் பயன்படுத்துவதால், அந்த நேரத்தில், கூந்தல் அழகாக மின்னுமே தவிர, தொடர்ந்து பயன்படுத்தும்போது, அது ஆபத்தாகவே முடியும். உதாரணத்துக்கு, 'தலையில் எண்ணெயே தடவ வேண்டாம்... இந்த நான்ஸ்டிக்கி ஸ்ப்ரே போதும்... ...

சம்பா சாகுபடி: நெல்வளமும் சொல்வளமும்!

Posted: 28 Mar 2014 03:02 AM PDT

காவிரிப் படுகையின் சம்பா நெல் சாகுபடி கிட்டத்தட்ட நிறைவுபெற்றுவிட்டது. சம்பாவுக்கு மண்வளம், நீர்வளத்தோடு தொடர்பு இருப்பதுபோலவே சொல்வளத்தோடும் தொடர்பு உண்டு. வயலும் வரப்பும் வைக்கோலுமாக இருக்கும் இடத்தில் நுட்பத்துக்கும் துல்லியத்துக்குமான சொற்கள் இருக்குமா? உடலைக் கொண்டே உழைக்கும் இடத்தில் பண்பாட்டின் மென்மையைக் காட்டும் வழக்கங்களும் சொற்களும் உண்டா? சம்பாவும் செம்பாளையும் ஒருவரது மேனியின் வாளிப்பை வியப்பவர்கள் "சும்மாவா! செம்பாளைச் சோறும் பசு நெய்யும்" என்று காரணம் கூறுவார்கள். செம்பாளை ...

தேவாரம் காட்டும் ஐம்புல வழிபாடு!

Posted: 28 Mar 2014 02:23 AM PDT

சமய வாழ்க்கை என்பது முன்பெல்லாம் சமூகத்தினர் அனைவராலும் பின்பற்றமுடியாத ஒன்றாக இருந்தது. ஆங்காங்கே ஆலயங்கள் அமைக்கப்பட்டிருந்தன என்றாலும் மந்திரம், யாகம் போன்றவையே வழிபாட்டு முறையாக இருந்தன. சுமார் 1,300 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த நாயன்மார்கள், பக்தி என்பது இறைவன்மீது ஏற்படும் அன்பே என்பதையும், அந்த அன்புணர்வை வெளிப்படுத்தும் முறையே வழிபாடு என்பதையும் மக்கள் மனதில் தோற்றுவித்தனர். தேவார மூவர் எனப்படும் சுந்தரர், சம்பந்தர், அப்பர் போன்ற அடியார்கள் இறைவனின் பெருமைகளை நமக்கு சுட்டிக்காட்டி, ...

காமெடியின் களப்பிரர் காலம்!

Posted: 28 Mar 2014 02:09 AM PDT

தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த கலைஞர்களின் பட்டியல் ஒன்றைத் தயாரித்தால் அதில் நகைச்சுவை நடிகர்களின் பெயர்கள் நிச்சயம் இடம்பெறும். கலைவாணர், டி.எஸ். பாலையா, நாகேஷ் என்று தொடங்கும் அந்தப் பட்டியலில் கடைசியாக இடம்பெறும் காமெடியன் வடிவேலுதான். அதன் பின்னர் நகைச்சுவை நடிகர்கள் யாரும் இல்லையா என்று கேட்பவர்களுக்கு ஒரே பதில் அவர்கள் உருவாக்கும் நகைச்சுவை சுவையாக இல்லை என்பதுதான். நகைச்சுவையில் இந்தியத் திரையுலகின் எந்தப் பகுதிக்கும் சவால் விடும் வகையிலான சிறந்த கலைஞர்களைக் கொண்டது தமிழ் சினிமா. ...

குழந்தைகளுக்கான கேம்ஸ் & கதை வீடியோஸ் வேண்டும்

Posted: 28 Mar 2014 12:44 AM PDT

நண்பர்களே!

எனக்கு குழந்தைகளுக்கு தேவையான அறிவூட்ட கேம்ஸ்,மற்றும் கதை கார்ட்டுன் வீடியோஸ் வேண்டும்..

தயவுசெய்து உதவுங்கள்!!!!

ஐ.பி.எல்.-பொறுப்பு கவாஸ்கரிடம் - சீனிவாசன் பொறுப்பு பறித்தது கோர்ட்

Posted: 28 Mar 2014 12:29 AM PDT

இந்திய கிரிக்கெட் சூதாட்டம், மேட்ச்பிக்ஸிங் வழக்குகளில் நியாயமான விசாரணைக்கு வழிவகை ஏற்படுத்தும் வகையில சுப்ரீம் கோர்ட் தனது அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது. இன்றைய உத்தரவின்படி பி.சி.சி.ஐ., சேர்மன் பொறுப்பில் இதன் 5 துணைத்தலைவர்களில் ஒருவர் இடைக்கால தலைவராக செயல்படுவார் என்றும் , குறிப்பாக ஐ.பி.எல்., விவகாரங்களை முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கவாஸ்கர் கவனிப்பார் என்றும் அதே நேரத்தில் பி.சி.சி.ஐ., விவகாரத்தில் அவர் தலையிட வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த ...

சிவபெருமான் திருவருளால் கண் ஒளி பெற்ற நாயன்மார்!

Posted: 28 Mar 2014 12:26 AM PDT

நாட்டமிகு தண்டிக்கும் அடியேன்! சோழ நாட்டிலே தலைசிறந்து விளங்கும் திருவாரூர் என்னும் தலத்தில் தண்யடிகள் என்னும் சிவனருட் செல்வர் வாழ்ந்து வந்தார். இவர் பிறவியிலேயே கண் பார்வை இழந்தவர். புறக்கண் அற்ற இத்தொண்டர் அகக் கண்களால் திருவாரூர்த் தியாகேசப் பெருமானின் திருத்தாளினைக் கண்டு எந்நேரமும் இடையறாமல் வணங்கி வழிபட்டு வந்தார். இவர் காலத்தில் திருவாரூரில் சமணர்கள் ஆதிக்கம் சற்று பரவியிருந்தது. அதனால் சமணர்கள் சைவத் தொண்டர்களுக்குப் பற்பல வழிகளில் இன்னல்களை விளைவித்தனர். தண்டியடிகள் நீராடும் கமலாலய ...

குழந்தைகள் செல்போனில் பேச தடை

Posted: 28 Mar 2014 12:16 AM PDT

* குழந்தைகள் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாவதைத் தடுக்கும் வகையில் ஜப்பானிய நகரமான கரியாவில் இரவு ஒன்பது மணிக்கு மேல் அவர்கள் செல்போன் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் முதல், பள்ளியில் பயிலும் சுமார் 13,000 மாணவர்கள், இரவு ஒன்பது மணிக்கு மேல் தங்களது செல்போன்களைப் பெற்றோரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது . இத்தடையை மீறுபவர்களுக்கு தண்டணை எதுவும் விதிக்கப்படாது என்றாலும், குழந்தைகளின் செல்போன் பழக்கத்தைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை தங்களுக்கு உதவியாக ...

ஆள் காட்டி விரல்..!

Posted: 27 Mar 2014 11:56 PM PDT


-

அஃறிணை இளைஞன் – ஹைபுன் கவிதை

Posted: 27 Mar 2014 11:07 PM PDT

கிராமத்தை நோக்கிப் பயணமானேன். சாலையோர நிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளாக்கப்பட்டிருந்தன. முதியவர் ஒருவர் கலப்பையோடு எதிர்பட்டார். இந்தத் தள்ளாத வயதிலுமா என்று வினவினேன்… இளைஞர்கள் விவசாயம் செய்ய தயங்குகிறார்கள். அவர்களுக்குத் தேவை உடல் உழைப்பில்லா சம்பளம்தான்… என்னென்னமோ பேசினார்… தென்னை மரத்தின் கீழ் நெற்கதிர்களைக் கொரிக்கும் அணிற் கூட்டம் (கவிதையின் பொருள் புரியாதவர்களுக்கு… உயரப்போய் தென்னையை ருசிக்க இன்றைய அஃறிணை உயிர்களும் தவிர்த்து எளிமையாகக் கிடைக்கும் நெற்கதிர்களை ருசிக்கிறது. வயிறு ...

பாமரர் தேவாரம்

Posted: 27 Mar 2014 08:47 PM PDT

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ...

யாசகன் - விமர்சனம்

Posted: 27 Mar 2014 08:38 PM PDT

அமீர், எம்.சசிகுமார் இருவரிடமும் இணை இயக்குநராக பணிபுரிந்தவர் துரைவாணன். இவர் தனது குருநாதர்களின் குருநாதர் பாலா பாணியில் ஒரு படம் பண்ண களம் இறங்கியதின் விளைவே "யாசகன்". இனி யாசகனை ரசிகன்(ர்)கள் ஏற்றுக்கொள்வார்களா பார்ப்போம்! கதைப்படி, ஊருக்கே நல்லபிள்ளை, வூட்டுக்கு உதவாத பிள்ளை ஹீரோ சூர்யா எனும் "அங்காடித்தெரு மகேஷ். பட்டப்படிப்பு படித்துவிட்டு நேர்மையான வேலை வேண்டும் என காத்திருக்கும் சூர்யா-மகேஷ்., அப்பாவின் கரித்து கொட்டல்கள், அம்மா, அக்காவின் ஏச்சு-பேச்சுகள் எதையும் பொருட்படுத்தாமல் ...

காஷ்மீரில் ராணுவ உடையில் வந்து பயங்கரவாதிகள் தாக்குதல்

Posted: 27 Mar 2014 08:28 PM PDT

ஜம்மு : ஜம்மு காஷ்மீரின் கத்துவா பகுதியில் இன்று (மார்ச் 28) அதிகாலை பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கத்துவாவை அடுத்த தயலாசக் பகுதியில் உள்ள ராணுவ முகாம் பகுதியில் வந்த வெள்ளை நிற போலிரோ காரை, ராணுவ உடையில் வந்த 4 பயங்கரவாதிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர். காரில் இருந்த பயணிகள் கீழே இறங்கியதும், யாரும் எதிர்பாராத விதமாக அந்த பயணிகள் மீது சரமாறியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி உள்ளனர். பின்னர் அந்த காரிலேயே பயங்கரவாதிகள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™