மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- திருச்சூர்: நகைப்பட்டறையில் கியாஸ் சிலிண்டர் வெடித்து வாலிபர் பலி
- தவறான வேட்பாளர்களுக்கு நோட்டா ஓட்டு போடுங்கள்: அன்னா ஹசாரே
- அன்னாஹசாரே மீது மம்தா கட்சி மறைமுக தாக்கு
- கெஜ்ரிவாலின் 20 ஆயிரம் ரூபாய் விருந்தில் 250 பேர் பங்கேற்றனர்
- ஹோலி புனித நீராடல்: யமுனை ஆற்றில் மூழ்கி 5 வாலிபர்கள் பலி
- குஜராத் கலவரம் குற்றச்சாட்டு: ராகுலுக்கு பா.ஜ.க. பதில்
- இந்திய கடல் எல்லையில் மேலும் 7 பாக். மீனவர்கள் கைது
- ஹோலி பண்டிகை குளியல்: ஒடிசா ஆற்றில் மூழ்கி 12 பேர் பலி
- கெஜ்ரிவால் மீது தேர்தல் அதிகாரிகளிடம் பா.ஜ.க. புகார்
- மோடி அவசரப்படுவதாக நான் கூறவில்லை: ராம்தேவ்
- அரவிந்த் கெஜ்ரிவாலின் அச்சுறுத்தலை பா.ஜ.க நிராகரித்தது
- பாதுகாப்பான தொகுதியில் மோடி போட்டியிடுவது ஏன்?: தருண் கோகாய்
- சோனியா, அத்வானி-தலைவர்கள் வீடுகளில் ஹோலி கொண்டாட்டம்
- சிவசேனா செய்தித் தொடர்பாளர் தேசியவாத காங்கிரசில் இணைந்தார்
- செய்திகளுக்காக மட்டுமே மோடியை தாக்குகிறார் கெஜ்ரிவால்: பா.ஜ.க. குற்றச்சாட்டு
- முசாபர் நகரில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு தீ வைப்பு
- பாராளுமன்றத்தில் பெண்களின் பங்கு: இந்தியாவுக்கு 73–வது இடம்
- வருமான வரி விலக்கு உச்சவரம்பை 5 லட்சமாக உயர்த்த மோடி திட்டம்
- காங்கிரஸ் கட்சி மூழ்கும் கப்பல்: அருண்ஜெட்லி தாக்கு
- பிரசாரத்துக்கு பணம் இல்லை: நிதி நெருக்கடியில் ஆம் ஆத்மி கட்சி
| திருச்சூர்: நகைப்பட்டறையில் கியாஸ் சிலிண்டர் வெடித்து வாலிபர் பலி Posted: 17 Mar 2014 10:41 PM PDT கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் முளங்கி கிராமம் உள்ளது. இங்கு வசிப்பவர் சலீஸ். இவர் தனது வீட்டு மேல் மாடியில் நகைப்பட்டறை நடத்தி வருகிறார். இந்த பட்டறையில் நேற்று மாலை 20 ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். |
| தவறான வேட்பாளர்களுக்கு நோட்டா ஓட்டு போடுங்கள்: அன்னா ஹசாரே Posted: 17 Mar 2014 04:35 PM PDT தொகுதியில் சரியான வேட்பாளர்கள் கிடைக்காவிட்டால் 'நோட்டா' பொத்தானை அழுத்தி ஓட்டு போடுமாறு வாக்காளர்களுக்கு அன்னா ஹசாரே வேண்டுகோள் விடுத்தார். ஊழலுக்கு எதிரான ஜனலோக்பால் மசோதாவுக்காக போராடிய அன்னா ஹசாரே நேற்று மராட்டியத்தில் உள்ள தனது சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் நிருபர்களிடம் கூறியதாவது:- நாட்டில் எந்த கட்சி ஆட்சி செய்தாலும் பெரிய மாற்றம் வந்து விடப்போவதில்லை. ஊழலில் ஒரு கட்சி ஆட்சியில் பட்டம் பெற்றால், மற்றொரு கட்சி ஊழலில் மேற்படிப்பு பெற்றுள்ளது. எனவே ஆட்சியாளர்கள் மாறுவதால் மட்டும் அடிப்படை மாற்றம் வந்து விடாது. மக்களால் மட்டும் தீவிரமான மாற்றத்தை கொண்டு வர முடியும். அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களாக ஊழல்வாதிகள், குண்டர்கள், கொள்ளையர்களை நிறுத்தலாம். அப்போது வாக்காளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். கட்சிகள் செய்யும் தவறை வாக்காளர்களும் செய்து விடக்கூடாது. பணம், பரிசு பொருட்கள், ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி கிரிமினல் மற்றும் ஊழல்வாதிகளை தேர்ந்தெடுத்து விடக்கூடாது. |
| அன்னாஹசாரே மீது மம்தா கட்சி மறைமுக தாக்கு Posted: 17 Mar 2014 04:22 PM PDT அன்னாஹசாரே மீது மம்தாபானர்ஜி கட்சி மறைமுகமாக தாக்குதல் தொடுத்து உள்ளது. எங்கள் கட்சிக்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை என அக்கட்சி முக்கிய தலைவர் கூறினார். ஊழலுக்கு எதிராக போராடும் சமூக ஆர்வலரான காந்தியவாதி அன்னாஹசாரே சமீபத்தில் தனது ஆதரவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தாபானர்ஜிக்கு அளித்தார். தனது 17 கேள்விகளுக்கு அவர் தகுதியானவர் என்பதால் அவரை ஆதரிப்பதாக அறிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து மம்தாபானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருந்த அன்னாஹசாரே கடைசி நேரத்தில் அந்த கூட்டத்தை ரத்து செய்தார். இதற்கிடையே அன்னாஹசாரே தனது ஆதரவு மம்தா பானர்ஜிக்கு மட்டும் தான் என்றும் அவரது கட்சிக்கு அல்ல என மீண்டும் அறிவித்தார். இது பாராளுமன்ற தேர்தலில் அவரது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்பட்டது. இந்த நிலையில் அன்னாஹசாரே மீது மம்தாபானர்ஜி கட்சி மறைமுகமாக தாக்குதல் தொடுத்து இருக்கிறது. |
| கெஜ்ரிவாலின் 20 ஆயிரம் ரூபாய் விருந்தில் 250 பேர் பங்கேற்றனர் Posted: 17 Mar 2014 02:06 PM PDT அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் தேர்தல் செலவுக்கு நிதி திரட்ட செல்வந்தர்களுடன் அரசியல் கட்சி தலைவர்கள் உணவு அருந்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இது போன்ற நிகழ்ச்சிகள் இந்தியாவில் இன்னும் பிரபலமடையாத நிலையில், ஆம் ஆத்மி கட்சியினர் தேர்தல் நிதி திரட்டுவதற்காக பெங்களூரில் ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் விருந்து அருந்த விரும்புபவர்கள் 20 ஆயிரம் ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பெரிய பலனைத் தருமா? என இந்திய அரசியல் பார்வையாளர்கள் புருவத்தை நெளித்து யோசித்துக் கொண்டிருந்த வேளையில், 'நிச்சயமாக பலனைத் தரும்' என்று பெங்களூரில் உள்ள கேப்பிட்டல் நட்சத்திர ஓட்டலில் கடந்த 15-ம் தேதி நடைபெற்ற இந்த நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சி நிரூபித்துள்ளது. |
| ஹோலி புனித நீராடல்: யமுனை ஆற்றில் மூழ்கி 5 வாலிபர்கள் பலி Posted: 17 Mar 2014 12:40 PM PDT நாடெங்கிலும் நேற்று ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஹோலி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக புன்னிய ஆறுகளில் புனித நீராடும் நிகழ்ச்சியில் பல பக்தர்கள் பங்கேற்றனர். வடக்கு டெல்லியின் சோனியா விஹார் பகுதியில் பாயும் யமுனை ஆற்றிலும் நேற்று பலர் புனித நீராடினர். மாலை 4 மனியளவில் ஆற்றுக்குள் இறங்கி ஆனந்தமாக நீந்தி குளித்துக் கொண்டிருந்த 5 வாலிபர்கள் ஆழமான பகுதிக்கு சென்று, பின்னர் வெளியேறி வர வழியறியாமல் நீருக்குள் மூழ்கி உயிருக்குப் போராடினர். இதுபற்றிய தகவல் அறிந்து போலீசாரும், மீட்புப் படையினரும் சம்பவ இடத்தை வந்தடைவதற்குள் தீரஜ்(23), ராபின்(23), யோகேஷ்(23), சுரேஷ்(24), பர்வீன்(25) ஆகிய 5 வாலிபர்களும் நீருக்குள் மூழ்கி மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். |
| குஜராத் கலவரம் குற்றச்சாட்டு: ராகுலுக்கு பா.ஜ.க. பதில் Posted: 17 Mar 2014 12:35 PM PDT குஜராத் கலவர வழக்கு தொடர்பாக நரேந்திர மோடி மீது குற்றம் சாட்டிய ராகுல் காந்திக்கு பாரதீய ஜனதா பதில் அளித்து உள்ளது. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது, 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தை அடக்க நரேந்திர மோடி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். குஜராத் கலவர வழக்கு பற்றி விசாரித்த சிறப்பு புலனாய்வு குழுவின் செயல்பாட்டில் தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டு இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் அந்த மாநில முதல்-மந்திரி நரேந்திர மோடிக்கு நற்சான்றிதழ் கொடுத்திருப்பதாகவும் கூறுவது அவசரகுடுக்கைத் தனம் என்றும் கூறினார். கலவரத்தை அடக்க தவறிய குஜராத் அரசு அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார். இதற்கு பாரதீய ஜனதா கட்சி பதிலடி கொடுத்து உள்ளது. |
| இந்திய கடல் எல்லையில் மேலும் 7 பாக். மீனவர்கள் கைது Posted: 17 Mar 2014 11:17 AM PDT குஜராத்தின் சர் க்ரீக் முகத்துவாரம் பகுதியில் இந்திய கடலோர காவல் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது இந்திய எல்லைக்குள் சுமார் 1.5 கடல் மைல் அளவில் பாகிஸ்தான் நாட்டு படகு அத்துமீறி நுழைந்ததை கண்டனர். காவல் படையினரை பார்த்ததும் அந்த படகு தப்பியோட முயன்றது. அதனை விரட்டிச் சென்ற இந்திய காவல் படையினர், அந்த படகை சிறைபிடித்த போது அதன் உள்ளே இருந்தவர்கள் கடல் நீருக்குள் குதித்து, நீந்தி தப்பியோட முயன்றனர். அவர்களை தொடர்ந்து நீருக்குள் குதித்த இந்திய கடலோர காவல் படையினர், அத்துமீறி இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த 7 பாகிஸ்தானியர்களையும் கைது செய்து கட்ச் மாவட்டத்தில் உள்ள கோடேஷ்வர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் பிடிபட்ட பாகிஸ்தானியர்கள் அனைவரும் மீனவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இதே போல் கடந்த 15-ம் தேதி அல் ஜியா ஜிலானி என்ற படகில் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 13 பாகிஸ்தான் மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர். |
| ஹோலி பண்டிகை குளியல்: ஒடிசா ஆற்றில் மூழ்கி 12 பேர் பலி Posted: 17 Mar 2014 10:02 AM PDT ஹோலி பண்டிகையை முன்னிட்டு, ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் நீர்நிலைகளில் உற்சாகமாக குளித்த பொதுமக்களில் 12 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர். தலைநகர் புவனேஸ்வரில் 3 பேரும், தயா நதியில் ஒருவரும், கட்டாக் மகாநதியில் 4 பேரும் இறந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் பாரி, அனந்த்பூர், பிரம்மபூர், குர்தா ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் பலியாகி உள்ளனர். |
| கெஜ்ரிவால் மீது தேர்தல் அதிகாரிகளிடம் பா.ஜ.க. புகார் Posted: 17 Mar 2014 09:09 AM PDT நரேந்திர மோடி மற்றும் பிற தலைவர்கள் பற்றி அவதூறாக பேசிய ஆம் ஆத்மிக் கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தேர்தல் அதிகாரிகளிடம் பா.ஜ.க. புகார் அளித்துள்ளது. பின்னர் இதுகுறித்து பா.ஜ.க. தலைவர் சுரேஷ் குமார் கூறுகையில், |
| மோடி அவசரப்படுவதாக நான் கூறவில்லை: ராம்தேவ் Posted: 17 Mar 2014 08:50 AM PDT பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் உயர் பதவியை அடைய அவசரம் காட்டக்கூடாதென்று யோகா குரு பாபா ராம்தேவ் கூறியதாக இரு நாள்களுக்கு முன்னர் ஊடகங்கள் கருத்து தெரிவித்திருந்தன. இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த பாபா ராம் தேவ், தான் அவ்வாறு கூறவில்லை என்று தெரிவித்துள்ளார். |
| அரவிந்த் கெஜ்ரிவாலின் அச்சுறுத்தலை பா.ஜ.க நிராகரித்தது Posted: 17 Mar 2014 07:59 AM PDT பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் மீதான கெஜ்ரிவாலின் தாக்குதலை பா.ஜ.க நிராகரித்தது. ஆனால் ஆம் ஆத்மி வாரணாசியில் போட்டியிட தயாரக உள்ளது. இதுகுறித்து பா.ஜ.கவின் ஊடக தலைவர் குரானா கூறுகையில், "நாங்கள் |
| பாதுகாப்பான தொகுதியில் மோடி போட்டியிடுவது ஏன்?: தருண் கோகாய் Posted: 17 Mar 2014 07:19 AM PDT அசாம் மாநில முதல்வர் தருண் கோகாய் கவுகாத்தியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- நாடெங்கும் மோடி அலை வீசுவதாக கூறுகிறார்கள். அப்படி அலை வீசுவதாக இருந்தால் மோடி நாட்டின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடம். பின்னர் ஏன் அவர் பாதுகாப்பான தொகுதியில் போட்டியிட நினைக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. |
| சோனியா, அத்வானி-தலைவர்கள் வீடுகளில் ஹோலி கொண்டாட்டம் Posted: 17 Mar 2014 07:14 AM PDT வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் ஹோலி கொண்டாடினார். அப்போது அவருக்கு கட்சி நிர்வாகிகள் இனிப்பு மற்றும் வண்ணச் சாயங்கள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர். |
| சிவசேனா செய்தித் தொடர்பாளர் தேசியவாத காங்கிரசில் இணைந்தார் Posted: 17 Mar 2014 06:26 AM PDT மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள முக்கிய கட்சியான சிவசேனா கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்தவர் ராகுல் நர்வேகர். கட்சி மேலிடம் உத்தரவை ஏற்று, சட்ட மேலவைத் தேர்தல் வேட்பு மனுவை வாபஸ் பெற்ற அவர், சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை |
| செய்திகளுக்காக மட்டுமே மோடியை தாக்குகிறார் கெஜ்ரிவால்: பா.ஜ.க. குற்றச்சாட்டு Posted: 17 Mar 2014 06:10 AM PDT ஆம் ஆத்மிக் கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், செய்திகளுக்காக மட்டுமே பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை தாக்குவதாக பா.ஜ.க. தெரிவித்துள்ளது. இதுகுறித்து பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன் கூறுகையில், "அரவிந்த் கெஜ்ரிவால் தனது பெயர் செய்திகளில் வெளியாக வேண்டும் என்று விரும்புவதால், நமோ, நமோ என்ற மந்திரத்தை கூறிக்கொண்டிருக்கிறார். இது அவருக்கும் தெரியும். நரேந்திர மோடிக்கு எதிராக பேசவில்லை என்றால், அவரை |
| முசாபர் நகரில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு தீ வைப்பு Posted: 17 Mar 2014 05:34 AM PDT உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவரின் வீட்டுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட புகானா பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது வீட்டை விட்டு வெளியேறி பகவதி கிராமத்தில் உள்ள முகாமில் தங்கியிருக்கிறார். ஆளில்லாமல் வெறிச்சோடிக் கிடந்த அவரது வீடு மற்றும் அவர் வழிபாடு நடத்தும் இடத்துக்கு நேற்று மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். |
| பாராளுமன்றத்தில் பெண்களின் பங்கு: இந்தியாவுக்கு 73–வது இடம் Posted: 17 Mar 2014 04:58 AM PDT இன்டர்–பாராளுமன்ற யூனியன் மற்றும் ஐ.நா பெண்கள் அமைப்பு ஆகியவை இணைந்து சர்வதேச நாடுகளில் பாராளுமன்றத்தில் பெண்கள் பங்கு குறித்த ஆய்வு மேற்கொண்டனர். அதில், இந்தியாவுக்கு 73–வது இடம் கிடைத்துள்ளது. பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் அல்லது மந்திரிகளாக 9.9 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள் இருந்துள்ளனர். தற்போது இந்தியாவில் மத்திய அரசில் 43 கேபினட் மந்திரிகள் உள்ளனர். அவர்களில் 4 பேர் மட்டுமே பெண்கள் மந்திரிகளாக இருக்கின்றனர். |
| வருமான வரி விலக்கு உச்சவரம்பை 5 லட்சமாக உயர்த்த மோடி திட்டம் Posted: 17 Mar 2014 03:33 AM PDT பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடெங்கும் மோடி அலை வீசுவதால் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் காங்கிரசை வரலாறு காணாத வகையில் படுதோல்வி அடையச் செய்யும் வகையில் அனைத்து தரப்பு மக்களின் வாக்குகளைப் பெற பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார். நடுத்தர மக்களின் பெரும்பானவர்கள் வருமான வரி செலுத்துவதை தேவை |
| காங்கிரஸ் கட்சி மூழ்கும் கப்பல்: அருண்ஜெட்லி தாக்கு Posted: 17 Mar 2014 03:14 AM PDT பாரதீய ஜனதா கட்சியின் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான அருண் ஜெட்லி இன்று தனது வலைதள பக்கத்தில் காங்கிரஸ் கட்சியை மூழ்கும் கப்பல் என்றும் அதில் இருந்து தப்பிக்க முக்கிய தலைவர்கள் முயன்று வருவதாக குறிப்பிட்டுள்ளார். அதன் ஒரு கட்டமாகவே அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார். |
| பிரசாரத்துக்கு பணம் இல்லை: நிதி நெருக்கடியில் ஆம் ஆத்மி கட்சி Posted: 17 Mar 2014 02:09 AM PDT காங்கிரஸ், பா.ஜனதாவுக்கு சவால் விடும் வகையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி திகழ்கிறது. ஆனால் அந்த கட்சிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு பிரசாரம் செய்யும் வகையில் அந்த கட்சிக்கு பண வலிமை இல்லை. மக்களின் நன்கொடை மூலம் கட்சியை நடத்தி வரும் ஆம் ஆத்மி பிரசாரத்திற்கு பணம் இல்லாமல் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |