Tamil Star |
- ஹேம் பிரியர்களுக்காக அறிமுகமாகும் புத்தம் புதிய மவுஸ் (வீடியோ இணைப்பு)
- அப்பிளின் iOS 7.1 பதிப்பு அடுத்த மாதம் வெளியீடு
- நவீன தொழில்நுட்பத்துடன் HTC அறிமுகப்படுத்தும் M8 Mini ஸ்மார்ட் கைப்பேசி
- கற்பைக் காப்பாற்ற நடந்த போராட்டம்: காமவெறியனை கழுத்தை அறுத்து கொலை செய்த பெண்…..
- இந்தியாவின் வெற்றிக் கனவை தகர்த்த நடுவர்கள்?
- தோல்வி அடைவதிலும் சாதனை படைத்த டோனி
- நாங்களும் ஆடுவோம்ல…. குண்டு பெண்ணின் அட்டகாசமான நடனம்…..
- குட்டிதேவதையின் உச்சகட்ட ஆனந்தத்தின் கண்கொள்ளாக் காட்சி…..
- சுனாமியாக உருவெடுத்த பனிச்சரிவு……
- இதெல்லாம் ஒரு பொழப்பா?…. நீங்களே பாருங்க!…
- உலக மகா திறமைசாலியைப் பார்த்ததுண்டா?……
- குளிர் ஜாஸ்தியா இருக்கே! காரை கொளுத்திய நபர்
- ஜெனீவாவில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்யத் தயார் – மஹிந்த சமரசிங்க
- அமெரிக்காவை நோக்கி ஈரானிய யுத்த கப்பல்கள்
- அதிகம் சாப்பிட்டதால் வந்த ஆபத்து
- மன்னாரில் அரச- தனியார் போக்குவரத்து துறையினர்களுக்கிடையில் மோதல்!
- உயிரை காப்பாற்றிய சீரியல்
- நவனீதம்பிள்ளையின் அறிக்கை தயார்
- ஆபரேஷன் செய்யாமல் இதய சிகிச்சை: சாதனை படைத்த மருத்துவர்
- இந்த நாட்டை சிறியதாக்கி விட்டேனோ என்று தோன்றுகிறது!– ஜனாதிபதி
| ஹேம் பிரியர்களுக்காக அறிமுகமாகும் புத்தம் புதிய மவுஸ் (வீடியோ இணைப்பு) Posted: 10 Feb 2014 02:04 AM PST
Windows 8, Windows 7, Windows Vista மற்றும் Mac OSX 10.6.8 ஆகிய இயங்குதளங்களில் செயற்படக்கூடிய இந்த மவுஸ் 11 பொத்தான்களை உள்ளடக்கியுள்ளது. இரண்டு AA வகை மின்கலங்களில் 125 அல்லது 250 மணித்தியாலங்கள் வரை தொடர்ச்சியாக செயற்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் எடையானது 153g ஆகவும் காணப்படுகின்றது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| அப்பிளின் iOS 7.1 பதிப்பு அடுத்த மாதம் வெளியீடு Posted: 10 Feb 2014 02:02 AM PST அப்பிள் நிறுவனம் தனது புதிய iOS இயங்குதளத்தின் புதிய பதிப்பான iOS 7.1 இனை எதிர்வரும் மார்ச் மாதம் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில தினங்களுக்கு முன்னர் iOS 7.1 Beta 5 பதிப்பினை வெளியிட்டிருந்த நிலையிலேயே இத்தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்த iOS 7 ஆனது பல்வேறு வகையிலும் பயனர்களைக் கவர்ந்துள்ள நிலையில் புதிய வசதிகள் உள்ளடங்கலாக வெளிவரவுள்ள iOS 7.1 இயங்குதளத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| நவீன தொழில்நுட்பத்துடன் HTC அறிமுகப்படுத்தும் M8 Mini ஸ்மார்ட் கைப்பேசி Posted: 10 Feb 2014 02:02 AM PST
4.5 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது Quad-Core Snapdragon 400 Processor, பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் 16GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்டுள்ளதுடன் 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியனவும் தரப்பட்டுள்ளது. இக்கைப்பேசியானது கூகுளின் Android 4.4.2 KitKat இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கற்பைக் காப்பாற்ற நடந்த போராட்டம்: காமவெறியனை கழுத்தை அறுத்து கொலை செய்த பெண்….. Posted: 10 Feb 2014 02:01 AM PST |
| இந்தியாவின் வெற்றிக் கனவை தகர்த்த நடுவர்கள்? Posted: 10 Feb 2014 01:59 AM PST ஆக்லாந்து டெஸ்டில் நடுவர்களின் தவறான தீர்ப்பே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகிறது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஆக்லாந்தில் நடந்தது, இதன் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 503, இந்தியா 202 ஓட்டங்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் நியூசிலாந்து அணி 105 ஓட்டங்களுக்கு சுருண்டது, இதையடுத்து இந்திய அணிக்கு 407 ஓட்டங்கள் என்ற கடின இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் […] |
| தோல்வி அடைவதிலும் சாதனை படைத்த டோனி Posted: 10 Feb 2014 01:57 AM PST இந்திய கிரிக்கெட் அணி கடந்த இரண்டரை ஆண்டுகளாக வெளிநாடுகளில் தோல்வியை சந்தித்து வருகின்றது. நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் டோனி தலைமையிலான இந்திய அணி 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரை 0–4 என்ற கணக்கில் இழந்தது. 2 டெஸ்ட் போட்டித் தொடரில் ஆக்லாந்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்றது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் டெஸ்டில் சந்திக்கும் 10வது தோல்வியாகும். […] |
| நாங்களும் ஆடுவோம்ல…. குண்டு பெண்ணின் அட்டகாசமான நடனம்….. Posted: 10 Feb 2014 01:56 AM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
| குட்டிதேவதையின் உச்சகட்ட ஆனந்தத்தின் கண்கொள்ளாக் காட்சி….. Posted: 10 Feb 2014 01:54 AM PST
சிறு குழந்தை ஒன்று முதன் முதலாக மழைத்துளியில் நனைந்து உச்சக்கட்ட ஆனந்தத்தில் தத்தளிக்கும் காட்சியே இதுவாகும். This posting includes an audio/video/photo media file: Download Now |
| சுனாமியாக உருவெடுத்த பனிச்சரிவு…… Posted: 10 Feb 2014 01:53 AM PST
இத்தாலியின் தென் ரைரோலில் காணப்படும் Passiria பள்ளத்தாக்கில் பாரிய பனிப் பாறைச் சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 25 வரையான மக்கள் பலியாகியுள்ளனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| இதெல்லாம் ஒரு பொழப்பா?…. நீங்களே பாருங்க!… Posted: 10 Feb 2014 01:51 AM PST |
| உலக மகா திறமைசாலியைப் பார்த்ததுண்டா?…… Posted: 10 Feb 2014 01:50 AM PST |
| குளிர் ஜாஸ்தியா இருக்கே! காரை கொளுத்திய நபர் Posted: 10 Feb 2014 01:48 AM PST சீனாவில் முன்பின் தெரியாத நபர் ஒருவரின் காரை கொளுத்தி ஆனந்தமாக குளிர் காய்ந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நான்ஜிங் நகரத்தை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க வாலிபன் ஒருவன், நண்பர்களுடன் சேர்ந்து பாருக்கு சென்றுள்ளார். நன்கு குடித்துவிட்டு, வெளியே வந்த போது கடும் குளிர் வாட்டி வதைத்தது. எதையாவது கொளுத்தி குளிர் காய்ந்தால் இதமாக இருக்கும் என கருதி, பக்கத்தில் இருந்த கோரைப் பாயை எடுத்து வந்து விலையுயர்ந்த வோக்ஸ்வேகன் காரை […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஜெனீவாவில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்யத் தயார் – மஹிந்த சமரசிங்க Posted: 10 Feb 2014 01:46 AM PST
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தம்மை அமர்வுகளில் பங்கேற்குமாறு பணித்தால் பங்கேற்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் நடைபெற்ற முக்கியமான அமர்வுகளில் மஹிந்த சமரசிங்க இலங்கைப் பிரதிநிதிகள் குழுவினை வழிநடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் ஜெனீவா செல்லும் குழு தொடர்பில் ஜனாதிபதி அறிவிப்பார் எனவும், தேவை ஏற்பட்டால் பிரதிநிதிகள் குழுவிற்கு தலைமை வகிக்கத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முதலாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது முதல் இன்று வரையில் பாரியளவில் இலங்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சில நாடுகள் இலங்கையின் முன்னேற்றத்தை ஏற்றுக்கொள்ளாது, மத்திய கிழக்கில் சில நாடுகளில் மேற்கொண்டதனைப் போன்று இலங்கையையும் மாற்ற முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 40000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் எந்த காரணத்திற்காகவும் படையினரை காட்டிக்கொடுக்காது எனவும், நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த எவருக்கும் அனுமதியளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| அமெரிக்காவை நோக்கி ஈரானிய யுத்த கப்பல்கள் Posted: 10 Feb 2014 01:45 AM PST
பாரசீக வளைகுடாவில் அமெரிக்க கடற்படை கலங்கள் தரித்து நிற்பதற்கு பதிலடியாக ஈரானிய யுத்த கப்பல்களை அமெரிக்க கடற்படை எல்லையை நோக்கி நகருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தகவலை ஈரானிய கடற்படை அதிகாரியான அட்மிரல் அப்ஷின் ரெஸாயீ ஹதாத்தை மேற்கோள் காட்டி ஈரானின் பார்ஸ் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவுக்கு அருகிலிருந்து அத்திலந்திக் சமுத்திரத்தை நோக்கிய ஈரானிய யுத்த கப்பல்கள் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக அட்மிரல் ஹதாத் தெரிவித்துள்ளார். இந்நகர்வானது ஒரு சமிக்ஞையாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை வொஷிங்டனிலுள்ள தம்மை இனங்காட்ட விரும்பாத அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், ஈரானிய கப்பல்கள் அமெரிக்க கடல் எல்லையை நெருங்குவதாக கூறப்படுவது குறித்து சந்தேகம் தெரிவித்தார். ஆனால், சர்வதேச கடற்பரப்பில் இயங்குவதற்கு கப்பல்களுக்கு சுதந்திரம் உள்ளதாக அவர் தெரிவித்தாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| அதிகம் சாப்பிட்டதால் வந்த ஆபத்து Posted: 10 Feb 2014 01:43 AM PST
58 வயதான அப்பெண் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதில் அவரின் கீழ்வயிற்றில் கடும் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்த போது வயிறு வெடித்து வாயு வெளியாகி தீ பிழம்பு தோன்றியதாக கூறப்படுகிறது. அவரது வயிற்றில் உள்ள குடல் முழுவதையும் அகற்ற முடிவு செய்துள்ளதாக நான்ஜிங் டிரம் டவர் மருத்துவமனையை சேர்ந்த வாங் ஹாவ் என்ற மருத்துவர் தெரிவித்தார். அவரது வயிற்றில் இருந்த எதில் ஆல்கஹாலுக்கும், அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்பட்ட மின் அறுவை கத்திக்கும் ஏற்பட்ட தொடர்பினால் இச்சம்பவம் நடந்ததாக ஹாவ் மேலும் கூறினார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| மன்னாரில் அரச- தனியார் போக்குவரத்து துறையினர்களுக்கிடையில் மோதல்! Posted: 10 Feb 2014 01:41 AM PST மன்னார் நகரிலிருந்து வெளி மாவட்டங்களுக்கான போக்குவரத்து துறையில் அரச மற்றும் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இரு தரப்பினர்களுக்குமிடையில் திடீர்,திடீர் என முறுகல் நிலை ஏற்படுகின்றது. அவ்வப்போது இவர்களுக்கிடையில் முறுகல் நிலை, கைகலப்பு, பொலிஸ் முறைப்பாடு, விசாரணை என்று விரிவடைந்து பின் போக்குவரத்து அமைச்சு வரை நீடித்து செல்கின்றது. அண்மைக்காலமாக வடமாகாணத்தில் போக்குவரத்து சேவைகளில் ஈடுபட்டு வரும் தனியார் பஸ்கள் தமக்குள்ளும் இலங்கை போக்குவரத்து சபையுடனும் மோதிக் கொள்ளுகின்ற சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் […] |
| Posted: 10 Feb 2014 01:39 AM PST
ஜேர்மனியில் உள்ள மார்பர்க் பல்கலைக்கழக மருத்துவமனையில், இதய நோயால் பாதிக்கப்பட்ட 55 வயது நபர் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த போது, இதயத்தில் உள்ள ரத்தக் குழாய்கள் குறுகி ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு இதயம் செயலிழக்கும் நிலையில் இருந்தது. அதிக காய்ச்சல் மற்றும் தைராய்டு செயல் இழப்பினால் காது கேட்கும் திறனையும், கண் பார்வை திறனையும் இழந்திருந்தது தெரியவந்தது. இதுபோன்ற நோய் தாக்கிய நபரையும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் பற்றியும் கடந்த 2011ம் ஆண்டில் அமெரிக்க தொலைக்காட்சி ஹவுஸ் என்ற தொடரில் விளக்கப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில் நோயாளிக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்து ஆராயப்பட்டது. இவருக்கு கடந்த 2010ம் ஆண்டில் ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, பீங்கானால் செய்யப்பட்ட செயற்கை இடுப்பு எலும்பு பொருத்தப்பட்டு இருந்தது. இதில் உள்ள கோபால்ட் உடைந்து வேதிமாற்றம் அடைந்து, ரத்தத்தில் கலந்து விஷமாக மாறியதால் அவருக்கு மேற்கண்ட பாதிப்புகள் ஏற்பட்டதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து தற்போது அந்த நோயாளிக்கு மாற்று செயற்கை இடுப்பு எலும்பு பொருத்தப்பட்டு பின் இதயத் துடிப்பு சரியானது. ஹவுஸ் என்ற தொடரே இதற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| நவனீதம்பிள்ளையின் அறிக்கை தயார் Posted: 10 Feb 2014 01:35 AM PST
இலங்கை தொடர்பில், பத்தாயிரம் சொற்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை நவனீதம்பிள்ளை தயாரித்துள்ளார். எதிர்வரும் 26ம் திகதி நண்பகல் 12.00 மணியளவில் நவனீதம்பிள்ளை இந்த அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார். நவனீதம்பிள்ளை இந்த அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக ஐந்து அரச சார்பற்ற நிறுவனங்கள் இராணுவத்தினர் குற்றம் இழைத்தாக அறிவித்த அறிக்கை அனுப்பி வைத்துள்ளனர். அரச சார்பற்ற நிறுவனம் அறுபது சாட்சியாளர்கள் பற்றிய தகவல்களையும் வெளியிட்டுள்ளது. இதேவேளை, இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஸா பிஸ்வால் நவனீதம்பிள்ளையை சந்தித்து ஒரு மணித்தியாலம் பேசியுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆபரேஷன் செய்யாமல் இதய சிகிச்சை: சாதனை படைத்த மருத்துவர் Posted: 10 Feb 2014 01:34 AM PST அறுவைசிகிச்சை செய்யாமல் இதயத்தில் பேஷ்மேக்கர் கருவியை பொருத்தி மருத்துவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். இதயதுடிப்பை சீராக்குவதற்காக நோயாளியின் உடலில் பேஷ்மேக்கர் என்ற கருவி அறுவைசிகிச்சை மூலம் பொருத்தப்படுகிறது. ஆனால் சிகிச்சை ஏதும் செய்யாமல், இந்த கருவியை பொருத்தி அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளி மருத்துவர் விவேக் ரெட்டி சாதனை படைத்துள்ளார். நியூயார்க்கில் உள்ள தி மவுண்ட் சினாஸ் என்ற மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். தற்போது இதய நோயாளிகளின் உடலில் பொருத்தப்படும் 'பேஷ்மேக்கர்' ஈயத்தால் தயாரிக்கப்பட்டது. ஆனால் இது […] |
| இந்த நாட்டை சிறியதாக்கி விட்டேனோ என்று தோன்றுகிறது!– ஜனாதிபதி Posted: 10 Feb 2014 01:30 AM PST இந்த நாட்டை சிறியதாக்கி விட்டேனோ என்று தோன்றுகின்றது என ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ச தெரிவித்துள்ளார். நான் பேரூந்தில் பயணம் செய்தேன். சொற்ப நேரத்தில் தங்காலைக்கு சென்றேன். அதிவேக பாதையில் வேகமாக செல்ல முடிகின்றது. நாடு சிறியதாகி விட்டதாக தோன்றுகின்றது, நான் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த நாடு சிறியதாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். அம்பாந்தேட்டையில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி காரியாலயமொன்றை அங்குரார்ப்பம் செய்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து அதிவேக நெடுங்சாலையில் பேரூந்து […] |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


















