Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


வாரணாசியில் மோடி போட்டியிடுவது உறுதி

Posted: 11 Mar 2014 10:43 PM PDT

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பாராளுமன்ற தேர்தலில் 2 தொகுதகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். ஆமதாபாத் கிழக்கு மற்றும் வாரணாசி ஆகிய இரு தொகுதிகளில் அவர் நிற்பார் என்று தகவல்கள் வெளியானது. உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதி பா.ஜ.க.வின் கோட்டையாகத் திகழும் தொகுதியாகும். பா.ஜ.க. மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கடந்த தடவை இந்த தொகுதியில் வென்றிருந்தார்.

பெங்களூர் கல்லூரியில் ராக்கிங் கொடுமைக்கு மாணவர் பலி

Posted: 11 Mar 2014 10:36 PM PDT

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சாலக்குடியை சேர்ந்த மாணவர் அகாப் இப்ராகிம். இவர் பெங்களூர் சொல் தேவன ஹள்ளியில் உள்ள ஆச்சார்யா இன்ஸ்டி டியூட் என்ற என்ஜினீயரிங் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்தார். ஆஸ்டலில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். 6 மாதங்களுக்கு முன் கல்லூரி தொடங்கிய போது அவரை மூத்த மாணவர்கள் ராக்கிங் செய்தனர். இதை அவர்

பாராளுமன்ற தேர்தலில் ரூ.60,000 கோடிக்கு ரகசிய சூதாட்டம்

Posted: 11 Mar 2014 10:28 PM PDT

மும்பையைச் சேர்ந்த சூதாட்டக்காரர்கள் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்று பணம் கட்டி ரகசிய சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சூதாட்டக்காரர்கள் பணம் சம்பாதிக்க வீரர்களை கைக்குள் போட்டுக்கொண்டு ஆட்டத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயித்தது கண்டுபிடிக்கப்பட்டது. சூதாட்டக்காரர்கள் தற்போது பாராளுமன்ற தேர்தலை வைத்து ரகசிய சூதாட்டத்தில் ஈடுபடுவது தெரிய வந்தது. மும்பையை தலைமையிடமாக கொண்டு சூதாட்டக்காரர்கள் செயல்படுவதும் தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு நாடு முழுவதும் தரகர்கள் செயல்படுகிறார்கள்.

கேரளாவில் கம்யூனிஸ்டு கூட்டணியில் இணைந்த ஜனதா தளம்

Posted: 11 Mar 2014 10:21 PM PDT

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய அளவிலும், மாநில அளவிலும் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரமாக உள்ளது. ஒவ்வொரு தேர்தலின் போதும் சில கட்சிகள் தங்கள் கூட்டணிகளை மாற்றி கொள்வது வாடிக்கை.

பா.ஜ.க.வுக்கு 30 சதவீத விவசாயிகள் ஆதரவு: புதிய தகவல்

Posted: 11 Mar 2014 10:21 PM PDT

பாராளுமன்ற தேர்தலில் விவசாயிகள் எந்த கட்சிக்கு ஓட்டு போடுவார்கள் என்று கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது. 18 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 12 ஆயிரம் விவசாயிகளிடம் இது தொடர்பாக கருத்து கேட்கப்பட்டது. கருத்து கணிப்பு விபரங்களை ஆய்வு செய்தபோது நாடெங்கும் சுமார் 30 சதவீத விவசாயிகள் வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஓட்டு போடப் போவதாக கூறி இருப்பது தெரிய வந்துள்ளது.

விமான நிறுவனங்களிடையே நிலவும் கட்டணப் போர்

Posted: 11 Mar 2014 04:50 PM PDT

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கோடைகால விமான சேவைகளுக்கான பயணக் கட்டணத்தை ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ போன்ற விமான நிறுவனங்கள் 3 முறை குறைத்துள்ளது. இந்நிலையில், 4வது முறையாக "சூப்பர் ஹோலி சேல்ஸ்", மற்றும் "பிளாஷ் சேல்ஸ்" என்ற பெயரில் பயணக் கட்டண சலுகையை ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் குறைத்துள்ளது. டிக்கெட்டின் அடிப்படைக் கட்டணத்தில் இருந்து இந்த சலுகை அளிக்கப்படுகிறது.

மலேசிய விமானத்தை தேடும் பணியில் இந்திய கடற்படை இணைந்தது

Posted: 11 Mar 2014 02:33 PM PDT

கடந்த 4 நாட்களுக்கு முன்பு மாயமான மலேசிய விமானம், இந்தோனேசியா மற்றும் மலேசியாவிற்கு இடையிலான மலாக்கா ஜலசந்தி அருகே ரேடார் தொடர்பை இழந்ததாக அந்நாட்டு ராணுவம் தகவல் வெளியிட்டது. இதையடுத்து மலேசியாவின் மேற்கு கடற்பகுதியில் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையும் விமான மீட்பு பணியில் இணைந்துள்ளது.

நக்சலைட்டுகளை சமாளிக்க அரசு சிறந்த உத்திகளை கையாள வேண்டும்: பாபா ராம்தேவ்

Posted: 11 Mar 2014 01:17 PM PDT

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நேற்று மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். அதில் 16 போலீசார் உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள சமூக ஆர்வலரான யோகாகுரு பாபா ராம்தேவ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- "நக்சல் தீவிரவாதம் என்பது நாட்டின் முக்கியமான பிரச்சனையாகும். முதலில் அவர்கள் ஏன் ஆயுதங்களையும், வன்முறையையும் கையில் எடுக்கிறார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். சத்தீஸ்கரில்

வேட்பாளர்களை தேர்வு செய்ய ஐ.வி.ஆர்.எஸ் தொழில்நுட்பம் அறிமுகம்

Posted: 11 Mar 2014 12:50 PM PDT

தெலுங்கு தேசம் கட்சி தனது கட்சி தொடர்பான பணிகளுக்கு பல தொழில்நுட்ப யுக்திகளை பயன்படுத்தி வருகிறது. அந்த வகையில் புதிய முயற்சியாக நாட்டிலேயே முதல் முறையாக வேட்பாளர்களை தேர்வு செய்ய ஐ.வி.ஆர்.எஸ் (இன்டரேக்டிவ் வாய்ஸ் ரெஸ்பான்ஸ் சிஸ்டம்) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதன்படி, மூன்று வேட்பாளர்களின் பட்டியலை தெலுங்கு தேச கட்சி

காந்தி படுகொலை பற்றி கூறிய கருத்தை ராகுல் திரும்ப பெற வேண்டும்: ராஜ்நாத் சிங்

Posted: 11 Mar 2014 11:25 AM PDT

சமீபத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தின்போது "மகாத்மா காந்தியின் படுகொலைக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பே காரணம்" என்று கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பா.ஜனதா கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் இன்று ஐதராபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து அசோக் அகர்வால் விலகல்

Posted: 11 Mar 2014 10:57 AM PDT

ஆம் ஆத்மிக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் அசோக் அகர்வால் கட்சியில் இருந்து இன்று விலகியுள்ளார். இதுதொடர்பாக அவர் கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுப்பியுள்ளார். கட்சி ஆரம்பித்த நாள் முதல் கெஜ்ரிவாலுடன் இருந்த அசோக அகர்வால் தனது விலகல் குறித்து கூறுகையில், "வலுவான கொள்கைகளுக்காக ஆம் ஆத்மியில் இணைந்தேன். ஆனால், உருவாக்கப்பட்ட இலக்குகளை இப்போது இழந்து வருகிறது. கட்சியின் நடவடிக்கை திசைமாறிச்

சாக்லேட் பார்களைக் காணிக்கையாகப் பெறும் முருகன் கோவில்

Posted: 11 Mar 2014 08:56 AM PDT

கடவுளின் ஆசியைப் பெறுவதற்காக ஒருவர் பூ, பழம், சந்தனம் போன்றவற்றைக் காணிக்கையாக செலுத்துவது வழக்கம். ஆனால், கேரள மாநிலத்தில் உள்ள தெக்கன் பழனி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான, நினைத்தாலே நாவில் எச்சிலை

தும்கா தொகுதியில் சிபுசோரன் போட்டி

Posted: 11 Mar 2014 08:32 AM PDT

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், தற்போதைய எம்.பி.யுமான சிபு சோரன், தும்கா தொகுதியில் போட்டியிடுகிறார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர்கள் சுப்ரியே பட்டாச்சார்யா மற்றும் வினோத் குமார்

குஜராத்தில் ஹிட்லர் ஆட்சி நடத்துகிறார் மோடி: ராகுல் காந்தி

Posted: 11 Mar 2014 08:07 AM PDT

குஜராத் மாநிலம் பாலசினார் நகரில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று பிரச்சாரம் செய்தார். அப்போத, குஜராத் முதல்வரின் நிர்வாகத்தைப் பற்றி அவர் கடுமையாகச் சாடினார். ஹிட்லருடன் மோடியை ஒப்பிட்டுப் பேசிய ராகுல் காந்தி, கார்ப்பரேட்

தேர்தலில் நான் போட்டியிடவி்ல்லை: மல்லிகா சாராபாய்

Posted: 11 Mar 2014 07:41 AM PDT

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர் மல்லிகா சாராபாய். இவர் கடந்த ஜனவரி மாதம் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். வருகிற மக்களவை தேர்தலில் இவர் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சுக்மாவில் மாவோயிஸ்டு தாக்குதல் எதிரொலி: உ.பி.யில் தீவிர பாதுகாப்பு

Posted: 11 Mar 2014 07:23 AM PDT

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மற்றும் போலீசார் சென்ற வாகனத்தின் மீது மாவோயிஸ்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 15 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள். இதையடுத்து மாவோயிஸ்டு ஆதிக்கத்தை ஒடுக்குவது தொடர்பாக

மலேசிய விமானத்திற்காக கடவுள் அதிசயம் நிகழ்த்த வேண்டி மணல் சிற்பம்

Posted: 11 Mar 2014 07:17 AM PDT

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் காணாமல் போய் 4 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், கடவுள் அதிசயம் நிகழ்த்தி இவ்விமானத்தை வெளிக்கொண்டுவரவேண்டும் என மணல் சிற்பம் வரையப்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த பிரபல மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில், விமானம் தொடர்பாக அதிசயம் நிகழ்த்துமாறு

பஞ்சாபில் ரூ.205 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

Posted: 11 Mar 2014 06:57 AM PDT

பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் 205 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயினை எல்லைப் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்ததுடன் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களையும் கைப்பற்றினர்.

ஆந்திர என்ஜினீயர் கொலை வழக்கில் 3 பேருக்கு மரண தண்டனை

Posted: 11 Mar 2014 06:43 AM PDT

ஆந்திராவில் என்ஜினீயர் கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று பேருக்கு நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது. ஆந்திர மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் நீர்ப்பாசனத்துறை என்ஜினீயரான நாயிக் 2011ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த

நவநிர்மாண் சேனா விஷயத்தில் பா.ஜ.க. நிலைப்பாடு என்ன? - உத்தவ் கேள்வி

Posted: 11 Mar 2014 06:39 AM PDT

மும்பையில் இன்று சேனா பவனில் நடைபெற்ற மக்களவை தேர்தல் வேட்பாளர்கள் கூட்டத்தில் சிவ சேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பங்கேற்றார். பின்னர் பத்திரிகையாளர்களிடையே பேசிய உத்தவ் தாக்கரே, ராஜ்தாக்கரே பெயரைக் குறிப்பிடாமல், நவநிர்மாண் சேனா கட்சி மீது பா.ஜனதா கட்சியின் நிலைப்பாடு பற்றி விளக்கம் அளிக்க வேண்டும்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™