Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


உங்களை நீங்கள் நம்புங்கள்

Posted: 12 Mar 2014 10:10 AM PDT

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னம்பிக்கை வேண்டும். தன்னம்பிக்கை இல்லாதவன் வாழ்க்கை, உப்பு சப்பு இல்லாத சுவையற்ற வாழ்க்கை ஆகும். இந்த வாழ்க்கை வாழ்ந்து என்ன பயன்? மற்றவர்களை நீங்கள் நம்பாமல் இருக்கலாம். ஆனால் உங்களையே நீங்கள் நம்பவில்லை என்றால் "வாழலாம்" என்ற ஆர்வம் உங்களுக்கு எப்படி வரும்? மண்ணும் நீங்களும் ஒன்றுதான். மண்கூட சில ஆக்க வேலை களுக்குப் பயன்படும். ஆனால் தன்னம்பிக்கை இல்லாத நீங்கள் எதற்குமே பயன்படாதவர்களாக ஆகிவிடுவீர்கள். நீங்கள் உங்கள் மேல் நம்பிக்கை வைக்கும் போது உங்களையறியாமல் ...

மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள்

Posted: 12 Mar 2014 10:09 AM PDT

மதுரை: நல்லமரத்தில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள்: தொல்லியல் அறிஞர் வேதாசலம் தகவல் மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகே நல்லமரம் கிராமத்தில் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன என தொல்லியல் அறிஞர் வேதாசலம் தெரிவித்தார். இந்திய தேசிய கலை கலாச்சார பாரம்பரிய அறக்கட்டளை, மதுரை டிராவல்ஸ் கிளப், தானம் அறக்கட்டளை சார்பில், நல்லமரம் கிராமத்தில் பாரம்பரிய நடைபயண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தொல்லியல் அறிஞர் வேதாசலம் ...

பாட்டில் மூடியால பிளாஸ்டிக் கவரை எப்படி மூடி போட்டு மூடி இருக்காங்க பாருங்க

Posted: 12 Mar 2014 10:08 AM PDT




மாயமாகும் விமானங்களை பின்தொடரும் மர்மங்கள்

Posted: 12 Mar 2014 09:58 AM PDT

கோலாலம்பூர் - பெய்ஜிங் விமான விபத்தைப் பற்றி இப்போது எல்லோரும் பேசுகிறோம். விமானம் புறப்பட்டபோது வானிலை நன்றாகவே இருந்தது. கடல் மட்டத்துக்கு மேலே 35,000 அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருந்தது. விமானத்தில் நெருக்கடி ஏதும் இருந்ததற்கான அடையாளம் தரைக் கட்டுப்பாட்டு கோபுரங்களுக்கு வரவில்லை. விமானியும் ரேடியோ மூலம் அவசரச் செய்தி எதையும் சொல்லவில்லை. விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்துக்கெல்லாம் ரேடாரிலிருந்து விலகிவிட்டது. விமானத்தின் கட்டுமானத்தில் கோளாறு ஏற்பட்டிருந்தால் விமானம் அப்படியே இரு துண்டுகளாக ...

இணையத்தில் உலாவரும் திருநங்கைகள்

Posted: 12 Mar 2014 09:47 AM PDT

[size=24.44444465637207]இணையத்தில் உலாவரும் திருநங்கைகள்[/size] மூன்றாம் பாலான திருநங்கைகள் வெளியுலகில் சுதந்திரமாக உலாவருவதற்கு இன்று வரையும் பல இடையூறுகள் இருந்தே வருகின்றன. அதற்குக் காரணம் வெளித்தோற்றத்தால் அவர்கள் அடையாளப் படுத்தப் படுவதால். ஆனால் இணைய தளங்களில் இவர்கள் சுதந்திரமாகவும் சுயமரியாதையுடனும் உலா வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதன் காரணமாகப் பலர் இணையத்தின் வாயிலாகத் தம் எழுத்தாளுமைகளைக் காட்டி வருகின்றனர் என்ற போதும் எண்ணிக்கையின் அளவில் மிகக் குறைவாக உள்ளனர். ...

கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள்!

Posted: 12 Mar 2014 07:55 AM PDT

'நாகரிகத்தின் தொட்டில்' நாகை மாவட்டம்- கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் தொன்மை சிறப்பில் நாகப்பட்டினம் மாவட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. பழங்கற்காலம் தொடங்கி புதிய கற்காலம், பெருங்கற்காலம் சங்க காலம், பல்லவர் காலம், சோழர் காலம் என்று இன்றுவரை தொடர்ந்து மக்கள் வாழ்ந்திருப்பதற்கான சான்றுகள் இம்மண்ணில் இன்னமும் விரவிக் கிடக்கிறது. குத்தாலம் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப் பட்ட புதிய கற்கால ஆயுதமான கற் கோடரி சிந்து சமவெளி நாகரிகத்துக்கு சிறிதும் குறைந்ததில்லை. ...

வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,,

Posted: 12 Mar 2014 07:51 AM PDT



கங்காரு" உலகம் வியக்கும் ( ஆஸ்திரேலியா தவிர ) ஒரு உயிரினம் - அறிய புகைப்படங்கள்...

Posted: 12 Mar 2014 04:12 AM PDT



மக்கள் மறந்த மாநகரம்

Posted: 12 Mar 2014 03:07 AM PDT

கி.பி எட்டாம் நூற் றாண்டில் இடைக் காலச் சோழர்களின் தலை நகரமாக விளங்கியது தான் 'பழையாறை'. இன்று இந்தத் தலை நகரம் சுற்றிலும் வரலாற்றை நிருபிக்கும் பெயர்கள் கொண்ட சிறு கிராமங்கள் சூழ்ந்து காட்சி அளிக்கிறது. ஆதித்த சோழனின் திருப்புறம்பயம் போர் வெற்றியைக் குறிக்க கட்டியதே சோமநாதர் ஆலயம். இன்று சிதிலமடைந்த கோபுரத்துடன் உள்ளது. நான்கு தளிகள் என நாற்புறமும் இருந்த பெருங்கோவில்களில் இன்று எஞ்சியது வடதளியாகிய இந்த சோமநாதர் ஆலயம் மட்டுமே. திருப்பணி வேலைகள் நடக்கின்றன. (முப்பது வருடங்களுக்கு முன் இந்தோனேஷியத் ...

பிரச்னைகளை மட்டுமின்றி, வாழ்க்கையையும் வெல்லலாம் எளிதாக.

Posted: 12 Mar 2014 02:13 AM PDT

'அறிவாளிகள் பிரச்னைகளைத் தீர்க்கிறார்கள். மேதைகள் பிரச்னை களைத் தவிர்க்கிறார்கள்' - இப்படியொரு ஆங்கிலப் பொன்மொழி உண்டு. நீங்கள் அறிவாளியா? மேதையா? பிரச்னை... பிரச்னை... பிரச்னை... எல்லாருக்கும் எப்போதும் ஏதோ ஒரு பிரச்னை. அதை எப்படித் தீர்ப்பது என்கிற தவிப்பு. அது தீர்வதற்குள் இன்னொரு பிரச்னை... பிறகு அதன் பின் ஓட்டம்... இப்படியே வாழ்நாள் முழுக்க பிரச்னை... பிரச்னை... பிரச்னைகளைத் தீர்க்கும் வழிகளைப் பற்றி யோசிப்பதற்குப் பதில், அதை ஒதுக்கித் தள்ளிவிட்டு, சந்தோஷமாக வாழ என்ன வழி என யோசித்துப்பாருங்களேன்... ...

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -103)

Posted: 12 Mar 2014 01:42 AM PDT

வணக்கம் ஈகரை உறவுகளே ..    இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.    மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .     தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ...

ஓரிக்கை-------

Posted: 12 Mar 2014 01:26 AM PDT

(பெருமாள், ஆழ்வார், கணிகண்ணன் ஆகிய மூன்று பேரும் ராத்ரி முழுவதும் பாலாற்றங்கரையில் தங்கிய அந்த இடத்திற்கு ஓரிரவிருக்கை (ஓர் இரவு இருக்கை) என்றே பெயர் ஏற்பட்டது. அந்தப் பெயர் சிதைந்து சிதைந்துதான் இப்போது ஓரிக்கை என்று வழங்குகிறது. அவருக்கு (யதோக்தகாரி என்ற) அந்தப் பெயர் வருவதற்கு முற்பட்ட காலத்திலேயே திருமழிசையாழ்வார் அவரை இஷ்டமூர்த்தியாக உபாஸித்துக் கொண்டிருந்தார். அவருக்கு அத்யந்த சிஷ்யனாக ஒரு பையன். கணிகண்ணன் என்று பேர். அவன் பிறந்ததே ஆழ்வார் அநுக்ரஹத்தில்தான். அவனுடைய பெற்றோருக்கு ரொம்ப ...

முன்னேற்றப்பாதை

Posted: 12 Mar 2014 12:48 AM PDT

முன்னேற்ற லட்சியம் கொண்டவர்கள் உடனே செய்ய வேண்டியவை இரண்டு, 1.) பாக்கெட்டில் ஒரு பேனா ஒருபாக்கெட் நோட்டு இவை இரண்டையும் எல்லா நேரத்திலும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அந்த பாக்கெட் நொட்டில் நாம் செய்ய வேண்டிய செயல், நேரம், சந்திக்க வேண்டிய மனிதர்கள், அறிய வேண்டிய நூல்கள் போன்று எல்லாவற்றையும் எழுதும் பழக்கத்தை செய்ய வேண்டும். இந்த பழக்கத்தைச் செய்பவர்கள், பெரும்பாலும் எந்த செயல்களையும் மறந்து விடுவதில்லை. இந்த பாக்கெட் நோட்டை யோசனை வங்கி ( IDEA BANK ) எனலாம். நாம் என்னென்ன செய்தால் முன்னேறலாம், ...

வாங்க சாதிக்கலாம்

Posted: 12 Mar 2014 12:33 AM PDT

உலகம் முழுவதும் பல்வேறு காலகட்டங் களில் பலப்பல சாதனையாளர்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு சிலர் மிகச்சிறிய வயதிலேயே சாதிக்கிறார்கள். வெகுசிலரே மிகச்சரியான வயதில் சாதிக்கிறார்கள். வேறு சிலரோ காலம் கடந்து வயதான பின்னர் சாதிக் கிறார்கள். ஒன்று மட்டும் நிச்சயம். மன உறுதியுடன் சாதித்தே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்ந்து உழைப்பவர்கள் நிச்சயம் சாதிக்கிறார்கள். ஒன்று மட்டும் நிச்சயம். மன உறுதியுடன் சாதித்தே தீர வேண்டும். என்ற நோக்கத்தில் தொடர்ந்து உழைப்பவர்கள் நிச்சயம் சாதிக்கிறார்கள். இந்த ...

உங்களால் எதையும் சாதிக்க முடியும்

Posted: 12 Mar 2014 12:25 AM PDT

யாரைக்கண்டும் நீங்கள் பயப்படாதீர்கள் வாழ்க்கை என்பது ஒரு அழகான பூந்தோட்டம். வண்ண மலர்கள் உங்கள் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி உங்கள் மனதிலே இருக்கின்றசுமைகளை இறக்கி வைத்து ஆனந்தக் களிப்பிலே உங்களை வாழ்த்துகிறது. வாழப்பிறந்த நீங்கள் கவலையில்லாமல் மகிழ்வோடு இருந்துவிட்டுப் போங்கள். உங்களுடைய நோக்கங்கள், உங்களுடைய செயல்கள், உங்களுடைய கடமைகள் ஆகியவைகளை நீங்கள்தான் நிறைவேற்றவேண்டும். மற்றவர்கள் உங்கள் பாதையில் குறுக்கிட அனுமதிக்காதீர்கள். மற்றவர்கள் நம்மைப் பற்றித் தவறாக எண்ணி விடுவார்களோ என்று ஏன் ...

பஞ்ச பூதங்கள் சொல்லும் பாடம்

Posted: 12 Mar 2014 12:20 AM PDT

இந்த உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. அதாவது ஐந்து ஆதார சக்திகளால் ஆனது. அது நமக்குத் தெரியும். வாழ்க்கையில் வெற்றியடைய விரும்புகிறவர்களுக்கு இந்த பஞ்ச பூதங்களும் சில பாடங்களை, சில ரகசியத் தத்துவங்களைச் சொல்கின்றனவே, அது தெரியுமா? எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். 1. நிலம் தங்கம், தாதுப்பொருட்கள், பெட்ரோல் என்று பலப்பல வளங்களைத் தன்னுள் வைத்திருக்கிறது நிலம். அந்த வளங்களை, அந்த மூலப் பொருள்களை எடுத்துத்தான் மனிதன் இன்று ஆயிரக்கணக்கான அற்புதப் பொருட்களைப் படைத்துப் படைத்து தனது வாழ்க்கையைச் சுகமாகவும் ...

தோல்வி 1 கேள்விகள் 4

Posted: 12 Mar 2014 12:11 AM PDT

தோல்வி என்பது வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொருவரும் சந்தித்தே ஆக வேண்டிய சங்கடமான விஷயம். ஒருமுறைகூட வாழ்க்கையில் தோல்வியே அடையாத மனிதன் எவருமே இருக்க முடியாது. கொஞ்சம் அசந்தாலும் மனிதனை, தலையில் ஓங்கி அடித்து உட்கார வைத்து விடக்கூடியது தோல்வி. எப்படி அதைச் சமாளிப்பது? எப்படி அதிலிருந்து மீள்வது? தோல்வியிலிருந்து உங்களைத் தூக்கிவிட இதோ, நான் தரும் நான்கு கேள்விகள். முதல் கேள்வி இந்தத் தோல்வி எதனால் வந்தது? வழக்கமான சில பதில்கள்: · அரைகுறைத் தகவல்கள் · சரியான மனிதர்களை அணுகாதது · சரியான ...

ஆன்லைனிலேயே உங்கள் வெப்சைட்டை டிசைன் செய்யலாம்...!

Posted: 12 Mar 2014 12:07 AM PDT

ஆன்லைனில் வெப்சைட் டிசைன் செய்ய உதவும் சேவைகளில் ஒன்றுதான் RVSiteBuilder. இதன் மூலம் நாம் எந்தவொரு வெப் டிசைனிங் பயிற்சியும் இல்லாமல்  நமது வெப்சைட்டை நாமே நிர்வகிக்க முடியும். அதுமட்டுமில்லாமல் இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடிவமைப்புகள்(Designs) இலவசமாகவே தருகிறார்கள். அதிலிருந்து உங்களுக்கு பிடித்த ஒரு வடிவமைப்பை தேர்ந்தெடுத்து உபயோகித்துக்கொள்ளலாம். உங்களுக்கான வடிவமைப்பை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். வெறும் ஐந்தே நிமிடங்களில் உங்களுக்கு பிடித்தமான டிசைனில் உங்கள் வெப்சைட்டை ...

வைரஸ் தாக்கிய பென்டிரைவில் கோப்புகளை மீட்டெடுப்பதற்கு

Posted: 11 Mar 2014 11:47 PM PDT

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெருமாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணணிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் கோப்புகளை பாதிக்கிறது. இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென்ட்ரைவில் உள்ள பைல்கள் மறைக்க பட்டுவிடும் கணணியில் பென்டிரைவை ஓபன் செய்தால் எந்த கோப்புகளும் இருக்காது. காலியாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தல் கோப்புகள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை ...

வேலன்:-அனைத்து கணிணி செயல்களும் ஒரே கிளிக்கில் ஒப்பன் செய்திட

Posted: 11 Mar 2014 06:44 PM PDT

கணிணியில் பயன்படுத்தும் இருபதுக்கும் மேற்பட்ட பணிகளை சுலபமாக நாம் செய்திட இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு உங்களுடைய டாக்ஸ்பாரில் வந்து அமர்ந்துகொள்ளும். இதில் உள்ள ஐகானை கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் Basic.Memo.Color.Shurtcut.Clock.Calender.Wedget.Share என 8 டேப்புகள்கொடுத்துள்ளார்கள் கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.தேவைப்படும் டேபினை கிளிக் செய்து ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™