மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா?: மோடிக்கு கெஜ்ரிவால் சவால்
- மோடி இன்று 2–ம் கட்ட சூறாவளி பிரசாரம் தொடக்கம்
- திருப்பதி கோவிலுக்கு நன்கொடை வழங்குபவர்களுக்கு பிரசாதம் வீடுதேடி வரும்
- திருப்பதியில் உண்டியலில் இருந்து தங்க கொலுசு திருடிய அதிகாரி கைது
- காஷ்மீர் வைஷ்ணோதேவி ஆலயத்தில் மோடி வழிபாடு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
- பாராளுமன்ற தேர்தல்: இளம் தலைவர்களுடன் ராகுல் ஆலோசனை
- நான் ஓடிப்போகவில்லை, முதல்வர் பதவியை தியாகம் செய்திருக்கிறேன்: கெஜ்ரிவால்
- வதோதராவில் மோடியை எதிர்த்து மதுசூதன் மிஸ்திரி போட்டி
- காங்கிரசின் 7-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு
- சந்திரசேகர ராவ் மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை: தெலுங்கானா காங். குற்றச்சாட்டு
- பஞ்சாபில் பா.ஜ.க. சார்பில் பாலிவுட் நடிகர் வினோத் கண்ணா போட்டி
- மோடியை எதிர்த்து போட்டியிடும் வதோதரா காங்கிரஸ் வேட்பாளர் ராவத் வாபஸ்
- சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவனுக்கு தூக்கு உறுதி
- புனேயில் காங்கிரஸ் வேட்பாளருக்கு கல்மாடி ஆதரவு
- மோடி-ராகுலை வீழ்த்துவதே எங்கள் குறிக்கோள்: கெஜ்ரிவால்
- பா.ஜ.க.வை விட்டு வெளியேற மாட்டேன்: ஜஸ்வந்த் சிங் பேட்டி
- பா.ஜனதா கூட்டணியில் தீண்டத்தகாதவர் மோடி: மொய்லி விமர்சனம்
- பார்மர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் சோனாராம் மனுத்தாக்கல்
- வாரணாசி: முட்டையை அடுத்து கெஜ்ரிவால் மீது மை வீச்சு
- ரப்ரி தேவியை எதிர்த்து சகோதரர் சாது யாதவ் போட்டி
| நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா?: மோடிக்கு கெஜ்ரிவால் சவால் Posted: 25 Mar 2014 10:47 PM PDT பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து போட்டியிடப் போவதாக ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். கெஜ்ரிவால் நேற்று வாரணாசி சென்று கங்கையில் குளித்துவிட்டு, காசி விசுவநாதரை வழிபட்டார். பிறகு அவர் வாரணாசியில் நடந்த கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். |
| மோடி இன்று 2–ம் கட்ட சூறாவளி பிரசாரம் தொடக்கம் Posted: 25 Mar 2014 10:33 PM PDT பாராளுமன்றத்துக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 7–ந்தேதி முதல் மே மாதம் 12–ந்தேதி வரை 9கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி நாடெங்கும் தேர்தல் பிரசாரம் விறு விறுப்பு பெற்றுள்ளது. பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி தனித்து ஆட்சி அமைக்கும் வகையில், பெரும்பாலான பலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த மாதம் முதல் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டார். |
| திருப்பதி கோவிலுக்கு நன்கொடை வழங்குபவர்களுக்கு பிரசாதம் வீடுதேடி வரும் Posted: 25 Mar 2014 10:21 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் ஏராளமானோர் நன்கொடை வழங்கி வருகிறார்கள். காசோலை, டிமாண்ட் டிராப்ட் மூலம் நன்கொடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு ரூ.44 கோடி ரூபாய் நன்கொடையாக கிடைத்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு ஜனவரி மாதம் மட்டும் ரூ.51 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. |
| திருப்பதியில் உண்டியலில் இருந்து தங்க கொலுசு திருடிய அதிகாரி கைது Posted: 25 Mar 2014 09:31 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த ஆளுயர உண்டியல் வைக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதிலும் இருந்து வரும் பக்தர்கள், தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், அந்த உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். ரொக்கப்பணமாக மட்டுமின்றி, சில பக்தர்கள் ஆபரணங்களையும் |
| காஷ்மீர் வைஷ்ணோதேவி ஆலயத்தில் மோடி வழிபாடு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு Posted: 25 Mar 2014 08:53 PM PDT டெல்லி போலீசாரின் தேடுதல் வேட்டையில் சமீபத்தில் ராஜஸ்தானில் பிடிபட்ட இந்திய முஜாஹிதீன் தீவிரவாதிகள் அளித்துள்ள வாக்குமூலத்தின்படி, மனித வெடிகுண்டு மூலம் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை தீர்த்துக் கட்ட திட்டமிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. மோடியின் உயிருக்கு ஆபத்து இருப்பதை மத்திய உள்துறை அமைச்சகமும் |
| பாராளுமன்ற தேர்தல்: இளம் தலைவர்களுடன் ராகுல் ஆலோசனை Posted: 25 Mar 2014 08:07 PM PDT 9 கட்ட ஓட்டுப்பதிவை சந்திக்க உள்ள பாராளுமன்ற தேர்தல் களம், சூடுபிடித்து வருகிறது. ஆட்சியை கைப்பற்ற வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிற பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடிக்கு ஈடுகொடுக்க, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தயார் ஆகி வருகிறார். அந்த வகையில் நேற்று அவர் டெல்லியில் கட்சியின் இளம் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டினார். பாராளுமன்ற தேர்தல் உத்தி குறித்து முக்கிய |
| நான் ஓடிப்போகவில்லை, முதல்வர் பதவியை தியாகம் செய்திருக்கிறேன்: கெஜ்ரிவால் Posted: 25 Mar 2014 04:50 PM PDT முதல்வர் பதவியிலிருந்து தப்பித்து ஓடிவிட்டதாக பா.ஜ.க. கூறி வரும் நிலையில் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் ராமர் வனவாசம் சென்றதைப் போல சில கொள்கைகளை நிலைநாட்டுவதற்காகவே டெல்லி முதல்வர் பதவியை தியாகம் செய்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து வாரணாசியில் பிரச்சாரத்தின் போது அவர் பேசியதாவது:- பலர் நான் பதவியை விட்டு ஓடிவிட்டதாக கூறுகின்றனர். நான் சில கொள்கைகளுக்காகவே பதவியை விட்டு விலகினேன். கடவுள் ராமர் அவருடைய தாயாரால் 14 ஆண்டுகள் வனவாசத்திற்கு |
| வதோதராவில் மோடியை எதிர்த்து மதுசூதன் மிஸ்திரி போட்டி Posted: 25 Mar 2014 03:29 PM PDT வரும் மக்களவை தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து போட்டியிடும் நரேந்திர மோடி குஜராத் மாநில வதோதரா மக்களவை தொகுதியிலும் போட்டியிடுகிறார். இதையடுத்து, அங்கு மோடியை எதிர்த்து போட்டியிட நரேந்திர ராவத்தை வேட்பாளராக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இந்நிலையில், மோடியை எதிர்த்து போட்டியிட நரேந்திர ராவத் மறுப்பு தெரிவித்ததை அடுத்து வதோதரா தொகுதியில் மோடிக்கு எதிராக வலுவான வேட்பாளராக மதுசூதன் மிஸ்திரியை காங்கிரஸ் கட்சி நிறுத்தியுள்ளது. இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் |
| காங்கிரசின் 7-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு Posted: 25 Mar 2014 03:09 PM PDT மக்களவை தேர்தலுக்கான 7-வது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அதில் அசோக் சவான், மதுசூதன் மிஸ்திரி உட்பட 12 பேர் இடம்பெற்றுள்ளனர். அதன்படி, உத்தரபிரதேச மாநிலத்தின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரான மதுசூதன் மிஸ்திரி, குஜராத்தின் வதோதராவில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். குஜராத்தின் மற்றொரு தொகுதியான கிழக்கு அகமதாபாத்தில் ஹிம்மத்சிங் பட்டேல் அறிவிக்கப்பட்டுள்ளார். |
| சந்திரசேகர ராவ் மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை: தெலுங்கானா காங். குற்றச்சாட்டு Posted: 25 Mar 2014 01:51 PM PDT ஆந்திராவில் சட்டசபை மற்றும் மக்களவை தேர்தல் நெருங்குவதை அடுத்து ஒரு நேரத்தில் கூட்டணியாக இருந்த டி.ஆர்.எஸ்-ம், காங்கிரஸ் கட்சியும் தற்போது மாறி மாறி குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறது. தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் லக்ஷ்மையா ஓ.எஸ். ராஜசேகர ரெட்டியின் ஆட்சியில் நீர்பாசனத்துறை மந்திரியாக இருந்தபோது அப்பகுதி மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் தலைவர் சந்திரசேகர ராவ் குற்றஞ்சாட்டியிருந்தார். |
| பஞ்சாபில் பா.ஜ.க. சார்பில் பாலிவுட் நடிகர் வினோத் கண்ணா போட்டி Posted: 25 Mar 2014 11:23 AM PDT ஒன்பது வேட்பாளர்களுக்கான பட்டியலை இன்று இரவு பா.ஜ.க. வெளியிட்டுள்ளது. அதன்படி, பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மக்களவை தொகுதியிலிருந்து பா.ஜ.க. சார்பில் போட்டியிட பாலிவுட் நடிகர் வினோத் கண்ணா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். குருதாஸ்பூர் தொகுதியில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா-வை எதிர்த்து களமிறங்கும் வினோத் கண்ணா கடந்த 2009 தேர்தலில் மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் அவரை தோற்கடித்தார். |
| மோடியை எதிர்த்து போட்டியிடும் வதோதரா காங்கிரஸ் வேட்பாளர் ராவத் வாபஸ் Posted: 25 Mar 2014 10:51 AM PDT வரும் மக்களவை தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து மோடி போட்டியிடுகிறார். குஜராத் மாநில முதல்வராக 3 வது முறையாக தொடர்ந்து பதவி வகித்து வரும் மோடி வதோதரா மக்களவைத் தொகுதியை 2 ஆவது பாதுகாப்பான தொகுதியாக கருதுவதால் அங்கும் மோடி போட்டியிடுகிறார். இதைத்தொடர்ந்து, அங்கு மோடியை எதிர்த்து போட்டியிட வதோதரா நகரின் காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வரும் நரேந்திர ராவத்தை வேட்பாளராக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இந்நிலையில், மோடியை எதிர்த்து போட்டியிடுவதில் இருந்து விலகிக்கொள்வதாக ராவத் இன்று அறிவித்துள்ளார். |
| சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவனுக்கு தூக்கு உறுதி Posted: 25 Mar 2014 07:48 AM PDT மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் கோபரி கிராமத்தில் கடந்த ஆண்டு ஜனவரி 22-ந் தேதி 5 வயது சிறுமி வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் தத்தாத்ரே ரோகடே (54) என்பவர், சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். |
| புனேயில் காங்கிரஸ் வேட்பாளருக்கு கல்மாடி ஆதரவு Posted: 25 Mar 2014 07:36 AM PDT இந்தியாவில் காமன்வெல்த் போட்டி நடைபெற்ற போது அதில் நடைபெற்ற ஊழல்முறைகேடுகளில், போட்டி ஒருங்கிணைப்பாளரான சுரேஷ் கல்மாடி எம்.பி.க்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சி.பி.ஐ. அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த குற்றச்சாட்டு காரணமாக, |
| மோடி-ராகுலை வீழ்த்துவதே எங்கள் குறிக்கோள்: கெஜ்ரிவால் Posted: 25 Mar 2014 07:20 AM PDT உத்தர பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் இன்று நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். அப்போது வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிடுவதை உறுதி செய்தார். |
| பா.ஜ.க.வை விட்டு வெளியேற மாட்டேன்: ஜஸ்வந்த் சிங் பேட்டி Posted: 25 Mar 2014 04:49 AM PDT பா.ஜ.க.வின் மூத்த தலைவரான ஜஸ்வந்த் சிங்கிற்கு மக்களவை தேர்தலில் அவரது சொந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் சுயேட்சையாக இத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்து நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். |
| பா.ஜனதா கூட்டணியில் தீண்டத்தகாதவர் மோடி: மொய்லி விமர்சனம் Posted: 25 Mar 2014 03:37 AM PDT மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி வீரப்ப மொய்லி இனறு பெங்களூரில் நிருபர்களிடம் கூறியதாவது:- மோடி பிரதம் ஆக முடியாது. அவர் தனது கட்சிக்குள் சர்வாதிகார வழியில் சென்றுகொண்டிருக்கிறார். குஜராத்தில் அவர் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை தலைவர்களை வெளியேற்றிவிட்டார். |
| பார்மர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் சோனாராம் மனுத்தாக்கல் Posted: 25 Mar 2014 03:11 AM PDT பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங், ராஜஸ்தான் மாநிலம் பார்மர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாமல், முதல்வர் வசுந்தராவின் ஆதரவுடன் முன்னாள் ராணுவ அதிகாரி சோனாராமுக்கு அந்த தொகுதியில் வாய்ப்பு |
| வாரணாசி: முட்டையை அடுத்து கெஜ்ரிவால் மீது மை வீச்சு Posted: 25 Mar 2014 03:01 AM PDT உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி நகரில் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காலை 8.30 மணியளவில் வாரணாசி வந்தடைந்தார். அங்கு பாய்ந்தோடும் கங்கையாற்றில் குளித்த பின்னர், அரசியல்வாதிகளின் ஊழல்களால் கங்கை கூட களங்கப்பட்டுப் போய் விட்டதாக நிருபர்களிடம் |
| ரப்ரி தேவியை எதிர்த்து சகோதரர் சாது யாதவ் போட்டி Posted: 25 Mar 2014 02:21 AM PDT பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரியும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லல்லு பிரசாத்தின் மனைவியுமான ரப்ரி தேவி வரும் பாராளுமன்ற தேர்தலில் சரண் தொகுதியில் போட்டியிடுகிறார். தற்போது, இந்த தொகுதியின் எம்.பி.யாக இருக்கும் லல்லு பிரசாத யாதவ், கால்நடை ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறைக்கு சென்றதையடுத்து, |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |