Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் உற்சாகம்: ரூ.70 லட்சம் வரை செலவு உச்சவரம்பு அதிகரிப்பு

Posted:

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், பிரசாரத்துக்காக செலவு செய்யும் தொகையை, 40 லட்சத்திலிருந்து, 70 லட்சம் ரூபாயாக அதிகரிக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், உற்சாகம் அடைந்துள்ளனர்.தேர்தல்களில் பண பலத்தை கட்டுப்படுத்தும் வகையில், தலைமை தேர்தல் கமிஷன், பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தல் பிரசாரத்துக்கு, அதிகபட்சமாக எவ்வளவு செலவிட வேண்டும் என்ற உச்சவரம்பை, தேர்தல் கமிஷன் ...

ஆட்சி முடியும் தறுவாயில் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை: 10 சதவீதம் அதிகரிப்பால் அகவிலைப்படி 100 சதவீதமாக உயர்வு

Posted:

புதுடில்லி: தேர்தல் நெருங்குவதையொட்டியும், மத்தியில் ஆளும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பதவிக் காலம், அடுத்த இரு மாதங்களில், முடிவடைய உள்ளதாலும், மத்திய அரசு ஊழியர்களுக்கான பல்வேறு சலுகை அறிவிப்புகளை, அரசு வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதுடன், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், மாத ஓய்வூதியத்தை, குறைந்தபட்சம், 1,000 ரூபாய் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.பல திட்டங்களுக்கு ஒப்புதல்: இன்னும் ஒரு சில வாரங்களில், லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளிவரவுள்ளது. ...

காங்.,குக்கு எதிரான அலை 'சுனாமி'யாக மாறி சுருட்டி அடிக்கும்! நரேந்திர மோடி ஆவேசம்

Posted:

குல்பர்கா: ''நாட்டில், காங்கிரசுக்கு எதிரான புயல் உருவாகியுள்ளது. விரைவில், இந்த புயல், 'சுனாமி'யாக மாறும்; அதில், காங்கிரஸ் காணாமல் போகும்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி கூறினார்.மோசமான நிலை: கர்நாடக மாநிலம், குல்பர்காவில், நேற்று, பா.ஜ., லோக்சபா தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடந்தது. அதில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார்.மோடி பேசியதாவது: லோக்சபா தேர்தலுக்கான தேதி, இன்னும் அறிவிக்கப்படாத நிலையிலும் கூட, நாடு முழுவதும், காங்., கட்சிக்கு எதிரான புயல் வீசத் ...

மின் கட்டணம் பாக்கி வைத்துள்ள மன்மோகன்

Posted:

புதுடில்லி: 'பிரதமர் மன்மோகன் சிங், டில்லியில் உள்ள தன் வீட்டுக்கான, மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணத்தில், 3,000 ரூபாய் பாக்கி வைத்துள்ளார்' என, தகவல் வெளியாகியுள்ளது.டில்லி மாநகராட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

ரூ.3,000 பாக்கி: பிரதமர் மன்மோகன் சிங், டில்லி, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள, 7ம், எண் வீட்டில் வசித்து வருகிறார். இந்த வீட்டுக்கு, மாநகராட்சி சார்பில், தண்ணீர் மற்றும் மின் வினியோகம் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கான கட்டண ரசீதுகள், அவரின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், பிரதமர் வீட்டுக்கு, ...

தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ்? கருணாநிதியை சரிக்கட்ட புது திட்டம்

Posted:

தேர்தலுக்கு முன்போ அல்லது பின்போ, பா.ஜ., ஆதரவு நிலையை தி.மு.க., எடுக்காமல் இருக்க வேண்டுமானால், இப்போதே, காங்கிரசை கூட்டணிக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என, தி.மு.க., அணியில் உள்ள கட்சிகள், காய் நகர்த்த துவங்கி விட்டன.அ.தி.மு.க.,வை தவிர்த்து, வேறு எந்த கட்சியும் கூட்டணியை முடிவு செய்யாத நிலையே, தமிழக அரசியல் வட்டாரத்தில் காணப்படுகிறது. காங்கிரசுடன் கூட்டு இல்லை என்பதை மட்டும் தீர்மானித்துள்ள, தி.மு.க., தலைமை, தன்னுடன் உள்ள தலித் மற்றும் முஸ்லிம் இயக்கங்களுடன் மட்டுமே, தேர்தலை சந்திப்பதா அல்லது கூட்டணிக்கு, வேறு கட்சி களை இழுப்பதா என்ற யோசனையில் உள்ளது. ...

ஊழலில் தாண்டவமாடும் இந்தியா: அமெரிக்க பார்லிமென்ட்டில் அறிக்கை

Posted:

வாஷிங்டன்: 'இந்தியாவில் அனைத்து மட்டங்களிலும், ஊழல் பரவியுள்ளது' என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.பல்வேறு நாடுகளில் உள்ள மனித உரிமை நடைமுறைகள் குறித்து, அமெரிக்க பார்லிமென்ட்டில், அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர், ஜான்கெர்ரி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.அதில், அமைச்சர் ஜான்கெர்ரி கூறியுள்ளதாவது: இந்தியாவில், நீதித்துறை முதல் அனைத்து மட்டங்களிலும் ஊழல் பரவியுள்ளது. ஊழலை தடுக்க, சட்டம் இருந்தும், அந்நாட்டு அரசு, அதை தீவிரமாக அமல்படுத்தவில்லை. ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரமுகர்கள், எளிதாக தண்டனையிலிருந்து விலக்கு பெற்று ...

ஜெ., வழக்கில் அரசு வழக்கறிஞருக்கு நீதிபதி 'டோஸ்': வழக்கை தாமதப்படுத்த முயற்சி செய்வதாக கோபம்

Posted:

"தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை தாமதப்படுத்த, அரசு வழக்கறிஞர், பவானி சிங் முயற்சிக்கிறார்,'' என, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஜான் கூறினார்.தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில், பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. நேற்றைய விசாரணையின் போது, சுதாகரன் ஆஜராகியிருந்தார்.'வைரஸ்' காய்ச்சல்: ஜெயலலிதாவுக்கு அரசு பணி, சசிகலாவுக்கு, 'வைரஸ்' காய்ச்சல், இளவரசிக்கு நீரிழிவு நோய் இருப்பதால், நீதிமன்றத்தில், அவர்களால் ஆஜராக முடியவில்லை என, அவர்கள் ...

திருமண நிதி உதவி திட்டத்தில் காலாவதியான 'காசோலை'

Posted:

தேனி: தமிழக அரசு சார்பில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, டிகிரி படித்த ஏழை பெண்களுக்கு, திருமண நிதி உதவியுடன், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டப்படி, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்திருந்தால், 25 ஆயிரம் ரூபாயும், 4 கிராம் தங்கமும் வழங்கப்படும். பட்டப்படிப்பு முடித்திருந்தால், 50 ஆயிரம் ரூபாயும், 4 கிராம் தங்கமும் வழங்கப்படும். லோக்சபா தேர்தல் வர இருப்பதையொட்டி, தேனியில் கடந்த வாரம், பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில், 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றம் 4 கிராம் தங்கம் வழங்கப்பட்டது.தேனியில் பிப்., 11 ல், நடந்த ...

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: முதல்வர் ஜெ., கடும் கண்டனம்

Posted:

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு, முதல்வர் ஜெயலலிதா, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கை: பெட்ரோல், டீசல் விலையை, மத்திய அரசின், எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியிருப்பது, தட்டிக் கேட்க ஆளில்லாத, சண்ட பிரசண்டனாக, தன்னை மத்திய காங்கிரஸ் அரசு, கருதி உள்ளதாகவே தோன்றுகிறது. இந்த விலை உயர்வு, நாட்டின் பொருளாதாரத்தை, மேலும் சீரழிக்கும். விலை உயர்வுக்கு, கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். விலை உயர்வால், லாரி மற்றும் தனியார் வாகனங்களுக்கான, கட்டணம் உயரும். காய்கறிகள், பழங்கள், அத்தியாவசியப் பொருட்கள் உட்பட, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™