Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கேலி கூத்தாக்கப்பட்ட ஆதார் திட்டம்

Posted:

புதுடில்லி : ஜனவரி 17ம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் பேசுகையில், மானிய விலை சமையல் சிலிண்டரின் எண்ணிக்கையை 9 ல் இருந்து 12 ஆக உயர்த்த வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கேட்டுக் கொண்டார். பொதுவாக அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த ஆமை வேகத்தில் செயல்படும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, நேரு குடும்ப வழிதோன்றலான ராகுல் கோரிக்கை விடுத்ததும் உடனடியாக செயல்பட்டு ஜனவரி இறுதிக்குள்ளேயே மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்தி அறிவித்தது. ஏப்ரல் முதல் ...

லோக்சபா தேர்தல் : மோடி, ராகுல் 2 தொகுதிகளில் போட்டி ?

Posted:

புதுடில்லி : பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலும் வரும் லோக்சபா தேர்தலில், பல்வேறு காரணங்களுக்காக 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் களம் சூடுபிடித்து வரும் வேளையில் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்தவம் வாய்ந்த பேச்சாக இந்த விவகாரம் எழுந்துள்ளது.மோடியை பொறுத்த வரை, பா.ஜ.,வின் ஓட்டு எண்ணிக்கையை அதிகரிக்க குஜராத்திலும், உத்தர பிரதேசத்திலும் போட்டியிட உள்ளதாக தெரிகிறது. உ.பி.,யில் லக்னோ அல்லது வாரணாசி தொகுதியை மோடி தேர்வு செய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. உ.பி., மற்றும் ...

தெலுங்கானா மசோதா லோக்சபாவில் இன்று தாக்கல்

Posted:

தெலுங்கானா மசோதாவுக்கு எதிராக, பார்லிமென்டில் கடும் அமளி காணப்படும் நிலையில், அதை கண்டுகொள்ள விரும்பாத மத்திய அரசு, அந்த மசோதாவை, லோக்சபாவில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.லோக்சபாவில், நேற்று காலை, கேள்விநேரம் துவங்கிய உடனேயே, தெலுங்கானா விவகாரத்தை எழுப்பி, ஆந்திர, எம்.பி.,க்கள் ரகளையில் ஈடுபடவே, சில நிமிடங்களில் சபை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் கூடிய போதும், ரகளை நிற்கவில்லை. இதனால், சபை, நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. பொதுவாக, இது போன்ற அமளிகளில், அமைச்சர்கள் ஈடுபடுவது கிடையாது. ஆனால், நேற்று, மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள, ...

இன்று ரயில்வே பட்ஜெட்: தாக்கல் செய்கிறார் கார்கே

Posted:

புதுடில்லி: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின், இறுதி ரயில்வே பட்ஜெட், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, ரயில்வே அமைச்சர், மல்லிகார்ஜுன கார்கேயின் முதல் பட்ஜெட் என, கருதப்படும், ரயில்வே பட்ஜெட்டிற்கான, முன்பண மானியக் கோரிக்கை இன்று, லோக்சபாவில் தாக்கல் செய்யப்படுகிறது. 'மூன்று மாதங்களுக்கான ரயில்வே பட்ஜெட்' என, கருதப்படும் இந்த, பட்ஜெட் உரையை, ரயில்வே அமைச்சர், மல்லிகார்ஜுன கார்கே, இன்று தாக்கல் செய்கிறார். அவரின் உரையில், கட்டணக் குறைப்புகள் இருக்காது என்றும், புதிய ரயில்கள், புதிய ரயில் ...

இந்திய மருந்து நிறுவனங்களுக்கு அமெரிக்கா அநீதி - மத்திய அரசு குற்றச்சாட்டு

Posted:

புதுடில்லி: இந்திய மருந்து நிறுவனங்கள் மீது, முறையற்ற வகையில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (யு.எஸ்.எப்.டீ.ஏ.,) அபராதம் விதித்து வருவதாக, மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.இந்தியாவில், சில மருந்து தொழிற்சாலைகளில், மருந்து தயாரிப்பில் தரக் குறைபாடு உள்ளதாக கூறி, அவற்றின் இறக்குமதிக்கு, அமெரிக்கா தடை விதித்துள்ளது. மேலும், உரிய விதிமுறைகளை பின்பற்றாத, இந்திய மருந்து நிறுவனங்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இந்த வகையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளில், ரான்பாக்சி, வோக்ஹார்ட், ஆர்.பி.ஜி., லைப் சயன்சஸ், அகிலா ஸ்பெஷாலிட்டீஸ் ஆகிய மருந்து ...

அமைச்சர் சிதம்பரத்திற்கு, வங்கி ஊழியர்கள் பதிலடி: ரூ.3 லட்சம் கோடி தள்ளுபடி எங்கே போனது என கேள்வி:

Posted:

புதுடில்லி: 'வங்கி ஊழியர்களுக்கு, இரண்டு ஆண்டுகளாக சம்பள உயர்வு தர மறுக்கும் வங்கி நிர்வாகங்கள், தங்களின் லாபத்திலிருந்து, வராக்கடன் தொகை, 3 லட்சம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்துள்ளன' என, வங்கி ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.சம்பள உயர்வு கோரி, நேற்று முன்தினமும், நேற்றும், நாடு முழுவதும், வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், வங்கிப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.10 சதவீத ஊதிய உயர்வு:வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு முன், வங்கி ஊழியர் சங்கத்தினர், மத்திய அரசு மற்றும் வங்கிகளை நடத்தும் ...

மோடியை நாளை சந்திக்கிறார் அமெரிக்க தூதர்: புறக்கணிப்பு நிலைபாட்டை மாற்றிக்கொண்டது அமெரிக்கா

Posted:

வாஷிங்டன்: பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடிக்கு எதிரான, அமெரிக்காவின் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க தூதர், நான்சி பவல், நாளை மோடியை சந்தித்து பேசவுள்ளார்.பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு:குஜராத்தில், முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., ஆட்சியில் உள்ளது. இங்கு, 2002ல் நடந்த, மத கலவரத்தை, முதல்வராக இருந்த மோடி, கட்டுப்படுத்த தவறிவிட்டார் என, அவர் மீது, பலதரப்பிலும் குற்றம்சாட்டப்பட்டது. இதை காரணமாக வைத்து, அமெரிக்கா செல்ல, மோடிக்கு, 'விசா' வழங்க, அமெரிக்கா மறுத்து வந்தது.இந்நிலையில், வரும் ...

'நேர்மையான அதிகாரிகளை துன்புறுத்த கூடாது': பிரதமர் மன்மோகன் சிங் அறிவுரை

Posted:

புதுடில்லி : ''நல்ல நோக்கத்துடன், அர்த்தமுள்ள முடிவுகளை எடுக்கும்போது ஏற்படும் சிறிய தவறுகளுக்காக, நேர்மையான அதிகாரிகளை துன்புறுத்தக் கூடாது,'' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின், பொன்விழா கொண்டாட்டத்தை ஒட்டி, டில்லியில் நடந்த விழாவில், பிரதமர், மன்மோகன் சிங் பேசியதாவது:ஊழல் தடுப்பு ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து, முன்னாள் பிரதமர், லால் பகதூர் சாஸ்திரி, ஒரு முக்கியமான விஷயத்தை கூறியுள்ளார். எதற்கும் பயப்படாத, பணியில் தூய்மையான அமைப்பாக இருக்க வேண்டும் என்றும், ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு, அச்சம் தரும் ...

அமைச்சர் மொய்லி, முகேஷ் மீது வழக்கு பதிய உத்தரவு!கெஜ்ரிவால் நடவடிக்கையால் டில்லியில் பரபரப்பு

Posted:

புதுடில்லி: ''கிருஷ்ணா - கோதவரி ஆற்றுப் படுகையிலிருந்து எடுக்கப்படும் இயற்கை எரிவாயுவுக்கு, விலை நிர்ணயம் செய்வதில் முறைகேடு செய்த, மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி, 'ரிலையன்ஸ்' அதிபர் முகேஷ் அம்பானி, முன்னாள் மத்திய அமைச்சர் முரளி தியோரா உள்ளிட்டோர் மீது, கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்படும்,'' என, டில்லி முதல்வரும், 'ஆம் ஆத்மி' கட்சித் தலைவருமான, அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அறிவித்து உள்ளார்.இந்த அறிவிப்பு, அரசியல் மற்றும் தொழில் துறை வட்டாரங்களில், அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.காங்., ஆதரவுடன் ஆட்சி:டில்லியில், காங்., ...

தேவையா தே.மு.தி.க.,? யோசிக்கிறது பா.ஜ.,

Posted:

லோக்சபா தேர்தலை ஒட்டி, தமிழகத்தில் பா.ஜ., போட்ட கூட்டணி திட்டத்தில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ம.தி.மு.க., - பா.ம.க., மற்றும் தே.மு.தி.க., ஆகிய கட்சிகளை இணைத்து, தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்க முயன்ற, பா.ஜ., தலைமை, இப்போது தே.மு.தி.க., தேவையா என சிந்திக்க துவங்கி உள்ளது.தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி கணக்கை, முன்கூட்டியே திட்டமிட்டு தான், ஒவ்வொரு கட்சியும், இந்த முறை காய் நகர்த்தி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில், பா.ஜ., அமைக்கவிருக்கும் கூட்டணியால், தேர்தலுக்கு பின், பா.ஜ., ஆட்சி அமைய இடையூறு எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற சிந்தனை, அக்கட்சி தலைமைக்கு ...

உருவாகிறது ஏழு கட்சிகள் 'மெகா' கூட்டணி: கைகோர்க்கும் கருணாநிதி - விஜயகாந்த்

Posted:

தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., காங்., உட்பட, ஏழு கட்சிகள் கொண்ட மெகா கூட்டணி அமைவது குறித்த அறிவிப்பை, திருச்சி தி.மு.க., மாநாட்டில், அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவிக்க திட்டமிட்டு உள்ளார்.தேர்தல் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை துவக்க, காங்., மேலிட தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, வீரப்ப மொய்லி ஆகியோர், ஓரிரு நாளில், கருணாநிதியை சந்திக்க சென்னைக்கு வருகின்றனர். அதேசமயம், நாளை மறுநாள் டில்லியில், பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுலை, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் சந்தித்து, கூட்டணி குறித்த பூர்வாங்க பேச்சுவார்த்தையை துவக்குகிறார் ...

'காங்கிரசை காப்பாற்றுவதற்காகவே மூன்றாவது அணி': நரேந்திர மோடி குற்றச்சாட்டு

Posted:

புவனேஸ்வர் : ''ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தள கட்சி தலைவருமான, நவீன் பட்நாயக், மூன்றாவது அணி அமைக்கப் போவதாக கூறுகிறார். காங்கிரசை காப்பாற்றுவதற்காக தான், அவர், இதுபோல் கூறி வருகிறார்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பேசினார்.ஒடிசா மாநிலத்தில், நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜு ஜனதா தள ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி, ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில், நேற்று நடந்த கூட்டத்தில் பேசியதாவது:

மாநிலங்களில் மந்தம்:மூன்றாவது அணி அமைக்கப் போவதாக கூறும் கட்சிகள், அவர்கள் ஆட்சி ...

6 எம்.பி.,க்களை கட்சியை விட்டு நீக்கியது காங்கிரஸ்: தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் கோபம்

Posted:

புதுடில்லி : தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பார்லிமென்டில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட, ஆந்திர மாநில காங்கிரஸ், எம்.பி.,க்கள், ஆறு பேரை, கட்சி தலைவர் சோனியா, கட்சியிலிருந்து நேற்று அதிரடியாக நீக்கியுள்ளார்.ஆந்திராவை இரண்டாக பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கும் முடிவில், காங்., தலைமையிலான, மத்திய அரசு உறுதியாக உள்ளது. இந்த முடிவுக்கு, ஆந்திராவின், ராயலசீமா, கடலோர ஆந்திரா பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 'ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலமே தொடர ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™