Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் கிரண்குமார் ரெட்டி வழக்கு

Posted: 05 Mar 2014 11:19 PM PST

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பகுதிகள் பிரிக்கப்பட்டு தனி மாநிலம் உருவாக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் கடந்த மாதம் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அந்த மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது

ராஜீவ் கொலையாளிகள் விடுதலை விவகாரம்: பதிலளிக்க மத்திய அரசுக்கு அவகாசம்

Posted: 05 Mar 2014 10:55 PM PST

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கு விசாரணை 26–ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்குதண்டனையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பு கூறியது. 23 ஆண்டுகள் அவர்கள் சிறை தண்டனை அனுபவித்து

கர்நாடக காங்கிரசில் மந்திரி, எம்.எல்.ஏ.க்களுக்கு டிக்கெட்

Posted: 05 Mar 2014 10:36 PM PST

கர்நாடக மாநில பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 17–ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. ஆளும் காங்கிரஸ் கட்சி கடந்த சில நாட்களாக வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது. வேட்பாளர் பட்டியல் கட்சி தலைமை ஒப்புதலுக்கு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம்

உ.பி., பீகாரில் பா.ஜ.க.வுக்கு 79 இடங்கள் கிடைக்கும்: ஆளுங்கட்சிகள் செல்வாக்கு சரிவு

Posted: 05 Mar 2014 10:26 PM PST

உ.பி, பீகாரில் ஆளும் கட்சிகள் செல்வாக்கு சரிவால் பாரதீய ஜனதாவுக்கு 79 தொகுதிகள் வரை கிடைக்கும் என்று கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் கட்சிகளின் நிலவரம் வெற்றி வாய்ப்பு குறித்து சி.என்.என்.ஐ.பி.என். தொலைகாட்சி கருத்துகணிப்பு நடத்தியது. உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 80 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் பாரதீய ஜனதாவுக்கு 41 முதல் 49 தொகுதிகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.

பைக்கில் செல்லும் திருப்பதி பக்தர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம்

Posted: 05 Mar 2014 09:28 PM PST

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். திருப்பதியையொட்டியுள்ள ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் மற்றும் தமிழக பகுதி பக்தர்கள் மோட்டார்சைக்களில் திருமலை செல்கிறார்கள். இவ்வாறு மோட்டார் சைக்கிளில் வரும் பக்தர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து வர வேண்டும் என்று திருமலை தேவஸ்தானம் உத்தரவிட்டு உள்ளது.

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 7 கிலோ தங்க கட்டி பறிமுதல்

Posted: 05 Mar 2014 09:12 PM PST

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 7 கிலோ தங்க கட்டி பறிமுதல்

ஜெகன்மோகன் ரெட்டியின் ரூ.863 கோடி சொத்துக்கள் முடக்கம்

Posted: 05 Mar 2014 08:20 PM PST

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன்ரெட்டி அவரது தந்தை ராஜசேகரரெட்டி முதல்-மந்திரியாக பதவியில் இருந்த போது முறைகேட்டில் ஈடுபட்டு சொத்து குவித்தது தொடர்பாக அவர் மீது கடந்த 2012-ம் ஆண்டு பல்வேறு பிரிவுகளில் சி.பி.ஐ. போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் பண மோசடி தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகளும் ஜெகன்மோகன்ரெட்டி மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆந்திராவி

பா.ஜனதாவை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்: ராகுல் காந்தி

Posted: 05 Mar 2014 07:26 PM PST

மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் பங்கேற்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர், "தங்களை இந்துக்கள் என்று அழைத்துக்கொள்ளும் பா.ஜனதா கட்சியினர் பகவத் கீதையை படிப்பது இல்லை. அப்படி அவர்கள் படித்து இருந்தால், காங்கிரஸ் என்பது ஒரு அமைப்பு அல்ல; அது ஒரு கொள்கை என்றும், யாராலும் அதை அசைக்க முடியாது என்பதையும் அவர்கள் உணர்ந்து இருப்பார்கள்" என்று குறிப்பிட்டார். அவர்

ஆந்திர பிரிவினைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல்

Posted: 05 Mar 2014 03:57 PM PST

ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தனித்தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. அந்த முடிவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் இசைவு தெரிவித்து கையொப்பமிட்டுள்ள நிலையில் புதிய மாநிலம் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

மேற்குத்தொடர்ச்சி மலை மீதான கேரள அரசு பரிந்துரையை சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏற்றது

Posted: 05 Mar 2014 03:44 PM PST

இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைச்சகம் மேற்குத் தொடர்ச்சி மலையின் பாதுகாப்புப் பகுதிகளை வரைமுறைப்படுத்துவதற்காக சென்ற ஆண்டு இந்திய விஞ்ஞானியான கஸ்தூரிரங்கன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து சுற்றுச்சூழல் முக்கியப் பகுதிகளை குறிப்பெடுத்தது. அனால், இந்தக் குழுவின் அறிக்கை தங்களுடைய விளைநிலங்கள், தோட்டங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளைப் பாதிப்பதாக அங்கிருந்த மக்களிடம் பெரிய

மனைவி, குழந்தைகளை சுட்டுக் கொன்று விட்டு ராணுவ வீரர் தற்கொலை

Posted: 05 Mar 2014 02:37 PM PST

உத்தரபிரதேசம் மாநிலம், ஃபைசாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ் சிங்(40). ராணுவ வீரரான இவர் சண்டிகர் ராணுவப் பிரிவில் பணியாற்றி வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்துள்ள ரமேஷ் சிங், நேற்று வெளியே சென்று விட்டு வீடு திரும்பியபோது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது.

குஜராத் அணு அளவு கூட வளரவே இல்லை: கெஜ்ரிவால் சான்றிதழ்

Posted: 05 Mar 2014 02:08 PM PST

குஜராத்தில் மோடி அரசு ஏற்படுத்தியுள்ள வளர்ச்சியை ஆராய்வதற்காக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 4 நாள் சுற்றுப்பயணமாக குஜராத்தில் முகாமிட்டுள்ளார். நேற்று காலை அகமதாபாத் விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், 'குஜராத்தில் ராம ராஜ்ஜியம் நடப்பதாக ஊடகங்களும், மாநில அரசும் தொடர்ந்து கூறி வருகின்றன. கல்வித் துறை மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், சுகாதார பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும், ஊழல் அறவே ஒழிக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படும்

கெஜ்ரிவாலை விட அதிக தியாகங்களை செய்தவர் மம்தா:அன்னா ஹசாரே

Posted: 05 Mar 2014 01:47 PM PST

ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் மூத்த சமூகசேவகர் அன்னா ஹசாரே பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பேசுகையில் "எளிமையான ஆடைமற்றும் ரப்பர் செருப்புகள் அணியும் ஒரு முதல்வரை காண்பது மிகவும் அரிது.அந்த வகையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று வரை தனக்கு வழங்கப்பட்ட அரசாங்க இல்லத்தையோ அரசு வாகனத்தையோ பயன்படுத்தாமல்

அமெரிக்க தூதரகத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து போலீஸ்காரர் பலி

Posted: 05 Mar 2014 01:37 PM PST

ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றிய போலீஸ்காரரின் தானியங்கி துப்பாக்கி குண்டு எதிர்பாராத விதமாக அவரது வயிற்றுக்குள் பாய்ந்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நமோ என்றால் என்ன?: கோவா முதல்வர் விளக்கம்

Posted: 05 Mar 2014 12:31 PM PST

குஜராத்தின் முதலமைச்சரும் பா.ஜ.க வின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை அக்கட்சியினர் சுருக்கமாக 'நமோ' என்று அழைக்கின்றனர். இந்நிலையில், மோடியின் பெயர் சுருக்கத்திற்கு கோவா முதலமைச்சர் மனோகர் பரிக்கர் தற்போது புது விளக்கம் அளித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறுகையில் "இந்து மத நம்பிக்கையின்படி,

தொண்டர்களின் சார்பில் மன்னிப்பு கேட்கிறேன்: கெஜ்ரிவால்

Posted: 05 Mar 2014 12:22 PM PST

குஜராத்தில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து டெல்லியிலுள்ள பா.ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆம் ஆத்மி தொண்டர்களுக்கும் பா.ஜனதா ஆதரவாளர்களுக்குமிடையேமோதல்

13 வயது மகளை வற்புறுத்தி விபச்சாரத்தில் தள்ளிய தாய்

Posted: 05 Mar 2014 11:54 AM PST

பெற்ற தாயே தன்னை வற்புறுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி கொடுமைப்படுத்துவதாக மேற்கு டெல்லியின் பஸ்சிம் விகார் பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமி போலீசில் புகார் அளித்துள்ளார். தந்தையை இழந்த அந்த சிறுமியின் 33 வயது தாய் கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் உள்ள மியான்வாலி நகர் பகுதிக்கு அழைத்து சென்று அங்குள்ள 3 வாடிக்கையாளர்களுடன் உல்லாசமாக இருக்கும்படி அவளை

இசை வழி சிகிச்சை தொடர்பான கருத்தரங்கம்: டெல்லியில் நடைபெறுகிறது

Posted: 05 Mar 2014 10:43 AM PST

பல்வேறு வகையான நோய்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சையின் ஒரு கட்டமாக இசை சார்ந்த சிகிச்சை முறைகளும் உலக நாடுகளில் பரவலாக பின்பற்றப்பட்டு வருகின்றன. அவ்வழியில், இசை சார்ந்த சிகிச்சை முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது தொடர்பான 3 நாள் கருத்தரங்கம் நாளை (7-ம் தேதி) முதல் 9-ம் தேதி வரை புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ்

காஷ்மீரில் 42 சதவீதம் வாக்குச்சாவடிகள் முக்கியத்துவமானவை

Posted: 05 Mar 2014 10:29 AM PST

பாராளுமன்ற தேர்தலையொட்டி ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் ஏப்ரல் 10 முதல் மே 7 வரை 5 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகள், அதிக பதற்றமான வாக்குச்சாவடிகள் தொடர்பாக காஷ்மீர் மாநில தேர்தல் அதிகாரி உமாங் நருலா இன்று மாநில அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வராது: மம்தா திட்டவட்டம்

Posted: 05 Mar 2014 10:04 AM PST

மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்காளம் மற்றும் சில மாநிலங்களில் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்ளின் பெயர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.இப்பட்டியலை வெளியிட்ட பின் மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரசின் தலைவருமான மம்தா பானர்ஜி கூறுகையில் "திரிணாமுல் காங்கிரஸ் இந்நாட்டிலுள்ள மூன்றாவது


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™