Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


நான் அணிவது பொய் முடிதான்:

Posted: 14 Feb 2014 11:13 PM PST

தலையில் தான் அணிவது பொய் முடி என்பதை கூற தான் ஒருபோதும் அஞ்சியதில்லை என பிரபல சிங்களத் திரைப்பட நடிகரும் ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், நான் தலையில் அணிவது பொய் முடிதான். இதனை கூற நான் வெட்கப்படவில்லை. உலகில் உள்ள பிரபல நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், இலங்கையின் விஜயகுமாரதுங்க போன்றோரும் பொய் முடிகளை பயன்படுத்தினர். அரசாங்கத்தில் உள்ள பலர் பொய் முடிகளை பயன்படுத்தி வருகின்றனர். […]

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரபாகரனின் குண்டுக்குப் பயந்து ஓடியவர்கள் உரிமை பற்றி பேசுகின்றனர்: மேதானந்த தேரர்

Posted: 14 Feb 2014 11:05 PM PST

இலங்கையின் பௌத்த சக்திகளை அழிப்பதற்காக பலவாய்ந்த நாடுகள் மனித உரிமை தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவள மேதானந்த தேரர் குற்றம் சுமத்தியுள்ளார். இந்திய தூதரகப் பெண் அதிகாரியை நிர்வாணப்படுத்தி அந்த பெண்ணின் மனித உரிமையை மீறிய அமெரிக்கா, தனது பெண் அதிகாரியான நிஷா தேசாய் பிஸ்வால் என்பவரை இலங்கைக்கு மனித உரிமையை கற்றுக்கொடுக்க அனுப்பியது நகைப்புக்குரியது. இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை சுமத்தும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசசார்பற்ற […]

சிங்கள அரசு நடத்தியது போர்க்குற்றமல்ல, அப்பட்டமான இனப்படுகொலை: வைகோ

Posted: 14 Feb 2014 11:03 PM PST

இலங்கைத் தீவில் சிங்கள அரசு நடத்தியது போர்க்குற்றமல்ல, அப்பட்டமான இனப்படுகொலை என்ற உண்மையை உலக நாடுகள் உணர வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2009 இல் போரின் உச்ச கட்டத்தின் போது, சிங்கள இராணுவத்தினர் ஈழத் தமிழ்ப் பெண்களை வதைத்துக் கொன்ற காட்சி புதிய ஆதாரமாகக் கிடைத்துள்ளது. அந்தக் கொடுமையை எழுத்தில் பதிய என் மனம் மறுக்கிறது. ஐயோ! இப்படியும் ஒரு […]

பிள்ளைகளை ஆண் நண்பருக்கு இரையாக்கிய தாய்!

Posted: 14 Feb 2014 07:13 AM PST

ohio_woman_arrest_002

ohio_woman_arrest_002அமெரிக்காவில் பெற்ற தாயே தன்னுடைய குழந்தைகளை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஓகியோ நகரை சேர்ந்த பெண் பாபி சூயு பேக், இவரது தாயார் எட்வினா லூயிஸ். பாபிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் பாபியும், லூயிசும், ஜூயன் கரோலஸ் சான்செஸ் என்பவருடன் கூட்டு சேர்ந்து அக்குழந்தைகளை கட்டிப்போட்டு, செயினால் அடித்து துன்புறுத்தி உள்ளனர்.

சான்செஸ், பாபியின் 11 மற்றும் 9 வயதான பெண்குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியுள்ளான்.

மேலும் அவர்களை கட்டிலில் கட்டிப்போட்டு விட்டு, தொடர்ச்சியாக செயின் மற்றும் கரண்டியால் அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர்.

இதில் குழந்தைகளின் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒன்லைனில் போதனை வகுப்புகள் நடந்துள்ளது, இதன் மூலம் அமெரிக்க குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

வாழ்க்கையிலேயே முதல் முறையாக இந்த மாதிரியான குற்றத்தை பார்த்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து டேவிட் ஹால் என்ற பொலிஸ் அதிகாரி கூறுகையில், இச்சம்பவம் மிக கொடுமையான நிகழ்வாகும்.

அவர்கள் குழந்தைகளை பல வாரங்களுக்கு நிர்வாணமாக கட்டிலில் கட்டி வைத்துள்ளனர், மேலும் எப்போதாவதுதான் உணவு வழங்கியுள்ளனர்.

அவர்களுடைய இணைய வகுப்பின்போது மட்டுமே சங்கிலிகள் அவிழ்க்கப்பட்டுள்ளன.

ஆனால் அக்குழந்தைகள் மிக மிக தைரியசாலிகள், கடவுள்தான் அவர்களுக்கு அந்த தைரியத்தை அளித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சான்செஸ், பாபி மற்றும் எட்வினா ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீதான வழக்கு விசாரணை வருகிற 20ம் திகதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அன்பை போதிக்கும் பாதிரியாரின் செக்ஸ் சேட்டை….

Posted: 14 Feb 2014 07:09 AM PST

father_sex_001.w245

father_sex_001.w245பெண்ணின் வீட்டில் ஜெபம் செய்ய வந்த பாதிரியாரின் செக்ஸ் லீலையே இந்த காணொளியாகும்... அன்பை போதிக்கும் புனிதமான மதங்களில் இப்படிபட்ட சாக்கடை குண மனிதர்களின் செயல் அம்மதத்தின் புனிதத்தை கெடுத்து விடுவது உண்மையே!...

 

This posting includes an audio/video/photo media file: Download Now

பெண்களாக மாறிய ஆண்கள்…. நடனத்தால் நடுவர்களை அசர வைத்த காட்சி!….

Posted: 14 Feb 2014 07:03 AM PST

boy_dance_001.w245

boy_dance_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

சாலையில் தோன்றிய திடீர் பனிமூட்டத்தால் ஏற்பட்ட விபத்து……

Posted: 14 Feb 2014 07:02 AM PST

snow_accident_001.w245

snow_accident_001.w245வீதியில் பனி மூட்டம் நிறைந்திருந்ததால் எதிரே வந்த வாகனங்கள் ஒன்றை ஒன்று காணாது நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.  

This posting includes an audio/video/photo media file: Download Now

என்ன பொலிஸ் இவங்க?…. இப்படியா கவனக்குறைவா இருப்பாங்க!…

Posted: 14 Feb 2014 06:59 AM PST

police_careless_001.w245

police_careless_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

பொது இடத்துல பெண்களை சீண்டினால் என்ன நடக்கும்?…..

Posted: 14 Feb 2014 06:57 AM PST

girl_chet_001.w245

girl_chet_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

மனிதர்களின் உச்சக்கட்ட பயம்….. இதைப் பார்க்க நீங்க தைரியசாலியா?….

Posted: 14 Feb 2014 06:55 AM PST

fear_man_001.w245

fear_man_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

தென் ஆப்ரிக்காவில் ஐபிஎல் போட்டிகள்

Posted: 14 Feb 2014 06:53 AM PST

இந்தியாவில் 7வது சீசன் ஐபிஎல் போட்டிகள் தென் ஆப்ரிக்காவில் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் 7வது சீசன் போட்டி வருகிற ஏப்ரல் 9ம் திகதி முதல் ஜூன் 3ம் திகதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், பாதுகாப்பு அளிப்பதில் சிக்கல்கள் நிலவுகிறது. இதனையடுத்து ஐபிஎல் போட்டிகளை எங்கு நடத்தலாம் என்பது குறித்து, நிர்வாக குழு கூட்டம் பெங்களூரில் கலந்து ஆலோசித்தது. கூட்டம் முடிந்த பின்னர் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் […]

கால்பந்து அணிகளுக்கான தரவரிசைப் பட்டியல்! ஸ்பெயின் முதலிடம்

Posted: 14 Feb 2014 06:52 AM PST

கால்பந்து போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு(பிபா) வெளியிட்டுள்ளது. நம்பர்–1 இடத்தை நடப்பு உலக சாம்பியனான ஸ்பெயின் அணி தக்கவைத்துக் கொண்டது. அடுத்த இரண்டு இடங்களில் ஜேர்மனி, அர்ஜென்டினா அணிகள் நீடிக்கின்றன, போர்ச்சுகல் அணி 5வது இடத்தில் இருந்து 4வது இடத்துக்கு முன்னேறியது. இதையடுத்து கொலம்பியா அணி 5வது இடத்துக்கு தள்ளப்பட்டது, இரண்டு இடங்கள் முன்னேறிய சுவிட்சர்லாந்து அணி 6வது இடம் பிடித்தது. உருகுவே(7வது இடம்), இத்தாலி(8வது இடம்) தலா ஒரு […]

This posting includes an audio/video/photo media file: Download Now

ஐபிஎல் ஏலம்: 360 வீரர்களின் நிலை என்ன?

Posted: 14 Feb 2014 06:50 AM PST

7வது ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்களின் ஏலம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. * முதல் நாளில் 70 வீரர்களும்(ரூ.212.35 கோடி), 2வது நாளான நேற்று 84 வீரர்களும்(ரூ.50.25 கோடி) என்று மொத்தம் 154 வீரர்கள் ஏலம் போயிருக்கிறார்கள், இவர்களுக்கான ஏலத் தொகை ரூ.262.6 கோடியாகும். * 360 வீரர்கள் ஏலம் போகவில்லை. * ஏலம் இல்லாமல் முன்கூட்டிய தக்க வைக்கப்பட்ட வீரர்களின் எண்ணிகை 24. இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஊதிய தொகை ரூ.205.5 கோடி. * ஆக […]

ஐ.நா தலையீட்டுடன் வடக்குப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது!– அரசாங்கம்

Posted: 14 Feb 2014 06:48 AM PST

United-Nations-Geneva

United-Nations-Genevaவடக்கின் பிரச்சினைகளுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலையீட்டுடன் தீர்வு காண முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலையீட்டின் அடிப்படையில் வடக்கு மாகாணசபைக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.

வட மாகாணசபைக்கு அதிகாரத்தை வழங்க ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு செய்ய வேண்டுமென வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், அண்மையில் இலங்கைக்கு வியஜம் செய்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணைச் செயலளார் கயான்கீ சூவிடம் கோரியுள்ளார்.

முதலமைச்சரின் இந்தக் கோரிக்கையானது ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆர்2ஜீ என்னும் பிரகடனத்திற்குள் அரசாங்கத்தை சிக்க வைக்கும் சூழ்ச்சி திட்டமாக கருதப்பட வேண்டுமென சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் பிரச்சினைகளுக்கு எந்தவொரு மூன்றாம் தரப்பினையும் ஈடுபடுத்தப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

நோக்கியாவின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

Posted: 14 Feb 2014 06:47 AM PST

nokia_lumia_icon_001

nokia_lumia_icon_001நோக்கிய நிறுவனமானது Lumia Icon எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை எதிர்வரும் 20ம் திகதி அறிமுகம் செய்கின்றது.

Verizon வலையமைப்புடன் இணைந்து வெளியிடவுள்ள இக்கைப்பேசியானது 5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Quad Core 2.2Ghz Snapdragon 800 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM மற்றும் 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளன.

இவற்றுடன் 20 மெகாபிக்சல்களை உடைய அதி துல்லியமான கமெராவினையும் கொண்டதாக இக்கைப்பேசி அறிமுகமாகவுள்ளது.

Verizon நிறுவனம் இக்கைப்பேசியினை 199.99 டொலர்களுக்கு விற்பனை செய்ய தீர்மானித்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்ட காப்பி டேபிள் (வீடியோ இணைப்பு)

Posted: 14 Feb 2014 06:46 AM PST

கடந்த காலத்தில் மைக்ரோசொப்டின் விண்டோஸ் இயங்குதளத்துடன் கூடிய Ideum Platform எனும் காப்பி டேபிள் (Coffee Table) அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டதும் 46 அங்குல அளவுடையதுமான மல்டி டச் காப்பி டேபிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் திரையானது 1920 x 1080 Pixel Resolution உடையதாகக் காணப்படுவதுடன் Quad Core 3.7GHz Intel Processor, பிரதான நினைவகமாக 16GB RAM மற்றும் சேமிப்பு நினைவகமாக 500GB கொள்ளளவு என்பனவும் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

மெனிக்பாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதாக அறிக்கை

Posted: 14 Feb 2014 06:44 AM PST

இலங்கை, மெனிக்பாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாக போலி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. டாக் என்ற அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான முறையில் இந்த அறிக்கையை தயாரித்துள்ளது. டாக் என்ற அமைப்பு மெனிக்பாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவித்து விசேட அறிக்கை ஓன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த அறிக்கையை ஐரோப்பிய அரச சார்பற்ற நிறுவனமொன்றைச் சேர்ந்த ஹென்ட்ரினா […]

LG அறிமுகப்படுத்தும் 105 அங்குல அளவுடைய தொலைக்காட்சி

Posted: 14 Feb 2014 06:43 AM PST

தொழில்நுட்ப உலகில் புரட்சியினை ஏற்படுத்திவரும் LG நிறுவனம் 105 அங்குல அளவுடைய Ultra HD தொலைக்காட்சியினை அறிமுகம் செய்கின்றது. 21:9 என்ற அளவுப் பரிமாணத்தைக் கொண்டதும், 5120 x 2160 Pixel Resolution உடையதுமான இத்தொலைக்காட்சி HDMI 2.0, USB மற்றும் LAN ஆகிய வசதிகளை உள்ளடக்கியுள்ளது. இறுதியாக 84 அங்குல அளவுடைய தொலைக்காட்சியை அறிமுகப்படுத்திய LG நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தும் LED LCD தொழில்நுட்பத்தினைக் கொண்ட மிகப்பெரிய தொலைக்காட்சி இதுவாகும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள பிரேரணை : அமெரிக்காவுக்கு 800 குழுக்கள் வரை ஆதரவு

Posted: 14 Feb 2014 06:40 AM PST

download (1)

download (1)ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள பிரேரணைக்கு அமெரிக்காவுக்கு சுமார் 800 குழுக்கள் வரை ஆதரவு வழங்குவதாக இலங்கை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
மேற்கத்தைய நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டதன் அடிப்படையில் தமது கருத்துக்களை ஊடகவியலாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். அமெரிக்கா கொண்டு வரவுள்ள பிரேரணைக்கு விடுதலைப் புலிகளின் குழுக்களும் ஆதரவு வழங்குவதாக லலித் வீரதுங்க குறிப்பிட்டார். எனினும் இலங்கை அரசாங்கமும் அமெரிக்க பிரேரணைக்கு எதிராக தமது ஆதரவுக் குழுக்களுடன் செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் யோசனை நிச்சயமாக ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதனை தடுக்கமுடியாது. இந்தநிலையில் இலங்கையை பொறுத்தவரை தமது நல்லிணக்க நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கும் என்று லலித் வீரதுங்க தெரிவித்தார். இந்த நல்லிணக்க நடவடிக்கைக்கு மேலும் காலம் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார். விடுதலைப் புலிகள் ஏற்கனவே அமெரிக்க வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு நெருங்கியவரான ஒருவருடன் ஆலோசனைக்காக ஒப்பந்தம் செய்துள்ளது. எனினும் இலங்கை அரசாங்கத்தினால் அந்த நிலைமைக்கு செல்ல முடியவில்லை. அமெரிக்காவில் தம்மை சந்தித்த காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் தமது மின்னஞ்சல்களை திறக்கும் போது அதில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஒவ்வொரு நாளும் ஐம்பது என்ற அளவில் குற்றச்சாட்டுக்களை காணமுடிகிறது. எனினும் இலங்கை அரசாங்க தரப்பில் இருந்து மின்னஞ்சல்களை தாம் காண்பதில்லை என்று குறிப்பிட்டதாக லலித் வீரதுங்க தெரிவித்தார். வடக்கு மாகாண பிரதம செயலாளரை மாற்றும் கோரிக்கை தொடர்பில் உண்மை நிலவரத்தை அரசாங்கம் புரிந்துக்கொண்டிருக்கிறது. எனினும் அதனை உடனடியாக செய்ய முடியாதுள்ளதாக லலித் வீரதுங்க தெரிவித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

டோக்கியோவில் பனிப்புயலால் மோசமான வானிலை

Posted: 14 Feb 2014 06:35 AM PST

japonia-ninsoare-zapada2

japonia-ninsoare-zapada2ஜப்பான் தலைநகர் டோக்கியோ மற்றும் அந்நாட்டின் இதர பகுதிகளில் பனிப்புயலால் மோசமான வானிலை நிலவி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஜப்பானில் ஏற்பட்ட பனிப்புயலில் இதுவே மிகப்பெரியதாகும். பனிப்புயலுக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். 1,200-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், நேற்று சுமார் 30 செ.மீ அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. டோக்கியோவில் கடும் பனிப்புயல் வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மேற்கு ஜப்பானில் 'ஷின்கன்சென்' புல்லட் ரெயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சாலைப் போக்குவரத்தும் முடங்கியுள்ளது. 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது 77 விமானங்களை ரத்து செய்துள்ளது. இதேபோல் பல்வேறு நிறுவனங்களில் விமானங்கள் ரத்துசெய்யப்பட்டதால் 16,000 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்ற வாரம், டோக்கியோவி்ல் 27 செ.மீ அளவுக்கு பனிப்பொழிவு இருந்தது. இது டோக்கியோவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகமோசமான பனிப்பொழிவாக பதிவு செய்யப்பட்டது.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™