Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


2 நாள் பயணமாக பிரதமர் மன்மோகன் சிங் காஷ்மீர் சென்றார்

Posted: 02 Feb 2014 08:32 AM PST

ஜம்மு.

காஷ்மீர் மாநிலம் ஜம்மு பல்கலைக்கழகத்தில் 101&வது இந்திய அறிவியல் பேரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நோபல் பரிசு பெற்ற ஒய்.லீ உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தை பிரதமர் மன்மோன் சிங் தொடங்கி வைத்து பேசுகிறார்.

இதற்காக 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர்  காஷ்மீர் சென்றார். விமான நிலையத்தில் அவரை முதல்-மந்திரி உமர் அப்துல்லா, மத்திய மந்திரி என்.என்.வோரா, சபாநாயகர் அமித் மல்கோத்ரா, துணை முதல்-மந்திரி தாராசந்த் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் அங்குள்ள கவர்னர் மாளிகைக்கு சென்றார்.

category:

News Group Category:

தே.மு.தி.க. சார்பில் நடைபெற்ற 9–வது ஊழல் எதிர்ப்பு மாநில மாநாடு

Posted: 02 Feb 2014 08:20 AM PST

கடலூர்

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எறஞ்சியில் தே.மு.தி.க. சார்பில் மாலை 9–வது ஊழல் எதிர்ப்பு மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார்.

இதற்காக விஜயகாந்த்  மாலை 7.15 மணிக்கு மாநாட்டு மேடைக்கு வந்தார். உடன் பிரேமலதா விஜயகாந்தும் வருகை தந்தார். இவர்களுக்கு தே.மு.தி.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மேடையில் தோன்றிய விஜயகாந்த், மாநாட்டு திடலில் கூடியிருந்த லட்சக்கணக்கான தொண்டர்களை பார்த்து கையசைத்து பின்னர் தனது இரு கைகளை கூப்பி வணங்கினார். அப்போது உற்சாக மிகுதியில் தொண்டர்கள் அனைவரும் கேப்டன் வாழ்க.... விஜயகாந்த் வாழ்க... என்று கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர். அதன் பிறகு மேடையின் முன்பகுதியில் வைக்கப்பட்டிருந்த முரசை விஜயகாந்த் கொட்டினார்.

அதனை தொடர்ந்து மாநில பொருளாளர் இளங்கோ, தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி எம்.எல்.ஏ., மாநில கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் எம்.எல்.ஏ., துணை செயலாளர்கள் முருகேசன், உமாநாத், ஜாகிர்உசேன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். மாநில இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ், வக்கீல் அணி செயலாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், உயர்மட்டக்குழு நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர்.

category:

News Group Category:

தெலுங்கானா அமைக்கும் முடிவில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது திக்விஜய்சிங் பேட்டி

Posted: 02 Feb 2014 08:16 AM PST

பெங்களுர்,

"தெலுங்கானாவை அமைக்கும் முடிவில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது" என்று திக்விஜய்சிங் கூறினார்.

கிரண்குமார் ரெட்டி எச்சரிக்கை

பாராளுமன்றத்தில் ஆந்திராவை பிரிக்கும் மசோதாவை நிறைவேற்றினால் அரசியலில் இருந்தே விலகிவிடுவேன் என்று ஆந்திர முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் பெல்காமில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

"எது பொருத்தமாக இருக்கிறது என்று கருதுகிறாரோ அதுபற்றி முடிவு எடுக்க ஆந்திர முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டிக்கு சுதந்திரம் உள்ளது. ஆனால் ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்கும் முடிவில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது. கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள ஊழல் பட்டியல் பற்றி கேட்கிறீர்கள். ஊழல் குற்றச்சாட்டுக்கு அவரிடம் ஏதாவது ஆதாரம் இருந்தால் அதை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

விலைவாசி உயர்வு

தனது ஆட்சியில் குஜராத் மாநிலம் வளர்ச்சி அடைந்து இருப்பதாக நரேந்திரமோடி பெரிய அளவில் உரிமை கொண்டாடுகிறார். இது கொத்து கொத்தான பொய். நரேந்திரமோடி முதல்–மந்திரி ஆவதற்கு முன்பே அந்த மாநிலம் வளர்ந்துவிட்டது. இதற்கான நற்பெயர் தொழில் முனைவோருக்கு தான் செல்ல வேண்டும்.

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. அப்படி இருந்தும் சமீபத்தில் நடந்த 4 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு விலைவாசி உயர்வு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. எடியூரப்பா பா.ஜனதாவில் இணைத்துக் கொள்ளப்பட்டு உள்ளார். ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து கோர்ட்டு அவரை இன்னும் விடுவிக்காத நிலையில் அவரை சேர்த்துக் கொண்டது ஏன்?"

இவ்வாறு திக்விஜய்சிங் கூறினார்.
 

category:

News Group Category:

‘ஊழல்வாதி’ என்பதா?அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வக்கீல் நோட்டீசு

Posted: 02 Feb 2014 07:30 AM PST

புதுடெல்லி,

பா.ஜனதா மூத்த தலைவர் அனந்தகுமாரை ஊழல்வாதி என்று டெல்லி முதல்&மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி இருந்தார். இந்நிலையில், அவருக்கு அனந்தகுமார் வக்கீல் நோட்டீசு அனுப்பி உள்ளார்.

அதில், கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது, உள்நோக்கம் கொண்டது. அவர் ஆதாரம் எதுவும் அளிக்கவில்லை. 3 நாட்களுக்குள் அவர் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுபோல், காங்கிரஸ் எம்.பி. அவதார்சிங் பாதனாவும் கெஜ்ரிவாலுக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பி உள்ளார். மத்திய சட்ட மந்திரி கபில் சிபல், Ôஎன் மீது கூறிய ஊழல் குற்றச்சாட்டை 2 நாட்களுக்குள் கெஜ்ரிவால் நிரூபிக்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும்Õ என்று கூறியுள்ளார்.
 

category:

News Group Category:

தே.மு.தி.க. மாநாடு

Posted: 02 Feb 2014 07:22 AM PST

உளுந்தூர்பேட்டை தே.மு.தி.க. மாநாட்டில் திரண்டு இருந்த தொண்டர்களின் ஒரு பகுதியினரை படத்தில் காணலாம்.
 

10

செவிலிய மாணவிகள் 5-வது நாளாக உண்ணாவிரதம்

Posted: 02 Feb 2014 07:19 AM PST

திருச்சி அரசு மருத்துவமனை முன்பு செவிலிய மாணவிகள்  5-வது நாளாக உண்ணாவிரதம் இருந்த போது எடுத்த படம்.

9

தே.மு.தி.க.வினர் உற்சாக வரவேற்பு

Posted: 02 Feb 2014 07:12 AM PST

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக விஜயகாந்துக்கு உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி பகுதியில் தே.மு.தி.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தபோது எடுத்தபடம்.

8

தூத்துக்குடிக்கு வந்த தமிழக மீனவர்கள்

Posted: 02 Feb 2014 07:10 AM PST

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு  காலை தூத்துக்குடிக்கு வந்த தமிழக மீனவர்களை அமைச்சர்கள் ஜெயபால், எஸ்.பி.சண்முகநாதன், மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் ஆகியோர் வரவேற்ற போது எடுத்த படம்.

7

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நிறுவன உறுப்பினர் மதுபாதுரி விலகல்

Posted: 02 Feb 2014 07:07 AM PST

புதுடெல்லி,

ஆம் ஆத்மியில் இருந்து அக்கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான மதுபாதுரி நேற்று ராஜினாமா செய்தார். கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று அவர் புகார் கூறினார். மேலும் அவர் கூறுகையில், Ôசுயமரியாதை உள்ள மேலும் பல பெண் மெம்பர்கள் கட்சியில் இருந்து வெளியேறுவார்கள். தேர்தலுக்குப்பின் கட்சியின் செல்வாக்கு குறைந்துள்ளது. மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று பலர் விரும்புகிறார்கள்என்றார்.

மதுபாதுரியின் குற்றச்சாட்டுகளை ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது. இதுதொடர்பாக கட்சி நிர்வாகி அசுத்தோஷ் கூறுகையில், மதுபாதுரிக்கு கட்சியின் தேசிய செயற்குழுவில் கலந்து கொள்ளும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு உரிய மதிப்பையும் அந்தஸ்தையும் வழங்குகிறோம் என்றார்.

image: 

category:

News Group Category:

முதல்-அமைச்சர் ஜெயலலிதா

Posted: 02 Feb 2014 06:57 AM PST

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன், தேசிய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, மாநில பொதுச் செயலாளர் தா.பாண்டியன் முதல-அமைச்சர் ஜெயலலிதா  பாராளுமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றி முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும் கம்யூனிஸ்டு தலைவர்களும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

1


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™