Daily Thanthi |
- சென்னையில் இருந்து கேரளாவுக்கு ரூ.49½ லட்சம் ‘ஹவாலா’ பணம் கடத்த முயற்சி சென்டிரல் ரெயில் நிலையத்தில் வாலிபர் கைது
- கர்ப்பிணிகளின் வயிற்றிலேயே குழந்தைகள் பலி ஆஸ்பத்திரி முற்றுகை
- வேளாண் உற்பத்தி குறித்து துல்லிய மதிப்பீடுகள் தேவை தானிய வர்த்தக சங்கம் வலியுறுத்தல்
- நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதார வளர்ச்சி குறைந்திருக்கும் நிபுணர்கள் மதிப்பீடு
- சென்னையில், 9–ந்தேதி நடக்கிறது ‘கோச்சடையான்’ படவிழாவில், அமிதாப்பச்சன் ரஜினிகாந்துடன் கலந்து கொள்கிறார்
- சிங்கப்பூர் தொழில் அதிபரை கடத்தி பணம் பறித்த 3 பேர் கைது
- நிலஅபகரிப்பு வழக்கில் லஞ்சம் வாங்கிய 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணிநீக்கம் சேலம் சரக டி.ஐ.ஜி. அதிரடி நடவடிக்கை
- கோலார் டவுனில் மேடை பாடகியை கொன்ற காதலன் கைது; விசாரணையில் பரபரப்பு தகவல்
- திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து ‘கோவிந்தா..கோபாலா’ பக்தி கோஷத்துடன் சிவாலய ஓட்டம் தொடங்கியது
- செய்யாத பரிசோதனைகளுக்கு கட்டணம் வசூலித்து ஊழல் இந்திய நிறுவனம் ரூ.93 கோடி தர சம்மதம்
| Posted: 26 Feb 2014 01:55 PM PST சென்னை, சென்னையில் இருந்து, கேரளாவுக்கு ரெயில் மூலம் 'ஹவாலா' பணம் கடத்த முயன்ற வாலிபரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.49½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சென்னை சென்டிரல் ரெயில்நிலையத்தின் 5-வது பிளாட்பாரத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு திருவனந்தபுரம் மெயில் ரெயில் புறப்பட தயாரானது. அப்போது கையில் பையுடன் ரெயிலில் ஏறிச்செல்வதற்காக சந்தேகப்படும் படியாக வந்த வாலிபர் ஒருவரை ரோந்து பணியில் ஈடுபட்ட ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையில் போலீசார் பிடித்தனர். வாலிபர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் கத்தை, கத்தையாக ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்தார். இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அந்த வாலிபரையும் கைது செய்தனர். 'ஹவாலா' பணம் பிடிபட்ட வாலிபர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெரிந்தல் மன்னா பகுதியை சேர்ந்த முகமது என்பவரின் மகன் முகமது பைசல் (வயது 35) என்பது தெரியவந்தது. சென்னை பூக்கடை பகுதியில் ஒருவர் தன்னிடம் ஒப்படைத்து, கேரளாவிற்கு ரெயிலில் கொண்டுசெல்லுமாறு பணத்தை கொடுத்ததாக முகமது பைசல் போலீசாரிடம் தெரிவித்தார். அந்த நபர் யார்?, பின்னணியில் 'ஹவாலா' பண மோசடி கும்பல்களின் தொடர்பு உள்ளதா? என்ற பல்வேறு கோணங்களில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். நேற்று காலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு ரூ.49 லட்சத்து 50 ஆயிரம் ஒப்படைக்கப்பட்டது. முகமது பைசலிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். விசாரணையின் அடிப்படையில் சென்னையை சேர்ந்த முக்கிய புள்ளிகள் சிலரும் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. image: category:Tagging: |
| கர்ப்பிணிகளின் வயிற்றிலேயே குழந்தைகள் பலி ஆஸ்பத்திரி முற்றுகை Posted: 26 Feb 2014 01:20 PM PST ஊட்டி அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கர்ப் பிணிகளின் வயிற்றிலேயே குழந்தைகள் இறந்தன. இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். மகப்பேறு ஆஸ்பத்திரி ஊட்டி தலைக்குந்தா பகு தியை சேர்ந்தவர் அபியுல்லா, இவரது மனைவி சம்சத் பேகம் (வயது 32). நிறைமாத கர்ப்பி ணியான சம்சத்பேகம் பிரச வத்திற்காக கடந்த 24-ந் தேதி ஊட்டி சேட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.அவரை பரிசோதித்த டாக்டர் கள் குழந்தையின் எடை குறை வாக உள்ளதாக தெரிவித்தனர். எனினும் நல்ல முறையில் குழந்தை பிறந்து விடும் என் றும் தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு சம்சத் பேகத்தை பரிசோதித்த டாக்டர்கள் தாயின் வயிற்றில் உள்ள குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அபி யுல்லா குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். 2 குழந்தைகள் சாவு இதேபோல் காந்தல் பகு தியை சேர்ந்த முபாரக் (32) என்பவர் தனது மனைவி ஜாஸ்மினை (20) கடந்த 24-ந் தேதி மாலை பிரசவத்திற்காக ஊட்டி சேட் அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியில் அனுமதித்து உள்ளார். இந்த நிலையில் நேற்று காலை தாயின் வயிற் றில் இருந்த குழந்தை இதயத் தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தாயின் வயிற்றில் இருந்த குழந்தைகள் ஒரே நாளில் இறந்ததால் ஆத்திரம்அடைந்த பொது மக்கள் மற்றும் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சமது தலைமையில் ஊட்டி சேட் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பேச்சு வார்த்தை இந்த சம்பவம் குறித்து தக வல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட் டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார் கள். பின்னர் ஊட்டி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு அனிதா மற்றும் மருத்துவ அதிகாரிகள் பொது மக்களி டம் பேச்சுவார்த்தை நடத்தி னார்கள். அப்போது சம்சத்பேகத்தின் வயிற்றில் 8 மாத குழந்தை இருந்ததால் அதனை காப்பற்ற முடிய வில்லை என்று டாக்டர் கள் தெரிவித்தனர். ஜாஸ்மின் குழந்தையின் இதய துடிப்பு குறைந்து உள்ளது. மேலும் இதய துடிப்பு குறித்து அறிந்து கொள்ளும் நவீன கருவி எங்களிடம் இல்லை என்றும் தெரிவித்தனர். இதய துடிப்பு கண்டறியும் நவீன கருவியின் விலை ரூ.2½ லட்சம் ஆகும். விரைவில் இந்த கருவி வாங்கப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்த னர். இதனை தொடர்ந்து மனித நேய மக்கள் கட்சியினர் இன்னும் சில நாட்களில் நவீன கருவி வாங்க வில்லை என்றால் நாங்கள் வாங்கி தருகிறோம் என்று தெரிவித்தனர். மேலும் மாவட்டத்தில் தலைமையிடத்தில் உள்ள மகப்பேறு ஆஸ்பத்திரியில் அனைத்து வசதிகளையும் செய்து தரப்பட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடு பட்டவர்கள் வலியுறுத்தி னார்கள். image: category: |
| வேளாண் உற்பத்தி குறித்து துல்லிய மதிப்பீடுகள் தேவை தானிய வர்த்தக சங்கம் வலியுறுத்தல் Posted: 26 Feb 2014 01:16 PM PST இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு மும்பை வேளாண் விளைபொருள்கள் உற்பத்தி குறித்த அரசு மதிப்பீடுகளுக்கும், வர்த்தக வட்டாரங்களின் மதிப்பீடுகளுக்கும் இடையே பெரும் வித்தியாசங்கள் காணப்படுகிறது. இதனை தவிர்க்க வேண்டும் என்றும், கரீஃப் மற்றும் ரபி பருவ விளைச்சல் குறித்து துல்லியமாக மதிப்பீடுகளை வெளியிடும் வகையில் ஆய்வு அமைப்பு ஒன்று நிறுவப்பட வேண்டும் என்றும் இந்திய பருப்பு, தானிய வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. பருப்பு உற்பத்தி நடப்பு 2013–14 வேளாண் பருவத்தில் (ஜூலை–ஜூன்) 1.98 கோடி டன் பருப்பு உற்பத்தியாகும் என மத்திய அரசு மதிப்பீடு செய்துள்ளது. இதில் 98 லட்சம் டன் கொண்டைக்கடலையும் அடங்கும். ஆனால் வர்த்தக வட்டாரங்கள் 65 லட்சம் டன் அளவிற்கே கொண்டைக்கடலை உற்பத்தியாகும் என்று மதிப்பீடு செய்துள்ளதாக பருப்பு, தானிய சங்கத்தின் தலைவர் பிரவீண் டாங்கிரி தெரிவித்தார். நாட்டில் உற்பத்தியாகும் பருப்பு வகைகளில் கொண்டைக்கடலையின் பங்கு 40 சதவீதமாக உள்ளது. இந்நிலையில் அரசு மற்றும் வர்த்தக துறையின் மதிப்பீடுகளுக்கு இடையில் 30 லட்சம் டன் அளவிற்கு வேறுபாடு உள்ளது. இதில் எது உண்மையான கணிப்பு என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. பருப்பு இறக்குமதி குறித்து கூறிய டாங்கிரி, ''நடப்பு நிதி ஆண்டில் 30 லட்சம் டன் பருப்பு இறக்குமதி செய்யப்படும். சென்ற நிதி ஆண்டில் 40 லட்சம் டன் பருப்பு வகைகள் இறக்குமதியாகின'' என்று தெரிவித்தார். பருப்பு ஏற்றுமதி மீதான தடையை மத்திய அரசு நீக்க வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் உள்நாட்டு தேவையை கருத்தில் கொண்டு தடை தொடர்ந்து நீடிக்கிறது. 2001–ஆம் ஆண்டில் மத்திய அரசு பருப்பு ஏற்றுமதிக்கு அனுமதி அளித்தது. ஆனால் 2007–ஆம் ஆண்டில், காபுலி வகை கொண்டைக்கடலை தவிர பிற பருப்பு வகைகள் ஏற்றுமதிக்கு தடை விதித்தது. விவசாயிகள் நலன் ''விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பருப்பு ஏற்றுமதி மீதான தடையை நீக்குவதுடன், பொது விநியோக முறையில் பருப்பு வகைகளை விற்பனை செய்ய வேண்டும். மேலும் ஓராண்டு காலத்திற்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு கீழே பருப்பு வகைகளின் விலை குறைந்தால் விவசாயிகள் பருப்பு சாகுபடியை தவிர்க்க தொடங்கி விடுவார்கள்'' என பருப்பு, தானிய வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. image: category:Tagging: |
| Posted: 26 Feb 2014 01:15 PM PST இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு பெங்களூர் நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபர்–டிசம்பர்) நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 4.9 சதவீதமாக குறைந்து இருக்கும் என 36 பொருளியல் நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரத்தை மத்திய அரசு நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடுகிறது. முக்கிய கடன் வட்டி பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் பாரத ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டுகளில் பல முறை முக்கிய கடன்களுக்கான வட்டியை உயர்த்தியது. இதன் காரணமாக சென்ற 2012–13–ஆம் நிதி ஆண்டில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக குறைந்தது. நடப்பு நிதி ஆண்டின் முதல் மற்றும் இரண்டாவது காலாண்டுகளில் வளர்ச்சி முறையே 4.5 சதவீதம் மற்றும் 4.8 சதவீதமாக இருந்தது. 2013–ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ரிசர்வ் வங்கி கவர்னராக ரகுராம் ராஜன் பொறுப்பு ஏற்றார். அதன் பிறகு நான்கு முறை அவர் வெளியிட்ட பணக் கொள்கை ஆய்வு அறிக்கைகளில் மூன்று முறை முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. உள்நாட்டில் கடனிற்கான வட்டி விகிதம் அதிகமாக உள்ளதால் கார் உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள் விற்பனை சரிவடைந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களாக தொழில்துறை உற்பத்தியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தொழில்துறையின் பங்கு 26 சதவீதமாக உள்ளது. இதுபோன்ற காரணங்களால் மூன்றாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி குறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பணவீக்கம் ஜனவரி மாதத்தில் சில்லறை விலை பணவீக்கம் 24 மாதங்களில் இல்லாத அளவிற்கு 8.79 சதவீதமாகவும், மொத்த விலை பணவீக்கம் ஏழு மாதங்களில் இல்லாத அளவிற்கு 5.05 சதவீதமாகவும் குறைந்துள்ளது. எனவே ரிசர்வ் வங்கி முக்கிய கடன்களுக்கான வட்டியை குறைக்க வாய்ப்புள்ளது என சில நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். image: category:Tagging: |
| Posted: 26 Feb 2014 01:13 PM PST சென்னை, ரஜினிகாந்த் தந்தை–மகனாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் புதிய படம், 'கோச்சடையான்.' இந்த படத்தை அவருடைய மகள் சவுந்தர்யா அஸ்வின் டைரக்டு செய்திருக்கிறார். கே.எஸ்.ரவிகுமார் டைரக்ஷன் மேற்பார்வை செய்துள்ளார். ரஜினிகாந்துடன், சரத்குமார், நாசர், ஆதி, இந்தி நடிகர் ஜாக்கி ஷராப், தீபிகா படுகோன், ஷோபனா, ருக்மணி மற்றும் பலரும் நடித்து இருக்கிறார்கள். படம், 'மோஷன் கேப்சர்' என்ற புதிய தொழில்நுட்பத்தில் பிரமாண்டமான முறையில் தயாராகி இருக்கிறது. இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் வருகிற 9–ந்தேதி காலை 10–30 மணிக்கு நடக்கிறது. இந்த விழாவில் ரஜினிகாந்துடன், பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் கலந்து கொண்டு வாழ்த்தி பேசுகிறார். படத்தில் நடித்த நடிகர்–நடிகைகள் அனைவரும் விழாவில் பங்கேற்கிறார்கள். விழாவில் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் ஆகிய இருவரும் கலந்துகொள்வதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளை படத்தை தயாரிக்கும் ஈராஸ் இண்டர்நேஷனல், மீடியா ஒன் நிறுவனங்கள் கவனித்து வருகின்றன.
image: category:News Group Category: |
| சிங்கப்பூர் தொழில் அதிபரை கடத்தி பணம் பறித்த 3 பேர் கைது Posted: 26 Feb 2014 01:00 PM PST மன்னார்குடியைச் சேர்ந்த சிங்கப்பூர் தொ ழில் அதிபரை கடத்தி பணம் பறித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். வழக்கில் தொடர்புடைய பணி நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். தொழில் அதிபர் கடத்தல் திருவாரூர் மாவட்டம் மன் னார்குடியை அடுத்த ராஜ கோபாலபுரத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள்(வயது50). இவர் சிங்கப்பூர் தொழில் அதிபர். கலியபெருமாள் தனது தாயாரின் இறுதி சடங் கில் கலந்து கொள்வதற்காக கடந்த ஆண்டு (2013) நவம்பர் 19–ந் தேதி சிங்கப்பூரில் இருந்து ஊர் திரும்பினார். சிங்கப்பூரில் இருந்து சென் னைக்கு விமானம் மூலம் வந்த அவர், ரெயில் மூலம் மன்னார் குடி வந்தார். ரெயில் நிலை யத்தில் அவருடைய குடும் பத்தார் முன்னிலையில் மர்ம கும்பல் ஒன்று உளவுத்துறை போலீசார் என்று கூறி கலிய பெருமாளை ஏமாற்றி காரில் கடத்திச் சென்றது. பணம் பறிப்பு மன்னார்குடி அருகே கடத்திச் சென்ற அந்த கும்பல் கலியபெருமாளிடம் கத்தியை காட்டி மிரட்டி 7 ஆயிரத்து 589 சிங்கப்பூர் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.3¾ லட்சம்), ரூ. 27 ஆயிரத்து 500 பணம், பாஸ்போர்ட், சிங் கப்பூர் அடையாள அட்டை, 2 விலை உயர்ந்த செல் போன்கள், தங்க டாலர், மோதிரம் ஆகியவற்றையும் பறித்து அவரை தனியே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டது. இதையடுத்து மன்னார்குடி திரும்பிய கலியபெருமாள் போலீசில் கடத்தல் மற்றும் பணம் பறிப்பு தொடர்பாக புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 5 பேர் கொண்ட கும்பல் விசாரணையில், நெய்வாசல் கிராமத்தைச் சேர்ந்த வெளிச்சம் என்கிற ராமதாஸ் (45) என்பவர் 4 பேருடன் சேர்ந்து கலியபெருமாளை கடத்திச் சென்று பணம் பறித்தது தெரியவந்தது. இதை யடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரித்தனர். விசாரணையில்கலிய பெரு மாள் தனக்கு ரூ. 12 லட்சம் தரவேண்டி இருந்த தாகவும், அதை அவர் தர மறுத்ததால் 4 பேருடன் சேர்ந்து அவரை கடத்திச் சென்று பணம் பறித்ததாகவும் ராமதாஸ் தெரிவித்தார். போலீஸ் ஏட்டுக்கு தொடர்பு விசாரணையின் போது ராமதாஸ் தெரிவித்த தகவலின் அடிப்படையில் கோயம் புத்தூர் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (35), திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை சேர்ந்த கண் ணன் (40), கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்கையா (40), நெய்வாசலை அடுத்த அருமலைக்கோட்டையை சேர்ந்த சுளுக்கிசரவணன் ஆகிய 4 பேர் ராமதாசுடன் சேர்ந்து கலியபெருமாளை கடத்தி பணம் பறித்தது தெரியவந்தது. இதில் தங்கையா போலீஸ் தனிப்பிரிவில் ஏட்டாக பணியாற்றி பணிநீக்கம் செய் யப்பட்டவர் ஆவார். கோர்ட்டில் ஆஜர் செந்தில்குமார், கண்ணன் ஆகிய 2 பேர் வேறு ஒரு வழக்கு தொடர்பாக சிறையில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் சிறையில் இருந்து கைது செய்த போலீசார், மன்னார்குடி அழைத்துச் சென்றனர். பின்னர் ராமதாஸ், செந்தில் குமார், கண்ணன் ஆகிய 3 பேரையும் நேற்று மன்னார்குடி குற்றவியல் நீதிபதி பன்னீர் செல்வம் முன்பு ஆஜர் படுத்தினர். 2 பேருக்கு வலைவீச்சு 3 பேரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத் தரவிட்டார். இந்த கடத்தல் மற்றும் பணம் பறிப்பு வழக்கில் தலைமறைவாகி உள்ள கோயம்புத்தூரை சேர்ந்த பணி நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் ஏட்டு தங்கையா, சுளுக்கிசரவணன் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். image: category: |
| Posted: 26 Feb 2014 12:53 PM PST நாமக்கல், நில அபகரிப்பு புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யாமல் இருக்கவும், மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும் லஞ்சம் வாங்கிய 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணிநீக்கம் செய்து சேலம் சரக டி.ஐ.ஜி. அமல்ராஜ் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். வழக்கு பதிவு செய்யாமல் இருக்க லஞ்சம் நாமக்கல் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கருணாநிதி, சித்ராதேவி ஆகியோர் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் கடந்த 2012–ம் ஆண்டு நாமக்கல் சந்தைபேட்டை புதூரை சேர்ந்த வக்கீல் பாலசுப்பிரமணியம் என்பவர் நில அபகரிப்பு தொடர்பாக ஒரு புகார் மனுவை இன்ஸ்பெக்டர் சித்ராதேவியிடம் கொடுத்தார். அந்த புகார் மனுவில், நாமக்கல் – சேலம் ரோடு பகுதியை சேர்ந்த பாலசந்தர் மற்றும் சிலர் போலியான ஆவணங்களை தயார் செய்து, நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக கூறி இருந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க இன்ஸ்பெக்டர் சித்ராதேவி, பாலசந்தரிடம் ரூ.35 ஆயிரம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் பாலசந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட பாலசந்தரை கைது செய்யாமல் இருக்கவும், கோர்ட்டில் முன்ஜாமீன் பெற எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கவும் இன்ஸ்பெக்டர் கருணாநிதி ரூ.75 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக தெரிகிறது. பின்னர் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் வாங்கிய பாலசந்தர், இச்சம்பவம் குறித்து அப்போதைய நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு சத்யபிரியாவிடம் புகார் செய்தார். உதவி போலீஸ் சூப்பிரண்டு விசாரணை இதையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்திய அப்போதைய நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுப்புலட்சுமி, இன்ஸ்பெக்டர்கள் இருவரும் பணம் வாங்கியதாக தனது அறிக்கையில் தெரிவித்து இருந்தார். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, சேலம் சரக காவல்துறை துணை தலைவர் அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. 2 இன்ஸ்பெக்டர்கள் பணிநீக்கம் இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக புலன் விசாரணை நடத்த சேலம் ரூரல் உதவி சூப்பிரண்டு சரோஜ்குமார் தாகூர் நியமிக்கப்பட்டார். அவர் நடத்திய விசாரணையில் பாலசந்தரிடம், இன்ஸ்பெக்டர் கருணாநிதி ரூ.75 ஆயிரமும், சித்ராதேவி ரூ.35 ஆயிரமும் லஞ்சம் வாங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சேலம் சரக டி.ஐ.ஜி. அமல்ராஜ், இன்ஸ்பெக்டர்கள் கருணாநிதி, சித்ராதேவி ஆகிய இருவரையும் பணிநீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார். பணிநீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் கருணாநிதி, தற்போது நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்திலும், சித்ராதேவி சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் பணியாற்றி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்ஸ்பெக்டர்கள் இருவரும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் 15 பேரிடமும் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. பணிநீக்கம் கடிதம் இது குறித்து டி.ஐ.ஜி.அமலராஜிடம் கேட்டபோது,''இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது. அவர்கள் செய்த குற்றம் விசாரணையில் உண்மை என உறுதிப்படுத்தப்பட்டது. அதையடுத்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின் பேரில் இருவரையும் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளேன். சேலம் சரக டி.ஐ.ஜி. அமல்ராஜ், நேற்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனராக பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்க வருவதற்கு முன்பு, லஞ்ச வழக்கில் சிக்கிய 2 இன்ஸ்பெக்டர்களை பணிநீக்கம் செய்ததற்கான உத்தரவில் கையெழுத்திட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பணிநீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் சித்ராதேவிக்கு சொந்த ஊர் தஞ்சாவூர். இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குடியிருந்து வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்புதான், சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டு பொறுப்பேற்றார். நேற்று அவர் பணிநீக்கம் செய்ததற்கான கடித்தத்தை போலீசார் ராசிபுரத்தில் உள்ள வீட்டில் சென்று போலீசார் ஒப்படைத்தனர். image: category: |
| கோலார் டவுனில் மேடை பாடகியை கொன்ற காதலன் கைது; விசாரணையில் பரபரப்பு தகவல் Posted: 26 Feb 2014 12:50 PM PST கோலார்தங்கவயல், கோலார் டவுனில் மேடை பாடகியை கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேடை பாடகி கொலை கோலார் டவுன் வீரஆஞ்சநேய நகர் பகுதியை சேர்ந்தவர் சுனிதா (வயது 28). மேடை பாடகி. இவர் முதல் கணவரை விவகாரத்து செய்தார். அதைத்தொடர்ந்து தன்னுடன் வேலை பார்த்து வரும் மஞ்சு (30) என்பவருடன் சுனிதா கணவன்–மனைவி போல் வாழ்ந்த வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை வீரஆஞ்சநேய நகர் பகுதியில் உள்ள மயானத்தில் சுனிதா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுபற்றி கோலார் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். காதலன் கைது விசாரணையில், கடந்த 22–ந்தேதி இரவு சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணியில் நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சுனிதா பாட்டு பாடி விட்டு மஞ்சுவுடன் கோலாருக்கு வந்ததும், அதன் பின்னர் அவர் கொலை செய்யப்பட்டு மயானத்தில் பிணமாக கிடந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. மேலும் மஞ்சு தலைமறைவாகி இருப்பதும் தெரியவந்தது. எனவே, சுனிதாவை மஞ்சு கொலை செய்துவிட்டு தலைமறைவாகி இருக்கலாம் என்று போலீசார் கருதி அவரை தேடி வந்தனர். தலைமறைவான மஞ்சுவின் செல்போன் சிக்னல் மூலம் அவர் இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர். அதாவது மஞ்சு பெங்களூர் கிராமப்புற மாவட்டமான ஒயிட்பீல்டு பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோலார் டவுன் போலீசார் அங்கு விரைந்து சென்று மஞ்சுவை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், மஞ்சு, சுனிதாவை கைது செய்ததை ஒப்புக்கொண்டார். வேறொருவருடன் தொடர்பு? இந்த கொலை வழக்கு பற்றி போலீசார் கூறியதாவது:– கைதான மஞ்சு, பெங்களூர் கிராமப்புற மாவட்டமான ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மேலும் இவர் அவ்வப்போது சுனிதாவுடன் சேர்ந்து மேடைகளில் பாட்டு பாடி வந்துள்ளார். அப்போது கணவரை பிரிந்து வாழ்ந்த சுனிதாவுக்கும், மஞ்சுவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு காரணமான இருவரும் கணவன்–மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 22–ந்தேதி சனிக்கிழமை சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி பகுதியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சுனிதாவும், மஞ்சுவும் சென்றுள்ளனர். அப்போது அந்த திருமண மண்டபத்தில் தனது சக பாடகரான நாகராஜ் என்பவருடன் சுனிதா தனி அறையில் கட்டிப்பிடித்த படி இருந்துள்ளார். இதை பார்த்து ஆத்திரமடைந்த மஞ்சு, சுனிதாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். கத்தியால் குத்திக்கொலை அதன்படி இன்னிசை கச்சேரி நிறைவடைந்த பின்னர் சுனிதாவை கோலார் மாவட்டம் மாலூர் டவுன் பாட்டாலம்மா ரோட்டில் உள்ள தனது வீட்டிற்கு மஞ்சு அழைத்து சென்றுள்ளார். அப்போது நாகராஜுயுடன் ஏன் தனி அறையில் இருந்தாய்? என்று சுனிதாவிடம் அவர் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்துக்கு பின்னர் இருவரும் சமாதானம் அடைந்துள்ளனர். மறுநாள் 23–ந்தேதி மதியம் 2 மணி அளவில் சுனிதாவை அவரது வீட்டிற்கு மஞ்சு மோட்டார்சைக்கிளில் அழைத்து வந்துள்ளார். அப்போது கோலார்–மாலூர் மெயின் ரோட்டில் பட்டரஹள்ளி கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்திற்கு சுனிதாவை, மஞ்சு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து மஞ்சு காதலி சுனிதாவின் கழுத்தை துப்பட்டாவால் நெரித்துள்ளார். இதில் சுனிதா மயக்கம் அடைந்துள்ளார். அதன் பின்னர் தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் சுனிதாவை குத்தி கொலை செய்த மஞ்சு அதே இடத்தில் இரவு 9 மணி வரை இருந்துள்ளார். அதையடுத்து சுனிதாவின் உடலை மோட்டார்சைக்கிளில் பின் இருக்கையில் வைத்து தனது உடலுடன் துப்பட்டாவில் கட்டிக் கொண்டு கோலார் டவுன் வீரஆஞ்சநேயா ரோட்டில் உள்ள மயானத்திற்கு மஞ்சு வந்துள்ளார். அங்கு சுனிதா உடலை வீசி விட்டு மஞ்சு தலைமறைவாகியுள்ளார். அதன் பின்னர் தற்போது அவர் போலீசில் சிக்கியுள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். image: category:Tagging:News Group Category: |
| திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து ‘கோவிந்தா..கோபாலா’ பக்தி கோஷத்துடன் சிவாலய ஓட்டம் தொடங்கியது Posted: 26 Feb 2014 12:41 PM PST குழித்துறை, திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து கோவிந்தா... கோபாலா பக்தி கோஷத்துடன் பக்தர்கள் சிவாலய ஓட்டத்தை தொடங்கினர். சிவாலய ஓட்டம் குமரி மாவட்டத்தில் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு நடைபெறும் சிவாலய ஓட்டம் மிகவும் புகழ்பெற்றது ஆகும். ஆண்டு தோறும் இந்த ஓட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. பல்வேறு பாரம்பரிய பெருமைகளை கொண்ட இந்த சிவாலய ஓட்டம் முன்சிறையில் உள்ள திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து நேற்று தொடங்கியது. இதில், மாலை அணிந்து விரதம் இருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் முன்சிறையில் இருந்து திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருபன்றிக்கோடு, திருவிதாங்கோடு ஆகிய 11 கோவில்களை தரிசித்து விட்டு இன்று (வியாழக்கிழமை) நட்டாலம் சங்கரநாராயணர் கோவிலில் ஓட்டத்தை நிறைவு செய்வார்கள். கோவிந்தா- கோபாலா இந்த சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்ளும், பக்தர்கள் இடுப்பில் காவித்துணி கட்டிக் கொண்டு, கையில் சுருக்கு பையும், விசிறியும் எடுத்து செல்கின்றனர். சைவ- வைணவ ஒற்றுமையை வலியுறுத்தி 'கோவிந்தா- கோபாலா' என்ற பக்தி கோஷத்தை உச்சரித்தபடி ஒவ்வொரு கோவிலாக சென்றனர். ஒவ்வொரு கோவிலுக்கு சென்றதும் அங்குள்ள குளத்தில் குளித்துவிட்டு இறைவனை வணங்கி, பிரசாதம் பெற்றுக்கொள்கின்றனர். இவ்வாறு 12 சிவாலயங்களையும் தரிசனம் செய்து முடிப்பார்கள். குமரி மற்றும் கேரளாவின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று நடைபெற்ற சிவால ஓட்டத்தில் கலந்து கொண்டனர். நேற்று மாலை முதல் மார்த்தாண்டம் நகரில் சாலை எங்கும், 'கோவிந்தா-கோபாலா' என்ற பக்தி கோஷத்தை உச்சரித்தபடி பக்தர்கள் கூட்டம் கூட்டமாக சென்றனர். பக்தர்களுக்கு தேனீர் சிலர் மோட்டார் சைக்கிள்களிலும், வேன், கார் போன்ற வாகனங்களிலும் சாமி தரிசனம் செய்ய புறப்பட்டனர். பக்தர்களின் தேவைக்கு ஏற்ப வழிநெடுகிலும் மோர், தேனீர், கஞ்சி போன்றவை பொது மக்களால் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு சிவராத்திரியை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஏராளமான பக்தர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. image: category:Tagging: |
| செய்யாத பரிசோதனைகளுக்கு கட்டணம் வசூலித்து ஊழல் இந்திய நிறுவனம் ரூ.93 கோடி தர சம்மதம் Posted: 26 Feb 2014 12:40 PM PST நியூயார்க், அமெரிக்காவில் டயாக்னஸ்டிக் இமேஜிங் குரூப் என்ற மருத்துவ நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்தவர்கள் இந்தியர்களான லீனா தோஷி– நிதின் தோஷி தம்பதியர். டயாக்னஸ்டிக் இமேஜிங் குரூப் நிறுவனத்தில் செய்யாத பரிசோதனைகளை எல்லாம் செய்ததாகச் சொல்லி, 1999–ம் ஆண்டு தொடங்கி 2010–ம் ஆண்டு வரை பெருமளவில் பணம் கறந்திருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஊழலை அம்பலப்படுத்தும் சட்டத்தின் கீழ் இந்த நிறுவனத்தின்மீது தனிப்பட்ட நபர்கள் 3 வழக்குகளை அமெரிக்க நீதிமன்றத்தில் தொடர்ந்தனர். அரசின்சார்பில், ஊழலை அம்பலப்படுத்துவோர் இப்படி அமெரிக்காவில் வழக்குகளை தொடர முடியும். இதில் நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இந்தப் பிரச்சினையில், குற்றச்சாட்டுகளில் இருந்து வெளி வருவதற்கு டயாக்னஸ்டிக் இமேஜிங் குரூப் நிறுவனம், அரசுக்கு 15 மில்லியன் டாலர் (சுமார் ரூ.93 கோடி) தர ஒப்புக்கொண்டது. வழக்கு போட்ட 3 பேருக்கும் 2.77 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 17 கோடியே 17 லட்சம்) கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. image: category:Tagging:News Group Category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |