| சமுத்திரகனிக்கு ஜோடியானார் அமலாபால்...! Posted:  சமுத்திரகனி இயக்கத்தில், சமீபத்தில் வெளிவந்த படம் நிமிர்ந்து நில். ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அமலாபால், ராகினி ஆகியோர் நடித்திருத்தனர். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றி தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. அதில் இயக்குநர் சமுத்திரகனி, ஹீரோ ஜெயம் ... |
| பிரதாப் போத்தன் 100 - ஸ்பெஷல் ஸ்டோரி! Posted:  10 படம் நடித்து முடித்து விட்டாலே ஆர்ப்பாட்டம் பண்ணுகிற நட்சத்திரங்களுக்கு மத்தியில் சத்தமே இல்லாமல் 100 படங்களில் நடித்து முடித்து விட்டார் பிரதாப் போத்தன். தற்போது பிரதாப் போத்தன் மலையாளத்தில் நடித்து வரும் ஒன்சப்பானிய டைம் என்ற மலையாளப்படம் அவரது 100வது படம். இதில் அவர் 70 வயது முதியவராக நடிக்கிறார். முதிய தம்பதிகளின் கஷ்டமான ... |
| அஜீத்தை காப்பி அடிக்கும் மலையாள ஹீரோக்கள்! Posted:  ஹீரோக்கள் என்றால் மொழு மொழுவென்று சேவிங் செய்து, பளபள முகத்துடன் இருக்க வேண்டும் என்பதை மாற்றி அமைத்தவர் அஜீத். அவர்தான் முதன் முதலாக பத்து நாள் தாடியுடன் நடித்தார். அன்று தொடங்கிய டிரண்டுதான் இன்று வரை ஓடிக்கொண்டிருக்கிறது. இப்போது எல்லா ஹீரோக்களும் பத்து நாள் தாடியுடன்தான் நடிக்கிறார்கள். அடுத்து மங்காத்தா, ஆரம்பம், ... |
| தமிழ் கன்னடத்தில் தயாராகும் கிஷோர் படம்! Posted:  கிஷோர் ஹீரோவாக நடிக்கும் படம் தமிழ், கன்னடம் இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகிறது. தமிழ் பதிப்புக்கு காதலி காணவில்லை என்றும், கன்னட பதிப்பிற்கு பீஷ்மர் என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள். ஹார்த்திகா ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். தயாள் ஓஷா ஒளிப்பதிவு செய்கிறார், ரவி-ராஜா என்ற இரட்டையர்கள் இயக்குகிறார்கள். "நாங்கள் ... |
| காஸ்ட்டியூம் டிசைனர் ஆனார் அகத்தியன் மகள் நிரஞ்சனி! Posted:  காதல்கோட்டை படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மூத்த மகள் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக உள்ளார். இரண்டாவது மகள் விஜயலட்சுமி நடிகை. மூன்றாவது மகள் நிரஞ்சனி, காஸ்ட்யூம் டிசைனராகிவிட்டார். வசந்தபாலன் இயக்கும் பீரியட் பிலிமான காவியத் தலைவன் படத்திற்கு நிரஞ்சனி தான் காஸ்ட்யூம் டிசைனர். இது தவிர சிகரம் தொடு, வாயை ... |
| கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம்! Posted:  என்னது கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் செய்யப்போகிறாரா? எந்த கட்சிக்கு என்றெல்லாம் வீணாக கற்பனை செய்ய வேண்டாம். தேர்தலில் நேர்மையாக ஓட்டுப்போடுங்கள் என்று பிரசாரம் செய்ய இருக்கிறார். இந்திய தேர்தல் ஆணையம் கமல்ஹாசனை நடிக்க (பேச) வைத்து ஒரு தேர்தல் விழிப்புணர்வு பிரசார கேசட்டை தயாரித்திருக்கிறது. அதனை தலைமை தேர்தல் அதிகாரி ... |
| கம்யூனிஸ்ட் சிந்தனையாளர் கார்ல் மார்க்சாக நடிக்கிறார் ஜோ மல்லூரி Posted:  கும்கி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் எழுத்தாளர் ஜோ மல்லூரி, அதன் பிறகு தொடர்ச்சியாகவும், பிசியாகவும் நடித்து வருகிறார். அஞ்சான், அப்புச்சி கிராமம், மொசக்குட்டி, இரும்பு குதிரை, உள்பட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். ரஷ்யாவில் உள்ள கலாச்சார அமைப்பு ஒன்று கார்ல் மார்க்ஸ் பற்றிய ஆவணப் படம் ஒன்றை எடுக்க உள்ளது. ... |
| கவர்ச்சியாக நடிக்க மறுத்த ரூபா, ஓகே சொன்ன ஓவியா! Posted:  திரு திரு துறு துறு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரூபா மஞ்சரி. தற்போது சிவப்பு, யாமிருக்க பயமேன் படங்களில் நடித்து வருகிறார். யாமிருக்க பயமேன் காமெடி த்ரில்லர் படம். இதில் ஹீரோ கிருஷ்ணாவின் காதலியாக நடித்திருக்கிறார். இது த்ரில்லர் படம் என்பதால் அதில் கொஞ்சம் கிளாமரைச் சேர்க்க முடிவு செய்தார் இயக்குனர் டீகே. நைனிடாவில் ... |
| பழனியில் தங்க தேர் இழுத்தார் லட்சுமி மேனன்! Posted:  பழனியில் உள்ள மாரியம்மன் மாசித் திருவிழாவை முன்னிட்டு வருத்தமில்லா வாலிபர் சங்கம் சார்பில் பூச்சொரில் விழா நடந்து வருகிறது. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் நேற்று (மார்ச் 16) நடந்தது. இதில் திரைப்பட இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பட நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் நடிகை ... |
| தேசிய விருதுக்காக 40 தமிழ் படங்கள் மோதுகிறது! Posted:  திரைப்படத்துறைக்கு இந்திய அரசு வழங்கும் தேசிய திரைப்பட விருதுகள் இந்திய கலைஞர்களுக்கு மதிப்பு மிக்க விருதுகள். 61வது தேசிய விருதுக்கான பரிசீலனையில் நடுவர்கள் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். இதில் 30 பிரிவின் கீழ் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதினை பெற இந்த ஆண்டு 40 தமிழ் படங்கள் மோதுகிறது. அதிக எண்ணிக்கையில் தமிழ் படங்கள் ... |
| லிப் லாக் முத்தக்காட்சியில் நடித்தார் இலியானா! Posted:  தமிழ் படங்களில் இழுத்து போர்த்திக் கொண்டும், தெலுங்கில் கிளாமராகவும் நடிக்கும் இலியானா இந்தியில் லிப் லாக் முத்தக் காட்சியில் நடித்து பாலிவுட் ஹீரோக்களை அசர வைத்திருக்கிறார். பர்பி படத்தின் மூலம் இந்திக்குச் சென்றார் இலியானா, படம் சூப்பர் ஹிட்டானாலும் இலியானாவுக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தீபிகாக படுகோனோ, பிரியங்கா ... |
| பேஸ்புக்கில் ஒரு கோடி லைக்குகளை எட்டினார் ஸ்ரேயா கோஷல்! Posted:  இந்தியாவின் பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல். வங்க தேசத்தில் பிறந்த ஸ்ரேயா தமிழ் உள்பட இந்திய மொழிகள் அனைத்திலும் கடந்த 11 வருடங்களாக பாடி வருகிறார். தேவதாஸ் இந்திப் படம்தான் அவரை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது. பணத்துக்காவும், புகழுக்காகவும் பாடாமல் ஆத்ம திருப்திக்காக பாடும் பாடகிகளில் ஸ்ரேயாவும் ஒருவர். 11 ஆண்டுகளில், 150க்கும் ... |
| தனுசுடன் ஜோடி சேருகிறார் காஜல் அகர்வால்! Posted:  காதலில் சொதப்புவது எப்படி படத்தின் மூலம் பிரபலமானவர் பாலாஜி மோகன். குறும்படத்திலிருந்து நெடும் படத்திற்கு வந்திருப்பவர். தற்போது வாயைமூடி பேசுவோம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் மம்முட்டி மகன் துல்கர், நஸ்ரியா நடிக்கிறார்கள். இது ஏப்ரல் மாதம் ரிலீசாகிறது. அடுத்து பாலாஜி மோகன் இயக்கும் படத்தில் தனுஷ் ஹீரோ. அவருக்கு ஜோடியாக ... |
| கோடை விடுமுறையை குறி வைக்கும் மெகா படங்கள்! Posted:  தமிழ் சினிமாவுக்கு கோடை விடுமுறைகாலம் தான் வசூல்காலம். பள்ளி தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை கொண்டாட்டத்தில் இருக்கும் தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் தாராளமாக சினிமா பார்க்க அனுமதிக்கும் காலம் இதுதான். கோடை விடுமுறையை கழிக்க கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்திருக்கும் விருந்தினர்களை குறைந்த செலவில் அழைத்து போகும் ... |
| இரண்டு வேடங்களில் ஜெய் ஆகாஷ்! Posted:  ஜெய் ஆகாஷ், 'காதலுக்கு கண்ணில்லை' என்ற படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். கெட்ட அப்பனாகவும், நல்ல மகனாகவும் நடிக்கிறார். நிஷா, லலித்யா என்ற இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். அப்பா ஜெய்ஆகாஷ், தாலிகட்டிய மனைவியை தவிக்க விட்டுவிட்டு செல்ல... மகன் ஜெய் ஆகாஷ் அம்மாவை காப்பாற்றி பெரிய கோடீஸ்வரியாக்கும் அப்பா மகன் மோதல் கதை. நடிகை ... |
| உணர்வுகளை இசையாக கொண்டு செல்ல வேண்டும் - மனம் திறந்த கார்த்திக் ராஜா!! Posted:  இசைஞானியின் இசைமழையில் நனைந்து இருப்பீர்கள்தானே? அதனால், ஒளிர் நிலவு, குளிர் தென்றல் உலவும் மலர்ச் சோலையில், பனிக்காலையில், தளிர் மேனியுடன் நடந்த பரவசத்தை நிச்சயம் அனுபவித்து இருப்பீர்கள். வெளியுலகமே தெரியாத கிராமத்தில் கிளம்பி, வேற்றுலகத்தையும் தன்வசம் திருப்பிய, அந்த இளையராஜாவின், மூத்த புதல்வர் கார்த்திக்ராஜா. நாடி ... |
| குலாப் ஜாமுனை அபேஸ் பண்ணிய லட்டு நடிகை விசாகா சிங்! Posted:  சந்தானம்-சேது-பவர்ஸ்டார் ஆகியோர் நாயகர்களாக நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்தவர் விசாகா சிங். மும்பை நடிகையான இவருக்கு அந்த படம் ஹிட்டாக அமைந்தபோதும் புதிதாக படமேதும் கிடைக்கவில்லை. அதனால் அதே சந்தானம்-சேது மீண்டும் இணைந்துள்ள வாலிபராஜா படத்திற்கு மீண்டும் அவரை நாயகியாக்கி உள்ளனர். இப்படத்தில் மனநல ... |
| போட்டிக்கோதாவில் குதித்த ஆர்யா-விஷால்! Posted:  ஆர்யாவும், விஷாலும் சமகாலத்து நடிகர்கள். ஆனபோதும் நீயா நானா என்ற போட்டி அவர்களுக்கிடையே இருந்ததில்லை. இருவருமே ஆரம்பத்தில் இருந்தே நல்ல நண்பர்களாகவே பழகி வருகின்றனர். குறிப்பாக, தன்னிடம் யாராவது நல்ல கதை சொன்னால் அதை விஷால் பக்கம் ஆர்யா திருப்பி விடுவார். அதேபோல் விஷாலும் ஆர்யாவுக்கு பொருத்தமான கதைகளை யாராவது தன்னிடம் ... |
| நடிகைகளுக்கு கோவில் கட்டுபவர்களை மறக்க முடியுமா? -தமன்னா Posted:  வீரம் படத்திற்கு பிறகு கோலிவுட்டில் தமன்னாவுக்கு படம் இல்லை. இருப்பினும், தெலுங்கில் ராஜமவுலி இயக்கி வரும் பாகுபாலி படத்தில் அனுஷ்காவுடன் இன்னொரு நாயகியாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இப்படத்தில் சிறிய கேரக்டருக்கு ஒப்பந்தமான தமன்னாவின் பர்பாமென்ஸ் தூக்கலாக இருந்ததால் பின்னர் அவருக்கான காட்சிகளை அதிகப்படுத்தி ... |
| நான் கர்ப்பமாக இருப்பதாக சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்! -ப்ரியாமணி Posted:  பருத்தி வீரன் ப்ரியாமணிக்கு தமிழில் படங்கள் இல்லாததால் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று நடித்துக்கொண்டிருக்கிறார். தமிழிலும் நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் மீண்டும் நடிப்பேன் என்று சென்னை வரும்போதெல்லாம் அபிமானத்திற்குரிய டைரக்டர்களையும், படாதிபதிகளையும் சந்தித்து சான்ஸ் கேட்கிறார். ஆனபோதும் யாரும் கண்டுகொள்ளவில்லை. ... |