Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


7 தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

Posted: 29 Mar 2014 11:13 PM PDT

குஜராத்தில் மூன்று தொகுதிகள் உட்பட 7 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. அதில் குஜராத் மாநிலத்தில் நயிஷாத் தேசாய் சூரத் தொகுதியிலும், ஜெயஷ் பட்டேல் பருச் தொகுதியிலும், மாக்சுட் மிர்சா நவாசரி தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சத்யநாராயணன் சர்மா ராய்ப்பூர் தொகுதியிலும், சுரேஷ் சந்திர யாதவ் ராஜஸ்தானில் உள்ள பரத்பூர் தொகுதியிலும், தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம் தொகுதியில் கே. ராணியும் போட்டியிடுகின்றனர்.

ஆந்திராவில் பா.ஜனதா–தெலுங்குதேசம் கூட்டணி முறிந்தது

Posted: 29 Mar 2014 11:02 PM PDT

பாராளுமன்ற தேர்தல் அறிவித்த உடனேயே ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைக்க பா.ஜனதா முடிவு செய்தது. இதையடுத்து பா.ஜனதா மாநில விவகார பொறுப்பாளர் பிரகாஷ் ஐவதேகர் ஆந்திரா வந்து தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு: எழுதியவர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் குறைவு

Posted: 29 Mar 2014 10:47 PM PDT

கல்வித்துறையின் இந்த ஆண்டிற்கான பொறியியல் பட்டதாரி திறனறித் தேர்வு (GATE) கடந்த பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 2 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. மொத்தம் 8.89 லட்சம் பேர் இந்தத் தேர்வுகளை எழுதியிருந்தனர். இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் மின் பொறியியல் பிரிவில் அங்கிட் கோயல் என்ற மாணவரும், இயந்திர பொறியியல் பிரிவில் சுபம் சிங் என்ற மாணவரும் முதலிடம் பெற்றுள்ளதாக அவர்களின் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பா.ஜனதா கூட்டணிக்கு 233 இடம் கிடைக்கும்: புதிய கருத்து கணிப்பு

Posted: 29 Mar 2014 10:31 PM PDT

பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு மனு தாக்கல் தொடங்கி விட்டன. தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில் புதிய கருத்து கணிப்பை ஏ.பி.பி. செய்திக்காக ஏ.சி. நீல்சன் நிறுவனம் நடத்தியது. அதில் பாரதீய ஜனதா கூட்டணி 233 இடங்களில் வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ் கூட்டணிக்கு 119 இடங்களே கிடைக்கும் என்றும் தெரிய

மோடியின் பிரதமர் கனவு பலிக்காது: ஏ.கே.அந்தோணி பேட்டி

Posted: 29 Mar 2014 10:24 PM PDT

கேரளாவில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 10–ந் தேதி நடக்கிறது. இதையொட்டி காங்கிரசின் வெற்றி வாய்ப்பு பற்றி மத்திய மந்திரி ஏ.கே.அந்தோணி திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெறுவது உறுதி. மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும்

கோமாவில் இருந்தவரைப் பிழைக்கவைத்து இந்திய மருத்துவர்கள் சாதனை

Posted: 29 Mar 2014 09:13 PM PDT

அலுவலகப் பணி நிமித்தமாக அசோக் தேப்நாத், அங்கிதா என்ற கொல்கத்தா தம்பதியினர் தற்போது கனடாவில் வாழ்ந்துவருகின்றனர். இவர்களில் தேப்நாத்திற்கு கடந்த அக்டோபர் மாதம் காய்ச்சல், தலைவலி, குளிர் மற்றும் கழுத்தின் பின்பகுதியில் வலி போன்ற உடல்நலக் குறைவுகள் ஏற்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அவருக்கு நடக்கவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த மருத்துவர்களிடம் பரிசோதனை மேற்கொண்டதில் மூளைத்தண்டு விரிவாக்கத்தைத் தூண்டும் அசாதாரண நோய்த்தொற்று அவருக்கு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

காலநிலை மாற்றங்கள் குறித்த ஐ.நாவின் ஆய்வறிக்கை ஜப்பானில் நாளை வெளியீடு

Posted: 29 Mar 2014 08:45 PM PDT

மனிதர்களின் அத்தியாவசியத் தேவைகளான குடிதண்ணீர், உணவு தானிய உற்பத்தி போன்ற இயற்கை வளங்கள் மற்றும் மனிதக் குடியேற்றங்கள் ஆகியவற்றின் மீது காலநிலை மாற்றங்களால் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்த ஒரு ஆய்வினை ஐ.நா அமைப்பு மேற்கொண்டுள்ளது. உலக நாடுகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகளும், அரசாங்கப் பிரதிநிதிகளும் அடங்கிய

நாட்டின் ஒவ்வொரு ஊழலுக்கும் சோனியாவே மூலக் காரணம்: பாபா ராம்தேவ்

Posted: 29 Mar 2014 02:40 PM PDT

கருப்புப் பணத்துக்கு எதிராக போராடி வரும் யோகா குரு பாபா ராம்தேவ், மத்தியில் தங்களது ஆட்சி அமைந்தால் வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் குவித்து வைத்திருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு வருவோம் என்று பா.ஜ.க. உத்திரவாதம் அளித்ததை தொடர்ந்து, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை

நாட்டுக்காக வாழ்வதும், சாவதும்தான் எங்கள் சித்தாந்தம்: மோடி

Posted: 29 Mar 2014 02:31 PM PDT

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், "ஒரு தனிப்பட்ட நபர் என்ற முறையில் நரேந்திரமோடிக்கு எதிராக என்னிடம் ஏதுமில்லை. ஆனால் இந்தியாவுக்கு எதிரான அவரது சித்தாந்தத்தை நான் எதிர்க்கிறேன். மோடி

5 பேரை பலி வாங்கிய ராணுவ விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்தது

Posted: 29 Mar 2014 02:01 PM PDT

இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி–130 ஜெ சூப்பர் ஹெர்குலஸ் விமானம் வழக்கம் போல் நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் பயிற்சிக்காக ஆக்ரா விமானப் படை தளத்தில் இருந்து புறப்பட்டு சென்றது

5 சிறுமிகளை கற்பழித்த காமக்கொடூரனுக்கு ஆயுள் தண்டனை

Posted: 29 Mar 2014 01:22 PM PDT

மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டத்தின் ரன்ஷேத் படா பகுதியில் வசித்தவன், ரமேஷ்(45). வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அக்கம்பக்கத்து வீடுகளில் வசிக்கும் சிறுமிகளை ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி தனது வீட்டுக்கு அழைத்து சென்ற இந்த காமக்கொடூரன், அவர்களை கற்பழித்து விடுவது வழக்கம்

தந்தையை சிறையிலிட்ட அவுரங்கசிப்பைப் போல் செயல்படும் மோடி: காங்கிரஸ் காட்டம்

Posted: 29 Mar 2014 01:13 PM PDT

பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் அரசியல் அனுகுமுறைகள் மொகலாய மன்னர்கள் பாணியில் உள்ளதாக குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் அர்ஜுன் மோத்வாடியா குற்றம் சாட்டியுள்ளார்

மின் கசிவால் தவிட்டு குவியலில் தீ பிடித்து 4 குழந்தைகள் பலி

Posted: 29 Mar 2014 12:27 PM PDT

ஜார்கண்ட் மாநிலத்தின் கிரிதி மாவட்டத்தில் உள்ள பஜ்ரோ கிராமத்தை சேர்ந்தவர், கலீல் மியான். இவரது வீட்டில் நேற்று திடீரென்று ஏற்பட்ட மின் கசிவால் ஏற்பட்ட தீப்பொறி, வீட்டினுள் கிடந்த தவிட்டு குவியலில் விழுந்து தீ பிடித்ததில் வீட்டின் பெரும்பகுதி எரிந்து நாசமானது

வாரணாசியில் மோடிக்கு எதிராக உள்ளூர் வேட்பாளர்: காங்கிரஸ்

Posted: 29 Mar 2014 12:05 PM PDT

லோக் சபா தேர்தலில் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். மோடிக்கு எதிராக மூத்த தலைவர்கள் போட்டியிட காங்கிரஸ்

பா.ஜ.க.வில் இருந்து ஜஸ்வந்த் சிங் நீக்கம்

Posted: 29 Mar 2014 11:40 AM PDT

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான பார்மரில் போட்டியிட விரும்பிய பாரதீய ஜனதா மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்குக்கு, வாய்ப்பளிக்க கட்சியின் தலைமை மறுத்து விட்டது. மாறாக, சமீபத்தில் காங்கிரசில் இருந்து அந்த கட்சிக்கு தாவிய கர்னல் சோனாராம் சவுத்ரிக்கு டிக்கெட் வழங்கப்பட்டது

மும்பை: ஐஸ் தொழிற்சாலையில் விஷவாயு கசிவுக்கு ஒருவர் பலி

Posted: 29 Mar 2014 11:26 AM PDT

மகாராஷ்டிராவின் தானே பகுதியில் உள்ள ஐஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட விஷவாயு கசிவுக்கு நேபாளத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி பரிதாபமாக பலியாகினார். தானே மாவட்டத்தின் சிக்கோலி பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஐஸ் கட்டி தயாரிக்கும் தொழிற்சாலை

டெல்லி இந்தியா கேட் பகுதியில் விளக்குகளை அணைத்து பூமி நேரம் அனுசரிப்பு

Posted: 29 Mar 2014 11:10 AM PDT

புவி வெப்பமயமாதலைத் தடுப்பதில் பங்கு பெறும் வகையில் கடந்த 2007ஆம் ஆண்டில் சிட்னியில் துவக்கப்பட்ட 'பூமி நேரம்' நிகழ்ச்சி விரைவில் மற்ற நாடுகளின் கவனத்தையும் ஈர்த்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் விளக்குகளை

நக்விக்கு எதிராக அவதூறு வழக்கு: சபீர் அலி

Posted: 29 Mar 2014 10:01 AM PDT

ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த சபீர் அலி எம்.பி., பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக கருத்து தெரிவித்ததினால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சபீர் அலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார்

மோடி பிரதமரானால் இனக்கலவரம் உருவாகும்: மாயாவதி

Posted: 29 Mar 2014 09:52 AM PDT

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி இன்று ஒரு கூட்டத்தில் பேசுகையில் "மக்களவை தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வெற்றி பெற்றால் குஜராத்தில் 2002ம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரத்தை போன்று இந்தியா முழுவதும் கலவரம் வெடிக்கும்" என்று தெரிவித்தார்

அரசியலில் ஆத்திரம் கூடாது: ராகுல்

Posted: 29 Mar 2014 08:31 AM PDT

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சகாரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் இம்ரான் மசூத் நேற்று முன்தினம் சகாரன்பூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகையில், "மோடியை துண்டு, துண்டாக வெட்டி போட்டு விடுவேன்" என்று தெரிவித்தார். இக்கருத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™