Daily Thanthi |
- காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறும் ஓட்டுப்பதிவுக்கு கூடுதலாக 2 மணி நேரம்; தேர்தல் கமிஷன் முடிவு
- மூன்று மாதங்கள் தொடர் சரிவுக்கு பின் தொழில்துறை உற்பத்தி 0.1 சதவீதம் அதிகரிப்பு
- அன்னிய முதலீடு அதிகரித்து வருவதால் ‘சென்செக்ஸ்’ 30 புள்ளிகள் உயர்வு
- வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை: தேர்தல் கமிஷன் புதிய கட்டுப்பாடுகள்; வங்கியில் ரூ.1 லட்சத்துக்கு மேல் எடுத்தாலும், போட்டாலும் கண்காணிக்கப்படும்
- முதல் 11 மாதங்களில் பரஸ்பர நிதி துறை அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது
- அரசு மதிப்பீடுகளுக்கு மாறாக கோதுமை உற்பத்தி குறையும்
- வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு
- ஆன்மீக சிந்தனை (13-03-2014)
- ஆண்டியார் (13-03-2014)
- சாணக்கியன் சொல் (13-03-2014)
| Posted: 12 Mar 2014 01:04 PM PDT புதுடெல்லி, ஓட்டுப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. ஆலோசனை பாராளுமன்ற தேர்தல், அடுத்த மாதம் 7–ந்தேதி தொடங்கி, மே 12–ந்தேதிவரை 9 கட்டங்களாக நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை மொத்தம் 9 மணி நேரம் ஓட்டுப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஓட்டுப்பதிவு நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வேண்டுகோள் விடுத்தனர். இதுபற்றி தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத், தேர்தல் கமிஷனர்கள் பிரம்மா, நசீம் சைதி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். நேரம் அதிகரிப்பு இந்நிலையில், ஓட்டுப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. அதாவது, காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி, மாலை 6 மணிவரை நடைபெறும். எனவே, 11 மணி நேரம், ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. ஆனால், மாவோயிஸ்டுகள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில், காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 4 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிவடைந்து விடும். அதாவது, 9 மணி நேரம்தான், அந்த பகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெறும். இத்தகவல்களை தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன. அசாமில் முகாமிட்டுள்ள தேர்தல் கமிஷனர்கள் டெல்லிக்கு திரும்பி வந்த பிறகு, இந்த முடிவுக்கு இறுதி ஒப்புதல் அளிப்பார்கள். அதன்பின்னர், இம்முடிவு, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன. காரணம் என்ன? கடந்த பாராளுமன்ற தேர்தலை விட, தற்போது கூடுதலாக 10 கோடி புதிய வாக்காளர்கள் சேர்ந்துள்ளனர். சமீபகாலமாக, தேர்தல்களில் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்து வருகிறது. ஓட்டுப்பதிவு முடிவடையும் நேரத்தில், வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நிற்பதை காண முடிகிறது. மேலும், இந்த தேர்தல், நல்ல வெயில் காலத்தில் நடைபெறுவதால், வாக்காளர்கள் மாலை நேரத்தில் வெயில் தணிந்த பிறகே வாக்களிக்க வர வாய்ப்புள்ளது. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டுதான், ஓட்டுப்பதிவு நேரத்தை அதிகரிக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. image: Tagging:News Group Category: |
| மூன்று மாதங்கள் தொடர் சரிவுக்கு பின் தொழில்துறை உற்பத்தி 0.1 சதவீதம் அதிகரிப்பு Posted: 12 Mar 2014 12:45 PM PDT புதுடெல்லி ஜனவரி மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 0.1 சதவீதம் உயர்ந்துள்ளது. டிசம்பர் மாதத்தில் 0.16 சதவீதம் (மறு மதிப்பீட்டின்படி) சரிவடைந்து இருந்தது. நவம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 2.1 சதவீதம் மற்றும் 1.8 சதவீதம் குறைந்து இருந்தது. முன்னேற்றம் ஆக, மூன்று மாதங்கள் தொடர் சரிவுக்குப் பின் தொழில்துறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி குறித்து பிரதம மந்திரியின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் சி.ரங்கராஜன் கூறுகையில், ''ஜனவரியில் எதிர்பார்ப்புகளுக்கு இணையாக தொழில்துறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் உற்பத்தி துறையில் வளர்ச்சி ஏற்படும்'' என்று தெரிவித்துள்ளார். மின் உற்பத்தி அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் ஆதாரமாகத் திகழும் மின் உற்பத்தி வளர்ச்சி 6.4 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. முதல் 10 மாதங்களில் இந்த உற்பத்தி 4.7 சதவீதத்திலிருந்து 5.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2013–ஆம் ஆண்டு ஜனவரியில் 1.8 சதவீதம் சரிவடைந்து இருந்த சுரங்கத்துறை உற்பத்தி இவ்வாண்டு ஜனவரியில் 0.7 சதவீதம் உயர்ந்துள்ளது. தொழில்துறை உற்பத்தியை கணக்கிடுவதில் இத்துறையின் பங்கு 14 சதவீதமாக உள்ளது. உற்பத்தி துறை தொழில்துறை உற்பத்தியை கணக்கிடுவதில் உருக்கு, சிமெண்டு உள்ளிட்ட உற்பத்தி துறையின் பங்கு 75 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. உள்நாட்டில் கடனிற்கான வட்டி விகிதம் அதிகமாக உள்ளதால் கார், நுகர்வோர் சாதனங்கள் விற்பனை குறைந்துள்ளது. நிறுவனங்களும் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றன. இதனையடுத்து, உற்பத்தி துறையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் உற்பத்தி துறையில் 0.7 சதவீதம் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் இது 2.7 சதவீதம் உயர்ந்து இருந்தது. நடப்பு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் உற்பத்தி துறையில் 0.4 சதவீதம் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பொறியியல் துறை உற்பத்தி 4.2 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2013 ஜனவரியில் தொழில்துறை உற்பத்தி 2.5 சதவீதம் உயர்ந்து இருந்தது. இதனுடன் ஒப்பிடும்போது வளர்ச்சி குறைந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் தொழில்துறையில் எவ்வித வளர்ச்சியும் ஏற்படவில்லை. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் 1 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டு இருந்தது. பொருளாதார வளர்ச்சி பொருளாதார வளர்ச்சியை எடுத்துக்காட்டும் ஜி.டீ.பி. எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடுவதில் தொழில்துறையின் பங்கு 26 சதவீதமாக உள்ளது. தொழில்துறையின் பின்னடைவால் கடந்த 2012–13–ஆம் நிதி ஆண்டில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக குறைந்தது. நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி நிபுணர்களின் மதிப்பீடுகளுக்கு மாறாக 4.7 சதவீதமாக குறைந்தது. தொடர்ந்து ஏழு காலாண்டுகளாக பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. தேர்தல் செலவினம் கார், நுகர்வோர் சாதனங்கள், உருக்கு பொருள்கள் போன்றவற்றின் விற்பனை குறைந்ததுதான் பொருளாதார மந்தநிலைக்கு பின்னணியாக உள்ளது. இந்நிலையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தேர்தல் செலவினம் 0.5 சதவீதமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, நான்காவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. image: category:Tagging: |
| அன்னிய முதலீடு அதிகரித்து வருவதால் ‘சென்செக்ஸ்’ 30 புள்ளிகள் உயர்வு Posted: 12 Mar 2014 12:42 PM PDT இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு புதுடெல்லி பங்குச் சந்தைகளில் நிலவும் ஏற்ற தாழ்வுகளால் நடப்பு நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஏப்ரல்–பிப்ரவரி) பரஸ்பர நிதி நிறுவனங்கள் ரூ.10,319 கோடிக்கு பங்குகளை விற்பனை செய்துள்ளன என செபி அமைப்பின் புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விற்பனை பரஸ்பர நிதி நிறுவனங்கள் பல்வேறு முதலீட்டு திட்டங்களின் வாயிலாக முதலீட்டாளர்களிடமிருந்து நிதியை திரட்டுகின்றன. நிறுவன பங்குகள், நிதிச் சந்தைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கடன்பத்திரங்கள் போன்றவற்றில் இந்த நிதி முதலீடு செய்யப்படுகிறது. கடந்த 2013 செப்டம்பர் மாதம் முதல் இந்நிறுவனங்கள் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து வந்துள்ளன. நடப்பு நிதி ஆண்டில் இதுவரையிலான காலத்தில் மே மற்றும் ஆகஸ்டு மாதத்தில் மட்டுமே பரஸ்பர நிதி நிறுவனங்கள் பங்குகளில் முதலீடு செய்துள்ளன. கடந்த ஆகஸ்டு மாதம் ரூ.1,607 கோடி அளவிற்கு பங்குகளில் முதலீடு செய்திருந்தன. அக்டோபர் மாதத்தில் அதிகபட்சமாக பங்குகளில் மேற்கொண்டிருந்த முதலீட்டில் ரூ.4,018 கோடியை விலக்கி உள்ளன. நடப்பு நிதி ஆண்டில் பரஸ்பர நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வதை முதலீட்டாளர்கள் ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் நிலையற்ற வட்டி விகிதம் போன்ற அளவீடுகளை கொண்டு நிர்ணயித்துள்ளனர். பங்குச் சந்தையில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளால் பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து 35 லட்சம் கணக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. பரஸ்பர நிதி நிறுவனங்கள் பங்கு சார்ந்த முதலீடு குறைத்துள்ள போதிலும் கடன்பத்திரங்களில் முதலீட்டை அதிகரித்துள்ளன. பங்குகளில் முதலீடு செய்து பெறும் ஆதாயத்தை காட்டிலும் கடன்பத்திரங்களில் முதலீட்டில் கிடைக்கும் ஆதாயம் நிலையாக இருப்பதே இதற்கு காரணமாகும். முதல் 11 மாதங்களில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் கடன் சந்தைகளில் மேற்கொண்ட நிகர முதலீடு ரூ.4.43 லட்சம் கோடியாக உள்ளது. தேர்தலுக்கு பிறகு... பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு நிலையான ஆட்சி அமையும் என்ற எதிர்பார்ப்புகளால் நடப்பு ஆண்டின் பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். image: category:Tagging: |
| Posted: 12 Mar 2014 12:32 PM PDT சென்னை, பாராளுமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் 7–ந்தேதி தொடங்கி மே மாதம் 12–ந்தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் கமிஷன் நடவடிக்கை தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் 24–ந்தேதி ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கடந்த 5–ந்தேதியில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க தேர்தல் கமிஷன் ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. சட்டவிரோதமாக பண பரிமாற்றம் நடைபெறாமல் தடுக்க வாகன சோதனையும் நடத்தப்படுகிறது. தேர்தல் செலவுகளை கண்காணிப்பதற்காக மாவட்ட ரீதியாக வருமான வரித்துறை அதிகாரிகளை கொண்ட தனிப்படை அமைக்கப்பட இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நேற்று முன்தினம் அறிவித்தார். புதிய கட்டுப்பாடுகள் இந்த நிலையில், மேலும் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– பாராளுமன்ற தேர்தலுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு உள்ளது. அங்கு தகவல் கொடுப்பதற்கான இலவச தொலைபேசி எண்ணை இணைய தளத்தில் காணலாம். எனது அலுவலத்துக்கு தினமும் 300 தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. பெரும்பாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்ற புகார் கூறப்படுகிறது. பூத் சிலிப்புகளை கட்சிகளும் தரலாம் 'பூத்' சிலிப்புகளை வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் கொடுப்பதற்கு தடை கிடையாது. ஆனால் அந்த சிலிப்புகள் வெள்ளை நிறத்தில் அச்சடிக்கப்பட்டு இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டு இருக்க வேண்டும். அதில் கட்சி சின்னம் இடம் பெறலாம். ஆனால் வாக்குச்சாவடிகளுக்கு செல்லும் போது கட்சி சின்னம் இருக்கும் பாகம் கிழிக்கப்பட்டு இருக்க வேண்டும். அரசியல் கட்சிகள் தரும் 'பூத்' சிலிப்புகளில் வாக்காளர் புகைப்படம் இருக்காது. தேர்தல் கமிஷன் சார்பில் வாக்காளர் புகைப்படத்துடன் 'பூத்' சிலிப்புகள் தரப்படும். ஓட்டுப்பதிவு செய்யும் போது தேர்தல் கமிஷன் கொடுக்கும் 'பூத்' சிலிப்போ அல்லது வாக்காளர் அடையாள அட்டையோ தான் காட்டப்பட வேண்டும். சமூக வலைத்தள பிரசாரம் சமூக வலைத்தளங்களில் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசாரம் செய்ய இருப்பதாக தகவல் வந்தது. இதுபற்றி உடனே அந்த கட்சிக்கு கடிதம் எழுதினோம். கடிதம் கிடைத்ததும் அந்த கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்கள் என்னை சந்தித்து விளக்கம் அளித்தனர். தேர்தல் நடத்தை விதியின்படி, யு டியூப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பிரசாரம் செய்ய வேண்டும் என்றால், தேர்தல் கமிஷன் குழுவின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் அரசியல் கட்சியினர் தேர்தல் பணிக்காக ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்லக்கூடாது. மற்றவர்கள் அதிக பணம் கொண்டு சென்றாலும் அதற்கான ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். ஆதாரம் இருந்தால் விசாரணைக்கு பின்னர் பணம் தரப்படும். இதுவரை ரூ.2.16 கோடி அளவுக்கு பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது. அதுகுறித்து விசாரணை நடத்தப்படுகிறது. இன்னும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இந்த தொகையில் 1.05 கோடியை பறக்கும் படையும், 1.02 கோடியை கண்காணிப்பு குழுவும் கைப்பற்றின. பிரியாணி விருந்து வெள்ளிப்பொருட்கள், சேலைகள், தங்க நகைகளையும் கைப்பற்றி உள்ளனர். தற்போது நாகையில் 7 கிலோ தங்கம் பிடிபட்டுள்ளது. அதுபற்றிய கலெக்டரின் அறிக்கை இன்னும் வரவில்லை. தங்கத்தை சுங்கவரித்துறையிடம் ஒப்படைத்து இருக்கிறோம். ஒவ்வொரு கட்சியினரும் அவர்கள் கட்சியினருக்கு பிரியாணி விருந்து கொடுப்பதில் தவறில்லை. ஆனால் பொதுமக்களுக்கு எதுவும் கொடுக்கக்கூடாது. எம்.எல்.ஏ.க்கள் அலுவலகத்தை பூட்டுவதற்கு உத்தரவிட்டுள்ளோம். ஏனென்றால், அது அரசுக்கட்டிடம். அங்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுபோல் மேயர், ஊராட்சித்தலைவர்கள் போன்றவர்கள், தங்கள் அலுவலக பணியை மேற்கொள்ளலாம். அங்கு மக்களை அவர்கள் சந்திக்கக்கூடாது. அரசியல் பணியை அங்கிருந்து செய்யக்கூடாது. ஏதாவது புகார் கொடுக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் கொடுக்கலாம். அடையாள அட்டை கிடையாது சிறப்பு முகாம் மூலம் பெறப்பட்டுள்ள 9.95 லட்சம் பெயர் சேர்ப்புக்கான விண்ணப்பதாரர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையை இப்போது தரமுடியாது. அதற்கு நேரமில்லை. ஓட்டுப்போடுவதற்கு அவர்கள் 'பூத்' சிலிப்பை பயன்படுத்தலாம். இனிமேல் சிறப்பு முகாம் நடத்த வாய்ப்பில்லை. எனவே பெயர் சேர்க்க விரும்புகிறவர்கள், அவர்கள் தொகுதிக்கு உட்பட்ட மண்டல அலுவலகம் அல்லது தாலுகா அலுவலகத்தில் மார்ச் 25–ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும் திட்டங்களை தொடங்க முடியாது. விபத்து போன்றவற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால நிவாரணத்தை வழங்கலாம். மற்றபடி, நிதியுதவி அளிப்பதற்கு தேர்தல் அதிகாரியின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். வங்கி கணக்கு கண்காணிப்பு மகளிர் சுய உதவிக்குழுக்களை தேர்தல் விழிப்புணர்வு பிரசாரத்திற்கு பயன்படுத்த உள்ளோம். இவர்களுக்கு அதிக பொருள், பணம் கொடுக்கப்பட்டால், அதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தினமும் அறிக்கை கொடுக்கும்படி கூறி இருக்கிறோம். அதுபோல் வங்கிகளில் ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் மாற்றப்பட்டு இருந்தால், அதுகுறித்தும் தினமும் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கொடுக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆன்லைன் மூலம் நடக்கும் பண பரிமாற்றமும் கண்காணிக்கப்படுகிறது. ஜவுளிக்கடை விற்பனை டோக்கன் கொடுத்து பரிசுப்பொருட்களை வாங்க செய்வதையும் கண்காணிக்கிறோம். ஏதாவது ஒரு ஜவுளிக்கடை, பாத்திர கடைகளில் இயல்புக்கு அதிகமாக விற்பனை ஆகியிருந்தால் அதுபற்றிய தகவல் சேகரிக்கப்படும். ஆரணியில் குடிநீர் அமைப்புகளை அரசு அதிகாரிகள் அப்புறப்படுத்தி விட்டதாக புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அந்த மாவட்ட கலெக்டரிடம் விளக்கம் கேட்டுள்ளேன். ஆனால் அந்த குடிநீர் அமைப்புகள் அனைத்தும் அங்கீகாரம் பெறாமல் வைக்கப்பட்டதாக முதல் கட்ட தகவல் அளித்து உள்ளனர். இரட்டை இலை விவகாரம் அரசு ஸ்மால் பஸ், எம்.ஜி.ஆர். சமாதியில் இரட்டை இலை சின்னம் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுவது குறித்த விவகாரத்தில் இன்னும் இரண்டு நாட்களில் தேர்தல் கமிஷன் தனது முடிவை அறிவிக்கும். ஆனால் முதல்–அமைச்சரின் புகைப்படங்கள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டன. அரசியல் கூட்டங்கள் போடுவதற்கு முன்பு தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற்று 12 மணி நேரத்துக்குள், 100 மீட்டர் இடைவெளிக்குள் ஏற்பாடுகள் செய்து கொள்ளலாம். கூட்டம் முடிந்து 5 மணி நேரத்துக்குள் அந்த இடத்தை முன்பு போல் சரிசெய்துவிட வேண்டும். தேர்தல் பார்வையாளர்கள் வருகை தமிழகத்துக்கு தேர்தல் செலவு பார்வையாளர்கள் 29–ந்தேதி வர இருக்கிறார்கள். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான ஏப்ரல் 5–ந்தேதியன்று, பொதுப்பார்வையாளர்கள், போலீஸ் பார்வையாளர்கள் வருவார்கள். செலவு பார்வையாளர்கள் குழுவில் மத்திய மற்றும் வெளிமாநில போலீசார் இடம் பெறுவார்கள். இதற்காக 32 கம்பெனி போலீசார் (ஒரு கம்பெனிக்கு 100 போலீசார்) வரவழைக்கப்படுவார்கள். ஒருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட காரணத்தால் மட்டுமே அவரை தேர்தலில் போட்டியிட தகுதி இழப்பு செய்ய முடியாது. ஆனால் வேட்பாளருக்கு எவ்வளவு சொத்து உள்ளது? எவ்வளவு குற்ற வழக்கு உள்ளது? என்பதையெல்லாம் கணக்கிட்டு மக்கள் ஓட்டு போடலாம். வழக்குகளில் தண்டனை தீர்ப்பு விதிக்கப்பட்டு இருந்தால் மட்டும் தான் தகுதி இழப்பு குறித்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் கமிஷனால் முடிவு செய்ய முடியும். குறிப்பிட்ட சில குற்றப்பிரிவு வழக்குகளில், அபராதம் விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தாலே தகுதி இழப்புக்கு உள்ளாக வேண்டியதாக இருக்கும். மற்ற சில குற்றப்பிரிவின் கீழ் வரும் வழக்குகளில், 2 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை விதிக்கப்பட்டால் தான் அவர்களுக்கு தகுதி இழப்பு நேரிடும். வழக்குகள் தமிழகம் முழுவதும் பொது சுவர்களில் தேர்தல் விளம்பரம் செய்ததாக 8 ஆயிரத்து 345 வழக்குகளும், தனியார் சுவர்களில் விளம்பரம் செய்ததாக 4 ஆயிரத்து 602 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இலவச பொருட்களை அளிப்பதாக வாக்குறுதி கொடுப்பது குறித்து தேர்தல் நடத்தை விதிகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது சம்பந்தமாக அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வருகிறோம். அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அனுப்பிவிட்டோம். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை விரைவில் அனுப்பி வைக்கப்படும். அதுபற்றி தேர்தல் கமிஷன் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு பிரவீன்குமார் கூறினார். News Category:Hot Topic Icon : News Group Category: |
| முதல் 11 மாதங்களில் பரஸ்பர நிதி துறை அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது Posted: 12 Mar 2014 12:26 PM PDT புதுடெல்லி பங்குச் சந்தைகளில் நிலவும் ஏற்ற தாழ்வுகளால் நடப்பு நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஏப்ரல்–பிப்ரவரி) பரஸ்பர நிதி நிறுவனங்கள் ரூ.10,319 கோடிக்கு பங்குகளை விற்பனை செய்துள்ளன என செபி அமைப்பின் புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விற்பனை பரஸ்பர நிதி நிறுவனங்கள் பல்வேறு முதலீட்டு திட்டங்களின் வாயிலாக முதலீட்டாளர்களிடமிருந்து நிதியை திரட்டுகின்றன. நிறுவன பங்குகள், நிதிச் சந்தைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கடன்பத்திரங்கள் போன்றவற்றில் இந்த நிதி முதலீடு செய்யப்படுகிறது. கடந்த 2013 செப்டம்பர் மாதம் முதல் இந்நிறுவனங்கள் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து வந்துள்ளன. நடப்பு நிதி ஆண்டில் இதுவரையிலான காலத்தில் மே மற்றும் ஆகஸ்டு மாதத்தில் மட்டுமே பரஸ்பர நிதி நிறுவனங்கள் பங்குகளில் முதலீடு செய்துள்ளன. கடந்த ஆகஸ்டு மாதம் ரூ.1,607 கோடி அளவிற்கு பங்குகளில் முதலீடு செய்திருந்தன. அக்டோபர் மாதத்தில் அதிகபட்சமாக பங்குகளில் மேற்கொண்டிருந்த முதலீட்டில் ரூ.4,018 கோடியை விலக்கி உள்ளன. நடப்பு நிதி ஆண்டில் பரஸ்பர நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வதை முதலீட்டாளர்கள் ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் நிலையற்ற வட்டி விகிதம் போன்ற அளவீடுகளை கொண்டு நிர்ணயித்துள்ளனர். பங்குச் சந்தையில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளால் பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து 35 லட்சம் கணக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. பரஸ்பர நிதி நிறுவனங்கள் பங்கு சார்ந்த முதலீடு குறைத்துள்ள போதிலும் கடன்பத்திரங்களில் முதலீட்டை அதிகரித்துள்ளன. பங்குகளில் முதலீடு செய்து பெறும் ஆதாயத்தை காட்டிலும் கடன்பத்திரங்களில் முதலீட்டில் கிடைக்கும் ஆதாயம் நிலையாக இருப்பதே இதற்கு காரணமாகும். முதல் 11 மாதங்களில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் கடன் சந்தைகளில் மேற்கொண்ட நிகர முதலீடு ரூ.4.43 லட்சம் கோடியாக உள்ளது. தேர்தலுக்கு பிறகு... பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு நிலையான ஆட்சி அமையும் என்ற எதிர்பார்ப்புகளால் நடப்பு ஆண்டின் பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். image: category:Tagging: |
| அரசு மதிப்பீடுகளுக்கு மாறாக கோதுமை உற்பத்தி குறையும் Posted: 12 Mar 2014 12:22 PM PDT புதுடெல்லி அரசு மதிப்பீடுகளுக்கு மாறாக கோதுமை உற்பத்தி குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. பருவம் தவறி பெய்த மழை மற்றும் சூறைக்காற்று காரணமாக சில மாநிலங்களில் உள்ள கோதுமை வயல்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே உற்பத்தி பாதிக்கப்படும் என விவசாய ஆணையர் ஜே.எஸ். சந்து தெரிவித்தார். குளிர்கால பயிர் கோதுமை குளிர்கால பயிராகும். ரபி பருவத்தில் (அக்டோபர்–மார்ச்) மிக முக்கிய பயிரான கோதுமை அறுவடைக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. நடப்பு பருவத்தில் கூடுதலாக 61 ஆயிரம் ஹெக்டேரில் கோதுமை பயிரிடப்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டில் கோதுமை விளைச்சல் அமோகமாக இருக்கும் என்றும், முந்தைய சாதனை அளவுகளை விஞ்சி உற்பத்தி அதிகரிக்கும் என்றும் மத்திய வேளாண் அமைச்சகம் மதிப்பீடு செய்திருந்தது. எனினும் மேற்கு மாநிலங்களில், குறிப்பாக குஜராத்தின் கடலோர பகுதிகளில் ஏற்பட்ட பருவநிலை கோளாறுகளால் அரசு மதிப்பீடுகளில் மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது. 61 ஆயிரம் ஹெக்டேர் அளவிற்கு கோதுமை பயிர் பாதிக்கப்பட்டிருந்தால் நடப்பு பருவத்தில் கோதுமை விளைச்சல் சென்ற ஆண்டு அளவிற்கே இருக்கும் என சந்து குறிப்பிட்டார். கடந்த ரபி பருவத்தில் 9.35 கோடி டன் கோதுமை உற்பத்தியாகி இருந்தது. நடப்பு பருவத்தில் விளைச்சல் 9.56 கோடி டன்னாக இருக்கும் என மத்திய அரசு மதிப்பீடு செய்திருந்தது. இந்நிலையில் சில மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பயிர்ச் சேதத்தை மற்ற மாநிலங்களின் உற்பத்தி ஈடு செய்யும் என சந்து மேலும் கூறினார். குஜராத்தின் உள்புற பகுதிகள், பீகார் ஆகிய இடங்களில் கோதுமை விளைச்சல் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோதுமை உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் நிலவரம் மோசமாக இல்லை. பருவநிலை மாற்றங்களால் பல மாநிலங்களில் கோதுமையுடன், மற்ற ரபி பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கோரிக்கை இந்நிலையில் மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்கள் பயிர் சேதத்திற்கு மத்திய அரசின் இழப்பீடு வேண்டி கோரிக்கை விடுத்துள்ளன. எனவே விரைவில் மத்திய அரசுக் குழு ஒன்று பாதிப்புக்குள்ளான இடங்களைப் பார்வையிட உள்ளது. கோதுமை விதைப்பு பணிகள் அக்டோபர் மாதத்தில் தொடங்கி, ஏப்ரல் மாதத்தில் அறுவடை நடைபெறுகிறது. image: category:Tagging: |
| வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு Posted: 12 Mar 2014 12:18 PM PDT பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் அமைக்கப் பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட கலெக்டர் சுப்பையன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கலெக்டர் ஆய்வு பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் அமைக்கப் பட்டுள்ள பசுபதிகோயில்,சக்கராப்பள்ளி,அய்யம்பேட்டை,வழுத்து£ர்,சரபோஜிராஜபுரம்,பண்டாரவாடை,ராஜகிரி,பாபநாசம் ஆகிய ஊர்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், நடு நிலை,உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளில் அமைக்கப் பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட கலெக்டர் சுப்பையன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வசதிகள் அப்போது மின்சாரவசதி, குடிநீர் வசதி, பொது கழிவறை வசதி,சாய்வு தளம் உள்பட அனைத்து அடிப்படை வசதி களையும் உடனடியாக அமைக்க வேண்டும் என சம்மந்தப்பட்ட அதிகாரி களுக்கு உத்தரவிட்டார். பின்னர் அவர் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரம் வைக்கும் இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது கும்ப கோணம் உதவி கலெக்டர் கோவிந்தராவ், பாபநாசம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் திருவேங் கடம், தாசில்தார் அருண் மொழி,தேர்தல் துணை தாசில்தார் ரகுராமன், துணை போலீஸ் சூப்பிரண்டு சிவாஜி அருள்செல்வன், இன்ஸ் பெக்டர் முத்துசாமி,செயல் அலுவலர் சுந்தரமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் சமத்துவ ராஜன்,பறக்கும் படை அதிகாரிகள் மோகன்,ஸ்ரீதர், ஜெயபாலன், பாண்டியன், ஆணையர்கள் பாலமுரளி, ஸ்ரீராம் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர். பயிற்சி முகாம் முன்னதாக பாபநாசம் ஊராட்சி ஒன்றிய மன்ற கூடத்தில் பாபநாசம் சட்ட மன்ற தொகுதிக்கு நியமிக்கப் பட்ட தேர்தல் மண்டல அலு வலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு கலெக்டர் சுப்பையன் தலைமை தாங்கினார். அப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை எவ்வாறு கடைபிடிப்பது,மண்டல அலுவலர்கள் அனைவரும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரில் சென்று பார்வையிட வேண்டும், பறக்கும் படை அதிகாரிகள் தொடர்ந்து வாகன சோதனை யில் ஈடுபட வேண்டும் என அறிவுரை வழங்கினார். image: category: |
| Posted: 12 Mar 2014 11:26 AM PDT Daily Thanthi Special Term:Daily Thanthi Image Special Anmikasinthanai: ![]() |
| Posted: 12 Mar 2014 11:25 AM PDT Daily Thanthi Special Term:Daily Thanthi Image Special Andiyar: ![]() |
| Posted: 12 Mar 2014 11:23 AM PDT Daily Thanthi Special Term:Daily Thanthi Image Special chanakkiyan: ![]() |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


