Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.,

Posted:

புதுடில்லி: லோக்சபா தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பா.ஜ., வெளியிட்டுள்ளது. மொத்தம் 54 இடங்களுக்கான வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டில்லியில் நடந்த பா.ஜ., மத்திய தேர்தல் கமிட்டியின் 2 மணி நேர ஆலோசனைக்குப்பின் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலின்படி, கட்சியின் முன்னாள் தலைவர் நிதின் கட்காரி, நாக்பூர் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார். கோபிநாத் முண்டே மகாராஷ்டிர மாநிலம் பீட் தொகுதியிலிருந்தும், யுவ மோர்ச்சா தலைவர் அனுராக் தாகூர் ஹமீர்புர் தொகுதியிலிருந்தும் போட்டியிடுகின்றனர். பா.ஜ., நேற்று வெளியிட்ட வேட்பாளர் ...

வர்த்தகத்தை எளிதாக்கும் ஜி.எஸ்.டி., வரிக்கு மோடி ஆதரவு: தமிழக அரசு தனது எதிர்ப்பை கைவிடுமா?

Posted:

புதுடில்லி: ''அடுத்து வரும், பா.ஜ., ஆட்சியில், வர்த்தகத்தை எளிதாக்கும், வர்த்தகர்களுக்கு நன்மை பயக்கும், ஜி.எஸ்.டி., வரிமுறையை அமல்படுத்து வோம்,'' என, டில்லியில் நேற்று நடந்த, வர்த்தகர்கள், பட்டய கணக்காயர்கள் மாநாடுகளில், பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி பேசினார். நாட்டுக்கு அவர் வைத்துள்ள, பொருளாதார திட்டத்தையும் வரையறுத்து வெளிப்படுத்தினார்.'ஜி.எஸ்.டி., வரி அமல்படுத்தப்பட்டால், வருமான இழப்பு ஏற்படும்' என, தமிழக அரசு, எதிர்த்து வருகிறது. அதே போல், தற்போது, தேசிய அளவில் உருவாக்கப்பட்டு உள்ள அரசியல் கூட்டணியான, மூன்றாவது ...

தே.மு.தி.க., - பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் முதல்வருடன் சந்திப்பு: 'இழுப்பு' வேலையை தொடர்கிறது ஆளுங்கட்சி

Posted:

சென்னை: தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., அருண் சுப்ரமணியன், பா.ம.க., - எம்.எல்.ஏ., கலையரசு ஆகியோர் நேற்று, முதல்வரை சந்தித்தனர். இதன் மூலம், தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை, எட்டாக உயர்ந்துள்ளது. மேலும் சில எம்.எல்.ஏ.,க்கள், விரைவில் முதல்வரை சந்திப்பர் என கூறப்படுகிறது. இது, தே.மு.தி.க.,வில், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர்ராஜன், அருண் பாண்டியன், மைக்கேல் ராயப்பன், தமிழழகன், சுரேஷ்குமார், சாந்தி, மா.பாண்டியராஜன் ஆகியோர், தே.மு.தி.க., தலைமைக்கு எதிர்நிலை எடுத்து, முதல்வரை சந்தித்தனர். தொகுதி பிரச்னைகளுக்கு, தீர்வு காண, ...

அ.தி.மு.க., அலுவலகத்தில் 'அம்மாஜி ஜிந்தாபாத்' கோஷம்

Posted:

சென்னை: அ.தி.மு.க.,வில் இணைவதற்காக, வட மாநிலங்களில் இருந்து வந்தவர்கள், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், 'அம்மாஜி ஜிந்தாபாத்' என, எழுப்பிய கோஷம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களை, உள்ளூர் அ.தி.மு.க.,வினர் வியப்போடு பார்த்தனர்.அ.தி.மு.க.,வில், மாற்று கட்சியினரை இணைக்கும் விழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம், காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகள், அ.தி.மு.க.,வில் இணைந்தனர். நேற்று, கட்சி தலைமை அலுவலகத்தில், குஜராத், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர்கள், தமிழகத்தில், தே.மு.தி.க., - காங்கிரஸ் - தி.மு.க., - பா.ம.க., நிர்வாகிகள் என, 501 ...

ராஜ்நாத் சிங்குடன் சுதீஷ் சந்திப்பு: பா.ஜ., தலைவர்கள் டில்லியில் முகாம்

Posted:

பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த பிறகே, கூட்டணி முடிவை அறிவிப்போம் என, தே.மு.தி.க., திடீர் நிபந்தனை விதித்துள்ளதை அடுத்து, அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக, தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், நேற்று டில்லி புறப்பட்டுச் சென்றார். தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், தமிழக பா.ஜ., பொதுச் செயலர் மோகன்ராஜூலு ஆகியோர் இன்று டில்லி செல்கின்றனர். தே.மு.தி.க., தரப்பில், அதன் இளைஞரணி தலைவரும், விஜயகாந்தின் மைத்துனருமான, சுதீஷ் டில்லி செல்வார் என, எதிர்பார்க்கப்படுகிறது.தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ராஜ்நாத் சிங், நேற்று டில்லியில் இல்லை. இன்று டில்லி ...

முத்த மழையில் நனைந்த காங்., துணை தலைவர் ராகுல்

Posted:

ஜோர்ஹத்: லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக, வடகிழக்கு மாநிலங்களில், இரண்டு நாள், பிரசாரம் மேற்கொண்ட, காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல், 43, ஜோர்ஹத் என்ற இடத்தில், நேற்று முன்தினம், பெண்கள் ஏராளமானோரை சந்தித்தார். 'பெண்களுக்கு அதிக அதிகாரம் வழங்க வேண்டும்; அப்போது தான், நாடு, சூப்பர் பவர் நாடாகும்' என, அந்த கூட்டத்தில், உணர்ச்சி வசப்பட்டவராக, ராகுல் பேசிக் கொண்டிருந்தார். நடுநாயகமாக அவர் அமர்ந்திருக்க, அவரைச் சுற்றிலும் ஏராளமான பெண்கள் அமர்ந்து இருந்தனர். ராகுலின் பேச்சில் ஈர்க்கப்பட்ட பெண்கள் சிலர், அவரை, திடீரென மொய்த்தனர். ஒரு பெண், ஓடிவந்து, அவர் கையைப் ...

எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கம்: அடிக்கல் நாட்டு விழாவிற்கு அவசரம் ஏன்

Posted:

சென்னை: விலை இழுபறி காரணமாக, கடந்த, 11 மாதங்களாக, எண்ணூர் விரிவாக்க அனல்மின் நிலைய பணிகள் துவங்குவதில், தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று, அவசர கதியில், அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட்டு உள்ளது.திருவள்ளூர் மாவட்டம், எண்ணூரில், 4,956 கோடி ரூபாயில், 660 மெகாவாட் திறன் கொண்ட, அனல்மின் நிலையம் விரிவாக்கப் பணிக்கு, முதல்வர் ஜெயலலிதா, நேற்று தலைமைச் செயலகத்தில், அடிக்கல் நாட்டினார். இந்த அனல்மின் திட்டம், தமிழகத்தில் நிறுவப்படும், முதல் மிக உயரிய அனல்மின் திட்டமாகும் இதற்கான பணி ஆணையை, அரியானா மாநிலம், குர்கானில் செயல்படும், லான்கோ இன்ப்ரா டெக் நிறுவனத்தின் ...

ராகுலை விட மோடிக்கு ஆதரவு அதிகம்: அமெரிக்க நிறுவனம் தகவல்

Posted:

வாஷிங்டன்: நடைபெற உள்ள இந்திய பார்லிமென்ட் தேர்தலில், காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுலை விட, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடிக்கு அதிக ஆதரவு உள்ளதாக, அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.லோக்சபாவுக்கான தேர்தல், விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அனைத்து கட்சிகளும், தொகுதி பங்கீட்டுக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. பிரதான கட்சிகள் பிரசாரத்தில் இறங்கிவிட்டன. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள, 'பியூ' கருத்துக் கணிப்பு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவின், பல்வேறு மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் ...

ஒரு பக்கம் சலுகை; மறுபக்கம் மதிப்பெண் பறிப்பு: டி.இ.டி., தேர்வர்கள் குமுறல்

Posted:

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), தேர்ச்சிக்குரிய மதிப்பெண்ணில், 5 சதவீத குறைப்பு சலுகையை வழங்கிவிட்டு, மறுபக்கம், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளவில், 3 மதிப்பெண்ணை குறைத்திருப்பது, தேர்வர்கள் மத்தியில், குமுறலை ஏற்படுத்தி உள்ளது.55 சதவீதம்: டி.இ.டி., தேர்வில், மொத்தம் உள்ள, 150 மதிப்பெண்ணில், தேர்ச்சி பெற, 60 சதவீதமான, 90 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற விதிமுறை முதலில் இருந்தது. சமீபத்தில், இந்த அளவை, இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, 55 சதவீதமாக குறைத்து, முதல்வர் அறிவித்தார். 5 சதவீத சலுகையினால், 82 மதிப்பெண் பெற்றவரில் இருந்து, அனைவரும், தேர்ச்சி பெற்றனர். ...

காங்.,குடன் சமுதாய கூட்டணிக்கு பா.ம.க., அச்சாரம்: பா.ஜ., அணியில் இருந்து விலக முடிவா?

Posted:

சமுதாய கூட்டணியுடன், காங்கிரஸ் கட்சியும் கூட்டணியாக இணைந்து, தேர்தலை சந்திக்க வேண்டும் என விரும்பி, பா.ம.க., திடீரென காய்நகர்த்த துவங்கியுள்ளது, பா.ஜ., தரப்பில், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்களின் இந்த முயற்சிக்காக, டில்லியில் தன் மாமனார் கிருஷ்ணசாமியுடன் முகாமிட்டு, காங்கிரஸ் தலைவர்களுடன் அன்புமணி, தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக, தகவல் வெளியாகி இருக்கிறது.நிர்பந்தம் செய்ய...: தேசிய கட்சிகளுடனும், திராவிட கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது என்று அறிவித்து, முதன் முதலாக தேர்தல் களத்துக்குச் சென்ற பா.ம.க., ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™