மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
- கேரளாவில் இருந்து சரிதா நாயர் வெளியேற தடை
- நடிகை ராக்கி சாவந்த் மும்பையில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்
- பவன் கல்யாண் கட்சி தேர்தலில் போட்டியிடுமா?: இன்று மாலை அறிவிக்கிறார்
- பீகாரில் செல்போன் டவர்கள் குண்டு வைத்து தகர்ப்பு
- சுற்றுலாதலங்களுக்கு குறி: தாஜ்மகாலை தாக்க தீவிரவாதிகள் சதி
- தேர்தலுக்கு ரூ.5 ஆயிரம் கோடி செலவிடப்படும்: தேர்தல் ஆணையம்
- காங்கிரஸ் ஏற்படுத்திய சேதத்தை மீட்க 60 மாதங்களை தாருங்கள்: மோடி
- தேர்தலை சீர்குலைக்க திட்டம்: போஸ்டரில் நக்சல்கள் மிரட்டல்
- டுவிட்டரில் வங்கிச் சேவை: கோட்டக் மகிந்திரா வங்கி அறிமுகம்
- ரேபரேலி: சோனியாவை எதிர்த்து உமா பாரதி போட்டியிட வாய்ப்பு
- திரிணாமுல் ஆதரவின்றி அடுத்த அரசாங்கம் அமையாது: மம்தா பானர்ஜி
- கெஜ்ரிவால் குற்றச்சாட்டுகளுக்கு குஜராத் அரசு பதில்
- புதிய வங்கிகளுக்கான உரிமம்: மார்ச் 31ம் தேதி தேர்தல் ஆணையம் முடிவு
- வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த அகிலேசுக்கு தடை
- உ.பி. வேட்பாளர் பட்டியலில் முஸ்லிம்களுக்கு இடம் ஒதுக்காத பா.ஜனதா
- உ.பி.யில் சமாஜ்வாடி ஆட்சியை கலைக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
- கெஜ்ரிவால் மீது மை வீசியதற்கு திக்விஜய் சிங் கண்டனம்
- காங். எம்.எல்.ஏ. மீதான கற்பழிப்பு புகார்: விசாரணைக்கு ஆஜராகாத சரிதாநாயர்
- கலவர குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்: ஐக்கிய ஜனதா தளம்
| எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத காங்கிரஸ் தேர்தல் அறிக்கை Posted: 26 Mar 2014 11:11 PM PDT காங்கிரஸ் கட்சி, ''உங்கள் குரல் எங்கள் வாக்குறுதி'' என்ற தலைப்பில் 49 பக்கங்களைக் கொண்ட தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது. டெல்லியில் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன்சிங், ராகுல்காந்தி ஆகிய மூவரும் அந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சில புதிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு இருந்தன. அடுத்த 3 ஆண்டுகளில் 8 சதவீத பொருளாதார வளர்ச்சி. 10 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு. |
| கேரளாவில் இருந்து சரிதா நாயர் வெளியேற தடை Posted: 26 Mar 2014 10:52 PM PDT கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் சரிதாநாயர். இவர் கோவையில் ஐ.சி.எம்.எஸ். என்ற பெயரில் சூரிய மின்சக்தி உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தினார். வடவள்ளியைச் சேர்ந்த வெங்கட்ராமன், ஜோயோ ஆகியோரிடம் காற்றாலை அமைத்து தருவதாக கூறி 31 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக புகார் செய்யப்பட்டது. |
| நடிகை ராக்கி சாவந்த் மும்பையில் சுயேச்சையாக போட்டியிடுகிறார் Posted: 26 Mar 2014 10:48 PM PDT பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த். இவர் ஏராளமான படங்களில் கவர்ச்சியாக குத்தாட்டம் ஆடி உள்ளார். தமிழில் கம்பீரம், முத்திரை போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு தேர்தலில் குதித்துள்ளார். மும்பை வடமேற்கு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். சுயேச்சையாக நிற்கிறார். இதுகுறித்து அவர் கூறும் போது, மக்கள் உரிமைகள் பறிபோய் உள்ளன. அவர்களுக்காக போராட தேர்தலில் நிற்கிறேன். பெண்கள் உரிமைக்காகவும், பாதுகாப்புக்காகவும் பாடுபடுவேன். |
| பவன் கல்யாண் கட்சி தேர்தலில் போட்டியிடுமா?: இன்று மாலை அறிவிக்கிறார் Posted: 26 Mar 2014 10:38 PM PDT நடிகர் சிரஞ்சீவி காங்கிரசில் மத்திய மந்திரி பதவி வகித்து வருகிறார். அவரது தம்பி பவன் கல்யாண், மகன் ராம்சரண் தேஜா, மைத்துனர் மகன்கள் அல்லு அரவிந்த், அல்லு கிரிஷ், மற்றொரு சகோதரர் நாகபாபு ஆகியோரும் நடிகர்களாக உள்ளனர். சிரஞ்சீவி ரசிகர்கள்தான் இவர்களுக்கும் ரகிகர்ளாக உள்ளனர். அனைவரும் சிரஞ்சீவி ரசிகர் மன்றம் என்ற அமைப்பிலேயே ஒற்றுமையாக |
| பீகாரில் செல்போன் டவர்கள் குண்டு வைத்து தகர்ப்பு Posted: 26 Mar 2014 10:29 PM PDT பீகாரில் நரேந்திரமோடி இன்று பிரசாரம் செய்ய உள்ள நிலையில் அங்கு செல்போன் டவர்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன. பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த அக்டோபர் மாதம் 27–ந் தேதி பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியின் பிரசார கூட்டத்தில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில் 8 பேர் பலியானார்கள். 100 பேர் காயம் அடைந்தனர். நரேந்திரமோடியின் பிரசாரத்தை தடுக்க சதித்திட்டத்துடன் இந்த குண்டுகள் வைக்கப்பட்டது. என்றாலும் திட்டமிட்டபடி அவர் கூட்டத்தில் பேசினார். இது தொடர்பாக இந்தியன் முஜாகிதீன் அமைப்பு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். |
| சுற்றுலாதலங்களுக்கு குறி: தாஜ்மகாலை தாக்க தீவிரவாதிகள் சதி Posted: 26 Mar 2014 09:47 PM PDT தாஜ்மகாலை தாக்க தீவிரவாதிகள் சதி திட்டமிட்டது அம்பலமாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் சில நாட்களுக்கு முன் இந்தியன் முஜாகிதின் அமைப்பு தீவிரவாதிகள் 5 பேர் பிடிபட்டனர். அவர்கள் பாராளுமன்ற தேர்லை சீர்குலைக்கும் வகையில் தலைவர்களை கொல்ல திட்டமிட்டு இருப்பது தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் யாஷின் பத்கலுக்கு பின்பு இந்தியன் முஜாகிதீன் அமைப்பை வழி நடத்திச் செல்லும் இந்திய தளபதி தெஷின் அக்தர் என்ற தீவிரவாதி பிடிபட்டான். இவனுக்கு மோனு என்ற பெயரும் உண்டு. |
| தேர்தலுக்கு ரூ.5 ஆயிரம் கோடி செலவிடப்படும்: தேர்தல் ஆணையம் Posted: 26 Mar 2014 09:18 PM PDT நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 7-ந்தேதி முதல் 9 கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில், ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் நடத்துவதற்கு சராசரியாக ரூ.10 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கு, மொத்தமாக ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் செலவிடப்படும் என தேர்தல் ஆணையர் எச்.எஸ்.பிரம்மா தெரிவித்தார். இதுகுறித்து மேலும் கூறிய |
| காங்கிரஸ் ஏற்படுத்திய சேதத்தை மீட்க 60 மாதங்களை தாருங்கள்: மோடி Posted: 26 Mar 2014 05:37 PM PDT ஜம்மு-காஷ்மீரில் ஆட்சிக்கு எதிரான மன நிலையை திரட்டும் முயற்சியாக பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஹிராநகர் பிரச்சாரத்தில் பேசியதாவது:- கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ஏற்படுத்திய சேதத்தை மீட்க 60 மாதங்களை எனக்கு தாருங்கள் |
| தேர்தலை சீர்குலைக்க திட்டம்: போஸ்டரில் நக்சல்கள் மிரட்டல் Posted: 26 Mar 2014 05:25 PM PDT மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் தேர்தலுக்கான போலீஸ் அதிகாரிகள் குழுக்கூட்டம் நடந்து சில நாட்களே ஆன நிலையில் கோவிந்த்பூர் பகுதிக்குட்பட்ட கிராமங்களில் மக்களவை தேர்தலை புறக்கணிக்கும் படி நக்சல் தீவிரவாதிகள் |
| டுவிட்டரில் வங்கிச் சேவை: கோட்டக் மகிந்திரா வங்கி அறிமுகம் Posted: 26 Mar 2014 04:02 PM PDT தொழில்நுட்ப ஆர்வமுடைய வாடிக்கையாளர்களை கவரும் விதமாக இந்தியாவி்ன் தனியார் வங்கியான கோட்டக் மகிந்திரா வங்கி விரைவில் சமூக வலைத்தளமான டுவிட்டர் இணையதளத்தில் வங்கிச் சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த சேவையை முதற்கட்டமாக 11 நகரங்களில் அறிமுகப்படுத்துகிறது |
| ரேபரேலி: சோனியாவை எதிர்த்து உமா பாரதி போட்டியிட வாய்ப்பு Posted: 26 Mar 2014 03:50 PM PDT காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மக்களவை தேர்தலில் தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார். இந்த முறையும் அந்த தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ள அவர் |
| திரிணாமுல் ஆதரவின்றி அடுத்த அரசாங்கம் அமையாது: மம்தா பானர்ஜி Posted: 26 Mar 2014 01:47 PM PDT அடுத்து மத்தியில் ஆட்சி அமைக்கப் போகும் அரசாங்கத்தை உருவாக்குவதில் திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிப்பதாக அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொருபதனில் டார்ஜிலிங் தொகுதி வேட்பாளரான முன்னாள் இந்திய கால்பந்து விளையாட்டு வீரர் பய்ச்சுங் பூட்டியா |
| கெஜ்ரிவால் குற்றச்சாட்டுகளுக்கு குஜராத் அரசு பதில் Posted: 26 Mar 2014 01:00 PM PDT உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த்கெஜ்ரிவால், மோடி குஜராத்தை முன்னேறிய மாநிலமாக மாற்றி விட்டார் என ஊடகங்களில் தான் ஒரு பிரிவினர் கூறி வருகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் விவசாயிகளின் நிலங்களை தொழில் அதிபர்களுக்கு |
| புதிய வங்கிகளுக்கான உரிமம்: மார்ச் 31ம் தேதி தேர்தல் ஆணையம் முடிவு Posted: 26 Mar 2014 12:29 PM PDT புதிய வங்கி தொடங்க உரிமம் கோரி சுமார் 25 நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்திருந்தன. இவற்றை ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பிமல் ஜாலன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து தகுதியானவர்களின் விவரம் அடங்கிய பரிந்துரை அறிக்கையை கடந்த மாதம் ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்தது |
| வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த அகிலேசுக்கு தடை Posted: 26 Mar 2014 10:39 AM PDT உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தேர்தல் முடியும் வரை, வீடியோ கான்பரன்சிங் மூலமாக தனது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது |
| உ.பி. வேட்பாளர் பட்டியலில் முஸ்லிம்களுக்கு இடம் ஒதுக்காத பா.ஜனதா Posted: 26 Mar 2014 10:27 AM PDT உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடவுள்ள பா.ஜ.க.வின் வேட்பாளர்கள் பட்டியலில் முஸ்லிம்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை. மதவாத கட்சி என்று எதிர்க்கட்சியினரால் அழைக்கப்படும் பா.ஜ.க.வின் செயல்பாடுகள் |
| உ.பி.யில் சமாஜ்வாடி ஆட்சியை கலைக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் Posted: 26 Mar 2014 08:08 AM PDT முசாபர்நகர் கலவரத்தை அடக்க தவறி விட்டதாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரபிரதேச அரசுக்கு இன்று கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து, உத்தர பிரதேசத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி ஆட்சியை உடனடியாக கலைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளன. ஆட்சியில் நீடிக்க அவர்களுக்கு உரிமையில்லை |
| கெஜ்ரிவால் மீது மை வீசியதற்கு திக்விஜய் சிங் கண்டனம் Posted: 26 Mar 2014 06:15 AM PDT வாரணாசியில் நேற்று ஆம் ஆத்மிக் கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மை வீசி தாக்குதல் நடந்தது. இதற்கு காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் இன்று கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து திக்விஜய் சிங் கூறுகையில், "கெஜ்ரிவால் மீதான மை தாக்குதல் கண்டிக்கத்தக்கது. இது பாசிசவாதிகளின் |
| காங். எம்.எல்.ஏ. மீதான கற்பழிப்பு புகார்: விசாரணைக்கு ஆஜராகாத சரிதாநாயர் Posted: 26 Mar 2014 05:12 AM PDT கேரளாவில் சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் கருவிகள் தயாரித்து தருவதாக கூறி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக பெண் தொழில் அதிபர் சரிதாநாயர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் கண்ணூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அப்துல்லாகுட்டி தன்னை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர |
| கலவர குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்: ஐக்கிய ஜனதா தளம் Posted: 26 Mar 2014 05:06 AM PDT முசாபர்நகர் கலவர குற்றவாளிகளான பா.ஜ.க. மற்றும் பகுஜன் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்கள் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என ஐக்கிய ஜனதா தள கட்சி தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |