Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அபு சலீமிற்கு ரயிலில் திருமணம் நடந்ததா ?: விசாரணை நடத்த நீதிபதி உத்தரவு

Posted:

மும்பை: வழக்கு விசாரணைக்காக ரயிலில் அழைத்துச் செல்லப்பட்ட போது ரயிலிலேயே அபுசலீமிற்கு திருமணம் நடந்ததாக தகவல்கள் வெளியாயுள்ளன. இதுகுறித்து உரிய விசாரணைக்கு தடா கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி நிழல் உலக தாதா அபுசலீம் (46). இவன் மீது தடா கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. பாலிவுட் நடிகை மோனிகா பேடியுடன், தலைமறைவாக இருந்த இவனை, கடந்த 2005-ம் ஆண்டு போர்சுக்கல் நாட்டு சிறையில் இருந்து மும்பை போலீசார் நாடு கடத்தி வந்து மும்பை சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் வேறு வழக்கு ஒன்றின் ...

மை காயும் முன் மீண்டும் கடிதம்

Posted:

சென்னை:இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட, 87 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு மீண்டும் கடிதம் எழுதி உள்ளார்.நேற்று அனுப்பிய கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, தொடர்ந்து கடிதங்கள் எழுதினேன். எழுதிய மை காய்வதற்கு முன், 4ம் தேதி, எட்டு படகில், மீன் பிடிக்க சென்ற, ராமநாதபுரம், நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த, 30 மீனவர்களை, இலங்கை கடற்படை சிறை பிடித்தது.இலங்கை - தமிழக மீனவப் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையை, சீர்குலைக்கும் வகையில், இந்த நடவடிக்கை உள்ளது.இது தொடர்பாக, இலங்கை ...

மீடியாக்களை 'கவர்' பண்ணியது தப்பில்லை என்கிறார் பேனி

Posted:

பைசாபாத் : ஊடகங்களுக்கு, பணம் கொடுத்தது தப்பில்லை என, மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவர்களில் ஒருவருமான, பேனி பிரசாத் வர்மா கூறியுள்ளார்.அமைச்சர் பேனி பிரசாத் வர்மா, சர்ச்சையில் சிக்குவது ஒன்றும் புதிதல்ல. வழக்கமாக, சமாஜ்வாதி கட்சியையும், முலாயம் சிங் யாதவையும் கண்டித்து பேசும் அவர், இந்த முறை, மீடியாக்களுக்கு, கோடிகளை வாரிக்கொடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:என் தலைமையிலான உருக்கு அமைச்சகம், 10 ஆயிரம் கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. இப்படியிருக்கும் போது, மீடியாக்களுக்கு ஒரு கோடி ரூபாய் செலவிட்டுள்ளது, பெரிய ...

முறையற்ற மின் தடையால் பொதுமக்கள் கடும் அவதி: ஒரே நாளில் 1,270 மெகாவாட் மின் பற்றாக்குறை

Posted:

மின் தடை செய்வதில், ஒரே சீரான நிலை பின்பற்றப்படாதது, பொது மக்களிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில், மின் தேவை, உற்பத்தியை காட்டிலும் அதிகம். இதனால், நிலவும் மின் பற்றாக்குறை, மின் தடை மூலம் ஈடுசெய்யப்படுகிறது.ஐந்து மணி நேரம்:தமிழகத்தில், 2008ல் இருந்து, கடும் மின் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், தொழிற்சாலைக்கு, 40 சதவீதம்; வர்த்தக இணைப்புக்கு, 20 சதவீதம், மின் வெட்டு அமல்படுத்தப்பட்டது. குடியிருப்புகளுக்கு, காலை, 8:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, சுழற்சி முறையில், சென்னையில், இரண்டு மணி நேரமும், மற்ற இடங்களில், ஐந்து மணி நேரம் ...

வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றதில் மோசடியா?டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'

Posted:

புதுடில்லி : விதிமுறைகளை மீறி, வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கும், 'ஆம் ஆத்மி' கட்சி தலைவர்களுக்கும், 'நோட்டீஸ்' அனுப்ப, டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.டில்லியில், முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், அக்கட்சி தலைவர்கள், விதிமுறைகளை மீறி, வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றுள்ளதாகவும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யக் கோரியும், டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்த மனு மீதான முந்தைய விசாரணையின் போது, 'நிதி சேர்ந்த விவரம், வங்கி பண ...

பா.ஜ., தலைவர்களிடம் பிடிகொடுக்காத ராமதாஸ்: அன்புமணிக்கு ராஜ்யசபா 'சீட்' உறுதி கேட்டு அடம்

Posted:

'பா.ஜ., கூட்டணியில் சேர வேண்டும் எனில், பா.ம.க.,வுக்கு ஒன்பது தொகுதிகளை ஒதுக்க வேண்டும்; அன்புமணிக்கு ராஜ்யசபா, 'சீட்' வேண்டும்' என, அந்தக் கட்சியின் தலைவர், ராமதாஸ் அடம் பிடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.'தேசிய கட்சிகளுடனும், திராவிட கட்சிகளுடனும் கூட்டணி இல்லை' என்ற முடிவில், பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் இருந்தார். ஆனால், அவரின் மகனும், கட்சியின் இளைஞர் அணி தலைவருமான, அன்புமணி, 'நீங்கள், இந்த முடிவில் இருந்தால், வரும் தேர்தல்களில், டெபாசிட் கூற முடியாது; விரைவில் கட்சியே காணாமல் போய் விடும்' என, ராமதாசை எச்சரித்ததோடு, லோக்சபா தேர்தலில், பா.ஜ., உடன் கூட்டணி அமைக்க ...

ஜெ.,வை வீழ்த்த விஜயகாந்த் புது வியூகம்: பா.ஜ., கூட்டணியில் தி.மு.க., - தே.மு.தி.க., இடம் பெற யோசனை

Posted:

'முதல்வர் ஜெயலலிதாவின், பிரதமர் கனவை தகர்க்க வேண்டும்' என்பதில், விஜயகாந்த் தீவிரமாக உள்ளார். அதனால், பா.ஜ., - தி.மு.க., - தே.மு.தி.க., உட்பட, பல கட்சிகள் இணைந்து, பலமான கூட்டணியை அமைக்க வேண்டும் என, பா.ஜ., மேலிடத் தலைவர்களிடம், தன் மைத்துனர், சுதீஷ் மூலம், புது யோசனை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைக்க, தி.மு.க.,வும், பா.ஜ.,வும் முயற்சித்து வருகின்றன. இக்கட்சி களிடம், உளுந்தூர்பேட்டை மாநாட்டில், முடிவை அறிவிப்பதாக கூறிய, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், இதுவரை எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.பிடி ...

பதில் உரையா; பழி உரையா?கருணாநிதி கேள்வி

Posted:

சென்னை : கவனர் உரையில், முதல்வர் ஜெயலலிதா அளித்திருப்பதற்குப் பெயர் பதில் உரையா; பழி உரையா என்பதை, தமிழக மக்கள் முடிவு செய்து கொள்ளட்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை: 'தமிழகத்தில், விரைவில் மின்வெட்டு இருக்காது' என, முதல்வர் ஜெயலலிதா பேசியிருக்கிறார். இந்த ஆட்சியில், பல கோடி ரூபாய் முதலீட்டில், துவங்கப் போவதாக அறிவித்த, பல மின் திட்டங்களும், சர்வதேச ஒப்பந்தப் புள்ளி என்று கூறப்பட்டு, எதுவும் நடைமுறைக்கு வரவில்லை.இந்த அழகில் தான் முதல்வர், 'தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு இருக்காது' என, திசை திருப்பும் வகையில், ...

பார்லி.,யில் 11 கட்சிகள் இணைந்து புதிய அமைப்பு உதயம்

Posted:

லோக்சபா தேர்தலில், கட்சிகளின் கூட்டணி எவ்வாறு அமையப் போகின்றன என்ற எதிர்பார்ப்புகள், இருந்து வரும் நிலையில், பார்லிமென்ட்டிற்குள், காங்கிரஸ் மற்றும் பா.ஜ., அல்லாத கட்சிகளின் கூட்டமைப்பு நேற்று உருவாகியுள்ளது. சபையில், ஒட்டு மொத்தமாக குரல் கொடுப்பதற்காக, ஒரே இடத்தை ஒதுக்கி தருமாறு, இந்த கட்சிகள், சபாநாயகருக்கு, கடிதமும் எழுதியுள்ளன.காங்., - பா.ஜ.,வுக்கு மாற்று:காங்கிரஸ் மற்றும் பா.ஜ., அல்லாத கட்சிகள் இணைந்து, கூட்டணி அமைத்து, மூன்றாவது அணி உருவாகுமா இல்லையா என்பது குறித்து, பல்வேறு எதிர்பார்ப்புகளும், யூகங்களும் நிலவி வருகின்றன. ...

3வது அணி இந்த தேர்தலோடு காணாமல் போய் விடும்: கோல்கட்டா பிரமாண்ட கூட்டத்தில் மோடி பேச்சு

Posted:

கோல்கட்டா: இந்திய அரசியலில் மூன்றாவது அணியால், எதுவும் சாதிக்க முடியாது. இந்த தேர்தலுடன், இந்த அணி காணாமல் போய்விடும். அதற்கு, விடை கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி நேற்று பேசினார்.பா.ஜ., பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, நாடு முழுவதும், லோக்சபா தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசி வருகிறார். முதல் முறையாக, மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் நடந்த கூட்டத்தில், நேற்று அவர் பங்கேற்றார். அவர் பேசியதாவது:கடந்த சில நாட்களாக, மூன்றாவது அணி குறித்த பேச்சு எழுந்துள்ளது. பல ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™