மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ஐ.நா.வில் அமெரிக்க தீர்மானத்தின் மீது இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்கு: மூத்த அதிகாரி தகவல்
- பிரசாரத்துக்கு தயாராகவே ராஜினாமா? பாராளுமன்ற தேர்தலில் கெஜ்ரிவால் போட்டி
- மிளகுபொடி வீசிய காங். எம்.பி.க்கும் தீவிரவாதிக்கும் வித்தியாசம் இல்லை: மத்திய மந்திரி கடும் தாக்கு
- தெலுங்கானா மசோதாவை தடுக்க கிரண்குமார் ரெட்டி வியூகம்: மந்திரி, எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை
- இன்னும் 4 அல்லது 5 நாட்களுக்கு இடைக்கால முதல்வராக கெஜ்ரிவால் நீடிப்பார்
- பாராளுமன்றத்துக்குள் நுழையும் எம்.பி.க்களை பரிசோதித்து அனுமதிக்க ஏற்பாடு: திங்கட்கிழமை முடிவு
- வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால் கெஜ்ரிவால் ஓடுகிறார்: காங்கிரஸ் தாக்கு
- லாக்டாக் ஏரியில் 32 ஆயிரம் வெளிநாட்டு பறவைகள் குவிந்தன
- தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பதி பஸ் நிலையத்தில் பெண்கள் தீக்குளிக்க முயற்சி
- திருப்பதி கோவிலுக்கு சேவை வரி விதிக்க தடை: மத்திய நிதி அமைச்சகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு
- கேரளாவில் இன்று காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியாகாந்தி ஆலோசனை
- ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமாரின் முன்ஜாமீன் ரத்து: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்து மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
- 15000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஐ.பி.எம் முடிவு
- பாராளுமன்ற தேர்தலில் முகேஷ் அம்பானி விவகாரம் பெரிதாக வெடிக்குமா?
- இந்திய விண்வெளி வீரர்களுடன் விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ முடிவு
- ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார் கெஜ்ரிவால்
- மாகாராஷ்டிராவில் 28-ம் தேதி ராகுல் காந்தி சுற்றுப்பயணம்
- நிடோ கொலை மிகவும் வெட்கக்கேடானது: பிரதமர் மன்மோகன் சிங் உருக்கம்
- ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்வதில் தோல்வி: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால்
| ஐ.நா.வில் அமெரிக்க தீர்மானத்தின் மீது இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்கு: மூத்த அதிகாரி தகவல் Posted: 14 Feb 2014 11:14 PM PST ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தின் மீது இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்கிறது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிகட்ட போரில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். அதைத்தொடர்ந்து போர்க்குற்றம் புரிந்ததாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா 2 தடவை கண்டன தீர்மானம் கொண்டு வந்தது. அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் |
| பிரசாரத்துக்கு தயாராகவே ராஜினாமா? பாராளுமன்ற தேர்தலில் கெஜ்ரிவால் போட்டி Posted: 14 Feb 2014 11:05 PM PST டெல்லி சட்டசபையில் ஜன்லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய முடியாததால் முதல்– மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஊழல் ஒழிப்பு என்ற கோஷத்துடன் இயக்கம் தொடங்கிய அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல் ஒழிப்பு லோக்பால் மசோதாவை தனது சட்டசபையிலேயே கொண்டுவர முடியாததால் இந்த முடிவு எடுத்தார். சட்டசபையில் பேசிய கெஜ்ரிவால், எதிர்பார்த்தபடி காங்கிரஸ், |
| மிளகுபொடி வீசிய காங். எம்.பி.க்கும் தீவிரவாதிக்கும் வித்தியாசம் இல்லை: மத்திய மந்திரி கடும் தாக்கு Posted: 14 Feb 2014 10:53 PM PST தெலுங்கானா தனி மாநில மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது ஆந்திர எம்.பி.க்கள் சபையின் மையத்துக்கு சென்று அமளியில் ஈடுபட்டனர். அப்போது விஜயவாடா காங்கிரஸ் எம்.பி. ராஜகோபால் தான் வைத்திருந்த மிளகு பொடியை எடுத்து 'ஸ்பிரே' செய்தார். இதனால் சபாநாயகர் மற்றும் பல எம்.பி.க்கள் கண் எரிச்சல், சுவாச கோளால் அவதிப்பட்டனர். இதை ராஜகோபால் உள்பட 18 எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டனர். பாராளுமன்றத்தில் நடந்த இந்த சம்பவத்துக்கு சபாநாயகர் மீராகுமார் உள்பட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். |
| தெலுங்கானா மசோதாவை தடுக்க கிரண்குமார் ரெட்டி வியூகம்: மந்திரி, எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை Posted: 14 Feb 2014 10:44 PM PST தெலுங்கானா தனி மாநில மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா எம்.பி.க்கள் பெரும் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளியில் விஜயவாடா தொகுதி காங்கிரஸ் எம்.பி. எல்.ராஜகோபால் மிளகு பொடி ஸ்பிரே வீசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர சட்டசபை நிராகரித்து அனுப்பிய மசோதாவை கமா, புள்ளி கூட |
| இன்னும் 4 அல்லது 5 நாட்களுக்கு இடைக்கால முதல்வராக கெஜ்ரிவால் நீடிப்பார் Posted: 14 Feb 2014 10:30 PM PST டெல்லி முதல் – மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஜன்லோக்பால் மசோதா நிறைவேறாததால் ராஜினாமா செய்தார். டெல்லி மாநிலம் யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் உள்ளது. மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. எல்லா முடிவுகளையும் உள்துறை மூலமாக ஜனாதிபதியிடம் அனுமதி கேட்டுத் தான் எடுக்க முடியும். இப்போது ராஜினாமா விவகாரத்திலும் இந்த நிலை தான். |
| பாராளுமன்றத்துக்குள் நுழையும் எம்.பி.க்களை பரிசோதித்து அனுமதிக்க ஏற்பாடு: திங்கட்கிழமை முடிவு Posted: 14 Feb 2014 10:03 PM PST பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு ராயலசீமா பகுதி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பாராளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது. அப்போது ஆந்திரா மாநிலம் சீமாந்திரா பகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ராஜகோபால் மிளகு பொடி 'ஸ்பிரே' அடித்தார். இதனால் பல எம்.பி.க்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. |
| வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால் கெஜ்ரிவால் ஓடுகிறார்: காங்கிரஸ் தாக்கு Posted: 14 Feb 2014 09:54 PM PST ஜன் லோக்பால் மசோதா நிறைவேறாததால் டெல்லி முதல்–மந்திரி பதவியில் இருந்து நேற்று கெஜ்ரிவால் விலகினார். இதற்கு பா.ஜ.க., காங்கிரஸ் இரு கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் அர்விந்தர்சிங் லவ்லி இது தொடர்பாக கூறியதாவது:– லோக்பால் மசோதா பற்றி காங்கிரசுக்கு ஆர்வம் இல்லாதது போல கெஜ்ரிவால் பேசி வருகிறார். லோக்பாலை வரையறுத்ததே காங்கிரஸ் கட்சிதான். |
| லாக்டாக் ஏரியில் 32 ஆயிரம் வெளிநாட்டு பறவைகள் குவிந்தன Posted: 14 Feb 2014 09:34 PM PST மணிப்பூரின் பிஷ்பென்பூர் மாவட்டத்திலுள்ள லாக்டாக் ஏரிக்கு இந்த ஆண்டு 18 வகையான சுமார் 32 ஆயிரம் வெளிநாட்டு பறவைகள் இடம் பெயர்ந்து வந்துள்ளன. மணிப்பூர் மாநில வனத்துறை கடந்த 2011-லிருந்து ஒவ்வொரு ஆண்டும் பறவைகளை கணக்கெடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ஜனவரி 18-ம் தேதி லாக்டாக் ஏரியைச் சுற்றி 50 பகுதிகளில் குவிந்துள்ள வெளிநாட்டுப் பறவைகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்தது. |
| தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பதி பஸ் நிலையத்தில் பெண்கள் தீக்குளிக்க முயற்சி Posted: 14 Feb 2014 08:58 PM PST தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா பகுதியை சேர்ந்தவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி சித்தூர் மாவட்டத்தில் பந்த் நடந்தது. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல முடியவில்லை |
| திருப்பதி கோவிலுக்கு சேவை வரி விதிக்க தடை: மத்திய நிதி அமைச்சகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு Posted: 14 Feb 2014 08:41 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சேவை வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், எப்.எம்.ஐ.கலிபுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திருப்பதி கோவிலுக்கு சேவை வரி |
| கேரளாவில் இன்று காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியாகாந்தி ஆலோசனை Posted: 14 Feb 2014 08:26 PM PST பாராளுமன்ற தேர்தலை யொட்டி காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியாகாந்தி பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சி பணிகள், தேர்தல் பிரசாரம் குறித்து ஆலோசிக்க நேற்று லட்சத்தீவுக்கு சென்றார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் |
| ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமாரின் முன்ஜாமீன் ரத்து: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு Posted: 14 Feb 2014 07:29 PM PST தமிழகத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமாருக்கு சென்னை ஐகோர்ட்டு வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று பிரியதர்ஷிணி என்ற பெண் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் கொண்ட அமர்வின் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. பிரியதர்ஷிணி சார்பில் மூத்த வக்கீல் எம்.என்.கிருஷ்ணமணி ஆஜராகி வாதாடினார். வருண்குமார் மற்றும் பிரியதர்ஷிணி ஆகிய இருவரும் 2007ம் ஆண்டில் இருந்து நண்பர்களாக இருந்ததாகவும், தன்னை திருமணம் |
| கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்து மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி Posted: 14 Feb 2014 07:20 PM PST கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், விக்ரம்ஜித் சென் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன் சார்பில் வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதாடினார். அவர் தனது வாதத்தின் போது, கூடங்குளம் அணு உலையில் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் படி, 15 நிபந்தனைகளை நிறைவேற்ற மத்திய அரசு தவறிவிட்டதாகவும், எனவே உடனடியாக அணு உலையை மூட வேண்டும் என்றும் கூறினார். உடனே குறுக்கிட்ட மத்திய அரசின் தலைமை வக்கீல் கூளம் ஜி.வாகன்வதி, தற்போது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்றும், எந்த பாதிப்பும் கிடையாது என்றும், எனவே இந்த மனுவை தேவையற்றது எனக்கருதி உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அணு உலையில் பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளதா? எ |
| 15000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஐ.பி.எம் முடிவு Posted: 14 Feb 2014 03:58 PM PST முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஐ.பி.எம் தங்களது கம்பெனியில் மறுசீரமைப்பு பணியை துவக்கிவிட்டது. இதன் மூலம் உலகம் முழுவதிலும் இருந்து 15000 பேர் பதவி இழப்பார்கள் என தெரிகிறது. குறிப்பாக இந்தியா, பிரேசில் மற்றும் ஐரோப்பியா பகுதியில் |
| பாராளுமன்ற தேர்தலில் முகேஷ் அம்பானி விவகாரம் பெரிதாக வெடிக்குமா? Posted: 14 Feb 2014 03:14 PM PST டெல்லி மாநில சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்படவிருந்த ஜன் லோக்பால் மசோதா, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது. |
| இந்திய விண்வெளி வீரர்களுடன் விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ முடிவு Posted: 14 Feb 2014 12:18 PM PST செவ்வாய் கிரகத்தை ஆராய விண்கலம் அனுப்பிய இந்தியா தற்போது முதல் முறையாக விண்கலத்திற்குள் விண்வெளி வீரர்களை அனுப்ப முடியு செய்துள்ளது. இம்முயற்சி இன்னும் இரண்டொரு |
| ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார் கெஜ்ரிவால் Posted: 14 Feb 2014 10:10 AM PST டெல்லி சட்டசபையில் இன்று எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையில் ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்யும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் கெஜ்ரிவால் ஏற்கனவே கூறியபடி, அவரது அமைச்சரவை இன்று இரவு கூடி முதல்வர் பதவியை |
| மாகாராஷ்டிராவில் 28-ம் தேதி ராகுல் காந்தி சுற்றுப்பயணம் Posted: 14 Feb 2014 08:44 AM PST மக்களவைத் தேர்தலுக்கு தயாராகி வரும் காங்கிரஸ் கட்சி பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறது. கட்சியின் வாக்கு வங்கியை அதிகரிக்க களமிறங்கியுள்ள பிரச்சாரக்குழு துணைத்தலைவர் ராகுல் காந்தி, மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 28-ம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரை |
| நிடோ கொலை மிகவும் வெட்கக்கேடானது: பிரதமர் மன்மோகன் சிங் உருக்கம் Posted: 14 Feb 2014 08:24 AM PST புதுடெல்லியில் கடந்த மாதம் 30ம் தேதி அருணாச்சல பிரதேச மாணவர் நிடோ தனியா கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவர் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி அருணாச்சல பிரதேச மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று வடகிழக்கு மாநிலத்தவர்கள் |
| ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்வதில் தோல்வி: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால் Posted: 14 Feb 2014 07:18 AM PST டெல்லி சட்டசபையில் இன்று எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையில் ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்யும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் கெஜ்ரிவால் ஏற்கனவே கூறியபடி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை அளிப்பதற்காக |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |