Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


பாகிஸ்தானில் ரெயில் தண்டவாளத்தில் குண்டுவெடித்து 8 பேர் பலி

Posted: 16 Feb 2014 07:55 AM PST

கராச்சி,

பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து பெஷாவர் நகருக்கு குஷால் கான் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் தெற்கு சிந்து மாகாணத்தின் ஜாகோபாத் அருகே உள்ள உன்னார்வா ரெயில் நிலையம் அருகே சென்ற போது, தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது.

இதில் ரெயிலின் 3 பெட்டிகள் பலத்த சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் 4 குழந்தைகள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு குறித்து தகவல் அறிந்ததும், ரெயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில், ரிமோட் மூலம் வெடிகுண்டை வெடிக்கச்செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
 

category:

News Group Category:

போலீசார் போல் நடித்து கூரியர் நிறுவனத்தில் நுழைந்து ரூ.38 லட்சத்து 57 ஆயிரம் கொள்ளை

Posted: 16 Feb 2014 07:41 AM PST

நாக்பூர்,

நாக்பூர் இத்வாரி பகுதியில் உள்ள ஆனஜ் பஜாரில், உமேஷ் ஷா என்பவருக்கு சொந்தமான கூரியர் நிறுவனம் உள்ளது. சம்பவத்தன்று இந்த நிறுவனத்துக்கு கையில் துப்பாக்கியுடன் மர்ம நபர்கள் 6 பேர் வந்தனர். அவர்கள் தங்களை குற்றப்பிரிவு போலீசார் என்று அறிமுகப்படுத்தி கொண்டனர். அதன்பின் உள்ளே நுழைந்து அவர்கள் ஊழியர்களை பிடித்து வேறொரு அறையில் அடைத்தனர். நிறுவன மேலாளர் கப்லேஷ் பட்டேலின் தலையில் துப்பாக்கியை வைத்து, சத்தம் போட்டால் கொன்றுவிடுவதாக மிரட்டினார்கள்.

இதற்கிடையே வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராக்களையும் கொள்ளையர்கள் அடித்து உதைத்தனர். பின்னர் கூரியர் நிறுவனத்தில் இருந்த ரூ.38 லட்சத்து 57 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கு இருந்து தப்பியோடிவிட்டனர்.
சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதிர்ஷ்டவசமாக, கூரியர் நிறுவனத்தின் வெளியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவை கொள்ளையர்கள் கவனிக்கவில்லை. இதனால் அதற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.

போலீசார் அதை கைப்பற்றி ஆய்வு செய்தபோது அதில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி இருந்தது. அதை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

category:

News Group Category:

கெஜ்ரிவால் ராஜினாமா செய்தது வெறும் நாடகம்: மத்திய ரெயில்வே மந்திரி

Posted: 16 Feb 2014 07:20 AM PST

பெங்களூர்,

குல்பர்காவில் செய்தியாளர்களிடம் பேசிய ரெயில்வே மந்திரி மல்லிகார்ஜுன கார்கே; கெஜ்ரிவால், தான் ஒருவர் மட்டுமே அறிவாளி என்றும், மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது என்றும் கருதுகிறார். ஜனலோக்பால் மசோதாவை தாக்கல் செய்வதற்கு முன் அனைத்துக்கட்சி தலைவர்களின் நம்பிக்கையை பெற்று இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு தன்னிச்சையாக அவர் முடிவு எடுத்தார்.

தான் ஒருவர் மட்டுமே ஹீரோ என்றும், மற்றவர்கள் "ஜீரோ" என்றும் நினைத்து செயல்பட்டதால் அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. கெஜ்ரிவால் டெல்லி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்து இருப்பது வெறும் நாடகம் என்று கூறினார்.
 

category:

News Group Category:

பிரமாண்ட பொங்கல் விழா

Posted: 16 Feb 2014 07:08 AM PST

பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் கேரள மாநிலம், ஆற்றுக்கால் பகவதி அம்மன்கோவிலில் பொங்கல் விழா பிரமாண்டமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு வந்து, பொங்கல் வைத்து வழிபட்டனர். உலகில் மிக அதிக பெண்கள் பங்கேற்ற விழா என்ற வகையில் இது கின்னஸ் சாதனை பட்டியலிலும் இடம் பெறுகிறது.

2

நாட்டில் ஊழலுக்கான வேராக காங்கிரஸ் கட்சி திகழ்கிறது: நரேந்திர மோடி கடும் தாக்கு

Posted: 16 Feb 2014 07:00 AM PST

டேராடூன்,

இமாச்சலபிரதேச மாநிலம், சுஜன்பூரில் நடந்த பாரதீய ஜனதா பிரசார பொதுக்கூட்டத்தில், கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது நாட்டில் ஊழலுக்கான வேராக காங்கிரஸ் கட்சி திகழ்கிறது. காங்கிரஸ் தலைவர்கள் ஊழல்வாதிகளாக இல்லாவிட்டால், அவர்கள் ஏன் கறுப்பு பணம் குறித்து கவலைப்படுகிறார்கள்? இவர்கள் ஏழை எளிய மக்களிடம் கொள்ளையடித்தனர். அந்தப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் குவித்தனர்.
நாங்கள் அதைத் திரும்பக் கொண்டு வருவோம். இப்படி கறுப்பு பணத்தைத் திரும்ப கொண்டு வருகிறபோது, மாத ஊதியம் பெற்று, ஒழுங்காக வருமான வரி செலுத்துகிறவர்களுக்கு வெகுமதி காத்திருக்கிறது என்று கூறினார்.

category:

News Group Category:

மும்பை புதிய போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா பதவி ஏற்பு

Posted: 16 Feb 2014 06:51 AM PST

மும்பை,

மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த சத்யபால் சிங் பதவி விலகியதை அடுத்து அந்த பதவிக்கு மராட்டிய மாநில தீவிரவாத தடுப்பு படை தலைமை அதிகாரியாக பணிபுரிந்து வந்த ராகேஷ் மரியா நேற்று  நியமிக்கப்பட்டார். அவர் மும்பை போலீஸ் கமிஷனராக பதவி ஏற்றுக் கொண்டார்.

இதற்காக அவர் பகல் 11 மணிக்கு மும்பை கமிஷனர் அலுவலகத்திற்கு காரில் வந்து இறங்கினார். அப்போது, இசை வாத்தியங்கள் முழங்க அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை இணை போலீஸ் கமிஷனர் (சட்டம் ஒழுங்கு) ஹிமான்சுராய், தீவிரவாத தடுப்பு படை கமிஷனர் சதானந்த் சாட்டோ ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து அவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மும்பை போலீஸ் கமிஷனராக பதவி ஏற்றுக் கொண்டார்.

category:

News Group Category:

பள்ளியில் முதல்-மந்திரி ஆய்வு

Posted: 16 Feb 2014 06:37 AM PST

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டத்தின் முகால்பூரா கிராமத்தில் பள்ளியில் ஆய்வு செய்த அம்மாநில் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட போது எடுத்த படம்.

8

பள்ளி மாணவர்களுடன் மதிய உணவு சாப்பிட்ட ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா

Posted: 16 Feb 2014 06:31 AM PST

ஜெய்பூர்/தோல்பூர்,

ராஜஸ்தான் மாநில பாரதீய ஜனதா கட்சியின் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா மாநிலத்தில் தோல்பூரில் வளர்ச்சி பணிகளை மேம்படுத்த அங்கு மேற்பார்வையிட்டார். மாவட்டத்தின் பாடி டவுன் பகுதியில் முகால்பூரா கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு சென்றார்.

அங்கு பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்டார். பள்ளியில் மாணவர்களின் படிப்பு திறன் மற்றும் உணவு தயாரிக்கும் இடங்களை ஆய்வு செய்தார். மற்றும் தேவைகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டு அறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வசுந்தரா ராஜே சிந்தியா; முந்தைய காங்கிரஸ் அரசால் செயல்படுத்த முடியாத நலதிட்டங்களை எனது அரசு நிறுத்தாது என்றும் நல்லபடியாக செயல்படுத்த தேவையான நாங்கள் ஆய்வு செய்கிறோம் என்றும் கூறியுள்ளார்.
 

category:

News Group Category:

ஹெலிகாப்டர் பேர ஊழல்: முன்னாள் தளபதியின் சகோதரர்களிடம் சி.பி.ஐ. மீண்டும் விசாரணை

Posted: 16 Feb 2014 06:14 AM PST

புதுடெல்லி,

முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக அகஸ்டா வெஸ்ட்லேன்ட் என்ற இத்தாலி நிறுவனத்திடம் இருந்து ரூ.3,600 கோடிக்கு ஹெலிகாப்டர் வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது.  ஒப்பந்தம் தொடர்பாக இந்திய விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி, அவரது சகோதரர்கள் உள்ளிட்ட 12 பேருக்கு, ரூ.360 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இதைதொடர்ந்து எஸ்.பி.தியாகி உள்ளிட்ட 12 பேர் மீதும் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி மறுத்தார். என்ஜினீயரிங் பணிகள் உள்ளிட்டவற்றுக்காக மட்டுமே தியாகியின் சகோதரர்களுக்கு பணம் கொடுத்ததாக இடைத்தரகர் கைடோ ஹசிக்கி அவர் தெரிவித்தார். அதன்படி தியாகியின் சகோதரர்களிடம் கடந்த ஆண்டு விசாரணை நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் தியாகியின் சகோதரர்களிடம் மீண்டும் சி.பி.ஐ. விசாரணையை தொடங்கியது. அதன்படி கைடோ ஹசிக்கி கூறிய தகவல்கள் குறித்து, சஞ்சீவ் என்ற ஜூலி, ராஜீவ் என்ற டோக்சா மற்றும் சந்தீப் ஆகியோரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
 

category:

News Group Category:

மு.க.ஸ்டாலினுக்கு செங்கோல் பரிசு

Posted: 16 Feb 2014 06:03 AM PST

திருச்சியில் நடந்த தி.மு.க. மாநாட்டில் திருச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு செங்கோலை பரிசாக கே.என். நேரு வழங்கினார்.

6


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™