Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சோனியாவை 'சரிகட்டினால்' பேரம் முடியும்: ஹெலிகாப்டர் ஊழலில் 'திடுக்' தகவல் வெளியீடு

Posted:

புதுடில்லி:'வி.வி.ஐ.பி.,கள் பயணிப்பதற்கான ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை, இந்தியாவிடமிருந்து பெறுவதற்கு, காங்., தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சரிகட்ட வேண்டும்' என, இடைத்தரகர் ஒருவர், ஹெலிகாப்டர் நிறுவன அதிகாரியிடம் தெரிவித்ததாக வெளியாகியுள்ள தகவல், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜனாதிபதி, பிரதமர் போன்ற, வி.வி.ஐ.பி.,கள் பயணிக்க, அதிநவீன சொகுசு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட, ஹெலிகாப்டர்கள் வாங்க, மத்திய அரசு முடிவு செய்தது. 2010ல் ஒப்பந்தம்:இத்தாலியைச் சேர்ந்த, 'அகஸ்டா வெஸ்ட்லாண்ட்' என்ற, ஹெலிகாப்டர் நிறுவனத்திடம், 12 ஹெலிகாப்டர்கள் ...

பிரித்தாளும் அரசியல் என்ற விஷ விதையை தூவுவது காங்.,: நரேந்திர மோடி ஆவேசம்

Posted:

மீரட்: ''நாட்டு மக்களிடையே, விஷ விதையைத் தூவுவது காங்கிரஸ் தான். பிரித்தாளும் அரசியல் நடத்தி, அதன் பலனை, அந்த கட்சி அனுபவித்து வருகிறது,'' என, காங்., தலைவர் சோனியாவுக்கு, பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி, பதிலடி கொடுத்துள்ளார்.பா.ஜ., சார்பில், உ.பி., மாநிலம் மீரட்டில், நேற்று, பிரமாண்ட பொதுக் கூட்டம் நடந்தது. இதில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பங்கேற்றார்.சோனியா குற்றச்சாட்டு: மீரட் அருகேயுள்ள, முசாபர் நகரில், சமீபத்தில் நடந்த கலவரம் காரணமாக, மோடியின் கூட்டத்துக்கு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் ...

ஆறு மாதங்களில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் 'லக்': அகவிலைப்படியை தேர்தலுக்கு முன் உயர்த்த முடிவு

Posted:

புதுடில்லி:மத்திய அரசு ஊழியர்களுக்கான, அகவிலைப்படி உயர்வு, அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 10 சதவீதம் உயர்த்தப்படும் என தெரிகிறது. இதனால், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 100 சதவீதம் ஆக உயரும். லோக்சபா தேர்தலுக்கு முன் தரப்படும் இந்த உயர்வு, மத்திய அரசு ஊழியர்களை மகிழ்விக்கும் தகவலாகும்.ஆறு மாதத்திற்கு ஒரு முறை:மத்திய அரசு ஊழியர்களுக்கு, அடிப்படை சம்பளத்துடன், அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும். இது, ஆறு மாதத்திற்கு, ஒரு முறை அளிக்கப்படும். கடந்தாண்டு, செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டு, அந்த உயர்வு ஜூலை ...

ராகுல் கனவுகளும் ஆசைகளும் நிறைவேறுமா?

Posted:

லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன், காங்., கட்சியை, அக்கட்சியின் துணைத் தலைவர், மிகுந்த இக்கட்டில் வைத்துவிடுவார் என்ற நிலைக்கு, தினமும் அரசியல் திருப்பங்கள் நடக்கின்றன.கட்சியின் தேர்தல் அறிக்கை உருவாக்க, அவர் பெண்கள் குழுவைச் சந்தித்து கருத்து கேட்டார்; மாணவ, மாணவியரிடம் கருத்து கேட்டார்; மத்திய வருவாய்ப் பிரிவினரிடமும் கருத்து கேட்டார். அத்துடன், அவர் தனது அரசியல் வாழ்வில், புதுமையாக தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு நீண்ட பேட்டியும் அளித்து, அதிக சர்ச்சைகளை ஏற்படுத்திவிட்டார்.இந்திரா விளக்கம்:இந்தியா என்பது, சோஷலிச ...

மாநில ஊழல்வாதிகள் பட்டியலை வெளியிடுகிறது 'ஆம் ஆத்மி'

Posted:

புதுடில்லி:தேசிய அரசியலில், ஊழல்வாதிகள் பட்டியலை வெளியிட்ட, 'ஆம் ஆத்மி' கட்சியை சேர்ந்த, டில்லி, முதல்வர், கெஜ்ரிவால், மாநிலங்களின் ஊழல் தலைவர்கள் பட்டியலை விரைவில் வெளியிடப் போவதாகவும், அந்த தலைவர்களுக்கு எதிராக, ஆம் ஆத்மி கட்சியினர், வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளது.வெற்று அறிவிப்புகள்:ஆட்சிக்கு வருவதற்கு முன், 'அதைச் செய்வோம்; இதைச் செய்வோம்' என, டில்லி மக்களுக்கு வாக்குறுதி அளித்த, ஆம் ஆத்மி கட்சி, ஆட்சிக்கு வந்த பிறகு, அந்த அறிவிப்புகளை, வெற்று அறிவிப்புகளாகவே வைத்துள்ளது. பெரும்பாலான அறிவிப்புகள் ...

நேர்காணலை துவக்கினார் ஜெ.,: குடும்ப விவரம், கட்சி பதவி, தொழில் என்ன?

Posted:

லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடுவோரை தேர்வு செய்வதற்கான, நேர்காணல் நேற்று துவங்கியது. முதல் நாளில், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் போட்டியிட, 'சீட்' கேட்டு விண்ணப்பித்த ஏழு பேரிடம், முதல்வர் ஜெயலலிதா நேர்காணல் நடத்தினார்.லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகளில், தேர்தல் கமிஷன் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. எப்போது, வேண்டு மானாலும், தேர்தல் தேதி, அறிவிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. அதனால், தேர்தலுக்கான கூட்டணி முயற்சிகளில், அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அ.தி.மு.க.,வை பொறுத்த வரை, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ...

அழகிரி மவுனம் ஏன்? பிப்., 8 வரை 'சஸ்பென்ஸ்'

Posted:

மதுரை: தி.மு.க., தென் மண்டல அமைப்புச் செயலர் பதவியை பறிகொடுத்த அழகிரி, தன் பிறந்த நாள் விழாவிற்கு பின், 'ஆழ்ந்த' மவுனம் காத்து வருவது, அரசியல் வட்டாரத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.'போஸ்டர்' பிரச்னையால் ஆதரவாளர்கள் நீக்கம், நகர தி.மு.க., பொறுப்புகள் கூண்டோடு பறிப்பு, நிர்வாகிகளுக்கு கட்சி விதித்த கட்டுப்பாடு என, அடுத்தடுத்த இடையூறுகளையும் தாண்டி, ஜன., 30ல், தன் பிறந்த நாளை, உற்சாகமாக நடத்தி முடித்தார் அழகிரி.தலைமைக்கு அதிர்ச்சி:அனைத்து மாவட்டங்களில் இருந்தும், மாவட்ட செயலர்கள் மீதான அதிருப்தியாளர்கள், பிறந்த நாள் விழாவில் ஒன்று கூடியதால், ...

தொகை அறிய காத்துள்ளேன்: கருணாநிதி தகவல்

Posted:

சென்னை: 'திருச்சியில் நடக்கும், தி.மு.க., 10வது மாநாட்டின் செலவு போக, மீதித் தொகையை அறிந்து கொள்ள காத்திருக்கிறேன்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை: தி.மு.க.,வை பொறுத்தவரை ஒவ்வொரு மாநாட்டிலும், அந்த மாநாட்டில் வந்த வரவு, செலவு எவ்வளவு என்ற கணக்கைக் கூறி, மீதப்பட்ட தொகையை வெளிப்படையாக அறிவிப்பது வழக்கம்.கடந்த, 1951ம் ஆண்டு, முதல் மாநில மாநாடு சென்னையில் நடந்த போது, மிச்சப்பட்ட தொகை, 1.10 லட்சம் ரூபாய்.கடந்த, 1996ம் ஆண்டு, இதே திருச்சியில், தி.மு.க., எட்டாவது மாநில மாநாடு, நேரு வரவேற்பு குழு தலைவராக இருந்து நடந்த போது, மாநாடு நிதி வசூல் மொத்த தொகை, ...

தே.மு.தி.க., தனித்து போட்டி? மாநாட்டில் விஜயகாந்த் பேச்சு

Posted:

உளுந்தூர்பேட்டை : 'தேர்தலில் தனித்து போட்டியிடவே தொண்டர்கள் விரும்புகிறார்கள்; கூட்டணி வேண்டாம் என்கிறார்கள். கடந்த தேர்தலில் கூட்டணி வைத்து, அதனால் பட்ட அடி போதும்' என, உளுந்தூர்பேட்டையில் நடந்த தே.மு.தி.க. மாநாட்டில் விஜயகாந்த் தெரிவித்தார்.விழுப்புரம், உளுந்தூர்பேட்டையில் நேற்று தே.மு.தி.க., நடத்திய 'ஊழல் எதிர்ப்பு மாநாட்டில்" தமிழகம் முழுவதும் இருந்து பெருந்திரளான தொண்டர்கள் பங்கேற்றனர். இம்மாநாட்டில் விஜயகாந்த் பேசியதாவது:விழுப்புரம் மாவட்டத்தில் கடல் இல்லை என்று நினைத்தேன். என் மனைவி பிரேமலதா கூறியதுபோல் உளுந்தூர்பேட்டை அருகில் ...

லோக்பால் விளம்பரத்தில் விதிமுறைகள் மீறவில்லை: பிரதமர்

Posted:

புதுடில்லி: "அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் ஊழல்களை விசாரிக்கும் லோக்பால் அமைப்புக்கு, தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு குறித்த விளம்பரத்தில், விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக, பா.ஜ., தலைவர், அருண் ஜெட்லி புகாருக்கு, பிரதமர் மறுப்பு தெரிவித்து உள்ளார்.கோரிக்கை : "முறையான விதிமுறைகளின் படியே, விளம்பரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. விளம்பரங்களை வாபஸ் பெற வேண்டிய அவசியம்இல்லை' என, பிரதமர், மன்மோகன் சிங் தெரிவித்து உள்ளார். எம்.பி.,க்கள், அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்கள் ஆகியோர் மீதான, லஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக, லோக்பால் சட்ட ...

மோடிக்கு ஆதரவாக பவாரும் திடீர் "வாய்ஸ்'

Posted:

மும்பை: ""குஜராத் கலவர வழக்கில், குஜராத் முதல்வர் மோடிக்கு தொடர்பு இல்லை என, கோர்ட் அறிவித்த பின், அது தொடர்பாக விவாதிக்க வேண்டிய அவசியமில்லை,'' என, காங்கிரசின் கூட்டணி கட்சியான, தேசியவாத காங்கிரசின் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.கடந்த, 15 ஆண்டுகளாக, காங்., கூட்டணி யில், தேசியவாத காங்., கட்சி இடம் பெற்றுள்ளது. தேசியவாத காங்., கட்சி தலைவர் சரத் பவார், காங்., தலைமையிலான மத்திய அரசில், விவசாய அமைச்சராக பதவி வகிக்கிறார்.கருத்து : இந்நிலையில், சமீபத்தில், பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடியை, சரத் பவார், சந்தித்ததாகவும், பா.ஜ., ...

அரியானா முதல்வர் ஹூடாவை கன்னத்தில் அறைந்த இளைஞன்

Posted:

பானிபட்: அரியானா மாநில, காங்கிரஸ் முதல்வர், பூபிந்தர் சிங் ஹூடாவை, இளைஞன் ஒருவன், கன்னத்தில் பலமாக அறைந்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த ஹூடா, 66, அந்த இளைஞனை பிடித்து செல்லுமாறு, போலீசுக்கு உத்தரவிட்டார். டில்லி அருகே உள்ள அரியானா மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர், பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான ஆட்சி நடக்கிறது. பானிபட் என்ற இடத்தில் நேற்று, காங்கிரஸ் ஊர்வலம் நடந்தது. அதில், திறந்த, 'ஜீப்' ஒன்றில் நின்றபடி, முதல்வர், ஹூடா வந்து கொண்டிருந்தார். சாலையின் இருபுறமும் ஏராளமானோர் நின்று கொண்டிருந்தனர்; அவர்களைப் பார்த்து, ஹூடா கையசைத்த படி ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™