Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


சென்னை மாணவர்கள் சிரியா நாட்டின், புரட்சி படையில் சேர்ந்தார்களா?

Posted: 25 Mar 2014 09:13 AM PDT

சென்னை,

சென்னையில் படித்த கல்லூரி மாணவர்கள் இருவர், சிரியா நாட்டின் புரட்சி படையில் சேர்ந்துள்ளதாகவும், அவர்களை சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள் இருவர்தான், சிரியா நாட்டிற்கு அனுப்பி வைத்ததாகவும் பரபரப்பு தகவல்கள்  வெளியானது.

இது பற்றி, தமிழக உளவுப்பிரிவு மற்றும் தீவிரவாதிகள் கண்காணிப்பு பிரிவு உயர் போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, எங்களுக்கு அதுபோன்ற தகவல் எதுவும் வரவில்லை என்றும், மத்திய உளவுப்பிரிவு போலீசாரும் அதுபோன்ற தகவலை எங்களுக்கு அனுப்பவில்லை என்றும், இதனால் அதுபற்றி நாங்கள் விசாரணை எதுவும் நடத்தவில்லை என்றும் தெரிவித்தனர்.
 

category:

News Group Category:

ஒரு வாரம் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுரை டாக்டர் ராமதாசுக்கு மருத்துவ பரிசோதனை

Posted: 25 Mar 2014 09:02 AM PDT

சென்னை,

கடந்த ஆண்டு மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் பெருவிழாவின்போது ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக, பா.ம.க.வினர் பலர் கைது செய்யப்பட்டனர். கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசும் கைது செய்யப்பட்டு ஒரு வாரத்திற்கு மேல் ஜெயிலில் இருந்தார். பின்னர், வெளியே வந்த அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர், சில மாதம் ஓய்வில் இருந்த அவர், தொடர்ந்து கட்சிப் பணியை மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு மருத்துவ பரிசோதனை செய்துகொள்வதற்காக, டாக்டர் ராமதாஸ் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்தார். டாக்டர்கள் அவருக்கு அனைத்து பரிசோதனைகளும் மேற்கொண்டனர்.பின்னர், ஒரு வாரம் ஓய்வு எடுக்குமாறு டாக்டர்கள் அவருக்கு அறிவுரை வழங்கினார்கள். அதனை தொடர்ந்து, மதியம் 12.30 மணியளவில் டாக்டர் ராமதாஸ் வீடு திரும்பினார்.
 

category:

News Group Category:

எஜமானருக்கு காதல் மூட்டிய வழிகாட்டி நாய்கள்

Posted: 25 Mar 2014 08:57 AM PDT

காதல் திருமணம் என்பது பெரும்பாலும் நண்பர்கள் உதவியுடன் கைகூடுவதுண்டு. சிலி நாட்டிலுள்ள பரால்ஸ்டன் நகரில் இதுபோன்ற ஒரு வித்தியாசமான சம்பவம் நடந்தது. அதாவது எஜமானர்களை இவர்களது வழிகாட்டி நாய்கள் ஒன்றாக சேர்த்து வைத்தன. கிளேர் ஜான்சன் (50), மார்க் கப்பெய் (51) இருவரும் முன்பின் தெரியாதவர்கள் மட்டுமின்றி கண்பார்வை இழந்தவர்கள். இவர்களுக்கு வழிகாட்டி நாய்கள் தான் உறுதுணை. முதலில் அவை இரண்டுக்கும் பழக்கம் ஏற்பட்டு விட்டது.
பிறகு தங்களது எஜமானர்களுக்கு இடையே உண்மையான காதல் எது என்பதை புரிய வைத்தன. அதன் விளைவு எஜமானர்கள் இருவரும் மோதிரம் மாற்றி தம்பதிகள் ஆகிவிட்டார்கள்.
 

image: 

category:

News Group Category:

வடோதரா தொகுதியில் நரேந்திர மோடிக்கு எதிரான காங்கிரஸ் வேட்பாளர் ‘திடீர்’ விலகல்

Posted: 25 Mar 2014 08:46 AM PDT

புதுடெல்லி,

குஜராத் முதல்-மந்திரியும், பா.ஜனதாவின் பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடி, பாராளுமன்ற தேர்தலில், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியிலும், குஜராத் மாநிலம் வடோதரா தொகுதியிலும் போட்டியிடுகிறார்.வடோதரா தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக உள்ளூர் தலைவர் நரேந்திர ரவத் அறிவிக்கப்பட்டு இருந்தார். காங்கிரஸ் நிர்வாகிகளிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அவர் அதிக ஓட்டுகள் பெற்றதால், வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்தார்.

இந்நிலையில், வடோதராவில் நரேந்திர மோடி போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டவுடன், காங்கிரஸ் வேட்பாளர் நரேந்திர ரவத், போட்டியில் இருந்து விலகுவதாகதிடீரென அறிவித்தார். இத்தகவலை மேலிடத்துக்கு தெரிவிக்குமாறு, அவர் தன்னிடம் கூறியதாக குஜராத்துக்கான காங்கிரஸ் பொறுப்பாளர் குருதாஸ் காமத் நிருபர்களிடம் கூறினார்.மோடிக்கு எதிராக வலிமையான வேட்பாளரை நிறுத்த வசதியாக, அவர் விலகியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வலிமையான வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டது.

அதன்படி, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் மதுசூதன் மிஸ்திரியை வடோதரா தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
 

category:

News Group Category:

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணி 171 ரன்கள் குவிப்பு

Posted: 25 Mar 2014 08:28 AM PDT

மிர்பூர்,

20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் குரூப்-2 பிரிவில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்காளதேசம் அணிகள் இன்று மோதின. இந்த போட்டி மிர்பூரில் உள்ள ஸ்ரீ பங்களா தேசிய மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலீல் பந்து வீச முடிவு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது.  வெஸ்ட் இண்டீஸ் அணியில்  அதிகபட்சமாக ஸ்மித் 72 ரன்களும் கெய்ல் 48 ரன்களும் எடுத்தனர்.   வங்காளதேச அணி தரப்பில் சகிப் அல் ஹாசன் 21 ரன்கள் விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு வங்காள தேசம் அணிக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
 

category:

News Group Category:

காங்கிரஸ் கட்சியின் 4-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Posted: 25 Mar 2014 08:11 AM PDT

புதுடில்லி

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் மூன்றாவது வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி தொகுதியில் வசந்தகுமார், வடசென்னை தொகுதியில் பிஜூ சாக்கோ, கரூர் தொகுதியில் ஜோதிமணி, கிருஷ்ணகிரி தொகுதியில் ஏ. செல்லக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும், விழுப்புரம் தென்சென்னை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

வாதோத்ராவில் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் மோடியை எதிர்த்து மதுசூதன் மிஸ்திரி போட்டியிடுவார்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

category:

News Group Category:

இலங்கை போரில் மனித உரிமை மீறல்கள்: ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இறுதி வரைவு தீர்மானம் தாக்கல்

Posted: 25 Mar 2014 07:57 AM PDT

கொழும்பு,

இலங்கை போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விரிவான, சுதந்திரமான விசாரணை நடத்த வலியுறுத்தும் இறுதி வரைவு தீர்மானம், ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்டது.
 

category:

News Group Category:

அமெரிக்க உளவுத்துறை மூலம் டெலிபோன் தகவல்களை திரளாக சேகரிப்பது நிறுத்தம்?

Posted: 25 Mar 2014 07:23 AM PDT

வாஷிங்டன்,

அமெரிக்கா தேசிய பாதுகாப்பு துறையினர் உலக தலைவர்கள் பேச்சு உள்பட கோடிக்கனக்கான டெலிபோன் தகவல்களை ஒட்டு கேட்ட தகவலை முன்னாள் ஊழியர் எட்வர்டு ஸ்நோடென் அம்பலப்படுத்தினார். இது அமெரிக்காவுக்கு எதிராக உலக அளவில் எதிர்ப்புகுரல் உருவாகியது. உள்நாட்டிலும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. அதேநேரத்தில் தீவிரவாத செயலை ஒடுக்கவும், அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதலை கண்டறிய இந்த உளவில் ஈடுபட்டதாக அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ஒட்டுக்கேட்பு சர்ச்சைக்கு முடிவு காண அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா திட்டமிட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு துறையினர் திரளாக டெலிபோன் தகவல்களை திரட்டுவது நிறுத்தப்படும். ஆனால் அவசியம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் தேவையான தகவலை பெற அனுமதிக்கப்படும் என முடிவு செய்திருக்கிறார். இந்த தகவலை அரசின் நிர்வாக துறை மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

image: 

category:

News Group Category:

தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடருவேன்: அழகிரி

Posted: 25 Mar 2014 07:05 AM PDT

மதுரை,

தி.மு.க.வில் தெண்மண்டல அமைப்பு செயலாளராக இருந்த மு.க. அழகிரி சில மாதங்களுக்கு முன்னர் தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். சமீபத்தில் மதுரையில் மு.க.அழகிரியை வைகோ சந்தித்தார். அப்போது அவர் பாரதீய ஜனதா கூட்டணிக்கு ஆதரவு தருமாறு கேட்டு கொண்டார். இதேபோல் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர் ஹெச். ராஜாவும் அழகிரியை சந்தித்து பேசி ஆதரவு கோரினார். இந்நிலையில் கட்சியில் இருந்து மு.க. அழகிரி நீக்கப்பட்டுள்ளார்.

சென்னை அறிவாலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி; கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட அழகிரி விளக்கம் கேட்டதற்கு இன்னும் பதில் அளிக்கவில்லை. அழகிரி மேலும், மேலும், தி.மு.க.வை விமர்சிக்கும் வகையில் நடந்து வருகிறார். இந்நிலையில் தி.மு.க.வில் இருந்து அழகிரியை நிரந்தரமாக நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நானும் கட்சியின் பொதுச் செயாலாளர் க.அன்பழகனும் கலந்து ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து , மதுரையில் பேட்டியளித்த மு.க.அழகிரி , "நான் நீக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன். எந்தவித முன்னறிவிப்புமின்றி என்னை நீக்கியதற்கும் எனது குற்றச்சாட்டுகளுக்கும் தி்.மு.க.  கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும்.

நான் நீக்கப்பட்டதால் நானும் என்னைச் சேர்ந்தவர்களும் கட்சியில் இருந்து வெளியேறுவோம் என்று அர்த்தம் கிடையாது. மேலும் தி்.மு.க. எங்களுக்கு சொந்தமில்லை என்றும் அர்ததம் கிடையாது. எந்த மாற்றுக் கட்சிக்காரர்களையும் நான் ஆதரிக்கவில்லை. நானும் எனது ஆதரவாளர்களும் என்றும் தி்.மு.க.வை சேர்ந்தவர்களாகத்தான் இருப்போம்" என்று தெரிவித்தார்.

category:

News Group Category:

பா.ஜனதா அரசு அமைக்க தி.மு.க. ஆதரவு அளிக்காது என்று கருணாநிதி அறிவிப்பாரா? ப.சிதம்பரம் கேள்வி

Posted: 25 Mar 2014 06:50 AM PDT

சென்னை,

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, மத்தியில் அரசு அமைக்க பா.ஜ.க. முன்வந்தால், தி.மு.க. ஆதரவு அளிக்காது என தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவிப்பாரா? என மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.இதுகுறித்து மத்திய மந்திரி ப.சிதம்பரம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு, மத்தியில் அரசு அமைக்கும் முயற்சியில் பாரதீய ஜனதா கட்சி ஈடுபட்டால், அந்த கட்சிக்கு யார் ஆதரவுக்கரம் நீட்டுவார்கள் என்ற கேள்வியை நான் எழுப்பி வருகிறேன். இந்த கேள்வி குறித்து தி.மு.க. தன்னுடைய நிலைப்பாட்டை இன்னும் தெளிவாக்கவில்லை என்பதை கவலையுடன் சுட்டிக்காட்டுவது என்னுடைய கடமையாகிறது.தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், 1999-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் தி.மு.க. ஏன் கூட்டணி அமைத்தது என்று விளக்கமளிக்க முயன்றிருக்கிறார். அது ஏற்புடைய விளக்கமாக எனக்கு தோன்றவில்லை என்பதை கனத்த உள்ளத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகளுக்குப்பின் தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன என்பதுதான் இப்பொழுது எழுந்துள்ள கேள்வி.தேர்தல் முடிவுகளுக்குப்பிறகு மத்தியில் அரசு அமைக்க பா.ஜ.க. முன்வந்தால், அந்த முயற்சிக்கு தி.மு.க. ஒருபோதும், எந்த சூழ்நிலையிலும் ஆதரவு அளிக்காது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்தால் மட்டுமே தி.மு.க.வின் நிலைப்பாடு தெளிவாகும்.இவ்வாறு மத்திய மந்திரி ப.சிதம்பரம் அறிக்கையில் கூறியுள்ளார்.
 

category:

News Group Category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™