Tamil Star |
- இலங்கைக்கு ஆதரவளிக்கப்படும் சீனா
- நாஜி கால ஓவியங்கள் கண்டுபிடிப்பு
- நவனீதம்பிள்ளையின் அறிக்கைக்கு புலி ஆதரவாளர்கள் உதவி! சிங்கள பத்திரிகை
- பெண் ஒருவரை 15 ஆண்டுகளாக செக்ஸ் அடிமையாக வைத்திருந்த நபர் கைது
- குட்டை பாவாடைக்கு வருகிறது தடை
- இலங்கைக்கு எதிரான பிரேரணை நிச்சயம் நிறைவேறும்: பிரித்தானியா நம்பிக்கை
- கோமாவில் இருக்கும் கணவரிடம் மணிக்கணக்கில் பேசும் மனைவி
- பேஸ்புக்கில் வெளியாகிய புகைப்படத்தால் 16 வயது மாணவி தற்கொலை
- ஜெனீவா தீர்மானத்தை ஆதரித்து யாழில் ஆர்ப்பாட்டம்
- மூன்றாம் தரப்பின்றி முடியாது: சி.வி.
- பிக்குகள் சித்திரவதை செய்யப்படுவதை பார்த்து ரசித்த ரணி
- தனித் தமிழீழம் கோரி ஐ.நா. தலைமைச் செயலகம் முன் போராட்டம்!
| இலங்கைக்கு ஆதரவளிக்கப்படும் சீனா Posted: 12 Feb 2014 03:49 AM PST இலங்கைக்கு ஆதரவளிக்கப்படும் என சீனா அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு பூரண அளவில் ஒத்துழைப்பு வழங்கப்படும் என சீன வெளிவிவகார அமைச்சர் வேங் யீ (றுயபெ லுi) தெரிவித்துள்ளார். இலங்கையின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையீடு செய்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய சுதந்திரம், இறைமை மற்றும் பௌதீக ஒருமைப்பாடு ஆகியவற்றை பாதுகாக்கும் இலங்கை அரசாங்கத்தின் முனைப்புக்களுக்கு முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். சீனாவிற்கு […] |
| நாஜி கால ஓவியங்கள் கண்டுபிடிப்பு Posted: 12 Feb 2014 03:47 AM PST ஜேர்மனியில் நாஜி கால கலைப்படைப்புகளில் 60 ஓவியங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஜேர்மனியில் ஹிட்லரின் ஆட்சி நடைபெற்று வந்த போது, 1930- 40 ஆண்டு காலகட்டத்தில் ஹில்டிபிரான்ட் குர்லிட் என்பவர் கலைப்படைப்புகளை விற்பனை செய்து வந்தார். அப்போது அரசு அதிகாரிகள், யூதர்களிடமிருந்து திருடிய மற்றும் சிதைந்ததாக கருதிய ஓவியங்களை இவரிடம் விற்பனைக்கு கொடுத்துள்ளனர். ஆனால் காலப்போக்கில் விற்பனையாகாமல் இவரிடமே இருந்த இவ்வோவியங்கள் தற்போது இவரது மகன் கோர்னிலியஸ் குர்லிட் வசித்துவரும் மியூனிச் வீட்டில் இருப்பது கலைப்பொருள் முதலீட்டாளர்களின் கவனத்திற்கு […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| நவனீதம்பிள்ளையின் அறிக்கைக்கு புலி ஆதரவாளர்கள் உதவி! சிங்கள பத்திரிகை Posted: 12 Feb 2014 03:45 AM PST ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் அறிக்கைக்கு தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் உதவியளித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆறு பேரைக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு குழுவொன்று நவனீதம்பிள்ளை அறிக்கை தயாரிப்பிற்கு பங்களிப்பினை வழங்கியுள்ளனர். செனல்4 ஊடகத்தின் ஊடகவியலாளர் கலம் மக்ரே, தாருஸ்மான் குழுவின் யாஸ்மீன் சூகா, பி.பி.சீ ஊடகவியலாளர் பிரான்சிஸ் ஹரிசன், முன்னாள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரி கோர்டன் வைஸ், சார்ள்ஸ் பெட்ரீ ஆகியோர் இவ்வாறு ஆதரவளித்துள்ளனர். இந்தக் […] |
| பெண் ஒருவரை 15 ஆண்டுகளாக செக்ஸ் அடிமையாக வைத்திருந்த நபர் கைது Posted: 12 Feb 2014 03:43 AM PST
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்தவர் ரவூல் ஓசுவா(வயது 52). தனது உறவுக்கார பெண்ணுக்கு 12 வயதாக இருந்ததில் இருந்தே, வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். கட்டாயப்படுத்தி அங்கேயே தங்க வைத்து, தொடர்ந்து 15 ஆண்டுகளாக இவ்வாறு செய்து வந்துள்ளார். இதுபற்றி ரவூலின் குடும்பத்திற்கு தெரிந்திருந்தும், பொலிசில் புகார் செய்யவில்லை. இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 வயதாக இருக்கும் போது தப்பிச்செல்ல குடும்பத்தினர் உதவி செய்துள்ளனர். தப்பிச்சென்ற பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். வழக்குபதிவு செய்த பொலிசார் குறித்த நபரை கைது செய்தனர், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| குட்டை பாவாடைக்கு வருகிறது தடை Posted: 12 Feb 2014 03:41 AM PST பிரித்தானியாவில் உள்ள பள்ளி ஒன்று மாணவிகள் ஸ்கர்ட் அணிந்து வருவதற்கு தடை விதித்துள்ளது. பிரித்தானியாவின் நார்ஃபோக்கில் திஸ் உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவிகளுக்கு தற்போது ஸ்கர்ட் அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் முதல் இந்த தடை அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது, இதற்கு சில பெற்றோர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் 7 முதல் 11 வயது வரை உள்ள சிறுமிகள் மேக்கப் போட்டு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கைக்கு எதிரான பிரேரணை நிச்சயம் நிறைவேறும்: பிரித்தானியா நம்பிக்கை Posted: 12 Feb 2014 03:39 AM PST இலங்கைக்கு எதிராக எதிர்வரும் மார்ச்சில் ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை நிறைவேற்றப்படும் என்று பிரித்தானியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இந்தப் பிரேரணையை அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து சமர்ப்பிக்கவுள்ளன. தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழுவின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஸ்கொட் மற்றும் சியோப்ஹெய்ன் ஆகியோர், பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அந்த நாட்டின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய நாடுகளின் சிரேஸ்ட பிரதிநிதிகளை சந்தித்து பிரேரணை தொடர்பான பிந்திய தகவல்களை பெற்றுள்ளனர். போர்க்குற்றம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எவ்வித முன்னேற்ற […] |
| கோமாவில் இருக்கும் கணவரிடம் மணிக்கணக்கில் பேசும் மனைவி Posted: 12 Feb 2014 03:37 AM PST தற்போது கோமாவில் சிகிச்சை பெற்று வரும் மைக்கேல் ஷூமாக்கரிடம் அவரது மனைவி மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருக்கிறார். பார்முலா ஒன் கார் பந்தய வீரரான மைக்கேல் ஷூமாக்கர், கடந்த டிசம்பர் மாதம் 29ம் திகதி பிரான்ஸில் தனது மகனுடன் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டதால், பிரான்சில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதில் தலையில் பலத்த காயம்அடைந்த காரணத்தால், கோமா நிலையிலேயே இருந்து வருகிறார். இவரது உடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| பேஸ்புக்கில் வெளியாகிய புகைப்படத்தால் 16 வயது மாணவி தற்கொலை Posted: 12 Feb 2014 03:34 AM PST முகநூலில் பிரசுரமான புகைப்படம் ஒன்று காரணமாக குருநாகல் பிரதேசத்தில் மாணவியொருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். முகநூலில் பிரசுரமான புகைப்படம் காரணமாக மன வேதனை அடைந்த குறித்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 16 வயது பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.முகநூலில் பிரசுரமாகியிருந்த புகைப்படம் தொடர்பில் பாடசாலையில் விளக்கம் கோரப்பட்டதாகவும் பெற்றோரிடம் இவ்வாறு விளக்கம் கோரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முகநூலில் பிரசுரமான புகைப்படம் தொடாபில் பாடசாலையின் அதிபர் பெற்றோரை அழைத்து விளக்கம் கோரியுள்ளார். இதனைத் […] |
| ஜெனீவா தீர்மானத்தை ஆதரித்து யாழில் ஆர்ப்பாட்டம் Posted: 12 Feb 2014 03:32 AM PST எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் தொடர்பான கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகக் கொண்டு வரப்படும் தீர்மானத்தினை ஆதரித்து, எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன், வலி. வடக்கின் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தியும், காணாமற் போனோர்கள் மற்றும் இராணுவத்தில் சரணடைந்தவர்களை விடுவிக்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்படவுள்ளதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் தெரிவித்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல்; கட்சியினர், இடம்பெயர்ந்த மக்கள், காணாமல் போனோரின் உறவினர்கள், மனித உரிமைகள் […] |
| மூன்றாம் தரப்பின்றி முடியாது: சி.வி. Posted: 12 Feb 2014 03:30 AM PST
யாழ்ப்பாணத்திற்கு செவ்வாய்க்கிழமை (11) விஜயம் செய்த ஐ.நா.வின் ஆசிய பசுபிக் பிராந்திய அமைப்பின் துணை நிர்வாக இயக்குநர் ஹாலியாங் சூவுடனான சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்ததாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் முதலமைச்சர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில், 'ஐ.நா.வின் பிரதிநிதிகள் என்னைச் சந்தித்து கலந்துரையாடினர். என்னைச் சந்திப்பதற்கு முன்னர் ஆளுநரை அவர்கள் சந்தித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து வடமாகாண அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க வடமாகாண ஆளுநர் விருப்பம் தெரிவித்ததாக ஹாலியாங் சூ என்னிடம் கூறினார். இதன்போது, வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பான தரவுகளை வழங்குவதற்கு அரசாங்கத் திணைக்களங்கள் ஒத்துழைப்பதில்லை. இதனால், வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் பல நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக ஹாலியாங் சூவிடம் கூறினேன். இது தொடர்பில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியிடம் தாம் கலந்துரையாடியதாகவும் இந்த விபரங்களை அவர்கள் வழங்குவார்களெனத் தாம் நம்புவதாகவும் இதனால், எதிர்காலம் நம்பிக்கை மிக்கதாக இருக்குமென்று எதிர்பார்ப்பதாக அவர் என்னிடம் தெரிவித்தார். மேலும், தம்முடன் சேர்ந்து வடமாகாணத்தில் அபிவிருத்தித் திட்டங்களை ஏற்படுத்துவதற்கும் அதில் பங்குபற்றுவதற்கும் ஆளுநர் விருப்பம் தெரிவித்தாகவும் ஐ.நா. பிரதிநிதிகள் கூறினர். இந்த நிலையில் பாரிய வேலைத்திட்டங்களையும் பார்க்க மக்களுக்கான அன்றாடத் தேவைகள், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாடுகள் தொடர்பில் சிந்திக்க வேண்டியது அவசியமென்பதைப் பற்றி நாங்கள் (வடக்கு மாகாணசபை) கூடிய அக்கறையுடன் உள்ளோம். அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் அவ்வாறானதொரு எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினேன். மேலும், இவ்வாறாகச் சேர்ந்து செயற்பட வேண்டிய சூழல் ஏற்படும்போது நீங்கள் அதற்கு ஒத்துழைக்க வேண்டுமென்று ஐ.நா. பிரதிநிதிகள் என்னிடம் கேட்டுக்கொண்டதற்கு, அதில் எந்தவித தயக்கமும் இல்லையெனக் கூறினேன். ஆனாலும், எங்களுக்கு முக்கிய தேவையாகவிருப்பது மக்களுடைய நலன் மட்டுமே. மக்களுடைய நலன்கள் தொடர்பில் அக்கறை செலுத்த வேண்டுமென்பதே எமது நோக்கம் என்றும் தெரிவித்தேன். அரசாங்கம் சில நடவடிக்கைகளை ஏற்கெனவே திட்டமிட்ட முறையில் முன்னெடுத்து வருகின்றது. எங்களை அவற்றிலிருந்து தவிர்க்கும் நடவடிக்கையினையே மேற்கொண்டு வருகின்றமையை நான் காண்கிறேன். இந்தச் சூழலிலிருந்து புதியதொரு சூழலுக்கு மாறினால் அதனை வரவேற்கின்றேன். இதன் மூலமே உண்மையான இணக்கத்தை ஏற்படுத்த முடியுமென்றும் நான் கூறினேன்' என்றார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிக்குகள் சித்திரவதை செய்யப்படுவதை பார்த்து ரசித்த ரணி Posted: 12 Feb 2014 03:19 AM PST
இதனால் மக்கள் தேர்தலில் மக்களுக்கு நாட்டுக்கான தேசிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். பியகம தெல்கொட பிரதேசத்தில் நடைபெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மனித உரிமைகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பியும், அரசசார்பற்ற நிறுவனங்களும், சர்வதேசமும் பேசி வருகின்றன. ரணிலின் கைகளுக்கு ஆட்சி அதிகாரம் சென்றால் என்ன நடக்கும் என்பதை பியகம மக்களிடம் கேட்கவேண்டும். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு உதவிய யுவதிகளை தாய்மார் எவ்வளவு கஷ்டத்திற்கு மத்தியில் அன்று வீட்டில் வைத்து பாதுகாத்தனர். எத்தனை யுவதிகளை கொண்டு சென்றனர். அவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்களை உயிருடன் வைத்து அவர்களின் நகங்களை பிடிங்கினர். கண்களை பிடிங்கினர். காய்ச்சிய இரும்பு கம்பினால் சுட்டனர். பிக்குமாரை தர்ம சக்கத்தில் தெங்க விட்டு சித்திரவதை செய்து பழிவாங்கினர். பட்டலந்த சித்திரவதை முகாமில் இந்த சித்திரவதைகளை பார்த்து ரணில் மகிழ்ந்தது எமக்கு நினைவில் உள்ளது. அப்போது அவருக்கு புதினமாக ஆசை இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளை சித்திரவதை செய்து கொலை செய்ததது. எம்பிலிப்பிட்டி பாடசாலையின் மாணவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக நிலைப்பாடுகளை கொண்டிருப்பதாக கூறி, அவர்களை கைதுசெய்து சித்திரவதை செய்து கொலை செய்த பின்னர் சூரியகந்த பிரதேசத்தில் புதைத்தனர் என்றார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| தனித் தமிழீழம் கோரி ஐ.நா. தலைமைச் செயலகம் முன் போராட்டம்! Posted: 12 Feb 2014 03:17 AM PST சுதந்திர தமிழீழத்துக்கான வாக்கெடுப்பு நடத்துமாறு கோரி நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா. தலைமைச் செயலகம் முன்பாக இன்று புதன்கிழமை முற்றுகைப் போர் இடம்பெறவுள்ளதாக மே 17 இயக்கம் அறிவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 25 ஆவது கூட்டத் தொடர் அடுத்த மாதம் இடம்பெறவுள்ளது. இதன் போது இலங்கைக்கு எதிராகக் கடுமையான பிரேரணையயான்றைக் கொண்டுவரும் செயற்பாடுகளில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்தப் பிரேரணையில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் அமெரிக்கா ஆராய்ந்து வருகின்றது. இவ்வாறானதொரு நிலையிலேயே மே 17 […] |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |




