Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


பிரிவுஉபசார பேச்சு தயாரானது எப்படி? தெண்டுல்கர் தகவல்

Posted: 02 Mar 2014 12:22 PM PST

மும்பை

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கடந்த ஆண்டில் நவம்பர் மாதம் மும்பையில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். பிரிவு உபசார டெஸ்டின் முடிவில் கூடியிருந்த ரசிகர்கள் மத்தியில் தெண்டுல்கர் உருக்கமாக உரையாற்றினார். அவரது உரை ரசிகர்களின் கண்களில் கண்ணீர் கரைபுரள வைத்தது என்றால் மிகையாகாது. தனது பிரியாவிடை பேச்சு தயாரானது எப்படி என்பது குறித்து நேற்று மும்பையில் நடந்த விழாவில் பங்கேற்ற தெண்டுல்கர் கூறியதாவது:-

கொல்கத்தா டெஸ்ட் முடிந்து மும்பை திரும்பியதும், இது தான் எனது கடைசி டெஸ்ட் போட்டி என்பதை உணர்ந்தேன். இந்த போட்டி முடிவில் எனது பேச்சை கேட்க உலகமே உற்றுநோக்கும் என்பதை உணர்ந்து இருந்ததால், தனியாக அமர்ந்து சிந்தித்து எனது வாழ்க்கையில் முன்னேற்றதிற்கு உதவியாக இருந்த முக்கியமான நபர்களின் பெயர்கள் எதுவும் விடுபட்டுவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு அவர்களின் பெயரை எழுதி வைத்துக் கொண்டேன்.

ரசிகர்கள் முன்னிலையில் திடீரென பேசியது சிறப்பான தருணம் என்றாலும், எல்லோருடைய பெயர்களையும் நான் தவறாமல் குறிப்பிட்டேன். மற்ற பேச்சுகள் அனைத்தும் எனது இதயத்தில் இருந்து வந்தவையாகும். ஆனால் இப்படி தான் பேச வேண்டும் என்று நான் ஒத்திகை எதுவும் பார்க்கவில்லை. கடவுளின் அருளால், நான் எதிர்பார்த்ததை விட எல்லாம் சிறப்பாக அமைந்தது. நான் ஓய்வு முடிவை அறிவித்த பிறகு ரசிகர்களிடம் இருந்து கிடைத்த அன்பும், ஆதரவும் நம்பமுடியாத வகையில் இருந்தது. இதுபோன்ற நிலையை நான் ஒருபோதும் அனுபவித்தது கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

category:

3 வாரத்துக்கு முன்பு பாக். தீவிரவாதிகளால் சிறைபிடித்த 5 ஈரான் வீரர்கள் விடுதலை

Posted: 02 Mar 2014 12:18 PM PST

துபாய்,

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானில் செயல்படும் தீவிரவாதிகள் கடந்த பிப்ரவரி 6–ந்தேதி ஈரான் நாட்டை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படையின் 5 வீரர்கள் உள்பட 11 வெளிநாட்டினரை சிறைபிடித்தார்கள். 3 வாரத்துக்கு பிறகு 5 வீரர்களும் பாகிஸ்தானின் தலையீட்டினால் விடுதலை பெற்றனர் என்று ஈரான் கூறியது. ஆனால் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இது எங்கள் கவனத்துக்கு வரவில்லை என்று சொல்லி உறுதி செய்ய மறுத்து விட்டார்கள்.

category:

News Group Category:

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: மைக்கேல் கிளார்க் சதம் அடித்தார்

Posted: 02 Mar 2014 12:17 PM PST

கேப்டவுன்,

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் சதம் அடித்தார்.

தடுமாறி சதம் அடித்த கிளார்க்

ஆஸ்திரேலியா–தென்ஆப்பிரிக்கா இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா டேவிட் வார்னரின் (135 ரன்) சதத்தின் உதவியுடன் முதல் நாளில் 331 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் மைக்கேல் கிளார்க் 92 ரன்களுடனும், ஸ்டீவன் சுமித் 50 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 2–வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. சதத்தை எடுப்பதற்குள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பெரும்பாடு பட்டு விட்டார். 99 ரன்களில் இருந்து 100–வது ரன்னை அடைவதற்கு அவர் 24 பந்துகளை விரயமாக்க வேண்டி இருந்தது. இதனால் பதற்றத்திற்குள்ளான கிளார்க் ஒரு வழியாக பிலாண்டரின் ஓவரில் பந்தை பவுண்டரிக்கு திருப்பி தனது 27–வது சதத்தை பூர்த்தி செய்தார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அவரது 5–வது செஞ்சுரியாகும். ஆனால் அதன் பிறகு அதே ஓவரில் கிளார்க் மேலும் இரு பவுண்டரி சாத்தினார்.

மழையால் பாதிப்பு

அணியின் ஸ்கோர் 401 ரன்களாக உயர்ந்த போது, ஸ்டீவன் சுமித் 84 ரன்களில்(155 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) டீன் எல்கரின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். அடுத்து வந்த ஷேன் வாட்சன்(40 ரன்), பிராட் ஹேடின் (13 ரன்), மிட்செல் ஜான்சன் (0) ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர் டுமியின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தனர்.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 494 ரன்கள் குவித்திருந்த போது, மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் அத்துடன் 2–வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. மைக்கேல் கிளார்க் 161 ரன்களுடன் (301 பந்து, 17 பவுண்டரி) களத்தில் இருக்கிறார்.

தென்ஆப்பிரிக்க தரப்பில் டுமினி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தசைப்பிடிப்பால் முதல் நாளில் பாதியில் வெளியேறிய தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் 2–வது நாளில் பந்து வீசவில்லை. இது தென்ஆப்பிரிக்காவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. டுமினி தனது ஓவரின் கடைசி இரு பந்துகளில் ஹேடின், ஜான்சனை சாய்த்ததால் இன்றைய 3–வது நாளில் 'ஹாட்ரிக்' வாய்ப்புடன் பந்து வீச்சை தொடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

category:

இறுதிப்போட்டியை உறுதி செய்யும் முனைப்பில் இலங்கை ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதல்

Posted: 02 Mar 2014 12:13 PM PST

மிர்புர்

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில், மிர்புர் மைதானத்தில் இன்று நடக்கும் 7–வது லீக்கில் முன்னாள் சாம்பியன் இலங்கையை, ஆப்கானிஸ்தான் எதிர்கொள்கிறது. பலம் வாய்ந்த இந்தியா, பாகிஸ்தான் அணிகளை வீழ்த்திய இலங்கை அணி, 'வளர்ந்து வரும்' ஆப்கானிஸ்தானையும் பந்தாடி இறுதி சுற்றை உறுதிபடுத்தும் முனைப்புடன் உள்ளது. ஆனால் முதல் முறையாக ஆசிய போட்டியில் பங்கேற்றுள்ள போதிலும் ஆப்கானிஸ்தான் சவால் அளிக்கும் வகையில் ஆடுகிறது. எனவே அந்த அணியை, இலங்கை வீரர்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.

தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோற்று 2–வது ஆட்டத்தில் வங்காளதேசத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிக்கு, எதிரணியை கடைசி வரை சமாளித்து தாக்குப்பிடிக்க வேண்டும் என்பதே பிரதான குறிக்கோளாகும். ஆப்கானிஸ்தான் வீரர் ஆஷர் ஸ்டானிக்ஜாய் கூறுகையில், 'வங்காளதேசத்தை வீழ்த்தியது எங்களுக்கு கிடைத்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிக்கு எதிராக 4–வது முயற்சியிலேயே முதல் வெற்றியை பெற்று விட்டோம். எஞ்சிய இரு ஆட்டங்களில் (இலங்கை அல்லது இந்தியா) ஒன்றில் வெற்றி பெற முடியும் என்றால், அது எங்களுக்கு இதைவிட மிகப்பெரிய சாதனையாக இருக்கும்' என்றார். பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

category:

அரசு பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள் சென்னையில் நடக்கிறது

Posted: 02 Mar 2014 12:10 PM PST

சென்னை,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (எஸ்.டி.ஏ.டி) சென்னை மாவட்ட பிரிவு சார்பில் அரசு பணியாளர்களுக்கான மாவட்ட விளையாட்டு போட்டிகள் (இருபாலருக்கும்) சென்னையில் வருகிற 5 மற்றும் 6–ந் தேதிகளில் நடக்கிறது. இதில் பேட்மிண்டன் போட்டி செனாய் நகர் நீச்சல் வளாகத்திலும், கூடைப்பந்து, கால்பந்து போட்டிகள் நேரு உள்விளையாட்டு அரங்கிலும், கபடி, டேபிள் டென்னிஸ், கைப்பந்து போட்டி நேரு ஸ்டேடியத்திலும், டென்னிஸ் போட்டி நேரு பூங்கா விளையாட்டு அரங்கிலும் வருகிற 5–ந் தேதி நடக்கிறது. தடகள போட்டி வருகிற 6–ந் தேதி நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்க அரசு துறைகளில் முழு நேரப்பணி புரியும் அலுவலர்கள், பணியாளர்கள் தகுதியுடையவர்கள். தடகள போட்டியில் முதலிடம் பெறுபவர்கள் மற்றும் குழு போட்டியில் தேர்வு செய்யப்படும் வீரர்–வீராங்கனைகள் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்படும் போது எஸ்.டி.ஏ.டி.யால் சீருடை வழங்கப்படும்.

இந்த தகவலை மாவட்ட விளையாட்டு அதிகாரி டி.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

category:

தேசிய கூடைப்பந்து: தமிழக ஆண்கள் அணிக்கு 4–வது வெற்றி

Posted: 02 Mar 2014 12:08 PM PST

புதுடெல்லி,

64–வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் தமிழக அணி, இந்தியன் ரெயில்வே அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தமிழக அணி 83–62 என்ற புள்ளி கணக்கில் ரெயில்வே அணியை வீழ்த்தி தொடர்ந்து 4–வது வெற்றியை சுவைத்து தனது பிரிவில் முதலிடம் பிடித்தது. தமிழக அணியில் பிரதாம்சிங், பிரசன்ன வெங்கடேஷ் தலா 23 புள்ளிகள் சேர்த்தனர். பெண்கள் பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் தமிழக அணி 84–34 என்ற புள்ளி கணக்கில் மத்தியபிரதேசத்தை தோற்கடித்து 2–வது வெற்றியை ருசித்தது. தமிழக அணி தரப்பில் சோனியா ஜாய், ஸ்ரீவித்யா, ரம்யா தலா 12 புள்ளிகள் சேர்த்தனர்.

category:

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா இன்று பிரசாரம்; காஞ்சீபுரத்தில் தொடங்குகிறார்

Posted: 02 Mar 2014 11:36 AM PST

சென்னை,

பாராளுமன்றத்துக்கு வருகிற ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க. வேட்பாளர்கள்

தமிழகத்தில் ஆளும் கட்சியான அ.தி.மு.க., பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளது.

அக்கட்சியின் பொது செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா கடந்த மாதம் (பிப்ரவரி) 24–ந் தேதி, தனது பிறந்த நாள் அன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

ஜெயலலிதா பிரசாரம்

மேலும், அன்றைய தினமே, தனது தேர்தல் பிரசார சுற்றுப்பயண விவரத்தையும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, அடுத்த நாளே (25–ந் தேதி) அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையையும் அவர் வெளியிட்டார்.

தமிழகத்தில் முதல்கட்டமாக, இன்று (திங்கட்கிழமை) முதல் ஏப்ரல் மாதம் 5–ந் தேதி வரை 16 நாட்கள் ஜெயலலிதா சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து 19 இடங்களில் அவர் பேசுகிறார்.

இன்று காஞ்சீபுரத்தில் பேசுகிறார்

பிரசாரத்தின் தொடக்க நாளான இன்று காஞ்சீபுரம் (தனி) பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேலுவை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதற்காக காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் வீதியில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு நடைபெறும் பிரசார கூட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொண்டு பேசுகிறார்.

இதற்காக, முதல்–அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் காஞ்சீபுரம் செல்கிறார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்படும் அவர், 3.40 மணிக்கு ஐ.என்.எஸ். அடையார் ஹெலிகாப்டர் தளத்திற்கு வருகிறார். பின்னர், அங்கு தயார் நிலையில் இருக்கும் ஹெலிகாப்டரில் ஏறி காஞ்சீபுரத்திற்கு செல்கிறார். ஹெலிகாப்டர் இறங்குவதற்கு வசதியாக காஞ்சீபுரத்தில் பிரத்யேக 'ஹெலிபேடு' அமைக்கப்பட்டு உள்ளது.

பின்னர், அங்கிருந்து காரில் பிரசார மேடைக்கு செல்லும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா மாலை 4.30 மணிக்கு காஞ்சீபுரம் தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். மாலை 5.30 மணிக்கு பிரசாரத்தை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டர் மூலம் சென்னை திரும்புகிறார்.

விழாக்கோலம்

முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று காஞ்சீபுரம் வருவதையொட்டி, அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அ.தி.மு.க. கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பெயரிலேயே அண்ணாவின் பெயரை கொண்டுள்ள அ.தி.மு.க.வின் தேர்தல் பிரசாரமும், அவர் பிறந்த ஊரான காஞ்சீபுரத்தில் இருந்தே தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை (செவ்வாய்கிழமை) ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.என்.ராமச்சந்திரனை ஆதரித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசுகிறார். இதற்காக, மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி வளாகத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது.

News Category:

Hot Topic Icon : 

News Group Category:

மேஷம்

Posted: 02 Mar 2014 11:03 AM PST

விரயங்கள் அதிகரிக்கும் நாள். வீட்டுத்தேவைகள் பூர்த்தியாகும். ஒரு வேலையை முடிக்க ஒன்றுக்கு இரண்டுமுறை அலைய நேரிடலாம். கையிருப்பு கரையும். தொழில் மாற்ற சிந்தனை உருவாகும்.

Zodiac sign:

Astro Category: 
Daily

இன்று நாள் எப்படி?

Posted: 02 Mar 2014 11:01 AM PST

Endru Image: 

ஆன்மீக சிந்தனை (03-02-2014)

Posted: 02 Mar 2014 10:52 AM PST

Daily Thanthi Special Term:

Daily Thanthi Image Special Anmikasinthanai: 


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™