Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஓட்டுச்சாவடி அதிகாரியாக 14 வயது சிறுவன்: தேர்தல் கமிஷன் விசாரணை

Posted: 16 Mar 2014 11:22 PM PDT

ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் மாநில சட்ட சபைக்கும் தேர்தல் நடை பெற உள்ளது. இதனால் அங்கு கூடுதல் தேர்தல் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக சந்திரயான் குட்டா சட்ட சபை தொகுதிக்குட்பட்ட ஒரு ஓட்டுச்சாவடியின் அதிகாரியாக 14 வயது சிறுவன் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிய

லோக்சபா தேர்தலில் மா. கம்யூ காணாமல் போய் விடும்: உம்மன்சாண்டி

Posted: 16 Mar 2014 11:00 PM PDT

திருவனந்தபுரம் பாராளு மன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக மத்திய மந்திரி சசிதரூர் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த பாராளு மன்ற தேர்தலிலும் திருவனந்த புரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். மனைவி தற்கொலை உள்பட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சசிதரூருக்கு இந்த முறை எம்.பி. சீட் வழங்கக்கூடாது என்று கேரள காங்கிரஸ் கட்சியில் எதிர்ப்பு கிளம்பியது. இருந்தாலும் மத்திய மந்திரி ஏ.கே.

கிரண்குமார் ரெட்டி கட்சிக்கு செருப்பு சின்னம்

Posted: 16 Mar 2014 10:13 PM PDT

தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி பதவியை ராஜினாமா செய்து தனிக் கட்சி தொடங்கினார். தனது கட்சிக்கு ''ஜெய் சமக்யாந்திரா கட்சி'' என பெயரிட்டு உள்ளார். ''ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் தனது கட்சிக்கு துடைப்பம் சின்னத்தை தேர்ந்து எடுத்து பிரபலப்படுத்தியது போல் கிரண்குமார் ரெட்டியும்

பாழடைந்த கிணற்றிலிருந்த பழமையான சாமி சிலைகள் மீட்பு

Posted: 16 Mar 2014 10:12 PM PDT

திருவனந்தபுரம் அருகே மலையின் கீழ் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன், விவசாயி. இவர் சமீபத்தில் அந்த பகுதியில் இருந்த ஒரு பாழடைந்த வீட்டை விலைக்கு வாங்கினார். இதை தொடர்ந்து அந்த வீட்டை சீரமைத்து புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டார். முதல் கட்டமாக அங்கிருந்த 200 அடி ஆழமுள்ள கிணறு தூர் வாரும் பணி தொடங்கியது. இந்த கிணற்றை தொழிலாளர்கள் தூர் வாரியபோது கிணற்று தண்ணீருக்குள் மூழ்கி கிடந்த 2 சாமி சிலைகள் மீட்கப்பட்டது. உடனே இதுபற்றி

2005-க்கு முன்னுள்ள நோட்டுகளை எந்த வங்கியிலும் மாற்றலாம்: ஆர்பிஐ

Posted: 16 Mar 2014 09:52 PM PDT

2005-ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. 2005-ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட நோட்டுகளில், பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்படவில்லை. எனவே, அதில் கள்ள நோட்டுகள் அச்சிட்டு வெளியிடப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே, கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், 2005-ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற முடிவு

தேர்தலுக்கு முன் 3-வது அணி அமைக்க முயன்றது தவறு: ஏ.பி.பரதன்

Posted: 16 Mar 2014 09:04 PM PDT

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதா அல்லாத கட்சிகளை ஒருங்கிணைத்து 3-வது அணி உருவாக்க இடதுசாரிகள் முயற்சி மேற்கொண்டன. அதன்படி சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதாதளம் மற்றும் சில கட்சிகள் சேர்ந்து 3-வது அணி அமைக்கும் முயற்சியில் இறங்கின. ஆனால் தொகுதி பங்கீடு விவகாரத்தில் இந்த கட்சிகளுக்கு இடையே உடன்பாடு எட்டப்படாததால், தேர்தலுக்கு முன்னரே 3-வது அணி கேள்விக்குறியாகி உள்ளது. ஆனால், தேர்தலுக்கு பிறகுதான் 3-வது அணி உருவாகும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் ஏ.பி.பரதன்

பாராளுமன்ற தேர்தலை நடத்தி முடிக்க ரூ.30 ஆயிரம் கோடி செலவாகும்

Posted: 16 Mar 2014 08:20 PM PDT

ஜனநாயக திருவிழா என்று அழைக்கப்படுகிற இந்திய பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 7-ந் தேதி தொடங்கி மே மாதம் 12-ந்தேதி வரை 9 கட்டங்களாக நடக்கிறது. சுதந்திர இந்திய வரலாற்றில் 9 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடப்பது இதுவே முதல் முறை. இந்த தேர்தல் செலவினம் குறித்து ஊடக கல்வி மையம் ஒரு ஆய்வு நடத்தியது. இது அரசுக்கு ஆகும் செலவு, அரசியல் கட்சிகளின் செலவு, வேட்பாளர்கள் செய்கிற செலவு என பல அம்சங்களையும் ஆராய்ந்தது. அந்த ஆய்வின்

பாராளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு 2 மணி நேரம் அதிகரிப்பு

Posted: 16 Mar 2014 08:15 PM PDT

பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 7-ந்தேதி தொடங்கி 9 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில், ஓரே கட்டமாக ஏப்ரல் 24-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே இதற்கான அறிவிப்பை வெளியிட்ட தலைமை தேர்தல் கமிஷன், நாடு முழுவதிலும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளிலும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும் என்று அறிவித்து இருந்தது. கடுமையான வெயில் மற்றும் சூரியன் உதயம், அஸ்தமன நேரத்தை கணக்கில் கொண்டு ஓட்டுப்பதிவுக்கு கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும்

சிறுத்தை தோல்களுடன் ஒருவர் கைது

Posted: 16 Mar 2014 05:07 PM PDT

உலகில் முழுவதுமாக அழியும் தருவாயில் இருக்கின்ற மிக அரிதான விலங்காக சிறுத்தை உள்ளது. இதனை அழியாமல் பாதுகாப்பதற்காக வனத்துறை சிறுத்தையை வேட்டையாட தடை விதித்துள்ளது. இந்நிலையில், டெல்லியில் சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகர் பகுதியில் விலங்குகளின் தோல் மற்றும் உடல் பாகங்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து டெல்லி போலீசார் வனத்துறையினருடன் சேர்ந்து சோதனையில் இறங்கினர். அப்போது அங்கு சிறுத்தை தோல்களை வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் மேண்டி மாவட்டத்தைச் சேர்ந்த லோக்பால் என்றும், அவர் காடுகளுக்குள் சென்று அரிதாகி வ

தேசிய அரசியலில் ஆம் ஆத்மி ஒரு பொருட்டே அல்ல: ராகுல்

Posted: 16 Mar 2014 04:56 PM PDT

தேசிய அரசியலைப் பொருத்த வரை ஆம் ஆத்மி ஒரு பொருட்டே அல்ல என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். டெல்லியில் நேற்று ஆம் ஆத்மி கட்சி தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், 'அதை செய்வோம்; இதை செய்வோம் என்று கூறி டெல்லி மக்களிடம் ஓட்டு வாங்கி விட்டு ஆட்சி அமைக்க முடியாமல் திணறிய ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. டெல்லிவாசிகளிடம் தீர்ப்பதாக வாக்குறுதி அளித்த எந்த பிரச்சனையையும் அவர்கள் தீர்க்கவில்லை. பெரிய வாக்குறுதிகளை தருவதும் ஒரு அரசை வழி நடத்துவதும் வெவ்வேறு என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டு ஆட்சியை போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர்' என்று கூறினார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்குகளை

வேகத்தை மீறுவதால் அதிகரிக்கும் விபத்துகளில் தமிழகம் 2-வது இடம்

Posted: 16 Mar 2014 04:42 PM PDT

இந்தியாவில் சாலைகளில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிவேகத்தில் வாகனங்கள் செல்வதால் ஒரு நாளைக்கு 166 பேர் உயிரிழப்பதாக தேசிய அளவிலான ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வை சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் ஒரு பிரிவான சாலை ஆய்வுத்துறை மேற்கொண்டது. இதன்படி, வேகத்தை மீறுவதால் ஏற்படும் விபத்துகளில் மட்டும் கடந்த ஆண்டில் 68,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மகாராஷ்டிரா மாநிலம் 8,600 உயிரிழப்புகளுடன் முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் புறநகர சாலைகளில் வேகக்கட்டுபாடு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும் போதுமான கண்காணிப்பு இல்லாததால் பல வாகனங்கள் வேகத்தை மீறுகின்றன. இன்னும் பல மாநிலங்களில் அதிகபட்ச வேக அளவை கூட சாலைகளில் அறிவி்க்கவில்லை.

மோடியிடம் தோற்றால் கெஜ்ரிவால் அரசியலில் இருந்து விலகுவாரா?: பாபா ராம்தேவ்

Posted: 16 Mar 2014 04:27 PM PDT

வரும் மக்களவைத் தேர்தலில் வாரணாசியில் மோடி போட்டியிடுவார் என்று அறிவிப்பு வெளியானது. இதையடுத்து ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், மக்கள் விரும்பினால் மோடிக்கு எதிராக வாரணாசியில் போட்டியிட தயார் என்று கூறியிருந்தார். இந்நிலையில், பா.ஜ.க.வின் ஆதரவாளரான யோகாகுரு பாபா ராம்தேவ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- மோடி பிரதமராக வருவதற்கு ஆர்வமாக உள்ளார். இருப்பினும் அவர் சற்று நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். கெஜ்ரிவால் வாரணாசியில் மோடிக்கு எதிராக போட்டியி்ட்டு தோல்வி அடைந்தால் அவர் அரசியலை விட்டே விலகத் தயாராக இருக்கிறாரா?

கற்பழிப்பு முயற்சி தோற்றதால் பஸ்சிலிருந்து பெண்ணை கீழே தள்ளிய டிரைவர்

Posted: 16 Mar 2014 03:46 PM PDT

கற்பழிப்பு முயற்சி பலனளிக்காததால் பஸ்சிலிருந்து பெண்ணை கீழே தள்ளிய டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் பெங்களூரு நகரின் பனஷங்கரி பகுதிக்கு கடந்த 13-ம் தேதி இரவு அரசு பஸ்சில் சென்றார். கடைசி நிறுத்தமான பனஷங்கரியில் பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர், டிரைவரிடம் சென்ற அந்த பெண், 'தேவேகவுடா பெட்ரோல் பங்குக்கு எந்த வழியாக போக வேண்டும்?' என்று விசாரித்தார். 'பஸ் அந்த பக்கமாகதான் போகிறது. உங்களை அங்கே இறக்கி விடுகிறேன்' என்று கூறிய டிரைவர் சற்று தூரம் சென்றதும் பஸ்ஸை நிறுத்திவிட்டு அந்த பெண்ணை கற்பழிக்க முயற்சித்தார். திகைத்துப் போன அந்த பெண் பயத்தில் கூச்சலிடவே, மீண்டும் பஸ்சை கிளப்பி சாம்ராஜ்பேட் பகுதி வழியாக சென்ற அவர், கைப்பையை பறித்துக் கொண்டு அந்த பெண்ணை பஸ்சில் இருந்து கீழே தள்

மோடி நிகழ்ச்சியில் இலவச டீ: பா.ஜ.க.வினர் மீது வழக்கு

Posted: 16 Mar 2014 03:09 PM PDT

பா.ஜ.க.வின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி 'தேநீருடன் விவாதம்' (சாய் பே சர்ச்சா) என்ற தலைப்பில் பல தரப்பு மக்களிடையே வீடியோ கான்பிரென்ஸ் மூலம் கலந்துரையாடி வருகிறார். அவ்வகையில், உத்தரபிரதேசத்தின் கேரி மாவட்டத்தில் கடந்த 8ம் தேதி பா.ஜ.க.வினருடன் மோடி கலந்துரையாடிய 'தேநீருடன் விவாதம்' நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான அனுமதியை தேர்தல் கமிஷனிடமிருந்து மாவட்ட பா.ஜ.க.வினர் பெற்றிருந்தனர். லக்கிம்பூர் பகுதியிலுள்ள ஒரு டீக்கடையின் வாசலில் பிரம்மாண்ட திரை அமைக்கப்பட்டு மோடியுடன் பா.ஜ.க. தொண்டர்கள் வீடியோ காண்பிரன்ஸ் மூலமாக நேருக்கு நேர் பேசினர். அப்போது அங்கிருந்தவர்களுக்கு நிகழ்ச்சியின் தலைப்புக்கேற்ப இலவசமாக டீ வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இலவசமாக டீ வழங்கியது தேர்தல் நடத்தை விதிமுறையை மீறிய வகையில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு ஒப்பாகும் என எதிர்கட்சியினர் உ.பி மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். 'இரண்டு ரூபாய் பெறுமானம் உள்ள டீயை இலவசமாகக் கொடுத்ததை லஞ்சம் என்று எப்படி கருத முடியும்?' என நினைத்த உள்ளூர் தேர்தல் அதிகாரிகள்

முன்னேற்றத்தில் மகாராஷ்டிரமே முதலிடம்: முதல்வர் பெருமிதம்

Posted: 16 Mar 2014 02:32 PM PDT

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை சவால் விடும் வகையில், மகாராஷ்டிர மாநில முதல்வர் பிருத்விராஜ் சவான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 'முன்னேற்றத்தில் நாங்கள் தான் முதலிடத்தில் இருக்கிறோம். குஜராத் அல்ல. இது குறித்து யாரிடம் வேண்டுமானாலும் விவாதம் செய்ய தயாராக இருக்கிறேன். குஜராத் முதலிடத்தில் உள்ளதாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களை விட 10 மடங்கு அதிகமாக அன்னிய நேரடி முதலீட்டை நாங்கள் ஈர்த்துள்ளோம். இங்கு சமூக வளர்ச்சி நடவடிக்கைகளும் சிறப்பாக உள்ளன.' என்றார்.

போதைக்காக மெத்தனால் குடித்த 5 பேர் பலி

Posted: 16 Mar 2014 02:13 PM PDT

தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் 'மெத்தனால்' எனப்படும் எரிச்சாராயத்தை போதைக்காக குடித்த 5 பேர் பரிதாபமாக பலியாகினர். ஆந்திர மாநிலம், கம்மம் மாவட்டத்தில் உள்ள பலைர் கிராமத்தை சேர்ந்த சிலர் குடல் எரிச்சல், கண் பார்வை மங்கல் போன்ற உபாதைகளுடன் கடந்த வெள்ளிக்கிழமை பின்னிரவு வேளையில் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். நிறத்திலும், மணத்திலும் மதுவைப் போலவே உள்ள 'மெத்தனால்' எனப்படும் எரிச்சாராயத்தை போதைக்காக குடித்ததாக டாக்டர்களிடம் அவர்கள் தெரிவித்தனர். சிகிச்சையின் போதே அவர்களில் 5

முஸ்லிம்களின் ஓட்டுகளை கவர குஜராத் கலவரத்தை கிளறும் ராகுல்: பா.ஜ.க. காட்டம்

Posted: 16 Mar 2014 02:10 PM PDT

பத்திரிகையாளர்களுக்கு நேற்று பேட்டியளித்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குஜராத் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய நரேந்திர மோடியை குற்றம் சாட்டினார். இந்த கலவரத்தில் மோடியின் பங்கு ஏதுமில்லை என்று குஜராத் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்திய சிறப்பு குழு வெளியிட்ட அறிக்கையின் நம்பகத்தன்மை தொடர்பாகவும் அவர் கேள்வி எழுப்பினார். அந்த அறிக்கையை கீழ் கோர்ட்டு ஏற்றுக் கொண்டாலும் மேல் கோர்ட்டுகளில் அந்த அறிக்கையின் விபரங்கள் சரியானபடி ஆராயப்படவில்லை எனவும் ராகுல் குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்துக்கு பதில் அளித்த குஜராத் மாநில பா.ஜ.க. ஊடக ஒருங்கிணைப்பாளர் ஹர்ஷத் பட்டேல், 'முஸ்லிம்களின்

காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத தோல்வி அடையும்: அத்வானி

Posted: 16 Mar 2014 01:54 PM PDT

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத அளவு தோல்வி அடையும் என்று, பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி கூறினார். மராட்டிய மாநிலம் மும்பையில் பாரதீய ஜனதா கட்சியின் சிந்து பிரிவு நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் துணைப்பிரதமருமான எல்.கே.அத்வானி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:- பாரதீய ஜனதா கட்சி ஏற்கனவே அதிகபட்சமாக 182 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. வருகிற தேர்தலில் மேலும் கூடுதல் இடங்கள் கிடைக்கும். அதே சமயம் காங்கிரஸ் கட்சிக்கு வரலாறு காணாத தோல்வி கிடைக்கும். முன்பைவிட குறைந்த அளவு தொகுதிகளில் மட்டும்

20-ம் தேதி விவசாயிகளுடன் மோடியின் தேநீருடன் விவாதம்

Posted: 16 Mar 2014 12:09 PM PDT

பா.ஜ.க.வின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி 'தேநீருடன் விவாதம்' (சாய் பே சர்ச்சா) என்ற தலைப்பில் பல தரப்பு மக்களிடையே வீடியோ கான்பிரென்ஸ் மூலம் கலந்துரையாடி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சி மாநாட்டில் 'டீ விற்றவர்' என்று மணி சங்கர் அய்யர் தாக்கிப் பேசியதையே சாதகமான ஆயுதமாக பயன்படுத்தி இதற்கு முன்னர் 'தேநீருடன் விவாதம்' நிகழ்ச்சியில் நல்ல ஆட்சி மற்றும் பெண்களின் பிரச்சனைகள் தொடர்பாக மக்களுடன் வீடியோ கான்பிரென்ஸ் மூலம் பேசியுள்ள மோடி வரும் 20-ம் தேதி (வியாழக்கிழமை) விவசாயிகளின் பிரச்சனை தொடர்பாக விவாதிக்கிறார். மழை பொய்த்துப் போனதால் கடுமையான வறட்சியையும், அதன் விளைவாக விவசாயிகளின் தற்கொலைகளையும் சந்தித்த மகாராஷ்டிர

ரூ.6500க்கு விண்டோஸ் மொபைல்: விரைவில் அறிமுகம்

Posted: 16 Mar 2014 12:01 PM PDT

செல்போன் பயன்படுத்துபவர்களிடம் தற்போது ஆன்ராய்டு தொடுதிரை ஸ்மார்ட்போன்களே அதிக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ரூ.4 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் கூட கிடைப்பதே இதற்கு காரணமாகும். இதையடுத்து, விண்டோஸ் ஸ்மார்ட்போன்களை மட்டுமே தயாரித்து வந்த நோக்கியா நிறுவனம் சமீபத்தில் ஆன்ராய்டு ஓஎஸ்-ல் இயங்கும் "எக்ஸ்" வரிசை மொபைல்களை அறிமுகம் செய்தது. இந்நிலையில், இந்திய செல்போன் தயாரிப்பு நிறுவனங்களான லாவா மற்றும் கார்பன் ரூ.6500 லிருந்து விண்டோஸ் ஓஎஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. வரும் மே மாத இறுதிக்குள் முதற்கட்டமாக நான்கு வகையான விண்டோஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், அதன் விலை ரூ.6500 லிருந்து துவங்கும் என்றும் கார்பன் நிறுவன த


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™