மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மோடியை எதிர்த்து போட்டியிடுவது சவாலானது: கெஜ்ரிவால்
- கேரள வாக்காளர்களுக்கு சலுகை கட்டணத்தில் விமான டிக்கெட்
- திருமணமான 24 மணி நேரத்தில் மணமகன் மர்மச்சாவு
- காமன்வெல்த் ஊழலில் சிக்கிய கல்மாடிக்கு டிக்கெட் இல்லை
- வாரணாசி தொகுதியில் மோடிக்கு எதிராக 5 முனை போட்டி
- வாரணாசியில் கெஜ்ரிவால் பிரசார கூட்டம் ஒத்திவைப்பு
- ஹோலி தினத்தன்று கல்லூரி விடுதிக் கதவுகளைப் பூட்டிய பல்கலைக்கழகம்
- மோடியின் பிரதமர் கனவு பலிக்காது: அச்சுதானந்தன் தாக்கு
- சீனா மீண்டும் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி
- சசி தரூரின் சொத்து மதிப்பு ரூ.23 கோடி
- மாடு மேய்க்க சென்ற சிறுவன் சிறுத்தை தாக்கி பலி
- ஜார்கண்டில் மோடியின் பொதுக்கூட்டம் ரத்து
- குஜராத் சட்டசபை இடைத் தேர்தல்: 7 இடங்களில் ஆம் ஆத்மி போட்டி
- கிரிமியா இணைப்பு: மன்மோகன் சிங்கிடம் போனில் புதின் விளக்கம்
- பிரசாரத்துக்கு சென்ற காந்தி பேரன் வாகனங்கள் தடுத்து நிறுத்தம்
- பா.ஜ.க. சார்பில் முன்னாள் ராணுவ தளபதி காசியாபாத்தில் போட்டி
- பன்சாலின் சொத்து மதிப்பு ஐந்து வருடத்தில் ரூ.7.70 கோடியாக உயர்வு
- வாக்காளர்களை ஊக்கப்படுத்த தேர்தல் ஆணையம் புதிய யுக்தி
- காங்கிரஸ் 3-வது வேட்பாளர் பட்டியல்: மத்திய மந்திரிகளுக்கு வாய்ப்பு
- தேர்தல் விதிமீறல்: டெல்லியில் அரசியல் கட்சிகள் மீது 94 எப்.ஐ.ஆர். பதிவு
| மோடியை எதிர்த்து போட்டியிடுவது சவாலானது: கெஜ்ரிவால் Posted: 18 Mar 2014 11:10 PM PDT பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி விரும்புகிறது. இது குறித்து கெஜ்ரிவால் கூறும்போது மோடியை எதிர்த்து போட்டியிட தயாராக இருக்கிறேன். ஆனாலும் வாரணாசி மக்களின் கருத்தை அறிந்து |
| கேரள வாக்காளர்களுக்கு சலுகை கட்டணத்தில் விமான டிக்கெட் Posted: 18 Mar 2014 10:49 PM PDT கேரளாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் அரபு நாடுகளில் பணிபுரிகிறார்கள். இவர்கள் பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓட்டு போட கேரளா வர உள்ளனர். தேர்தலுக்கு வாக்களிக்க வருபவர்களுக்கு சலுகை கட்டணத்தில் விமான டிக்கெட் வழங்க கேரள முஸ்லிம் கலாச்சார மையம் ஏற்பாடு செய்துள்ளது |
| திருமணமான 24 மணி நேரத்தில் மணமகன் மர்மச்சாவு Posted: 18 Mar 2014 10:49 PM PDT கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் மன்னார்காடு தச்சநாட்டுகாவை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகன் அபிலாஷ் (வயது 29). நேற்று முன்தினம் (17–ந் தேதி) அபிலாசுக்கும் உறவினர் பெண் ஒருவருக்கும் மன்னார்காட்டில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் மணமக்கள் அபிலாசின் வீட்டுக்கு சென்று தங்கினர். நேற்று மாலை திருமண வரவேற்பு நடைபெறுவதாக இருந்தது. |
| காமன்வெல்த் ஊழலில் சிக்கிய கல்மாடிக்கு டிக்கெட் இல்லை Posted: 18 Mar 2014 10:40 PM PDT காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யான சுரேஷ் கல்மாடி காமன்வெல்த் ஊழலில் சிக்கி கைதானார். தற்போது அவர் ஜாமீனில் விடுதலையாகி இருக்கிறார். கடந்த தேர்தலில் அவர் புனே தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். இப்போது அவருக்கு மீண்டும் புனே தொகுதி வழங்கப்படுமா என்று எதிர் பார்க்கப்பட்டது. ஊழலில் தொடர்புடையவர்களுக்கு தேர்தல் டிக்கெட் |
| வாரணாசி தொகுதியில் மோடிக்கு எதிராக 5 முனை போட்டி Posted: 18 Mar 2014 10:33 PM PDT பாரதீய ஜனதா கட்சி யின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் 80 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் பாரதீய ஜனதா கட்சியின் செல்வாக்கு அதிகரித்து இருக்கிறது. இதைப் பயன்படுத்தி அவரை |
| வாரணாசியில் கெஜ்ரிவால் பிரசார கூட்டம் ஒத்திவைப்பு Posted: 18 Mar 2014 10:10 PM PDT வாரணாசியில் போட்டியிடும் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். நாடு முழுவதும் முதல் கட்ட பிரசார பயணத்தை முடித்துக் கொண்டு பின்பு கெஜ்ரிவால் வாரணாசி தொகுதியில் முகாமிட்டு பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். |
| ஹோலி தினத்தன்று கல்லூரி விடுதிக் கதவுகளைப் பூட்டிய பல்கலைக்கழகம் Posted: 18 Mar 2014 09:47 PM PDT வண்ணங்களின் திருவிழாவாகக் கருதப்படும் ஹோலி இந்தியாவின் வடமாநில மக்களிடையே சிறப்பாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டு வரும் திருவிழாவாகும். இந்தக் கலாச்சாரம் தற்போது தெற்குப் பகுதிகளிலும் பரவியுள்ளது. இந்த ஆண்டின் ஹோலித் திருவிழா கடந்த திங்கட்கிழமை அன்று கொண்டாடப்பட்டது. |
| மோடியின் பிரதமர் கனவு பலிக்காது: அச்சுதானந்தன் தாக்கு Posted: 18 Mar 2014 09:39 PM PDT கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. இந்த கட்சியின் சார்பில் திருவனந்தபுரம் தொகுதியில் ஜெனட் ஆபிரகாம் போட்டியிடுகிறார். இதைத்தொடர்ந்து வேட்பாளர் அறிமுக கூட்டமும் தேர்தல் வெற்றிக்கான ஆலோசனை கூட்டமும் திருவனந்தபுரத்தில் |
| சீனா மீண்டும் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி Posted: 18 Mar 2014 05:14 PM PDT காஷ்மீரில் லேயில் இருந்து 300 கி.மீ. கிழக்கில் இந்திய-சீன எல்லையில் 'சுமார்' அமைந்துள்ளது. இந்தப்பகுதி தனது எல்லைக்குட்பட்ட பகுதி என்று சீனா கூறி அத்துமீறி ஊடுருவ முயற்சிப்பது வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில், கடந்த 16-ந்தேதி மீண்டும் சீன ராணுவம் இங்கு அத்துமீறி நுழைய முற்பட்டுள்ளது. இதுபற்றிய தகவல்கள் இப்போதுதான் வெளிவந்துள்ளன. சம்பவத்தன்று காலை 7 மணிக்கு சீன ராணுவத்தினர் 9 பேர் அங்கு நுழைய முயற்சித்தனர். அவர்களை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். அடுத்த சில நிமிடங்களில் மேலும் 10 சீன படை வீரர்கள் குதிரைகளில் வந்து, ஏற்கனவே வந்திருந்த 9 பேருடன் இணைந்து இந்தியப் பகுதியில் நுழைய முற்பட்டனர். டைபிள் பகுதியில் வேவு பார்த்து வருமாறு தங்களுக்கு மேலிடம் உத்தரவிட்டிருப்பதாக அவர்கள் இந்தியப் படைவீரர்களிடம் கூறினர். |
| சசி தரூரின் சொத்து மதிப்பு ரூ.23 கோடி Posted: 18 Mar 2014 03:17 PM PDT கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மத்திய மனித வளத் துறை மந்திரி சசி தரூர் தனது சொத்து மதிப்பு 23 கோடி ரூபாய் என்று தெரிவித்துள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்தபோது, சொத்து கணக்கையும் தாக்கல் செய்துள்ள சசி தரூர், தனது கடந்த (2012-13) ஆண்டு வருமானம் 75 லட்சத்து 40 ஆயிரத்து 650 எனவும், வங்கி கையிருப்பு, பங்கு மூலதனம் ஆகியவற்றில் 9 கோடியே 40 லட்சம் ரூபாய் உள்ளதாகவும், 32 லட்சம் ரூபாய் அளவுக்கு நகைகள், திருவனந்தபுரத்தில் 65 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டுடன் 94 லட்சத்து 40 ஆயிரத்து 966 ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்து உள்பட தனது மொத்த சொத்து மதிப்பு சுமார் 23 கோடி ரூபாய் என்று தெரிவித்துள்ளார். |
| மாடு மேய்க்க சென்ற சிறுவன் சிறுத்தை தாக்கி பலி Posted: 18 Mar 2014 02:44 PM PDT உத்தரபிரதேச மாநிலத்தின் பஹ்ராய்ச் மாவட்டத்தில் கட்ரநியாகட் வனவிலங்கு சரணாலயம் உள்ளது. இதனையொட்டியுள்ள வனப்பகுதியில் மொட்வா கிராமத்தை சேர்ந்த லால்ஜி என்ற 10 வயது சிறுவன் நேற்று மாடு மேய்க்க சென்றான். வழக்கமாக மாடுகளை மேய்த்துவிட்டு மதிய உணவுக்கு வேளைக்குள் வீடு திரும்பி விடும் அவன் நேற்று வெகு நேரமாகியும் சாப்பிட வராததை கண்டு பதறிய பெற்றோர், அக்கம்பக்கத்து வீட்டினருடன் காட்டுப் பகுதிக்கு சென்று தேடிய போது சிறுத்தையால் தாக்கி, கடித்து, குதறப்பட்ட நிலையில் லால்ஜி பிணமாக கிடந்தான். |
| ஜார்கண்டில் மோடியின் பொதுக்கூட்டம் ரத்து Posted: 18 Mar 2014 01:46 PM PDT ஜார்கண்ட் மாநிலத்தின் டும்கா மாவட்டத்தில் வரும் 24-ம் தேதி குஜராத் முதல் மந்திரியும் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியின் பொதுக்கூட்டம் ஒன்றினை நடத்த முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஜார்கண்ட் மாநில பா.ஜ.க.செயலாளர் பால்முகுந்த் சஹாய் அறிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதையடுத்து மோடி பங்கேற்கவிருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டதாகவும், இதற்கு மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். |
| குஜராத் சட்டசபை இடைத் தேர்தல்: 7 இடங்களில் ஆம் ஆத்மி போட்டி Posted: 18 Mar 2014 01:15 PM PDT குஜராத் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 30-ம் தேதி நடைபெற உள்ளது. அதே நாளில், குஜராத் சட்டசபையில் காலியாக இருக்கும் 7 இடங்களுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த இடைத் தேர்தலில் 7 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் மாநில செய்தி தொடர்பாளர் ஹர்ஷில் நாயக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- சட்டசபை இடைத்தேர்தலில் பிரதாண கட்சிகள் இரண்டும் போட்டியிடும் வேளையில் நாங்களும் களமிறங்குவது என்று தீர்மானித்துள்ளோம். காங்கிரசுக்கு வாக்களிப்பதா? பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதா? என்பது புரியாமல் மக்கள் குழம்பிப் போய் விடக் கூடாது என்பதற்காக, அவர்களுக்கு நாங்களும் இருக்கிறோம் என்று நினைவுப்படுத்த, சட்டசபை இடைத் தேர்தலிலும் போட்டியிடுவது என்று முடிவு செய்துள்ளோம். |
| கிரிமியா இணைப்பு: மன்மோகன் சிங்கிடம் போனில் புதின் விளக்கம் Posted: 18 Mar 2014 11:15 AM PDT கிரிமியாவின் ரஷியாவுடன் இணைக்க விருப்பம் தெரிவித்து 97 சதவிகித மக்கள் வாக்களித்ததையடுத்து, கிரிமியாவை இறையாண்மை மிக்க, சுதந்திர, தனி நாடாக அங்கீகரிப்பதற்கான அறிவிப்பில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று கையொப்பமிட்டார். இதனையடுத்து, சக்தி வாய்ந்த ஜி8 நாடுகள் பட்டியலில் இருந்து ரஷ்யா நீக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின் இன்றிரவு பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கிரிமியா விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்தார். அவரது விளக்கத்தை கேட்டுக் கொண்ட பிரதமர், தன்னிடம் இது தொடர்பாக பேசிய புதினுக்கு நன்றி தெரிவித்ததுடன் இதர நாடுகள் ஒற்றுமையாகவும், எல்லை ரீதியாக ஒன்றிணைந்தும் இருக்க வேண்டும் |
| பிரசாரத்துக்கு சென்ற காந்தி பேரன் வாகனங்கள் தடுத்து நிறுத்தம் Posted: 18 Mar 2014 11:00 AM PDT எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் காந்தியின் பேரனான ராஜ்மோகன் காந்தி ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரசாரம் செய்வதற்காக அவர் புறப்பட்டு சென்றார். அவரது வாகனத்தை தொடர்ந்து ஆதரவாளர்களின் வாகனங்களும் வரிசையாக அணிவகுத்து சென்றன. சற்று தூரத்தை கடந்த பின்னர் அந்த வாகன வரிசையை டெல்லி போலீசார் வழிமறித்து தடுத்து நிறுத்தினர். பிரசார வாகனம் என்பதற்கு அடையாளமாக தேர்தல் கமிஷன் அளித்த அனுமதி சீட்டை வாகனங்களின் முகப்பில் ஒட்டாதது ஏன்? என்று கேள்வி எழுப்பிய போலீசார், பிரசாரத்துக்கு உடன் வர எத்தனை வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது? என்ற பட்டியலை காண்பிக்குமாறு கேட்டனர். |
| பா.ஜ.க. சார்பில் முன்னாள் ராணுவ தளபதி காசியாபாத்தில் போட்டி Posted: 18 Mar 2014 10:28 AM PDT சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்த இந்திய முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் அக்கட்சி சார்பி்ல் காசியாபாத் தொகுதியில் போட்டியிடுவார் என்று கடந்த சில தினங்களாக பேசப்பட்டு வந்தது. இதனை இன்று உறுதிப்படுத்திய கட்சி தலைமை, வி.கே.சிங் உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் தொகுதியில் போட்டியிடுவார் என்று முறைப்படி அறிவித்துள்ளது. அவரை எதிர்த்து காங்கிரசின் ராஜ் பப்பார் மற்றும் ஆம் ஆத்மியின் ஷாஷியா ஆமி ஆகியோர் போட்டியிடவுள்ளனர். ராஜ்நாத் சிங்கிற்குப் பதிலாக வி.கே.சிங் இப்போது காசியாபாத் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். ராஜ்நாத் சிங் லக்னோ தொகுதியில் போட்டியிட உள்ளார். ஷில்லாங் தொகுதியில் ஷிபூன் லிங்கோத் போட்டியிடவுள்ளார். இவ்வேட்பாளர் பட்டியல் வெளியீடு குறித்து கட்சியின் பொது செயலாளர் அனந்தகுமார் கூறுகையில் "மேகாலயா மற்றும் உத்தரபிரதேசத்தி்ல் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியலை கட்சித்தலைமை ஒப்புதலுடன் இன்று வெளியிடப்பட்டுள்ளது" என்றார். |
| பன்சாலின் சொத்து மதிப்பு ஐந்து வருடத்தில் ரூ.7.70 கோடியாக உயர்வு Posted: 18 Mar 2014 10:21 AM PDT முன்னாள் ரெயில்வே மந்திரியும் மற்றும் மூன்று முறை எம்.பி.யுமான பவன் குமார் பன்சால், சண்டிகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவில், மனைவியின் சொத்து உட்பட தனது மொத்த சொத்தின் மதிப்பு ரூ.7.70 கோடி என அறிவித்துள்ளார். இது கடந்த மக்களவை தேர்தலைவிட இருமடங்கு அதிகமாகும். பன்சால் கடந்த பாராளுமன்ற தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிடும் போது சொத்தின் மதிப்பு ரூ.3.86 கோடி என அறிவித்தார். கடந்த ஐந்து வருடத்தில் பன்சால் ரூ.8.75 இலட்சம் மதிப்புள்ள ஹோண்டா சிட்டி காரையும் காங்கிரஸ் தலைவரான பிறகு ரூ.30,000 மதிப்புள்ள மாருதி எஸ்டிம் காரையும் வாங்கியுள்ளார். அவருடைய மனைவியின் பெயரில் எந்த வாகனமும் இல்லை. |
| வாக்காளர்களை ஊக்கப்படுத்த தேர்தல் ஆணையம் புதிய யுக்தி Posted: 18 Mar 2014 09:31 AM PDT வரும் மக்களவை தேர்தலில், மேற்கு வங்காளத்தில் வாக்காளர்களை வாக்களிக்க ஊக்கப்படுத்தும் விதமாக தேர்தல் ஆணையம் புதிய யுக்திகளை கையாள திட்டமிட்டுள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தின் துணை தேர்தல் ஆணையர் அமித்ஜோதி பட்டாச்சார்யா இதுகுறித்து கூறியதாவது:- |
| காங்கிரஸ் 3-வது வேட்பாளர் பட்டியல்: மத்திய மந்திரிகளுக்கு வாய்ப்பு Posted: 18 Mar 2014 07:57 AM PDT காங்கிரஸ் கட்சியின் 3-வது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் மத்திய மந்திரிகள், மூத்த தலைவர்கள் உள்ளிட்ட 50 பேர் இடம்பெற்றுள்ளனர். டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் மத்திய மந்திரி கபில் சிபல் |
| தேர்தல் விதிமீறல்: டெல்லியில் அரசியல் கட்சிகள் மீது 94 எப்.ஐ.ஆர். பதிவு Posted: 18 Mar 2014 07:40 AM PDT மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தலைநகர் டெல்லியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அரசியல் கட்சிகள் மீது 94 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பா.ஜனதா கட்சி மீது 13ம், காங்கிரஸ் கட்சி மீது 10ம், ஆம் ஆத்மி கட்சி மீது 8 எப்.ஐ.ஆர்-களும் பதிவு செய்யப்பட்டுள்ளன |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |