Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


உத்தரபிரதேசத்தில் 70 மாடியில் கிருஷ்ணர் கோவில்

Posted: 15 Mar 2014 10:55 PM PDT

பகவான் கிருஷ்ணன் சிறுவயதில் கோபியர்களுடன் விளையாடியதாக கூறப்படும் பிருந்தாவனம் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ளது. இங்கு கிருஷ்ணருக்கு 70 மாடியில் கோவில் கட்ட இஸ்கான் அமைப்பு திட்டமிட்டு உள்ளது. 62 ஏக்கர் நிலப்பரப்பில் 213 மீட்டர் உயரத்தில் இந்த கோவில் அமைய உள்ளது. ''பிருந்தாவன சந்திரோதய மந்திர்'' என இக்கோவிலுக்கு பெயர் சூட்டப்பட உள்ளது. கோவிலை சுற்றி 30 ஏக்கரில் மலர் செடிகள், மற்றும் மரங்கள் வளர்க்கவும் இஸ்கான் திட்டமிட்டு உள்ளது.

பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க.: விஜயகாந்துக்கு மோடி நன்றி

Posted: 15 Mar 2014 10:25 PM PDT

பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்து போட்டியிடுகிறது. இதற்கான உடன்பாடு நேற்று ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி ஆகியோர் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது பாரதீய ஜனதா கூட்டணியில் இணைந்ததற்காக விஜயகாந்துக்கு நன்றி தெரிவித்த அவர்கள், அவர் வெற்றி

காதல் விவகாரத்தில் ரெயில் முன் பாய்ந்து 4 பேர் தற்கொலை

Posted: 15 Mar 2014 10:01 PM PDT

திருவனந்தபுரம் அருகே உள்ள ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் சுதீரன் (வயது48). தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி பிந்து (44). இந்த தம்பதியின் மகள் அகிலா (14). மகன் அனந்து (12). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் அகிலா 9–ம் வகுப்பு படித்து வந்தார். சுதீரன் அந்த பகுதியில் சுரேஷ் என்பவர் வீட்டில் குடும்பத்துடன் வாடகைக்கு குடியிருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டு

தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் சூழ்நிலை இல்லை: பி.சி.சாக்கோ

Posted: 15 Mar 2014 09:46 PM PDT

அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பி.சி. சாக்கோ. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர், தற்போது எம்.பி.யாக உள்ளார். இந்த நிலையில் அவருக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சாலக்குடி தொகுதி வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மத்திய மந்திரி மணீஷ்திவாரி ஆஸ்பத்திரியில் அனுமதி

Posted: 15 Mar 2014 09:18 PM PDT

மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரி மணிஷ்திவாரி நேற்று தெற்கு டெல்லியில் உள்ள மேக்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் இருதயம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு

Posted: 15 Mar 2014 05:34 PM PDT

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் புகழ் பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது. இக்கோவிலின் மேல்சாந்தி (தலைமை அர்ச்சகர்), ஆறு மாதத்திற்கு ஒரு முறை தேர்வு செய்யப்படுவது வழக்கமாகும். இந்நிலையில், புதிய மேல்சாந்தியாக சதீசன் நம்பூதிரி 46 பேர் கொண்ட குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டார். இவர் ஒத்திக்கண் குடும்பத்தில் ஒரு உறுப்பினராவார். வரும் ஏப்ரல் 1 முதல் மேல்சாந்தியாக பொறுப்பேற்கிறார். சதீசன் நம்பூதிரி இதுவரை இப்பதவிக்கு 17 முறை விண்ணபித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறும்: ராகுல்

Posted: 15 Mar 2014 05:11 PM PDT

இணையதளம் மூலம் கட்சி தொண்டர்களுடன் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: "100 சீட்களை மட்டுமே காங்கிரஸ் பெறும் என்று பல கருத்துக்கணிப்புகள் முடிவுகளை வெளியிட்டு வருவது நகைச்சுவையானவை. நீங்கள் அதை புரிந்து கொள்ள வேண்டும். வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறும், நரேந்திரமோடி மற்றும் பா.ஜ.க. ஆட்சிக்கு வருவது குறித்து எந்த கேள்வியும் இல்லை. உங்களை நம்பிக்கையிழக்க செய்வதற்காகவே எதிர்கட்சிகள் பிரச்சாரம் செய்கின்றன. நீங்கள் நம்பிக்கையை இழக்காமல் இருந்தால் நாம் அவர்களை நொறுக்கி விடலாம். உங்கள் மனதில் சந்தேகம் இல்லாமல் இருந்தால் நாம் 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறுவோம். இதேபோல கடந்த 2004 தேர்தலிலும் நாங்கள் தோல்வியடைவோம் என்று பல கருத்துக்கணிப்புகள் முடிவுகளை வெளியிட்டது. ஆனால் காங்கரஸ் வெற்றி பெற்றது. 2009 தேர்தலிலும் அப்படித்தான் கூறின. ஆனால் அதைவிட இரண்டு மடங்கு வெற்றியை பெற்றோம்.

காங்கிரசுடன் கூட்டணி கிடையாது: தெலுங்கானா ராஷ்டிர சமிதி அறிவிப்பு

Posted: 15 Mar 2014 04:57 PM PDT

வரும் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் எண்ணம் இல்லை என தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஆந்திராவில் இருந்து பிரித்து தெலுங்கானா என்ற தனி மாநிலத்தை மத்திய அரசு உருவாக்கி தந்த போது தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை காங்கிரசுடன் இணைத்து விட சந்திரசேகர ராவ் திட்டமிடிருப்பதாக கூறப்பட்டது. சிலபல காரணங்களுக்காக அந்த இணைப்பை தள்ளிப் போட்ட அவர், வரும் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கித் தந்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பார் என ஆந்திர அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு நிலவியது. இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக் விஜய் சிங், தெலுங்கானா ராஷ்டிர சமிதி எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் கட்சியில் சேர வருமாறு அழைப்பு விடுத்து இருந்தார்.

வழிபாட்டுத் தலங்களில் ஓட்டு கேட்கக்கூடாது: தேர்தல் ஆணையம்

Posted: 15 Mar 2014 04:47 PM PDT

பாராளுமன்றத் தேர்தலில் ஓட்டு கேட்பதற்காக வழிபாட்டுத் தலங்களில் கூட்டம் மற்றும் நிகழ்ச்சிகளை அரசியல் கட்சிகள் நடத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் நேற்று பேட்டியளித்த டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி கூறியதாவது:- அரசியல்வாதிகள் வழிபாட்டு தலங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம். ஆனால் அங்கு அரசியல் சார்பாக கூட்டம் நடத்துவது அல்லது கட்சியின் படங்களுடன் கூடிய டைரி, காலண்டர், ஸ்டிக்கர் போன்ற அச்சடிக்கப்பட்ட பொருட்களை வினியோகம் செய்வது போன்றவை இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 171இ-ன்படி ஓட்டுக்கு அளிக்கப்பட்ட லஞ்சமாக கருதப்படும். இந்த உத்தரவை மீறினால் எந்த நிகழ்ச்சியில் வாக்கு கே

கேரளா: தேர்தல் முடிவுகளை நேரடியாக செல்போனில் பெற புதிய வசதி

Posted: 15 Mar 2014 04:40 PM PDT

கேரளாவில் தற்போது 80 சதவீதம் பேர் செல்போன் பயன்படுத்துகிறார்கள். வயது வித்தியாசம் இன்றி அனைவரின் கையிலும் அங்கு செல்போன்கள் புழங்குகின்றன. இந்நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 16 ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் வாக்குகளின் நிலவரத்தையும், தேர்தல் முடிவுகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் ஆன்ராய்டு சார்ந்த செல்போன் மென்பொருள் அறிமுகமாக உள்ளது. கேரள தலைமை தேர்தல் அதிகாரி நளினி நீட்டோவின் தீவிர முயற்சியின் விளைவாக இந்த மென்பொருளை தேசிய தகவல் மையம் உருவாக்கியுள்ளது. இந்த மென்பொருள் ஒவ்வொரு நிமிடமும் தேசிய தகவல் மையத்தின் கணிணிகளில் இருந்து பெறும் தகவல்களை அப்டேட் செய்து கொண்டே இருக்கும். இதன் மூலம் முடிவுகள் மற்றும் நிலவரத்தை

800 பெட்டி மதுவுடன் லாரி பறிமுதல்

Posted: 15 Mar 2014 02:46 PM PDT

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாக்காளர்களுக்கு வினியோகிப்பதற்காக ஹரியானா மாநிலத்தில் இருந்து ஒரு லாரி நிறைய மது பாட்டில்களை கடத்தி வருவதாக உ.பி.மாநில கலால் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையொட்டி, டெல்லி- ஆக்ரா நெடுஞ்சாலையின் ஃபரா பகுதியில் சோதனைச் சாவடி அமைத்து அதிகாரிகள் கண்காணித்த போது, வேகமாக வந்த ஒரு லாரியை மடக்கி சோதனையிட்டனர். அதில் 800 அட்டை பெட்டிகளில் மது பாட்டில்கள் இருப்பதை அறிந்த போலீசார், லாரியுடன் மது பாட்டில்களை பறிமுதல் செய்து, டிரைவர் உட்பட 2 பேரை கைது செய்து விசாரித்தனர். கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள் ஃபிரோஸாபாத்

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக அதிகாரி தற்கொலை

Posted: 15 Mar 2014 02:38 PM PDT

மொகம்மது அர்ஷத் (59) லக்னோவில் உள்ள அலிநகர் பகுதியில் மனைவி அஞ்சுமுடன் வசித்து வந்தார். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் தலைமை மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வந்த இவர் கடந்த சில நாட்களாகவே மனசோர்வுடன் காணப்பட்டார். இந்நிலையில், திடீரென்று தன்னுடைய ரிவால்வரால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். துப்பாக்கி சத்தம் கேட்டு அறைக்குள் ஓடி வந்து பார்த்த அவரது மனைவி அர்ஷத் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அர்ஷத்துக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

புனித நகரமான வாரணாசியில் போட்டியிடுவதை எண்ணி மோடி பெருமிதம்

Posted: 15 Mar 2014 02:17 PM PDT

பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் 12 மாநிலங்களில் போட்டியிடும் 55 நட்சத்திர வேட்பாளர்களின் பட்டியல் நேற்றிரவு வெளியிடப்பட்டது. பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளாரான நரேந்திர மோடி உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கருத்து தெரிவித்த நரேந்திர மோடி கூறியுள்ளதாவது:- வரலாற்று சிறப்பும், ஆன்மிக சிறப்பும் மிக்க புனித நகரமான வாரணாசியில் போட்டியிடுவதை பெருமையாக கருதுகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய கட்சி தலைமைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கங்கையம்மன் மற்றும் காசி விஸ்வநாதர் ஆசியுடன் 272-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று பலமான, துடிப்பான, வளமான இந்தியாவை உருவாக்க பாடுபடுவோம்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுட்டுக்கொலை

Posted: 15 Mar 2014 01:24 PM PDT

மேற்கு வங்காள மாநிலம் பனிகாத்தி நகரின் திரிணாமுல் காங்கிரஸ் தலைவராக ஹைதர் அலி இருந்து வந்தார். இந்நிலையில், பர்கானாஸ் மாவட்டத்தின் அகர்பராவில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு சென்றுவிட்டு வெளியே வரும்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர் ஹைதர் அலியை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவருடைய உடலில் ஐந்து குண்டுகள் பாய்ந்தன. இதைகண்ட அவருடன் இருந்த மற்றொரு தலைவரான உல்லாஸ் ஜனா, அலியை காப்பாற்ற சென்றார். அப்போது அவர்மீதும் குண்டுகள் பாய்ந்தன. இதைத்தொடர்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹைதர் அலி அருகிலுள்ள மருத்துவமனையிலும் மற்றொருவர் ஆர்.ஜி மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்

அத்துமீறி மீன் பிடித்த 13 பாகிஸ்தானியர்கள் கைது

Posted: 15 Mar 2014 12:26 PM PDT

சர்வதேச கடல் எல்லைக்கு அருகே இந்திய கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்திய கடல் எல்லைக்குள் ஒரு படகு அத்துமீறி நுழைந்தது. அந்தப் படகை விரட்டிச் சென்று தடுத்து நிறுத்திய அதிகாரிகள் அதிலிருந்த 13 மீனவர்களை கைது செய்தனர். பிடிப்பட்ட அல் ஜியா ஜலானி என்ற அந்த படகு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தது. அதில் 13 பாகிஸ்தான் மீனவர்கள் இருந்தனர். கைது செய்யப்பட்ட 13 பாகிஸ்தான் மீனவர்களையும் பிடிபட்ட படகையும்

திருட்டு லாரியில் கடத்தப்பட்ட 673 கிலோ கஞ்சா பறிமுதல்

Posted: 15 Mar 2014 12:21 PM PDT

பீகார் தலைநகர் பாட்னாவிலுள்ள தானுகி மோர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை சந்தேகத்தின் பேரில் மடக்கிப்பிடித்து சோதனை செய்தனர். வாகனத்தின் சரக்கை ஏற்றும் பகுதியில் எதிர்பார்த்தபடி ஏதும் கிடைக்காத போலீசார் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும், சந்தேகம் விடுபடாத போலீசார் டிரைவரின் கேபினுக்குள் துருவித்துருவி சோதனையிட்டனர். அப்போது ஒரு ரகசிய பெட்டிக்குள் 59 பாக்கெட்டுகளில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்த போலீசார் மனோஜ்குமார், லால் பகதூர் தாக்கூர், ஜெய்சந்திரா ஜா ஆகியோரை கைது செய்து விசாரித்த போது, பறிமுதல் செய்த கஞ்சாவை ஏற்றி வந்த வாகனம் ஓடிசாவிலிருந்து திருடிக் கொண்டுவரப்பட்டது என்பது தெரியவந்தது.

ரெயிலில் பெண்களிடம் பாலியல் குறும்பு: 3 ராணுவ வீரர்கள் கைது

Posted: 15 Mar 2014 12:13 PM PDT

மேற்கு வங்காள மாநிலத்தில் காவல் பணியில் இருந்த ராணுவ வீரர்கள் சிலர் ஹோலி பண்டிகையை கொண்டாடுவதற்காக நேற்று ஜல்பைகுரி நிலையத்தில் ரெயில் ஏறினர். ஆரம்பத்தில் அந்த பெட்டியில் இருந்த பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்ள அவர்கள் முயற்சித்தபோது, சிலர் வேறு இருக்கைகளில் சென்று அமர்ந்து இவர்களின் குறும்பில் இருந்து தப்பினர். சகித்துக் கொண்டு அதே இடத்தில் அமர்ந்திருந்த பெண்களிடம் இவர்களின் சேட்டை அதிகரிக்கவே, கட்டிஹார் நிலையத்தை நெருங்கும்போது ரெயிலில் பயணித்த ஒரு பெண் இது தொடர்பாக தனது உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் அளித்தார். ரெயில் நின்றதும் போலீசாருடன் தயாராக காத்திருந்த அவர்கள் அந்த 3 ராணுவ வீரர்களையும் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பவன் குமார், நிதீஷ் குமார், அமித் குமார் என்ற அவர்கள் மூ

மாயமான மலேசிய விமானத்தை இந்தியா தீவிரமாக தேடுகிறது

Posted: 15 Mar 2014 12:09 PM PDT

மாயமான விமானத்தை தேடும் பணியில் இந்தியா உதவவேண்டும் என்று மலேசியா கேட்டுக்கொண்டது. அதைத் தொடர்ந்து இந்தியாவும் தனது போர் கப்பல்கள், விமானங்களை அந்தப்பணியில் ஈடுபடுத்தி உள்ளது. இந்தியா தனது தேடுதல் வேட்டையை நேற்று மூன்றாவது நாளாக தொடர்ந்தது. இந்தத்தேடுதல் பணியை தீவிரப்படுத்தும் விதத்தில் கூடுதல் போர் விமானங்களையும், கப்பல்களையும் இந்தியா ஈடுபடுத்தியது. அந்த வகையில், சமீபத்தில் வாங்கிய 'பி-8ஐ' அதிநவீன விமானங்கள், 'சி130 ஜே' விமானம் ஆகியவற்றை வங்கக்கடல் மற்றும் அந்த

ராகுல் தொகுதியில் பிரசாரம் செய்ய வருண் காந்தி மறுப்பு

Posted: 15 Mar 2014 11:41 AM PDT

காங்கிரஸ் துணைத் தலைவர் போட்டியிடும் அமேதி தொகுதியில் அவரை எதிர்த்து பிரசாரம் செய்ய மாட்டேன் என வருண் காந்தி அறிவித்துள்ளார். மறைந்த சஞ்சய் காந்தியின் மகனான வருண் காந்தி, பா.ஜ.க. சார்பில் பிலிபிட் தொகுதியில் போட்டியிட்டு அந்த தொகுதியின் எம்.பி.யாக தற்போது பதவி வகித்து வருகிறார். இந்த பாராளுமன்ற தேர்தலில் சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ள அவர், அந்த தொகுதி மக்களிடையே ஆதரவு திரட்டி வருகிறர். பக்கத்து தொகுதியான அமேதியில் போட்டியிடும் ராகுல் காந்தியை எதிர்த்து பிரசாரம் செய்வீர்களா? என்ற நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த வருண் , 'வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் பணிவன்பு மிகவும் முக்கியம். உறவுகளுக்கு நான் எப்போதுமே மிகவும் சிறப்பிடம் தந்து மதிப்பளித்து வந்துள்ளேன்.

பிருந்தாவனத்தில் கிருஷ்ணருக்கு 70 மாடி உயரக் கோவில்

Posted: 15 Mar 2014 11:27 AM PDT

இந்துக்கடவுள்களில் ஒருவரான கிருஷ்ணர் தனது இளமைக்காலத்தை மதுரா மாவட்டத்தில் உள்ள பிருந்தாவனத்தில் கழித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. அந்த பிருந்தாவனத்திற்கு உலகளாவிய பெருமை சேர்க்கும் விதமாக அங்கு கிருஷ்ணருக்கென்று 213 மீ உயரம் கொண்ட ஒரு கோவிலை நிர்மாணிக்க கிருஷ்ண பக்தர்களுக்கான சர்வதேச சமூகம் தீர்மானித்துள்ளது. 62 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவுள்ள இந்தக் கோவிலுக்கென தனி ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படும். இங்கு தங்கி இறைசேவையில் ஈடுபடும் பக்தர்களுக்கான வீடு வசதிகளும் இங்கு ஏற்படுத்தித் தரப்படும். நவீன கட்டிடக்கலையுடன் இணைந்த நகரத்தார் பாணியில் இந்தக் கோவில் அமைக்கப்படும் என்றும் ஆண்டு முழுவதும் அங்கு கலாச்சாரத் திருவிழாக்களும், ஆன்மீகத் திட்டங்களும் செயல்படுத்தப்படும் என்றும் இஸ்கான் அமைப்பு தெரிவித்துள்ளது. இங்கு கோவில்களுக்குப் பஞ்சம் இல்லையென்றாலும் இப்படியொரு முன்மாதிரியான கோவிலை உருவாக்குவதன்மூலம்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™