Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


காங்கிரசுக்கு எதிராக களம் இறங்கும் பவன் கல்யாண்

Posted: 14 Mar 2014 11:07 PM PDT

மத்திய மந்திரியும், பிரபல நடிகருமான சிரஞ்சீவி தம்பியான நடிகர் பவன்கல்யாண் 'ஜனசேனா' என்ற புதிய கட்சியை நேற்று தொடங்கினார். ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடந்த இந்த விழாவில் தனது கட்சி கொடியை அறிமுகம் செய்தார். ஜனசேனா என்பதற்கு மக்கள் படை என்று பொருள். கட்சியின் சின்னமாக வட்டத்துக்குள் 6 நட்சத்திரங்கள் இருப்பதுபோல வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆதார் திட்டம் ரத்து செய்யப்படமாட்டாது: நீல்கேனி

Posted: 14 Mar 2014 10:37 PM PDT

ஆதார் அட்டை ஆணையத்தின் தலைவரான நந்தன் நீல்கேனி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் இணைந்தார். வருகிற மக்களவை தேர்தலில் அவர் பெங்களூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். இந்நிலையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த போது அவர் கூறுகையில்:- "ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுடன் கடந்த ஐந்தாண்டு ஆண்டு காலமாக நெருங்கிய தொடர்புடன் இருந்திருக்கிறேன். மேலும் ஆதார் அட்டை ஆணையத்தின் தலைமை பொறுப்பின் மூலம் இதுவரை 60 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கி இருக்கிறேன். பல்வேறு கட்சியினரும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணங்களுக்காக ஆதார்

டெல்லியில் மோடி மாநாட்டில் வைகோ ஆவேச பேச்சு

Posted: 14 Mar 2014 10:23 PM PDT

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடிக்கு ஆதரவாக டெல்லியில் மூத்த வக்கீல் ராம்ஜெத்மாலனி தலைமையில் வக்கீல்கள் மாநாடு நடந்தது. டெல்லி தல் கோட்ரா உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த இந்த மாநாட்டில் நரேந்திரமோடி, ம.தி.மு.க. செயலாளர் வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் வைகோ பேசியதாவது:– இங்கு நடைபெறும் வழக்கறிஞர்கள் மாநாடு இந்தியாவின் அரசியல்

ஆம் ஆத்மியினர் மீது குஜராத் போலீசார் வழக்கு

Posted: 14 Mar 2014 08:56 PM PDT

ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 5-ந்தேதி முதல் குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருடன் சுமார் 20 வாகனங்களில் கட்சியினரும் சென்றனர். இவ்வாறு ஆம் ஆத்மியினர் படான் மாவட்டத்தில் வராகி பகுதியில் சென்ற போது அங்குள்ள சுங்கச்சாவடியில் 20 வாகனமும் கட்டணம் செலுத்தவில்லை. இது குறித்து சுங்கச்சாவடி ஊழியர் முகேஷ் காத்வி போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து போலீசார் ஆம் ஆத்மியினர் மீது வழக்குப்பதிவு

தேர்தலில் தோல்வி நிச்சயம்: காங்கிரஸ் மீது மோடி தாக்கு

Posted: 14 Mar 2014 08:34 PM PDT

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி ஒடிசாவில் சம்பல்பூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் நேற்று பங்கேற்று பேசினார். அப்போது, இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் 'இந்திய ஜனநாயகத்தின் சவால்கள்' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய வெளியுறவுத்துறை மந்திரியுமான சல்மான் குர்ஷித் தேர்தல் ஆணையத்தையும், சுப்ரீம் கோர்ட்டையும் கடுமையாக விமர்சித்துப் பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக நரேந்திரமோடி குறிப்பிடுகையில், "அவர் (சல்மான்

உ.பி.யில் முன்னாள் பிரதமர்களின் மகன்கள், உறவினர்கள் போட்டி

Posted: 14 Mar 2014 08:20 PM PDT

வருகிற பாராளுமன்ற தேர்தலில், உத்தரபிரதேசத்தில் முன்னாள் பிரதமர்களின் மகன்கள் மற்றும் உறவினர்கள் போட்டியிடுகிறார்கள். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி ரேபரேலிதொகுதியிலும், ராஜீவின் மகன் ராகுல் காந்தி அமேதி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். ராஜீவ் காந்தியின் சகோதரரான சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா காந்தி பிலிபிட் தொகுதியிலும், அவரது மகன் வருண் காந்தி சுல்தான்பூர்

தேர்தல் விதிமுறை: ஹோலி கொண்டாட்டத்தை கைவிட்டார் லாலு

Posted: 14 Mar 2014 08:11 PM PDT

ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ், 'ஹோலி' பண்டிகை கொண்டாடுவது மிகவும் பிரசித்தம். பாட்னாவில் உள்ள தனது வீட்டில், தன் மனைவி, ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் புடைசூழ அவர் ஹோலி கொண்டாடி மகிழ்வார். ஆனால், இந்த ஆண்டு அவர் ஹோலி கொண்டாடவில்லை. அதற்கு காரணம், தேர்தல் நடத்தை விதிமுறைகள். இதுபற்றி லாலு கூறுகையில், 'நான் ஒன்றும் பைத்தியக்காரன் அல்ல.

5.2 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை அடையமுடியும்: சி.ரங்கராஜன்

Posted: 14 Mar 2014 05:03 PM PDT

பண்ணை விவசாயப்பொருள் உற்பத்தி அதிகரித்திருப்பதால் மார்ச் மாதத்துடன் முடிவடையும் 4வது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 5.2 சதவீதம் வளர்ச்சியை அடைய முடியும் என பிரதமரின் பொருளாதார ஆலோசகர் சி.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

மோடி தவறான தகவல்களை காண்பித்து பொய் கூறுகிறார்: ஆனந்த் சர்மா

Posted: 14 Mar 2014 04:24 PM PDT

"மற்ற மாநிலங்களை காட்டிலும் குஜராத் அதிகமான அன்னிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளதாக மோடி பொய் கூறுகிறார்" என மத்திய வர்த்தகத்துறை மந்திரி ஆனந்த் சர்மா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது :-

ஊழல் வழக்கில் துணை கலெக்டருக்கு 3 ஆண்டு சிறை

Posted: 14 Mar 2014 01:55 PM PDT

மத்திய பிரதேசம் மாநிலம், தார் மாவட்டத்தின் கந்த்வானி தாசில்தாராக பணியாற்றி வந்த விக்ரம் சிங் கெலாட் என்பவர் மீது ஏராளமான லஞ்சப் புகார்கள் வந்தன. இதனையடுத்து, கடந்த 30-03-2004 அன்று அவரது வீட்டுக்குள் லோக்

மூன்றாவது மாடியில் இருந்து குதித்த பெண்ணை பத்திரமாக மீட்ட போலீசார்

Posted: 14 Mar 2014 01:01 PM PDT

கணவனுடன் ஏற்பட்ட தகராறில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்த பெண்ணை போலீசார் பத்திரமாக மீட்டனர். டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியை சேர்ந்த மகிமா பண்டாரி என்பவர் கணவனை பிரிந்து ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் தனியாக வாழ்ந்து வருகிறார்.

பெங்களூரில் புதிய பிரிட்டிஷ் வர்த்தக மையம்

Posted: 14 Mar 2014 10:46 AM PDT

லண்டனுக்கான இந்திய வர்த்தக கவுன்சில், பிரிட்டிஷ் நிறுவனங்களை செயல்படுத்த இந்தியாவின் ஐ.டி. தலைநகரமான பெங்குளூரில் புதிய துவக்க நிலை மண்டலம் ஒன்றை அமைக்கவுள்ளது. இதற்காக தென்னிந்தியாவின் ஐ.டி. மையமாக கருதப்படும்

மம்தாவின் குஜராத் பயணம் ஒத்திவைப்பு

Posted: 14 Mar 2014 10:10 AM PDT

திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேற்கு வங்காள மாநில முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி வரும் 20-ம் தேதி குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்யவும் தலைநகர் அகமாதாபாத்தில் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஸ்ரீராமுலு மறுபடியும் பா.ஜ.கவில் சேர்ந்தார்

Posted: 14 Mar 2014 09:54 AM PDT

பா.ஜ.காவில் இருந்து விலகிய ஸ்ரீராமுலு மற்றும் அவருடைய நெருங்கிய உதவியாளர் ஆகியோர் இன்று பா.ஜனதாவில் சேர்ந்தனர். அப்போது அவரை சுஷ்மா சுவராஜ் வரவேற்றார். ஸ்ரீராமுலுக்கு வருகின்ற மக்களவை தேர்தலில் அவருக்கு பெல்லாரி தொகுதி வழங்க கட்சி முடிவு

பீகாரில் 7 தொழிலாளர்கள் கடத்தல்: மாவோயிஸ்டு அட்டகாசம்

Posted: 14 Mar 2014 07:38 AM PDT

இந்தியாவின் வட மாநிலங்களில் செயல்பட்டு வரும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் ஒரு கோட்டையாக பீகாரில் உள்ள ஜமுய் மாவட்டம் கருதப்படுகின்றது. பாட்னாவில் இருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள நவிநகர் கிராமத்தில் உள்ள ஆற்றங்கரை ஒன்றில் இன்று காலை உள்ளூர் தொழிலாளர்கள் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர்.

தெகல்கா நிறுவனர் தருண் தேஜ்பாலுக்கு ஜாமின் மறுப்பு

Posted: 14 Mar 2014 07:25 AM PDT

கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட தெகல்கா பத்திரிக்கையின் நிறுவனர் தருண் தேஜ்பால் கோவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர், மூளைக்கட்டி நோயினால் அவதிப்படும் தனது தாயாரை சந்திக்க அனுமதி தரும்படி கோவா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் தனது

மும்பையில் பாழடைந்த கட்டிடம் இடிந்து விழுந்து 6 பேர் பலி

Posted: 14 Mar 2014 06:39 AM PDT

மும்பை சான்டா குரூஸ் பகுதியில் இன்று 7 மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தரைமட்டமாகி கிடந்த அந்த கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றி மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த விபத்தில்

ஊடகத்துறையை சேர்ந்தவர்கள் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்கள்: கெஜ்ரிவால்

Posted: 14 Mar 2014 04:30 AM PDT

மக்களவை தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் பேசியதாவது: "குஜராத்தில் கடந்த பத்து வருடங்களில் 800 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அவரது நிலங்கள் சொற்ப விலைக்கு விற்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் ஒளிபரப்புவதற்கு ஊடகங்களுக்கு நேரமில்லை. ஆனால் கடந்த ஒரு வருடமாக நரேந்திர மோடியை மையப்படுத்தியே ஊடகங்கள் செய்திகளை ஒளிபரப்பி வருகின்றன. மோடி அங்கு சென்றார் இங்கு சென்றார் என எப்பொழுதும் மோடியை மட்டுமே

தாயாரை சந்திக்க தெஹல்கா நிறுவனர் தேஜ்பாலுக்கு அனுமதி

Posted: 14 Mar 2014 01:24 AM PDT

கற்பழிப்பு வழக்கில் சிக்கி கைதானவர் தெஹல்கா பத்திரிக்கையின் நிறுவனர் தருண் தேஜ்பால். தற்போது சிறையிலிருக்கும் இவரது தாயார் மூளைக்கட்டி நோயினால் அவதிப்படுவதாகவும் அதனால் தனது தாயாரை சந்திக்க அனுமதி தரும்படியும் கோவா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இன்று இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் தனது தாயாரை சந்திக்க தேஜ்பாலுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் செலவு ரூ.30,000 கோடியை எட்டும்

Posted: 14 Mar 2014 01:09 AM PDT

பாராளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் செலவு தொகை ரூ.40 லட்சமாக தேர்தல் கமிஷன் நிர்ணயித்துள்ளது. ஆனால் வேட்பாளர் களுக்காக கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்வது பொதுக் கூட்டம், ஆட்களை திரட்டுவது கொடி, தோரணங்கள் கட்டுவது, வாகனங்களில் பிரசாரம் என பலவழிகளில் செலவு செய்கிறார்கள். வேட்பாளர்கள் செலவு செய்யும் தொகையும், கட்சிகள் பிரசாரம் செய்யும்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™