Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


தவறாக நடக்க முயன்றதால் காங். தொண்டரை தாக்கிய நக்மா

Posted: 27 Mar 2014 10:53 PM PDT

நடிகை நக்மா உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். நடிகை என்பதால் அவரை பார்க்க ஏராளமான கூட்டம் கூடுகிறது. காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்துடன் தேர்தல் பணியாற்றுகிறார்கள். ஆனால் கூட்டத்தைப் பயன்படுத்தி சில விஷமிகள் சில்மிஷத்தில் ஈடுபடவும் முயற்சி செய்கிறார்கள். 2 நாட்களுக்கு முன் நக்மா பிரசாரத்தில் பங்கேற்ற

ஒடிசாவில் பிரித்வி ஏவுகணை சோதனை வெற்றி

Posted: 27 Mar 2014 10:27 PM PDT

அணு ஆயுதத்தை சுமந்து சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கும் பிரித்வி–2 ஏவுகணையை இந்தியா தயாரித்துள்ளது. அந்த ஏவுகணையின் சோதனை ஒடிசா கடற்கரையில் இன்று காலை நடந்தது. இந்த சோதனை

திருப்பதி மலையில் சிறுத்தை புலி: பக்தர்கள் அச்சம்

Posted: 27 Mar 2014 10:25 PM PDT

திருப்பதி திருமலையில் பத்மாவதி நகர் பகுதியில் தேவஸ்தான் முதன்மை நிர்வாக அதிகாரி கோபால் வசிப்பிடம் உள்ளது. இதன் அருகில் தங்கும் விடுதிகள் உள்ளன. நேற்று இரவு 10 மணியளவில் தேவஸ்தான அதிகாரி வசிப்பிடத்தின் பின்புறம் சிறுத்தைப் புலி நின்றது. இதனால் அங்கிருந்த ஊழியர்கள் மற்றும்

ஆந்திராவை 2 ஆக பிரித்த காங்கிரசை ஒழிக்க வேண்டும்: பவன்கல்யாண்

Posted: 27 Mar 2014 10:23 PM PDT

நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும், நடிகருமான பவன் கல்யாண் கடந்த மாதம் ஜனசேனை என்ற புதிய கட்சியை தொடங்கினார். இதையொட்டி ஜனசேனை கட்சியின் பிரமாண்ட பொதுக் கூட்டம் நேற்று மாலை விசாகபட்டினத்தில் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு பவன்கல்யாண் பேசியதாவது:– வருகிற பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடவில்லை. தூய்மையான, சிறந்த இளைஞர்கள் எங்கள் கட்சியில்

காஷ்மீரில் 2 இடங்களில் தாக்குதல்: 2 தீவிரவாதிகள் உள்பட 3 பேர் பலி

Posted: 27 Mar 2014 10:19 PM PDT

பாராளுமன்ற தேர்தலில் காஷ்மீரில் வருகிற 10–ந்தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்குகிறது. அங்கு பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் 2 இடங்களில் தீவிரவாதிகள் வாகனத்தில் வந்து தாக்குதல் நடத்தினார்கள். கத்துவா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாமை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த முகாமில் 700 வீரர்கள் தங்கி பாதுகாப்பு பணியில்

பத்மநாபசுவாமி கோவிலில் மேலும் ஒரு ரகசிய அறை திறப்பு

Posted: 27 Mar 2014 09:13 PM PDT

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் ஏராளமான சொத்துக்களையும், நகைகளையும் வழங்கி உள்ளனர். மேலும் பல ஆண்டுகளாக இந்த கோவிலுக்கு வழங்கப்பட்ட காணிக்கைகளும் கணக்கில்

பொதுக்கூட்டங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்த பா.ஜனதா கோரிக்கை

Posted: 27 Mar 2014 08:24 PM PDT

பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது- பீகாரில், பா.ஜனதாவின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திரமோடியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள கயா மாவட்டத்தில், மாவோயிஸ்டுகள் செல்போன் கோபுரங்களை குண்டு வைத்து தகர்த்துள்ளனர். தேர்தல்

இமயமலையில் தனியாக மலையேற தடை விதிக்க நேபாள் திட்டம்

Posted: 27 Mar 2014 08:03 PM PDT

இமயமலையில் மலையேறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அங்கு செல்லும் பயணிகளால் மாசடைந்துவரும் மலைப் பகுதிகளைச் சுத்தப்படுத்தவும் நேபாள் அரசு பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. மலையேறுவதற்கான அனுமதிக் கட்டணத்தைக் குறைத்தது, மலையேறுவோர் திரும்பி வரும்போது எட்டு கிலோ குப்பைகளைத் திரும்பிக் கொண்டுவருவதை கட்டாயமாக்கியது, வழிகாட்டிகளுடன் ஏற்படும் தகராறுகளைத் தீர்க்க காவல் மையங்களை மலைப்பகுதிகளில்

நடிகை ரம்யாவின் சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 80 லட்சம்

Posted: 27 Mar 2014 05:26 PM PDT

மண்டியா தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக இருப்பவர் ரம்யா. இவர் அதே தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அவர் வேட்புமனு தாக்கலுடன் பிரமாண பத்திரமும் தாக்கல் செய்து உள்ளார். அதில், தனது சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 80 லட்சத்து 43 ஆயிரத்து 931 என்று குறிப்பிட்டு

விதர்பாவில் 10 தொகுதிகளில் 201 வேட்பாளர்கள் போட்டி

Posted: 27 Mar 2014 03:00 PM PDT

மகாராஷ்டிரா மாநிலத்தின் விதர்பாவிலுள்ள 10 மக்களவை தொகுதிகளில் 201 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். வரும் ஏப்ரல் 10ம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையம் பெற்ற 318 வேட்பு மனுக்களில் 271 மனுக்கள் மட்டுமே தகுதியானவையாக தேர்ந்தெடுக்கப்பட்டன

உடல்நலக் குறைவு காரணமாகவே தேர்தலில் போட்டியிடவில்லை: மணிஷ் திவாரி

Posted: 27 Mar 2014 02:16 PM PDT

சில நாட்களுக்கு முன் தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரி மணிஷ் திவாரி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து காங்கிரஸ் முன்னாள் பஞ்சாப் முதல்வரின் பேரன் பீண்ட் சிங்கை லூதியானா தொகுதி வேட்பாளராக அறிவித்தது

இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு

Posted: 27 Mar 2014 12:56 PM PDT

பாராளுமன்ற தேர்தலையொட்டி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர் ஏ.பி.பரதன் உள்ளிட்ட தலைவர்கள் அதை வெளியிட்டனர்

ராஜ்நாத் சிங் ஏப்ரல் 7ம் தேதி வேட்புமனு தாக்கல்

Posted: 27 Mar 2014 12:40 PM PDT

வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் உத்தரபிரதேச மாநிலம் லக்னோ தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், லக்னோவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் மோடியை ஆதரித்து நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில்

உ.பி. அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Posted: 27 Mar 2014 11:12 AM PDT

உத்தரபிரதேச மாநிலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி திட்டம் முழுமையாக செயல்படுத்தபடாததை கண்டித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் உ.பி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 11ம் தேதி ஊடகங்கள் வெளியிட்ட செய்தி அறிக்கையில் புல்பூர் தொகுதியில் உள்ள ஒரு கல்லூரியில்

ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்தே பங்குச் சந்தை உயர்கிறது: ஜெட்லி

Posted: 27 Mar 2014 09:06 AM PDT

மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கடந்த வாரம் அளித்த ஒரு பேட்டியின்போது கூறுகையில், "நிலையான அரசின் காரணமாக நமது நாட்டில் பங்குச்சந்தையின் மதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது. நிலையான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் திட்டங்களால் இந்திய ரூபாயின் மதிப்பும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து முன்னாள் எம்.பி. நீக்கம்

Posted: 27 Mar 2014 08:51 AM PDT

மேற்கு வங்க மாநிலத்தில் 2007ம் ஆண்டு மார்க்சிஸ்ட் ஆட்சியின்போது, நந்திகிராமில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா பதவி விலகியிருக்க வேண்டும் என்று அவரது கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. லட்சுமணன் சேத் கூறினார்.

நிலக்கரி சுரங்க முறைகேட்டில் மேலும் 2 வழக்குகள் பதிவு

Posted: 27 Mar 2014 07:39 AM PDT

2006ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுக்கு இடையிலான காலகட்டத்தில் நடைபெற்ற நிலக்கரி சுரங்க முறைகேடு குறித்த சி.பி.ஐ. விசாரணையில் மேலும் இரு வழக்குகள் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளன. நாக்பூரில் உள்ள சென்ட்ரல் கொல்லிரிஸ், டெல்லியை மையமாகக் கொண்ட பிரகாஷ் இண்டஸ்டிரிஸ் ஆகிய நிறுவனங்களின் மீது இந்த வழக்குகள் பதிவு

அருணாச்சல் சட்டசபை தேர்தல்: 11 காங். வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு

Posted: 27 Mar 2014 07:14 AM PDT

அருணாச்சல பிரதேசத்தில் மக்களவை தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் நடக்கிறது. 60 தொகுதிகள் கொண்ட சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு நேற்று கடைசி நாளாகும். இதையடுத்து வெளியான பட்டியலில், முதல்வர் நாபாம் துகி உட்பட 11 காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக யாரும்

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது துரோகம்: டி.ராஜா கருத்து

Posted: 27 Mar 2014 07:02 AM PDT

இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி, அந்நாட்டிற்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடந்தது. இந்த தீர்மானத்தை ஏற்க மறுத்த இந்தியா, வாக்கெடுப்பை புறக்கணித்தது. இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா எம்.பி. கூறுகையில், "அமெரிக்காவின் தீர்மானம் நடைமுறைக்கு

போலியோ இல்லாத நாடு இந்தியா: சான்றிதழ் வழங்கியது உலக சுகாதார கழகம்

Posted: 27 Mar 2014 06:42 AM PDT

இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக போலியோ நோய்த்தாக்கம் எதுவும் காணப்படாத நிலையில் உலக சுகாதார கழகம் அதற்கான சான்றிதழை இந்தியாவிற்கு இன்று வழங்கியது. அதுமட்டுமின்றி தென் கிழக்கு ஆசியாவே போலியோ நோய் இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்தியாவிலிருந்து


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™